++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடம் பெரிய கடல். அதை முழுமையாக அறிந்தவர்கள் யாருமில்லை. சரவளி, காலப்பிரகாசிகா, பலதீபிகா, கேரள மணி கண்ட ஜோதிடம், குமாரசுவாமீயம், புலிப்பாணி ஜோதிடம் என்று எண்ணற்ற ஜோதிட நூல்கள் உள்ளன.
அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்துப் படித்துத் தெளிவது அல்லது தேறுவது என்பது சிரமமான செயல். அப்படியே தேடிப்பிடித்துப் படித்தாலும், படித்த அனைத்துமே மனதில் முழுமையாகத் தங்குமா என்பது கேள்விக்குரிய விஷயம்.
திரும்பத் திரும்ப படித்து முடித்து மனதில் வைப்பதற்குள் காலம் முடிந்துவிடும். சனீஷ்வரன் கால் நோட்டிஸ் அனுப்பிவிடுவான். அவனிடம் வாய்தா வாங்க முடியாது. லஞ்சம் கொடுத்து அவனைச் சரிகட்டவும் முடியாது!
மருத்துவர்களில், பல் மருத்துவர், கண் மருத்துவர், நரம்பியல் மருத்துவர், இதயநோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், புற்று நோய் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகளுக்கான மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர் என்று பல துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
சளி, காய்ச்சல், வயிற்றுவலி, மூட்டு வலி போன்ற சில்லரை உபாதைகளுக்கென்று பொது மருத்துவர்களும் உள்ளார்கள்.(General Physician)
அதுபோல ஜோதிடத்தில், படித்ததுடன், தங்கள் அனுபவத்தால், சில பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஜோதிடர்கள் பலர் உள்ளார்கள்.
தனிமனிதக் கஷ்டங்களை ஆராய்ந்து, என்ன காரணம்? எப்போது அது நிவர்த்தியாகும் என்பதைச் சொல்வதற்குத் தனித் திறமை வேண்டும். திருமணம், குழந்தைப்பேறு, நோய்களுக்கான தீர்வுகள் என்பது போன்ற விஷயங்களில் தனித் திறமை காட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஆயுளைக் கணித்து, இந்தத் தேதிவரைதான் ஜாதகன் உயிருடன் இருப்பான் என்பதைச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.
மனநோய்கள், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்.
முற்காலத்தில் அத்தனை சிகிச்சைகளையும் மேற்கொண்ட ஒரு அதிசய மருத்துவர் இருந்தார். அவர் ஒருவரே அனைத்துவிதமான சிகிச்சைகளிலும் கரைகண்டவர். மாமேதை. தன்னுடைய 52 வயதில் அவர் இறந்துவிட்டார்
அவர் இறந்தது அன்றைய மருத்து உலகிற்கு பேரிடியாக இருந்தது அவருடைய காலம் 1882 முதல் 1934 வரை தஞ்சையில் பிறந்தவர். லண்டனில் மருத்துவம் கற்றவர். இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர். மருத்துவமனையின் நுழைவாயிலில், அவருடைய சிலை உள்ளது. அடுத்தமுறை சென்னை சென்றால் சிலையைப் பார்த்துவிட்டு வாருங்கள். அவர் ஒரு அபூர்வப் பிறவி. அவரைப் பற்றி நெஞ்சை நெகிழவைக்கும் உண்மைக் கதை ஒன்று உள்ளது. அதைப் பின்னால் எழுதுகிறேன்
அவருடைய பெயர் டாக்டர் எஸ்.ரங்காச்சாரி!
அவரைப்பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு இங்கே சென்று பாருங்கள். அதற்கான இணையதள முகவரி இது!
http://www.indianetzone.com/24/dr_s_rangachari_physician_madras_presidency.htm
அவரைப்போல ஜோதிட மேதைகளிலும் சில அபூர்வப் பிறவிகள் இருந்தார்கள். அவர்களைப் பற்றியும் பின்னால் எழுதுகிறேன்.
இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் ஜோதிடரிடம் சென்றால் உங்கள் பிர்ச்சினைகளைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்க வேண்டுமே தவிர, எனக்கு என்ன பிரச்சினை? சொல்லுங்கள் பார்க்கலாம் என்றோ - அல்லது என்னுடைய கடந்த காலத்தைக் கூற முடியுமா? எதிர் காலத்தைக் கூற முடியுமா? என்றோ கேட்காதீர்கள். அது முட்டாள்தனமானது. ஏனென்றால் இன்றுள்ள ஜோதிடர்களில் பலர் General Physician மட்டுமே! உங்கள் பிரச்சினைகளைச் சொன்னால், அதை ஆராய்ந்து சொல்லும் வல்லமை இருந்தால் சொல்லுவார். இல்லையென்றால் உங்களை அனுப்பிவிடுவார். அதை மனதில் கொள்ளூங்கள்
ஜோதிடத்தின் முதல் விதி என்ன தெரியுமா? என்ன நடக்கலாம் என்பதைச் ஜோதிடர் சுட்டிக் காட்டலாம். அறுதியிட்டு அதாவது அடித்துச் சொல்லக்கூடாது. அதைச் சொல்வதற்கு அல்லது நடத்திக் காட்டுவதற்கு ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் இறைவன்!
An astrologer only can indicate what is going to take place and he can not certainly say what is going to happen இந்த வசனத்திற்கு அர்த்தம் புரிகிறதா கண்மணிகளே?
_____________________________________________________________________
”வாத்தி (யார்) எதற்காக இது?”
“நம் வகுப்பறைக் கண்மணிகளில் ஒருவர், வழக்கமாக மற்றவர்கள் கேட்பதைப் போல கேட்காமல், புது டெக்னிக்கில் கேள்வியைக் கேட்டிருந்தார். அதற்காகக்தான் இந்தப் பதிவு!"
"என்ன கேட்டிருந்தார் என்று சொல்லுங்கள்!”
“எனக்கு எப்போது திருமணம் ஆகும்? நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். எங்கள் காதல் நிறைவேறுமா? என் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது, எப்போது எனக்குத் திருமணமாகும்? என்றுதான் எல்லோரும் கேட்பார்கள். அவர் ஒரு பிறப்பு விவரத்தைக் கொடுத்து (That is birth details), “இந்த ஜாதகருக்கு எப்போது திருமணமாகும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று புது டெக்னிக்கில் கேட்டிருந்தார். அதாவது அதைச் சாலஞ்சாக எடுத்துக்கொண்டு, அடித்துப் பிடித்து நான் பதில் சொல்வேன் என்று நினைத்தார் போலும். சவால்களை எல்லாம் எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. எதிர்கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. அவற்றை எல்லாம் என் நண்பன் பழநிஅப்பனிடம் விட்டுவிடுவேன். அவன் பார்த்துக் கொள்வான்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்!
இது ஒரு பெண்ணின் ஜாதகம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி இதுதான்:
1. இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?
2. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?
