8.10.10

என்ன கேட்டாள் காதலி?

__________________________________________________________________
ஏன்டா, உன்னிடம் வேறு சட்டையே இல்லையா?

  “ஏன்டா உன்னிடம் வேறு சட்டையே இல்லையா?” என்று உங்கள் காதலி உங்களைக் கேட்டால் எப்படி  இருக்கும்? இதயம் ஒரு வினாடி இயக்கதை மறந்து நின்று விடாதா?

நம் வகுப்பறை மாணவக் கண்மணி ஒருவரின் ஆக்கம் இன்றைய இளைஞர் மலரில் பதிவாகியுள்ளது. படித்து  மகிழுங்கள். பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை மறக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். எழுதுபவர்களுக்கு  அதுதான் ஊக்க மருந்து (Tonic)

சனிக்கிழமை வரவேண்டிய இளைஞர் இன்று ஏன் வந்தது? யோசித்து வையுங்கள். சரியான பதில் நாளை தெரியும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
Over to his posting
+++++++++++++++++++++++++++++++++++++++
வலித்தாலும் இனிக்கிறது!
ஆக்கம்:  லோக பாண்டியன்

ஏன்டா,
உன்னிடம் வேறு சட்டையே இல்லையா?
நினைவுத் தடங்களில் பதிந்துவிட்ட
அவளின் வார்த்தைகள்...
எப்போதாகிலும் நினைக்கையில்
கணக்கிறது!

போட்டிருக்கும்
கோட்டும் சூட்டும்...
குளிர்சாதன அறை
சொகுசுக் கார்...
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டோடு
தூர தேசங்களில்
அனுபவிக்க எத்தனையோ -
அனுபவிப்பவன்
தன்னை மட்டும் தொலைத்திருப்பான்!

லட்சங்களைத் தாண்டும் மாத சம்பளம்
ஐந்து ஆண்டு உழைப்பு
இழப்பை நினைக்கையில் கணக்கிறது
மனமும் வாழ்க்கையும்!

வயதாகிக் கொண்டே போகும் தாய்
வளர்த்துவிட்ட வீட்டுச் செல்ல நாய்
விலகியிருக்கும் நாட்கள்
முகம் மறந்த நண்பர்கள்
இருப்பைத் தொலைத்துவிட்டு
எதையோ தேடுகிறோம்!

அழுகின்ற உள்ளத்தைச்
சிரிக்கின்ற உதடுகளால்
மறைத்துவிட்டுப் புறப்படுகையில்
பாத்துப்போப்பா என்று தாயும்
ஒழுங்கா இருடா, கரெக்டா சாப்பிடுடா, என்று கூடப்பிறந்தவளும்
போனவுடனே போன் பண்ணுடா என்று தம்பியும்
ஆளுக்கொரு அஸ்திரம் தொடுக்க
காற்றில் தோய்ந்து
காதில் புகுந்து
இதயம் தைத்துவிடும்
வார்த்தைகள்!

இதயம் இறக்கி
இயந்திரமாய்ப் பயணம்...
சொப்பனத்தில் மட்டும்
நிம்மதி தேடும் மனது!

ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படுகையில்
தாய்ப்பசுவிடம் இருந்து தூக்கிச் செல்லப்படும்
கன்றின் பரிதவிப்பு
கலங்கும் மனது!

மச்சான்
"ஆல் தி பெஸ்ட் டா"
கல்யாண வாழ்த்துக்கள்
லீவு கிடைக்கல - போட்டோ
மெயில்ல அனுப்புடா.
தங்கச்சிகிட்ட என்னைப்பத்தி
ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லி வைய்யடா...
என்று
தொலை பேசி வாழ்த்தொலிகள்
சிரிக்கும் வார்த்தைகளுடனே
ஊமை அழுகை
யாருக்கும் தெரியாமல்!

தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
தோற்றுப்போன காதல்...
கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
எல்லாவற்றை மறந்துவிட்டு
எதைத் தேடுகிறோம்
மௌனம் மட்டுமே பதில்!

பர்கரும் பட்வைசர் பீரூமாய்
கடக்கும் காலங்களில்
ஊர் நினைவுகள் மட்டுமே
உள்ளத்துக்கு இதம்!
ஏசி அறையில், மெத்தை தரும் சுகத்தில்
தலையணை மட்டும் அறியும்
நம் கண்ணீரின் சுவையை!

தேவைகளைத் தீர்க்க வந்து...
தேவைகள் இன்னும் தீராத வாழ்க்கை
வீட்டிற்கு ஏங்கும் மனதிற்கு
எதை எதையோ சொல்லிச் சமாதானம்

பணம் அனுப்பும் நாளில் மட்டும் - எதையோ
சாதித்து விட்ட உணர்வு
அது தரும்
அடுத்தமாத வேலைக்கான உத்வேகத்தை!

தாய் மாமனாகப் பரிணாமம் பெற்றும்,
தங்கை குழந்தையின்
காதுகுத்து வைபவத்தில் 
கலந்து கொள்ள முடியாத பரிதாபம்!

சொந்தங்கள் சொல்கிறார்கள் 
இவனுக்கு என்னப்பா?
ஆமாம் எனக்கு என்ன?
வாழ்கையைக் குடும்பத்திற்காக அர்ப்பணித்த பின்னே! 

ஒருநாள் வரும்
இறக்கி வைப்பேன்
இதயம் சுமக்கும் துயரங்களை!

