5.10.10

நன்றி சொல்வேன் உங்களுக்கு; என் வகுப்பறைக்கு வந்ததற்கு!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி சொல்வேன் உங்களுக்கு; என் வகுப்பறைக்கு வந்ததற்கு!

ஜோதிடப் புத்தகங்கள் முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

புத்தகத்தின் முத்தாய்ப்பான அம்சம், அது ஒருவருக்கு சமர்ப்பணம்
செய்யப்பட உள்ளது. அவருடைய படத்துடன் சமர்ப்பண அறிவிப்பு
புத்தகத்தின் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
யார் அவர் என்பது வாத்தியாருக்கு மட்டுமே தெரியும். புத்தகம் உங்கள் கைக்குக் கிடைத்தவுடன், அதை நீங்கள் பார்த்தால், நீங்கள் அனைவரும் மகிழ்வு கொள்வீர்கள்.

யார் அது?

சஸ்பென்சாக இருக்கட்டும். புத்தகம் உங்கள் கைக்கு வரும்வரை பொறுத்திருங்கள்.

புத்தகத்தின் மற்றொரு மேன்மையான விஷயம் நம் வகுப்பறையைப்
பற்றி இரண்டு பக்க அளவில் விரிவான செய்தி வரவுள்ளது. அதற்கு
இன்று நம் வகுப்பறையில் பதிவு செய்துள்ள உங்களைப் பற்றிய
(Followers) சிறு  குறிப்புக்கள் வாத்தியாருக்குத் தேவைப்படுகின்றன.
ஆகவே அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பைத் தந்து  உதவ வேண்டுகிறேன்.

தேவையான செய்திகள்/
1. உங்களுடைய உண்மைப் பெயர்
2. உங்களுடைய புனைப்பெயர்
3. உங்களுடைய வயது (முடிந்தால் பிறந்த தேதி)
4. உங்களுடைய நட்சத்திரம் (இது option மட்டுமே)
5. உங்களுடைய பால் இனம் (Gender: Male reader 0r female reader) இது முக்கியமானது.
6. நீங்கள் பிறந்த ஊர்
7. நீங்கள் வசிக்கும் ஊர்
8. உங்களுடைய கல்வித் தகுதி
9. உங்களுடைய வேலை அல்லது தொழில் (இது option மட்டுமே)
10. எத்தனை மாதங்களாக நீங்கள் பாடங்களைப் படிக்கின்றீர்கள் என்னும் விபரம்


இவை அனைத்தையும் எழுதி அனுப்புங்கள்.  
இந்த விவரங்கள் வெளியிடப்பட மாட்டாது. ரகசியம் 
காக்கப்படும்.  உறுதியளிக்கிறேன். இந்த விவரம் எனக்கு மட்டுமே. 
இதைவைத்து புள்ளிவிவரங்கள் மட்டுமே புத்தகத்தில் வெளிவரும்.

அதாவது வகுப்பறையில் படிப்பவர்களில், இந்தந்த வயதில் இத்தனைபேர்கள் உள்ளார்கள். ஆண் வாசகர்கள்  இத்தனை
பேர்கள் உள்ளார்கள். பெண் வாசகிகள் இத்தனை பேர்கள் 
உள்ளார்கள்.  இந்தந்த நாட்டில் (ஊர்களில்)  இத்தனை பேர்கள் 
உள்ளார்கள்  என்னும்  புள்ளி விவரம்  மட்டுமே  வெளியாகும்.

நீங்கள் தகவல் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

classroom2007@gmail.com

வேறு முகவரிக்கோ அல்லது பின்னூட்டத்திலோ யாரும் அதைத் தரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.  மேலே உள்ள
மின்னஞ்சல் முகவரியை மட்டுமே அனைவரும் பயன்படுத்துங்கள்.

ஜோதிடப்பாடம் வழக்கம்போல் நாளை வெளிவரும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

66 comments:

  1. உள்ளேன் ஐயா!