400 பாடங்களை நடத்தியுள்ளேன். அனைத்தையும் படித்துள்ளவர்கள், யோசித்துப் பார்த்துப் பதிலை ஊகித்துக் கொண்டு, தங்கள் ஊகம் சரிதானா? என்பதை ஸ்க்ரோல் டவுன் செய்து பார்க்கலாம்.
பதில் கீழே உள்ளது!
காதல் திருமணம். பிறகு அது பிணக்கத்தில் முடிந்து இறுதியில் விவாகம் ரத்தாகிவிட்டது. (Love marriage which ended in separation and then in divorce)
1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் எட்டாம் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.
2. ஆறாம் அதிபதி (number one villain in a horoscope) ஏழில் உட்கார்ந்திருக்கிறார். உடன் ராகுவின் கூட்டணி வேறு!
3. அயன, சயன, போகபாக்கியஸ்தானத்தில் சனி. அத்துடன் அவர் எட்டாம் அதிபதி. சயனம் என்றால் நித்திரை. போக பாக்கியம் என்றால் படுக்கை சுகம். பெண் ஆணுக்குப் படுக்கையில் தரும் சுகம். ஆணால் பெண்ணிற்குப் படுக்கையில் கிடைக்கும் சுகம்
4. திருமணம் ஆறாம் அதிபதியின் திசையில் நடந்தது. திருமணம் ஊற்றிக்கொண்டதுடன், விவாகம் ரத்தானது வரை அனைத்தும் அதே செவ்வாய் திசையில்தான்.
அம்ம்ணி பரணி நட்சத்திரம். பரணி தரணி ஆளும் என்பார்கள். தரணி
ஆண்டார். ஆனால் திருமண் வாழ்க்கை அவுட்டாகுவிட்டது. இரண்டாம் அதிபதி அதாவது குடும்ப வாழ்க்கை அதிபதி அந்த வீட்டிற்குப் பத்தில் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. ஜாதக விநோதங்களில் இதுவும் ஒன்று!
ஒரு கிரகம் நீசமானால் பிரச்சினைதான். அதுபோல ஆறாம் வீட்டுக்காரன் எங்கே வந்து உட்கார்ந்தாலும், அந்த வீட்டில் (House) பிரச்சினைதான்.
காதல் திருமணம் என்பதால் அந்தப் பெண் பொருத்தம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும் ஜோதிடர், திருமணம் நடக்கும் காலத்தைத்தான் சொல்லியிருப்பார். பிரச்சினை என்று சொன்ன பிறகுதான் மற்றவற்றை அலசி, அது நீடிக்கும் வாய்ப்பில்லை, ஊற்றிக் கொண்டுவிடும் என்று சொல்லியிருப்பார். இரண்டையும் முதலியே சொல்லியிருந்தால், அந்தப் பெண் அவனை மணந்து கொண்டு அவதிப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா?
அவதிப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கும்போது யாரைப்போய் சாலஞ்ச் செய்ய முடியும்? விதியையா? விதியைச் சாலஞ் செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது. விதி அடித்துப் படுக்க வைத்துவிடும். எழுந்திருக்கவே முடியாது
“ஊழிற் பெருவலி யாவுள” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதையும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் சொன்ன, Nothing is stronger than Destiny என்பதையும், மறக்காமல் எப்போதும் நினைவில் வையுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
கேட்பதில் உங்களுக்குத் தெரிந்த டெக்னிக் எனக்குத் தெரியாதா?

V

உள்ளேன் (வாத்தியார்) ஐயா !
ReplyDelete******
என் பொறுமையைவிட அவர்களுடைய பொறுமைதான் பெரியது. கடலினும் பெரியது. அவர்கள் வாழ்க!
Wednesday,October06,2010 7:21:00 PM
******
குதிரை = மனம்
( மன ஓட்ட குதிரை )
மின் இயந்திரங்களின் திறனை
" ஹார்ஸ் பவரில்! " குறிப்படுவது போல, மன ஓட்ட பவரை (சக்தியை) எம்மை வாழ வைத்து கொண்டுள்ள மின்சாரத்தின் அலகில் குறிப்பிட்டேன். இங்கு இது தான் சங்கதி.
மனிதன்! உயிருடன் உள்ளவரை மனதின் ஓட்டத்தை எவராலும் கட்டு படுத்த முடியாது. அப்படியே கட்டு படுத்தினாலும் ஒரு சில நிமிடங்களுக்கு சாத்விக படலாம் ஆனால், வாழ்நாள் முழுவதும் கட்டு படுத்த முடியாது என்று பெரியவர்கள் கூற கேட்டது உண்டு.
பாக்கியவான்களே!
புண்ணியவான்களே!
இதே போன்ற கதை தான் என்னுடையது. ஒரே வித்தியாசம் செவ்வாய் லக்னத்தில் உள்ளது.
ReplyDeleteராகு தனித்து ஏழில் உள்ளார். காதல் கைகூடவில்லை கூடி இருந்தால் விவகாரத்தில் தான் முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.
எனக்கு கேது திசை முடிய போகிறது, முடியும் தருவாயில் திருமணம் செய்யலாமா????
////kannan said...
ReplyDeleteஉள்ளேன் (வாத்தியார்) ஐயா !
******
என் பொறுமையைவிட அவர்களுடைய பொறுமைதான் பெரியது. கடலினும் பெரியது. அவர்கள் வாழ்க!
Wednesday,October06,2010 7:21:00 PM
******
குதிரை = மனம்
( மன ஓட்ட குதிரை )
மின் இயந்திரங்களின் திறனை
" ஹார்ஸ் பவரில்! " குறிப்படுவது போல, மன ஓட்ட பவரை (சக்தியை) எம்மை வாழ வைத்து கொண்டுள்ள மின்சாரத்தின் அலகில் குறிப்பிட்டேன். இங்கு இது தான் சங்கதி.
மனிதன்! உயிருடன் உள்ளவரை மனதின் ஓட்டத்தை எவராலும் கட்டு படுத்த முடியாது. அப்படியே கட்டு படுத்தினாலும் ஒரு சில நிமிடங்களுக்கு சாத்வீகப் படலாம் ஆனால், வாழ்நாள் முழுவதும் கட்டு படுத்த முடியாது என்று பெரியவர்கள் கூற கேட்டது உண்டு.
பாக்கியவான்களே!
புண்ணியவான்களே!////
உங்கள் முதல் நாள் பின்னூட்டம் பற்றிய உங்கள் விளக்கத்திற்கு நன்றி!
Naveen said...
ReplyDeleteஇதே போன்ற கதை தான் என்னுடையது. ஒரே வித்தியாசம் செவ்வாய் லக்னத்தில் உள்ளது.
ராகு தனித்து ஏழில் உள்ளார். காதல் கைகூடவில்லை கூடி இருந்தால் விவகாரத்தில் தான் முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.
