2.10.10

மாதங்களில் அவர் மார்கழி!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாதங்களில் அவர் மார்கழி!

இன்றைய இளைஞர் மலரை, நம் வகுப்பறை மாணவி ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது.

“நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆசான். அவனிடம் கற்றுக்
கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும். கற்றுக்கொள்” என்பது ஒரு ஞானியின் வாக்கு. கட்டுரையாளர் தன்னுடைய அன்பு மாமனார் அவர்களிடம் தான்
கற்றுக் கொண்டவற்றைப் பட்டியலிட்டுள்ளார். அனைவரும் அதைப்
படித்துப் பயனடைய வேண்டுகிறேன்

அவருடைய பெயர்: திருமதி ஸ்ரீதேவி என்ற கல்பனா செல்வராஜ்
கல்வித்தகுதி: பொறியியல் பட்டதாரி
வசிக்கும் இடம்: கோவை
வயது: முப்பத்தொன்பது வசந்தங்களைக் கண்டவர்
புகைப்படம்: பதிவின் நிறைவுப் பகுதியில் உள்ளது
-----------------------------------------------------------
Over to her posting
______________________________________
மாதங்களில் அவர் மார்கழி! மணிகளிலே அவர் மாணிக்கம்!

என் மாமனார் திரு.நாராயணசாமி, பள்ளி படிப்பை முடித்தவுடன் PSG Industrial Institute இல் வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறும் போது Pump Assembly Superintendent ஆக ஓய்வு பெற்றார். அவர் அங்கு வேலை செய்யும் போது
நான் PSG Polytechnic இல் Diploma பயின்று வந்தேன். என் Workshop training 
இன் போது இவரிடம் தான்  ரிப்போர்ட் Sign வாங்க வேண்டும். வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். எங்கள் Sandwich Students
இவருக்கு "மாமா " என புனை பேர் வைத்து இருந்தோம். பின்னாளில்
அவரே எனக்கு மாமனார் ஆனது தான்  ஆச்சர்யம்!!!.

என் திருமணத்திற்கு வந்த என் கிளாஸ் மேட் அனைவரும்
"மாமாவா உன் மாமனார் ?" என துக்கம் விசாரித்தது  தனிக் கதை .

வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும், வீட்லேயே Workshop வைத்து , என் கணவரையும் வேலைக்கு  அனுப்பாமல் சொந்தத் தொழில் செய்ய வைத்தார்.

வேலை விசயத்தில் மிகவும் கண்டிப்பானவர். குறிப்பாக நேரம் தவறாதவர். அவர் நெற்றியில் நாமத்துடன்  வெள்ளை வேட்டி , கை வைத்த பனியனுடன் Workshop வாசலில் இருக்கிறார் என்றால் காலை மணி சரியாக 7 எனச் சொல்லலாம். ஒரு வேலையை செய்யும் முறை பற்றி தெளிவாக சொல்லி குடுப்பார். அவர் கடைசி வரை வேலை செய்தார். செய்யும் தொழிலே
தெய்வம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருந்தார்.

வீட்டுக்கு தளம் போடுவது, தொட்டி கட்டுவது, மரக் கதவு, இரும்புக் கதவு செய்வது போன்ற அனைத்து  வேலைகளையும் அவரே செய்வார். எங்கள் வீடுகளில் இன்னும் அவர் செய்த இரும்பு Compund Gate தான்

உள்ளது. எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு முடி திருத்தும் பணியை கூட  அழகாகச் செய்வார்.

அவர் கை வண்ணம் எங்கள் சமையல் அறையையும் அலங்கரிக்கும். Cooker, பால் Cooker கை பிடி உடைந்தால் புதிய bakelite கைப்பிடி மாற்ற விட மாட்டார். தானே மர கைப்பிடி செய்து மாற்றுவார். கத்தி , இரும்பு உரல் , தோசைக் கல் அனைத்தும் அவர் கைவண்ணம் தான்.

சமையலில் அவர் நள மகாராஜா தான் . சூப்பரா சமைப்பார் . யாருக்காகவும் காத்திருக்காமல் அவர் சமைக்க ஆரம்பித்து விடுவார். என்ன அவர்
சமையலில் முருங்கைகாய் முக்கிய இடம் பிடிக்கும். தன் பசியை
மட்டுமன்றி அனைவரின் பசி , ருசி பற்றி அறிந்தவர். பணி , பள்ளியில்
இருந்து திரும்பும் போது மாலை உணவு தயாராக  இருக்கும். நாங்கள்
தனிக் குடித்தனம்  இருந்தாலும் அவர் செய்யும் மாலை உணவை
எங்களுக்குத்  தவறாமல் கொடுத்து அனுப்புவார்.

