ஈரமுள்ள நெஞ்சும் சாரமுள்ள பொருளும்!
இன்றையப் பக்தி மலரை, நமது வகுப்பறைக் கண்மணி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------------
மனதிற்குள்ளே புகுந்த மாயையும், கனவிலே வந்து அதைப்போக்கிய கடவுளும்!
பூமியிலே கடவுளில்லையென்று புகல்வது மனதிற்குள்ளே புகுந்த மாயை!
சிவபுரம் என்னும் ஊரிலே சதாசிவம் என்னும் சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தான்கொண்ட பெயருக்குத் தகுந்தாற்போல அந்த சிவபக்தர் ஆண்டவன்பால் தீராத பக்தியோடும்; அன்போடும்; எந்நேரமும்; ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! என்று சிவனின் திருநாமத்தை ஜெபித்த வண்ணம் இருப்பார்
அந்த ஊரில் வாழ்கின்ற வசதி படைத்த சிலரில் அவரும் ஒருவர் ஆவார்
நஞ்சை, புஞ்சை, தோட்டம், தொரவு என்று வருமானம் பல வழிகளில் வந்து கொட்டிக்கொண்டிருந்தது. .
தான, தர்மங்களில் மிகவும் நாட்டமுள்ளவர்.
வீட்டிற்குப் பசியோடு வரும் அனைவருக்கும் பேதமின்றி அன்போடும், பரிவோடும் அன்னமிட்டு உபசரிப்பார். அதே நேரத்தில் யாரும் தெய்வமறுப்போ, தெய்வத்தின் மீது குறையோ பேசிக்கொண்டு வந்தால் எரிமலைபோல் வெடிப்பார். அப்படி மறுப்போரைத் தன் முன் நிற்கவிடாமல் ஓட்டிவிடுவார். அதாவது விரட்டி விடுவார்.
அவர் செய்வது சரியா? தவறா? யார் அவரிடம் கூற முடியும்?
ஒரு நாள் இரவு ஊரடங்கிய பிறகு, சதாசிவத்தின் வீட்டை யாரோ வந்து தட்டினார்கள். சதாசிவத்தின் வீட்டு வேலையாட்கள் அனைவரும் தங்களின் வேலைகளை முடித்துக் கொண்டு தூங்கச் சென்றிருந்தார்கள்.
அதனால் சதாசிவமே வந்து கதவைத் திறந்தார். “யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு? இந்த நேரத்தில் வந்து கதவைத் தட்டுகிறீர்களே?” என்றார்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கு நின்றிருந்தார்.
“ஐயா, என் பெயர் செல்வராசு. அபிராமபுரத்தில் இருந்து வருகிறேன்.
இங்கு சிவபுரம் பழையூரில் இருக்கும் எனது நண்பர் ராஜசேகர்
என்பவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றேன். நான் கிளம்பும்
போதே அந்திசாயும் நேரமாகி விட்டது. இன்றைக்கென்று பார்த்தால்
ஒரு வண்டி கூட வரவில்லை. ஒரே தாகமாக இருந்தது. அமாவாசை
இருட்டு, ஊருணியில் படிகள் சரியாகத் தெரியாததால், உங்கள்
வீட்டுக் கதவை தட்டினேன். சிரமத்திற்கு மன்னிக்கணும். தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று மூச்சு விடாமற் பேசினார்.
“சிவா சிவா! குடிக்கத் தண்ணீர்தானே வேண்டும். உள்ளே வாருங்கள் தருகிறேன்” என்று அன்போடும், கனிவோடும் இவர் அழைத்தார்.
அவரும் உள்ளே வந்தார்.
இதோ வருகிறேன் என்று தண்ணீர் எடுக்கப் போனவர், “சிவ சிவா. அடப்பாவமே, இவ்வளவு நேரமாகி விட்டது அவர் ஏதாவது
சாப்பிட்டாரா என்று தெரியவில்லையே?” என்று எண்ணிக் கொண்டே தண்ணீரோடு வந்தவர், “ஐயா, தாங்கள் வரும்வழியில் ஏதாவது சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு வந்தவர், “இல்லை ஐயா, இன்னும் இரண்டு பர்லாங்கு தூரம்தானே பழையூர். அங்கு சென்று ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன்” என்றார்.
