11.7.11

Astrology விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவாளா?

-------------------------------------------------------------------------------------
Astrology விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவாளா?

24 Apr 1964ம் தேதியன்று வெளிவந்த ‘பணக்கார குடும்பம்’ என்னும் திரைப்படத்தில் கலக்கலாக ஒரு பாடல்  இருக்கும். பாடலை இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி. பாடியவர்: பி.சுசீலா. நடிப்பு: புரட்சித்தலைவர் & அபிநய சரஸ்வதி (இவ்விருவரையும் தெரியாதவர்கள் பதிவை விட்டு  விலகவும்)

பாடல்: 
“அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
    அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா”
என்று துவங்கும் அப்பாடலில், எல்லா வரிகளுமே மனதை  ஈர்ப்பதாக இருக்கும்.

“முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சில் அத்தனையும் மறந்தாரா   
    முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா
    பெண்ணழகை விடுவாரா
முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா   
    மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா”


என்று கவியரசரின் சொல்லாடலிலும், கவிதை நயத்திலும் பாடல் நமது நித்திரையைக் கெடுப்பதாக இருக்கும். பாடலை முன்பு கேட்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை கேளுங்கள்.

அப்பாடலில் தொடர்ந்து வரும் வரிகளும், எதுகை மோனை சந்தங்களுடன், கேட்பவர்களின் மனதை  மயக்கும்படியாக இருக்கும். பாடலின் ஒளி வடிவத்தையும் பாருங்கள். அபிநய சரஸ்வதியின் முகத்தில்  அப்படியொரு குறும்பு கொப்பளிக்கும் .   

    “ கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டுவிட மனமில்லையா    
        கட்டிலுக்குப் பாதி தொட்டிலுக்கு பாதி கருணை வரவில்லையா
        கருணை வரவில்லையா
    விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனோ
    விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனோ
    மேடைகளில் நின்று தோழர்களைக் கண்டு சொல்லாமல் வருவேனா
    ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ....ஓ...ஓ..
    ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ...ஆ...ஆ.

    அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா
    அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா”

“விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனோ” என்பதுதான் பாடலின் முத்தாய்ப்பான வரி!
-----------------------------------------------------------------------------------------
பாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் பாடத்திற்கு வருவோம். நாம்

விட்டுப் பிரிந்தாலும்
எட்டி நடந்தாலும்
தட்டிக் கழித்தாலும்
கிரகங்கள் - நம்மைக்

கட்டாமல் விடாது!
----------------------------------------------------------------------------------------------
ஒரு தசாபுத்தியில் கிடைக்கும் இன்பம், அடுத்த தசாபுத்தியில் பெரும்பாலும் தொடராது. இன்பமும் துன்பமும்  கலந்ததுதான் வாழ்க்கை. ஆகவே கால நேரம் மாறி மாறி வரும் என்பதை உணர்ந்து, நிம்மதியாக இருங்கள்
--------------------------------------------------------------------------------------------------
தசா புத்திப் பாடல்கள் வரிசையில் சூரிய மகா திசையில், ராகுபுத்தியில் நமக்குக் கிடைக்கும் பலன்களைப்  பார்த்தோம். அடுத்து  அதே சூரிய மகாதிசையில் குரு புத்தியில் கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம்.
---------------------------------------------------------------
திசைபுத்தி நடைபெறும் காலம் 9 மாதங்களும் 18 நாட்களும் ஆகும். மொத்த காலமும் நன்மைகள் உடையதாக,  மகிழ்ச்சியுடையதாக இருக்கும். இரண்டும் பிரதான கிரகங்கள். அத்துடன் நட்புக்கிரகங்கள்

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் தரவில்லை!

தானென்ற ரவிதிசையில் வியாழன்புத்தி
    நேர்மையுள்ள நாளதுவும் இருநூத்தி எண்பத்தெட்டு
வில்லென்ற அதன்பலனை விவரித்துச் சொல்வோம்
    விவரமாய் சம்பத்தும் தனதானியமுண்டாம்
சொல்லொன்றும் தவறாது வினையகலும் பாரு
    சொல்லப்பா நாள் இன்பமெய்து வாழலாகும்
பல்லென்ற புத்திரனும் ஆகும்பாரு
    பொல்லாத சத்துருவும் வணங்குந்தானே!


இதற்கு நேர்மாறான பலனை குரு மகா திசையில் சூரிய புத்தி நமக்கு உண்டாக்கும். இருவரும் நட்புக் கிரகங்கள்  என்றாலும் சூரியன் தன் வேலையைக் காட்டும்.

பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

வாமென்ற வியாழதிசை சூரியபுத்தி
    வகையுடைய மாதமது ஒன்பதாகும்
தாமென்ற நாளதுவும் பதினெட்டாகும்
    தன்மையுடன் அதன்பலனை சாற்றக்கேளு
பரமென்ற பரதேசி யாகிப்போவான்
    பாங்கான மடபதியில் பரமகுருஆவான்
ஞானமென்ற பதியில் நின்று யோகநிலையை
    ஞாபகத்தில் சிவனடியை மறவான்காணே!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

12 comments:

  1. சூரியதசா ராகு புக்தி வரும் போது(டிசமபர் 2011 முதல்)உடல் நிலையை நனகு கவனித்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து வரும் குரு புக்தி நனமை செய்யும் என்பது பெரிய ஆறுதல். குரு தசா சூரிய புக்தி பொருளாதார நன்மை செய்யாவிட்டாலும் விவேக வைராக்யமும் ஞானமும் துறவும் கொடுக்கும் என்பதும் ஏற்புடையதே! நனறி ஐயா!‌‌

    ReplyDelete
  2. வாத்தியார், என்ன ஊருகாய் இது...
    பழைய‌ பாட்டல் காலி ஆயுடுச்சா? :)

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம் வாத்தியார் ஐயா,

    பாடங்களை கவனித்து வருகிறேன்..

    நன்றி..

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம் வாத்தியார் ஐயா,

    செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்

    புத்தகம் கிடைக்கப்பெற்றேன்..

    முகப்பு
    வடிவமைப்பு
    அச்சுக்கோர்ப்பு,
    பைண்டிங்

    என யாவும் அருமை..

    ( நான் அச்சகம் வைத்து நடத்தியவன் என்பதால் அதன் தொழில் நுட்பம் அறிந்தவன் )

    விரைவில் கதைகளை படித்துவிட்டு வருகிறேன்..

    நன்றி...

    ReplyDelete
  5. ////Blogger kmr.krishnan said...
    சூரியதசா ராகு புக்தி வரும் போது(டிசமபர் 2011 முதல்)உடல் நிலையை நனகு கவனித்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து வரும் குரு புக்தி நனமை செய்யும் என்பது பெரிய ஆறுதல். குரு தசா சூரிய புக்தி பொருளாதார நன்மை செய்யாவிட்டாலும் விவேக வைராக்யமும் ஞானமும் துறவும் கொடுக்கும் என்பதும் ஏற்புடையதே! நனறி ஐயா!‌‌/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. /////Blogger ABCD said...
    வாத்தியார், என்ன ஊருகாய் இது...
    பழைய‌ பாட்டல் காலி ஆயுடுச்சா? :)/////

    என்ன சொல்கிறீர்கள் ராசா? ஒன்றும் புரியவில்லை!

    ReplyDelete
  7. /////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    அன்புடன் வணக்கம் வாத்தியார் ஐயா,
    பாடங்களை கவனித்து வருகிறேன்..
    நன்றி..////

    நல்லது. நன்றி ஜானகிராமன்!

    ReplyDelete
  8. //////Blogger சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    அன்புடன் வணக்கம் வாத்தியார் ஐயா,
    செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள்
    புத்தகம் கிடைக்கப்பெற்றேன்..
    முகப்பு
    வடிவமைப்பு
    அச்சுக்கோர்ப்பு,
    பைண்டிங்
    என யாவும் அருமை..
    ( நான் அச்சகம் வைத்து நடத்தியவன் என்பதால் அதன் தொழில் நுட்பம் அறிந்தவன் )
    விரைவில் கதைகளை படித்துவிட்டு வருகிறேன்..
    நன்றி...///////

    புத்தகங்களின் நேர்த்தியான வடிவமைப்பு குறித்துப் பாராட்டிய உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  9. ஜானகிராமன் சார் தவறாக என்னவேண்டாம், தேர்ந்த பதிப்பக படைப்பிலும் எழுத்துப்பிழையை சில நேரம் காணமுடிகின்றது. விளையாட்டாக பேசும் போதும் கூட சில விஷயங்கலை ஏற்க முடிவதில்லை.

    Seems you are trying to degrade my dear role model.

    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, தாங்கள் விரும்பாவிடில் எனது கருத்துரைகளை வெளியிட வேண்டாம்.

    ReplyDelete
  10. அன்புடன் வணக்கம் எங்கள் கடைக்குட்டியே,

    //தாங்கள் விரும்பாவிடில் எனது கருத்துரைகளை வெளியிட வேண்டாம்.//

    வாத்தியார் நடுநிலையாளர்

    ReplyDelete
  11. அன்புடன் வணக்கம் கடைக்குட்டியாரே,

    //தேர்ந்த பதிப்பக படைப்பிலும் எழுத்துப்பிழையை சில நேரம் காணமுடிகின்றது.//

    நல்லது தோழரே,

    நான் ஒரு பதிப்பகத்தாராய் இருந்து பார்த்தேன்..

    தாங்கள் ஒரு ப்ரூப் ரீடராக ( PROOF READER ) இருந்து பார்த்திருக்கிறீர்கள்.

    நன்றி..

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம் கடைக்குட்டியாரே,

    //விளையாட்டாக பேசும் போதும்
    கூட சில விஷயங்கலை ஏற்க முடிவதில்லை. //

    சத்தியமான வார்த்தைகள் .. என் மன உணர்வோடும் ஒத்துப் போகிறீர்கள்..

    நன்றி..

    ஆனால்..

    குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
    மிகை நாடி மிக்கக் கொளல்

    என்பது பொய்யாமொழி..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com