மனைவிக்கு சுதந்திரம் அளிப்பதில் அவர் அர்த்தனரீஸ்வரர்.
வரவு , செலவுகளை சரியாகக் கணக்கு வைப்பதில் அவர் சித்ரகுப்தன்!
அவரின் சிக்கனத்தைப் பற்றித் தனிப் புத்தகமே எழுதலாம்!.
வாழ்வின் எளிமையைப் பற்றி அவரிடம்தான் கற்க வேண்டும்.
அவரிடம் நல்ல பெயர் வாங்குவது வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி 

பட்டம் பெறுவதற்கு சமம்.

மொத்தத்தில் அவர் “மலர்களில் ஒரு பிரம்ம கமலம் "
எங்கள் வீட்டின் சகலகலா வல்லவர் என்றால் அது சாட்சாத் என் மாமனாரைத்தான் குறிக்கும்.

இன்று அவர்  எங்களுடன் இல்லை என்றாலும் அவர் நினைவுகள்
பசுமையாய் அனைவர் மனதிலும் பதிந்து உள்ளது.
- ஆக்கம்: ஸ்ரீதேவி என்ற கல்பனா செல்வராஜ், பொறியாளர், கோயம்புத்தூர்
-------------------------------------------------------------------------------

கட்டுரையாளரின் படம் கிடைக்கவில்லை. 
உங்களுக்கு ஏமாற்றம் கூடாது என்பதற்காக 
இந்தப் படத்தைப்  போட்டிருக்கிறேன். 
இவர் பெயரும் ஸ்ரீதேவிதான்!
--------------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

26 comments:

  1. மாமனாரைப் புகழ்வதற்கும் மனம் வேண்டுமே. இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார் அவருடைய 'மாமா'. அவரிடமிருந்து மருமகள் அனைத்தையும் கற்றுக்கொண்டாரா என்பதைச் சொல்லவில்லையே. நல்ல விறுவிறுப்புடன் கதை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. வாழ்க.

    ReplyDelete
  2. /////Thanjavooraan said...
    மாமனாரைப் புகழ்வதற்கும் மனம் வேண்டுமே. இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார் அவருடைய 'மாமா'. அவரிடமிருந்து மருமகள் அனைத்தையும் கற்றுக்கொண்டாரா என்பதைச் சொல்லவில்லையே. நல்ல விறுவிறுப்புடன் கதை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. வாழ்க.//////

    கட்டுரை ஆசிரியர் தன்னுடைய மாமாவின் சமையலைக்கூடப் புகழ்ந்திருக்கிறார் எனும்போது, அனைத்தையும் கற்றுகொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. கட்டுரையுடன் வந்த கடிதத்தில், தன்னுடைய மாமாவை “சகலகலா வல்லவர்” என்று புகழ்ந்திருக்கிறார். வாழ்க அவருடைய நல்ல மனம். இளைய தலைமுறையினர், இதை ஒரு வழிகட்டுதலாக எழுத்துக்கொள்ள வேண்டும்! நன்றி!

    ReplyDelete
  3. வாத்தியார் இன்று காலை, 6:00 மணிக்கு வெளியூர்ப் பயணம். நாளை மதியம்தான் திரும்புவார். இந்தக் கட்டுரைக்கு வரும் பின்னூட்டங்களும், அதற்கான பதில்களும் நாளை மதியம் 2:00 மணிக்குமேல் வெளியாகும்!

    நாளைய வாரமலர் வழக்கம்போல வெளிவரும். அதை அலங்கரிப்பவர், தஞ்சைப் பெரியவர் நம்பர் 2.
    அது நாளை காலையில் வெளியாகும். வாத்தியார் வெளியூர் சென்றாலும், கூகுள் ஆண்டவர் அதைத் தன்னிச்சையாக வலையேற்றிவிடுவார். அவரிடம் சொல்லியிருக்கிறது.

