4.10.10

மனைவியின் தயவில் குளிர்காய முடியுமா?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவியின் தயவில் குளிர்காய முடியுமா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.24
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.82
சுந்தர்.K
மலேசியா

Dear sir, 
Greetings from Malaysia!

1) Doubts 8th House
சனியும், செவ்வாயும் (ராசியில் அல்லது நவாம்சத்தில்) பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்லதல்ல! அதைப்பற்றி விரிவாக எழுதுவது எனக்கு நல்லதல்ல! அதைப்பற்றி, எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்
போது விரிவாக எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள். You did not cover the above in the 8th house lessons, please advise, and in my நவாம்சத்தில்  சனியும், செவ்வாயும் பரிவர்த்தனை,  attached my chart please advise?

உங்கள் சொந்த ஜாதகம் என்று சொல்லிவிட்டீர்கள். அதற்குக் கேள்வி
பதில் பகுதியில் இடமில்லை. கேள்வி ஆயுளைப் பற்றியது. ஆகவே
நிச்சயமாக இடமில்லை. உங்களுக்கு என்ன வயதாகிறது? அதற்குள்
ஆயுளைப் பற்றி என்ன கவலை? நீங்கள் கவலைப் படுவதால்,
ஆயுள் கூடப் போகிறதா? அல்லது குறையப்போகிறதா? திருமணமாகிவிட்டதா? முதலில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு இல்லற இன்பத்தில் நீந்திக் குளியுங்கள்!

2) Viparitha rajayogam
6th lord in the 8th house and 8th lord in the 12th house is it viparith rajayogam?

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அந்த யோகம் உண்டாகும். நீங்கள் சொல்லும் அமைப்பில் கிரகங்கள் தனித்தனியாக மட்டையுடன் நின்று
கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த யோகம் இல்லை! நீங்கள் வாழ்த்துச் சொல்லிக் கேள்வியைத்  துவக்கியுள்ளீர்கள். நானும் வாழ்த்துச் சொல்லிப் பதிலை நிறைவு செய்கிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.83
சு. மணிகண்டன்
நெய்வேலி
   
வணக்கம் திரு. சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,
எனது ஐயங்களைக் கொடுத்துள்ளேன். தயைகூர்ந்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

1. விம்சோத்திரி தசா காலங்கள் மாதத்திற்கு 30 நாள்கள், வருடம் 
360 நாட்கள் என்று தான் சுக்கிர திசை 20 வருடங்கள், சனிதிசை 
19 வருடங்கள் என கூறப்பட்டுள்ளது.  அதனை நாம் நமது பிறந்த 
நாளான ஆங்கிலத் தேதியுடன் கூட்டி நடப்பு திசா புத்திகளை கணக்கிடுகிறோம்.இதனால் வருடத்திற்கு ஐந்தரைநாளட்கள் 
அதிகமாக கூட்டி விடுகிறோம். உதா. சுக்கிரதிசை 20 வருடத்திற்கு 
ஐந்தரை நாட்கள் வீதம் 20 வருடத்திற்கு 3 மாதம் 15  நாட்களை 
அதிகமாக கூட்டி விடுகிறோம்.  இதனால் புத்திக்காலங்கள் மாறிவிட 
வாய்ப்பு உள்ளது. நாம் சூரிய  திசை சுயபுத்தி பலன்களை கூறும் போது ஜாதகருக்கு சுக்கிர திசையில் கேது புத்தி பலன்கள் நடக்கும் நமது
பலன்கள் தவற வாய்ப்பு உள்ளது எனவே வருடத்திற்கு ஐந்தரை 
நாட்களை கழித்து கணக்கிட சரியாக வரும் என்பது எனது கருத்து.  
இது சரியா என விளக்கவும்.

பிறப்பில் இருந்து, இன்று நடக்கும் தசா புத்தியை அறிந்து கொள்ள, பிறந்த தேதி + கர்ப்பச்செல் இருப்பு +  நடுவில் கடந்த திசைகளுக்கெல்லாம், மொத்தமாக வருடத்தின் எண்ணிக்கையைத் தான் கூட்டுவோம். நீங்கள்  சொல்கிறபடி, திசைகளின் காலத்திற்கு உரிய வருடங்களுக்கு 365.25 நாட்களால் பெருக்கி, நாட்களை யாரும்  கூட்டுவதில்லை. அதனால் நீங்கள் சுட்டிக்காட்டும் வித்தியாசம் வராது!

