++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology உங்களுக்குப் பொருத்தமானவரைத்தான் காதலிக்கிறீர்களா? பகுதி இரண்டு!
இதன் முதல் பகுதி சென்ற வாரம் திங்களன்று வந்தது. அதைப் படித்தீர்களா? படித்திராதவர்களுக்காக அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்.
முதல் பகுதிக்கான சுட்டி (URL):
காதல் என்று இல்லை. மணமாகி வாழும் அத்தனை தம்பதியருக்கும் முக்கியமாக வேண்டியது மனப் பொருத்தம். ஒருவரின்மேல் மற்றவருக்கு இயற்கையாக உண்டாகக் கூடிய ஈர்ப்பு. ஒருவர் மற்றவருக்காக உருகக்கூடிய நேசம். மாறாத அன்பு. எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காத தன்மை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதெல்லாம் அனைவருக்கும் கிடைக்குமா?
எப்படிக் கிடைக்கும்?
கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலும் போகலாம்.
அதுதான் வாங்கிவந்த வரம்!
கவியரசர் தன் பாடல் வரிகளில் அசத்தலாகச் சொன்னதைப்போல “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!” அதுபோல பெண்களுக்குக் கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரமே!
சரி, நாம் எதிர்பார்த்தபடி அப்படி அமையாவிட்டால் என்ன செய்வது?
சரிபண்ணிக்கொண்டு போக வேண்டும்!!
எல்லோரும் சரி பண்ணிக்கொண்டு போக முடியுமா?
சிலருக்குத்தான் அது சாத்தியப்படும்!
ஏன்?
அதுவும் வாங்கி வந்த வரம்தான்!
ஜாதகத்தை வைத்து அது தெரியுமா?
தெரியும்!
அதனால்தான் அனுபவம் உள்ள ‘பெரிசுகள்’ ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்பார்கள்.
ஒருவருக்காக மற்றவர் (Made for each other) என்று ஜோடிகள் அமைவது பொதுவாக விளம்பரம், மற்றும் திரைப்படங்களில் மட்டும்தான்.
வாழ்க்கையில் 90% அப்படி அமையாது.
சிந்துபைரவி படம் பார்த்தீர்கள் அல்லவா? அப்படித்தான் இருக்கும். கணவன் பெரிய சங்கீத மேதையாக இருப்பான். சரளி வரிசைகூட தெரியாத பெண்ணாக மனைவி இருப்பாள். கணவன் பெரிய சாப்பாட்டு இரசிகனாக இருப்பான். மனைவி ரசம்கூட வைக்கத் தெரியாத அல்லது சோம்பேறித்தனம் மிகுந்த பெண்ணாக இருப்பாள்
கணவன் ரயில் என்றால் மனைவி தண்டவாளமாக இருப்பாள். மனைவி ரயில் என்றால் கணவன் தண்டவாளமாக இருப்பான். ஜோடிகள் அப்படித்தான் அமையும். இறைவன் அப்படித்தான் ஜோடி சேர்ப்பான். இரண்டு ரயில்களை ஒருபோதும் அவன் ஜோடியாகச் சேர்ப்பதில்லை.
தோற்றம், கல்வி, அறிவு, திறமை, சாமர்த்தியம், குணம், அதிர்ஷ்டம் என்று எத்தனையோ தேவைகள் மனிதனுக்கு இருந்தாலும், முக்கியமாக இருக்க வேண்டியது அல்லது கிடைக்க வேண்டியது நல்ல குணம். எதையும் தாங்கும் இதயம். எதையும் புன்முகத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனம். உங்கள் மொழியில் சொன்னால் Take it easy policy
பொருத்தமான நட்சத்திரம், பொருத்தமான ராசி பார்த்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு அது ஓரளவிற்குக் கிடைக்கும்.
ஏன் ஓரளவு என்று ஓரம் கட்டுகிறீர்கள்?
நட்சத்திரம், ராசி தவிர ஏழாம் வீடு, இரண்டாம் வீடு, மற்றும் லக்கினம் சிறப்பாக உள்ளவர்களுக்கு முழுதாகவே கிடைக்கும்.
நீங்கள் சொல்வது திருமணத்திற்கு சரிதான். காதலுக்கு என்ன செய்வது?