“சிவா சிவா! இவ்வளவு நேரமாகியும் சாப்பிடாமல் இருக்கலாமா?.அதோடு, இந்நேரத்தில் அங்கு சாப்பாடும் கிடைக்காது..கொஞ்சம் பொறுங்கள் நீங்கள் சாப்பிட உணவு தருகிறேன்; அதுவரைக்கும் இங்கு அமருங்கள்” என்று முகப்பில் இருந்த இருக்கையைக் காண்பித்தார்.
“தண்ணீரைக் கொஞ்சமாகப் பருகுங்கள், பிறகு சாப்பிட முடியாது” என்றும் கூறினார்.
வந்தவரோ, “இல்லை ஐயா, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் அங்கு
போய்ப் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
சதாசிவம் விடவில்லை. “சிவா சிவா! எது வீண் சிரமம் - ஒரு சான்
வயிற்றுக்கு ஒருவேளை உணவு தருவதா? அப்படியெல்லாம்
சொல்லாதீர்கள். எனக்கு எந்த சிரமும் இல்லை. தாய் அன்னபூரணி உங்களுக்கும் சேர்த்துத்தான் எனக்கு நிறையப் படி அளந்து கொண்டிருக்கிறாள். இதோ வருகிறேன்" என்று கூறியவாறு உள்ளே சென்றார்..
சமையல் கட்டுக்கு சென்று பாத்திரங்களைப் பார்த்தார். எல்லாம் நன்றாகக் கழுவப்பெற்று, தண்ணீர் வடியக் கவிழ்த்து வைக்கப் பெற்றிருந்தது.
“சிவ சிவா.. என்ன இது... இந்த அழகனிடம் (வீட்டு சமையல்காரன்)
எத்தனை முறைக் கூறினாலும் அவனுக்கு புரிய மாட்டேன்கிறதே!..
இப்படித் துடைத்து வைக்காதே என்று பல முறைக் கூறி விட்டேன்.
அவன் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லையே! சரி, நாமே
அவரின் பசிக்கு ஏதாவது செய்து கொடுப்போம்” என்று எண்ணியவர், வேகமாகச் சமைக்க ஆரம்பித்தார்.
“சிவ சிவா, நமக்கு சமையல் பக்குவம் நன்கு தெரிந்து இருப்பதும்,
அத்துடன் சமையல்காரன் அழகனின் கை ஒடிந்த சமயத்தில்,
சமைத்துப் பழகிக்கொண்டதும் நல்லதாகப் போயிற்று” என்று
தனக்குள்ளே பேசிக்கொண்டு சமையலைச் செய்யத் துவங்கினார்
.
வழிப்போக்கரோ, ‘பாவம் நாம்தான் இவருக்கு இந்நேரத்தில்
சிரமத்தைக் கொடுத்து விட்டோம் என்றும்; அதோடு இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல மனிதரைப் பார்ப்பதும் அரிதுதான் என்றும்; செல்வம் சரியானவரிடம் இருப்பதுதான் சிறந்தது என்றும், அவரைப்பற்றிய
உயர்ந்த சிந்தனையோடு மனதிற்குள் எண்ணியவாறு அமர்ந்திருந்தார்.
சிறிது நேரம்தான் ஆகி இருக்கும். “ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!” என்று பரமனின் திருநாமத்தை ஜெபித்தவாறு சதாசிவம் வந்தார்.
“ஐயா வாருங்கள் உணவுத் தயாராகி விட்டது... எழுந்திருங்கள் அதோ
அந்தத் தொட்டியில் தண்ணீர் இருக்கிறது கை கால் முகத்தைக் கழுவிக்கொண்டு, அந்த மாடத்தில் இருக்கும் திருநீறைப் பூசிக்
கொண்டு வாருங்கள்” என்றார்.
