நகைச்சுவை: ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!
தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. அனைவரும் இன்று
மிகுந்த எதிர்பார்ப்பு அல்லது பரபரப்புடன் இருப்பீர்கள். அதாவது
டென்சனாக இருப்பீர்ர்கள். உங்கள் டென்சனைக் குறைக்கும் விதமாக
இரண்டு நகைச்சுவைகளைப் பதிவிட்டிருக்கிறேன். இவைகள் வெறும் நகைச்சுவைக்காக மட்டும்தான் அதை மனதில் கொள்க!
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை 1
ஒன்றாய் மேலேபோன சாமியாரும், டாக்சி டிரைவரும்!
ஆசிரமம் வைத்து ஆயிரக் கணக்கான மக்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்த சாமியார் ஒருவரும், தில்லியில் டாக்சி ஓட்டிக்
கொண்டிருந்த டாக்சி டிரைவரும், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இறந்துபோய் மேலுலகம் போய்ச் சேர்ந்தார்கள்.
இருவரின் கணக்குப் புத்தகத்தையும் பார்த்த சித்திரகுப்தன், டாக்சி டிரைவருக்கு சகல வசதிகளையும் உடைய அரண்மனையைக் காட்டித் தங்கும்படி சொல்லிவிட்டு, சாமியாருக்கு ஒரு ஓலைக் குடிலைக் காட்டி தங்கும்படி உத்தரவிட்டான்.
சாமியாருக்கு வருத்தம்
"எத்தனை பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியிருப்பேன். எனக்கு இங்கே ஏன் இந்தக் கதி?" சித்திர குப்தனிடம் மெல்லக் கேட்டார்.
அவன் அதிரடியாகப் பதில் சொன்னான்.
"உம்முடைய பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்த மக்களெல்லாம் தூங்கினார்கள். அவன் வண்டியோட்டிக் கொண்டு போகையில் அதில் சென்ற மக்களெல்லாம் தூங்காமல் இறைவனைப் பிராத்தனை செய்தார்கள்"
இப்போது தெரிகிறதா?
செய்யும் தொழில் முக்கியமில்லை! மக்களை என்ன செய்ய வைக்கிறோம் என்பதுதான் முக்கியம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை 2:
சரக்கு வாங்கிய சாமியார்!
அது பெரிய மது விற்பனைக் கடை. விஸ்கி, பிராண்டி, ரம், ஜின்
என்று எல்லாமே இறக்குமதிச் சரக்குகளாகவும் கலக்கலாகவும் இருக்கும். லிக்கர் ஸ்பெஷல் டூட்டி ஃப்ரீ கடை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
கடைக்காரர், தன் உதவியாளருடன் வந்தவர், கடையைத் திறந்து,
வழக்கமாகச் செய்யும் ஒதுங்க வைக்கும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, கடையில் இருந்த சாமி படத்திற்குப் பூவெல்லாம் வைத்துவிட்டுக் கல்லாவில் அமர்ந்தார்.
சற்று நேரத்தில், கடைக்குச் சரக்கு வாங்க, முதல் நபர் வர, வந்தவரைப் பார்த்தவுடன் கடைக்காரருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
பின்னே இருக்காதா?
அந்த ஊரின் பிரபலமான ஆசிரமத்தைச் சேர்ந்த குட்டி சாமியார் ஒருவர், அதாவது இளம் வயது சாமியார் ஒருவர் வந்து கடைக்குள் நுழைய, நம்ம கடை ஓனர் திகைத்துப் போய்விட்டார்.
மெதுவாகக் கேட்டார்: "என்ன சாமி இங்கே? ஆச்சரியமாக இருக்கிறது?"
வந்தவர் சொன்னார்."பெரிய சாமியாருக்கு மலச்சிக்கல். ஒரு ஃபுல் பாட்டில் பிராண்டி வேண்டும்."
கடைக்காரருக்குக் காரணம் சரியாகப் படவே, ஒன்றும் சொல்லாமல் இருப்பதிலேயே அதிக விலையுள்ள முழு பிராண்டி பாட்டில் ஒன்றை எடுத்து நன்றாகப் பேப்பரில் மறைத்து வைத்துக் கட்டிக் கொடுத்தார்.
குட்டி சாமியார் பணத்தை எடுத்து நீட்ட, கடைக்காரர் மறுத்துவிட்டார்.
"பெரிய சாமியார் பெயரைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே இது என்னுடைய காணிக்கையாக இருக்கட்டும்.
பணம் வேண்டாம் சும்மா எடுத்துக் கொண்டு போங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்
..............................................................................................................
