---------------------------------------------------------------------------------
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?
மனவளப் பாடம்
---------------------------------------------------------------------------
படத்தைப் பாருங்கள். படத்தில் உள்ள குடும்பத்தாரின் நிலைமையைப் பாருங்கள். உறங்குவதற்குப் போதிய இடமில்லை. இருந்தாலும் தங்கள் வீட்டுச் செல்லப் பிராணிகளான, பூனை, மற்றும் நாய்க்கும் தங்கள் படுக்கையில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.
வருண பகவான் வீட்டிற்குள் மழை நீரை விட்டுக்கொண்டிருக்கிறான். கூறை பழுதானது. தரை ஜில்லிடும். இருந்தாலும் இருப்பதை சரிசெய்து கொண்டு மகிழ்ச்சியுடன் உறங்குகிறார்கள்.
அவர்கள் முகத்தில் பூத்திருக்கும் மகிழ்ச்சியைப் பாருங்கள்.
இதுதான் வாழ்க்கையை எதிர்கொள்ளும் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத நிலைமையல்ல. இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வதுதான், மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியமாகும்
-------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
திருச்சி தேசீயக்கல்லூரிப் பேராசிரியர் திரு.இராதாகிருஷ்ணன் முன்பு ஒரு கூட்டத்தில் மகிழ்ச்சி என்பதைப் பற்றிக் கூறும் போது ஒரு கதை சொன்னார்.
ReplyDeleteஒரு லேவாதேவி கடையின் காசாளர் வங்கியில் இருந்து திரும்பும் போது 50 ரூபாய் கட்டு ஒன்றை கவனக்குறைவால் கீழே போட்டு விட்டுப் போய் விட்டார்.அந்தக்கட்டு புதியது. வரிசை எண் மாறாமல் இருந்தது.அந்தக் கட்டின் முதல் நோட்டு மட்டும் கட்டில் இருந்து பிரிந்து பறந்து விட்டது. அது ஒரு ஏழை உழைப்பாளி கையில் சிக்கியது . அன்று கூலி வேலை ஒன்றும் கிடைக்காமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கலங்கி நின்ற ஏழைக்கு அந்த 50 ரூ ஆண்டவனாக அளித்தவரப்பிரசாதமாகத்தோன்றியது.அன்றைய தேவைக்கு உண்டான உணவுப் பண்டங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வயிறார சாப்பிட்டுவிட்டு ஆனந்தமாக நித்திரை போனார்.
99 நோட்டுக்கள் உள்ள கட்டு ஒரு லட்சாதிபதியிடம் சிக்கியது. ஒன்றாம் எண் நோட்டைக் காணவில்லை என்பதை லட்சாதிபதி கவனித்தார். அங்கேதான் எங்காவது விழுந்து இருக்கவேண்டும் என்று அந்தப் பகுதியைச் சல்லடை போட்டுச் சலித்தார். ரூபாய் நோட்டு கிடைத்த பாடில்லை. பசி தாகம் எல்லாம் மறந்து, தூக்கத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்.இன்று வரை அந்த 50 ரூ கிடைத்தபாடில்லை. லட்சாதிபதியும் தேடுவதை நிறுத்தவில்லை.
நல்ல கருத்து. "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து" என்று நமது முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இன்றைய உலகில் கிடைத்ததை வாரிச்சுருட்டிக் கொள்ளவும், மேலும் மேலும் குவித்து வைக்கவும் விரும்புவர்கள் அதிகம். சாலை ஓரத்தில் ஒண்டிக்கொண்டு அன்றாடப் பாட்டை கவனித்துக் கொண்டு கவலையில்லா மனிதனாக இருப்பவனே வாழத் தெரிந்தவன். பேராசை பிடித்து அடுத்தவனை ஒழித்துக்கட்டிவிட்டுத் தான் மட்டும் வாழ நினைப்பவன் உயிரோடு இருந்தும் இல்லாதவனே. நல்ல படம், நல்ல விளக்கம். வகுப்புக்கு வந்த நல்லவற்றைக் கற்றுக்கொண்ட திருப்தி ஏற்பட்டது. நன்றி.
ReplyDeleteஆஹா அருமை,
ReplyDeleteவாழ்க்கைத் தத்துவம் பேசும் சித்திரம்
அதை அழகாய், அசத்தலாய் கூறியது,
வாத்தியாரின் மகத்துவம்.
நன்றிகள் ஐயா!
இன்றும் கிருஷ்ணன் சார் முந்திவிட்டார்கள்.
/////kmr.krishnan said...
ReplyDeleteதிருச்சி தேசீயக்கல்லூரிப் பேராசிரியர் திரு.இராதாகிருஷ்ணன் முன்பு ஒரு கூட்டத்தில் மகிழ்ச்சி என்பதைப் பற்றிக் கூறும் போது ஒரு கதை சொன்னார்.