அதுவரை - என் இனியவர்களுக்கு
இந்தத் தொலைபேசியும், மின்னஞ்சலும்.
தாய்மொழியைச் சுவைக்க வாத்தியாரின் வகுப்பறையும்...
ஆனந்த் அண்ணனின் வலைப்பதிவும்
அன்பர்கள் இடும் பின்னூட்டங்களும்
ஆறுதல் அளிக்கட்டும்!

வலித்தாலும் இனிக்கிறது வாழ்க்கை!
அப்பன் பழனி முருகன் தந்த வாழ்க்கை!!!!

- லோக பாண்டியன்

சொந்த ஊர்: போடிநாயக்கனூர்
வசிக்கும் ஊர்: சவுதி அரேபியா & பஹ்ரைன்

++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

65 comments:

  1. எங்களைப் போன்றவர்களின் உள்ளக் குமறல்... ஆனாலும் என்ன செய்வது?

    புலியின் வாலைப் பிடித்த கதை தான்.

    பாராட்டுக்களும், வணக்கங்களும்,

    செந்தில்

    ReplyDelete
  2. அய்யா தனது வகுப்புகளில் தொடர்ந்து சொல்லும் ஒரு கருத்து என்ன - சம்பாதித்து என்ன பயன், ஒருவனால் அவன் குடும்பத்துடன் இருக்க முடியாவிட்டால்.... "அவன் ஒரு தொடர் கதை" என்று தான் சொல்லவேண்டும் சவுதியில் உள்ள நண்பர்களை பார்த்து.... வாழ்க உங்கள் தியாகம்
    அய்யா சொல்வது போல் வாங்கி வந்த வரம்.......

    ReplyDelete
  3. thai arival kanrin thuyaram avalukum thalaynai undu .

    ReplyDelete
  4. திரு. செந்தில் சொல்வதை நான் வழிமொழிகிறேன். மென்மேலும் இது போன்ற ஆக்கங்களை திரு. லோக பாண்டியனிடமிருந்து எதிர்பாக்கிறேன்

    தி. லெட்சுமணன்

    ReplyDelete
  5. முள்ளில் மளந்த ரோஜாக்கள்"
    கவிதையை ரசிப்பதா?
    கனத்த இதயத்தில் கசியும்
    ரத்தத்தைத் துடைப்பதா?

    ////// ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படுகையில்
    தாய்ப்பசுவிடம் இருந்து தூக்கிச் செல்லப்படும்
    கன்றின் பரிதவிப்பு
    கலங்கும் மனது!////

    "ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
    அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல"

    /////தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
    தோற்றுப்போன காதல்...
    கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
    எல்லாவற்றை மறந்துவிட்டு
    எதைத் தேடுகிறோம்
    மௌனம் மட்டுமே பதில்!/////

    வறியவர்க்கு தருவது தானம்
    உரியவருக்கு தருவது தர்மம்
    வாழ்வையே தருவது தியாகம்.

    "கடும் தவத்திற்கு பின்பு நல்ல வரம் இருக்கும்"
    கவலை இருந்தால் கவிதையாய் வடித்துவிடு
    கனத்த இதயத்தினுள் நம்பிக்கை என்னும்
    கனி மரங்களை நட்டுவிடு....
    விடியலுக்கு இல்லை தூரம்.....
    கவலைப் படாதே சகோதரா!
    எதுவுமே தொலையவில்லை
    அந்திகாலத்தின் ஆத்ம சந்தோசங்களின்
    இருப்புகள் இங்கே சேமிக்கப் படுகிறது....

    உமது இதய வீணையின் நாதம் சொகமேன்றாலும்
    கவிதை வரிகள் சுகமே....
    வாழ்த்துக்கள் தமிழ் வளர்க்கும் பாண்டியனே!

    ReplyDelete
  6. ஆசிரியர் ஐயா!
    பிழை திருத்தி விடுகிறேன்.

    "முள்ளில் மலர்ந்த ரோஜாக்கள்"

    நன்றி

    ReplyDelete
  7. "அனுபவிப்பவன்
    தன்னை மட்டும் தொலைத்திருப்பான்!" - அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  8. அய்யா,
    அருமை, நண்பரின் ஆதங்கம், தனி ஒரு NRI மனிதனின் பிரதிபலிப்பு - அது அமெரிக்க-வாக இருந்தாலும் அல்லது மத்திய கிழக்கு நாடக இருந்தாலும் பாதிப்பு தான்.

    இது மாதிரி சோகங்கள், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பொருந்தும்.

    இந்த முடியாத பயணங்கள், எத்தனையோ முதிர் கன்னிகளும், முதிர் மணவாளனையும் விழுங்கி இருக்கிறது

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  9. //"தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
    தோற்றுப்போன காதல்...
    கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
    எல்லாவற்றை மறந்துவிட்டு
    எதைத் தேடுகிறோம்
    மௌனம் மட்டுமே பதில்!"//

    ஆம்! மெள‌ன‌ம் ம‌ட்டுமே ப‌ல‌ ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளில் ந‌ல்ல‌ ப‌திலாகிற‌து.மிக‌வும் சிந்தித்து எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் பேசினாலும் ப‌ல‌தும் த‌ப்பாய்ப் போகிற‌து.
    பேசாம‌ல், சும்மா, ந‌ட‌ப்ப‌தை எல்லாம் நாட‌க‌ம் பார்ப்ப‌து போல‌ பார்த்துக் கொண்டேஉள்ளுக்குள் சுவார‌ஸ்ய‌மாக‌ அநுப‌விப்ப‌தில் உள்ள சுகத்தை என்னென்று சொல்வது?! பஹ்ரைன் தம்பியின் ஆக்கம் அருமை! வள‌ரட்டும்!