உதாரணம் கொடுத்துள்ளேன். இப்படித்தான் கூட்டுவோம்:
சந்திர திசை இருப்பு:  3 வருடம் - 6 மாதங்கள் - நான்கு நாட்கள்
செவ்வாய் திசை    :     7 வருடம்
ராகு திசை        :           18 வருடம்
குரு தசை         :           16 வருடம்
நடப்பு சனி திசையில்
சுயபுத்தி:          :               3 வருடம் - 0 மாதங்கள் - 3 நாட்கள்
----------------------------------------------------------------------------
ஆக மொத்தம்:            47 வருடம் - 6 மாதம் - 7 நாட்கள்
----------------------------------------------------------------------------

2. ஒரு திசையில் சுயபுத்தி எவ்விதம் பலனளிக்கும். ஜோதிட விதிகளில் தசாநாதன் தனது சுயபுத்திகளில் சிறப்பான பலன்களை தராது என கூறப்பட்டுள்ளது. அனுபவத்திற்கு ஒத்து வரவில்லை.  சுயபுத்தி 
பலன்களை  எவ்விதம் கூறுவது ஐயா விளக்கவும். அது பொதுவிதி. 
பொது விதி எப்போதுமே சொந்த அனுபவத்திற்கு ஒத்துவராது.

பேருந்து நிலையத்தில், கூட்டத்தில், அடித்து மோதி ஏறி ஒரு சீட்டைப்
பிடித்து அமர்ந்தவுடன், அப்பாடா  என்றிருக்கும். ஓட்டுனர் வந்து
பஸ்சைக் கிளப்புவதற்கு, அதாவது புறப்படுவதற்கு, அரை மணி
நேரம் ஆகிறது என்றால், பஸ்ஸிற்குள் வியர்த்துக் கொட்டும்.
எப்போதடா, வண்டியைக் கிளப்புவான், வண்டி கிளம்பினால்
பரவாயில்லை, காற்று வந்து, சற்று சுகத்தைக் கொடுக்குமே
என்றிருக்கும். ஓட்டுனர் வந்து வண்டி கிளம்பினாலும்,
நகர எல்லையைத் தாண்டும் வரை மெதுவாகவே ஓட்டுவார்.
அப்போது நமக்கு வண்டி வேகமாகப் போனால்  பரவாயில்லையே என்றிருக்கும். வண்டி நகர எல்லையைத் தாண்டி வேகம் பிடித்த
பின்புதான், அப்பாடா என்று நிமமதியாக இருக்கும். முதல் ஒரு
மணி நேர அவஸ்தை நம்மைவிட்டுச் சென்றிருக்கும். அதுபோலத்
தான்  சுயபுத்திக்காலமும். சுயபுத்தி முடிந்து, அதேகிரகத்தின்
மகாதிசையில், அடுத்த கிரகத்தின் புத்தி வந்தால், வண்டி  வேகம்
பிடிக்கும். பலன்களும் நமக்குக் கிடைக்கத் துவங்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.84
சிவராமச்சந்திர ஐயர்,
   
Anbulla Ayyah avarkalukku,
Oru grahathukku irandu veedugal anal  ettam idutthil irukkum athey graham nanmai cheyyathu enbathu  unmaiya.udaranam:vrushabha lagnam.1 @6 lords sukran lagnathipathy 6kku ettil irukkar.appadiyanal dhanur lagnam  guru ettil ucham.guru nallathaiye cheyvvar enru koorukireerkal.vilakkam thevai. nanri
s.r.iyer/////

இரண்டு வீடுகள் உள்ள கிரகங்கள் ஐந்து.
மேஷ லக்கினத்திற்கு, விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய்.
ரிஷப, துலா லக்கினங்களுக்கு அதிபதி சுக்கிரன்.
மிதுன, கன்னி லக்கினங்களுக்கு அதிபதி புதன்
மீன, தனுசு லக்கினங்களுக்கு அதிபதி குரு
மகர, கும்ப லக்கினங்களுக்கு அதிபதி சனி
கடக லக்கினத்திற்கு அதிபதி சந்திரன்
சிம்ம லக்கினத்திற்கு அதிபதி சூரியன்