ஒரு லேவாதேவி கடையின் காசாளர் வங்கியில் இருந்து திரும்பும் போது 50 ரூபாய் கட்டு ஒன்றை கவனக்குறைவால் கீழே போட்டு விட்டுப் போய் விட்டார்.அந்தக்கட்டு புதியது. வரிசை எண் மாறாமல் இருந்தது.அந்தக் கட்டின் முதல் நோட்டு மட்டும் கட்டில் இருந்து பிரிந்து பறந்து விட்டது. அது ஒரு ஏழை உழைப்பாளி கையில் சிக்கியது . அன்று கூலி வேலை ஒன்றும் கிடைக்காமல் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கலங்கி நின்ற ஏழைக்கு அந்த 50 ரூ ஆண்டவனாக அளித்தவரப்பிரசாதமாகத்தோன்றியது.அன்றைய தேவைக்கு உண்டான உணவுப் பண்டங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு வயிறார சாப்பிட்டுவிட்டு ஆனந்தமாக நித்திரை போனார்.
99 நோட்டுக்கள் உள்ள கட்டு ஒரு லட்சாதிபதியிடம் சிக்கியது. ஒன்றாம் எண் நோட்டைக் காணவில்லை என்பதை லட்சாதிபதி கவனித்தார். அங்கேதான் எங்காவது விழுந்து இருக்கவேண்டும் என்று அந்தப் பகுதியைச் சல்லடை போட்டுச் சலித்தார். ரூபாய் நோட்டு கிடைத்த பாடில்லை. பசி தாகம் எல்லாம் மறந்து, தூக்கத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டு இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்.இன்று வரை அந்த 50 ரூ கிடைத்தபாடில்லை. லட்சாதிபதியும் தேடுவதை நிறுத்தவில்லை.//////
ஆமாம். நிம்மதி என்பது மனதைப் பொறுத்த விஷயம். நன்றாக உள்ளது கதை. பகிர்விற்கு நன்றி சார்!
////Thanjavooraan said...
ReplyDeleteநல்ல கருத்து. "போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து" என்று நமது முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இன்றைய உலகில் கிடைத்ததை வாரிச்சுருட்டிக் கொள்ளவும், மேலும் மேலும் குவித்து வைக்கவும் விரும்புவர்கள் அதிகம். சாலை ஓரத்தில் ஒண்டிக்கொண்டு அன்றாடப் பாட்டை கவனித்துக் கொண்டு கவலையில்லா மனிதனாக இருப்பவனே வாழத் தெரிந்தவன். பேராசை பிடித்து அடுத்தவனை ஒழித்துக்கட்டிவிட்டுத் தான் மட்டும் வாழ நினைப்பவன் உயிரோடு இருந்தும் இல்லாதவனே. நல்ல படம், நல்ல விளக்கம். வகுப்புக்கு வந்த நல்லவற்றைக் கற்றுக்கொண்ட திருப்தி ஏற்பட்டது. நன்றி./////
உங்கள் பின்னூட்டம் கண்டு, மனம் மகிழ்வு கொண்டது. நன்றி ஜி.வி. சார்!
//////Alasiam G said...
ReplyDeleteஆஹா அருமை,
வாழ்க்கைத் தத்துவம் பேசும் சித்திரம்
அதை அழகாய், அசத்தலாய் கூறியது,
வாத்தியாரின் மகத்துவம்.
நன்றிகள் ஐயா!
இன்றும் கிருஷ்ணன் சார் முந்திவிட்டார்கள்.//////
அவர் பெயரில் கிருஷ்ணர் இருப்பதால், அவருக்கு எப்போதும் அது (அதாவது முந்தி நிற்பது) சாத்தியப்படும்:-))))
பரீட்சை முடிந்து கோடை விடுமுறை வருகின்றதென்றால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான் ஓய்வில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசியர்கட்கும் ஆவல் அதிகமே. எத்தொழிலிருப்பவர்க்கும் ஓய்வு என்றால் மிகவும் விருப்பமே. ஒய்வு வேண்டாமென்போர் யாருமில்லை. வாரம் முழுவதும் உழைப்பவர்கடகு வாரம் ஒரு நாள் விடுமுறை என்றால் மனம் குதூகலிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களும் ஓய்வை வேண்டாமென்றாவெறுப்பார்கள்? பாதி ஊதியம் பெற்றாவது ஓய்வு பெற்று மகிழ்வோர் பலருண்டு. அன்றாடக் கூலி வேலை செய்யும் ஊழைப்பாளிகளோ இடைவேளையில் கொஞ்ச நேரமாயினும், ஓய்வு கொள்ள விரும்புவர். காலையிலும் கொஞ்சம் தாமதித்தே வருவர். மாலையிலும் சீக்கிரமே வேலைவிட்டு ஓய்வு கொள்ள எத்தனிப்பர். இரவில் சுகமாய்த் தூங்கி ஓய்வு பெறுவர். நன்கு கவனித்தால் ஓய்வை விரும்பாதவர் ஒருவரும் இல்லை எனலாம் எல்லோருக்கும் தான் ஓய்ந்து சும்மா விருப்பதில் ஆசை அதிகமே.
