18.9.10

ஆவியுடன் பேசிய பெண்மணி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று ஒரு புதிய பகுதி.

இளைஞர்கள்  மலர்.

வகுப்பறைக்கு வரும் இளைஞர்களும், இளைஞிகளும் தொடர்ந்து எழுதினால், இந்தப் பகுதி தொடர்ந்து வரும். வாத்தியார் இதில் எழுத முடியாது. ஏனென்றால் அவர் இளைஞரல்ல. கேட்டால் மனதிற்கு ஏது வயதென்பார்? அதெல்லாம் கதை. ஆகவே அவர் எழுத முடியாது!

இதில் இளைஞர் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் யார் வேண்டுமெண்றாலும் பங்கு கொள்ளலாம். பிறப்புச் சான்றிதழும் அனுப்பப்போவதில்லை, புகைப்படத்தையும் அனுப்பப் போவதில்லை. ஆகவே மின்னஞ்சலை மட்டும் வைத்து வாத்தியாருக்கு எங்கே உங்களுடைய வயது தெரியப்போகிறது?

ஜாமாயுங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
இன்றைய இளைஞர்மலரை அலங்கரிப்பவர் நமது வகுப்பறை மாணவி (நன்றாகக் கவனிக்கவும் மாணவி) Ms.உமா அவர்கள். வயது: இருபதிலிருந்து நாற்பதுக்குள். பிறந்த ஊர்: தமிழ் நாடு. வசிக்கும் ஊர்: ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.

புகைப்படம்?

அது இல்லாமலா?

பதிவின் கடைசியில் இருக்கிறது!
-----------------------------------------------------------------------------------------------------
Over to her post
____________________________________________________________
ஆவியுடன் பேசிய பெண்மணி!

எனக்கு சின்ன வயசிலேர்ந்தே பேய் கதைகள் / திகில் கதைகள்னா ரொம்பப் பிடிக்கும்.  எங்கள் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் வாங்குவார்கள், ஆனால் என்னைப் படிக்க விடமாட்டார்கள்.  அப்போது குமுதத்தில், ஒரு தொடர்கதை (பேய்க்கதை) வந்துகொண்டிருந்தது.  என் சித்தியிடம் அதை மட்டும் படிப்பதாகச் சொல்லிவிட்டுப் படிப்பேன் (அப்படியே எல்லாத்தையும் படிச்சுடுவேன்).

அப்போது கொங்கணேஸ்வரா வித்யாசாலாவில் 4 ஆவது படித்துக்கொண்டிருந்தேன்.  கொங்கணேஸ்வரர் கோயிலின் பிரகாரம்தான் எங்கள் பள்ளிக்கூடம்.  எல்லோரும் மதியம் உச்சிகால பூஜை முடிந்தவுடன் (கோயில் பூட்டியவுடன்), பைரவர் அங்கு சுற்றிக்கொண்டிருப்பார் என்றும், யாராவது அந்த நேரத்தில் போனால், அவ்வளவுதான் என்றும் புரளியைக் கிளப்பிவிட (அது புரளி என்று அப்போது தெரியாது), ஒரு நாள் அது உண்மையா என்று பார்த்துவிடவேண்டும் என்ற குறுகுறுப்பு தோன்றியது (அந்த கோயில் பிரகாரத்தில் வாதாங்காய் மரமோ, கொடுக்காப்புளி மரமோ, சரியாக ஞாபகமில்லை, இருந்தது.  உண்மையான காரணம், அதைப்போய் சாப்பிடுவதுதான்).

