29.12.10

டச்சிங், டச்சிங்காக இருக்க என்ன வேண்டும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
டச்சிங், டச்சிங்காக இருக்க என்ன வேண்டும்?
---------------------------------------------------------------
நேற்றையப் பாடத்தின் தொடர்ச்சி.....
---------------------------------------------------------------
1
“அம்முதலோர் நான்கதும்வல் விருநான்குள்ள துக்கு
மகாவிரண்டிரு மூன்று மெய்ம்முத லாய்மூன்று
மம்முதலா றல்லதும்பந் தான் கிரண்டல்ல துந்தவ்
வாகவிரண்டேழுநக ரத்ததுவாயாறு
நெம்முதலோர் மூன்றுயுயூ வுகரமுதலைந்து
நின்றதுமக்க வினான்கு ஞம் முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றதுநொம் முதன்மூன்றுயாவும்
சொல்சவினான் கைந்தொருமுன் தலுமீன் றெட்டுளதே”


எத்தனை கடினமான தமிழ் செய்யுள் பாருங்கள். பதம் பிரித்துப் படித்துத் தெளிவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

‘இன்னா நைனா, மஜாவா கீறே?’ என்னும் சிங்காரச் சென்னைத் தமிழ்தான் இப்போது பழக்கத்தில் அல்லது புழக்கத்தில் உள்ளது.

தாவு தீர்ந்துவிடும் தமிழில் இருந்தால் யார் படிப்பார்கள்?

என்ன சொல்லப்பட்டிருக்கிறது அதில்?

27 நட்சத்திரங்களின் பெயர்கள் அதில் சொல்லப்பட்டிருக்கிறது

27 நட்சத்திரங்களையும் கீழ்க்கண்டபடி எளிமையான தமிழில் சொல்லியிருக்கலாமே? ஏன் சொல்லப்படவில்லை என்பது விளங்கவில்லை. ஒருவேளை பாட்டில் சொல்லி அதை மனனம் செய்வது அக்கால வழக்கமாக இருந்திருக்கலாம்.

உரை நடையில் இருந்தால், அதுவும் படு  ஈஸியாக இருந்தால் திருட்டுப்போகக்கூடும், செய்யுளில் இருந்தால், அதுவும் கடினமான செய்யுள்களில் இருந்தால், அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்:-))))

நட்சத்திரங்களின் பெயர்களை, வான்வெளியில் அவைகள் இருக்கும் வரிசைப்படி நான் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்:

கூட்டணி ஒன்று:
1. அஸ்வினி
2. பரணி
3, கார்த்திகை
4, ரோகிணி
5. மிருகசீர்சம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்,
8. பூசம்
9. ஆயில்யம்

கூட்டணி இரண்டு
1. மகம்
2. பூரம்
3. உத்திரம்
4. அஸ்தம்
5. சித்திரை
6. சுவாதி
7. விசாகம்
8. அனுஷம்
9. கேட்டை

கூட்டணி மூன்று
1. மூலம்
2. பூராடம்
3. உத்திராடம்
4. திருவோணம்
5. அவிட்டம்
6. சதயம்
7. பூரட்டாதி
8. உத்திரட்டாதி
9. ரேவதி

வரிசைப்படிதான் நட்சத்திரங்கள் உள்ளன. ஏன் கூட்டணி என்ற தலைப்புடன் கொடுத்திருக்கிறேன்?

ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள். நட்சத்திரமும் மனனம் ஆகும். அதன் அதிபதிகளும் மனப்பாடம் ஆகும். தசைபுத்திகளின் வரிசையும் மனதில் பதியும்

எண் 1 கேதுவின் நட்சத்திரங்கள்
எண் 2 சுக்கிரனின் நட்சத்திரங்கள்
எண் 3 சூரியனின் நட்சத்திரங்கள்
எண் 4. சந்திரனின் நட்சத்திரங்கள்
எண் 5 செவ்வாயின் நட்சத்திரங்கள்
எண் 6 ராகுவின் நட்சத்திரங்கள்
எண் 7 குருவின் நட்சத்திரங்கள்
எண் 8 சனியின் நட்சத்திரங்கள்
எண் 9 புதனின் நட்சத்திரங்கள்
+++++++++++++++++++++++++
பாடலுக்கான விளக்கம்:

“அம்முதலோர் நான்கதும்
வல்விருநான்குள்ளதுக்கு மகாவிரண்டு
இருமூன்று மெய்ம்முதலாய் மூன்று
மம்முதலாறல்லதும் பந்தான் கிரண்டல்ல துந்தவ்வாக இரண்டேழு நகரத்ததுவாயாறு
நெம்முதலோர் மூன்று
யுயூவுகரமுதலைந்து நின்றதுமக்கவினான்கு ஞம் முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றது
நொம் முதன்மூன்று
யாவும்
சொல்சவினான் கைந்தொருமுன்தலும் மீன்றெட்டுளதே”
---------------------------------------------------------
அ,ஆ,இ, ஈ 4ம் = கார்த்திகை
வ, வா, வி, வீ 4ம் = ரோகிணி
வெ, வே, வை,வெள 4ம் = மிருகசீரசம்
கு,கூ 2ம் = திருவாதிரை
கெ, கே, கை, கூ 4ம் = புனர்பூசம்,
கொ,கோ, கெள  3ம் = பூசம்
மெ,மே, மை 3ம் ஆயிலியம்
ம,மா,மி,மீ, மு, மூ 6ம் = மகம்
மொ,மோ, மெள 3ம் = பூரம்
ப, பா, பி, பூ 4ம் = உத்திரம்
பு, பூ 2ம் அஸ்தம்
பெ,பே, பை, பொ,போ, பெள் 6ம் = சித்திரை
த, தா 2ம் = சோதி (சுவாதி)
தி,தீ,து,தூ, தெ, தே தை 7ம் = விசாகம்
ந, நா, நி, நீ, நு, நூ 6ம் = அனுடம் (அனுஷ்டம்)
நெ, நே, நை 3ம் = கேட்டை
யு, யூ 2ம் = மூலம்
உ, ஊ, எ, ஏ 4ம் = பூராடம்
ஒ, ஓ, ஒள 3ம் = உத்திராடம்
க, கா, கி 3ம் = திருவோணம்
ஞ, ஞா, ஞீ3ம் = அவிட்டம்
தொ, தோ, தெள 3ம் = சதயம்
நொ, நோ, நெள 3ம் = பூரட்டாதி,
யா, க 2ம் = உத்திரட்டாதி
ச, ஆ, சி, சீ 4ம் = ரேவதி
சு, சூ, செ, சே, சை 5ம் அசுபதி (அஸ்வினி)
சொ, சோ, செள 3ம் = பரணி