    நன்றி!
    மாணவர்கள் ஆகிய நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும்.
    வகுப்பறையில் மாணவரோடு இல்லாமல், தேவை இல்லாமல் வரும் இடை ஈறுகளையும் பொறுத்து கொண்டு மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் தங்களுக்கு.

    பெற்ற தாய்க்கே கஞ்சி ஊற்றாத இந்த கலியுகத்தில்
    ஜோதிட வகுப்பு மட்டும் அல்லாமல் தோழனாக, ஆசிரியராக, ஆன்மீகவாதியாக .................இருந்து கொண்டு எங்களுக்கு வகுப்பு எடுப்பதால் ஐயா

    ReplyDelete
  2. உங்கள் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நான் ஒரு மெயில் அனுப்பியிருந்தேன், அதற்கு ஏன் நீங்கள் பதில் அனுப்பவில்லை?

    ReplyDelete
  3. Dear sir,
    Very thankful for your great lessons providing in the blogs.
    Your humbleness shows that you are the great human.
    we the followers only have to say thanks to you.
    I sent my details for your information as per your blog wish.
    Once again Thank you very much sir.
    Vaalga Valamudan.

    ReplyDelete
  4. புத்தகம் வெளீடுவது நீங்கள் , தேர்வு எழுதி காத்திருக்கும் தருணத்தில் நாங்கள்....

    ReplyDelete
  5. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ///ஜோதிடப் புத்தகங்கள் முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
    புத்தகத்தின் முத்தாய்ப்பான அம்சம், அது ஒருவருக்கு சமர்ப்பணம்
    செய்யப்பட உள்ளது.////
    இந்த அறிவிப்பு மிகுந்த ஆர்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.
    ஜோதிடப் புத்தகங்கள் சிறப்பாக வெளிவருதற்கு பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
    நன்றி !
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி
    2010-10-05

    ReplyDelete
  6. // புத்தகத்தின் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
    யார் // உங்களுக்கு மேலாளராக வேலைபார்த்த நண்பர் சுவாமி , சரியா !

    ReplyDelete
  7. ////kannan said...
    உள்ளேன் ஐயா!
    நன்றி!
    மாணவர்கள் ஆகிய நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும்.
    வகுப்பறையில் மாணவரோடு இல்லாமல், தேவை இல்லாமல் வரும் இடை ஈறுகளையும் பொறுத்து கொண்டு மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் தங்களுக்கு. பெற்ற தாய்க்கே கஞ்சி ஊற்றாத இந்த கலியுகத்தில்
    ஜோதிட வகுப்பு மட்டும் அல்லாமல் தோழனாக, ஆசிரியராக, ஆன்மீகவாதியாக .................இருந்து கொண்டு எங்களுக்கு வகுப்பு எடுப்பதால் ஐயா////

    அடடா, நெஞ்சைத் தொட்டுவிட்டீர்கள் கண்ணன். ஒரு லிட்டர் ஊக்க மருந்தை ஒரே நாளில் சாப்பிட்டது போல ஆகிவிட்டது!. புத்தகவேலை முடிவதுவரை இந்த ஊக்கம் போதும்!

    ReplyDelete
  8. ////சூரிபாபா said...
    Waiting for your Book.////

    விரைவில் புத்தகம் வெளிவரும்! நன்றி!

    ReplyDelete
  9. /////Uma said...
    உங்கள் புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    நான் ஒரு மெயில் அனுப்பியிருந்தேன், அதற்கு ஏன் நீங்கள் பதில் அனுப்பவில்லை?////

    உங்கள் அணிந்துரைதானே? அது புத்தகத்தில் உங்கள் புகைப்படத்துடன் வெளியாகும் சகோதரி!