ஒரு நாளைக்கு நானும் இன்னும் 2 பேரும் சேர்ந்து உணவு இடைவேளையில் கோயிலின் பின்வழியாகப் (முன்கதவு மதியம் பூட்டியிருக்கும்)  போலாம்னு முடிவு பண்ணோம்.  ரொம்ப தைரியசாலிகள் போல் காண்பித்துக்கொண்டு (உள்ளூர செம பயம்), அப்பப்ப‌ பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டு (பைரவர் வருகிறாரான்னு பார்க்கத்தான்) போனோம்.  போய் மரத்தடிலேர்ந்து பொறுக்கிக்கொண்டிருந்தோம் (பின்னாலே நிக்கற மாதிரியே ஒரு பிரமை வேற).  ஒரு 5 நிமிஷம் தாக்குப் பிடிச்சிருப்போம்.  'தடால்'னு ஒரு சத்தம் (ஏதோ மட்டை விழுந்திருக்கும்). 3 பேரும் அங்கேர்ந்து ஓட ஆரம்பிச்சவங்க, வகுப்புக்கு வந்ததும்தான் நின்னோம்.

அப்புறம் 7/8 ஆவது படிக்கும்போதெல்லாம் ((விடுமுறைக்குப் போகும்போதெல்லாம்), எத வேணா படிச்சுத் தொலையட்டும்னு வீட்டில தண்ணி தெளிச்சு விட்டுட்டதாலே சகட்டு மேனிக்கு பாக்கெட் நாவல்லாம் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சாச்சு.  அதுலயும் இந்த ஆவி/பேய்க் கதையையெல்லாம் ராத்திரி 10 மணிக்குத்தான் படிக்க ஆரம்பிப்போம்.  அப்போது இருந்த வீட்டின் மாடியில் (கீழ்ப்பகுதியில் எல்லோரும் தூங்கும்போது விளக்குப் போட்டுட்டு படிச்சா திட்டு விழும்) முனீஸ்வரர் நடமாட்டம் இருக்கும், அதைத் தான் ஒருமுறை பார்த்துள்ளேன் என்றும் என் தாத்தா வேறு பயமுறுத்திக்கொண்டிருப்பார்.  அப்படியும் நாங்கள் படித்துக்கொண்டிருப்போம்.  10.30 / 11 மணிக்கு பாக்கி எல்லோரும் தூக்கம் வருவதாகக் கூறிச் சென்று விடுவார்கள்.  நான் மட்டும் ரொம்ப தைரியசாலி போல இன்னும் ஒரு 5 நிமிஷம் தாக்குப்பிடித்துவிட்டு கீழே போய்ப் படுத்துவிடுவேன்.

இப்பதான் காமெடி ஆரம்பிக்கும்.  படிச்ச ஆவிக்கதை இப்போதான் வேலையைக்காட்ட ஆரம்பிக்கும். ஏதோ சத்தம் கேட்கறா மாதிரியே / நடமாட்டம் இருக்கிற மாதிரியே இருக்கும்.  சரி நமக்குத்தான் இந்த பிரச்சனை போலிருக்குன்னு நினைச்சுட்டு திரும்பிப்பார்த்தா, என் சித்தி பெண்ணும், தூக்கம் வராம முழிச்சிட்டிருப்பா.  சரின்னு பாட்டியை எழுப்பினா, உங்கள யாரும் கண்டதையும் படிக்கச்சொன்னான்னு அர்த்தஜாமத்துல பாட்டு விழும்.  ஆனாலும் அடுத்த நாளும் படிக்காம இருக்க மாட்டோம்.