எனக்கு கேது திசை முடிய போகிறது, முடியும் தருவாயில் திருமணம் செய்யலாமா????/////
ராகு சனியைப் போல நடந்துகொள்வார். கேது செவ்வாயைப்போல நடந்து கொள்வார். இத்தனை நாள் பொறுத்திருந்தீர்கள். கேது திசை முடியும் வரை பொறுத்திருக்கலாமே!
பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. 7 செவ்வாய், ராகு இருந்தால் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். இந்த அமைப்பில் பெண்களுக்கு 28 வயதிற்கு மேலும் ஆண்களுக்கு 32 வயதிற்கு மேலும் திருமணம் நடந்தால் அவ்வளவு பாதிப்பு இருக்காது என்று சொல்லப் படுகிறது. ஆனால் இதை என்னால் நிச்சயம் உறுதி செய்ய முடியவில்லை.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும்
ReplyDeleteபிரச்சனயைக் கூறி கேள்வியைக் கேட்பார்கள்.சோதிட அறிவை மேம்படுத்திக் கொள்ள என் வலைப்பூவில் உள்ள செய்திகளை வைத்து உதாரண ஜாதகங்களை கணித்து வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லியுள்ள பிரச்சனையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அனுபவம் பெறலாம்.நான் கூறியுள்ள பதிலையும் அலசிப் பார்க்காலம். நூற்றுக்கணக்கில் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் கிடைக்கும். படிக்கப் பொறுமை வேண்டும்.எளிய ஆங்கில அறிவு வேண்டும்.ஏன் எனில் என் வலைப்பூ ஆங்கில மொழியில் உள்ளது.
http://parppu.blogspot.com
அந்தப் பெண்ணிற்கு முதலில், காலசர்ப்ப தோஷ பரிகாரம் சொல்லுங்கள். பாவம், வாழ வேண்டிய பெண். இந்தப் பெண்ணிற்கு எப்படிப் பட்ட மணமகனை தேர்ந்தெடுக்க வேண்டும்.?
ReplyDeleteதங்கம் வென்றுவிட்டீர்கள் போலும்!!!!!!
ReplyDeleteஇன்னும் உங்கள் தங்க பதக்க பட்டியல் நீல வாழ்த்துக்கள்!!!!
Dear sir,
ReplyDeleteBy seeing the above horoscope, in seventh place raghu, and mars made problems. In 12th place sani made problem in sex related issues. 6th lord in seventh also made problems. understood clearly.
what is your opinion about the second marriage of native.?
You have not shown the navamsa in the above chart.
Ist part of marriage is over. How will you consider the second marriage or second partner in life.?
Vaalga valamudan
உதாரண விளக்கம் அருமை ஐயா!
ReplyDeleteஇரண்டாம் அதிபதி பதினொன்றில் நின்று, பதினொன்றாம் அதிபதி ஏழில் தொடர்பு பெற இரண்டாம் திருமணம் சிறப்பை தரலாம் என நினைக்கிறேன்! தவறாக இருந்தால் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டாம்.
“ஊழிற் பெருவலி யாவுள” - எனக்குப் பிடித்த குறள் !!
ReplyDeleteI guessed it would be love marriage with problems, as 6th house lord Mars in 7th house
(6ம் இடம் 7க்கு 12ம் இடம் அல்லவா !!)
அருமையான அலசல்
ReplyDeleteநன்றிகள்
/////ananth said...
ReplyDeleteபார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. 7 செவ்வாய், ராகு இருந்தால் திருமணத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் நிச்சயம் நம்பியிருக்க மாட்டேன். இந்த அமைப்பில் பெண்களுக்கு 28 வயதிற்கு மேலும் ஆண்களுக்கு 32 வயதிற்கு மேலும் திருமணம் நடந்தால் அவ்வளவு பாதிப்பு இருக்காது என்று சொல்லப் படுகிறது. ஆனால் இதை என்னால் நிச்சயம் உறுதி செய்ய முடியவில்லை./////
நீங்கள் சொல்லும் 28 வயது 32 வயதெல்லாம், ராகு அல்லது கேது அச்சில் லக்கினம் இருந்தாலும் அல்லது 2ஆம் இடம் & 8ஆம் இடம் இருந்தாலும் பயனளிக்கும். செவ்வாயும் உடன் இருப்பதால் சிக்கல். இரண்டு பாவிகள் இருப்பதால் முதல் திருமணம் தோல்வியில்தான் முடியும்.
//////kmr.krishnan said...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும்
பிரச்சனயைக் கூறி கேள்வியைக் கேட்பார்கள்.சோதிட அறிவை மேம்படுத்திக் கொள்ள என் வலைப்பூவில் உள்ள செய்திகளை வைத்து உதாரண ஜாதகங்களை கணித்து வைத்துக்கொண்டு அவர்கள் சொல்லியுள்ள பிரச்சனையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அனுபவம் பெறலாம்.நான் கூறியுள்ள பதிலையும் அலசிப் பார்க்காலம். நூற்றுக்கணக்கில் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் கிடைக்கும். படிக்கப் பொறுமை வேண்டும். எளிய ஆங்கில அறிவு வேண்டும்.ஏன் எனில் என் வலைப்பூ ஆங்கில மொழியில் உள்ளது.
http://parppu.blogspot.com/////
நூற்றுக்கணக்கில் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் கிடைக்குமா? அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை சார்! என்னிடம் முன்பாகவே நூற்றுக் கணக்கான ஜாதகங்கள் உள்ளன. சுய பயிற்சிக்காக நான் சேர்த்தவைகள்! உங்களுடைய தகவல் நம் வகுப்பறைக் கண்மணிகளுக்குப் பயன் அளித்தால் மகிழ்ச்சிதான்
/////jagadeesh said...
ReplyDeleteஅந்தப் பெண்ணிற்கு முதலில், காலசர்ப்ப தோஷ பரிகாரம் சொல்லுங்கள். பாவம், வாழ வேண்டிய பெண். இந்தப் பெண்ணிற்கு எப்படிப் பட்ட மணமகனை தேர்ந்தெடுக்க வேண்டும்.?/////
கேது முன்னிற்க மற்ற கிரகங்கள் தொடர்ந்து வரும் கால சர்ப்ப தோஷம் கடுமையானது. அதைப் பற்றி விரிவாகப் பின்னால் எழுதுகிறேன். கடுமையான களத்திர தோஷ ஜாதகம் அது. முதல் திருமணம் தோள்வியில் முடிய வேண்டிய ஜாதக அமைப்பு. அப்படியே நடந்திருக்கிறது.
////வயாமா said...
ReplyDeleteதங்கம் வென்றுவிட்டீர்கள் போலும்!!!!!!
இன்னும் உங்கள் தங்க பதக்க பட்டியல் நீல வாழ்த்துக்கள்!!!!/////
தங்கமா? எங்கே சுவாமி? பதக்கத்தை யார் கொடுத்தார்கள்?
CJeevanantham said...