ReplyDeleteஇந்த ஓய்வின் விருப்பத்திற்கு காரணம் ஓய்விலுறும் சுகமேயாகும். மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒவ்வொரு காரியம் இனிமையானதாகத் தோன்றும். அவை எவ்வளவுதான் விருப்பமானதாயினும் கொஞ்ச காலத்திற்குப் பின் அவை அலுத்ததுப்போய் அவைகளிலிருந்து ஓய்வு பெறவேண்டுமென்று தோன்றிவிடுவது யாவர்க்கும் இயல்பே. இவ்வாறு உழைத்தும் ஓய்ந்தும் வரும் தேகமும் மனமும் கொஞ்ச கால உழைப்பின் பின்னே ஓய்வையும், கொஞ்ச கால உழைப்பின் பின்னே மீண்டும் உழைப்பையும் மாறி மாறி விரும்புவது பலருக்கும் அனுபவமாகும்.
வெயிலின் அருமை குளிரில் தான் உள்ளது.மகிழ்ச்சியின் அருமை துன்பத்தில் தான் உள்ளது.
//மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத நிலைமையல்ல. இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வதுதான், மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியமாகும்// இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வது என்பது சோம்பலை அல்லவா கொடுக்கும் அதை தமோகுணம் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் சரிதானே ஐயா.
ReplyDeleteநான் அலுவலக பணியில் சேர்ந்த சில மதங்களில் வந்த மின் அஞ்சல். அந்த ஓவியம் என்னை மிகவும் பாதித்தது
ReplyDeleteகட்டிலின் ஒரு காலில் இரு செங்கல் உள்ளது.
நல்லதொரு வெள்ளி கிழமையில் தங்கள் கருத்து பொன் போன்றது.
நன்றி அய்யா.
அற்புதம். கிடைப்பது கிடைக்கும். கிடைக்காதது கிடைக்காது.
ReplyDeleteஇன்று தான் உங்களின் வலைப்பக்கம் வருகிறேன். நல்ல சிந்தனைகளை எழுதி வருகிறீர்கள்.
ReplyDeleteநானும் தங்களைப் போலவே மகரிஷிக் கொள்கைகளையும், காந்திய சிந்தனைகளையும் எழுதி வருகின்றேன். உங்களைப் போன்ற பெரியவர்கள் என் வலைப்பக்கம் வந்து பார்வையிட வேண்டும் என்று விழைகின்றேன். நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் நண்பரே! நன்றி!
அய்யா,
ReplyDeleteஇன்றைய பதிவு சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருந்தது. திருப்தி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அளவில் மாறுபடுகிறது. நவ நாகரீக மனிதனுக்கு எத்தனை இருந்தாலும் போதவில்லை. என்று இந்த நிலை மாறும்?
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
"A picture is worth a thousand words"
ReplyDeletesir...
இப்போதும் தூக்கத்தில் எழுப்பும் phone call, unnecessary disturbance கொஞ்சம் கோபத்தை தான் தருகிறது...
கொடுத்து வைத்த குடும்பம் தான்...
உள்ளேன் ஐயா!
ReplyDeleteminorwall said...
தல! நீங்கள் சொல்லும் அரசியல் பற்றி எல்லாம் தெரியாது ஆனால்
திரு.M .S .உதயமூர்த்தி(உன்னால் முடியும் தம்பி) அவர்கள் 1993 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது நாங்கள் படித்த மேல் நிலை பள்ளிக்கு வருகை தந்து இருந்தார்.
மேல் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை எங்களின் முன்னர் சொன்னார்.
கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தெருவில் பிச்சை எடுக்கும் பொழுது அப்பெண்மணிக்கு தெரிந்த பாடல் ஒன்றின் இரண்டு வரிகளை மட்டும் அவருக்கு தெரிந்த மெட்டில் திரும்ப திரும்ப பாட, இவளின் வசிகர இனிமையான குரலை கேட்ட ஒரு மாமனிதர் இவளை அழைத்து கொண்டு பெரிய நிறுவனத்தில் பாடகியாக் சேர்த்து விட பின்னாளில் உலகமே வியந்து போற்றும் அளவிற்கு பெரும் பாடகியாக வந்தார் என்றார் ஐயா உதயமூர்த்தி.
அப்பெண்மணி மாதிரியாக எத்தனை துயரம், துன்பம், அவமானம், சோதனை வந்தாலும் மனம் தளராமல் போராடவேண்டும் என்று
3 மணிநேரத்திற்கு மேல் சொற்பொழிவாற்றினார். பெரிய தொழில் மேதை மேல்நாட்டு சொகுசு வாழ்கையை உதறிவிட்டு சொந்த தாய் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக.