    ReplyDelete
  10. //////CJeevanantham said...
    Dear sir,
    Very thankful for your great lessons providing in the blogs.
    Your humbleness shows that you are the great human.
    we the followers only have to say thanks to you.
    I sent my details for your information as per your blog wish.
    Once again Thank you very much sir.
    Vaalga Valamudan./////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  11. ///profit500 said...
    புத்தகம் வெளீடுவது நீங்கள் , தேர்வு எழுதி காத்திருக்கும் தருணத்தில் நாங்கள்..../////

    தேர்வைப் பற்றி என்ன கவலை? இணைய வகுப்புத்தானே! எல்லோரும் பாஸ்!

    ReplyDelete
  12. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ///ஜோதிடப் புத்தகங்கள் முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
    புத்தகத்தின் முத்தாய்ப்பான அம்சம், அது ஒருவருக்கு சமர்ப்பணம்
    செய்யப்பட உள்ளது.////
    இந்த அறிவிப்பு மிகுந்த ஆர்வத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.
    ஜோதிடப் புத்தகங்கள் சிறப்பாக வெளிவருதற்கு பிரார்த்தித்துக்கொள்கிறேன்.
    நன்றி !
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் நல்ல உள்ளத்திற்கும், பிரார்த்தனைக்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  13. ////ராஜன் said...
    // புத்தகத்தின் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
    யார் // உங்களுக்கு மேலாளராக வேலைபார்த்த நண்பர் சுவாமி , சரியா?//////

    இல்லை. தவறு! அவரைவிட முக்கியமான நபர்! என் ஆசான் கவியரசரும் அல்ல! அவர்களைவிட முக்கியமானவர் அவர்!

    ReplyDelete
  14. /////Ram said...
    waiting for the book////

    விரைவில் புத்தகம் வெளிவரும்! நன்றி!

    ReplyDelete
  15. உங்கள் அணிந்துரைதானே? அது புத்தகத்தில் உங்கள் புகைப்படத்துடன் வெளியாகும் சகோதரி!//

    அது இல்ல சார், திரும்ப அனுப்பிருக்கேன் பாருங்க‌

    ReplyDelete
  16. இல்லை. தவறு! அவரைவிட முக்கியமான நபர்! என் ஆசான் கவியரசரும் அல்ல! அவர்களைவிட முக்கியமானவர் அவர்!//

    யார் பாலாஜியா?

    ReplyDelete
  17. அய்யா

    நான் இறைவனை வேண்டுகிரேன் உங்கள் உழைப்பு என்றும் தொடர வேண்டும்...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  18. தங்களின் படைப்புக்காக,
    நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. Sir,
    Late Thiru.Veerappan ayya avargal ! sarithane ..??

    sanjay ramanathan

    ReplyDelete
  20. Sir ji..

    I have posted all the required information.

    I wish that the data should also be in GRAPHICAL pictoraph, to have the reader that we are technically updated..

    I know the person, to whom the book is dedicated.. He is known to me also..

    Give us the secret of the person who has given u the preface to the book

    visuiyer

    ReplyDelete
  21. வணக்கம் வாத்தியார் சார்,
    எனக்கு என்று ஒரு புத்தகம் இப்போதே ஒதுக்கி வைத்துவிடுங்கள்
    நான் வருகிற நவம்பர் 4 கோயம்புத்தூர் வருகிறேன்
    மூன்று வாரங்கள் கோவையில் இருப்பேன்
    அதுசமயம் தங்களை நேரில் சந்தித்தித்து புத்தகங்களை பெற்றுக்கொள்கிறேன்
    ஸ்டாக் இல்லை என்ற பேச்சிற்கே இடம் இருக்ககூடாது
    ஆமாம் சொல்லிவிட்டேன் இப்போதே
    நன்றி
    நந்தகோபால்
    பி.கு : நான் சிம்ம லக்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்

    ReplyDelete
  22. ////Uma said...
    உங்கள் அணிந்துரைதானே? அது புத்தகத்தில் உங்கள் புகைப்படத்துடன் வெளியாகும் சகோதரி!//
    அது இல்ல சார், திரும்ப அனுப்பிருக்கேன் பாருங்க‌////

    மெயில் பெட்டி முழுவதும் நிறைய மின்னஞ்சல்கள். பார்த்து மாலைக்குள் பதில் எழுதுகிறேன் சகோதரி!