ReplyDeleteDear sir,
By seeing the above horoscope, in seventh place raghu, and mars made problems. In 12th place sani made problem in sex related issues. 6th lord in seventh also made problems. understood clearly.
what is your opinion about the second marriage of native.?
You have not shown the navamsa in the above chart.
Ist part of marriage is over. How will you consider the second marriage or second partner in life.?
Vaalga valamudan/////
ஏழாம் அதிபதி அம்சத்தில் கெடாமல் இருந்தால் இரண்டாவது திருமணம் உண்டு
//////கார்மேகராஜா said...
ReplyDeleteஉதாரண விளக்கம் அருமை ஐயா!
இரண்டாம் அதிபதி பதினொன்றில் நின்று, பதினொன்றாம் அதிபதி ஏழில் தொடர்பு பெற இரண்டாம் திருமணம் சிறப்பை தரலாம் என நினைக்கிறேன்! தவறாக இருந்தால் பின்னூட்டத்தை பிரசுரிக்க வேண்டாம்.////
அது பொதுவிதி அத்துடன் ஒற்றைவிதி. திருமணத்திற்கு மேலும் பல விதிகள் உள்ளன. அனைத்தையும் அலசுவது நல்லது!
/////SP Sanjay said...
ReplyDelete“ஊழிற் பெருவலி யாவுள” - எனக்குப் பிடித்த குறள் !!
I guessed it would be love marriage with problems, as 6th house lord Mars in 7th house
(6ம் இடம் 7க்கு 12ம் இடம் அல்லவா !!)////
ஆமாம்! ஏழாம் இடத்தைத் திருமணத்திற்கான லக்கினமாகக் கொண்டு பார்த்தால், அது அந்த வீட்டிற்கு 12ஆம் இடம். அதன் அதிபதி திருமண லக்கினத்தில் வந்தமர்வது சிக்கலை உண்டு பண்ணும். பண்ணிவிட்டது!
/////Govindasamy said...
ReplyDeleteஅருமையான அலசல்
நன்றிகள்/////
நல்லது. நன்றி நண்பரே!
Thanks for the Analysis
ReplyDeleteவணக்கம் அய்யா....
ReplyDeleteசிறப்பான பதிவு அய்யா....இது போன்ற உதாரண ஜாதங்களை தந்து எங்களை யோசித்து பின்னூட்டமிட செல்லுங்கள்... ஒரு தேர்வாக தாருங்கள் நாங்கள் தேருவோமா என்று பாருங்கள்....
நன்றி
வணக்கம் ஐயா,
ReplyDeleteஇந்த சிறிய மாணவன் கேட்டிருந்த கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா?
குருவின் மனதை புண்படுத்தியிருந்தால் மாணவனை மன்னிக்கவும்.
சரி என் கதையை விட்டுத்தள்ளுங்கள் அதை ஆண்டவன் (உங்கள் நண்பன்) பழனியப்பன் பார்த்துக்கொள்ளட்டும்.
உங்களுக்காக ஒரு பெரிய சவாலை விட்டிருக்கிறார் ஒருவர். உங்கள் புத்தகம் வெளிவருவதற்கு இது பேருதவியாக இருக்குமென்று நினைகிறேன் ஐயா.
இந்த வலைத்தளத்தில் சென்று பார்க்கவும்.
http://www.tamil.net/node/6645
நான் இந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, விவாகரத்து ஆகியிருக்கும் என்று ஊகித்தேன், சரியாக இருந்தது. ஆனால் ராகு/கேதுவால் ஏற்படும் தோஷம் ஒரு தடவைதான் வேலை செய்யும் என்று படித்திருக்கிறேன், அதன்படி பார்த்தால் மறுமணம் செய்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன், சரியா?
ReplyDelete1. கால சர்ப்ப தோஷ ஜாதகம்
2. லக் / 4 / 7 அதிபதிகள் நீசம்
3. லக் ல் கேது / 7 ல் ராகு/செவ்
இதில் எனக்கு உள்ள சந்தேகங்கள்:
1. 2 ம் அதிபதி 11 ல், சம வீட்டில்
2. குடும்ப ஸ்தானத்திற்கும் / 12 ம் இடத்திற்கும் குரு பார்வை இருந்தும் பயனில்லை? (ஒரு வேளை நீச குரு என்பதாலா?)
3. 8 ஆம் இடம் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமும்தானே? அப்படியிருக்க 8ன் அதிபதி 12 ல் இருக்கிறார், அதன் அதிபதியை குரு பார்க்கிறார்.
மற்றபடி, இது மாதிரி உதாரண ஜாதகங்கள் நிறைய கொடுத்து கேள்வி கேட்கலாமே?
அய்யா,
ReplyDeleteகணக்கு இடிக்கிறது !
என்னுடைய ராசி சக்கரத்தை வைத்து நவாம்சத்தை கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு சிறு தவறு வருகிறது. சற்று தெளிவு படுத்துங்களேன் !
மிதுன லக்னம், 11ஆம் இடம் மேசத்தில் புதனும்,சூரியனும் உள்ளது. புதனின் பாகை 26 கலை 41 ல் உள்ளது (26 41).
அதாவது, 26.7/3.33 = 8 = மேடத்தின் 8 ஆம் பகுதி = விருச்சக செவ்வாய் !
ஆனால், மென்பொருள் கணிப்பின் படியும் எனக்கு எழுதிய ஜாதகத்தின் படியும், நவாம்சத்தில் புதன் தனுசு வில் உள்ளது ! அது எப்படி ?????
9 /12 அதிபதிகள் பரிவர்த்தனையும் இருக்கு.
ReplyDeletegreat. naan correctaga predict seidhein..scroll down seidhu paarthal ....100/100..nadandhavai nadanthavaiye..andha penin vazhkai enimel nandraga iruka "god muruga will be with her" ...also ..Me too bharani..hehehe.
ReplyDeleteஅருமை ஐயா! நல்லதொரு விளக்கம்.
ReplyDeleteஇங்கு செவ்வாய் இருக்கும் இடத்தில் குரு அமைந்தால் அது குரு சண்டாள யோகம் தானே. நீங்கள் முன்பு சொன்னது போல் குரு வீட்டில் குரு உடன் ராகு சேரும்போது நல்லதை செய்வார் என்று.
அப்படியென்றால் திருமணம் ஊற்றிக்கொண்டிருக்காது என நினைக்கிறேன்! தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி!
Hello Sir,
ReplyDeleteJust to share one small thing that i know -
Neenga sonna amaipu - "Kethu leading all the planets " ,its there for me ..
But with one small change ,kethu is not alone ,he is with jupiter(my 4th and 7th lord) ..
Kethu along with Jupiter is at the front end and Rahu is at the rear end ,all planets in between
Someone said this is Kala Amritha Yogam (Kethu at the head end) .Along with Jupiter ,who breaks the KAY ,it forms MahaPadma Yogam ..
The concerned person will have a spiritual longing which will be fulfilled by 42,43 years of age ..
This Kala Amritha yogam gives the person lot of helplesness ..