அம்முதலோர் நான்கு
அ,ஆ,இ, ஈ 4ம் = கார்த்திகை, உ, ஊ, எ, ஏ, ஐ 5ம் = பூராடம், யு, யூ 2ம் = மூலம், ஒ, ஓ, ஒள 3ம் = உத்திராடம், (4 நட்சத்திரங்கள்)
மெய்ம்முதலாய் மூன்று
க, கா, கி, கீ 4ம் = திருவோணம், கு,கூ 2ம் = திருவாதிரை,கெ, கே, கை, 3ம் = புனர்பூசம், கொ,கோ, கெள 3ம் = பூசம் (4 நட்சத்திரங்கள்)
ச, சா, சி, சீ 4ம் = ரேவதி, சு, சூ, செ, சே, சை 5ம் அசுபதி (அஸ்வினி), சொ, சோ, செள 3ம் = பரணி
(3 நட்சத்திரங்கள்)
ஞ, ஞா, ஞீ 3ம் = அவிட்டம்
தொம்முதலோர் மூன்று
த, தா 2ம் = சோதி (சுவாதி), தி,தீ,து,தூ, தெ, தே தை 7ம் = விசாகம், தொ, தோ, தெள 3ம் = சதயம்
(3 நட்சத்திரங்கள்),
நொம் முதன்மூன்று
ந, நா, நி, நீ, நு, நூ 6ம் = அனுடம் (அனுஷ்டம்), நெ, நே, நை 3ம் = கேட்டை, நொ, நோ, நெள 3ம் = பூரட்டாதி
(3 நட்சத்திரங்கள்)
ப, பா, பி, பூ 4ம் = உத்திரம், பு, பூ 2ம் அஸ்தம், பெ,பே, பை, பொ,போ, பெள 6ம் = சித்திரை
(3 நட்சத்திரங்கள்)
ம,மா,மி,மீ, மு, மூ 6ம் = மகம், மெ,மே, மை 3ம் ஆயிலியம், மொ,மோ, மெள 3ம் = பூரம் (3 நட்சத்திரங்கள்)
யா, க,  2ம் = உத்திரட்டாதி (1)
விருநான்குள்ளதுக்குமகாவிரண்டு
வ, வா, வி, வீ 4ம் = ரோகிணி, வெ, வே, வை,வெள 4ம் = மிருகசீரசம் (மிருகசீர்சம்), (2 நட்சத்திரங்கள்)
++++++++++++++++++++++++++++++++++
பாடல் எண் 2

“வதுவைமனன்புகர் பொனிவர்கேந்திரகோ ணேறி
மாகளர்ப்பெறாதுதனித் திருக்கமனன் பெலக்கி
லதிகபெலமாயிவர்களர வொழியவுது வூழ்க
கருகிலுறிலல்ல வெனிலைந்ததற்குள்ளாகின்
முதியவர்தம்குற்பெற மற்றவரபெலமா கின்
முதல்வணும்பொன்னுதய முறின்முகமதனுக்குடையோர்
நிதிமதியுற்றியவை சேரில்வாலி பவிவாக
நிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே”

ஏழாம் வீட்டிற்கு உரியவனும், சுக்கிரனும், குருவும் கேந்திரம் அல்லது திரிகோண இடங்களில் தீய கிரகங்களுடன் சேராமல் தனித்திருக்க,

அல்லது லக்கினாதிபதி வலுவாக இருக்க இவர்கள் அதிக பலத்துடன் ராகு  மற்றும்  கேது சேர்க்கை இல்லாமல் சூரியனுக்கு அல்லது சந்திரனுக்கு முன் வீட்டில் அல்லது பின் வீட்டில் இருக்க

அல்லது 5ஆம் வீட்டிற்கு உள்ளாக இருந்து சுபக்கிரகங்கள் ஆட்சி பலத்துடன் இருக்க, அத்துடன் பாவகிரகங்கள் மறைவிடங்களில் இருக்க

அல்லது லக்கினாதிபதியும் குருவும் சேர்ந்து லக்கினத்தில் இருந்தாலும்

அல்லது 2ஆம் மற்றும் 7ஆம் அதிபதிகள் குருவுடனும், சந்திரனுடனும் சேர்ந்து 2, மற்றும் 7ஆம் இடங்களில் இருந்தாலும்

அவைகள் நன்மையைச் செய்யும்.

அதுபோன்ற அமைப்பையுடைய ஜாதகன் இளம் வயதிலேயே திருமணமாகி, நெடுங்காலம் தன் மனைவியுடன் கூடி இன்பம் 
எய்துவான்/ அனுபவிப்பான்.  

உங்கள் மொழியில் சொன்னால் டச்சிங், டச்சிங்காக எப்போதும் இருப்பான்.

கடைசி வரிகைக் கவனியுங்கள். அதில்தான் எதைப் பற்றிசொல்லப்படுகிறது என்பது அடங்கியுள்ளது

என்ன வரி அது?

