-----------------------------------------------------------------------------------
என்றும் இனிக்கும் காட்சி எது?
பக்தி மலர்
வேல் வந்து வினை தீர்க்க பாடல்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதா¢கள்
------------------------------------------------------------
வேல் வந்து வினை தீர்க்க
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )
பால் கொண்டு நீராட்டிப்
பழம் தந்து பாராட்டி
பூமாலைப் போட்டேனடி
பூமாலைப் போட்டேனடி
திருப்புகழ் மாலைக் கேட்டேனடி
(வேல் வந்து ... )
பங்குனியில் உத்திரத்தில்
பழநி மலை உச்சியினில்
கந்தன் என்னைக் கண்டானடி
கந்தன் என்னைக் கண்டானடி
எந்தன் சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும்
வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி
அந்த காட்சி என்றும் இனிக்குமடி
(வேல் வந்து ... ).
வாழ்க வளமுடன்!
அன்புடன்
வாத்தியார்
வணக்கங்கள் வாத்தியார் ஐயா..
ReplyDeleteவெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா..
ஓராயிரம் பொன் காசுகள் உங்களுக்கு
ReplyDeleteஒப்பில்லாத அத் திருக்காட்சியை
கண்முன்னே கொண்டுநிறுத்தியமைக்கு
காலமெல்லாம் நன்றிசொல்லும்நட்புடன்
"கந்தன் என்னைகண்டான்"என்றவரிகள்
கசிய வைத்தன மனதை ஒரு சில
வார்த்தைகளில் சொல்லும் இந் நன்றி
வாழும் காலத்திற்கும் தொடரட்டும்
திருமுருகன் திருவருளுடன்
திடமான வாழ்த்துக்கள்..
சாண்டோ சின்னப்ப தேவருக்கு இணையான முருகபக்தர் அய்யா தாங்கள்.பாடல் நன்று.
ReplyDeleteபகிர்தலுக்கு நன்றி வாத்தியாரே..!
ReplyDeleteசூலமங்கலம் சகோதரர்களா !! சூலமங்கலம் சகோதரிகள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ReplyDeleteஇவர்கள் எங்கு பாடியிருக்கிறார்களோ என்று தேடித் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.
சரி, சுப்பு வாத்தியார் பாடலை இந்த சுப்பு தாத்தா பாடினால் என்ன என்று நினைத்தேன்.
காபி ரைட் காபி லெஃப்ட் என்று ஏதேனும் கேஸ் போட்டுவிட்டால் !! பரவாயில்லை !!
அந்த முருகனிடமே முறையிட்டுக்கொள்ளலாம் என்று
இந்த அற்புதப்பாடலை இங்கே பாடிவிட்டேன்.
வந்து கேளுங்கள்.
http://youtu.be/AYKOWdffve0
சுப்பு தாத்தா.
சுப்புத்தாத்தா அவர்களுக்கு வணக்கம். பாடலைக்கேட்டாச்சு. இன்னமும் குரல் வளத்தோடு இருப்பதற்குப் பாராட்டுக்கள். 69 வயது முடிவில் கூறிய த்ரயம்பகம் யஜாமஹேயும் கேட்டேன்.உருவத்தைப்பார்த்தேன்.மகிழ்ச்சியாக இருந்தது.
ReplyDeleteமுருகனைப்பற்றி வாத்தியார் சொன்னால் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்து வந்தேன் மீண்டும். எதிர் பார்ப்பு வீண் போகவில்லை.
உடல் நலத்தோடு இருக்கிறீர்களா?
நானும் ஜெயாவும் 26 ஜூன் 2011 அன்று இலண்டன் கிளம்புகிறோம். அங்கே ஹேமாவுக்கு இரண்டாவது குழந்தை (எஙளுக்குப்பேரன், ஏற்கனவே 4 வயதில் பேத்தி உண்டு)பிறந்து இருக்கிறான். 22 செப்டம்பர் 2011 திரும்பிவரக்கூடும். ஒரு வேளை நீட்டித்தாலும் நீட்டிப்போம்.
தாங்கள் தற்போது சென்னையில் தானே?அல்லது கார்த்தியுடன் அரபிலா?
நாங்கள் தஞ்சையில் வீட்டையெல்லாம் விற்றுவிட்டு லால்குடி வந்து விட்டோம்.இங்கே மூத்த பெண் அம்சாவுக்கு அருகாமையில் வாடகை வீடு எடுத்துக்கொண்டு வசிக்கிறோம்.
நீங்கள் என் ஆக்கங்களை வாசிக்கிறிர்களா?
தாங்களாகவே என் வலைப்பூவுக்கு வந்தீர்கள். மின் அஞ்சல் ஒன்றுக்கு மட்டும் பதில் அளித்தீர்கள் அப்புறம் என்ன காரணத்தாலோ தொடர்பை விட்டு விட்டீர்கள்.எங்கே என் பிசகு என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் அகத்து மாமிக்கும் தங்களுக்கும் எங்கள் வந்தனங்கள்.
pakirvukku vaalththukkal
ReplyDelete