இப்படியே ஆவி மேல இருக்கிற ஆர்வம் வளர்ந்துட்டே இருந்தது.  அப்புறம் 10‍வது படிக்கும்போது, நானும், எனது 4 தோழிகளும், ஆவியப் பத்தி ஒரு நாள் பேசிட்டிருக்கும்போது, 'ஒய்ஜா போர்டு' மூலமா ஆவிகளோட தொடர்பு கொள்ளலாம்னு ஒரு தோழி சொன்னா.  உடனே ஆர்வம் அதிகமாகி, எல்லோரும் விவரம் சேகரிக்க ஆரம்பித்தோம்.  அதுல 0 லேர்ந்து 9 வரையும், A-Z வரையும், ஆமாம் / இல்லைன்னு நடுவிலும் எழுதிட்டு, ஒரு மெழுகுவர்த்தியை ஏத்திண்டு, அதன்மேல் ஒரு டம்ளரைக் கவிழ்க்கணும்.  அதன்பின் கொஞ்ச நேரம் கழித்து, ஏதாவது ஓர் ஆவியை நினைத்துக்கொண்டு டம்ளரின்மேல் விரலை வைத்துக்கொண்டால் அது நகர ஆரம்பிக்கும், அப்போது நாம் கேட்க நினைக்கும் கேள்விகளைக் கேட்கலாம் அப்படின்னு தெரிஞ்சது.  உடனே எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டோம்.  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பொருள் வீட்டிலேர்ந்து எடுத்துட்டு வரலாம்னு.  அப்போ வீட்டுக்கு பள்ளிப் பேருந்தில்தான் போவேன்.  அதுல ஒரு நாளைக்கு முதல்ல எங்களை அழைச்சுட்டுப்போவார்கள், இன்னொரு நாள் இன்னொரு பகுதில இருக்கிறவங்களை.  அதுனாலே, 2வது தடவை அழைச்சுட்டுப்போற அன்னிக்கு 45 நிமிஷம் நேரம் கிடைக்கும், அப்போது இந்த ஆராய்ச்சி பண்ணலாம்னு முடிவாச்சு.  அதுலயும் எங்கள் வகுப்பு முன்புறம் இருந்ததால அங்க ஆசிரியைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும், அதனால் பின்புறம் இருக்கும் 8ஆம் வகுப்பில் செய்யலாம்னு யோசிச்சோம்.

ஒரு வாரத்துக்கு கையில எல்லாத்தையும் எடுத்துட்டுச் சுத்திண்டிருந்தோம்.  ஒரு நாளைக்கு அதற்கான நேரமும் வந்தது.  எல்லாம் முறைப்படி செஞ்சுட்டு, காந்தியின் ஆவியைக் கூப்பிட்டோம் (இன்னும் நிறைய பேரக் கூப்பிட்டிருக்கோம், யார் யார்னு யாரும் கேட்டுடாதீங்கோ).  நீங்க இப்ப சொர்க்கத்துல இருக்கீங்களா, நரகத்துலயான்னு (இதவிட பயங்கரமான (அபத்தமான) கேள்விகள்லாம் கேட்டதை இப்போ நினைச்சாலும் சிரிப்புதான்) ஆரம்பிச்சு ஒவ்வொண்ணாக் கேட்டுட்டிருந்தப்பதான் 'டமால்'னு ஒரு சத்தம் எங்கேர்ந்தோ கேட்டுது.

அப்புறமென்ன?  தடதடன்னு மாடிப்படில இறங்கி ஓடி (பின்னாடி யாருமே திரும்பிப் பார்க்கலை) எங்களோட பைகள்லாம் வச்சிருந்த இடத்துல வந்துதான் நின்னோம்.

அப்போவே எவ்வளவு ஆராய்ச்சி மனப்பான்மை பாருங்கோ.  அதன்பிறகும் நான் நிறுத்தலையே?

திரும்ப லீவில், வீட்டுல யாருக்கும் தெரியாம மொட்டை மாடியில ஆராய்ச்சி. ஆனா இப்போ கொஞ்சம் முன்னேறி, யாராவது ஒருத்தர் மீடியமா இருக்கலாம்னு முடிவாச்சு (எல்லாம் ஏதோ கதைல படிச்சதோட விளைவு).  என்னோட மாமா பையன் நான் இருக்கேன்னு சொல்லிட்டுக் கண்ணை மூடிண்டு உக்கார்ந்திருந்தவன் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டான்.  எங்களுக்கெல்லாம் ஒரே பயம், மாமாட்ட போய் என்னன்னு சொல்றதுன்னு.  உடனே என் சித்தி பையன் 'ஏய் போறுண்டா நடிச்சது' அப்படின்னு சொல்லவும், அவனே சிரிச்சு மாட்டிக்கிட்டான்.  அன்னிக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து அவனைச் சாத்து சாத்துன்னு சாத்தியதை, இன்னும் மறந்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.

