16.5.11

Astrology அம்மாவின் ஜாதக மேன்மையும் காத்திருக்கும் அடுத்தடுத்த பதவிகளும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology அம்மாவின் ஜாதக மேன்மையும் காத்திருக்கும் அடுத்தடுத்த பதவிகளும்!

அமோக வெற்றி பெற்று, மூன்றாம் முறையாக  தமிழகத்தின் முதல்வராக, இன்று பதவி ஏற்கும் அம்மாவை, நம் வகுப்பறையின் சார்பில் வாழ்த்துகிறேன்.

பழநி அப்பனின் அருளால், அவர் எல்லா நலன்களையும் பெற்று சிறப்பானதொரு ஆட்சியைத் தருவார் என்று நம்பிக்கை கொள்வோம்.

அம்மாவின் ஜாதக விசேசம் அனைவரும் அறிந்ததே. 4 ஆண்டுகளுக்கு முன்பு, 25.4.2007ம் தேதியன்று நமது வகுப்பறை பதிவில், அம்மாவின் ஜாதகத்தை, ஜாதகத்தின் மேன்மையை அலசியிருக்கிறேன். படித்திராதவர்கள் படித்துப்பாருங்கள். அதன் சுட்டி

குரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே 8ம் தேதி நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சியானார். அவர் 2012 மே 17ம் தேதி வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். அவருடைய இடப் பெயர்ச்சியினால், சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் அதிக நன்மை பெறுவார்கள். அதிலும் சிம்ம ராசிக் காரர்களுக்கு அதிக அளவு நன்மைகளைச் செய்வார்.

15.11.2011 அன்று அம்மாவைப் பிடித்திருந்த ஏழரைச் சனியும் பூரணமாக விலகுகிறது.

24.11.2011 ஆம் தேதியன்று ராகு திசை முடிந்து, அவருக்கு குரு திசை ஆரம்பம். மிதுன லக்கினக்காரரான அவருடைய ஜாதகத்திற்கு 7, மற்றும் 10ம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான், 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கிறார். இந்த அமைப்பு மிகவும் விசேசமானது. தன்னுடைய தசையில் அவர் அம்மாவிற்கு செல்வாக்கு, புகழ், இன்னும் பெரிய பதவிகளைப் பெற்றுத்தரவுள்ளார். பொறுத்திருந்து பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21 comments:

  1. ///பழநி அப்பனின் அருளால், அவர் எல்லா நலன்களையும் பெற்று சிறப்பானதொரு ஆட்சியைத் தருவார் என்று நம்பிக்கை கொள்வோம்////

    பழனியப்பன் அருளட்டும்.

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியார் ஐயா,

    இன்று அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்பதால்,

    தெய்வச் சேக்கிழார் பெருமான் சொன்ன ஒரு பாடலை தமிழ்நாட்டிற்க்காக சமர்ப்பிக்கிறோம்,

    சென்ற காலத்தின் பழுதிலா திறமும்
    இனி எதிர்காலத்தின் சிறப்பும் - இன்று எழுந்தருளப் பெற்ற பேறிதனால்
    எற்றைக்கும் திருவருள் உடையேம்,
    நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
    நற்றமிழ் வேந்தனும் உய்ந்து, வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்..

    என்பது திருவாக்கு...

    அவ்வகையில் இறைவனுடைய பெருங்கருணையால் தமிழகத்தின் இருள் நீங்க இனி ஒளி பிறக்கட்டும்..

    நன்றி..

    ReplyDelete
  3. 13 ஏப்ரல்2011 அன்று தஞ்சை சென்று வாக்களித்து விட்டு தஞ்சைப் பெரியவர் உயர்திரு கோபான்ஜி அவர்க்ளுடன் திருச்சிக்குப் பேருந்தில் பயணம் செய்தேன்.
    அப்போது, "உனக்குத்தான் சோதிட்ம் தெரியுமே; தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?" என்று கேட்டார். அப்போது அதிக சதவிகிதத்தில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்துள்ளார்கள் என்ற செய்தி கூட வெளியாகத சமயம்.