    ReplyDelete
  23. //////Uma said...
    இல்லை. தவறு! அவரைவிட முக்கியமான நபர்! என் ஆசான் கவியரசரும் அல்ல! அவர்களைவிட முக்கியமானவர் அவர்!//
    யார் பாலாஜியா?////

    நான் வணங்கும் பாலாஜி ஏழுமலைமேல் இருக்கிறார். அவர் முக்கியமானவர் என்றாலும் நான் குறிப்பிட்டுள்ள நபர், அவரைவிட முக்கியமானவர். ஆனால் எல்லோரும் ஊகம் செய்யும் பழநி அப்பனும் அல்ல!:-))))

    ReplyDelete
  24. ////bhuvanar said...
    அய்யா
    நான் இறைவனை வேண்டுகிறேன் உங்கள் உழைப்பு என்றும் தொடர வேண்டும்...
    நன்றி
    பாண்டியன்/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. ////Alasiam G said...
    தங்களின் படைப்புக்காக,
    நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன்.////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  26. ////sanjay said...
    Sir,
    Late Thiru.Veerappan ayya avargal ! sarithane ..??
    sanjay ramanathan////

    இல்லை. தவறு!

    ReplyDelete
  27. ////iyer said...
    Sir ji..
    I have posted all the required information.
    I wish that the data should also be in GRAPHICAL pictoraph, to have the reader that we are technically updated..
    I know the person, to whom the book is dedicated.. He is known to me also..
    Give us the secret of the person who has given u the preface to the book
    visuiyer////

    அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. அணிந்துரை கொடுத்திருப்பவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்களே! புத்தகம் வந்தவுடன் பாருங்கள்!

    ReplyDelete
  28. ////G.Nandagopal said...
    வணக்கம் வாத்தியார் சார்,
    எனக்கு என்று ஒரு புத்தகம் இப்போதே ஒதுக்கி வைத்துவிடுங்கள்
    நான் வருகிற நவம்பர் 4 கோயம்புத்தூர் வருகிறேன்
    மூன்று வாரங்கள் கோவையில் இருப்பேன்
    அதுசமயம் தங்களை நேரில் சந்தித்தித்து புத்தகங்களை பெற்றுக்கொள்கிறேன்
    ஸ்டாக் இல்லை என்ற பேச்சிற்கே இடம் இருக்ககூடாது
    ஆமாம் சொல்லிவிட்டேன் இப்போதே
    நன்றி
    நந்தகோபால்
    பி.கு : நான் சிம்ம லக்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்/////

    கவலை இல்லை. நானும் சிம்ம லக்கினம்தான்!:-)))))

    ReplyDelete
  29. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே!

    ReplyDelete
  30. antha VIP murugapperumano? yaaraga erunthaal enna ungal mathippu petravaranaal avar mukkiyamanavarthaan.

    ReplyDelete
  31. ////Uma said...
    ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறீங்களே!/////

    சஸ்பென்ஸ் இல்லையென்றால் திரைப்படமும் சுவைக்காது. வாழ்க்கையும் சுவைக்காது. பொறுத்திருங்கள். ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!

    ReplyDelete
  32. /////perumal sundaram said...
    antha VIP murugapperumano? yaaraga erunthaal enna ungal mathippu petravaranaal avar mukkiyamanavarthaan./////

    இல்லை! பொறுத்திருங்கள் நண்பரே! கண்டால் நீங்கள் மகிழும் நபர்தான் அவர்!

    ReplyDelete
  33. அய்யா

    நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தானே !!!

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  34. SP.VR SUBBAIAH SAID:
    கவலை இல்லை. நானும் சிம்ம லக்கினம்தான்!