அவரும், அவ்வாறே தன்னை சுத்தம் செய்துக் கொண்டு வந்து அமர்ந்தார். வாழை இலை போடப் பட்டது உப்பிட்டு; உணவும் பரிமாறப்பெற்றது.
அப்போது, சதாசிவம் அமர்ந்தவரின் நீறில்லா நெற்றியைக் கண்டு, “நீறிட்டுக் கொள்ள மறந்துவிட்டீரே?” என்றார். அதற்கு அவர், “இல்லை நீங்கள் உப்பிடும் முன்பே நான் இலையில் நீரிட்டு கழுவினேன்” என்றார்.
சரிதான் போங்கள் என்று சிரித்துக் கொண்டே, “நான் அதைக் கூறவில்லை ஐயா! நெற்றியில் நீறு பூசவில்லையா?” என்று கேட்டேன் என்றார் சதாசிவம்.
அதற்கு அவர், “இல்லை, எனக்கு அது பழக்கம் இல்லை” என்றார்.
சிவ சிவா, வேற்று மதத்தவராக இருக்குமோ?.அதனால், என்ன
“உங்களின் ஈசன்தான் எங்களின் ஏசு” என்பானே, நம்ம தெருக்கோடி
வீட்டில் குடியிருக்கும் தையல்காரன் ஆசீர்வாதம்” என்று மனதிற்
குள்ளேயே எண்ணியவாறு.மேலும் கூறலானார்:
“ஐயா, ஆண்டவனை நினைத்துக் கும்பிட்டுவிட்டு, அவருக்கு நன்றி சொல்லிவிட்டாவது சாப்பிட ஆரம்பியுங்கள்” என்று சொல்ல, அதற்கு
அவர், “ஆண்டவனா யார் அவர்? அவருக்கு நான் ஏன் நன்றி சொல்ல
வேண்டும்? உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும் நீங்கள்
தானே எனக்கு உணவு அளிக்கிறீர்கள்” என்று சொன்னது தான் தாமதம், சதாசிவத்திற்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது.
“என்னது ஆண்டவன் யாரா? அவர் எங்கு இருக்கிறாரா? நீங்கள், இல்லை நீ, முதலில் இலையைவிட்டு எழுந்திரு!” என்று சற்றும் எதிர்பாராத விதமாகக் கூறினார்.
“ஐயா நான், அப்படி என்ன கூறினேன். உங்கள் வீட்டில் அரிசி, பருப்பு இருக்கிறது. எனக்கு உணவு அளிக்க உங்களுக்கு மனம் இருக்கிறது.
இடையில் இல்லாத ஒருவரை ஏன் அழைக்கிறீர்கள்?” என்று மறுபடியும் அதையே கூறினார்.
“ஐயோ! சிவ சிவா, என்று தன் காதுகளைப் பொத்திக் கொண்ட சதாசிவம்,
“நீ முதலில் இங்கிருந்து சென்றுவிடு” என்று கத்தலானார்.
வந்தவர், “சரி. சரி சத்தம் போடாதீர்கள் நான் சென்று விடுகிறேன்.
இருந்தும் நான் உங்களுக்கும், உங்களின் அன்பிற்கும் எனது
நன்றியைக் கூறிக் கொள்கிறேன்” என்று சொல்லியவாறே வீட்டை
விட்டு வெளியேறி விட்டார்.
சதாசிவத்தின் கோபம், அவர் மீண்டும் படுக்கைக்குச் சென்று வெகு நேரமாகியும் அடங்கவில்லை. அப்படியே, ஓம் நமசிவாய! ஓம்
நமசிவாய என்றுக் கூறியவாறே கண்ணயர்ந்தார்.
அவரின் உள்மனது மட்டும் அதே சிந்தனையில் மூழ்கியிருந்தது..
அப்போது இரண்டாம் சாமம். பரம்பொருளான சிவன் அவரின்
கனவிலே வந்தார் இவரும், “இறைவா!”. என்று பேச மொழியில்லாமல் பேரானந்தத்தில் திளைத்தார்.