சிலருக்கு மட்டுமே 6, 8, 12ஆம் இடங்கள் எப்படி சொந்த வீடாக அமையும். உதாரணத்திற்கு மேஷ லக்கின  செவ்வாய், விருச்சிகத்தில் இருந்தால்
(8ஆம் இடம்) அது அவருக்கு சொந்த வீடு. துலா லக்கினச் சுக்கிரன்,
ரிஷபத்தில் இருந்தால் அது அவருக்கு சொந்த வீடு. அதுபோல
இருவருக்கும் 6ஆம் இடமும் சொந்த இடமே!.

மிதுன புதனுக்கு 4ஆம் வீடும், கன்னி புதனுக்கு 10ஆம் வீடும் சொந்த
வீடுகள். மற்றபடி வேறு எந்த இடமும்   சொந்த இடமாகாது. குரு
பகவானுக்கு மீனத்தில் இருந்து 10ஆம் வீடும், தனுசுவில் இருந்து
4ஆம் வீடும் சொந்த   வீடு. வேறு இடங்கள் சொந்த வீடாகாது.

கும்ப சனிக்கு அதன் 12ஆம் வீடான மகரம், மட்டுமே சொந்த வீடு

கடகச் சந்திரனுக்கும், சிம்மச் சூரியனுக்கும் தங்கள் லக்கினத்தைத்
தவிர வேறு சொந்த இடம் எதுவும் இல்லை.

6, 8 & 12ஆம் இடங்கள் தீய இடங்கள். (inimical places) அங்கே அமரும் லக்கினாதிபதிகள் ஜாதகனுக்கு உரிய   நன்மையைச் செய்ய
மாட்டார்கள். சொந்த வீடாக இருந்தாலும் செய்ய மாட்டார்கள்.
உரிய எனும்  சொல்லைக் கவனிக்கவும். ஜாதகன் அத்தனைக்கும்
எதிர் நீச்சல் போட வேண்டியதாக இருக்கும்.

ஆட்சி வீடுகள் = சொந்த வீடுகள். இங்கே அமரும் கிரகங்கள்
அதிகாரத்துடன் இருக்கும். உச்ச வீடுகள்:  மாமியார் வீடுகள்
எனலாம். இங்கே சர்வ அதிகாரத்துடன் இருக்கும்.நட்பு வீடுகள்: விருந்தினராகத் தங்கும் வீடு. அதற்குரிய செல்வாக்கு மட்டும்
இருக்கும் 6, 8 & 12 பகை வீடுகள் பாம்புகள் அதிகமாக இருக்கும்
வனம்.  இங்கே அமரும் கிரகங்கள் ஜாதகனுக்கு உரிய பலனைத்
தரமுடியாமல் இருக்க நேரிடும். நீச வீடுகள்: நீரில்லா
பாலைவனம். அங்கே கிரகங்கள் எப்படி இருக்க நேரிடும் என்பதை
உங்கள் கற்பனைக்கே  விட்டு விடுகிறேன்!  (ஒரு உதாரணத்திற்காக இவற்றைச் சொல்லியிருக்கிறேன்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.85
S. மணிகண்டன்.
நெய்வேலி
   
திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு,
எனக்கு ஒரு ஐயம் எனது மனைவி பெயரில், தொழில் செய்யும் போது யாருடைய ஜாதகப்படி இலாபம் வரும்  என விளக்கவும். எனது ஜாதப்படி தொழில் தெரிந்து மனைவி ஜாதப்படி லாபம் வரும் எனில் அப்படி
செய்லாமா நடைமுறையில் பலனளிக்குமா என தெரியப்படுத்தவும். ஒரு குடும்பத்தில் மனைவி ஜாதகம் நன்றாக  இருந்து கணவர் ஜாதகம் நன்றாக இல்லாவிட்டால் யாருடைய ஜாதகப்படி பலன்கள் அதிகம் நடைபெறும்?