This KAY puts the person to test to evolve him spiritually,this is not a bad karma from past birth ,its just a tough test in present birth so that the person's atma becoes more mature
etc etc about KalaAmrithaYogam
Have a great day!!
/////Ram said...
ReplyDeleteThanks for the Analysis/////
நல்லது. நன்றி நண்பரே!
/////astroadhi said...
ReplyDeleteவணக்கம் அய்யா....
சிறப்பான பதிவு அய்யா....இது போன்ற உதாரண ஜாதங்களை தந்து எங்களை யோசித்து பின்னூட்டமிட செல்லுங்கள்... ஒரு தேர்வாக தாருங்கள் நாங்கள் தேருவோமா என்று பாருங்கள்....
நன்றி/////
புத்தக வேலைகள் முடிந்தவுடன் செய்கிறேன் நண்பரே! பொறுத்திருங்கள்!
/////azhageri said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
இந்த சிறிய மாணவன் கேட்டிருந்த கேள்விக்கு இவ்வளவு பெரிய பதிலா?
குருவின் மனதை புண்படுத்தியிருந்தால் மாணவனை மன்னிக்கவும்.
சரி என் கதையை விட்டுத்தள்ளுங்கள் அதை ஆண்டவன் (உங்கள் நண்பன்) பழனியப்பன் பார்த்துக்கொள்ளட்டும்.///////
உங்கள் பெயரைப் பதிவில் சொல்லாமல் விட்டிருந்தேன். பின்னூட்டத்தின் மூலம் அதை நீங்களே வெளிப்படுத்தியுள்ளீர்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///// உங்களுக்காக ஒரு பெரிய சவாலை விட்டிருக்கிறார் ஒருவர். உங்கள் புத்தகம் வெளிவருவதற்கு இது பேருதவியாக இருக்குமென்று நினைகிறேன் ஐயா.
இந்த வலைத்தளத்தில் சென்று பார்க்கவும்.
http://www.tamil.net/node/6645////
இந்தக் கிரி கிரி வேலைதானே வேண்டாம் என்கிறது. என் பெயர் அங்கே எங்கே உள்ளது? அவர் ஜோதிடத்தை நிருபிக்கச் சொல்லிச் சவால் விட்டிருக்கிறார். இன்னும் இறைவனையே நம்மால் நிரூபிக்க முடியவில்லை. முதலில் உலகில் உள்ள மக்களில் ஒருவர் இறைவனை நிரூபிக்கட்டும். மற்ற குப்பைகளை எல்லால் பிறகு பார்த்துக் கொள்வோம்.
நீங்கள் இதுபோன்ற சவால் குப்பைகளை எல்லாம் இங்கே வந்து கொட்டாமல், உருப்படியாக எதாவது செய்யுங்கள்!
Uma said...
ReplyDeleteநான் இந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, விவாகரத்து ஆகியிருக்கும் என்று ஊகித்தேன், சரியாக இருந்தது. ஆனால் ராகு/கேதுவால் ஏற்படும் தோஷம் ஒரு தடவைதான் வேலை செய்யும் என்று படித்திருக்கிறேன், அதன்படி பார்த்தால் மறுமணம் செய்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன், சரியா?////
சரிதான். ஆனால் அது ராகு & கேதுவிற்கு மட்டும்தான். உடன் செவ்வாயும் இருப்பதால், அம்சத்தில் ஏழாம் அதிபதி நன்றாக இருந்தால் மறுமணம் நடக்கும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////1. கால சர்ப்ப தோஷ ஜாதகம்
2. லக் / 4 / 7 அதிபதிகள் நீசம்
3. லக் ல் கேது / 7 ல் ராகு/செவ்
இதில் எனக்கு உள்ள சந்தேகங்கள்:
1. 2 ம் அதிபதி 11 ல், சம வீட்டில்
2. குடும்ப ஸ்தானத்திற்கும் / 12 ம் இடத்திற்கும் குரு பார்வை இருந்தும் பயனில்லை? (ஒரு வேளை நீச குரு என்பதாலா?) 3. 8 ஆம் இடம் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமும்தானே? அப்படியிருக்க 8ன் அதிபதி 12 ல் இருக்கிறார், அதன் அதிபதியை குரு பார்க்கிறார்.//////
ஆமாம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////மற்றபடி, இது மாதிரி உதாரண ஜாதகங்கள் நிறைய கொடுத்து கேள்வி கேட்கலாமே?/////
புத்தக வேலைகள் முடிந்தவுடன் செய்கிறேன் சகோதரி. பொறுத்திருங்கள்!
sanjay said...
ReplyDeleteஅய்யா,
கணக்கு இடிக்கிறது !
என்னுடைய ராசி சக்கரத்தை வைத்து நவாம்சத்தை கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு சிறு தவறு வருகிறது. சற்று தெளிவு படுத்துங்களேன் !
மிதுன லக்னம், 11ஆம் இடம் மேசத்தில் புதனும்,சூரியனும் உள்ளது. புதனின் பாகை 26 கலை 41 ல் உள்ளது (26 41).
அதாவது, 26.7/3.33 = 8 = மேடத்தின் 8 ஆம் பகுதி = விருச்சக செவ்வாய் !
ஆனால், அது எப்படி ?????//////
“மென்பொருள் கணிப்பின் படியும் எனக்கு எழுதிய ஜாதகத்தின் படியும், நவாம்சத்தில் புதன் தனுசுவில் உள்ளது!” என்று எழுதியுள்ளீர்கள். பிறகு எதைவைத்து உங்கள் ஜாதகத்தை நோண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்? நோண்டுவதும் தோண்டுவதும், எல்லா நேரத்திலும் நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது. அதை மனதில் வையுங்கள்
////Uma said...
ReplyDelete9 /12 அதிபதிகள் பரிவர்த்தனையும் இருக்கு./////
குழப்பத்தீயில் தன் பங்கிற்கு நெய் ஊற்றியது அதுதான்!
///////Jack Sparrow said...
ReplyDeletegreat. naan correctaga predict seidhein..scroll down seidhu paarthal ....100/100..nadandhavai nadanthavaiye..andha penin vazhkai enimel nandraga iruka "god muruga will be with her" ...also ..Me too bharani..hehehe.//////
நல்லது நன்றி!
////Naresh said...
ReplyDeleteஅருமை ஐயா! நல்லதொரு விளக்கம்.
இங்கு செவ்வாய் இருக்கும் இடத்தில் குரு அமைந்தால் அது குரு சண்டாள யோகம் தானே. நீங்கள் முன்பு சொன்னது போல் குரு வீட்டில் குரு உடன் ராகு சேரும்போது நல்லதை செய்வார் என்று.
அப்படியென்றால் திருமணம் ஊற்றிக்கொண்டிருக்காது என நினைக்கிறேன்! தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி!////
அப்படியிருந்திருந்தால் கதை மாறியிருக்கும்!
/////Sowmya said...