    ReplyDelete
  10. மிக அருமையான வரிகள் . நன்றி

    ReplyDelete
  11. விரும்பி ஏற்று கொண்ட வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் ஒன்று தான்.

    ReplyDelete
  12. இந்த ஆக்கத்திற்கு வந்த பின்னூட்டங்கள அனைத்தும் எழுதியவரே சாரும். அவர் வந்து பதில் சொல்வார். அனைவரும் பொறுத்திருங்கள். என் சார்பில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  13. மனது கனக்கிறது வாத்தியாரே....

    ReplyDelete
  14. மனதைத் தொட்ட வரிகள்.

    வரிகள் தொட்ட இடமெல்லாம் வலிக்கின்றது.

    வலித்தாலும் வாசித்ததில் சுகம் வேறு.

    என் வாழ்த்த்க்கள்.

    ReplyDelete
  15. Please dont take it to your heart. It will suffocate you .. There are so many things in life. You gained something and you have lost some thing.. Every body has to..

    Look at the positive side.

    God bless you.

    ReplyDelete
  16. பாண்டியன், கவிதை சூப்பர். வாழ்க்கையில் எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் இந்த மாதிரித் தோன்றுவது சகஜம்தான். சரி ரொம்ப கவலைப்படாதீங்க, இன்னும் வயது ஏற ஏற பக்குவம் கூடும். என்னைப் பொறுத்தவரை, பெற்றோர்களைக் கவனிக்காமல் சுற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் நீங்க க்ரேட்தான், அதை நினைச்சு பெருமைப்படுங்க.

    //அனுபவிப்பவன் தன்னை மட்டும் தொலைத்திருப்பான்
    ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படுகையில் தாய்ப்பசுவிடம் இருந்து தூக்கிச் செல்லப்படும் கன்றின் பரிதவிப்பு
    தேவைகளைத் தீர்க்க வந்து... தேவைகள் இன்னும் தீராத வாழ்க்கை
    ஆமாம் எனக்கு என்ன? வாழ்கையைக் குடும்பத்திற்காக அர்ப்பணித்த பின்னே!//

    என்னைக் கவர்ந்த வரிகள்

    ReplyDelete
  17. கண்கள் கனக்கும் வரிகள். நன்றி. வென்கட், மஸ்கட்.

    ReplyDelete
  18. அருமை...அருமை...பணம் பண்ணும் நோக்கில், ஏழையாக பிறந்தாலும் நம் சந்ததிக்கு நல்ல வாழ்க்கையும் நல்ல கல்வி அறிவும் தர வேண்டி வெளிநாட்டில் பஞ்சம் பிழைக்க தஞ்சம் புகுந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் பட்டியலில் லோக பாண்டியனும்...

    வலித்தாலும் இனிக்கிறது வாழ்க்கை!!!

    வகுப்பறை இதை சொல்ல வைத்திருக்கிறது. வாத்தியாருக்கு நன்றி...லோக பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் அவரின் எழுத்து திறமைக்கு.

    ReplyDelete
  19. ஆம் உண்மை நண்பா , உன் வரிகளில் உள்மனதில் கருவறையின் இருட்டும் , வெளி மனதில் சூரியனின் வெளிச்சமும் தெரிகிறது. உன் வரிகளில் இருக்கும் வார்த்தைகளை சுமபவர்களில் நானும் ஒருவன். கண்ணிற் மல்க எழுதி கொண்டு இருப்பவன்

    மிடில் பெஞ்ச் மகேஷ்
    புது டெல்லி

    ReplyDelete
  20. பாண்டியன் சார்
    அற்புதமாக வடித்திருக்கீர்கள் NRI களின் ஏக்கங்களை
    படிக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் என் மனது சொன்னது
    'வாஸ்தவம்'
    ஆனால் இங்கிருக்கும்போது தான் நாம் நம்முடைய இளமைக்கால
    பழைய நினைவுகளை அசைபோட முடியும்
    இத்தனை வலிகளுக்கும் இடையில் நாம்
    இப்போதுதான் நம் தாய் நாட்டின் அருமை பெருமைகளை
    ஆராதிக்க முடிகிறது
    நமது நாடு நமது மதம் ஆ ...ஆ ..
    அது ஒரு சொர்க்க பூமி ..
    தெரியாமலா சொன்னார்கள் இந்தியா என்பது
    "GODS OWN COUNTRY "
    வாழ்த்துக்களுடன்
    நந்தகோபால்

    ReplyDelete
  21. key board-kku therinthirukka vaayppillai! maraiththu vittun keezhe viyamal .
    aanal screen-kku therinthu vittathu !
    maraikka mudiyavillai en vizhi neerai.

    ellaarukkum vali undu ovvoruvarukkum ovvoru vagaiyil.

    ReplyDelete
  22. எல்லாம் அவன் செயல் .வலியை வாங்கி ரசிக்க கற்றூகொள்ள வேண்டியதுதான்

    ReplyDelete
  23. Dear Pandiyan,

    Well said...You have told the reality of Life which many are losing & lost because of the so called FOREIGN JOB & HIGH SALARIES.