காதலிப்பது என்று முடிவு செய்துவிட்டால், பெளலரிடம் - அதுதாங்க உங்களுடைய காதலனிடம், அவனுடைய பிறந்த தேதியையும், நட்சத்திரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கேட்டால், அதைச் சொல்வான். சொல்லாவிட்டால் வீட்டில் பார்த்துவிட்டு வந்து அல்லது பெற்ற புண்ணியவதியிடம் கேட்டு வந்து சொல்லச் சொல்லுங்கள்.
அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?
அதைக் கீழே எழுதியுள்ளேன்
++++++++++++++++++++++++++++++++++++++
ஒன்றுக்கொன்று பொருந்தாத நட்சத்திரங்களை குழுமப்படுத்திக் கொடுத்துள்ளேன். ஒரு குழுவில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாது. அடுத்த குழுவில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் இவற்றிற்குப் பொருந்தும்
குழு ஒன்று:
அவிட்டம், மிருகசீர்சம், சித்திரை. (செவ்வாயின் நட்சத்திரங்கள்)
குழு இரண்டு:
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் (சந்திரனின் நட்சத்திரங்கள்)
திருவாதிரை, சுவாதி, சதயம் (ராகுவின் நட்சத்திரங்கள்)
குழு மூன்று:
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் (சூரியனின் நட்சத்திரங்கள்)
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்)
குழு நான்கு:
பரணி, பூரம், பூராடம் (சுக்கிரனின் நட்சத்திரங்கள்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்)
குழு ஐந்து:
அஸ்வினி, மகம், மூலம் (கேதுவின் நட்சத்திரங்கள்)
ஆயில்யம், கேட்டை, ரேவதி (புதனின் நட்சத்திரங்கள்)
-------------------------------------------------------------------------
அடுத்து என்ன?
நட்சத்திரத்தை வைத்து சந்திர ராசி தெரியுமல்லவா?
ஒவ்வொரு சந்திர ராசிக்கும் அதன் எட்டாவது ராசி பொருந்தாது!
உதரணத்திற்கு மகரத்திற்கு சிம்மம் எட்டாவது ராசி.
என்னசார் வறுக்கிறீர்களே? குறுக்கு வழி இல்லையா?
இருக்கிறது!
என்னவென்று சொல்லுங்கள்!
ஒரு வரி பதில் அது! பயன் உள்ளது அது!
இங்கே சொல்ல முடியாது. தேவைப்படுபவர்கள் மின்னஞ்சலில் கேளுங்கள். வெட்டு & ஒட்டு முறையில் உங்கள் அனைவருக்கும் உடனடியாக அது அனுப்பிவைக்கப்படும். வாத்தி (யாரின்) மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
---------------------------------------------------------------------------
அடுத்த பாடம் நாளை!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

நான் பூசம். என் மனைவியார் அனுஷம்.ஜன்மம்,அநுஜன்மம். பொருத்தம் கிடையாது.அன்பு வழிய வழியவாழாவிட்டாலும்,விட்டுக்
ReplyDeleteகொடுத்து ஒத்துப் போகப் பழகி விட்டோம்.அடுத்து அடுத்துக் குழந்தைச் செல்வம் கிடைத்து விட்டதால், அவர்களின் வளர்ப்பில் முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டோம்
////kmr.krishnan said...
ReplyDeleteநான் பூசம். என் மனைவியார் அனுஷம்.ஜன்மம்,அநுஜன்மம். பொருத்தம் கிடையாது.அன்பு வழிய வழியவாழாவிட்டாலும்,விட்டுக் கொடுத்து ஒத்துப் போகப் பழகி விட்டோம்.அடுத்து அடுத்துக் குழந்தைச் செல்வம் கிடைத்து விட்டதால், அவர்களின் வளர்ப்பில் முழுக் கவனத்தையும் செலுத்திவிட்டோம்/////
விட்டுக்கொடுத்தல் என்னும் குணம் உங்கள் இருவரையும் வாழவைத்திருக்கிறது. ஜாதகத்தில், 1, 2, 7ஆம் வீடுகள் நன்றாக இருக்கும். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா? அதற்கும் மேலே நீங்கள் வாங்கி வந்த வரம் கை கொடுக்கும் - அதுதான் பூர்வ புண்ணியம். ஐந்தாம் வீடு.:-)))))
விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் ஜாதகப்பொருத்தம் ஏன்?