பள்ளிக்கூடத்தில் இளைய தலைமுறை முன்னர்.
எமக்கும் பெரும் வருத்தம் உண்டு. நம்மாலும் சாதிக்க முடியாமல் போனதே என்று. (நீசக்கார) சுக்கிரன் விளையாடி விட்டார் இளமை கால
வாழ்க்கையில்.அவர் மட்டும் அல்லாது
சகதோழர்களின் உதவியுடன்.
என்ன ஒரு தீர்போ தெரியவில்லை நாட்டாமைகார ஐயாவிடம் தான் சரியான தீர்ப்பை கேட்கணும்?
நாட்டாமையை! காணாமல் தேடுகின்றேன் விபரம் தெரிந்த நாள் முதல்
தவறு செய்யும் பொழுதுதண்டிக்காமல்
விட்டு விட்டு (போன ஜென்மத்தில்)
இப்பம் (இந்த ஜென்மத்தில்) வட்டியும் முதலுமாக. :-)))
அய்யா,
ReplyDeleteஅருமை. இது உண்மையும் கூட.
இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.
நன்றிகள் அய்யா.
உடம்புக்கு ஏதும் சுகமில்லையோ. இவ்வளவு சிறிய பதிவாக இருக்கிறது.
ReplyDeleteஐயா!!!
ReplyDeleteஒரு படத்தை வைத்து நிதர்சனமான உண்மையை கூறிவிட்டீர்கள்.
நன்றி!!!
Dear Sir
ReplyDeleteThe photo which was displayed here was beautiful & wonderful.
It was a good example for how we should live happily with what we have..........
Endrum Andudan
Sunitha
Amazing message about life. We always get happiness in small home because we share more things. But in big home, no happiness will there since no one knows who is inside the home.
ReplyDeleteDear Sir
ReplyDeletePaadam Arumai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
சார் ,
ReplyDeleteபடம் சொல்லும் பாடம் அருமை , கிருஷ்ணன் சார் கதையுடன் சேர்த்து இன்றைய பதிவும் பகிர்வும் மனதில் நல்ல விதைகளை விதைத்துள்ளது , நன்றி ,....
////hai_cha70 said...
ReplyDeleteபரீட்சை முடிந்து கோடை விடுமுறை வருகின்றதென்றால் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம் தான் ஓய்வில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசியர்கட்கும் ஆவல் அதிகமே. எத்தொழிலிருப்பவர்க்கும் ஓய்வு என்றால் மிகவும் விருப்பமே. ஒய்வு வேண்டாமென்போர் யாருமில்லை. வாரம் முழுவதும் உழைப்பவர்கடகு வாரம் ஒரு நாள் விடுமுறை என்றால் மனம் குதூகலிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களும் ஓய்வை வேண்டாமென்றாவெறுப்பார்கள்? பாதி ஊதியம் பெற்றாவது ஓய்வு பெற்று மகிழ்வோர் பலருண்டு. அன்றாடக் கூலி வேலை செய்யும் ஊழைப்பாளிகளோ இடைவேளையில் கொஞ்ச நேரமாயினும், ஓய்வு கொள்ள விரும்புவர். காலையிலும் கொஞ்சம் தாமதித்தே வருவர். மாலையிலும் சீக்கிரமே வேலைவிட்டு ஓய்வு கொள்ள எத்தனிப்பர். இரவில் சுகமாய்த் தூங்கி ஓய்வு பெறுவர். நன்கு கவனித்தால் ஓய்வை விரும்பாதவர் ஒருவரும் இல்லை எனலாம் எல்லோருக்கும் தான் ஓய்ந்து சும்மா விருப்பதில் ஆசை அதிகமே.
இந்த ஓய்வின் விருப்பத்திற்கு காரணம் ஓய்விலுறும் சுகமேயாகும். மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒவ்வொரு காரியம் இனிமையானதாகத் தோன்றும். அவை எவ்வளவுதான் விருப்பமானதாயினும் கொஞ்ச காலத்திற்குப் பின் அவை அலுத்ததுப்போய் அவைகளிலிருந்து ஓய்வு பெறவேண்டுமென்று தோன்றிவிடுவது யாவர்க்கும் இயல்பே. இவ்வாறு உழைத்தும் ஓய்ந்தும் வரும் தேகமும் மனமும் கொஞ்ச கால உழைப்பின் பின்னே ஓய்வையும், கொஞ்ச கால உழைப்பின் பின்னே மீண்டும் உழைப்பையும் மாறி மாறி விரும்புவது பலருக்கும் அனுபவமாகும்.
வெயிலின் அருமை குளிரில் தான் உள்ளது.மகிழ்ச்சியின் அருமை துன்பத்தில் தான் உள்ளது./////
அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை எப்போதும் தென்றலாக இருக்கும். நன்றி!
////hai_cha70 said...