    G.Nandagopal says
    சபாஷ் ..சரியான போட்டி
    ஹா ..ஹா..
    இந்த இடத்தில் PS வீரப்பா அவர்களை நினைத்துக்கொள்ளவும்

    ReplyDelete
  35. SP.VR.SUBBAIAH said:
    நான் வணங்கும் பாலாஜி ஏழுமலைமேல் இருக்கிறார். அவர் முக்கியமானவர் என்றாலும் நான் குறிப்பிட்டுள்ள நபர், அவரைவிட முக்கியமானவர். ஆனால் எல்லோரும் ஊகம் செய்யும் பழநி அப்பனும் அல்ல!:-))))

    ஏன் யூகம் சரியாக இருக்குமானால்
    அது பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிட வேறு யாராக இருக்க முடியும்
    நந்தகோபால்

    ReplyDelete
  36. ////bhuvanar said..
    அய்யா
    நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தானே !!!
    நன்றி
    பாண்டியன்////

    இல்லை. இல்லை. இல்லை!

    ReplyDelete
  37. /////G.Nandagopal said...
    SP.VR SUBBAIAH SAID:
    கவலை இல்லை. நானும் சிம்ம லக்கினம்தான்!
    G.Nandagopal says
    சபாஷ் ..சரியான போட்டி
    ஹா ..ஹா..
    இந்த இடத்தில் PS வீரப்பா அவர்களை நினைத்துக்கொள்ளவும்////

    சரியான போட்டி எல்லாம் கிடையாது. சிங்கங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்ளாது.

    ReplyDelete
  38. /////G.Nandagopal said...
    SP.VR.SUBBAIAH said:
    நான் வணங்கும் பாலாஜி ஏழுமலைமேல் இருக்கிறார். அவர் முக்கியமானவர் என்றாலும் நான் குறிப்பிட்டுள்ள நபர், அவரைவிட முக்கியமானவர். ஆனால் எல்லோரும் ஊகம் செய்யும் பழநி அப்பனும் அல்ல!:-))))
    ஏன் யூகம் சரியாக இருக்குமானால்
    அது பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிட வேறு யாராக இருக்க முடியும்
    நந்தகோபால்////

    அவர் வேறு இவர் வேறா? என்ன சுவாமி சொல்கிறீர்கள். கிருஷ்ணரும் இல்லை!

    ReplyDelete
  39. ////bhuvanar said..
    அய்யா
    நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தானே !!!
    நன்றி
    பாண்டியன்////

    இல்லை. இல்லை. இல்லை!

    என்ன பாண்டியன்
    சமிபத்திலே பஹ்ரைன் போய் எந்திரன் படம் பாத்திட்டு
    வந்ததிலிருந்து உங்களுக்கு எல்லாமே ரஜினி மயமா
    தெரியுது போல ...
    நந்தகோபால்

    ReplyDelete
  40. ஒருவேளை அமரர் கல்கி அவர்களாக இருக்குமோ?


    நன்றி,
    Naresh

    ReplyDelete
  41. நான் என்னைப் பற்றிய விபரங்களையும் அனுப்பி வைக்கிறேன். நான் வகுப்பறைக்கு வந்து படித்த முதல் பாடம்/இடுகை துருவன் ஐயரும் வெண்பொங்களும் என்ற தலைப்பில் வந்ததுதான். எப்படியோ 2 ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.

    பார்த்தால் அனைவரும் மகிழக்கூடிய நபர் யார் என்று புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்கிறேன். இப்பொது சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். இருப்பினும் அந்தக் கால முனிவர்களுக்கு இருந்தது போல் திவ்விய திருஷ்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது இக்கால நடைமுறைக்கு டெலிபதி தெரிந்தால் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இந்த super natural powerகளுக்கு 8ம் இடமும் அதன் அதிபதியும்தான் ஆதிபத்தியம் வகிக்கிறார்களாமே. இவையாவது நன்றாக இருக்க வேண்டுமே. எல்லாம் வல்ல 8ம் இடமும் அதன் அதிபதியும் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  42. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    புத்தகத்தின் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
    யார் என்பதைக் கூறுகிறேன்.
    மாதா,பிதா,குரு,தெய்வம் இவற்றில் மாதா படம் தான்
    முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
    நன்றி !
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி
    2010-10-05