    Regards,
    Srinath G

    ReplyDelete
  24. உள்ளேன் ஐயா!

    சகோதரரே! சொல்லவே இல்லையே
    தங்களுக்குள் இப்படி ஒரு தாகம் இருக்கும் என்று
    தங்களுடைய ஆக்கத்தை பார்க்கும் பொழுது
    **********
    உன்னிடம் வேறு சட்டையே இல்லையா?
    நினைவுத் தடங்களில் பதிந்துவிட்ட
    அவளின் வார்த்தைகள்...
    எப்போதாகிலும் நினைக்கையில்
    கணக்கிறது!
    - - - - -
    தங்களுடைய காதல் தோற்க வில்லை தலைவா!
    அறை அலற! பஞ்ச பூதம்களின் சாட்சியாக கூறுகின்றேன்.

    மாபெரும் வெற்றி!
    ஆம்! வெற்றி தங்களுக்கு தான்
    ஆம்! மாபெரும் வெற்றி
    பண பேயின் பிடியில் இருந்து தப்பியதிர்க்கு
    சாத்தானின் கண்ணில் இருந்து மறைத்ததிற்கு
    *********
    தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
    கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
    எல்லாவற்றை மறந்துவிட்டு
    எதைத் தேடுகிறோம்
    மௌனம் மட்டுமே பதில்! ?
    --- --- ---
    வருந்தாதே நண்பா
    வருந்தி வாடாதே நண்பா
    உனக்கும் உற்ற தோழன் உண்டு
    உனது வகுப்பறையில்
    முகம் பார்த்தது இல்லை,
    வாய்மொழி கேட்டதில்லை
    ஆனாலும் உனது அருகில் உன் தோழன் உண்டு சகோதரா!

    நாம் பரம்பரை பரம்பரையாக வரும் ஹிந்து சாஸ்திரம் கூறுவது ?
    " உடல் அழிந்தாலும்
    ஆன்மா அழியாது!" என்பது தானே சகோதரா!

    பஞ்ச பூதங்களின் சாட்சியாக
    நீ செய்யும் கர்மம் உணதுடன் வருவது உண்டு
    நீ வருந்தாதே சகோதரா!

    இந்த ஜனனத்தில் வாங்கும் படிப்பு! பட்டையம்! பதக்கம்! எல்லாம்
    இந்த சரிரம் மேன்மை அடையவே

    ஆனால்! " ஆன்மா வாங்க வேண்டிய பதகத்தை
    நீ ஏற்கனவே வாங்கிவிட்டாய்!" உனது மனது திறந்த அறைகூவல் மூலம்
    மனம் வருந்தாதே என் அருமை " கூட்டுகாரா"!

    தானோ! லோக பாண்டியன்
    இல்லை
    சபாஷ்! பலே பாண்டியன். :-)))

    ReplyDelete
  25. senthil said...
    எங்களைப் போன்றவர்களின் உள்ளக் குமறல்... ஆனாலும் என்ன செய்வது?
    புலியின் வாலைப் பிடித்த கதை தான்.
    பாராட்டுக்களும், வணக்கங்களும்,
    செந்தில் ////
    சரியாக சொன்னிர்கள் - புலியின் வாலை பிடித்த கதை தான்.
    நன்றி
    Pandian

    ReplyDelete
  26. ஐயா வணக்கம்...!

    இது கவிதையல்ல, ஒரு வாலிபரின் கண்ணீர்த் துளிகளாகத்தான் பார்க்கிறேன்.. அவருடைய வலிகளையும் வேதனைகளையும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நானும் அனுபவித்துக் கொண்டிருப்பதால் இதற்கு மேலும் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை...
    ///ஏசி அறையில், மெத்தை தரும் சுகத்தில்
    தலையணை மட்டும் அறியும்
    நம் கண்ணீரின் சுவையை!///

    தங்கள் அன்பு மாணவன்
    மா, திருவேல் முருகன்

    ReplyDelete
  27. Naveen said...
    அய்யா தனது வகுப்புகளில் தொடர்ந்து சொல்லும் ஒரு கருத்து என்ன - சம்பாதித்து என்ன பயன், ஒருவனால் அவன் குடும்பத்துடன் இருக்க முடியாவிட்டால்.... "அவன் ஒரு தொடர் கதை" என்று தான் சொல்லவேண்டும் சவுதியில் உள்ள நண்பர்களை பார்த்து.... வாழ்க உங்கள் தியாகம்
    அய்யா சொல்வது போல் வாங்கி வந்த வரம்.......////

    நான் எப்போதொளுதும் யோசிக்கும் ஒரு விஷயம் - சம்பாதித்து என்ன பயன்.

    விடை தெரிந்தால் சொல்லவும்

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  28. arthanari said...
    thai arival kanrin thuyaram avalukum thalaynai undu .///
    அமாம் என் தாய் அரிவாள் என் மன ஓட்டத்தை...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  29. Lakshmanan said...
    திரு. செந்தில் சொல்வதை நான் வழிமொழிகிறேன். மென்மேலும் இது போன்ற ஆக்கங்களை திரு. லோக பாண்டியனிடமிருந்து எதிர்பாக்கிறேன்
    தி. லெட்சுமணன்////

    அய்யா நான் ஆங்கிலதில் பயின்றவன், தமிழில் எழுதுவது மிகவும் சிரமமான விஷயம் எனக்கு, இறந்தாலும் முயற்சி செய்கிரியன்

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  30. Alasiam G said...
    முள்ளில் மளந்த ரோஜாக்கள்"
    கவிதையை ரசிப்பதா?
    கனத்த இதயத்தில் கசியும்
    ரத்தத்தைத் துடைப்பதா?