ReplyDeleteவாத்தியார் சார்,
ReplyDeleteரொம்பவும் உபயோககரமான தகவலுக்கு மிகவும் நன்றி அய்யா.
ம்ம்ம்....ம்ம்ம்...
ஒண்ணுமில்லே சார் ஒரு பெரிய பெருமுச்சு
அவ்வளவுதான் வேற என்ன பண்ண முடியும்
பூர்வஜென்ம புண்ணியத்திலே வண்டி அதுவா ஓடிண்டு இருக்கு
குருபகவானே சரணம்
நந்தகோபால்
///// நீங்கள் சொல்வது திருமணத்திற்கு சரிதான். காதலுக்கு என்ன செய்வது?
ReplyDeleteகாதலிப்பது என்று முடிவு செய்துவிட்டால், பெளலரிடம் - அதுதாங்க உங்களுடைய காதலனிடம், அவனுடைய பிறந்த தேதியையும், நட்சத்திரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கேட்டால், அதைச் சொல்வான். சொல்லாவிட்டால் வீட்டில் பார்த்துவிட்டு வந்து அல்லது பெற்ற புண்ணியவதியிடம் கேட்டு வந்து சொல்லச் சொல்லுங்கள்.
அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும்?
அதைக் கீழே எழுதியுள்ளேன்//////
உண்மை தான் மிகுந்த விழிப்போடு நன்கு பலவற்றையும் ஆராய்ந்து காதலை வெளிப்படுத்தும் அன்பர்கள் தங்களுக்கு தானே ஏற்படுத்தியுள்ள "check list " -ல் இந்த விசயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்....
காதலிப்பவர்கள்.. ஜாதகத்தைப் பார்த்துக்கொண்டா காதலிக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன்.... எந்த measurement -ம் இல்லாமல் காதலிப்பவர்கள் யாராவது உண்டா? இருக்க முடியாது.....
அதைப்போலவே காதலிப்பவர்களை எல்லாம் (காலமும் இடமும் எண்ணத்தை மாற்றும் சக்தி கொண்டது) மனம் முடிக்க முடியும் என்றால் ஒவ்வொருவரும் ஐந்தாறு திருமணம் தான் செய்ய வேண்டும்...... (விதி விளக்குகள் கணக்கில் வேண்டாம்) அப்படி சில பேர் செய்யப்போய் தான் வாழ்வே பெரும் குழப்பமாக ஆகி நிற்கிறார்கள் சமூகத்தில்.......
ரவீந்த்ரநாத் தாகூரே மூன்றுமுறை காதல் வயப்பட்டதாக படித்து இருக்கிறேன்......
வாழ்வு பெரிது என்றும், நம்முடைய காதலி (லன்) வாழ்வு நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த விஷயம் நிச்சயமாக உபயோகமாக அமையும்....
இப்படியாவது நல்லது நடக்காதா என்ற இந்த வகுப்பறையின் ஆவலும் நிறைவேறும்....
அது தான் விதி என்றால் அதன் வழியே போகட்டும். நன்றி: நன்றி......
நீங்கள் அனுப்பிய லிங்கில் நான் பிறந்த எண்ணின் பலன்கள் படித்தேன். 90 % சரியாக இருக்கிறது.
ReplyDeleteஎந்த measurement -ம் இல்லாமல் காதலிப்பவர்கள் யாராவது உண்டா? இருக்க முடியாது.....
ReplyDeleteஅதைப்போலவே காதலிப்பவர்களை எல்லாம் (காலமும் இடமும் எண்ணத்தை மாற்றும் சக்தி கொண்டது) மனம் முடிக்க முடியும் என்றால் ஒவ்வொருவரும் ஐந்தாறு திருமணம் தான் செய்ய வேண்டும்...... (விதி விளக்குகள் கணக்கில் வேண்டாம்) /////////
திரு ஆலாசியம் அவர்கள் கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே.
இந்தகாலத்திலே checklist இல்லாமே யாரும் வெளியே கிளம்பறதே கிடையாது.