    ReplyDelete
  43. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    **புத்தகத்தின் முத்தாய்ப்பான அம்சம், அது ஒருவருக்கு சமர்ப்பணம்
    செய்யப்பட உள்ளது.**

    வகுப்பறை வாத்தியாருக்கே வாத்தியாரான நவகிரக சுபகிரகமான குருபகவான் என நினைக்கிறேன்

    அன்புடன்அரவரசன்

    ReplyDelete
  44. சார் எனக்கு தெரியும் நம்பா அப்பாவுக்கு நெருங்கிய நண்பர் மலயளா ஜோசியர்
    ஏவல் வாழைப்பழத்தை தூக்கின்னு வந்து போட்டுச்சி அவர் பாடம்

    ReplyDelete
  45. AYYA, ENNUDIYA PULLIVIVARAM UNGALUKU MAIL ANUPI VITTEN AYYA
    I sent my details for your information as per your request.
    Thank you sir.

    ReplyDelete
  46. அய்யா எனக்கும் ஒரு பிரதி வேண்டும்.
    புது மாணவன் என்று விட்டுவிடாதீர்கள், நான் உங்கள் வலைத்தளம் பக்கம் வராதது என்னுடய துற்பாகியம் என நினைக்கிறேன்
    Better late than never என்று தான் சொல்ல வேண்டும்
    அது எனக்கு தெரிந்து சனி பகவான் ஆக தான் இருக்க முடியும்

    ReplyDelete
  47. /////G.Nandagopal said...
    ////bhuvanar said..
    அய்யா
    நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தானே !!!
    நன்றி
    பாண்டியன்////
    இல்லை. இல்லை. இல்லை!
    என்ன பாண்டியன்
    சமிபத்திலே பஹ்ரைன் போய் எந்திரன் படம் பாத்திட்டு
    வந்ததிலிருந்து உங்களுக்கு எல்லாமே ரஜினி மயமா
    தெரியுது போல ...
    நந்தகோபால்/////

    வாத்தியாருக்கும் ரஜினியைப் பிடிக்கும். அதனால் சொல்லியிருக்கிறார்!

    ReplyDelete
  48. /////Naresh said...
    ஒருவேளை அமரர் கல்கி அவர்களாக இருக்குமோ?
    நன்றி,
    Naresh////

    இல்லை. இல்லை. இல்லை!

    ReplyDelete
  49. ////ananth said...
    நான் என்னைப் பற்றிய விபரங்களையும் அனுப்பி வைக்கிறேன். நான் வகுப்பறைக்கு வந்து படித்த முதல் பாடம்/இடுகை துருவன் ஐயரும் வெண்பொங்களும் என்ற தலைப்பில் வந்ததுதான். எப்படியோ 2 ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை.
    பார்த்தால் அனைவரும் மகிழக்கூடிய நபர் யார் என்று புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்கிறேன். இப்பொது சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும். இருப்பினும் அந்தக் கால முனிவர்களுக்கு இருந்தது போல் திவ்விய திருஷ்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அல்லது இக்கால நடைமுறைக்கு டெலிபதி தெரிந்தால் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இந்த super natural powerகளுக்கு 8ம் இடமும் அதன் அதிபதியும்தான் ஆதிபத்தியம் வகிக்கிறார்களாமே. இவையாவது நன்றாக இருக்க வேண்டுமே. எல்லாம் வல்ல 8ம் இடமும் அதன் அதிபதியும் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்./////

    புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்கிறேன் என்னும் உங்களுடைய பொறுமை வாழ்க!

    ReplyDelete
  50. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    புத்தகத்தின் முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
    யார் என்பதைக் கூறுகிறேன்.
    மாதா,பிதா,குரு,தெய்வம் இவற்றில் மாதா படம் தான்
    முதல் பக்கத்தில் மல்ட்டி கலரில் வெளியாக உள்ளது.
    நன்றி !
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி////

    மாதா, பிதா இருவரின் படங்களையும் முன்பே எனது செட்டிநாட்டு மண்வாசனைக் கதை நூல்களில் சமர்ப்பணம் என்ற தலைப்பில் வெளியிட்டுவிட்டேன். ஜோதிட நூல்களில் அவர்களுடைய படங்கள் வராது!