    ////// ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படுகையில்
    தாய்ப்பசுவிடம் இருந்து தூக்கிச் செல்லப்படும்
    கன்றின் பரிதவிப்பு
    கலங்கும் மனது!////

    "ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
    அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல"

    /////தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
    தோற்றுப்போன காதல்...
    கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
    எல்லாவற்றை மறந்துவிட்டு
    எதைத் தேடுகிறோம்
    மௌனம் மட்டுமே பதில்!/////

    வறியவர்க்கு தருவது தானம்
    உரியவருக்கு தருவது தர்மம்
    வாழ்வையே தருவது தியாகம்.

    "கடும் தவத்திற்கு பின்பு நல்ல வரம் இருக்கும்"
    கவலை இருந்தால் கவிதையாய் வடித்துவிடு
    கனத்த இதயத்தினுள் நம்பிக்கை என்னும்
    கனி மரங்களை நட்டுவிடு....
    விடியலுக்கு இல்லை தூரம்.....
    கவலைப் படாதே சகோதரா!
    எதுவுமே தொலையவில்லை
    அந்திகாலத்தின் ஆத்ம சந்தோசங்களின்
    இருப்புகள் இங்கே சேமிக்கப் படுகிறது....

    உமது இதய வீணையின் நாதம் சொகமேன்றாலும்
    கவிதை வரிகள் சுகமே....
    வாழ்த்துக்கள் தமிழ் வளர்க்கும் பாண்டியனே!

    ஆலசியம் சார், நான் தமிழ் பயில்வது நமது வகுபரையில் தான் -
    அந்திகாலத்தின் ஆத்ம சந்தோசங்களின்
    இருப்புகள் இங்கே சேமிக்கப் படுகிறது.... ///
    என்னை முன் நோக்கி செல்ல வைப்பதும் அதுதான்...

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  31. Vibin said...
    "அனுபவிப்பவன்
    தன்னை மட்டும் தொலைத்திருப்பான்!" - அருமையாகச் சொன்னீர்கள்.///

    சத்தியமான வார்த்தைகள் அது...


    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  32. Gajapathy said...
    aRRputham////
    உங்களின் பாராட்டுக்கு நன்றி

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  33. Sridhar Subramaniam said...

    அய்யா,
    அருமை, நண்பரின் ஆதங்கம், தனி ஒரு NRI மனிதனின் பிரதிபலிப்பு - அது அமெரிக்க-வாக இருந்தாலும் அல்லது மத்திய கிழக்கு நாடக இருந்தாலும் பாதிப்பு தான்.
    இது மாதிரி சோகங்கள், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பொருந்தும். ///

    மிகவும் சரி....
    இந்த முடியாத பயணங்கள், எத்தனையோ முதிர் கன்னிகளும், முதிர் மணவாளனையும் விழுங்கி இருக்கிறது
    அமாம் என் அனுபவத்திலும் பார்திருக்கேன்...
    நன்றி,
    ஸ்ரீதர் பார்திருக்கேன்

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  34. kmr.krishnan said...

    //"தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
    தோற்றுப்போன காதல்...
    கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
    எல்லாவற்றை மறந்துவிட்டு
    எதைத் தேடுகிறோம்
    மௌனம் மட்டுமே பதில்!"//

    ஆம்! மெள‌ன‌ம் ம‌ட்டுமே ப‌ல‌ ச‌ந்த‌ர்ப‌ங்க‌ளில் ந‌ல்ல‌ ப‌திலாகிற‌து.மிக‌வும் சிந்தித்து எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் பேசினாலும் ப‌ல‌தும் த‌ப்பாய்ப் போகிற‌து.
    பேசாம‌ல், சும்மா, ந‌ட‌ப்ப‌தை எல்லாம் நாட‌க‌ம் பார்ப்ப‌து போல‌ பார்த்துக் கொண்டேஉள்ளுக்குள் சுவார‌ஸ்ய‌மாக‌ அநுப‌விப்ப‌தில் உள்ள சுகத்தை என்னென்று சொல்வது?! பஹ்ரைன் தம்பியின் ஆக்கம் அருமை! வள‌ரட்டும்!////
    அய்யா
    கருத்து பகிர்வுக்கு நன்றி, உங்கள் அசிர்வதுமும் தேவை...
    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  35. kumar.S said...

    மிக அருமையான வரிகள் . நன்றி
    அய்யா
    கருத்து பகிர்வுக்கு நன்றி,
    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  36. saran said...
    விரும்பி ஏற்று கொண்ட வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் ஒன்று தான்///

    விரும்பி ஏற்றுகொண்டுடது தான்... அனால் இப்போது அது விட நினைப்பது....

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  37. SP.VR. SUBBAIYA said...

    இந்த ஆக்கத்திற்கு வந்த பின்னூட்டங்கள அனைத்தும் எழுதியவரே சாரும். அவர் வந்து பதில் சொல்வார். அனைவரும் பொறுத்திருங்கள். என் சார்பில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
    அன்புடன்
    வாத்தியார்/////

    வாத்தியார் அய்யா,
    காலையில் கொஞ்சம் அவசர வேலை- அது தான் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது
    மன்னித்து விடுங்கள்

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  38. Govindasamy said...