ReplyDelete//மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத நிலைமையல்ல. இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வதுதான், மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியமாகும்// இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வது என்பது சோம்பலை அல்லவா கொடுக்கும் அதை தமோகுணம் என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன் சரிதானே ஐயா.////
என்ன குழப்புகிறீர்கள்? ஒத்துப்போவது (adjusting with the people around us) எப்படிச் சோம்பலைக் கொடுக்கும்?
///Naveen said...
ReplyDeleteநான் அலுவலக பணியில் சேர்ந்த சில மதங்களில் வந்த மின் அஞ்சல். அந்த ஓவியம் என்னை மிகவும் பாதித்தது கட்டிலின் ஒரு காலில் இரு செங்கல் உள்ளது.
நல்லதொரு வெள்ளி கிழமையில் தங்கள் கருத்து பொன் போன்றது.
நன்றி அய்யா./////
கட்டிலின் ஒரு பக்கக் காலில் செங்கல் இருப்பதை உன்னிப்பாகக் கவனித்தீர்கள் பாருங்கள், அதுதான் சிறப்பு. வாழ்க வளமுடன்!
////natarajan said...
ReplyDeleteஅற்புதம். கிடைப்பது கிடைக்கும். கிடைக்காதது கிடைக்காது./////
நல்லது. அதுதான் மனம் வளம் பெறுவதற்குரிய அடிப்படைப் பாடம்
////என்னது நானு யாரா? said...
ReplyDeleteஇன்று தான் உங்களின் வலைப்பக்கம் வருகிறேன். நல்ல சிந்தனைகளை எழுதி வருகிறீர்கள்.
நானும் தங்களைப் போலவே மகரிஷிக் கொள்கைகளையும், காந்திய சிந்தனைகளையும் எழுதி வருகின்றேன். உங்களைப் போன்ற பெரியவர்கள் என் வலைப்பக்கம் வந்து பார்வையிட வேண்டும் என்று விழைகின்றேன். நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் நண்பரே! நன்றி!/////
“என்னது நானு யாரா?” என்று கேள்வியைக் கொண்ட பெயரைவிட, “நான் அவன்தான்” என்றோ அல்லது “நான் நான்தான்!” என்றோ நீங்கள் உங்கள் புனைப்பெயரை வைத்துக்கொண்டிருக்காலாம். உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் யார்? எந்த ஊரில் இருக்கிறீர்கள்?
/////venkatesan.P said...
ReplyDeleteஅய்யா,
இன்றைய பதிவு சிறியதாக இருந்தாலும் சிறப்பாக இருந்தது. திருப்தி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அளவில் மாறுபடுகிறது. நவ நாகரீக மனிதனுக்கு எத்தனை இருந்தாலும் போதவில்லை. என்று இந்த நிலை மாறும்?
மிக்க அன்புடன்
வெங்கடேசன்/////
மாறுவது மாறும். மாறாது இருப்பதை (அல்லது இருப்பவனை) யாரும் மாற்ற முடியாது!
/////Iyappan said...
ReplyDelete"A picture is worth a thousand words"
sir...
இப்போதும் தூக்கத்தில் எழுப்பும் phone call, unnecessary disturbance கொஞ்சம் கோபத்தை தான் தருகிறது...
கொடுத்து வைத்த குடும்பம் தான்...////
நல்லது. சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!
////kannan said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
minorwall said...
தல! நீங்கள் சொல்லும் அரசியல் பற்றி எல்லாம் தெரியாது ஆனால்
திரு.M .S .உதயமூர்த்தி(உன்னால் முடியும் தம்பி) அவர்கள் 1993 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது நாங்கள் படித்த மேல் நிலை பள்ளிக்கு வருகை தந்து இருந்தார்.
மேல் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை எங்களின் முன்னர் சொன்னார்.
கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தெருவில் பிச்சை எடுக்கும் பொழுது அப்பெண்மணிக்கு தெரிந்த பாடல் ஒன்றின் இரண்டு வரிகளை மட்டும் அவருக்கு தெரிந்த மெட்டில் திரும்ப திரும்ப பாட, இவளின் வசிகர இனிமையான குரலை கேட்ட ஒரு மாமனிதர் இவளை அழைத்து கொண்டு பெரிய நிறுவனத்தில் பாடகியாக் சேர்த்து விட பின்னாளில் உலகமே வியந்து போற்றும் அளவிற்கு பெரும் பாடகியாக வந்தார் என்றார் ஐயா உதயமூர்த்தி.
அப்பெண்மணி மாதிரியாக எத்தனை துயரம், துன்பம், அவமானம், சோதனை வந்தாலும் மனம் தளராமல் போராடவேண்டும் என்று
3 மணிநேரத்திற்கு மேல் சொற்பொழிவாற்றினார். பெரிய தொழில் மேதை மேல்நாட்டு சொகுசு வாழ்கையை உதறிவிட்டு சொந்த தாய் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக.