சார். அந்த விதிவிளக்கு மேட்டர். ...நாம ஏதாவது அவசரத்திலே கை தவறுதலா
கவனிக்காம விட்டுரறோம். ஒரு சிலர் இந்தவிசயத்தில் நம்மளை
torture பண்ணறதுன்னே torchlight வெச்சுண்டு அலஞ்சுண்டிருக்கா..
பார்த்துக்கோங்கோ .
நந்தகோபால்
Dear Sir,
ReplyDeleteIts a good lesson for all. Bit curious to know the answer. Sent an Email and waiting for your answer.
Thanks
Saravana
Coimbatore
நோ கமெண்ட்ஸ்... ஏன்னா?...
ReplyDeleteநோ கமெண்ட்ஸ்..
Dear Sir
ReplyDeleteMyself Mirugashirsham 3rd padham and my wife is suwathi.
Life is going smooth. Thanks god.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
மின்னஞ்சலில் குறுக்குவழித்தகவல் வரும் என்று எதிர்பார்த்தால் வந்த தகவல்
கண்டதும் பெருத்த ஏமாற்றமாகப்போய் விட்டது அய்யா.
அன்புடன்,
அரசு.
/////// ...நாம ஏதாவது அவசரத்திலே கை தவறுதலா
ReplyDeleteகவனிக்காம விட்டுரறோம். ஒரு சிலர் இந்தவிசயத்தில் நம்மளை
torture பண்ணறதுன்னே torchlight வெச்சுண்டு அலஞ்சுண்டிருக்கா..
பார்த்துக்கோங்கோ .//////
நந்தகோபால் அதை ஒரு guide - ன்னு எடுத்துக்குங்களே!
"இடிப்பார் இல்லா அரசனும் கெடுவான் இல்லையா"
இடிப்பார் இல்லா அரசனும் கெடுவான் இல்லையா"//
ReplyDeleteரொம்ப சரி ஆலாசியம்.
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.'
அப்படின்னு நான் சொல்லலை, நம்ம திருவள்ளுவர் சொல்லிருக்காரு (ஹி ஹி)
நோ கமெண்ட்ஸ்..//
ReplyDeleteவர வர கமெண்ட்ஸ் ல கூட மொக்கையைப் போடக் கிளம்பிட்டாங்கப்பா.
/////வர வர கமெண்ட்ஸ் ல கூட மொக்கையைப் போடக் கிளம்பிட்டாங்கப்பா./////
ReplyDeleteஆமா! எனக்கு ரொம்பநாளா சந்தேகம் அது என்ன மொக்கை ஆகுபெயரா? வினையாலணையும் பெயரா? அல்லது ஆங்கிலத்திலே " EUPHEMISM " என்பார்களே அதுபோன்றா... இது சென்னைப் பட்டின வழக்கோ?
யாராவது விளக்குங்களேன்! அல்லது தனிப்பதிவாக எழுத வேண்டி வந்தாலும் சரி எழுதி வட்டார வழக்கு என்று தனியாக ஒரு நாள் ஒதுக்கி வகுப்பறையில் வெளியிடலாமே!
வகுப்பறை புதிய கட்டிடத்திற்கு மாறியவுடன் இந்த வகுப்பறையை இது போன்ற பொது வாசகச் சாலையாக ஆசிரியர் மாற்றுவாரா?
/////ரொம்ப சரி ஆலாசியம்.
ReplyDelete'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.'
அப்படின்னு நான் சொல்லலை, நம்ம திருவள்ளுவர் சொல்லிருக்காரு (ஹி ஹி)/////
தெரிந்த விஷயத்தை சொல்லிப் புடுங்க... இங்க யாரும் புதுசா சொந்தமா சொல்லவே முடியாது.... எல்லாமே முன்னவுக சொன்னது தான்... ஒன்னு நாமப் படிச்சதா இருக்கும்... இல்லைன்னா பூர்வ ஜென்ம ஞாபகமா இருக்கும் அம்புடுத்தான்...... நான்மறையும் அதன் வழி அனைத்தும் முன்பேக் கூறியதே..