அப்போது இறைவன், “பக்தரே!...உனக்கு அப்படி எதற்கு அத்தனை
வருத்தமும், கோபமும் என்று?” ஏதும் அறியாதது போல் கேட்டார்.
அதற்கு சதாசிவம், ”சுவாமி தண்ணீர் கேட்டு வந்தவனுக்கு உணவு
அளிக்க, எல்லாம் தயார் செய்து விட்டு, இந்தப் பிரபஞ்சப் படைப்பிற்கும், இயக்கத்திற்கு காரணமான பகவானின் அருளால்தான் நமக்கு இந்த
உணவே கிடைக்கிறது. அதனால் அவரை வணங்கி, அவருக்கு நன்றி
சொல்லி உணவு அருந்துங்கள் என்றுதான் கூறினேன். ஆனால்
அவரோ, ஆண்டவனா யார்? அவர் எங்கு இருக்கிறார்? இல்லாத
ஒன்றுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? என்று பதில்
கூறியதைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அதனால்தான், அவருக்குநான் உணவளிக்க மறுத்துவிட்டேன்” என்றார்.
அதற்கு இறைவன், “பக்தா, அவர் இன்று மட்டுமா அப்படிக் கூறுகிறார்?
அவர் பிறந்ததிலிருந்து அப்படிதான் கூறுகிறார். அதற்காக, அவருக்கு உணவில்லாமலா செய்து விட்டோம். கடவுள் இல்லை என்று கூறுவது
அவரவரின் மனத்தில் புகுந்துள்ள மாயை அது நீங்கும் போது அங்கே நான் வெளிப்படுவேன். எல்லாவற்றிற்கும் ஒரு காரண காரியம் உண்டு. அதனை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள நேரமும், காலமும், அவசியம். அது
ஒரு நாள் நிச்சயம் அவருக்கு வரும். அப்படி மறுப்பவர்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம்..பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் நான் இருக்கிறேன். உன்னுள்ளும் நான் இருக்கிறேன். என்னை மறுக்கும் அவன் உள்ளும்
நான் இருக்கிறேன். எங்கும் வியாபித்து இருக்கின்றேன். ஆகவே இது போன்ற ஒரு நிலைக்கு இனியும் நீ ஆளாகாமல். எல்லாவற்றிலும்,.எங்கும், எதிலும், என்னை கண்டு, அன்பின் வழியே என்னை வந்தடைவாயாக!”
என்று உயரிய அத்வைதத்தை சதாசிவத்திற்கு உபதேசித்து. ஆசிகூறி மறைந்தார். சதாசிவத்தின் கனவும் கலைந்தது. பொழுதும் விடிந்தது.
அன்று முதல் சதாசிவம் எங்கும் எதிலும் நிறைத்த பரபிரம்மத்தையே
சிந்தித்து எல்லாவற்றிலும் எல்லோரிடத்திலும் அன்பு காட்டி,
அன்பே சிவம் என்று நித்திய ஆனந்தத்தில் வாழ்ந்து, மேலும் அரிய பல
இறைத் தொண்டுகளைச் செய்து, அன்பே சிவம் என்று அத்வைதக் கொள்கையைப் போற்றியே வாழ்ந்து வரலானார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
“சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்”
''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே;
தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவுளில்லை யென்று
புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''
மகாகவி பாரதியின் இந்த நித்தியமான சத்திய வரிகளை நாமும் சிந்திப்போம்! அதன்படி நடப்போம்!
நன்றி வணக்கம்.
அன்புடன்,
ஆலாசியம் கோவிந்தசாமி.
சிங்கப்பூர்
--------------------------------------------------------ஆலாசியம் அவர்களின் எழில்மிகு தோற்றம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
ஐயா அதிகாலைப்பொழுது வணக்கம் .
ReplyDeleteமிகவும் நீண்ட நாட்களாக கூற வேண்டும் என்று உள்மனதில் இருந்த ஒரு ஆதங்க கருத்தை அன்பு சகோதரர் அருமையாக கூறி உள்ளார்.