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் நட்சத்திரத்தில்
இருந்து, அவளுக்குப் பார்க்கும் வரனின்  நட்சத்திரம், அவளுடைய நட்சத்திரத்தில் இருந்து ஏழு நட்சத்திரங்கள் தள்ளி இருக்க வேண்டும், என்பதுதான் முதல் விதி. அது எதற்காக என்றால், இருவருக்கும் ஒரே நேரத்தில் ஏழரைச் சனி, அஷ்டார்த்த சனி,  அஷ்டமச்சனி என்று
சனீஷ்வரனின் கோள்ச்சார உபத்திரவங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் இருவருக்கும் வந்து  படுத்தி  எடுக்கக்கூடாது என்பதற்காக. ஒருவருக்கு முடிந்து அடுத்தவருக்கு வந்தால், இருவரில் ஒருவர்  அடுத்தவருக்கு உதவியாக இருப்பார் என்பதற்காக!

வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் டைபாய்டு காய்ச்சல் வந்து
படுத்தால் எப்படி இருக்கும். யாருக்கு யார்  மருந்து கொடுப்பார்கள்,
கஞ்சி காய்ச்சிக்கொடுப்பார்கள்? கற்பனை செய்து பாருங்கள்.

இருவரில் ஒருவரின் ஜாதகம் ரயிலாக இருக்கும், அடுத்தவருடையது தண்டவாளமாக இருக்கும். இரண்டும்  ரயிலாக இருந்தால் என்ன ஆகும்? வண்டி எப்படி ஓடும்?

சில வீடுகளில் கணவன் ரயிலாக இருப்பான். சில வீடுகளில் மனைவி ரயிலாக இருப்பான். ஒருவரை வைத்து,  அடுததவருடைய வாழ்க்கை ஓடும். இறைவன் இரண்டு ரயில்களை எப்போதுமே ஜோடி சேர்ப்பதில்லை. அதை  மனதில் வையுங்கள்.

மனைவியின் ஜாதகம் அதிர்ஷ்டமுடையதாக இருந்து, நீங்கள் அவர் பெயரில் வியாபாரம் செய்தால், நிச்சயம்  அவருடைய ஜாதகத்திற்காக லாபம் வரும். மனைவியின் தயவில் நீங்கள் குளிர்காயலாம்!!!

விளக்கம் போதுமா?
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.86
BR. நாகராஜன்

Ayya,
general question -

In some sites, it is mentioned that Raghu is exalted in Rishaba...In some other Raghu is exalted in other place [exactly i don't know the place].... why is this contradiction?  but for all other planets Ucchha or Neecha is  defined in all sites only one place properly..////////

குழப்பம் உங்களிடம்தான். நீங்கள் பாடங்களை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. Ucchha or Neecha  is defined in all sites only one place properly..என்று நீங்களே குறிப்பிட்டு உள்ளீர்கள். பிறகு அதற்கு
முந்தைய வரியில் வரும் why is this contradiction? எப்படி வந்தது.
அதைத் தெளிவு படுத்துங்கள்.

ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு இல்லை. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக ஆக்கிக் கொள்வார்கள்.  இருவருக்கும் உச்ச வீடு விருச்சிகம். நீச வீடு ரிஷபம். இதை மனதில் பெவிகால் போட்டு ஒட்டுங்கள்.

பழைய பாடங்களை எல்லாம் ஒழுங்காகப் படியுங்கள். பிறகு கேள்விகளைக் கேளுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

31 comments:

  1. சில கேள்விகள் கேள்வியும் நானே பதிலும் நானே வகையில் உள்ளன.தெரிந்ததையே வலிந்து கேட்பது போல் தோன்றுகின்றன.எப்படியோ இலக்கு 100 வந்து கொண்டு இருக்கிறது என்பது மன மகிழ்ச்சியைத் தருகிறது.

    ReplyDelete
  2. nan magara lagnam ,guru with kethu in 6th house, sani with moon in 10th house, is it veparetha rajayokam ?

    ReplyDelete
  3. அய்யா,

    கேள்வி பதில் பகுதிக்கு நீங்கள் தலைப்பு வைக்கும் விதமே தனி சிறப்பு. இன்றைய தலைப்பு மிக அமோகம் .