ReplyDeleteHello Sir,
Just to share one small thing that i know -
Neenga sonna amaipu - "Kethu leading all the planets " ,its there for me ..
But with one small change ,kethu is not alone ,he is with jupiter(my 4th and 7th lord) ..
Kethu along with Jupiter is at the front end and Rahu is at the rear end ,all planets in between
Someone said this is Kala Amritha Yogam (Kethu at the head end) .Along with Jupiter ,who breaks the KAY ,it forms MahaPadma Yogam .. The concerned person will have a spiritual longing which will be fulfilled by 42,43 years of age ..
This Kala Amritha yogam gives the person lot of helplesness ..
This KAY puts the person to test to evolve him spiritually,this is not a bad karma from past birth ,its just a tough test in present birth so that the person's atma becoes more mature
etc etc about KalaAmrithaYogam
Have a great day!!//////
இந்த அமைப்பைக்குறித்து உதாரண ஜாதகங்களுடன் பின்னால் விவரமாக எழுதுகிறேன். தற்சமயம் நேரமில்லை சகோதரி! உங்களுடைய கருத்துப்பகிர்விற்கு நன்றி!
///“மென்பொருள் கணிப்பின் படியும் எனக்கு எழுதிய ஜாதகத்தின் படியும், நவாம்சத்தில் புதன் தனுசுவில் உள்ளது!” என்று எழுதியுள்ளீர்கள். பிறகு எதைவைத்து உங்கள் ஜாதகத்தை நோண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்? நோண்டுவதும் தோண்டுவதும், எல்லா நேரத்திலும் நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது. அதை மனதில் வையுங்கள்///
ReplyDeleteஅய்யா, ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள் ! நான் தவறு எதுவும் செய்யவில்லையே !! நான் உங்களிடம் படித்த பாடத்தை பயிற்சி செய்து பார்த்தேன் அவ்வளவுதான். மற்றபடி எந்த நோக்கமும் இல்லை ! சந்தேகம் எழுந்தது கேட்டேன். 1+1=2 தானே வரவேண்டும் ? நான் இந்த வலை பகுதிக்கு வந்தது, இந்த அரிய கலையை மனதாற கற்றுக்கொள்ளவே அதனால்தான் கேட்கிறேன் ! சந்தேகத்தை, கற்றுக்கொடுத்தவரிடம்தானெ கேட்க்க முடியும். இது போல எத்தனை அன்பர்கள் பயிற்சி செய்து பார்க்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு உன்மை புரியும் !
"நோண்டினால் தான் புதையல் கிட்டும் !"
"கிண்டினால் தான் பொங்கல் சுவைக்கும் !"
அன்புடன்,
உங்களை குருவாக எற்றுக்கொன்ட சீடன் சஞ்சய் ராமனாதன் !
உங்களுக்கு சமர்பித்து, அதிலிருந்து நாலு பாடம் கற்றுக்கொடுப்பீர்கள் என்று, வலையில் புகுந்து 1600களில் வெளிவந்த பல அறிய வகை ஜோதிட நூட்களை "ஈபுக்" வடிவில் சேர்த்து வைத்துக்கொன்டிருக்கிறேன்...!! நீங்க இன்னான்னா, கோவிச்சிகிறீங்களே சாமி !
ReplyDeleteசஞ்சய் ராமனாதன் !
//////////////////
ReplyDeleteSP.VR. SUBBAIYA said...
“மென்பொருள் கணிப்பின் படியும் எனக்கு எழுதிய ஜாதகத்தின் படியும், நவாம்சத்தில் புதன் தனுசுவில் உள்ளது!” என்று எழுதியுள்ளீர்கள்.
பிறகு எதைவைத்து உங்கள் ஜாதகத்தை நோண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
நோண்டுவதும் தோண்டுவதும், எல்லா நேரத்திலும் நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது. அதை மனதில் வையுங்கள் //////////
'நோண்டுதல் நோண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல..'
அப்பிடிங்குற குரளுக்குத்தானே சார் நீங்கள் பொருளுரை எழுதியிருக்கீங்க..எப்பிடி சரியான குறளை
குரல் உயர்த்தி சொல்லியிருக்கேனா?
ஆமா, எப்போவுமே ஐயப்பன் மட்டுமே குறள் மழையாப் பொழியுறாரு..
அதான் நானும் கொஞ்சம் ட்ரை பண்ணினேன்..
//////sanjay said...
ReplyDeleteஉங்களுக்கு சமர்பித்து, அதிலிருந்து நாலு பாடம் கற்றுக்கொடுப்பீர்கள் என்று, வலையில் புகுந்து 1600களில் வெளிவந்த பல அறிய வகை ஜோதிட நூட்களை "ஈபுக்" வடிவில் சேர்த்து வைத்துக்கொன்டிருக்கிறேன்...!! நீங்க இன்னான்னா, கோவிச்சிகிறீங்களே சாமி!
சஞ்சய் ராமனாதன்!/////////
எனக்குக் கோபமே வராது. வந்தால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக (என்னுடைய பல்சுவைப் பதிவையும் சேர்த்து) எப்படி வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருக்க முடியும்? சில சமயங்களில் நக்கலாக நகைச்சுவையாக எழுதுவது அப்படித்தோன்றாலாம். அது என் தவறல்ல! என் எழுத்தின் வீச்சு அப்படி!
////sanjay said...
ReplyDelete///“மென்பொருள் கணிப்பின் படியும் எனக்கு எழுதிய ஜாதகத்தின் படியும், நவாம்சத்தில் புதன் தனுசுவில் உள்ளது!” என்று எழுதியுள்ளீர்கள். பிறகு எதைவைத்து உங்கள் ஜாதகத்தை நோண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்? நோண்டுவதும் தோண்டுவதும், எல்லா நேரத்திலும் நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது. அதை மனதில் வையுங்கள்///
அய்யா, ஏன் கோபித்துக்கொள்கிறீர்கள் ! நான் தவறு எதுவும் செய்யவில்லையே !! நான் உங்களிடம் படித்த பாடத்தை பயிற்சி செய்து பார்த்தேன் அவ்வளவுதான். மற்றபடி எந்த நோக்கமும் இல்லை ! சந்தேகம் எழுந்தது கேட்டேன். 1+1=2 தானே வரவேண்டும் ? நான் இந்த வலை பகுதிக்கு வந்தது, இந்த அரிய கலையை மனதாற கற்றுக்கொள்ளவே அதனால்தான் கேட்கிறேன் ! சந்தேகத்தை, கற்றுக்கொடுத்தவரிடம்தானெ கேட்க முடியும். இது போல எத்தனை அன்பர்கள் பயிற்சி செய்து பார்க்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு உன்மை புரியும் !
"நோண்டினால் தான் புதையல் கிட்டும் !"