    "அம்மாவுக்கு ஏழரை நாட்டு சனி முடிவுக்கு வரும் சமயம். போக்கு சனி நன்மை செய்ய வாய்ப்பு;ராகுதசை முடிவுக்கு வரும் சமயம் அதுவும் நனமையைசெய்யும்;தேர்தல் முடிவு வரும் சமயம் குரு 9ல் நின்று ராசியை 5ம் பார்வையாகப்பார்க்கிறார்;சனி பெயர்ந்து ராசிக்கு 3க்கு செல்ல உள்ளது;தேர்தல் முடிவை ஒட்டி ராகு கேது பெயர்ச்சி; கேதுவின் ராசிக்கு 10ம் இட பெயர்ச்சி,லக்னத்தை பீடித்திருந்த கேது லக்னத்திற்கு 12க்குச்செல்லுதல்;
    இதையெல்லாம் கணக்கில் கொண்டு அம்மா கட்டாயம் வெற்றி பெறுவார்கள்"
    என்று சொன்னேன். அதன் படியே வெற்றி வந்துள்ளது.

    என் பெருமைக்காகச் சொல்லவில்லை. சோதிடம் சரியான ஒரு கலை என்பதற்காகச் சொன்னேன்.

    குரு பார்வை ராசிக்கு உள்ளதால், முதல் வருடத்திற்குள்ளாகவே
    தமிழ்நாட்டுப் பிரச்சனைகளுக்கு அனைத்து தீர்வும் அம்மாவால் கொடுக்க‌ முடியும். இறைவனை வேண்டுவோம், அம்மாவுக்கு எல்லா சகாயமும் அளிக்க!

    ReplyDelete
  4. அம்மா ஆட்சிக்கு வந்தா மக்களை 'ஆண்டவன்தான் காப்பாத்தணும்'ன்னு ஏற்கனவே ரஜினிகாந்த் சொல்லியிருந்தார்..

    1996 தேர்தல் முடிவு வந்த அந்த நாளில் மக்கள் அம்மாவுக்கு வழங்கிய தீர்ப்பை இப்போ அய்யாவுக்கு வழங்கியிருக்கிறார்கள்..

    அந்த இக்கட்டான தருணங்களை கடந்து வெற்றிப் படிக்கட்டில் ஏறி இன்று ஆட்சியமைக்கும் அம்மையார் உண்மையில் ஒரு புரட்சித்தலைவிதான்.. காலம் மாறும் என்று தொடர்ந்து காத்திருந்து தன் தலைமையில் இன்று இந்த மாபெரும் வெற்றிக்கனியை பறித்திருக்கும் அம்மாவை வாழ்த்த உண்மையில் எமக்கெல்லாம் வயதில்லை..

    தவறுகள் செய்யும் போது தண்டிப்பது என்று மக்கள் ஒரு தீர்மானம் எடுப்பவர்கள் என்ற பயம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருக்கவேண்டும் என்று திட்டமாக அறிவித்த தேர்தல் இது..

    என்னதான் இந்த வெற்றிக்கு காரணம் காலத்தின் கைகளில், கிரகங்களின் கைகளில் என்று ஆங்காங்கே பலரும் சொல்லியிருந்தாலும் இந்த அம்மையாரின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் எது வந்த போதும் தன் குணத்தை மாற்றாத போக்கும் தொடர்ந்த முயற்சியும்தான் அவருக்கு இந்த ஈடு இணையில்லா வெற்றியை ஈட்டித் தந்தது என்றே எனக்குத் தோன்றுகிறது..

    'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அடிப்படையில் மகேசன் இந்தமுறை இப்படித் தீர்ப்பளித்திருப்பதால் மக்களை காக்க அந்த ஆண்டவனே அம்மாவை அனுப்பியிருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? ரஜினிகாந்த்தான் பதில் சொல்லவேண்டும்..