பக்தி வேண்டும்!
இறைவனிடம் பணிவும் வேண்டும் !ஆனால் அதுவே வெறியாக கூடாது என்ற கருத்தை மிகவும் நயம் பட கூறி உள்ளார் .
சகோதரர்!
தாங்கள் கூறி உள்ள கருத்து தான் நூற்றுக்கு நூறு உண்மை ,
"அன்பு தான் சகலமும்!"
எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும்.
" காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு!"
என்பதை அனைவரும் கோபத்தில் கூட முதலில் நினைக்க வேண்டும் .
ஏனெனில் கோபத்தில் தான் மனிதன் மிருகம் ஆகி விடுகின்றான் என்பதனால் சந்தோசத்தை விட்டு விட்டு கோபத்தை கூறினேன் .
வயலூர் வள்ளலார் ஸ்வாமிகள் கூற்று
"வாடிய பயிரை கண்ட பொழுது முகம் வாடினேனே!" என்று
என்ன ஒரு அன்பு என்று பாருங்கள் அனைத்து சுவாமிகளே!
ஐயா !
ReplyDeleteஉமா அக்காவிற்கு !
திருநெல்வேலி பக்கம் ஒரு பழக்கம் உண்டு என்ன வென்றால் கல்யாணம் சமயத்தில் துணி எடுத்து கொடுத்தால் அதற்க்கு உரிய பணத்தையோ அல்லது கூடுதலாக பணத்தையோ சகோதரன் மார்களுக்கு சுருளாக
( மொய்யாக )கொடுப்பது பாரம்பரிய வழக்கு .
சகோதரிகளுக்கு பட்டு புடவை எடுத்து கொடுத்தது மாதிரியாகவும் ஆட்சு
அதே சமயம் வருமானம் பார்த்தது மாதிரியாகவும் ஆட்சு
இதில் நஷ்டம் ஒன்றுள் இல்லையே!
இது எப்படி இருக்கு!
ஆனால், உமா அக்கா விற்கு வேண்டி மொய்ப்பணம் எதுவும் வாங்காமல் பட்டு புடவை எடுத்து கொடுக்கப்படும் என்று வாத்தியார் முன்னாடி உறுதி கூறுகின்றேன் .
kseetharaman007@gmail.com
கண்ணன், நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டீங்க. இருந்தாலும் நீங்க சொன்னதே புல்லரிச்சுடுச்சு. உங்க மெயில் id குடுங்க.
நன்றிகள் பல அன்பு ஆலாசியம் கோவிந்தசாமி அண்ணாச்சியே
ReplyDelete>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<
உங்களவளை பற்றிய உங்கள் கவலையை விடுங்கள்
ஒன்பதில் (கோள்சார) குரு இருக்கிறான் என்பதில் சந்தோசப் படுங்கள்..
திக்கெட்டும் தேடுங்கள் தேவதை அவள் காத்திருப்பாள்....
வாழ்த்துக்கள்.
Posted by Alasiam G to வகுப்பறை at Thursday, December 30, 2010
ஐயா
ReplyDeleteஎல்லாம் இருக்கட்டும் தாங்கள் எப்பொழுது நல்ல செய்தி சொல்ல போகிறீர்கள்
தோழரே !
>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
நண்பர் கண்ணன் அவர்களே!!!!
தாமதம் தங்கம் பெட்டகம் கிடைபப்பதர்க்கு தான்...
நன்றி
பாண்டியன்
Posted by bhuvanar to வகுப்பறை at Thursday, December 30, 2010 5:45:00 PM
///"அதற்கு இறைவன், “பக்தா, அவர் இன்று மட்டுமா அப்படிக் கூறுகிறார்?