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  4. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.24
    இன்றைய கேள்வி - பதில்கள் மிகவும் உபயோகமாக
    உள்ளது.
    நன்றி !
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி
    2010-10-04

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா!

    சில சமயம் தாங்கள் அனைத்தும் தெரிந்து இருந்தும் (ஜாதகத்தை பற்றி)
    ஒரு எதார்த்தமான ஆசிரியராக பதில் சொல்லுவது பெரிய குழப்பம் ஆக உள்ளது.

    ( மின்னஞ்சல் எண்.82 pathil.)


    ஒன்றுமே புரிய மாட்டேன் என்கின்றது ஐயா.

    கவனிக்கவும்!
    இது ஜோதிட வகுப்பு, தாங்களோ வகுப்பு ஆசிரியர்! ஜோதிடத்திற்கு தான் முக்கியம் தரவேண்டும் ஆனால், வகுப்பறைக்கு வந்து போகும் ஆசிரியர் ( மற்றபாடக்களுக்கு
    போதிக்க வரும் ஆசான் )போல பதில்
    சொல்லுகின்றீர்கள்.

    உதாரணதிற்கு ஒருவனுக்கு ஏழு அரை சனி நடக்கு என்றால் அவனுடைய சனி திசைனாதனால் அவன் என்ன என்ன பாடு படவேண்டுமோ அவை எல்லாவற்றையும் படுகின்றான். இதில் அவனை குறையை சொல்லுவது எந்தவகையில் ஐயா நியாயம்.
    { துரியோதனனை நினைத்து பிதாமகன் பீஷ்மர் கவலை அடைந்ததை போல இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம்)

    மற்றவர்களின் நிலைப்பாடு வேறு ஆனால், தாங்களோ தங்களுக்கு தெரிந்த ஜோதிடத்தை போதிக்கும் ஆசிரியர் அல்லவா?

    இங்கு தங்களை குறை கூறும் நோக்கில் கேள்வி கேட்டவில்லை ஐயா

    பல வருடகாலங்களாக மிகவும் யாம் வருந்துவது உண்டு எமது தகப்பனாரை நினைத்து.ஜோதிடம் நன்றாக அறிந்து வைத்து இருந்த தந்தை கூட நமது கால நேரங்களுக்கு ஏற்ற்றார் போல கொஞ்சமாவது அனுசரித்து போகி இருந்தால் இன்னும் நன்றாக வந்து இருப்போம். நாமும் கஷ்டபட்ட காலத்தில் பட்டத்தை போல் அல்லாமல் கொஞ்சம் ஆவது சந்தொசமாவது இருந்து இருப்போம் என்று................. ஐயா

    ReplyDelete
  6. வணக்கம். தாங்கள் நடத்தும் பாடங்களை ஆர்வத்துடன் கற்று வருகிறேன்.
    இங்கே கேள்வி 83.1‍‍ றின் பதில் எனக்குப் புரியவில்லை. மீண்டும் விளக்க வேண்டுகிறேன்.

    நன்றி.

    என்றும் அன்புடன்,
    பிரகாஷ் சேதுராமன்

    ReplyDelete
  7. சார்,
    வணக்கம் இன்று கேள்வி பதில் மிகவும் நன்றாகயிருந்தது ரொம்ப நன்றி பஸ் ரொம்ப வேகமா போனால் கூட சந்தோஷமடைய மாட்டோம் எப்போ வீடு போய் சேருவோம்(அடையுமிடம்) என்று நம்போ நினைத்துக்கொள்வோம்.
    ரொம்ப ஏவுகணை மாத்ரி உதாரணத்தை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
    கிருஷணன் ச்கோத்ர,
    உங்கள் வாரமல்ர் ரொம்ப நல்லாயிருந்தது,நீங்க ரொம்ப அழாகயிருக்கிறீங்க‌
    கடக லக்னம் கடக ராசி அதிலேயே சந்திரன் ஆட்சி ஜாதகம் சும்மா என்று சொல்லக்கூடாது லக்கனாதிபதி 7ல் பார்வை அவங்களும் ரொம்ப அழகாயிருக்கிறாங்க. பொதுவா நீங்க புண்ணிய பிறவிதான். அம்மா அப்பா
    அழகாயிருக்கிறங்க.
    சுந்தரி.