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம் அம்மா வுக்கு நல்ல பதவிகள் இருக்கு!! சரி!! நாட்டு மக்களுக்கு நல்ல நல வாழ்வு அமையுமா?? அதை கொஞ்சம் சொல்லுங்கள்**அவ்வகையில் """இறைவனுடைய""" பெருங்கருணையால் தமிழகத்தின் இருள் நீங்க இனி ஒளி பிறக்கட்டும்.***.
    வாத்தியார் அய்யா.. நன்றி

    ReplyDelete
  6. அன்புடன் வணக்கம்
    ரஜனி காந்த் பதில் சொல்வாரா என்பது சந்தேகமே??

    ReplyDelete
  7. ///'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற அடிப்படையில் மகேசன் இந்தமுறை இப்படித் தீர்ப்பளித்திருப்பதால் மக்களை காக்க அந்த ஆண்டவனே அம்மாவை அனுப்பியிருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? ரஜினிகாந்த்தான் பதில் சொல்லவேண்டும்..///

    அவரும் அம்மாவிற்குத்தான் வாக்களித்தார் என்பது தினமலர் தகவல் மைனர்வாள்...

    //////ஜெயலலிதா தலைமையில் இன்று ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பட்டியல் எதுவுமே போடத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவையில் நடந்த ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி, திருச்சி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், தனது தேர்தல் பிரசாரத்தின்போதும் அவர் பேசிய பேச்சுகளை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தாலே போதும், இந்த அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதும், என்னென்ன செய்யக்கூடாது என்பதும் அவருக்குத் தெரிந்துவிடும்.
    கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவதில் தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல்,............................

    அமோக வெற்றிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும், தனது தனிப்பட்ட பேட்டிகளின்போதும், ஜெயலலிதாவின் பேச்சில் நிறையவே மாற்றம் காணப்படுகிறது. "நான்' என்கிற வார்த்தைகள் குறைந்து "நாங்கள்' என்கிற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது. "நான்', "எனது' என்கிற வார்த்தைகளை ஒரு முதல்வர் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல, முடிந்தவரை தவிர்ப்பது அவரது பெருமைக்குப் புகழ் சேர்க்கும். கடைசிவரை எம்.ஜி.ஆர். தனது அரசு என்று கூறிக்கொள்ளாமல், "உங்களது அண்ணாவின் அரசு' என்று குறிப்பிடுவார் என்பதை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை................

    மக்கள் மத்தியில் ஜெயலலிதா என்று சொன்னாலே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஆட்சி என்கிற கருத்து இருக்கிறது. நிர்வாகத்திலோ, காவல்துறை தனது கடமையைச் செய்வதிலோ, ஆளும் கட்சி அமைச்சர்களோ, தொண்டர்களோ தலையிடுவதை அனுமதிக்காத நிர்வாகம் ஜெயலலிதாவுடையது என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, உண்மையும்கூட.
    கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறான திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நிராகரிக்கப்படத்தான் வேண்டுமா? கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் காட்டப்பட்ட கருணை ஏன் புதிய தலைமைச் செயலகத்துக்கும் காட்டப்படக் கூடாது?//////
    நன்றி தினமணி....

    கருணை காட்டக் கூடாதா என்று எவ்வளவு இறங்கி நல்லது நடக்காதா என்ற ஆவல்.... ஆக பலரின் எண்ணமும் விருப்பமும் வாத்தியார் சொன்னது போல் அப்பன் முருகனருளால் நிறைவேறும்!...

    ReplyDelete
  8. 'அம்மான்னா அம்மா தான் மத்ததெல்லாம்
    சும்மா' தான்னு சொல்லற

    நமக்கு நம்பிக்கை வந்திருக்குது..
    நல்லது நடக்குமென்ற ஒளி தெரிகிறது

    "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறை என்று வைக்கப்படும்"

    என்ற திருக்குறனினை நினைவு செய்து

    அசத்தலான வெற்றியுடன்
    அமைதியை மீட்டுதர வந்துள்ள

    அன்பு நிறைந்த எங்கள் அம்மாவிற்கு
    அன்புடனே தருகிறோம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எந்தக் கட்சி வந்தாலும் ..
    எந்த நிலையில் இருந்தாலும்..