"கிண்டினால் தான் பொங்கல் சுவைக்கும் !"//////
எனக்குக் கோபம் வராது. அதை முதலில் மனதில் வையுங்கள். என் எழுத்தின் வீச்சு அப்படியிருக்கலாம். எல்லா சமயத்திலும் என்று எழுதியிருப்பதைப் பாருங்கள். புதனும் சூரியனும் சுழற்சியில் வெகு வேகமாக ராசி மாறும் கிரகங்கள். நீங்கள் கணித்திருப்பதில் தவறு இருக்கும். Scan செய்து அனுப்புங்கள் பார்த்துச் சொல்கிறேன். தற்சமயம் நேரமில்லை. நேரம் கிடைக்கும்போது பார்த்துச் சொல்கிறேன். பொறுத்திருப்பது முக்கியம். உடனே ரிமைண்டர் நோட்டீஸ் அனுப்பக்கூடாது. என் மின்னஞ்சல் பெட்டியில் 200ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் என்னுடைய பதிலுக்காகக் காத்துக்கிடக்கின்றன!
/////minorwall said...
ReplyDelete//////////////////
SP.VR. SUBBAIYA said...
“மென்பொருள் கணிப்பின் படியும் எனக்கு எழுதிய ஜாதகத்தின் படியும், நவாம்சத்தில் புதன் தனுசுவில் உள்ளது!” என்று எழுதியுள்ளீர்கள்.
பிறகு எதைவைத்து உங்கள் ஜாதகத்தை நோண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காக நோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
நோண்டுவதும் தோண்டுவதும், எல்லா நேரத்திலும் நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது. அதை மனதில் வையுங்கள் //////////
'நோண்டுதல் நோண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல..'
அப்பிடிங்குற குறளுக்குத்தானே சார் நீங்கள் பொருளுரை எழுதியிருக்கீங்க..எப்பிடி சரியான குறளை
குரல் உயர்த்தி சொல்லியிருக்கேனா?
ஆமா, எப்போவுமே ஐயப்பன் மட்டுமே குறள் மழையாப் பொழியுறாரு..
அதான் நானும் கொஞ்சம் ட்ரை பண்ணினேன்../////
”நோண்டுதல் மற்றும் தோண்டுதல் செய்யார்க்கு
யாண்டு இடும்பை இல!” என்று மாற்றி விடுங்கள் மைனர்!
அது கிடக்கட்டும், தயவுசெய்து என் சந்தேகத்திற்கு பதில் அளியுங்கள்.
ReplyDeleteசஞ்சய் ராமனாதன் !
நன்றி அய்யா !
ReplyDeleteகேள்வி பிறந்த்து நேற்று...
பதில் கிடைத்தது இன்று ...!
புதன் ஒரு "இன்ஃபீரியர் ப்லேனட்" என்பதை மறந்துவிட்டேன் !மண்ணிக்கவும்.
சந்தேகம் கேட்பது ஒரு மாணவனின் கடமையல்லவா .
சஞ்சய் ராமனாதன் !
நல்ல வேளை, புதனையே மறக்காமல் போணேனே !!
ReplyDeleteசஞ்சய் ராமனாதன் !
அய்யா,
ReplyDeleteஇப்பொழுது நீங்கள்தான் எனக்கு ரிமைன்டர் நோட்டீஸ் கொடுத்துள்ளீர்கள் !!
என்னுடைய ஜாதகத்தை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி ஒரு வாரம் ஆயிற்று !! தங்களுடைய நேரமின்மையை கருதி உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இப்பொழுது நீங்களே கேட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி !
( நமது வைகைப்புயலைப்போல, "ஓ..ஹோ..இதுதான் போட்டு வாங்கறதா...???? )
சஞ்சய் ராமனாதன் !
////எப்பிடி சரியான குறளை
ReplyDeleteகுரல் உயர்த்தி சொல்லியிருக்கேனா?
ஆமா, எப்போவுமே ஐயப்பன் மட்டுமே குறள் மழையாப் பொழியுறாரு..
அதான் நானும் கொஞ்சம் ட்ரை பண்ணினேன்../////
////
உங்களுக்கு இல்லாத உரிமையா பாஸ்... நீங்க தானே எங்களுக்கு எல்லாம் தொழில் சொல்லி கொடுத்த குரு...
நல்லா பொழிங்க.... வாத்தியார் நம்மள class விட்டு துரத்தாம இருந்தா சரிதான்.. ;)
ஐயா
ReplyDeleteஇந்த ஜாதகத்தில்,
கால சர்ப்ப தோஷம் இருக்கு. ஆனால் மண வாழ்க்கை முறிந்ததற்கு அது காரணம் அல்ல.
ஏழில் ராகுவும் செவ்வாயும். அதுதான் காரணம்.
குரு நீசம்.
களத்திர காரகன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவருடைய சுய பரல்கள் என்னவென்று பார்க்க வேண்டும்.
மேலும் ஏழாம் வீட்டை லக்கினமாக கொண்டால் குடும்ப ஸ்தானாதிபதி ஆறில். இது ஒரு கெட்ட அமைப்பு.
ஓரளவிற்கு சரியா ஐயா?
On seeing given horoscope by you, i hav a doubt,
ReplyDeleteIn meenam (lagnam), suryan, mars, sukran & budan exist & in 7th house sani vagram& guru vagram, how will be the native,
a) will native receive positive or negative impact from guru & sani.
OR
b) Will sukran controls all other
SIR YESTERDAY I POST ONE COMMENT ABOUT OUR SOFTWARE . U DID NOT POST IT IN THAT COMMENT SECTION .
ReplyDeleteSO SORRY FOR THIS SIR . I ONCE AGEIN I LEAVE THIS COMMENT HERE . IF THIS HARM U MIND OR HEART PLZ SHOW ME
MERCY
ஒரு சந்தேகம் in software: birth:1985.5.26 {5.49pm}, old vakeya panjakam(manimekalai & some other i saw it ) it shows சனி in 12th place,and also புதன் in
7th place with(புதன்+சூரியன்+செவ்வாய்) but in our software( sir that u gave in our blog . ) it shows சனி in 1th place(lakenam),and also புதன் in
6th place and (சூரியன்+செவ்வாய்) in 7th place what is the problem in our software . sir i take this jathakam in this software how u show us in preferences . i think some problem in software or in the panjakam . plz clear me sir.
thank u
sir for people who are questioning the of veracity astrology ,i advice them to goto youtube.com and search for armstrong and astrology as keywords . theyll find an amazing test .
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=3N1dIUTbZTo
Good evening sir,
ReplyDeleteToday lesson is very nice only for reading sir. But the matter is so much paining me due to that sister's life problem. Did she get another(second) marriage or not. Is it possible or not. Thanks for ur today lesson sir.
sanjay said...
ReplyDeleteநன்றி அய்யா !
கேள்வி பிறந்த்து நேற்று...
பதில் கிடைத்தது இன்று ...!
புதன் ஒரு "இன்ஃபீரியர் ப்ளேனட்" என்பதை மறந்துவிட்டேன் !மன்னிக்கவும்.