......................................................வாலி பவிவாக
நிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே”


பதம் பிரியுங்கள்

வாலிப விவாக (ம்)  நிறைவேறும். அவர்கள் இன்ப(ம்) நெடுநாளைக்கு உளதே”

விளக்கம் போதுமா?
+++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

52 comments:

  1. சும்மா நச்சுனு நச்சுனு நச்ச்னு....
    இருக்கு இரண்டாம் செய்யுள்....

    எனக்கு
    குருவும் (லக்னாதிபதி) சுக்கிரனும் (சுக்கிரன் வீட்டில்) 11 -ல்
    இவர்கள் மீது வர்கோத்தம சந்திரன் நேரடிப் பார்வைத் தருகிறார்...
    12 -ல் சூரியனும் இவர்களுக்கு முன்பு இருக்கிறார்.
    (அதேபோல் ஐந்துக்கு அதிபதி 2 - ல் உச்சம் பெற்று இருக்கிறார்).

    என் மனையாளுக்கு...
    லக்னத்தில் 7 - ற்கும் 2 -ற்கும் உரிய செவ்வாய்.
    2 - ல் சுக்கிரனும் (லக்னாதிபதியும்) குருவும் சேர்க்கை.
    எனக்கு 25 - ஆம் வயதில் திருமணம் நடந்தது......
    ஆக அத்தனையும் என் விசயத்தில் அப்படியே பொருந்தும்....

    நன்றிகள் ஆசிரியரே!

    ReplyDelete
  2. //"அதுபோன்ற அமைப்பையுடைய ஜாதகன் இளம் வயதிலேயே திருமணமாகி, நெடுங்காலம் தன் மனைவியுடன் கூடி இன்பம் எய்துவான்/ அனுபவிப்பான்.
    உங்கள் மொழியில் சொன்னால் டச்சிங், டச்சிங்காக எப்போதும் இருப்பான்.கடைசி வரிகளைக் கவனியுங்கள். அதில்தான் எதைப் பற்றிசொல்லப்படுகிறது என்பது அடங்கியுள்ளது.என்ன வரி அது?....வாலி பவிவாகநிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே” பதம் பிரியுங்கள்வாலிப விவாக (ம்) நிறைவேறும்.
    அவர்கள் இன்ப(ம்) நெடுநாளைக்கு உளதே”///

    உங்க‌ள் எழுத்தின் வெற்றிக்குக் காரணமே வாசிக்க வருகின்ற எல்லோருக்கும் ஏதாவது ஒன்று பிடிக்கும் படி இருப்பதுதான் அய்யா!மைனர் 'குஷி' ஆகி வித்தியாசமாக பின்னூட்டம் இடுவார்பாருங்கள்.
    Over to Tokyo!

    ReplyDelete
  3. அன்புடன் வணக்கம்
    அசாத்தியமான நுண்ணறிவு கொண்டு வார்த்தைகளை பதம் பிரித்து என போன்ற
    கடைசி பென்ச் மாணவனுக்கும் புரியும் படி விளக்கி உள்ளீர்கள் நன்றி நன்றி நன்றி.

    ReplyDelete
  4. உங்களுடைய ஆக்கம் தான் இருப்பதிலேயே மிகவும் டச்சிங் டச்சிங்கான விஷயம்.

    மிகவும் பிரமாதம் தல

    தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  5. ஆலாசியம் சார்

    சுக்கிரன் ஆட்சி அப்பிடிங்கும்போது நீங்கள் பெரிய ஆள் பாஸ்

    கில்லாடியா இருப்பீங்க பாஸ்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. எல்லோருக்கும் ஏதாவது ஒன்று பிடிக்கும் படி இருப்பதுதான் அய்யா!மைனர் 'குஷி' ஆகி வித்தியாசமாக பின்னூட்டம் இடுவார்பாருங்கள்.////////
    இது எப்படியிருக்குன்னா 'பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்ட கதைதான் '
    மைனரைவிட நீங்க தான் தலைவரே குஷியா இருக்கறீங்க.

    நாங்கெல்லாம் நேத்து வந்தவங்க பாஸ்

    நீங்க இன்னைக்கும் பீல்ட் லே (field ) நிக்கறீங்கன்னா அதுக்கெல்லாம்

    தனித்திறமையும் வேணும் ஜாதகமும் நல்லா இருக்கணும்

    ஆலாசியம் சார் சிங்கப்பூரில் நீங்கள் இந்தியாவில்
    நல்லாவே கலக்கறீங்க
    நல்லா இருங்க பாஸ்

    ReplyDelete
  7. சார் ,
    இந்த பதிவை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை , இந்த பாடல்களுக்கு விளக்கம் கண்டு பிடித்தது எல்லாம் simply superp சார் ,...
    இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியதை சுட்டால் கோபம் வரத்தான் செய்யும் .

    இந்த பதிவிற்கு எனது பாராட்டுதல்கள் .

    ReplyDelete
  8. ////Alasiam G said...
    சும்மா நச்சுனு நச்சுனு நச்ச்னு....
    இருக்கு இரண்டாம் செய்யுள்....
    எனக்கு
    குருவும் (லக்னாதிபதி) சுக்கிரனும் (சுக்கிரன் வீட்டில்) 11 -ல்
    இவர்கள் மீது வர்கோத்தம சந்திரன் நேரடிப் பார்வைத் தருகிறார்...
    12 -ல் சூரியனும் இவர்களுக்கு முன்பு இருக்கிறார்.
    (அதேபோல் ஐந்துக்கு அதிபதி 2 - ல் உச்சம் பெற்று இருக்கிறார்).
    என் மனையாளுக்கு...
    லக்னத்தில் 7 - ற்கும் 2 -ற்கும் உரிய செவ்வாய்.
    2 - ல் சுக்கிரனும் (லக்னாதிபதியும்) குருவும் சேர்க்கை.
    எனக்கு 25 - ஆம் வயதில் திருமணம் நடந்தது......
    ஆக அத்தனையும் என் விசயத்தில் அப்படியே பொருந்தும்....
    நன்றிகள் ஆசிரியரே!//////

    பொருந்தியதில் சந்தோஷமே ஆலாசியம். நன்றி!