அதன்பின்னும் ஒரு ரூபாய் காச வெச்சு, நிறைய தடவை செஞ்சு பார்த்துட்டு விட்டாச்சு.  (அப்படியே தொடர்ந்திருந்தா 2/3 டாக்டரேட் வாங்கிருக்கலாம்).

சரி நிறைய எழுதி வெறுப்பேத்திட்டேன்னு நினைக்கிறேன்.  மீண்டும் சந்திப்போம்.

பி.கு.:
மேலே எழுதினது மூலமா நான் என்ன கருத்து சொல்றென்னு யாரும் தயவுசெஞ்சு கேட்டுடாதீங்கோ.  ஏன்னா நான் ஜாலியான விஷயம் மட்டும் எழுதலாம்னு யோசிச்சித்தான் இதை எழுதினேன்.  வேற ஏதாவது எழுதி எல்லோரையும் சோகப்படுத்த வேண்டாம்னுதான்.

இன்னோரு விஷயம், இதெல்லாத்தையும் படிச்சிட்டு, ரொம்ப மூளையைக் கசக்கி, உனக்கு அப்படின்னா பேய் / ஆவி மேல நம்பிக்கை இருக்கான்னு கேட்காதீங்கோ.  இந்த ஆவியோட பேசறது எல்லாம் பொய்னுதான் நினைக்கிறேன்.  அதுக்காக, நான் ஆவி/பேய்ங்கறது இல்லவே இல்லன்னு சொல்லலை. (என்ன ரொம்பக் குழப்பறேனா?  சரி உட்கார்ந்து நீங்களே தெளிவா யோசிச்சிக்குங்க!)

ஆவியுடன் பேச விரும்பும் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!

-ஆக்கம் உமா

உமா அவர்கள் அனுப்பிய படம்!

.........................................................................................................................

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாரமலர் வழக்கம்போல நாளை வெளியாகும்!

நாளை வெளியாகவிருக்கும் ஆக்கம் யாருடையது?

அது சஸ்பென்ஸ்!

ஒரு நாள் காத்திருந்து தெரிந்துகொள்ளுங்கள்! காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கும். காதலில் மூழ்கிக் கிடப்பவர்களைக் கேளுங்கள். அந்த சுகத்தை            “ ஜில்லென்று காற்று வந்தது. நில்லென்று கேட்டுக் கோண்டது. குடைபோல இமை விரிய, மலர்போல் முகம் மலர, உன்னோடு பேசச் சொன்னது” என்று கவிதை வரிகளுடன் அதை விவரித்துச் சொல்வார்கள்

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

74 comments:

  1. ////////////////// ஒரு மெழுகுவர்த்தியை ஏத்திண்டு, அதன்மேல் ஒரு டம்ளரைக் கவிழ்க்கணும் //////////////
    ஏதோ ஒரு மாமி கதை எழுதியிருக்காங்கோன்னு தெளிவாத் தெரியுது..
    போட்டோ போடாததாலே இந்தப் பஞ்சவர்ணக்கிளிக்கு
    நான் நேத்து பார்த்த Resident Evil AfterLife 3D ( as biohazard 3 D - part 4 - in Japan )
    பட adventurous heroin மில்லா ஜோனோவிச் போல ஒரு figure ஐக் கற்பனை பண்ணிக்குறேன்..
    (கதையும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சுலே? adventurous ஆ இருந்துச்சுன்னும் கற்பனை பண்ணிக்குறேன்..)