சந்தேகம் கேட்பது ஒரு மாணவனின் கடமையல்லவா
சஞ்சய் ராமனாதன்!//////
சந்தேகம் கேட்பது மாணவனின் உரிமை. அச்சந்தேகம் நியாயமாக இருந்தால், பதில் சொல்வது வாத்தியாரின் கடமை!
////sanjay said...
ReplyDeleteநல்ல வேளை, புதனையே மறக்காமல் போனேனே !!
சஞ்சய் ராமனாதன் !////
பெங்களூரில்தானே இருக்கிறீர்கள்? ஆறு மணிக்குமேல் எல்லாவற்றையும் மறக்கும் சூழல் அங்கே நிறைய உண்டு!
////sanjay said...
ReplyDeleteஅய்யா,
இப்பொழுது நீங்கள்தான் எனக்கு ரிமைன்டர் நோட்டீஸ் கொடுத்துள்ளீர்கள் !!
என்னுடைய ஜாதகத்தை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி ஒரு வாரம் ஆயிற்று !! தங்களுடைய நேரமின்மையை கருதி உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இப்பொழுது நீங்களே கேட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி !( நமது வைகைப்புயலைப்போல, "ஓ..ஹோ..இதுதான் போட்டு வாங்கறதா...???? )
சஞ்சய் ராமனாதன் !/////
அனுப்பச் சொல்லி நானா கேட்டேன்!
//////Iyappan said...
ReplyDelete////எப்பிடி சரியான குறளை
குரல் உயர்த்தி சொல்லியிருக்கேனா?
ஆமா, எப்போவுமே ஐயப்பன் மட்டுமே குறள் மழையாப் பொழியுறாரு..
அதான் நானும் கொஞ்சம் ட்ரை பண்ணினேன்..///// ////
உங்களுக்கு இல்லாத உரிமையா பாஸ்... நீங்க தானே எங்களுக்கு எல்லாம் தொழில் சொல்லி கொடுத்த குரு...
நல்லா பொழிங்க.... வாத்தியார் நம்மள class விட்டு துரத்தாம இருந்தா சரிதான்.. ;)/////
கூகுள் ஆண்டவர் பள்ளிக்கூடத்தைக் கட்டிவிட்டிருக்கிறார். நான் வாத்தியார் வேலை பார்க்கிறேன். 1850 பேர்கள் இருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் எப்படிக் கவனிக்க முடியும்? அதுதான் சித்தம் போக்கு சிவன்போக்கு என்று விட்டுவிட்டேன்!
////tamiltemples said...
ReplyDeleteஐயா
இந்த ஜாதகத்தில்,
கால சர்ப்ப தோஷம் இருக்கு. ஆனால் மண வாழ்க்கை முறிந்ததற்கு அது காரணம் அல்ல.
ஏழில் ராகுவும் செவ்வாயும். அதுதான் காரணம்.
குரு நீசம்.
களத்திர காரகன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவருடைய சுய பரல்கள் என்னவென்று பார்க்க வேண்டும். மேலும் ஏழாம் வீட்டை லக்கினமாக கொண்டால் குடும்ப ஸ்தானாதிபதி ஆறில். இது ஒரு கெட்ட அமைப்பு. ஓரளவிற்கு சரியா ஐயா?/////
சரிதான்!
//////happy said...
ReplyDeleteOn seeing given horoscope by you, i hav a doubt,
In meenam (lagnam), suryan, mars, sukran & budan exist & in 7th house sani vagram& guru vagram, how will be the native, a) will native receive positive or negative impact from guru & sani.
OR b) Will sukran controls all other////
இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பதில் சொல்வது சரியாக இருக்காது. முழு ஜாதகத்தையும் அலச வேண்டும்!
//////மகேஷ் ராஜ் said...
ReplyDeleteSIR YESTERDAY I POST ONE COMMENT ABOUT OUR SOFTWARE . U DID NOT POST IT IN THAT COMMENT SECTION
SO SORRY FOR THIS SIR . I ONCE AGEIN I LEAVE THIS COMMENT HERE . IF THIS HARM U MIND OR HEART PLZ SHOW ME
MERCY
ஒரு சந்தேகம் in software: birth:1985.5.26 {5.49pm}, old vakeya panjakam(manimekalai & some other i saw it ) it shows சனி in 12th place,and also புதன் in
7th place with(புதன்+சூரியன்+செவ்வாய்) but in our software( sir that u gave in our blog . ) it shows சனி in 1th place(lakenam),and also புதன் in
6th place and (சூரியன்+செவ்வாய்) in 7th place what is the problem in our software . sir i take this jathakam in this software how u show us in preferences . i think some problem in software or in the panjakam . plz clear me sir.
thank u//////
மென்பொருளில் File > Preferences > Ayanamsam அதில் முதல் இரண்டிலும் முயற்சி செய்து பாருங்கள். சரியாக வரும்!
/////bajji said...
ReplyDeletesir for people who are questioning the of veracity astrology ,i advice them to goto youtube.com and search for armstrong and astrology as keywords . theyll find an amazing test .
http://www.youtube.com/watch?v=3N1dIUTbZTo/////
உங்களுடைய தகவலுக்கு நன்றி
/////sundari said...
ReplyDeleteGood evening sir,
Today lesson is very nice only for reading sir. But the matter is so much paining me due to that sister's life problem. Did she get another(second) marriage or not. Is it possible or not. Thanks for ur today lesson sir.///////
அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மறுமணம் செய்துகொண்டதாகக் கேள்விப்பட்டேன்! நன்றி!
dear sir,
ReplyDeleteactually i am from salem not from bangalore !
sanjay ramanathan
/////sanjay said...
ReplyDeletedear sir,
actually i am from salem not from bangalore !
sanjay ramanathan/////
தகவலுக்கு நன்றி!
'நோண்டுதல் நோண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
ReplyDeleteயாண்டும் இடும்பை இல..'//
”நோண்டுதல் மற்றும் தோண்டுதல் செய்யார்க்கு
யாண்டு இடும்பை இல!” என்று மாற்றி விடுங்கள் மைனர்!//
நல்ல வேளையா இப்ப திருவள்ளுவர் உயிரோட இல்லை!
/////Uma said...
ReplyDelete'நோண்டுதல் நோண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல..'//
”நோண்டுதல் மற்றும் தோண்டுதல் செய்யார்க்கு
யாண்டு இடும்பை இல!” என்று மாற்றி விடுங்கள் மைனர்!//
நல்ல வேளையா இப்ப திருவள்ளுவர் உயிரோட இல்லை!/////
இருந்திருந்தால், இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில், அவர் சினிமாவிற்குப் பாட்டெழுதப் போயிருப்பார்:-)))
ம் அதுவும் சரிதான்
ReplyDeleteசெவ்வாய் தோசம், கடுமையான களத்திர தோசம் மற்றும் இதற தோசங்களை பற்றி முழுமையாக புத்தகத்தில் எழுதி விடுங்கள் ஐயா!!!
ReplyDelete