ReplyDeleteஅவர் பிறந்ததிலிருந்து அப்படிதான் கூறுகிறார். அதற்காக, அவருக்கு உணவில்லாமலா செய்து விட்டோம். கடவுள் இல்லை என்று கூறுவது
அவரவரின் மனத்தில் புகுந்துள்ள மாயை அது நீங்கும் போது அங்கே நான் வெளிப்படுவேன்."///
ஹாலாஸ்யம் அவர்களே! இறைவன் தண்டிக்கும் நீதிபதி அல்ல. நீதி நாள் அன்று"உனக்கு இருக்குடா!அன்னிக்கு வெச்சுக்கிறேன் உனக்கு தண்டனை காத்திருக்கிறது" என்பது நமது கொள்கையல்ல.இறைவன் அன்பானவன்;கருணை மிகுந்தவன்;வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்.அவன் யார் மூலமும் வெளிப்பட்டு "வாஹி" (அருள் வாக்கு)அளிப்பதில்லை.ஏனெனில் அவ்னுக்கு என்று ஒரு மொழியும் சொந்தமில்லை.அவன் மெளனி.
அவனுடைய ஒரே மொழி அனாஹத
ஒலி மட்டுமே!உயிர்களை அவன் தானே அறிந்துகொள்ளும் படிக்கு விட்டிருக்கிறான்.அவனை மகான்களைப் போன்றோர் சீக்கிரம் அறிந்து கொள்கிறார்கள்.'அறிந்து' என்பது சரியல்ல.உணர்ந்து கொள்கிறார்கள்.
மாயையைப் பற்றி மஹாகவி மேலும் சொல்வார்.
"எத்தனை கோடி படைகொண்டு
வந்தாலும் மாயையே=நீ
சித்தந் தெளிவெனும் தீயின் முன்
நிற்பாயோ?=மாயையை!
இருமை அழிந்தபின்எங்கிருப்பாய்,அற்ப
மாயையே=தெளிந்து
ஒருமை கண்டார் முன்னம் ஓடாது
நிற்பையோ=மயையே!"
ஹாலாஸ்யம்! தங்களின் சொல்லும் திறன் மேம்பட்டிருக்கிறது.எளிமையான சரளமான நடை கை வந்துள்ளது.
பாராட்டுக்கள். உங்கள் ஆக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது. பாராட்டுக்கள்.நன்றி!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteவரி திருத்தி
வளப் படுத்தி
வகையான உரு கொடுத்து
எனது கட்டுரையை வலைப் பதிவிட்டமைக்கு...
நன்றி! நன்றி!! நன்றி!!!
ஆலாசியம், உங்கள் எழுத்து நடை இந்த தடவை ரொம்ப அருமையாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteகண்ணன் ஒரு நிமிஷம் எனக்கு மூச்சே நின்னுடுத்து.
ReplyDeleteமொய்ப்பணம் எதுவும் வாங்காமல் பட்டு புடவை எடுத்து கொடுக்கப்படும் என்று வாத்தியார் //
இதப் படிச்சதும்தான் அம்மாடி, திரும்ப மூச்சு விட்டேன்.
உங்களுக்கு விவரமா ஒரு மெயில் அனுப்பறேன்.
நல்ல கருத்துள்ள பதிவு...நன்றி...
ReplyDeleteஐயா!!!
கண்ணதாசன் வரிகள் இருந்த இடத்தில் பையா படப் பாடல்??? ஆனாலும் நல்ல பாடல் தான்...
அணைத்தும் அவன் செயல்
ReplyDeleteDear Sir
ReplyDeleteArmayana Kadhai...Azhamana Porul. Alosium avargalukkum & Namadhu Vathiyarukkum Nandrigal.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
ஐயா!
ReplyDeleteஅன்பு அக்கா உமாவிற்கு இங்கு கூற வந்ததை கூறுகின்றேன்
வாத்தியாரின் வகுப்பறையில் ஜாதக குறிப்பு முதல் நடைமுறை வாழ்க்கை வரை அனைத்தையும் கூற காரணம் சட்டியில் உள்ளது தானே அகப்பைக்கு வரும் என்பதனால் தான்.