    ReplyDelete
  9. ////kmr.krishnan said...
    //"அதுபோன்ற அமைப்பையுடைய ஜாதகன் இளம் வயதிலேயே திருமணமாகி, நெடுங்காலம் தன் மனைவியுடன் கூடி இன்பம் எய்துவான்/ அனுபவிப்பான்.
    உங்கள் மொழியில் சொன்னால் டச்சிங், டச்சிங்காக எப்போதும் இருப்பான்.கடைசி வரிகளைக் கவனியுங்கள். அதில்தான் எதைப் பற்றிசொல்லப்படுகிறது என்பது அடங்கியுள்ளது.என்ன வரி அது?....வாலி பவிவாகநிறைவேறுமிகவர்க ளின்பநெடு நாளைக்குளதே” பதம் பிரியுங்கள்வாலிப விவாக (ம்) நிறைவேறும்.
    அவர்கள் இன்ப(ம்) நெடுநாளைக்கு உளதே”///
    உங்க‌ள் எழுத்தின் வெற்றிக்குக் காரணமே வாசிக்க வருகின்ற எல்லோருக்கும் ஏதாவது ஒன்று பிடிக்கும் படி இருப்பதுதான் அய்யா! மைனர் 'குஷி' ஆகி வித்தியாசமாக பின்னூட்டம் இடுவார்பாருங்கள்.
    Over to Tokyo!/////

    I am also waiting to hear from Tokyo

    ReplyDelete
  10. ////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    அசாத்தியமான நுண்ணறிவு கொண்டு வார்த்தைகளை பதம் பிரித்து என போன்ற
    கடைசி பென்ச் மாணவனுக்கும் புரியும் படி விளக்கி உள்ளீர்கள் நன்றி நன்றி நன்றி.////

    உங்களைத்தான் முதல் பெஞ்சில் உட்காரவைத்தேனே? மறுபடியும் கடைசி பெஞ்சிற்குப் போகாதீர்கள்!

    ReplyDelete
  11. ////G.Nandagopal said...
    உங்களுடைய ஆக்கம் தான் இருப்பதிலேயே மிகவும் டச்சிங் டச்சிங்கான விஷயம்.
    மிகவும் பிரமாதம் தல
    தொடரட்டும் உங்கள் சேவை///

    எனக்கு உங்களுடைய (மாணவர்களின்) ட்ச்சிங் டச்சிங்தான் முக்கியம் (அதாவது ஆதரவுதான் முக்கியம்) கோபால்!

    ReplyDelete
  12. ////G.Nandagopal said...
    ஆலாசியம் சார்
    சுக்கிரன் ஆட்சி அப்பிடிங்கும்போது நீங்கள் பெரிய ஆள் பாஸ்
    கில்லாடியா இருப்பீங்க பாஸ்
    வாழ்த்துக்கள்///

    அவருக்கு இளைத்தவரா நீங்கள்?

    ReplyDelete
  13. ////G.Nandagopal said...
    எல்லோருக்கும் ஏதாவது ஒன்று பிடிக்கும் படி இருப்பதுதான் அய்யா!மைனர் 'குஷி' ஆகி வித்தியாசமாக பின்னூட்டம் இடுவார்பாருங்கள்.////////
    இது எப்படியிருக்குன்னா 'பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்ட கதைதான் '
    மைனரைவிட நீங்க தான் தலைவரே குஷியா இருக்கறீங்க.
    நாங்கெல்லாம் நேத்து வந்தவங்க பாஸ்
    நீங்க இன்னைக்கும் பீல்ட் லே (field ) நிக்கறீங்கன்னா அதுக்கெல்லாம்
    தனித்திறமையும் வேணும் ஜாதகமும் நல்லா இருக்கணும்
    ஆலாசியம் சார் சிங்கப்பூரில் நீங்கள் இந்தியாவில்
    நல்லாவே கலக்கறீங்க
    நல்லா இருங்க பாஸ்/////

    அத்துடன் அவருடைய வயது, பெற்ற அனுபவங்கள், மனப்பக்குவம் என்று இன்னும் எத்தனையோ இருக்கிறது கோபால்!

    ReplyDelete
  14. apooo..enaku lagnathipathi guru..dhanusu lagnathil 6 paralodu ..andha veetin paral 30...then touching touchinga....young age marriage endru potirukindradhu...but 26 over inum marriage aga vilaiyae..hahah...only thing is he is retro...solungal aiyaa solungal...

    ReplyDelete
  15. 7th houseaium..9th houseaium ...guru mattumeh paarkindrar........

    ReplyDelete
  16. ////satchitanand said...
    மிக்க அருமை.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  17. ////Soundarraju said...
    சார் ,
    இந்த பதிவை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை , இந்த பாடல்களுக்கு விளக்கம் கண்டு பிடித்தது எல்லாம் simply superp சார் ,... இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியதை சுட்டால் கோபம்வரத்தான் செய்யும் .
    இந்த பதிவிற்கு எனது பாராட்டுதல்கள்///////

    கோபம் கொள்வதால் என்ன பயன்? அடுத்த முறை அதே கோபம் எட்டிப்பார்க்காமல் புத்திசாலித்தனமாகச் செயல்படுவதுதான் சிறந்த வழி

    ReplyDelete
  18. /////ஆலாசியம் சார்
    சுக்கிரன் ஆட்சி அப்பிடிங்கும்போது நீங்கள் பெரிய ஆள் பாஸ்
    கில்லாடியா இருப்பீங்க பாஸ்
    வாழ்த்துக்கள்////

    ம்ம்.... சரி சொன்ன சந்தோசம் தானே படப் போறீங்க..