    மனது கனக்கிறது வாத்தியாரே....///
    அப்போ எங்களுக்கு எப்படி இருக்கும்...
    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  39. krishnar said...
    மனதைத் தொட்ட வரிகள்.
    வரிகள் தொட்ட இடமெல்லாம் வலிக்கின்றது.
    வலித்தாலும் வாசித்ததில் சுகம் வேறு.
    என் வாழ்த்த்க்கள். ///

    ஆயிரம் நன்றிகள் அய்யா...
    அது எனது உனுர்வுகள்...உள்ள குமுறல்கள்...
    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  40. வெட்டிப்பேச்சு said...

    Please dont take it to your heart. It will suffocate you .. There are so many things in life. You gained something and you have lost some thing.. Every body has to..
    Look at the positive side.
    God bless you.

    I will never allow to demoralize me, thanks for your good heart..well every coin has two sides..

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  41. Uma said...

    பாண்டியன், கவிதை சூப்பர். வாழ்க்கையில் எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் இந்த மாதிரித் தோன்றுவது சகஜம்தான். சரி ரொம்ப கவலைப்படாதீங்க, இன்னும் வயது ஏற ஏற பக்குவம் கூடும். என்னைப் பொறுத்தவரை, பெற்றோர்களைக் கவனிக்காமல் சுற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் நீங்க க்ரேட்தான், அதை நினைச்சு பெருமைப்படுங்க.///

    உமா அக்கா

    நன்றி - நான் எனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் இங்கே வந்து விட்டேன், நிறைய இழப்குல் தான் கண்ணுக்கு தெரிகிறது
    அப்புறும் அம்மா குட சொல்லுவாங்க என் பிள்ளை மாதிரி இந்த உலகுதுல இல்ல்யுன்னு...

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  42. Ram said...
    கண்கள் கனக்கும் வரிகள். நன்றி. வென்கட், மஸ்கட்.///
    ஆகா நம்மு ஆளு...


    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  43. அன்பு நண்பர் பாண்டியனின் எழுத்து நெஞ்சைச் சுட்டது..
    வரிகள்எங்கிலும் இழைந்து கிடக்கும் சோகம்..
    அதை ஏதோ சாதாரணமாய் புலம்புகிறார் என்று புறக்கணிக்க முடியாமல்
    மனதைத் தைக்கும் வரிகளில் கோர்த்து உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்..
    அவரின் இந்த எழுத்து முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது
    ஏதோ அவரின் இந்த நிலையைக் கண்டு ரசிப்பது போலாகுமோ என்று நினைப்பதால்
    அவருக்கு ஒரு தோழனாக தோளில் கைபோட்டு
    பெர்மிட் ரூமுக்கு அழைத்துச் சென்று ரெண்டு லார்ஜ் இறக்குவது தவிர
    எனக்கு வேறு வழி தெரியவில்லை..
    அப்படியாவது கணநேரம் சுமைகளை இறக்கி வைக்க முடிந்தால் நல்லதுதானே?

    ReplyDelete
  44. அய்யா,

    லோக பாண்டியனின் ஆழ மனதில்
    இருந்து வெளி வந்த கருத்துக்கள் படித்தவர்
    அனைவர் மனதையும் கரைய வைத்து விட்டது.

    உங்களது தியாக உள்ளத்திற்கு எல்லா சிறப்புகளையும் எல்லாம் வல்ல ஆண்டவன் கண்டிப்பாக தருவார்.

    வாழ்த்துக்கள்.

    வெங்கடேசன்
    கோயமுத்தூர்

    ReplyDelete
  45. Arul said...
    அருமை...அருமை...பணம் பண்ணும் நோக்கில், ஏழையாக பிறந்தாலும் நம் சந்ததிக்கு நல்ல வாழ்க்கையும் நல்ல கல்வி அறிவும் தர வேண்டி வெளிநாட்டில் பஞ்சம் பிழைக்க தஞ்சம் புகுந்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் பட்டியலில் லோக பாண்டியனும்...
    வலித்தாலும் இனிக்கிறது வாழ்க்கை!!!
    வகுப்பறை இதை சொல்ல வைத்திருக்கிறது. வாத்தியாருக்கு நன்றி...லோக பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் அவரின் எழுத்து திறமைக்கு...

    எழுத்து திறமை எல்லாம் ஒன்னும் இல்லை.. அது உணர்வுகள்.

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  46. vilva MAHESH said...

    ஆம் உண்மை நண்பா , உன் வரிகளில் உள்மனதில் கருவறையின் இருட்டும் , வெளி மனதில் சூரியனின் வெளிச்சமும் தெரிகிறது. உன் வரிகளில் இருக்கும் வார்த்தைகளை சுமபவர்களில் நானும் ஒருவன். கண்ணிற் மல்க எழுதி கொண்டு இருப்பவன்
    மிடில் பெஞ்ச் மகேஷ்
    புது டெல்லி.///
    டெல்லி
    நம்ம ஒரு தான.. இல்ல மாற்றிவிட்டர்கள... சொல்லவேயில்லை...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  47. G.Nandagopal said...