    முறையாக சொல்லி
    முதன்மையாக வாழ்த்து சொன்ன

    பாசமுள்ள வாத்தியாருடன்
    பகிர்ந்து கொள்கிறோம் நன்றிகளை..

    ReplyDelete
  10. வணக்கம் ஆசிரியரே!
    தாங்கள் முதல்வரின் ஜாதகம் பற்றிய கருத்துக்கள் என்னைச் சற்று சிந்திக்க வைத்துள்ளன. தாங்கள் கீழ்க் கண்ட கேள்விக்குப் பதில் அளித்தால் மிக மகிழ்வேன்.

    முதல்வரின் ஜாதகத்தில் அடுத்து வரும் குருதிசையானது, நல்ல பலன் தரும் எனக் கூறியுள்ளீர்கள். மிதுன இலக்கினத்திற்கு குரு பாவி அல்லவா? அதுவும் 7ல் இருந்து திசை நடத்துவதாதல் அது கேந்திரதிபதி தோஷமான திசை என்றல்லவா நினைக்க வேண்டியுள்ளது.

    இக் கேள்வி சோதிட அறிவை மேம்படுத்திக் கொள்ளவே தவிர,வேறெந்த அரசியல் உள் நோக்கமும் இதில் இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    செந்தில்

    ReplyDelete
  11. சோதிடம் சரியான ஒரு கலை என்பதற்காகச் சொன்னேன்" என்ற KmrK யின் கூற்றை நான் நம்புகின்றவன்.அந்த வகையில் கலைஞரின் ஜாதகம் எந்த வகையில் தோல்வியுற வைத்தது எனவும் ஆராயலாம். மேலும் க‌லைஞரின்
    ஜாதகத்தில் மிதுனத்தில் ஆட்சி பெற்று புதன் இருக்கும் அதே வேளையில் சிலவற்றில் புதன் மேடத்தில் காணப்படுகின்றது.அறிவு படைத்த என் சக மாணவர்கள் சற்று ஆராய்ந்து(case study) எழுதலாம்.