    ராசியிலே செவ்வாய் உச்சம்.. சுக்கிரன் ஆட்சி...

    நவாம்சத்திலே சுக்கிரன் உச்சம்...

    புதன் (7 க்கு உரியவன்) உச்சம்...

    சூரியன் ஆட்சி...

    கேதுவும் ஆட்சி... (ரொம்ம்ப பீத்திக்கிறேன்னு நினைக்கிறேன் லக்னத்துல மாந்தி)

    ஆனால் எல்லாத்துக்கும் சேர்த்து ௨௧ வருஷம் கால சர்ப்ப தோசத்துல போட்டுவிட்டான் ஆண்டவன்... அப்பத்தானே கேது ஞானத்தை தர ஏதுவாக இருக்கும்... எல்லாம் நம்ம வாத்தியார் சார் சொல்ற மாதிரி ஆண்டவன் எல்லோரையும் சமமாகப் பார்த்து 337 வைத்துட்டான் சார்..

    கில்லாடி எல்லாம் இல்லை நண்பரே!
    வில்லில் ஆடும் அம்பு விழி போல!
    கடல் அலையாடும் கயல் போல!
    காதல் மடலிலாடும் கவி போல!
    நீல வானாடும் முகில் போல!
    பூம்புனல் ஆடும் தென்றல் போல!
    மலராடும் வண்ணத்துப் பூச்சியைப் போல!
    முல்லைக் காடாடும் வண்ணமயில் போல!
    கழனியாடும் நெற்கதிர் போல!

    வாசிப்போறேல்லாம் கொண்டாடும் வாத்தியார் எழுத்து நடையைப் போல!!!

    ஏதோ தள்ளாடாமல் கொஞ்சம் சொல்லாடுவோம் அவ்வளவு தான்....

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் நந்தகோபால் அவர்களே.

    ReplyDelete
  19. நிஜமாகவே செம டச்சிங் தான் ஐயா, இன்றைய பாடம். விளக்கம் + குறுக்கு வழி ஃபார்முலா=சூப்பர்...!

    ReplyDelete
  20. ஆசிரியருக்கு வணக்கம்,

    பாடலுக்கு விளக்கம் அருமை.

    அந்த திருட்டு கும்பலிடம் இருந்து எதும் பதில் வந்ததா ?


    விளக்கத்திற்கு நன்றிகள் பல.....

    ReplyDelete
  21. /////Jack Sparrow said...
    7th houseaium..9th houseaium ...guru mattumeh paarkindrar........//////

    அதற்கு உரிய பலன் கிடைக்கும். மற்றபடி பாடலில் உள்ள பலன்கள் கிடைக்க அதன்படி ஜாதகம் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  22. /////Jack Sparrow said...
    apooo..enaku lagnathipathi guru..dhanusu lagnathil 6 paralodu ..andha veetin paral 30...then touching touchinga....young age marriage endru potirukindradhu...but 26 over inum marriage aga vilaiyae..hahah...only thing is he is retro...solungal aiyaa solungal...//////

    அது குறிப்பிட்டுள்ளபடி ஜாதகம் அமைந்தவர்களுக்கான பலன். உங்கள் ஜாதகத்திற்கு தகுந்த பலன்கள் விரைவில் கிடைக்கும். நம்பிக்கையோடு இருங்கள்

    ReplyDelete
  23. /////Alasiam G said...
    /////ஆலாசியம் சார்
    சுக்கிரன் ஆட்சி அப்பிடிங்கும்போது நீங்கள் பெரிய ஆள் பாஸ்
    கில்லாடியா இருப்பீங்க பாஸ்
    வாழ்த்துக்கள்////
    ம்ம்.... சரி சொன்ன சந்தோசம் தானே படப் போறீங்க..
    ராசியிலே செவ்வாய் உச்சம்.. சுக்கிரன் ஆட்சி...
    நவாம்சத்திலே சுக்கிரன் உச்சம்...
    புதன் (7 க்கு உரியவன்) உச்சம்...
    சூரியன் ஆட்சி...
    கேதுவும் ஆட்சி... (ரொம்ம்ப பீத்திக்கிறேன்னு நினைக்கிறேன் லக்னத்துல மாந்தி)
    ஆனால் எல்லாத்துக்கும் சேர்த்து ௨௧ வருஷம் கால சர்ப்ப தோசத்துல போட்டுவிட்டான் ஆண்டவன்... அப்பத்தானே கேது ஞானத்தை தர ஏதுவாக இருக்கும்... எல்லாம் நம்ம வாத்தியார் சார் சொல்ற மாதிரி ஆண்டவன் எல்லோரையும் சமமாகப் பார்த்து 337 வைத்துட்டான் சார்.
    கில்லாடி எல்லாம் இல்லை நண்பரே!
    வில்லில் ஆடும் அம்பு விழி போல!
    கடல் அலையாடும் கயல் போல!
    காதல் மடலிலாடும் கவி போல!
    நீல வானாடும் முகில் போல!
    பூம்புனல் ஆடும் தென்றல் போல!
    மலராடும் வண்ணத்துப் பூச்சியைப் போல!
    முல்லைக் காடாடும் வண்ணமயில் போல!
    கழனியாடும் நெற்கதிர் போல!
    வாசிப்போறேல்லாம் கொண்டாடும் வாத்தியார் எழுத்து நடையைப் போல!!!
    ஏதோ தள்ளாடாமல் கொஞ்சம் சொல்லாடுவோம் அவ்வளவு தான்....
    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் நந்தகோபால் அவர்களே./////

    தள்ளாட்டம் இல்லாமல் இருந்தால் போதும். மற்றதை அவன் பார்த்துக்கொள்வான். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  24. //////M. Thiruvel Murugan said...
    நிஜமாகவே செம டச்சிங் தான் ஐயா, இன்றைய பாடம். விளக்கம் + குறுக்கு வழி ஃபார்முலா=சூப்பர்...!/////

    நல்லது. நன்றி திருவேலாரே!