பள்ளிக்கூடத்தில் இளைய தலைமுறை முன்னர்.
எமக்கும் பெரும் வருத்தம் உண்டு. நம்மாலும் சாதிக்க முடியாமல் போனதே என்று. (நீசக்கார) சுக்கிரன் விளையாடி விட்டார் இளமை கால
வாழ்க்கையில்.அவர் மட்டும் அல்லாது
சகதோழர்களின் உதவியுடன்.
என்ன ஒரு தீர்ப்போ தெரியவில்லை நாட்டாமைகார ஐயாவிடம் தான் சரியான தீர்ப்பை கேட்கணும்?
நாட்டாமையை! காணாமல் தேடுகின்றேன் விபரம் தெரிந்த நாள் முதல்
தவறு செய்யும் பொழுதுதண்டிக்காமல்
விட்டு விட்டு (போன ஜென்மத்தில்)
இப்பம் (இந்த ஜென்மத்தில்) வட்டியும் முதலுமாக. :-)))/////
நாட்டாமை நேரில் வந்து தன் தீர்ப்பைச் சொல்ல மாட்டார். யார் மூலமாவது அந்த வேலையைச் செய்வார்!
/////Govindasamy said...
ReplyDeleteஅய்யா,
அருமை. இது உண்மையும் கூட.
இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.
நன்றிகள் அய்யா.////
நல்லது.நன்றி நண்பரே!
////ananth said...
ReplyDeleteஉடம்புக்கு ஏதும் சுகமில்லையோ. இவ்வளவு சிறிய பதிவாக இருக்கிறது.//////
பழநியப்பன் அருளால் உடல் சுகத்திற்கு ஒன்றும் குறைவில்லை. எல்லாப் பதிவுகளையுமே பெரிதாக எழுதாமல், அவ்வப்போது இப்படிச் சிறிய பதிவுகளைக் கொடுப்பது படிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கும்,
சின்னதோ அல்லது பெரியதோ சொல்லவந்த மேட்டரைச் சொன்னால் போதுமல்லவா நண்பரே?
////Arul said...
ReplyDeleteஐயா!!!
ஒரு படத்தை வைத்து நிதர்சனமான உண்மையை கூறிவிட்டீர்கள்.
நன்றி!!!/////
நல்லது. நன்றி நண்பரே!
///உங்கள் மாணவி said...
ReplyDeleteDear Sir
The photo which was displayed here was beautiful & wonderful.
It was a good example for how we should live happily with what we have..........
Endrum Andudan
Sunitha/////
அடடா, வெகு நாட்களுக்குப் பிறகு, மனம் வந்து இன்றுதான் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். நன்றி சகோதரி!
/////Sakthivel said...
ReplyDeleteAmazing message about life. We always get happiness in small home because we share more things. But in big home, no happiness will there since no one knows who is inside the home.////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Paadam Arumai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நல்லது. நன்றி ராஜாராமன்!
//////Soundarraju said...
ReplyDeleteசார் ,
படம் சொல்லும் பாடம் அருமை , கிருஷ்ணன் சார் கதையுடன் சேர்த்து இன்றைய பதிவும் பகிர்வும் மனதில் நல்ல விதைகளை விதைத்துள்ளது , நன்றி ,..../////
கரெக்ட். இதைப் படித்தால், அவரும் மிகிழ்ச்சியடைவார். உங்களின் பாரட்டும் குணத்திற்கு நன்றி சுந்தரராஜூ!
பதிவு சிறியதாக அமைந்ததை அன்பு நண்பர் கிருட்டிணன் கதை சொல்லி நிறைவு செய்து விட்டார் . .
ReplyDeleteபிரச்சனையும் மகிழ்ச்சியும் வெளியில் கிடைப்பதல்ல அது மனம் சார்ந்த விஷயமே. .
நன்றும் தீதும் பிறர் தர வாரா
என்ற கனியன் பூங்குன்றனார் மொழிகளை பாடமாக படிக்காமல் வாழ்க்கை பாடமாக படித்தால்
வாழ்க்கை இனிக்கும் . .
இனிப்பும் கசப்பும் மனம் சார்ந்த விஷயமே . .
வெல்வது மனமா . .? அறிவா . ...?
என்பதில் தான் வாழ்க்கை சுகமே . .
ஐயா வணக்கம்...!
ReplyDelete///மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத நிலைமையல்ல. இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வதுதான், மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியமாகும்///
100% யதார்த்தமான, அனுபவபூர்வமான, ஆணித்தரமான, நான் இப்போது அனுபவித்து உணர்ந்து கொண்டிருக்கும் உண்மை...