    ReplyDelete
  4. இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாகத் திகழ்ந்திருக்கிறார்
    பாராட்டுக்குரியது.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. அய்யா,

    இந்தக் காலத்தில் தனது மாமனாரை ஒரு மருமகள் இந்த அளவிற்கு புகழும் போது, நாட்டில் இன்னும் ஒரு சில பெண்கள் மாமனாரையும் மாமியாரையும் புரிந்து கொள்கின்றனர் என்று தெரிய வரும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
    இது போன்றே எல்லா பெண்களும் தங்களது மாமனார் மாமியாரை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  6. சகோதரியின் கட்டுரை பெரும்பாலும் எனது தந்தையை நினைவு படுத்துகிறது
    எஞனியரிங் படிக்காமலே (கல்வி B.sc maths தொழில் auditing)அனைத்து நுட்பமான வேலைகளையும் தானெ செய்யக் கூடிய வல்லமை படைத்தவர். ஆனால் சில‌ வித்யாச‌ஙகள்,

    ஒரு வ‌ய‌து குழ‌ந்தை முத‌ல் 90 வ‌ய‌து கிழ‌வ‌ர் வ‌ரை எல்லோர‌து பிறந்த‌ நாட்களையும் நியாப‌க‌ம் வைத்துக்கொண்டு காலை 6.30 மணீ க்கு டாண் என்று தொலைபேசி மூல‌ம் வாழ்த்து தெரிவிக்கும் முத‌ல் நபர் அவராக‌த்தான் இருக்கும்.

    எல்லா சொந்தக் கார‌ர்களூக்கும் மிக‌ நெருக்க‌மான (நெசிக்க‌ப‌டுபவ‌ர்)70 வ‌து க‌ல்யாண‌ நாளை கொண்டாட‌ விருக்கும் பார்வ‌தி பரமேசவரன்
    (தாயின் பெயர் ப‌ராச‌க்தி ‍தந்தையின் பெய‌ர் சொக்க‌லிங்க‌ம்)
    அவ‌ர்க‌ள‌து ம‌க‌ளாக‌ப் பிறந்த‌தில் பெருமை கொள்ளும்

    ச‌ந்த‌ன‌க்குழ‌லி நாக‌ர‌ஜ‌ன்

    ReplyDelete
  7. உள்ளேன் ஐயா!

    சகோதரி!
    உம்மையிலே நெஞ்சை தொட்டு விட்டீர்களாக்கும்!
    என்ன கண்ணு!
    யான் சொல்றது சரிதானே!

    உங்களை மாணவியாகவும் பார்த்துள்ளார் படிக்கும் காலத்தில்
    அதே சமயம்!
    மகளாகவும் பார்த்துள்ளார் மருமகள் ஆன காலத்தில்
    ஆக! எவருக்கும் கிடைக்காத ஒரு வாழ்க்கை உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது என்றால் அது தான் சரி

    இதனிலும், தாங்கள் உவமை படுத்திய விதம் மிகவும் அருமை.

    ஒரு பொறியாளர்! தனி தமிழ் புலமையுடன் தனித்தன்மை காண்பிப்பது சிறப்பு தானே!

    ReplyDelete
  8. உள்ளேன் ஐயா!

    சகோதரி!
    உம்மையிலே நெஞ்சை தொட்டு விட்டீர்களாக்கும்!
    என்ன கண்ணு!
    யான் சொல்றது சரிதானே!

    உங்களை மாணவியாகவும் பார்த்துள்ளார் படிக்கும் காலத்தில்
    அதே சமயம்!
    மகளாகவும் பார்த்துள்ளார் மருமகள் ஆன காலத்தில்

    ஆக! எவருக்கும் கிடைக்காத ஒரு வாழ்க்கை உங்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது என்றால் அது தான் சரி

    இதனிலும், தாங்கள் உவமை படுத்திய விதம் மிகவும் அருமை.

    ஒரு பொறியாளர்! தனி தமிழ் புலமையுடன் தனித்தன்மை காண்பிப்பது சிறப்பு தானே!

    ReplyDelete
  9. அற்புதமான நினைவு.....
    இவரைப் போன்ற மருமகள் கிடைக்க அந்த மாமனார் கொடுத்து வைத்தவர்.
    திறமையும், நல்ல குணமும் இருந்தாலும், அதைப் புரிந்து கொள்ளும் உறவுகள் கிடைக்கப் பெறுவதில் தான் உண்மையான சந்தோசமே!
    "மாமனாரை மாமியாரை மதிக்கணும் - உன்னை
    மாலை இட்டக் கணவனையே துதிக்கணும்......"
    இந்த பொன் மொழிகளெல்லாம் உங்களைப் போன்ற குடும்ப விளக்குகளால் தான் பிரகாசிக்கப் படுகிறது.