    ReplyDelete
  2. //////////////அதுலயும் எங்கள் வகுப்பு முன்புறம் இருந்ததால அங்க ஆசிரியைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்,
    அதனால் பின்புறம் இருக்கும் 8ஆம் வகுப்பில் செய்யலாம்னு யோசிச்சோம்.\\\\\\\\\\\\

    பேய்கள் நடமாட்டம்ன்னு சிம்பிளா எழுதியிருக்கலாம்..

    ReplyDelete
  3. நல்லா எழுதிருக்கீங்க..வாழ்த்துக்கள்..
    அந்த ஒரு ரூபா மேட்டர் எப்புடி?

    ReplyDelete
  4. கொஙக‌ணேஸ்வர வித்யாசாலா தஞ்சை மேலவீதியில் அதே பேருடைய கோவில் வளாகத்தில் இன்றளவும் நடந்து வருகிறது.அது கல்யாணசுந்தரம் மேல் நிலைப்பள்ளிக்கு ஃஃபீடர் ஸ்கூல். உமா தஞ்சை பங்காரு(தங்கக்) காமாட்சி அம்மன் அக்ரஹாரத்தில் வளர்ந்தவர்.தற்சமயம் டெல்லி வாசம்.

    பேய் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிய பீதி கிளப்புவது எல்லா சமூகத்திலும் உள்ளது.வெளி நாடுகளிலும் கூட பல சந்தர்பங்க‌ளில் இந்த பீதியை ஒரு யுக்தியாகப் பயன் படுத்துகிறார்கள்.உதாரணமாக ஒரு வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்க‌ வேணும் என்றால், அந்த வீட்டில் ஆவி சுற்றுவதாகக் கிளப்பிவிட்டு விடுவார்கள்.

    நான் மீடியமாகப் பயன் படுத்தப்பட்டு இருக்கிறேன்.பின்னர் ஒருமுறை அந்தக் கதையை வச்சுக்கலாம்.
    எனக்கு 61 வயதுதான் ஆகிற்து.தஞ்சாவூரார் 75 வய‌தில் சோர்வு என்பதே அறியாமல் 25 வயது இளைஞராக வலம் வருகிறர்ர். எங்கள் இருவரையும் இளைஞர் பட்டியலில் சேர்ப்பீர்கள் தானே?

    ReplyDelete
  5. /////minorwall said...
    ////////////////// ஒரு மெழுகுவர்த்தியை ஏத்திண்டு, அதன்மேல் ஒரு டம்ளரைக் கவிழ்க்கணும் //////////////
    ஏதோ ஒரு மாமி கதை எழுதியிருக்காங்கோன்னு தெளிவாத் தெரியுது.. போட்டோ போடாததாலே இந்தப் பஞ்சவர்ணக்கிளிக்கு! நான் நேத்து பார்த்த Resident Evil AfterLife 3D ( as biohazard 3 D - part 4 - in Japan )
    பட adventurous heroin மில்லா ஜோனோவிச் போல ஒரு figureஐக் கற்பனை பண்ணிக்குறேன்..
    (கதையும் கிட்டத்தட்ட இதே ரேஞ்சுலே? adventurous ஆ இருந்துச்சுன்னும் கற்பனை பண்ணிக்குறேன்..)///////

    நீங்கள் என்றும் மைனர், எதிலும் மைனர்தான் என்பதை உங்கள் பின்னூட்டம் உறுதி செய்கிறது! அதெப்படி முதல் பின்னூட்டம் இட்டதோடு, முதல் பெஞ்சிலும் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டீர்களே! இந்த வேலையை சிங்கப்பூர் ஆலாசியம்தான் தொடர்ந்து செய்வார். அவருக்கு இடமில்லாமல் செய்துவிட்டீர்களே - அவருடைய வருத்தத்திற்கு ஆளாகிவிட்டீர்களே! எனக்கு ஒன்றும் வருத்தமில்லை!:-)))))

    ReplyDelete
  6. /////minorwall said...
    //////////////அதுலயும் எங்கள் வகுப்பு முன்புறம் இருந்ததால அங்க ஆசிரியைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்,
    அதனால் பின்புறம் இருக்கும் 8ஆம் வகுப்பில் செய்யலாம்னு யோசிச்சோம்.\\\\\\\\\\\\
    பேய்கள் நடமாட்டம்ன்னு சிம்பிளா எழுதியிருக்கலாம்./////.