{ காய்கறி கொண்டு சமைத்த சட்டியில் அகப்பையை விட்டால் சைவ உணவி தான் வரும் . அசைவம் கொண்டு சமைத்தால் அசைவம் வரும்
என்ன ஒரு பெரிய தத்துவம் என்று சொல்லுகிண்றீர்கலாக்கும் .}
வெட்டியாகவோ அல்லது கதைக்கு ஆகாததையோ அல்லது ஊதாரிதனமாகவோ எதனையும் கூற வில்லை சகோதரி.
அப்படியே எம்மை தாண்டி அறியாமல் கருத்து வெளியில் வந்தாலும் வாத்தியார் ஐயா முடிவீர்க்கு பின்னர் தானே வெளியில் வரும்
சரி!
இங்கு கண்ணனிடம் உள்ளது எல்லாம் சுத்தமான சைவ சமையலே .
ஆதலால் வெளியில் கூறுவதால் ஒன்றும் கேட்டு போவது ஒன்றும் இல்லையே . சரிதானே சகோதரி !
பள்ளீகூட நாட்களில் நூலகம் சென்று கண்ணதாசனின் பதிப்பகத்தில் (ஆங்கில) மொழி பெயர்ப்பு புஸ்தகத்தின் ஆசிரியர் காப்மேயர் அவர்களின் புஸ்தகத்தை சரியாக 20 வருடதீர்க்கு முன்னர் படித்தது
{ இன்னும் நிறைய புஸ்தகம் கூட தான் } அன்று முதல் இன்று வரை மோசமான அளவீர்க்கு மனம் சோர்ந்து போனாலும் மீண்டும் புத்து உணர்ச்சி பெற்று வர முடிகின்றது எளிதில். .
அதான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது ஆசிரியர்கள் கூறுவார்கள்
"இளம் மரத்தில் ஆணியை அறைந்தால் மிகவும் எளிதில் சென்று விடும் . ஆனால், விளைந்த அதான் முற்றிய மரத்தில் ஆணியை அடிக்க மிகவும் கஷ்ட படனும் என்று!" .
இன்றைய ரிலையன்ஸ் குருப்பை படைத்த பிரம்மா திருபாய் அம்பானி 37 ம் வயதில் தான் நிருபனத்தை துவக்கினார் .
MGR அவர்கள் 42 வயதீர்க்கு மேல் தான் சாதனை படைக்க ஆரபித்தார்.
இன்போசிஸ் யை உருவாக்கியவரும், HCL என்று நிறையா கூறி கொண்டே போனால் ஆயுள் போதாது .
இறைவன் நல்ல புத்தியை, செய்யும் காரியம் ஜெயமாக மட்டும் நடத்தி தந்தாள் போதும் நம்மாலும் சாதீட்சு காட்ட முடியும் என்று நடைமுறைக்கு ஏற்றவாறு நினைப்பதால் தான் வண்டி இந்த அளவீர்க்கு ஓடுகின்றது .
--
அன்புடன் வணக்கம்
ReplyDeleteஅடியார்களுக்கு தொண்டு செய்வது, மாகேஸ்வர (அன்னம் பாலிப்பது )பூஜை,முன் காலத்தில்
ஒரு கடமையாக இருந்தது வரும் வழிபோக்கர்கள் யாராக இருந்தாலும் வீடு திண்ணையல் அமர வைத்து
சிரம பரிகாரம் செய்ய வைத்து உணவு அளிப்பார்கள் .சிவனடியார்களாக இருந்தால் இன்னும் கூடுதல் வேண்டும் பொருளும் கொடுப்பார்கள் ..மம் அது அந்த காலம் ..இப்போ திண்ணையும் கிடையாது பூஜையும் கிடையாது வீட்டுக்கு தெரியாத ஆள் வந்தா
"""பூசைதான் "" கிடைக்கும் .. நல்ல சிந்தனை நண்பரே !! படிக்கும் பொது பலமுறை மூல மந்திர சொற்கள் படிக்க வைத்து விட்டீர்கள் நன்றி.. சேரமான் பெருமான் நாயனார் ..உடேம்பேல்லாம் உவர் மண் பூசி வந்த வன்னாரை பார்த்து... யானை மீதிருந்து இறங்கி வணங்கினார் ... .. அடியேன் அடி வண்ணான் .... அடியேன் அடி சேரன்..!!!.. நீவீர் எம்பெருமானின் அடியார்களின் திருகோலத்தை நினைவூட்டினீர் .!!!!.செல்லும் ...அது போல நீங்கள் எம்பெர்ருமானின் திருமந்திரத்தை நினைவூட்டினீர்கள்.... நன்றி வணக்கம்
//// மிகவும் நீண்ட நாட்களாக கூற வேண்டும் என்று உள்மனதில் இருந்த ஒரு ஆதங்க கருத்தை அன்பு சகோதரர் அருமையாக கூறி உள்ளார்./////
ReplyDeleteபாராட்டுக்களுக்கு நன்றிகள் சகோதரரே!