    உங்கள் பெயருக்கும் செயலுக்கும் அத்தனைப் பொருத்தம்.. வாழ்த்துக்கள் சகோதிரி....

    ReplyDelete
  10. அற்புதமான கட்டுரை. கூர்ந்து கவனித்து அவரைபற்றி தெளிவாக மற்றும் உயர்வாக எழுதியது
    கட்டுரையாளரின் அறிவுத்திறனையும் பரந்த மனப்பான்மையையும் குறிக்கிறது
    "நெற்றியில் நாமம் வெள்ளை உடை அணிந்து காலையில் பயிற்சிக்கூடத்தில் நிற்கிறார் என்றால் மணி காலை 7 என்று அர்த்தம்"
    இப்படிப்பட்ட எம் குல பெரியோர்களால் தான் இப்போதுள்ள கோவை மாநகரம் உருவானதே.
    சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மொகலாய படையெடுப்பின் காரணமாக ஆந்திர மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து தெற்கு நோக்கி
    பயணித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடியமர்ந்து தமிழகத்தின் பல தொழில் சாம்ராஜ்யங்களை
    நிறுவியவர்கள், இவரை போன்று நேரம் தவறாமை, கடின உழைப்பு , மனித நேயம் மற்றும் தயாள குணம் கொண்டவர்கள்.
    இன்றைக்கு இவர்களின் வழித்தோன்றல்கள் உலகெங்கும் வியாபித்து வெற்றி கொடி நாட்டி வருவது
    இவர் போன்ற எம் முன்னோர்கள் செய்த புண்ணியங்களின் பலன் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
    எம் குல சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்.
    நந்தகோபால்

    ReplyDelete
  11. தன் மாமனாரை இவ்வளவாக போற்றி இருக்கிறார் என்றால் நிச்சயம் அவர் ஒரு நல்ல குடும்பத் தலைவராகத்தான் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது திண்ணம்.சுருக்கமாக எளிய நடையில் எழுதி இருக்கிறார்.மாமனாரிடம் இருந்து அவரும் நல்ல விசயங்களை கற்றிருக்கிறார் என்றால் நல்லது...

    ReplyDelete
  12. sir,
    what is LAL KITAB ? in astrology ?

    ReplyDelete
  13. வாழ்த்திய அனைவர்க்கும் மிக்க நன்றி.
    Thanjavooran sir, நான் அவரிடம் இருந்து சிக்கனத்தை தவிர முடிந்தவரை அனைத்தையும் கற்று கொண்டேன்.
    நடராஜன் சார் , இளைய தலைமுறை தெரிந்த கொள்ளவே இந்த பதிவை வகுப்பறையில் பதிவிட முயற்சி செய்தேன்.
    Venkatesan Sir, வரும் மருமகளுக்கு சற்றே விட்டு குடுத்தால் எல்லா பெண்களும் மாமியார் மெச்சிய மருமகளாக இருப்பார்கள்.

    ReplyDelete
  14. rajanblogs, அனைவரின் இல்லத்திலும் மனதிலும் நிச்சயம் ஒரு மாமனிதர்/ பெண்மணி இருப்பார்கள். தங்களின் மறுமொழிக்கு நன்றி.

    ReplyDelete
  15. கண்ணன் சார், எழுதுவதில் இன்னும் நான் LKG தான். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  16. Alasiam Sir, அனைவரையும் நிறை குறைகளுடன் அப்படியே ஏற்று கொண்டால் இல்லறம் ஒரு இனிய வரம்
    தான்.