    ReplyDelete
  8. எனது கேள்விகளுக்கு விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

    சு. மணிகண்டன்
    நெய்வேலி.

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா,
    இன்றைய கேள்வி பதில் மிகவும் பயனுள்ளாதாக இருந்தது.
    சிம்ம லக்கனதுக்கு சந்திரன்,சனி பகவானும் கடகத்தில் இருந்தால்
    வி.ரா.யோகம் என்ரு வகுப்பரை பாடத்தில் வந்துள்ளது,
    சந்திர பகவானுக்கு பதில் சுக்கிரன்+சனி பகவான் கடகத்தில் இருந்தால்
    வி.ரா.யோகமாகுமா? நன்றியுடன் அரிபாய்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. Dear Sir

    Paadam Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  11. Dear Sir,

    Thanks for the reply, I have married 5 year ago, got son 3 years old. Just for the Curiosity i asked. Any way i have gone thru earlier lessions, got clarified little bit.
    Lession :

    வில்லனே கதாநாயகன் வேலையை எப்போது செய்வான்?
    துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு, சனி 4ஆம் மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு உரியவன். அந்த லக்கின ஜாதகனுக்கு கல்விக்கும், அறிவிற்கும் உரியவனாவான். அந்த இரண்டு இடங்களையும், அவற்றிற்குரிய பலன்களையும் நெறிப்படுத்தி ஜாதகனை மேன்மைப் படுத்துபவன் அவன். ஆனால் ஜாதகத்தில் சாதாரண நிலையில் அமர்ந்திருக்கும் சனி, அவற்றை அள்ளிக் கொடுக்க மாட்டான். பங்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பான். (Ration shopகளில் நமக்குப் பொருட்கள் கிடைப்பதைப் போல அவைகள் கிடைக்கும்)


    When ever you have time please send me the e-mail personally.

    Thanks again
    Sundar.K
    Malaysia

    ReplyDelete
  12. கேள்வி பதில் எனக்கு இருந்த சில சந்தேகத்திற்கு பதில் அலளித்தது போல இருந்தது. நன்றீ.

    ReplyDelete
  13. அய்யா

    பாடம் அருமை.

    அப்புறம் ஒரு ஜெனரல் டவுட் - ஏலமிடம் ரிஷப ராகு (விருச்சிக லக்னம்) - நீச ராகு என்பதால் பாஸ்ட் பால் போடுவார?

    எங்கோ படித்தது - செவ்வாய் நீசம் பெற்று ஏலமிடத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை என்று...

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  14. அய்யா

    மன்னிக்கவும் இன்னொரு ஜெனரல் டவுட் - மிதுன லக்னத்திற்கு சனி பகவான் நன்மை செய்வபவரா அல்லது தீமை செய்பவரா ? (எட்டாமிடம், ஒன்பதாமிடம் அதிபதி ஆவதால்)

    எட்டாம் அதிபதி எப்போதும் தீமை செய்பவர் என்று படித்திருக்கிரேன்.

    ஒன்பதாம் அதிபதி எப்போதும் நன்மை செய்பவர் என்று படித்திருக்கிரேன்.

    குழுப்பமாக உள்ளது

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  15. /////kmr.krishnan said...
    சில கேள்விகள் கேள்வியும் நானே பதிலும் நானே வகையில் உள்ளன.தெரிந்ததையே வலிந்து கேட்பது போல்

    தோன்றுகின்றன.எப்படியோ இலக்கு 100 வந்து கொண்டு இருக்கிறது என்பது மன மகிழ்ச்சியைத் தருகிறது.////

    கேள்வியும் நானே பதிலும் நானே இல்லை. மாணவர்கள் கேட்ட கேள்விகள்தான்! எது அப்படி உள்ளது என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள். சம்பந்தப்பட்ட கேள்வி கேட்டவரின் மின்னஞ்சலை - மின்னஞ்சல் ஐ.டி யுடன் அப்படியே உங்களுக்குப் forward செய்கிறேன்! நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. /////arthanari said...
    nan magara lagnam ,guru with kethu in 6th house, sani with moon in 10th house, is it veparetha rajayokam?/////

    இல்லை!