    ReplyDelete
  25. ////bhuvanar said...
    Hai////

    ஹாய்! ஹாய்!

    ReplyDelete
  26. /////Ramachandran S said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடலுக்கு விளக்கம் அருமை.
    அந்த திருட்டு கும்பலிடம் இருந்து எதும் பதில் வந்ததா?
    விளக்கத்திற்கு நன்றிகள் பல.....////

    பதில் வரவில்லை. எதிர்பார்க்கவுமில்லை. கையாண்டுள்ள பகுதிகளை நீக்கிவிட்டால் போதும். பொறுத்திருந்து பார்ப்போம். இல்லை என்றால் ஒரு வழி உள்ளது. பின்னால் அதைச் செய்ய உள்ளேன்!

    ReplyDelete
  27. இன்றைய‌ ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  28. டச்சிங்.. டச்சிங்..

    இது தொடர் நிகழ்காலத்தை குறிக்கும் வார்த்தை . .

    அதனால் தான் மற்றவர்கள் திரும்பி பார்க்கிறார்கள் . .

    இந்த படத்தில் உங்ளவர்கள் உட்பட . .
    உள்ளபடியே . .

    ReplyDelete
  29. ///////உரை நடையில் இருந்தால், அதுவும் படு ஈஸியாக இருந்தால் திருட்டுப்போகக்கூடும், செய்யுளில் இருந்தால், அதுவும் கடினமான செய்யுள்களில் இருந்தால், அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்:-))))\\\\\\\\

    நிச்சயமா எங்களுக்கு செய்யுள் அப்படியே இருந்தால் ஒண்ணுமே புரியாது..
    ரொம்ப கடுமையா பிளான் பண்ணிருக்கீங்க சார்..சித்தர்களுக்கும் உங்களுக்கும் இடையே கடந்த ஜென்மங்களிலே இப்பிடி ஒரு MOU (Memorandam of Understanding ) இருந்திருக்கே?
    இனிமேல் உங்களை 'சுப்பையாசித்தர்'ன்னு கூப்பிடலாமா? இல்லை 'செட்டிநாட்டு சித்தர்' ன்னு சொல்றதுதான் மரியாதையா இருக்கும்..வாத்தியாரை பேர் சொல்லி கூப்பிட்டா அது நல்லா இருக்காது..

    ReplyDelete
  30. வணக்கம் ஐயா!

    அட! அடா !
    என்ன ஒரு பாக்கியம்.
    என்ன ஒரு வாழ்த்துரை, உண்மையை சொல்ல போனால் முன்னரே எமக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற ஒரு பெரும் ஏக்கம் இருந்தது . இப்பொழுது அதுவும் மறைந்து விட்டது என்னில் இருந்து.

    ஏனெனில் ஒருத்தர் சிங்கப்பூரில், மற்றொருவர் அரபுநாட்டில் வேரு ஒருவர் அதான் மாண்புமிகு ஐயா முத்துராமக்ரிஷ்ணன் தஞ்சை மாநகரில் , மாப்பிளை தோழனோ ஜப்பானில், இவை அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கும் நீதிபதியாக ஐயா பெரியவர், பாசமலர் சகோதரியோ டில்லியில் , தலைமை தாங்கி வாத்தியார் ஐயாவோ கோவை மாநகரில்
    உற்ற உறவினர்கள், மற்றும் சுற்றத்தாரோ உலகம் முழுவதும் இருந்து பெண் தேடத்தான் முடியுமா, அல்ல இந்த பாக்கியம் தான் கிடைக்குமா கண்ணனுக்கு

    எம்பெருமான் கண்ணன், கண்ணன் என்று பெயரை வைக்க வைத்து கவலை பட வைத்து விட்டானே என்று கவலை பட்ட கால நேரம் போகி,

    "புன்னகை!" பூக்க வைத்து விட்டு விட்டான் அந்த கரு நீல கண்ணன்.

    இதற்க்கு தான் இத்தனை காலம் காலம் கடத்தினானோ கண்ணன் ?

    >>>>>>>>>>>>>>>>><<<<<<<
    Alasiam G to me
    show details Dec 28 (2 days ago)
    Alasiam G has left a new comment on the post "Astrology உனக்கு எது சொந்தம்? பகுதி இரண்டு!":


    சரி கத்தார் கண்ணன் அவர்கள் திருமணத்திற்கு ஒரு.... லட்சத்து ஒன்னு மொய் எழுதிக்கப்பா...

    ReplyDelete
  31. ஐயா!

    கோதை நாச்சியார் எம்பெருமாட்டி
    " ஸ்ரீ ஆண்டாள் !" கண்ணபிரானை நினைத்து "கனா கண்டேன் தோழி!" என்னும் பெரிய பாசுரம் பாடவில்லையா தலைவா!

    கோதை நாச்சியாரின் விருப்பத்தை கண்ணபிரான் ஏற்றுக்கொள்ள
    வில்லையா தலைவா?



    Alasiam G has left a new comment on

    "அடிஎன்னுக் கூப்பிட ஆம்புள இல்லையாம்
    வெங்கட்டுன்னு பேரு வைக்கிறாளாம்ன்னு" .

    ReplyDelete
  32. ஐயா,

    இப்படி ஒரு விளக்கம் எந்த ஒரு பேராசிரியரும் கொடுக்க முடியாது. அற்புதம். அருமை. நாங்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள். நன்றி.