////ஹாலாஸ்யம்! தங்களின் சொல்லும் திறன் மேம்பட்டிருக்கிறது.எளிமையான சரளமான நடை கை வந்துள்ளது.
ReplyDeleteபாராட்டுக்கள்./////
கிருஷ்ணன் சார்.... தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றிகள்..
/////ஆலாசியம், உங்கள் எழுத்து நடை இந்த தடவை ரொம்ப அருமையாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள்./////
ReplyDeleteமிக்க நன்றி உமா...
Arul said...
ReplyDeleteநல்ல கருத்துள்ள பதிவு...நன்றி...
தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே...
/////Armayana Kadhai...Azhamana Porul. Alosium avargalukkum & Namadhu Vathiyarukkum Nandrigal.////
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே...
தங்களுக்கு வளமான வருடமாக 2011 அமைய வாழ்த்துகள்!!
ReplyDelete////"""பூசைதான் "" கிடைக்கும் .. நல்ல சிந்தனை நண்பரே !! படிக்கும் பொது பலமுறை மூல மந்திர சொற்கள் படிக்க வைத்து விட்டீர்கள் நன்றி.. சேரமான் பெருமான் நாயனார் ..உடேம்பேல்லாம் உவர் மண் பூசி வந்த வன்னாரை பார்த்து... யானை மீதிருந்து இறங்கி வணங்கினார் ... .. அடியேன் அடி வண்ணான் .... அடியேன் அடி சேரன்..!!!.. நீவீர் எம்பெருமானின் அடியார்களின் திருகோலத்தை நினைவூட்டினீர் .!!!!.செல்லும் ...அது போல நீங்கள் எம்பெர்ருமானின் திருமந்திரத்தை நினைவூட்டினீர்கள்.... நன்றி வணக்கம்/////
ReplyDeleteஎனக்கு சிறு வயதிலேயே எந்தந்தையார் சொன்னது இன்று எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது... திருவோடோடு வாசலில் நிற்பவர்களிடம் மிகுந்த மரியாதைக் காட்டவேண்டும் என்பது தான் அது அதை நான் என்றுமே மறந்ததில்லை..
சதாசிவம் இல்லையா அந்த பக்தரின் திருநாமம்...
அத்வைதம் எழுதிய மகாப் பெரியவாள் ஸ்ரீ ஆதிசங்கருக்கே அதன் தத்துவத்தை நர்மதா நதிக்கரையில் அந்த பரமன் புலயனாக வந்து விளங்க வைத்தானல்லவா!.... அதை உணர்ந்தவர்கள் பலருள் மஹாகவி பாரதியும் விவேகானந்தரும்... நம் காலத்திலேயே காஞ்சி பெரியவரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்...
கலியுகத்திற்கு மிகவும் சிறந்தது அத்வைதம் அதனாலே அதனை போற்றிய மகான்கள் பலரும் நமக்கு அதன் வழி வாழ சொல்லியுள்ளார்கள்.... எல்லோருள்ளும் சிவனைக் காண்போம்.. அன்பே சிவம்.... ஓம் நமசிவாய....
தங்களின் பாராட்டுக்கு நன்றிகள் ஐயா!
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநானும் எப்போவுமே சிவனேன்னு போயிட்டுருக்குறதுதான் வழக்கம்..
ReplyDelete