    அப்படிச் சிம்ப்பிளாக எழுதினால், சுவாரசியம் மிஸ்ஸாகுமே மைனர்! உங்களுக்குத் தெரியாததா என்ன?

    ReplyDelete
  7. ////minorwall said...
    நல்லா எழுதிருக்கீங்க..வாழ்த்துக்கள்..
    அந்த ஒரு ரூபா மேட்டர் எப்பிடி?/////

    அதைத் தனது அடுத்த பதிவில் விளக்குவார் மைனர்!

    ReplyDelete
  8. //////kmr.krishnan said...
    கொஙக‌ணேஸ்வர வித்யாசாலா தஞ்சை மேலவீதியில் அதே பேருடைய கோவில் வளாகத்தில் இன்றளவும் நடந்து வருகிறது.அது கல்யாணசுந்தரம் மேல் நிலைப்பள்ளிக்கு ஃஃபீடர் ஸ்கூல். உமா தஞ்சை பங்காரு(தங்கக்) காமாட்சி அம்மன் அக்ரஹாரத்தில் வளர்ந்தவர்.தற்சமயம் டெல்லி வாசம்.
    பேய் இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிய பீதி கிளப்புவது எல்லா சமூகத்திலும் உள்ளது.வெளி நாடுகளிலும் கூட பல சந்தர்பங்க‌ளில் இந்த பீதியை ஒரு யுக்தியாகப் பயன் படுத்துகிறார்கள்.உதாரணமாக ஒரு வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்க‌ வேணும் என்றால், அந்த வீட்டில் ஆவி சுற்றுவதாகக் கிளப்பிவிட்டு விடுவார்கள்.
    நான் மீடியமாகப் பயன் படுத்தப்பட்டு இருக்கிறேன்.பின்னர் ஒருமுறை அந்தக் கதையை வச்சுக்கலாம்.
    எனக்கு 61 வயதுதான் ஆகிற்து.தஞ்சாவூரார் 75 வய‌தில் சோர்வு என்பதே அறியாமல் 25 வயது இளைஞராக வலம் வருகிறார். எங்கள் இருவரையும் இளைஞர் பட்டியலில் சேர்ப்பீர்கள் தானே?//////

    ஆசை, தோசை, அப்பளம், வடை!!!!!!!
    வாத்தியாரையே சேர்க்க முடியாது என்னும்போது, உங்கள் இருவரையுமா? நோ சான்ஸ்!:-)))))

    மூத்தகுடிமகன் என்னும் சலுகை எல்லாம் (அட்லீஸ்ட்...இரயில் பயணச் சீட்டுக்களில்) உங்களுக்கு இருக்கும்போது, இது எதறகு? சீனியர் சிட்டிஸன் என்னும் மகத்தான பெருமை உங்கள் இருவருக்கும் இருக்கிறது. அதை மறந்து விடாதீர்கள் கிருஷ்ணன் சார்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  9. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உண்மை என்றால் , ஆவிகளும் உண்மை தான் . சிவபுராணத்தில் உள்ளது.

    ReplyDelete
  10. //SP.VR. SUBBAIYA said...
    /////minorwall said...
    //////////////அதுலயும் எங்கள் வகுப்பு முன்புறம் இருந்ததால அங்க ஆசிரியைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்,
    அதனால் பின்புறம் இருக்கும் 8ஆம் வகுப்பில் செய்யலாம்னு யோசிச்சோம்.\\\\\\\\\\\\
    பேய்கள் நடமாட்டம்ன்னு சிம்பிளா எழுதியிருக்கலாம்./////.