    ReplyDelete
  17. ////venkatesan.P said...
    அய்யா,
    கேள்வி பதில் பகுதிக்கு நீங்கள் தலைப்பு வைக்கும் விதமே தனிச் சிறப்பு. இன்றைய தலைப்பு மிக

    அமோகம்
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி வெங்கடேசன்!

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.24
    இன்றைய கேள்வி - பதில்கள் மிகவும் உபயோகமாக
    உள்ளது.
    நன்றி !
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  20. ////kannan said...
    வணக்கம் ஐயா! சில சமயம் தாங்கள் அனைத்தும் தெரிந்து இருந்தும் (ஜாதகத்தை பற்றி)
    ஒரு எதார்த்தமான ஆசிரியராக பதில் சொல்லுவது பெரிய குழப்பம் ஆக உள்ளது.
    ( மின்னஞ்சல் எண்.82 pathil.)
    ஒன்றுமே புரிய மாட்டேன் என்கின்றது ஐயா.
    கவனிக்கவும்!
    இது ஜோதிட வகுப்பு, தாங்களோ வகுப்பு ஆசிரியர்! ஜோதிடத்திற்கு தான் முக்கியம் தரவேண்டும் ஆனால்,

    வகுப்பறைக்கு வந்து போகும் ஆசிரியர் ( மற்றபாடக்களுக்கு போதிக்க வரும் ஆசான் )போல பதில்
    சொல்லுகின்றீர்கள்./////

    ஜாதகத்தை அனுப்பி, ஆயுள் ஸ்தாத்தைப் பார்த்துப் பதில் சொல்லச் சொல்லியிருக்கிறார். இதற்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சொல்லுங்கள் கண்ணன்!

    ReplyDelete
  21. ////Che Guevera said...
    வணக்கம். தாங்கள் நடத்தும் பாடங்களை ஆர்வத்துடன் கற்று வருகிறேன்.
    இங்கே கேள்வி 83.1‍‍ றின் பதில் எனக்குப் புரியவில்லை. மீண்டும் விளக்க வேண்டுகிறேன்.
    நன்றி.
    என்றும் அன்புடன்,
    பிரகாஷ் சேதுராமன்/////

    பஞ்சாங்கம் இருக்கிறதா? இல்லை என்றால் கடையில் ஒன்றை வாங்கிவைத்துக் கொண்டு பாருங்கள் புரியும்!

    ReplyDelete
  22. /////sundari said...
    சார்,
    வணக்கம் இன்று கேள்வி பதில் மிகவும் நன்றாகயிருந்தது ரொம்ப நன்றி பஸ் ரொம்ப வேகமா போனால் கூட

    சந்தோஷமடைய மாட்டோம் எப்போ வீடு போய் சேருவோம்(அடையுமிடம்) என்று நாம் நினைத்துக்கொள்வோம்.
    ரொம்ப ஏவுகணை மாத்ரி உதாரணத்தை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
    கிருஷணன் சகோதர,
    உங்கள் வாரமலர் ரொம்ப நல்லாயிருந்தது,நீங்க ரொம்ப அழாகயிருக்கிறீங்க‌
    கடக லக்னம் கடக ராசி அதிலேயே சந்திரன் ஆட்சி ஜாதகம் சும்மா என்று சொல்லக்கூடாது லக்கனாதிபதி 7ல் பார்வை அவங்களும் ரொம்ப அழகாயிருக்கிறாங்க. பொதுவா நீங்க புண்ணிய பிறவிதான். அம்மா அப்பா
    அழகாயிருக்கிறங்க.
    சுந்தரி./////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. /////MANI said...
    எனது கேள்விகளுக்கு விளக்கம் அளித்தமைக்கு நன்றி.
    சு. மணிகண்டன்
    நெய்வேலி.////

    அதற்காக நன்றியா? நல்லது!