ஆகுபெயரா? வினையாலணையும் பெயரா? //
ReplyDeleteஇதெல்லாம் எந்தக் காலத்துலயோ படிக்கும்போது மூளைல பதிவானது பனிமூட்டம் போல மங்கலா ஞாபகம் இருக்கு. யாரைப் பார்த்து இந்த கேள்வியெல்லாம் கேட்டுட்டீங்க? ம்ம்ம்ம்
ஆலாசியம் சார்,
ReplyDeleteசெடிகளில் மலரும் மொட்டுகளில் எல்லா மொட்டுகளும் மலர்ந்து மலராவது இல்லை.
சில மொட்டுக்கள் மொட்டுகளாகவே இருந்துவிட்டு வாடி வந்தங்கிப்போகும்.
அப்பிடிதான் சில பேர் பேச ஆரம்பிக்கும்போது என்னமோ பெரிய உபயோகமான
தகவல்கள் சொல்றா மாதிரி தெரியும். கடைசியில் பார்த்தால் புஸ்வானமாக ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.
அதாவது மொக்கையாகப் போய்விடும். அதனால் இது ஒரு ஆகுபெயராகத்தான் இருக்க முடியும்.
இருந்தாலும் உமா அவர்கள் மைனருக்கு மொக்கைசாமி என்ற பெயரை அளித்திருக்கக்கூடாதுதான்
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
ReplyDeleteகெடுப்பா ரிலானுங் கெடும்.'////////
குறள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.
இடிக்கிறேன் பேர்வழி என்ற கிளம்பி
அஸ்திவாராத்தை இடிச்சிடாதேள்.
ஒவ்வொருத்தரும் எவ்வளவு கஷ்டப்பட்டு
கட்டறாங்க தெரியுமா
//// கடைசியில் பார்த்தால் புஸ்வானமாக ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.
ReplyDeleteஅதாவது மொக்கையாகப் போய்விடும்////
நந்தகோபால் அப்படிஎன்றால் அது ஆகுபெயர் தான்..
மொக்கை என்றால் மொழுங்கள்... கூரின்மை என்று பொருள்....
அது வேறு ஒரு விசயத்திற்கு பெயராகி விட்டதால் அது ஆகுபெயர் தான்.
அது போன்ற ஆட்களை நாங்கள் பெரிய அவுத்தாப் பேர்வழி என்று கூறுவோம்...
தகவலுக்கு நன்றிகள் நண்பரே!
மொக்கையாகப் போய்விடும். அதனால் இது ஒரு ஆகுபெயராகத்தான் இருக்க முடியும்.//
ReplyDeleteநந்தகோபால் அப்படிஎன்றால் அது ஆகுபெயர் தான்..//
ஆஹா தமிழ்ப் புலவர்கள் 2 பேர் சேர்ந்து மொக்கை ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்களே?
//// ஆஹா தமிழ்ப் புலவர்கள் 2 பேர் சேர்ந்து மொக்கை ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்களே?////
ReplyDeleteஇல்லை தோழி......
சற்றே திருத்தம் செய்ய விளைகிறேன்
அது மொக்கையைப் பற்றிய ஆராய்ச்சி...
சற்றே திருத்தம் செய்ய விளைகிறேன் //
ReplyDeleteஅது தெரிந்தே செய்யப்பட்ட பிழை. ஹி ஹி
ஆஹா தமிழ்ப் புலவர்கள் 2 பேர் சேர்ந்து மொக்கை ஆராய்ச்சியில் இறங்கி விட்டார்களே?//////////
ReplyDeleteஆமாம்
தெரியலையேன்னு உங்களை கேட்டா
'இதெல்லாம் நான் சாப்பிட்டதே இல்லையே
இது என்ன புதுசா வந்திருக்கிற பட்சணமான்னு'
கேட்குறீங்க
அதான் நாங்களே கண்டுபுடிசிறலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்
///அது தெரிந்தே செய்யப்பட்ட பிழை. ஹி ஹி ////
ReplyDeleteஇதிலும் திருத்தம் செய்ய வேண்டியதாகிறது...
தெரியாமல் செய்வது தவறு / பிழை...
தெரிந்தே செய்வது தப்பு.....
(தமிழ் புலவர் என்று என்னையும் மாட்டி விட்டிடீங்க...
இன்னைக்கு மட்டும் தான் ஆமாம்.)
ஹி ஹி...... என்பதற்கும் அர்த்தம் விளங்கிற்று.....