    பாண்டியன் சார்
    அற்புதமாக வடித்திருக்கீர்கள் NRI களின் ஏக்கங்களை
    படிக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் என் மனது சொன்னது
    'வாஸ்தவம்'
    ஆனால் இங்கிருக்கும்போது தான் நாம் நம்முடைய இளமைக்கால
    பழைய நினைவுகளை அசைபோட முடியும்
    இத்தனை வலிகளுக்கும் இடையில் நாம்
    இப்போதுதான் நம் தாய் நாட்டின் அருமை பெருமைகளை
    ஆராதிக்க முடிகிறது
    நமது நாடு நமது மதம் ஆ ...ஆ ..
    அது ஒரு சொர்க்க பூமி ..
    தெரியாமலா சொன்னார்கள் இந்தியா என்பது
    "GODS OWN COUNTRY "
    வாழ்த்துக்களுடன்
    நந்தகோபால்///
    உண்மை... அப்பரும் பாண்டியன் எண்டு உரிமையோடு அழையுங்கள்
    "GODS OWN COUNTRY " is Kerala Sir...
    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  48. perumal sundaram said...key board-kku therinthirukka vaayppillai! maraiththu vittun keezhe viyamal .
    aanal screen-kku therinthu vittathu !
    maraikka mudiyavillai en vizhi neerai.
    ellaarukkum vali undu ovvoruvarukkum ovvoru vagaiyil.///
    நான் இந்த வரிகளை எழுதி முடித்தவுடன் இரண்டு நாட்கள் அலுதிருக்கிரியன்

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  49. மகேஷ் ராஜ் said...

    எல்லாம் அவன் செயல் .வலியை வாங்கி ரசிக்க கற்றூகொள்ள வேண்டியதுதான்///

    அப்படியா வேற வழியே இல்லையா...

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  50. perumal sundaram said...super

    நன்றி
    பாண்டியன்

    ReplyDelete
  51. Srinath said...
    Dear Pandiyan,
    Well said...You have told the reality of Life which many are losing & lost because of the so called FOREIGN JOB & HIGH SALARIES.
    Regards,
    Srinath G///
    Thanks also please realise status in society and least not backhome secured life.
    Rds
    Pandian

    ReplyDelete
  52. kannan said...உள்ளேன் ஐயா!

    சகோதரரே! சொல்லவே இல்லையே
    தங்களுக்குள் இப்படி ஒரு தாகம் இருக்கும் என்று
    தங்களுடைய ஆக்கத்தை பார்க்கும் பொழுது
    **********
    உன்னிடம் வேறு சட்டையே இல்லையா?
    நினைவுத் தடங்களில் பதிந்துவிட்ட
    அவளின் வார்த்தைகள்...
    எப்போதாகிலும் நினைக்கையில்
    கணக்கிறது!
    - - - - -
    தங்களுடைய காதல் தோற்க வில்லை தலைவா!
    அறை அலற! பஞ்ச பூதம்களின் சாட்சியாக கூறுகின்றேன்.

    மாபெரும் வெற்றி!
    ஆம்! வெற்றி தங்களுக்கு தான்
    ஆம்! மாபெரும் வெற்றி
    பண பேயின் பிடியில் இருந்து தப்பியதிர்க்கு
    சாத்தானின் கண்ணில் இருந்து மறைத்ததிற்கு
    *********
    தொலைத்துக் கொண்டிருக்கும் இளமை...
    கனவுகள் நிறைந்த எதிர்காலம்...
    எல்லாவற்றை மறந்துவிட்டு
    எதைத் தேடுகிறோம்
    மௌனம் மட்டுமே பதில்! ?
    --- --- ---
    வருந்தாதே நண்பா
    வருந்தி வாடாதே நண்பா
    உனக்கும் உற்ற தோழன் உண்டு
    உனது வகுப்பறையில்
    முகம் பார்த்தது இல்லை,
    வாய்மொழி கேட்டதில்லை
    ஆனாலும் உனது அருகில் உன் தோழன் உண்டு சகோதரா!

    நாம் பரம்பரை பரம்பரையாக வரும் ஹிந்து சாஸ்திரம் கூறுவது ?
    " உடல் அழிந்தாலும்
    ஆன்மா அழியாது!" என்பது தானே சகோதரா!

    பஞ்ச பூதங்களின் சாட்சியாக
    நீ செய்யும் கர்மம் உணதுடன் வருவது உண்டு
    நீ வருந்தாதே சகோதரா!

    இந்த ஜனனத்தில் வாங்கும் படிப்பு! பட்டையம்! பதக்கம்! எல்லாம்
    இந்த சரிரம் மேன்மை அடையவே

    ஆனால்! " ஆன்மா வாங்க வேண்டிய பதகத்தை
    நீ ஏற்கனவே வாங்கிவிட்டாய்!" உனது மனது திறந்த அறைகூவல் மூலம்
    மனம் வருந்தாதே என் அருமை " கூட்டுகாரா"!

