4.2.11

மனதை மகிழவைக்கும் முகங்கள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனதை  மகிழவைக்கும்  முகங்கள்!

காண்போரை மகிழவைக்கும் ஆறுமுகனுக்குத்தான் எத்தனை முகங்கள!

அருணகிரியாருக்கு, ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றாகவும்,
ஈசனுடன் ஞானமொழி பேசிய முகம் ஒன்றாகவும், கூறும் அடியார்களின் வினை தீர்க்கும் முகம்  ஒன்றாகவும் குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றாகவும், மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றாகவும், வள்ளியை மணம் குமுறவந்த முகம் ஒன்றாகவும்,   தோற்றமளித்த  முருகப்பெருமானின் ஆறுமுகங்கள், நம் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு வேறு வடிவில் தோற்றமளிக்கின்றன!. அவரும் அதை அற்புதமாகப் பாட்டில் வடித்து வைத்தார்.

அதை இன்று உங்களுக்காகப்  பதிவிட்டிருக்கிறேன். படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
ஆறுமுகமான பொருள் வான்மகிழ வந்தான்
அழகனிவன் முருகனெனும் இனியபெயர் கொண்டான்
காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க
கந்தனென குமரனென வந்தமுகம் வாழ்க

தாமரையில் பூத்துவந்த தங்கமுகம் ஒன்று
தண்ணிலவின் சாரெடுத்து வார்த்தமுகம் ஒன்று
பால்மணமும் பூமணமும் படிந்தமுகம் ஒன்று
பாவலர்க்கு பாடம்தரும் பளிங்குமுகம் ஒன்று
வேல்வடிவில் கண்ணிரெண்டும் விளங்குமுகம் ஒன்று
வெள்ளிரதம்போல வரும் பிள்ளைமுகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் வான்மகிழ வந்தான்
அழகனிவன் முருகனெனும் இனியபெயர் கொண்டான்
காலமகள் பெற்றமகன் கோலமுகம் வாழ்க
கந்தனென குமரனென வந்தமுகம் வாழ்க


பாடல் ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்




வாழ்க வளமுடன்!

3 comments:

  1. பாடல் எளிமையும் அழகும்!நனறி ஐயா!

    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
    ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
    கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
    குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
    மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
    வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று
    ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
    ஆதி அருணாச‌லம் அமர்ந்த பெருமாளே!...........திருப்புகழ்!


    இப்பாடலுக்கு விளக்கம் அளிக்கும் போது ஒரு கூட்டத்தில் கூறினேன்:

    "ஒரு குடும்பத் தலைவி ஒரே சமயத்தில் பல முகங்களைக் கொண்டு விளங்கு கிறாள்.அவள் கணவனிடத்தில் காட்டுவது காதல் முகம்!தன் குழந்தைகளிடம் காண்பிப்பது பாச முகம்! தன் தாயிடம் காண்பிப்பது குழந்தை முகம்! மாமியாரிடம் காண்பிப்பது வெறுப்பு முகம்!தோழிகளிடம் காண்பிப்பது நட்பு முகம்!கோவிலில் காண்பிப்பது பக்தி முகம்!

    இங்கே முகம் என்பது ஆங்கிலச் சொல் facets என்பதை குறிக்கும்! மீண்டும் நன்றி!

    ReplyDelete
  2. ஆறுமுகமானலும் அது அருளும் முகம்.வேண்டியதை தரும் முகம், வேல் கொண்டு காக்கும் முகம்.

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம் வாத்தியார் அவர்களே !
    படத்தில் உள்ள முருகன் அப்பிடியே அள்ளி முழுங்கணும் போல அழகு ரெம்ப நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com