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம்
    *** பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நிராகரிக்கப்படத்தான் வேண்டுமா? கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் காட்டப்பட்ட கருணை ஏன் புதிய தலைமைச் செயலகத்துக்கும் காட்டப்படக் கூடாது?****///கடந்த கால அரசர் ஏன் தனது பதவி துறக்க நேர்ந்தது..??? தான் செய்த பல தவறுகள் அப்போ அதற்கு முன்னால் தவறே செய்ய வில்லையா??இப்பதான் செஞ்சாரா??.. அந்த காலத்தில் புதிதாக அரண்மனை கட்டும் போது சரியான வாஸ்து அமைப்பு பார்த்து கட்டுவார்கள் ..உள்ளே எப்பிடியும் ஒரு சிவன் கோவில் இருக்கும். அல்லது மிக அருகிலே கட்டுவார்கள் ??அருகிலே எம்பெருமான் திருக்கோவில் இருந்தால் பிரபஞ்ச சக்தி அவிடத்தில் எப்போதும் சூழ்ந்து இருக்கும் அதில் அரசாட்சி செயும் மன்னன் தினமும் சிவ பிரானை வழிபட்டு தொடங்குவான்!!!இப்போ அது இல்லை..( இப்போ உள்ள அரசி தனக்கு தனியாக ஒரு உபாசனை தெய்வம் வைதுள்ளாதாக கேள்வி!!.சரி இன்னும் ஒரு விஷயம்.. :- பொதுவாக நமது முன்னோர்கள் எந்த ஒரு கட்டிடம் கட்டினாலும்.. அது சதுரம் அல்லது செவ்வக வடிவம் நீள் செவ்வகம் இப்பிடித்தான் கட்டுவார்கள்.. இந்த ஆள் தலைமை செயலகம் வட்ட வடிவாக கட்டி அதில் குடி போனவுடன் ஸ்பெக்ட்ரம் ஊழல் .. ஏன்? ... சதுரம் அல்லது செவ்வக வடிவம் நீள் செவ்வகம் இப்படி இருந்தால் பிரபஞ்ச சக்தி அக்கட்டிடத்தில் பட்டு உடுருவி போகும்.. உள்ளிருபோருக்கு பிரச்சினைகளை சந்திக்க சமாளிக்க சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்.. வட்ட வடிவத்தில் பிரபஞ்ச சக்தி வழுக்கி பக்காவாட்டில் சென்று விடும்..பூமி சுற்றும் வேக மணிக்கு. 10728 km/h../// கேட்க சிரிப்புதான் வரும்?? ஆனால் உண்மை முன் காலத்தில் எங்காவது வட்ட வடிவ கட்டிடம் பார்திருக்ரீர்களா?/ கிணறுதான் இருக்கும்..[[ஒரு நண்பர் இந்த தலைமை செயலகத்தை எண்ணெய் தொட்டி போல் உள்ளது என வர்ணித்துள்ளார்.like petrol & diesel storage tanks ஏன் நமது தமிழகத்துக்கு ஒரு அடையாளம் ஒன்று கூட இல்லையா?? .கர்நாடகா விதான் சௌதா எப்பிடி இருக்கிறது.?/ ] அப்பிடியேகட்டிடம் இருந்தாலும் விளக்கமில்லாமல் இருக்கும். ஒரு பெரியவர் கூறியது .(அவரும் பல கால அனுபவம்.. ஏடுகளின் பரிச்சயம்.) எதிரில் அமர்ந்திருப்பவர் எத்ரி ஆனாலும் தான் சொல்வதை கேட்பதற்கு கூட ஒரு வகை நீள அகலம் வைத்து கட்டி இருக்கிறார்கள்..!!///சில மடல்யங்களில் ஒடுக்கம் என்று ஒன்று இருக்கும் அங்குதான் மடாதிபதி மக்களுக்கு ஆசி வழங்குவார்.. ஏன்? அங்கு நீள அகலம் ஒரு குறிப்பிட்ட வரையாரைக்குள்.. இருக்கும் அது போக அந்த மாதிரி அமைப்பு அவிடத்தில். நிற்கும் நமக்கு மிகவும் பணிவு தன்மை பக்திம நமது மனதுக்குள் ஏற்படுத்தும்../// எதோ எனக்கு தெரிந்த விஷயம்.. !! தவறிருந்தால் சுட்டுங்கள் ஏற்றுகொள்கிறேன்>> இந்த பதிவு ஏற்கெனவே. சிவா சிவாவில் போட்டுள்ளேன். நன்றி..

    ReplyDelete
  13. Also 7th guru is the same guy who did not give her family life. Single brahman at 7th place is inauspicious.
    Also he sits in Kethu which occupied 5th place. Correct me if I am wrong!

    ReplyDelete
  14. ///////////////krishnar said...

    சோதிடம் சரியான ஒரு கலை என்பதற்காகச் சொன்னேன்" என்ற KmrK யின் கூற்றை நான் நம்புகின்றவன்.அந்த வகையில் கலைஞரின் ஜாதகம் எந்த வகையில் தோல்வியுற வைத்தது எனவும் ஆராயலாம்..////////////


    ஒரு படம் நன்றாக ஓடி வசூலில் சாதனை படைத்தது என்ற காரணத்தினாலே மட்டுமே அது நல்ல படம் என்றாகி விடாது..எத்தனையோ நல்ல படங்கள் முடங்கிப் போன சரித்திரங்கள் ஏராளம்..