    தானோ! லோக பாண்டியன்
    இல்லை
    சபாஷ்! பலே பாண்டியன். :-)))////


    அண்ணா உங்கள் மெயில் முகவரியும் - கைபேசி நம்பர் தெரிவியுங்கள்.. நண்பர் ஆகி விடலாம் - rlogapandian@gmail.com
    Please
    பாண்டியன்

    ReplyDelete
  53. M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    இது கவிதையல்ல, ஒரு வாலிபரின் கண்ணீர்த் துளிகளாகத்தான் பார்க்கிறேன்.. அவருடைய வலிகளையும் வேதனைகளையும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நானும் அனுபவித்துக் கொண்டிருப்பதால் இதற்கு மேலும் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை...
    ///ஏசி அறையில், மெத்தை தரும் சுகத்தில்
    தலையணை மட்டும் அறியும்
    நம் கண்ணீரின் சுவையை!///
    தங்கள் அன்பு மாணவன்
    மா, திருவேல் முருகன்///
    அது சத்தியமான உண்மை

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  54. புவனார் கூறியது...
    ///// ஆலசியம் சார், நான் தமிழ் பயில்வது நமது வகுபரையில் தான் -
    அந்திகாலத்தின் ஆத்ம சந்தோசங்களின்
    இருப்புகள் இங்கே சேமிக்கப் படுகிறது.... ///
    என்னை முன் நோக்கி செல்ல வைப்பதும் அதுதான்... ///////

    உண்மைதான் நண்பரே!
    உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
    லனைத்தே புலவர் தொழில் -- வள்ளுவர்.
    நூற்கல்வி மிக்க புலவர்கள் தாம் உவகைக் கொள்ளுமாறு ஒருங்கு கூடுதலும், மீண்டும் எப்பொழுது இவ்வாறு கூடப் பெறுவோமென பரிவு கொள்ளுமாறு......

    இது அனைத்தும் நம் குரு சுப்பையா சாரையே சாரும்.
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  55. மனதை தொடும் வரிகள் .தட்டி எழுப்புகிறது ஆத்மாவை. உன்மை ஒவ்வொரு புலம் பெயர்ந்த இதயத்திற்குள் ஒயாமல் ஒளிக்கும் அலைகள்.. மிக அற்புதமாக உணர்வை வெளிபடுத்தியுள்ளார் திரு.லோக பாண்டியன்.. நண்றி நண்றி.........

    ReplyDelete
  56. minorwall said...
    அன்பு நண்பர் பாண்டியனின் எழுத்து நெஞ்சைச் சுட்டது..
    வரிகள்எங்கிலும் இழைந்து கிடக்கும் சோகம்..
    அதை ஏதோ சாதாரணமாய் புலம்புகிறார் என்று புறக்கணிக்க முடியாமல்
    மனதைத் தைக்கும் வரிகளில் கோர்த்து உணர்ச்சியைக் கொட்டியிருக்கிறார்..
    அவரின் இந்த எழுத்து முயற்சிக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது
    ஏதோ அவரின் இந்த நிலையைக் கண்டு ரசிப்பது போலாகுமோ என்று நினைப்பதால்
    அவருக்கு ஒரு தோழனாக தோளில் கைபோட்டு
    பெர்மிட் ரூமுக்கு அழைத்துச் சென்று ரெண்டு லார்ஜ் இறக்குவது தவிர
    எனக்கு வேறு வழி தெரியவில்லை..
    அப்படியாவது கணநேரம் சுமைகளை இறக்கி வைக்க முடிந்தால் நல்லதுதானே? ///
    நம்ம பிராண்டு "Chevas Regal" ங்க அண்ணா

    ReplyDelete
  57. venkatesan.P said...
    அய்யா,
    லோக பாண்டியனின் ஆழ மனதில்
    இருந்து வெளி வந்த கருத்துக்கள் படித்தவர்
    அனைவர் மனதையும் கரைய வைத்து விட்டது.
    உங்களது தியாக உள்ளத்திற்கு எல்லா சிறப்புகளையும் எல்லாம் வல்ல ஆண்டவன் கண்டிப்பாக தருவார்.
    வாழ்த்துக்கள்.
    வெங்கடேசன்
    கோயமுத்தூர்///
    நன்றி நண்பரே
    பாண்டியன்

    ReplyDelete
  58. ஆர்.கார்த்திகேயன் said...
    மனதை தொடும் வரிகள் .தட்டி எழுப்புகிறது ஆத்மாவை. உன்மை ஒவ்வொரு புலம் பெயர்ந்த இதயத்திற்குள் ஒயாமல் ஒளிக்கும் அலைகள்.. மிக அற்புதமாக உணர்வை வெளிபடுத்தியுள்ளார் திரு.லோக பாண்டியன்.. நண்றி நண்றி........./////
    நன்றி நண்பரே
    பாண்டியன்

    ReplyDelete
  59. nellai அண்ணாச்சி said...
    கலங்காதிரு மனமே///
    பீலிங்க எங்களுக்கா!!!!!

    பாண்டியன்

    ReplyDelete
  60. Really painful lines... But great.. makes my eyes full of tears...

    ReplyDelete
  61. Wonderful words... keep it writing... your writing is well to expose your feels...nice...

    ReplyDelete
  62. அன்புடன் நண்பரே வணக்கம் ..
    இது ஒரு சுகமான சுமைகள் (சோகம்)
    என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை

    ReplyDelete
  63. இன்று தான் உங்கள் பதிவை படித்தேன். மிகவும் நன்றாக உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை தேடி சென்ற நம் நாட்டின் செல்வங்களுககு எற்படும் மனப்போராட்டம் தான். இதை விட திரும்பி வரும்போது எற்படும் வலி அதிகமாக இருக்கும். உறவுகளின் மாயை அப்போது தான் புரியும். அதனால் அதிகமாக நம் சொந்தங்களை விட்டு பிரிந்து வந்தோமே என்று கவலைப்படாதீர்கள். இன்று மட்டுமே வாழுங்கள், நாளைய பொழுதை இறைவனிடம் விட்டுவிடுங்கள்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com