    ReplyDelete
  51. ////NAGA said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    **புத்தகத்தின் முத்தாய்ப்பான அம்சம், அது ஒருவருக்கு சமர்ப்பணம்
    செய்யப்பட உள்ளது.**
    வகுப்பறை வாத்தியாருக்கே வாத்தியாரான நவகிரக சுபகிரகமான குருபகவான் என நினைக்கிறேன்
    அன்புடன்அரவரசன்////

    இல்லை, தவறு சுவாமி!

    ReplyDelete
  52. ////sundari said...
    சார் எனக்கு தெரியும் நம்பா அப்பாவுக்கு நெருங்கிய நண்பர் மலையாள ஜோசியர்
    ஏவல் வாழைப்பழத்தை தூக்கின்னு வந்து போட்டுச்சி அவர் படம்////

    இல்லை. அவர் படம் இல்லை! உங்கள் ஊகத்திற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  53. ////vprasanakumar said...
    AYYA, ENNUDIYA PULLIVIVARAM UNGALUKU MAIL ANUPI VITTEN AYYA
    I sent my details for your information as per your request.
    Thank you sir.////

    நல்லது. நன்றி பிரசன்ன குமார்!

    ReplyDelete
  54. /////Naveen said...
    அய்யா எனக்கும் ஒரு பிரதி வேண்டும்.
    புது மாணவன் என்று விட்டுவிடாதீர்கள், நான் உங்கள் வலைத்தளம் பக்கம் வராதது என்னுடய துர்ப்பாக்கியம் என நினைக்கிறேன்
    Better late than never என்று தான் சொல்ல வேண்டும்
    அது எனக்கு தெரிந்து சனி பகவான் ஆக தான் இருக்க முடியும்/////

    சனி பகவான் இல்லை. அவரைவிட உயர்ந்தவர். நான் அதிகம் நேசிப்பவர். உங்கள் அனைவருக்கும் தெரிந்தவர்!

    ReplyDelete
  55. Is it some one like Dr.B.V.Raman or some renowned astrologers ?

    ReplyDelete
  56. ////Sowmya said...
    Is it some one like Dr.B.V.Raman or some renowned astrologers ?////

    உங்களின் ஆர்வத்திற்கு நன்றி. நீங்கள் குறிபிட்டுள்ள எவரும் இல்லை!

    ReplyDelete
  57. With your Wishes and God Blesses!
    Sai Gokulakrishna

    ReplyDelete
  58. /////Sai Gokula Krishna said...
    With your Wishes and God Blesses!
    Sai Gokulakrishna////

    இறைவனின் ஆசி ஒன்று போதுமே சுவாமி!

    ReplyDelete
  59. ///////ராஜன் said...
    may be your Followers photo's/////

    பின்தொடர்பவர் ஒருவரின் புகைப்படமா? குழப்பம் வராதா?

    ReplyDelete
  60. சார் பட்டினத்தார்தானே (இதுக்கு மேல நான் guess பண்ண மாட்டேன், கவலைப்படாதீங்க)

    ReplyDelete
  61. ////Uma said...
    சார் பட்டினத்தார்தானே (இதுக்கு மேல நான் guess பண்ண மாட்டேன், கவலைப்படாதீங்க)////

    இல்லை. பட்டினத்தார் பற்றித் தனியாக ஒரு நூலை எழுதவுள்ளேன். அது அவருக்கு சமர்ப்பணம் ஆகும்!

    ReplyDelete
  62. Sir,
    When the book is going to be released? (i.e.probable date)

    ReplyDelete
  63. /////Ganesan said...
    Sir,
    When the book is going to be released? (i.e.probable date)//////

    டிசம்பரில்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com