    மக்கள் தீர்ப்பு என்பது இப்படி அமைய கலைஞர் ஜாதகத்தில் குடும்பஸ்தானத்துலே குத்துக்கல்லிட்டு உட்கார்ந்திருக்கும் ராகுவை சொல்லலாம்..கூடவே மாந்தியும் மட்டை ஆகியிருப்பதையும் சேர்த்துக்கலாம்..ரிசல்ட் வந்த சமயம் சுக்ர தசை சூரிய புத்தி சுக்ர அந்தரம் நடக்குது..ஜோசிய சிரோன்மணியா இருந்தா எதுனால கவுந்துச்சுன்னு புட்டுப் புட்டு வெச்சுடலாம்..அந்த அளவுக்கெல்லாம் இன்னும் ஜோசிய சரக்கு ஏத்திக்கலை ..நடைமுறையாப் பார்த்தா எதுனால கவுந்துச்சுன்னு பக்கம் பக்கமா எழுதலாம்..சுத்திலும் குடும்பத்துலே எல்லோருமே ஆடுனப்போ வேடிக்கை பார்த்த பாவத்துக்காக எதுவுமே தப்புத்தண்டா பண்ணாம அடக்கி வாசிச்ச அண்ணன் ஸ்டாலினையும் கடும் முயற்சியோட tough fight க்கு வேண்டிய கணக்கிலடங்கா புதுப் புது மக்கள் நலத்திட்டங்களையும் வெற்றிகரமா செயல்படுத்திய தலைவர் கலைஞரையும் தொகுதியலவுளே ஜெயிக்க வெச்சுட்டு மொத்தத்துலே மக்கள் ஃப்யூசை பிடுங்கிடுச்சே..அதுதான் பெரும் கொடுமை..


    எனக்கென்னமோ இது வரைக்கும் நடந்த அத்தனை ஆட்சியையும் கம்பேர் பண்ணிப்பார்த்தால் இந்த தடவை செயல்பாடுகள் டாப் ரேட்டிங்ன்னுதான் தோணுது..(இலங்கைப் பிரச்சினை, மெகா ஊழலை எல்லாம் ஆட்டத்துலே சேர்க்கபுடாது..சொல்லிபுட்டேன்..) எனக்கென்னமோ நேரம் சரியில்லைன்னா என்னதான் குட்டிக்கரணமே போட்டாலும் இப்படித்தான் ஊத்திக்கும்ன்னு தோணுது..


    இல்லே..அம்மாவுக்கு டாப் கியர்லே டைம் வொர்க் அவுட் ஆனதுனாலே இந்தக் கணக்கெல்லாம் எடுபடாமப் போச்சோ?


    KMRK க்குத்தான் வெளிச்சம்..

    ReplyDelete
  15. ரிசல்ட் வந்த சமயம் சுக்ர தசை சூரிய புத்தி சுக்ர அந்தரம் நடக்குது..//

    வேறொரு தளத்துல சுக்ர தசை, சந்திர புத்தி, சந் அந்தரம்னு போட்டிருக்கு. எது எப்படியோ, அவர் ஜாதகத்துல தசா புத்தி அதிபர்கள் 1 / 12 position ல. அது ஒரு காரணமா இருக்கும்.

    அடுத்து கோட்சாரத்தில் குரு பனிரெண்டில். லக்னத்துக்கோ, ராசிக்கோ அவர் பார்வை இல்லை. ஆனா அம்மாவுக்கு ஒன்பதிலேர்ந்து லக்னத்தைப்பார்க்கிறார். சனி ஆறுல வரப்போகிறது (ராசிக்குப் பத்தாம் அதிபதி). (அவர் ஜாதகத்திலும் அதே இடத்தில்தான் இருக்கு) உச்சமா இருந்தாலும் கூட வக்கிரம். குருவும் அவர் ஜாதகத்தில் வக்கிரம். சந்திரன் உச்சமா இருந்தாலும் அஸ்தங்கதம் அடைந்திருக்கிறது. கோட்சாரத்தில் கேது, ராகு 1 / 7 ஆம் இடங்களில். ரிசல்ட் வந்த அன்று சூரியன் மேஷத்தில் நீச்சம், அதாவது ராசிக்குப் பனிரெண்டில். எல்லாம் சேர்ந்து ஊத்திகிச்சுன்னு நினைக்கிறேன். எதோ தெரிஞ்ச அளவு குத்துமதிப்பா எழுதிருக்கேன்.

    ReplyDelete
  16. சாரி குரு ஒன்பதிலிருந்து ராசியைப்பார்க்கிறார்னு இருக்கணும்.