காரணம், மனைவி-மக்கள் தில்லியில், நான் ஷிம்லாவில்... அலைபேசியில் சிரித்துக்கொண்டும், திட்டிக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும், அழுதுகொண்டும், ஆனாலும் மகிழ்ச்சியாய்... பிரிவோடும்-பிரச்சினைகளோடும் ஒத்துப்போய், ஆனாலும் மகிழ்ச்சியாய்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், எல்லாம் வல்ல இறைவன் மற்றும் தங்களுடைய ஆசீர்வாதங்களினால்....
மிக்க நன்றிகளுடன்
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்
////Blogger iyer said...
ReplyDeleteபதிவு சிறியதாக அமைந்ததை அன்பு நண்பர் கிருட்டிணன் கதை சொல்லி நிறைவு செய்து விட்டார் . .
பிரச்சனையும் மகிழ்ச்சியும் வெளியில் கிடைப்பதல்ல அது மனம் சார்ந்த விஷயமே. .
நன்றும் தீதும் பிறர் தர வாரா
என்ற கனியன் பூங்குன்றனார் மொழிகளை பாடமாக படிக்காமல் வாழ்க்கை பாடமாக படித்தால்
வாழ்க்கை இனிக்கும் . .
இனிப்பும் கசப்பும் மனம் சார்ந்த விஷயமே . .
வெல்வது மனமா . .? அறிவா . ...?
என்பதில் தான் வாழ்க்கை சுகமே ./////
உண்மை! நன்றி நண்பரே!
////Blogger M. Thiruvel Murugan said...
ReplyDeleteஐயா வணக்கம்...!
///மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது பிரச்சினைகள் இல்லாத நிலைமையல்ல. இருக்கும் பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் வாழ்வதுதான், மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியமாகும்///
100% யதார்த்தமான, அனுபவபூர்வமான, ஆணித்தரமான, நான் இப்போது அனுபவித்து உணர்ந்து கொண்டிருக்கும் உண்மை...
காரணம், மனைவி-மக்கள் தில்லியில், நான் ஷிம்லாவில்... அலைபேசியில் சிரித்துக்கொண்டும், திட்டிக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும், அழுதுகொண்டும், ஆனாலும் மகிழ்ச்சியாய்... பிரிவோடும்-பிரச்சினைகளோடும் ஒத்துப்போய், ஆனாலும் மகிழ்ச்சியாய்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், எல்லாம் வல்ல இறைவன் மற்றும் தங்களுடைய ஆசீர்வாதங்களினால்....
மிக்க நன்றிகளுடன்
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்////
ஆசிகள் எப்போதும் இறைவனிடம் இருந்து மட்டுமே வரவேண்டும்!இறைவனைப் பிரார்த்தியுங்கள். உங்கள் பிரச்சினைகள் தீரும்!
ஐயா வண்க்கம்
ReplyDeleteஉங்களுடைய மன சம்மந்தமான பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கிறது
சார் அப்பர் சொன்னார் மனம் எளிதில் மயங்கும் தன்மையுடையது.
அவர் தந்த உதாரணம் உழத்தி ஒரு ஆமையை குளத்திலிருந்து எடுத்துட்டுவந்து
அதை ஒரு பானையிலிட்டு சூடேற்றினாள் ஆமை கொள்ளை கொள்ள இன்பம்
கண்டது அந்த இளஞ்சுட்டில் காரணம் குளிர்ந்த நீரில் மருத்து போன ஆமை அந்த இள்ஞ்சூட்டை விரும்பியது கொதி நிலை அதிகரிக்க அதிகரிக்க என்னச்சு
ஆ மைனவால் சகோதரர் சொல்லுவார்.
கிருஷ்ணன் சார் உங்க தத்துவ கதை ரொம்ப நல்லாயிருக்கிறது
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல மற்றும்போதும் என்ற மனம் வேண்டும் அரூமை ஐயா
ReplyDeleteஒவ்வொரு மனிதனும் இதை உணர்ந்தால் வாழ்கையில் இன்பமாக இருக்களாம். நல்ல கருத்து. நன்றி.
ReplyDeletei have seen this image many years ago. still i have it in my system. Really that image makes us feel " Happiness is not what we have,its how we make it better". indha oru padam niraiya katrukodukiradu..thank u .
ReplyDelete/////sundari said...
ReplyDeleteஐயா வண்க்கம்
உங்களுடைய மன சம்மந்தமான பதிவுகள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கிறது
சார் அப்பர் சொன்னார் மனம் எளிதில் மயங்கும் தன்மையுடையது.
அவர் தந்த உதாரணம் உழத்தி ஒரு ஆமையை குளத்திலிருந்து எடுத்துட்டுவந்து
அதை ஒரு பானையிலிட்டு சூடேற்றினாள் ஆமை கொள்ளை கொள்ள இன்பம்
கண்டது அந்த இளஞ்சுட்டில் காரணம் குளிர்ந்த நீரில் மருத்து போன ஆமை அந்த இள்ஞ்சூட்டை விரும்பியது கொதி நிலை அதிகரிக்க அதிகரிக்க என்னச்சு
ஆ மைனவால் சகோதரர் சொல்லுவார்.