தெரிந்தே செய்வது தப்பு.....//
ReplyDeleteஒ அப்படி வேற இருக்கா? சரி தப்புன்னே ஒத்துக்கறேன்.
தமிழ் புலவர் என்று என்னையும் மாட்டி விட்டிடீங்க//
நீங்கள் நான் எழுதியதை தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
ஆமா, நான் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேனே, கிடைத்ததா?
ஹி ஹி...... என்பதற்கும் அர்த்தம் விளங்கிற்று.....//
என்ன அர்த்தம்?
\\\\\\\\\\\\\\\\\\\\\\\ G.Nandagopal said...
ReplyDeleteமொக்கைசாமி என்ற பெயரை அளித்திருக்கக்கூடாதுதான்\\\\\\\\\\\\\\\\
'எடுக்கவோ..? கோர்க்கவோ..? ' ன்னு ச்சும்மா எடுத்துக் குடுக்குறது, கோர்த்து விடுறது..இப்பிடி வேலையெல்லாம் வேணாம் மாமோய்..
////நீங்கள் நான் எழுதியதை தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஆமா, நான் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேனே, கிடைத்ததா? /////
ஹி, ஹி என்பதற்கு அர்த்தம் என்றது நீங்கள் சமாளிக்கிறீர்கள் என்பதாக... அர்த்தமென புரிந்ததாக பகன்றேன்.
இல்லை, இல்லை உமா.. நான் தான் நீங்கள் தவறாக நினைத்துக் கொள்வீர்கள் என்பதற்காக (புலவர் என்றதால் பிழை திருத்துகிறேன் என்று சுவாரஸ்யத்திற்காக எழுதினேன்)
உங்கள் மின் அஞ்சல் கண்டேன் பதிலும் எழுதியுள்ளேன். கொஞ்சம் எல்லைவரை சென்று வருவது தானே நட்பு... இதில் கோபம் என்றெல்லாம் இல்லை உமா...
'எடுக்கவோ..? கோர்க்கவோ..? ' ன்னு ச்சும்மா எடுத்துக் குடுக்குறது, கோர்த்து விடுறது..இப்பிடி வேலையெல்லாம் வேணாம் மாமோய்..
ReplyDeleteமைனர் சார்
நிஜமாலுமே என் தவறுக்கு வருந்துகிறேன்
இனி இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்
அதற்காக நான் அனுப்பிய மெய்லுக்கு பதில் எழுதாமல்
இருப்பது உங்களுக்கு சரி என்று தோன்றினால்
எனக்கும் சரி தான்.
/////////////G.Nandagopal said...
ReplyDeleteநிஜமாலுமே என் தவறுக்கு வருந்துகிறேன்
இனி இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்
அதற்காக நான் அனுப்பிய மெய்லுக்கு பதில் எழுதாமல்
இருப்பது உங்களுக்கு சரி என்று தோன்றினால்
எனக்கும் சரி தான்.\\\\\\\\\\\\
திரும்ப நீங்க எதையோ எடுத்து எந்த மெயிலோடவோ கோர்க்குறீங்க..நான் இப்போதான் இந்த பதில் பின்னூட்டமெல்லாம் பார்த்தேன்..(உண்மையிலே நடந்ததை சொல்லணுமின்னா
நம்ம இந்த டயலாக் எல்லாம் KMRK சார் -அப்பா - மகன் - அட்வைஸ் கதை டாபிக்கில் நடந்தது என்று நினைத்து அங்கே நான் என் கமென்ட் ஏன் வரவில்லை..வாத்தியார் ஏன் இப்படி பப்ளிஷ் பண்ணலைன்னு நினச்சுட்டு நம்ம கதை ரொம்ப நீளமா இருக்கேன்னு எடிட் பண்ணிட்டாரோன்னு க்ளோசிங் கொடுக்க இருந்தப்போ எதார்த்தமா இந்தப் பேஜ் கமென்ட் அப்ப்டேட் பார்த்தால் இப்போதான் விஷயமே புரியுது..)
மெயிலுக்கு எப்போவோ பதில் அனுப்பிட்டேன்.
யார் மனசும் கோணக் கூடாதுன்னு நினைக்குற மாமூ மனசு வருந்தக் கூடாது..\\\\\\\\\\\