    க.பா.இரவிச்சந்திரன்.

    ReplyDelete
  33. உங்கள் தமிழ் புலமையும் ஜோதிட அறிவும் எங்களை போன்றவர்களுக்கு
    மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றது

    இப்படிக்கு
    உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன்
    சதீஷ்

    ReplyDelete
  34. மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.

    அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்//

    எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவர்களின் தமிழ்ப்புலமை அந்த ரேஞ்சில் இருந்திருக்கிறது. இப்பவே நிறைய பேருக்கு தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரிவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் டு தமிழ் அகராதி இருந்தாத்தான் படிக்கவே முடியும்கிற நிலைமை வந்துடும்.

    ReplyDelete
  35. பாசமலர் சகோதரியோ டில்லியில் //

    கண்ணன் என்னோட கமெண்ட்ஸ் படிச்சீங்களா?

    ReplyDelete
  36. ஐயா!

    "பாச மலர்!" சகோதரிக்கு ஒரு பட்டு புடவை இல்லாமலா மணப்பெண் தோழியாக வர முடியும்,

    அந்த அளவிற்க்காகவா சகோதரன் மனம் இல்லாமல் மற்றும் பொருள் ஈட்டும் திறமை இல்லாமல் போகிவிட்டான் சகோதரி ?

    ஆண்டவன் பெண்ணை மட்டும் காட்ட மாட்டுகின்றான் சகோதரி,
    காட்டிய பின்னர் முதல் அழைப்பு சகோதரியின் வீட்டீற்கு தான்

    பெண் மட்டும் எங்கு இருந்து என்று தெரிந்து விட்டல் போதும் சகோதரி!

    கல்யாணம் பெண் வீட்டிலா அல்லது
    !வாசு!" விழா அல்லது சென்னை இலா என்று தெரிந்து விடும்

    என்னுடைய வளர்ப்பு தந்தை, அதாவது அப்பாவுடைய தம்பி சித்தப்பா @ சித்தி சென்னையில் தான் உள்ளார்கள் நல்ல வேலை, குணம் என்று எதற்கும் குறை வில்லை குழந்தையை தவிர ஆதலால் நானே எனது வீட்டீர்க்கும், சித்தப்பா வீட்டீர்க்கும் ஒரே ஒரு "கண்ணான செல்ல மகன்!" உள்ள இரு தாய்க்கும் ஒரு தகப்பனுக்கும்.

    ஜனன அமைப்பே அப்படி அமைப்பு எனது பாச உள்ள சகோதரி


    >>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<

    Uma has left a new comment on the post "நீ பாதி நான் பாதி பெண்ணே!":

    ம்ம் அப்படியே 'பாச மலர்' சகோதரிக்கு பட்டுப்புடவையும் அந்த தொகைக்குள்ள வந்துடுமில்ல?
    Posted by Uma to வகுப்பறை at Thursday, December 30, 2010 1:03:00 PM

    ReplyDelete
  37. வாத்தியார் ஐயா!

    வாத்தியார் ஐயாவிற்கு மிகவும் பிடித்த இலக்கணம் தான் என்னுடையது

    அதுதான் கும்பலக்கணம்,
    கடக்க ராசி,
    ஆயில்ய நட்சத்திரம்,
    சொந்த ஊர்(அப்பா ஊர் செங்கோட்டை)

    ஜனனம்ஆன இடம் வாசுதேவநல்லூர்
    { அருகில் உள்ள பெரிய ஊர்கள் ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி }

    அஷ்டமி திதி,
    அப்பா பெயர் சீதா ராமன் ,
    நேரம் நாடு இரவு 02 .02 AM ,
    தேதி 15 / 05 / 1978

    இந்த தகவல் போதும் என்று நினைகின்றேன் ஒரு தகவல் வேண்டும் நான் தம்பியா அல்லது அண்ணாவா ?
    --

    ReplyDelete
  38. அந்த அளவிற்க்காகவா சகோதரன் மனம் இல்லாமல் மற்றும் பொருள் ஈட்டும் திறமை இல்லாமல் போகிவிட்டான் சகோதரி ?//

    கண்ணன், நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டீங்க. இருந்தாலும் நீங்க சொன்னதே புல்லரிச்சுடுச்சு. உங்க மெயில் id குடுங்க.

    ஒரு தகவல் வேண்டும் நான் தம்பியா அல்லது அண்ணாவா ?//

    தம்பிதான்

    ReplyDelete
  39. ////vprasanakumar said...
    இன்றைய‌ ஆக்கம் மிக நன்றாக இருக்கிறது.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  40. /////iyer said...
    டச்சிங்.. டச்சிங்..
    இது தொடர் நிகழ்காலத்தை குறிக்கும் வார்த்தை . .
    அதனால் தான் மற்றவர்கள் திரும்பி பார்க்கிறார்கள் .
    இந்த படத்தில் உங்ளவர்கள் உட்பட . .
    உள்ளபடியே /////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  41. ////minorwall said...
    ///////உரை நடையில் இருந்தால், அதுவும் படு ஈஸியாக இருந்தால் திருட்டுப்போகக்கூடும், செய்யுளில் இருந்தால், அதுவும் கடினமான செய்யுள்களில் இருந்தால், அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்:-))))\\\\\\\\
    நிச்சயமா எங்களுக்கு செய்யுள் அப்படியே இருந்தால் ஒண்ணுமே புரியாது..
    ரொம்ப கடுமையா பிளான் பண்ணிருக்கீங்க சார்..சித்தர்களுக்கும் உங்களுக்கும் இடையே கடந்த ஜென்மங்களிலே இப்பிடி ஒரு MOU (Memorandam of Understanding ) இருந்திருக்கே?
    இனிமேல் உங்களை 'சுப்பையாசித்தர்'ன்னு கூப்பிடலாமா? இல்லை 'செட்டிநாட்டு சித்தர்' ன்னு சொல்றதுதான் மரியாதையா இருக்கும்..வாத்தியாரை பேர் சொல்லி கூப்பிட்டா அது நல்லா இருக்காது../////

    நான் எளியவன். எதையும் எதிர்பார்க்காதவன். நீங்கள் எப்படிக்கூப்பிட்டாலும் சம்மதம்தான் மைனர்!