    ReplyDelete
  17. அத்தனை ஆட்சியையும் கம்பேர் பண்ணிப்பார்த்தால் இந்த தடவை செயல்பாடுகள் டாப் ரேட்டிங்ன்னுதான் தோணுது..(இலங்கைப் பிரச்சினை, மெகா ஊழலை எல்லாம் ஆட்டத்துலே சேர்க்கபுடாது..சொல்லிபுட்டேன்..) //

    எந்த அடிப்படையில ரேட்டிங் போட்டிருக்கீங்கன்னு தெரியல. அதுல இந்த ரெண்டு பிரச்சனையையும் சேர்க்கக்கூடாதுன்னு கண்டிஷன் வேற. முக்கியமா சேர்க்க வேண்டியதே இந்த ரெண்டு பிரச்சனைகளும்தான். இலங்கைபிரச்சனைல அவர் நடத்தின உண்ணாவிரத நாடகம் ஒண்ணே போதும். அதுவும் இந்த ஊழல் தேர்தல் நேரத்துல கிளம்பினதுதான் ஹைலைட். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னைல செட்டில் ஆயிடலாம்னு தீவிரமா முயற்சி செஞ்ச நாங்க இப்ப அந்த திட்டத்தையே தலைமுழுகியாச்சு. டெல்லியைவிட அதிக கோஸ்ட் ஒப் லிவிங். அங்கலாம் வீட்டுக்கு பத்து மாச முன்பணம்னு கேள்விப்பட்டேன். டெல்லில ஒரு மாசம்தான். ரியல் எஸ்டேட் எங்கயோ போய் நிக்குது. மின்வெட்டுப் பிரச்சனை வேற. இலவசமா குடுக்கறேன்னு சொல்லி மக்களை சோம்பேறிகளா / முட்டாள்களா ஆக்கிருந்தாலும், கடைசி நேரத்தில எல்லாரும் முழிச்சிகிட்டாங்க. அதுக்காக மக்கள் தீர்ப்பு மிகச் சரியானதுன்னு நான் சொல்லவில்லை. வேறு வழியில்லாமல்தான் இந்த ரிசல்ட் ம்.

    ReplyDelete
  18. இலங்கைப் பிரச்சனை....(இதே இலங்கைப் பிரச்சனை பாராளுமன்ற தேர்தலில் எடுபடவில்லை.. அப்போது ஒரு ரூபாய் அரிசி... மேலும்.. மிவேட்டும் விலை வாசியும் கணக்கில் கொள்ள வழியில்ல்ழி) மின்வெட்டு.. குடும்ப ஆக்கிரமிப்பு.. 2 .ஜி லஞ்சம்... அதோடு தமிழ்நாட்டில் செத்துப் போன காங்கிரஸ் கட்சிக் கூட்டு (தேர்தலுக்கு மூன்று நாளைக்கு முன்பு கூட சண்டைத் தெரிவில் நாறுனா?!) .... என்று பல இருந்தும்.. முக்கிய விஷயம் இப்பவெல்லாம்.. கட்சியில்லா மக்கள் நிறைய இருக்கிறார்கள் அவர்கள்.. தப்பு செய்யும் யாராக இருந்தாலும் தண்டிப்பர்கள்.. மக்களும் படிக்க ஆரம்பிச்சாச்சு... டிவி... உலகத்தை வீட்டுக்கு கொண்டு வதிருச்சு.. ஆக இந்த நிலை கேரளாவை போல தொடரும் தப்புனா ஆப்புதான்...

    ReplyDelete
  19. oops மேஷத்தில சூரியன் உச்சம்னு எழுதறதுக்குப்பதிலா நீச்சம்னு அவசரத்தில எழுதிட்டேன்.