    ReplyDelete
  17. Nandagopal Sir, மிக்க நன்றி. வருங்காலத்தில் நேரம் தவறாமை என்றால் என்ன என கேட்கும் நிலை வரலாம்.
    this is because of developing IT culture in coimbatore. ஆனால் அதையும் தாண்டி வெற்றி பெறும் நம் கோவை என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
  18. அருள் , என் மாமாவுக்கு பணிக்கு விடுப்பு எடுப்பது என்பது மிகவும் பிடிக்காத ஒன்று. அமாவாசை,கல்யாணம் , வரலக்ஷ்மி விரதம் என காரணங்களை கூறி விடுப்பு எடுத்தால் கடிந்து கொள்வார். எதுவயுனும் நீ பணிக்கு செல்வற்குமுன் கும்பிட்டுவிட்டு செல் என கூறுவார். இன்றுவரை நான் அதைதான் பின்பற்றுகிறேன்.
    1991 இல் நான் வாங்கிய சம்பளம் Rs.475/-. என் மாமியாரும்,கணவரும் பணிக்கு செல்ல வேண்டாம் என கூறிய போது, என் மாமா மட்டுமே நாம் இன்று நன்றாக உள்ளோம் நாளை உன் குழந்தைக்கு இதைவிட நல்ல வாழ்க்கை தர நீ விரும்பினால் அன்று பணிக்கு செல்லாததை நினைத்து நீ வருத்தம் அடைய கூடாது. முடிவு உன் கையில் என கூறி என்னை பணிக்கு அனுப்பினார். வாழ்க்கையில் ஒரு திருப்பம் அவரால் தான் எனக்கு கிடைத்தது. நன்றி .

    ReplyDelete
  19. Subbaiya Sir,

    thanks a lot for publishing my post. i have got more thing to write about my mama. but am very weak in tamil typing.thats y skipped a lot.
    We lost a good engineer in our house.
    once again thanks for ur encouragement by publishing my post and ur valid comment.

    ReplyDelete
  20. ஸ்ரீதேவி, நன்றாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. நன்றி...நல்லது சகோதரி...

    ReplyDelete
  22. எது எப்படியோ நீங்கள் உங்கள் மாமனாரை உயர்த்தி சொல்லி மாமியாரை டம்மியாக்கி விட்டீர்கள்..
    ஆனாலும் இப்படி மாமியாரை ஓரம்கட்டியிருக்க வேண்டாம்..
    பாவம் அந்தம்மா..
    அவுங்க படிச்சாக்க கோபப்படுவாங்கதானே?(அதுக்குத்தானே இந்தளவுக்கு பில்ட் அப் கொடுக்குறோம்..)

    ReplyDelete
  23. எங்கடா நம்ம மாப்புவோட சத்தத்தையே காணோமின்னு பாத்தா
    சரியான நேரத்தில் உள்ளே புகுந்து கலாய்ச்சிடீங்க இல்லே
    நீங்கெல்லாம் இல்லேன்னா சபை களைகட்டாதுங்கறது தெரிஞ்சதுதானே
    தெரியாமையா பெரியவங்க சொன்னாங்க minorwaal என்ன பண்ணினாலும்
    இந்த உலகம் உத்துப் பார்க்குமின்னு
    ஜமாயுங்க மாப்பு
    நந்தகோபால்

    ReplyDelete
  24. ஆனாலும் இப்படி மாமியாரை ஓரம்கட்டியிருக்க வேண்டாம்..
    பாவம் அந்தம்மா..
    அவுங்க படிச்சாக்க கோபப்படுவாங்கதானே?//

    தாங்கள் வந்த வேலை இனிதே முடிந்ததா மைனர்? நாராயண நாராயண‌

    ReplyDelete
  25. மாமூ..ஏதோ என்னாலே முடிஞ்சது..ஒரு சின்ன கலகம்..
    டெல்லி foreign மேடம் சொன்னாப்போலே கலகம் நன்மையில் முடிந்து ஸ்ரீதேவி அவர்கள் தன் பார்ட் 2 பதிவாக மாமியாரைப் பற்றி எழுதினால் சரிதானே?

    ReplyDelete
  26. Minorwaal said:
    மாமூ..ஏதோ என்னாலே முடிஞ்சது..ஒரு சின்ன கலகம்..
    டெல்லி foreign மேடம் சொன்னாப்போலே கலகம் நன்மையில் முடிந்து ஸ்ரீதேவி அவர்கள் தன் பார்ட் 2 பதிவாக மாமியாரைப் பற்றி எழுதினால் சரிதானே////

    மாப்பு
    பெண்களை பெண்களே புகழ்கிற அளவுக்கு
    நம்ம நாடு முன்னேறிடுச்சா என்ன
    ஸ்ரீதேவி மேடம் தான் இதுக்கு
    பதில் சொல்லும் வகையில் part - II
    போட்டு நம் வலைப்பதிவில் இன்னொரு
    நல்ல கட்டுரையை வழங்கனுமின்னு
    கேட்டுக்கொள்கிறேன்
    நந்தகோபால்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com