    ReplyDelete
  42. /////kannan said...
    வணக்கம் ஐயா!
    அட! அடா !
    என்ன ஒரு பாக்கியம்.
    என்ன ஒரு வாழ்த்துரை, உண்மையை சொல்ல போனால் முன்னரே எமக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற ஒரு பெரும் ஏக்கம் இருந்தது . இப்பொழுது அதுவும் மறைந்து விட்டது என்னில் இருந்து.
    ஏனெனில் ஒருத்தர் சிங்கப்பூரில், மற்றொருவர் அரபுநாட்டில் வேரு ஒருவர் அதான் மாண்புமிகு ஐயா முத்துராமக்ரிஷ்ணன் தஞ்சை மாநகரில் , மாப்பிளை தோழனோ ஜப்பானில், இவை அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கும் நீதிபதியாக ஐயா பெரியவர், பாசமலர் சகோதரியோ டில்லியில் , தலைமை தாங்கி வாத்தியார் ஐயாவோ கோவை மாநகரில்
    உற்ற உறவினர்கள், மற்றும் சுற்றத்தாரோ உலகம் முழுவதும் இருந்து பெண் தேடத்தான் முடியுமா, அல்ல இந்த பாக்கியம் தான் கிடைக்குமா கண்ணனுக்கு
    எம்பெருமான் கண்ணன், கண்ணன் என்று பெயரை வைக்க வைத்து கவலை பட வைத்து விட்டானே என்று கவலை பட்ட கால நேரம் போகி,
    "புன்னகை!" பூக்க வைத்து விட்டு விட்டான் அந்த கரு நீல கண்ணன்.
    இதற்குத் தான் இத்தனை காலம் காலம் கடத்தினானோ கண்ணன்?/////

    இருக்கலாம்! இருக்கலாம்!

    ReplyDelete
  43. /////Thanndavarayan said...
    ஐயா,
    இப்படி ஒரு விளக்கம் எந்த ஒரு பேராசிரியரும் கொடுக்க முடியாது. அற்புதம். அருமை. நாங்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள். நன்றி.
    க.பா.இரவிச்சந்திரன்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. /////simma said...
    உங்கள் தமிழ் புலமையும் ஜோதிட அறிவும் எங்களை போன்றவர்களுக்கு
    மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றது
    இப்படிக்கு
    உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன்
    சதீஷ்/////

    பயன்பட வேண்டும் என்றுதான் எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்கள் விமர்சனம் கண்டு மகிழ்வு கொண்டேன்!

    ReplyDelete
  45. /////Uma said...
    மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள்.
    அவன் வாத்தியாரிடம் வந்துதான் ஆகவேண்டும் என்ற மோசமான (?) நோக்கத்தில் அவ்வாறு எழுதப்பெற்றிருக்கலாம்//
    எனக்கு அப்படித் தோன்றவில்லை. அவர்களின் தமிழ்ப்புலமை அந்த ரேஞ்சில் இருந்திருக்கிறது. இப்பவே நிறைய பேருக்கு தமிழ் வார்த்தைகளின் அர்த்தம் புரிவதில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் டு தமிழ் அகராதி இருந்தாத்தான் படிக்கவே முடியும்கிற நிலைமை வந்துடும்.////

    கொஞ்ச நாட்களில் அல்ல! இன்றே பாதித் தமிழர்களின் நிலைமை அதுதான்!

    ReplyDelete
  46. /////Uma said...
    பாசமலர் சகோதரியோ டில்லியில் //
    கண்ணன் என்னோட கமெண்ட்ஸ் படிச்சீங்களா?////

    படித்துவிட்டார் என்று தெரிகிறது. கீழே உள்ள அவரது பின்னூட்டங்களைப் பாருங்கள்!

    ReplyDelete
  47. ///// " ஸ்ரீ ஆண்டாள் !" கண்ணபிரானை நினைத்து "கனா கண்டேன் தோழி!" என்னும் பெரிய பாசுரம் பாடவில்லையா தலைவா!
    கோதை நாச்சியாரின் விருப்பத்தை கண்ணபிரான் ஏற்றுக்கொள்ள
    வில்லையா தலைவா?/////
    கவலை வேண்டாம் கண்ணா...

    இல்லாதொன்றை யாரும் கண்டு பிடிக்க முடியாது....
    கண்டு பிடிக்கும் யாவும் ஏற்கனவே இருந்தது தான்...

    உங்களவளை பற்றிய உங்கள் கவலையை விடுங்கள்
    ஒன்பதில் (கோள்சார) குரு இருக்கிறான் என்பதில் சந்தோசப் படுங்கள்..
    திக்கெட்டும் தேடுங்கள் தேவதை அவள் காத்திருப்பாள்....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. அட! அடா !
    என்ன ஒரு பாக்கியம்.
    என்ன ஒரு வாழ்த்துரை, உண்மையை சொல்ல போனால் முன்னரே எமக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற ஒரு பெரும் ஏக்கம் இருந்தது////

    நண்பர் கண்ணன் அவர்களே!!!!

    தாமதம் தங்கம் பெட்டகம் கிடைபப்பதர்க்கு தான்...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  49. Dear Sir

    Arumai Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  50. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .. enjoy every minute of this year with happiness

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com