    ReplyDelete
  20. /////// Uma said...
    இந்த ரெண்டு பிரச்சனையையும் சேர்க்கக்கூடாதுன்னு கண்டிஷன் வேற. முக்கியமா சேர்க்க வேண்டியதே இந்த ரெண்டு பிரச்சனைகளும்தான். \\\\\\\\\\\

    ரெண்டுமே தேசியப் பிரச்சினை..ரெண்டிலுமே காங்கிரசுக்கு பெரும் பங்கு இருக்கிறது..காங்கிரசின் மத்திய அரசிலே திமுக பங்கு மட்டும்தான் வகிச்சது..தலைமை வகிக்கவில்லை..
    'திமுக வின் அரசில் நடந்த ஊழல்; எனக்கு ஒண்ணுமே தெரியாது..நான் தூங்கிட்டேன்..'ன்னு ஒரு பிரதமரோ கட்சித்தலைவியோ பொறுப்பில்லாம பேசுறதும் யாரோ முன்பின் தெரியாத ஆளு போல எலெக்க்ஷன் முடிவு வந்ததும் ஜெயிச்சவுங்கள கூப்பிட்டு டீ பார்ட்டி கொடுத்துட்டுப் போறதுங்குற அளவுலேதான் தேசியத் தலைமை இருக்கிறது..ஊழல் பத்தி சொல்லனும்னா காங்கிரஸ் யோக்கிய சிகாமணிகள் ஸ்விஸ் பேங்க் அக்கௌன்ட் லிஸ்ட் வெளியிட வேண்டியதுதானே?
    இந்தியாவே இல்லாமப் போயிடும்..முக்கிய தொழிலதிபர்கள்..முதல்நிலை அரசியல்வாதிகள்.பினாமிகள்..ன்னு பெரிய கூட்டம்தான் இந்தியா..
    ஏதோ மக்கள் ஒரு வேகத்துலே ஒரு முடிவு எடுத்து இருக்காங்கங்குறதை வெச்சு ஊழலை ஒழிக்கனும்ன்னு கிளம்பினா அதுலே இந்தியாவே இல்லாமப் போயிடும்..அதுனாலே அரசியல்வாதிகள் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லுறது சரியாகுமே தவிர ஒருத்தர் மட்டுமே குற்றவாளி; மத்தவுங்களெல்லாம் பத்தரை மாத்து தங்கம்ன்னு பேசமுடியாத நிலைதான்..

    ReplyDelete
  21. ////.ஊழல் பத்தி சொல்லனும்னா காங்கிரஸ் யோக்கிய சிகாமணிகள் ஸ்விஸ் பேங்க் அக்கௌன்ட் லிஸ்ட் வெளியிட வேண்டியதுதானே? ////
    இதை விட்டுடிங்களே காமன் வெல்த் - ஐ இன்டியூசுவல் வெல்த்தாக்கியதும், ஆதர்சன குடியிருப்ப அவுங்க குடியிருப்பா ஆக்கினதும்..

    இப்பவும் இது பி.ஜே பி க்கு கிடைச்ச வாய்ப்பு தானே.... அப்புறம் எப்படி அந்தக் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்ட அமைச்சரே காங்கிரஸ் கூட்டணியை வாராமல்.. அவர்களுக்காக வாதாடுராறு... கட்சி கேட்கவில்லையா.. கண்டுக்கவில்லையா இல்லை அனுப்பி இருக்கா?...

    /////முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கை தான். இது தான் அவர் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டு. இத்தகைய சர்ச்சைக்குரிய கொள்கையை உருவாக்கிய காலத்தில் நிதியமைச்சர் பதவிகளை வகித்த ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்காவும் இப்போது அதே பிரச்னையை விசாரிக்கும்போது ஜே.பி.சி.,யில் உறுப்பினர்களாக இருந்தால் ////
    தினமலர் செய்தி...

    திரைப்படப் பாடல் தான் ஞாபகம் வருது...
    "எல்லோருமே திருடங்கத் தான்
    சொல்லப் போஆனக் குருடங்கத்தான்..
    நம்ம நாட்டுல நாடு ரோட்டுல..
    பொன்னான பாரதம் புத்திக் கேட்டு போச்சுடா
    சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுடா?...."

    நல்லது நடக்கணும் அதற்கு ஆண்டவன் அருளணும்...
    கலிகாலம்.. கல்கி அவதாரம் ஆகணும்..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com