அதற்குப் பிறகு என்ன நடந்தது?
scroll down
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
கடைக்காரர் அன்று இரவு எட்டு மணிக்குக் கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்குக் காரில் திரும்பும் வழியில் பார்த்தால், ஆசிரமத்தின் வாசலில் பயங்கரக் கூட்டம்
கடைக்காரர் பயந்துவிட்டார். காலையில் கொடுத்த சரக்கில் ஏதாவது மனுஃபாக்சரிங் டிஃபெக்ட் இருந்து, அதனால் பெரிய சாமியாருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டதோ என்று மனது ஒரு வினாடி ஆடிப் போய்விட்டது.
ஓட்டுனரிடம் சொல்லிக் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, நின்று
கொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு, உள்ளே போய்ப்
பார்த்தால், ஆசிரமத்தின் நுழைவாயில் கேட் அருகே குட்டி சாமியார் பயங்கரமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.
மடித்து, டப்பாக் கட்டு கட்டிய காவி வேட்டி, தலையில் இறுக்கிக் கட்டியிருந்த காவித்துண்டு. கழுத்தில் ஒரு மலர் மாலை. அதோடு பாட்டு வேறு.
"நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்!"
கடைக்காரரைப் பார்த்தவுடன், சப்ஜாடாக எல்லாம் நின்றுவிட்டது. கடைக்காரர் சற்று நெருங்கிச் சென்றார்.பிராண்டி வாசம் ஆளைத் தூக்கியது
கடைக்காரர் குட்டி சாமியாரின் காதில் மெதுவாகக் கிசுகிசுத்தார்
"சாமி இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? காலையில் என்ன சொல்லிச் சரக்கை வாங்கினீர்கள்?"
"பெரிய சாமியாருக்கு மலச்சிக்கல் என்று சொல்லி வாங்கினேன்"
"இப்போது என்ன நடக்கிறது இங்கே?"
"இதுவும் பெரிய சாமியாரின் மலச்சிக்கலுக்காகத்தான்!"
"எப்படிச் சொல்கிறீர்கள்?"
"இதைப் பார்த்தவுடன், பெரிய சாமியாருக்கு உடம்பில் எந்த சிக்கலும் இருக்காது. வயிற்றைக் கலக்கிவிடும்! இன்று இரவிற்குள் அவரைப் பத்து தடவையாவது கழிப்பறைக்கு அனுப்பி வைக்கும் நோக்கத்துடன்தான் சரக்கடித்து விட்டு, இங்கே நின்று நான் ஆடிக்கொண்டிருக்கிறேன்"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
ஹா...ஹா.... ஹா..
ReplyDeleteநகைச்சுவை அருமை..
(இதை செந்தில் கவுண்டமணியை சேர்த்து யோசித்தால் நிறுத்தாமல் சிரிக்கலாம்)
உண்மைதான் ஐயா.இன்று குருவாக இருப்பவர்களுக்கு சீடர்கள் இது போல அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.என்ன செய்வது?கலிகாலம்.
ReplyDeleteஅய்யா ஒரு கேள்வி,
ReplyDeleteக்ரிஹப்ரேவேசம் நல்ல மாதத்தில் செய்துவிட்டால், ஆனி மாதத்திலும் குடி போகலாமா? பில்டர் வீட்டை கொடுப்பது குதிரைக்கொம்பாக இருக்கு. இப்பவே ஒரு வருடம் டிலே செய்துவிட்டார்கள்.
இன்னும் இரண்டு மாதங்கள், ஆடி கழிந்து தான் செல்ல வேண்டும் என்றால் வாடகை வேஸ்ட் ஆகுது.
இரண்டும் ரசிக்கத்தக்கதாகவும்,
ReplyDeleteமனம் விட்டு சிரிக்கத் தக்கதாகவும் இருக்கிறது ஐயா.
நன்றி..
அன்புடன் வணக்கம்
ReplyDeleteவாத்தியார் அய்யா..
(**இதை செந்தில் கவுண்டமணியை சேர்த்து யோசித்தால் நிறுத்தாமல் சிரிக்கலாம்)***நன்றி
நாளை முடிவு வெளியான பின்பு பலருக்கு சிரிக்க வருமோ என்னவோ. ஆகையால் இன்றே சிரித்து வைத்துக் கொள்வது நல்லது.
ReplyDeleteநகைச்சுவைக்கான கிரக நிலைகளைப் பற்றி யோசித்தால் அங்கே நைசர்கிக சுபர்கள்தான் வருகிறார்கள்.
மன்னிக்க..
ReplyDeleteஇந்த நகைச்சுவை..
நகைக்கும் படியும் இல்லை
சுவைக்கும் படியும் இல்லை..
சிரிக்கும்படி இல்லை..
அடுத்த பதிவினை
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..
வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்துக்களும்
என்ன இரண்டுமே சாமியார் ஜோக்காகப் போய்விட்டது?!
ReplyDeleteசாமியார்கள் மீது என்ன காண்டு...?