    ReplyDelete
  24. ///aryboy said...
    வணக்கம் அய்யா,
    இன்றைய கேள்வி பதில் மிகவும் பயனுள்ளாதாக இருந்தது.
    சிம்ம லக்கனதுக்கு சந்திரன்,சனி பகவானும் கடகத்தில் இருந்தால்
    வி.ரா.யோகம் என்று வகுப்பரை பாடத்தில் வந்துள்ளது,
    சந்திர பகவானுக்கு பதில் சுக்கிரன்+சனி பகவான் கடகத்தில் இருந்தால்
    வி.ரா.யோகமாகுமா? நன்றியுடன் அரிபாய்.
    வாழ்க வளமுடன்./////

    சுக்கிரன் 3ஆம் இடத்திற்கும் உரியவன். வரும் அரிபாய்!

    ReplyDelete
  25. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Paadam Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  26. ////sundarkmy said...
    Dear Sir,
    Thanks for the reply, I have married 5 year ago, got son 3 years old. Just for the Curiosity i asked. Any

    way i have gone thru earlier lessions, got clarified little bit.
    Lession :
    வில்லனே கதாநாயகன் வேலையை எப்போது செய்வான்?
    துலா லக்கினத்திற்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு, சனி 4ஆம் மற்றும் ஐந்தாம்

    வீடுகளுக்கு உரியவன். அந்த லக்கின ஜாதகனுக்கு கல்விக்கும், அறிவிற்கும் உரியவனாவான். அந்த இரண்டு

    இடங்களையும், அவற்றிற்குரிய பலன்களையும் நெறிப்படுத்தி ஜாதகனை மேன்மைப் படுத்துபவன் அவன். ஆனால்

    ஜாதகத்தில் சாதாரண நிலையில் அமர்ந்திருக்கும் சனி, அவற்றை அள்ளிக் கொடுக்க மாட்டான். பங்கிட்டுக்

    கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பான். (Ration shopகளில் நமக்குப் பொருட்கள் கிடைப்பதைப் போல அவைகள் கிடைக்கும்)
    When ever you have time please send me the e-mail personally.
    Thanks again
    Sundar.K
    Malaysia/////

    நல்லது. நன்றி சுந்தர்!

    ReplyDelete
  27. /////s.adimoulame said...
    கேள்வி பதில் எனக்கு இருந்த சில சந்தேகத்திற்கு பதில் அளித்தது போல இருந்தது. நன்றி.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. bhuvanar said...
    அய்யா
    பாடம் அருமை.
    அப்புறம் ஒரு ஜெனரல் டவுட் - ஏழாமிடம் ரிஷப ராகு (விருச்சிக லக்னம்) - நீச ராகு என்பதால் பாஸ்ட் பால் போடுவாரா? எங்கோ படித்தது - செவ்வாய் நீசம் பெற்று ஏலமிடத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை என்று...
    நன்றி
    பாண்டியன்//////

    நீசம் என்றால் Form இல் இலை என்று பொருள். ஆகவே போடமாட்டார்!

    ReplyDelete
  29. bhuvanar said...
    அய்யா
    மன்னிக்கவும் இன்னொரு ஜெனரல் டவுட் - மிதுன லக்னத்திற்கு சனி பகவான் நன்மை செய்வபவரா அல்லது

    தீமை செய்பவரா ? (எட்டாமிடம், ஒன்பதாமிடம் அதிபதி ஆவதால்)
    எட்டாம் அதிபதி எப்போதும் தீமை செய்பவர் என்று படித்திருக்கிறேன்.
    ஒன்பதாம் அதிபதி எப்போதும் நன்மை செய்பவர் என்று படித்திருக்கிறேன்
    குழுப்பமாக உள்ளது
    நன்றி
    பாண்டியன்/////

    Mixed results

    ReplyDelete
  30. தசா பற்றி நிறைய சந்தேகங்கள் பலரின் கேள்விகளில் எழுவதால்
    தேவையில்லாத சிரமக் கணக்குகளைத் தவிர்க்கத்தான் சாப்ட்வேர் உபயோகம்..JH பயன்படுத்துவது நல்லது..
    ஆசிரியர் ஒரு uniformity யை எல்லோருக்கும் அறிவுறுத்துவது நல்லது என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  31. உள்ளேன் ஐயா

    இந்த அளவிற்கு விஷயம் பெரியதாக ஆகி இருக்கும் என்று தெரியாது என்பதனால் ஜூட் :-)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com