கிருஷ்ணன் சார் உங்க தத்துவ கதை ரொம்ப நல்லாயிருக்கிறது////
கிருஷ்ணன் சார் சொல்வது எப்பொதுமே நன்றாக இருக்கும். அனுபவஸ்தர் இல்லையா? நன்றி சகோதரி!
/////மகேஷ் ராஜ் said...
ReplyDeleteமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நல்ல மற்றும் போதும் என்ற மனம் வேண்டும் அரூமை ஐயா////
நல்ல மனம் என்னும்போது, போதும் என்பது அதில் அடக்கம் சுவாமி!
////s.adimoulame said...
ReplyDeleteஒவ்வொரு மனிதனும் இதை உணர்ந்தால் வாழ்கையில் இன்பமாக இருக்கலாம். நல்ல கருத்து. நன்றி./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Jack Sparrow said...
ReplyDeletei have seen this image many years ago. still i have it in my system. Really that image makes us feel " Happiness is not what we have,its how we make it better". indha oru padam niraiya katrukodukiradu..thank u .////
மனவளப்பாடத்தின் நோக்கமே அதுதான் சாரே!
//////////////////
ReplyDeletesundari said...
உழத்தி ஒரு ஆமையை குளத்திலிருந்து எடுத்துட்டுவந்து
அதை ஒரு பானையிலிட்டு சூடேற்றினாள் ஆமை கொள்ளை கொள்ள இன்பம்
கண்டது அந்த இளஞ்சுட்டில் காரணம் குளிர்ந்த நீரில் மருத்து போன ஆமை அந்த
இள்ஞ்சூட்டை விரும்பியது கொதி நிலை அதிகரிக்க அதிகரிக்க என்னச்சு
ஆ மைனர்வாள் சகோதரர் சொல்லுவார்.\\\\\\\\\\\\\\\\\\\
கொதி நிலை அதிகரிக்க அதிகரிக்க இதுவரை ஜாலி மூடில் 'ஹம்'
பண்ணிக்கொண்டிருந்த ஆமை..
சூடு தாங்காமல் வேகத்துடன் (ஆமை வேகம்????????)
'சட்டி சுட்டதடா..கால் வெந்ததடா..
புத்தி கெட்டதடா..உள்ளம் நொந்ததடா..'
என்று பாடியபடியே துள்ளிக் குதித்து வெளியில் வந்தது..
தன் ஓட்டின் பலம் தெரியாமல் தண்ணீரில் கொதிக்கப்போட்டு விட்டு எட்டிப் போன உழத்தி
அங்கே இருக்கிறாளா என்று ஓட்டிலிருந்து தலையை சற்று வெளியே எட்டிப் பார்த்தது..
சுற்றி முற்றிலும் பார்த்தது..
'கதை முடிந்தது' என்று நினைத்து எங்கோ உழத்தி சென்றிருக்க
சுற்றிலும் யாருமில்லாததையும் உழத்தியின் முட்டாள்தனத்தையும் நினைத்து
விசிலடித்தவாறே...வேக வேகமாக(??????) வெளிப்பக்கம் நடையைக் கட்டியது..
படத்தில் கோழி மட்டும் பார்க்க பாவமா இல்லை..?
ReplyDeleteமற்றபடி..KMRK சார் கதை அருமை.. பதிவைப் போலவே short & ஸ்வீட்......
நம் வாத்தியார் வழக்கமாக கூறும் கூற்றையே
ReplyDeleteஅந்த படம் எதிரொலிக்கிறது
போட்டது போட்டபடி ஒரு நாள்
வெறும் கையுடன் போய்ச் சேரத்தான் போகிறோம்
அப்பிடியிருக்க கவலைப்பட்டு ஆவதென்ன
என்று அந்த குடும்பத்தாருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது
அதுதான் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பிடியொரு சந்தோசம்
நன்றிகள் வாத்தியாருக்கு
நந்தகோபால்
////minorwall said...
ReplyDeleteபடத்தில் கோழி மட்டும் பார்க்க பாவமா இல்லை..?
மற்றபடி..KMRK சார் கதை அருமை.. பதிவைப் போலவே short & ஸ்வீட்....../////
நல்லது. நன்றி மைனர்!
/////G.Nandagopal said...
ReplyDeleteநம் வாத்தியார் வழக்கமாக கூறும் கூற்றையே அந்த படம் எதிரொலிக்கிறது.போட்டது போட்டபடி ஒரு நாள்
வெறும் கையுடன் போய்ச் சேரத்தான் போகிறோம். அப்பிடியிருக்க கவலைப்பட்டு ஆவதென்ன என்று அந்த குடும்பத்தாருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அதுதான் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பிடியொரு சந்தோசம்
நன்றிகள் வாத்தியாருக்கு
நந்தகோபால்/////
நல்லது. நன்றி நண்பரே!