    அப்படிச் சிம்ப்பிளாக எழுதினால், சுவாரசியம் மிஸ்ஸாகுமே மைனர்! உங்களுக்குத் தெரியாததா என்ன//

    மைனரின் 'சட்ல்' ஜோக்கை நீங்கள் சரியாக 'கேட்ச்' பண்ண‌வில்லையோ!?
    ஆசிரியைகளைப் 'பேய்கள்'என்று உருவகப் படுத்துகிறர். உமாவை சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறார்!

    ReplyDelete
  11. “ ஜில்லென்று காற்று வந்தது.
    நில்லென்று கேட்டுக் கொண்டது.
    குடைபோல இமை விரிய,
    மலர்போல் முகம் மலர,
    உன்னோடு பேசச் சொன்னது”

    கவிதை அருமை அருமையோ அருமை.....
    இதுபோன்ற கவிதைகளை புனைப் பெயரிலாவது எழுங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  12. உமா,
    உம்..... நிஜமா,
    அருமைம்மா!
    உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய பாணி.
    நன்றி!

    ReplyDelete
  13. ///அதெப்படி முதல் பின்னூட்டம் இட்டதோடு, முதல் பெஞ்சிலும் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டீர்களே! இந்த வேலையை சிங்கப்பூர் ஆலாசியம்தான் தொடர்ந்து செய்வார்////
    அத ஏன் கேட்க்கிறேங்க சார், கொஞ்ச நாளாவே உமாவும் மைனரும் பலமா சொற்களம் நடத்திக்கிட்டு இருக்காங்க எப்படியோ எங்களுக்கும் அதில்......
    மைனர், உமாவை கமான்ட் அடிக்கனுன்னே காத்துக்கொண்டு இருந்த மாதிரி தெரியுது.....
    கொஞ்ச நேரத்தில பாருங்க மாமி வருவாங்க.....

    ReplyDelete
  14. ////Shyam Prasad said...
    மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் உண்மை என்றால் , ஆவிகளும் உண்மை தான் . சிவபுராணத்தில் உள்ளது./////

    ஆவி துடிக்குதடி’ என்று கவியரசரும் அடிக்கடி குறிப்பிடுவார். அந்த ஆவி வேறு. இன்னொரு ஆவியும் இருக்கிறது. வீட்டில் வென்னீர் கொதிக்கும்போது வரும்!

    ReplyDelete
  15. ///kmr.krishnan said...
    //SP.VR. SUBBAIYA said...
    /////minorwall said...
    //////////////அதுலயும் எங்கள் வகுப்பு முன்புறம் இருந்ததால அங்க ஆசிரியைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்,
    அதனால் பின்புறம் இருக்கும் 8ஆம் வகுப்பில் செய்யலாம்னு யோசிச்சோம்.\\\\\\\\\\\\
    பேய்கள் நடமாட்டம்ன்னு சிம்பிளா எழுதியிருக்கலாம்./////.
    அப்படிச் சிம்ப்பிளாக எழுதினால், சுவாரசியம் மிஸ்ஸாகுமே மைனர்! உங்களுக்குத் தெரியாததா என்ன//
    மைனரின் 'சட்ல்' ஜோக்கை நீங்கள் சரியாக 'கேட்ச்' பண்ண‌வில்லையோ!?
    ஆசிரியைகளைப் 'பேய்கள்'என்று உருவகப் படுத்துகிறர். உமாவை சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறார்!////

    நானும் பார்த்தேன். உமா அவர்கள் குறிபிட்டுள்ள ஆசிரியைகள் சிவலோகத்தில் இருக்கிறார்களா? அல்லது வைகுண்டத்தில் இருக்கிறார்களா? யாருக்குத் தெரியும்? அதனால் சிக்கலில் மாட்டும் வாய்ப்பு இல்லை!

    ReplyDelete
  16. Alasiam G said...
    “ ஜில்லென்று காற்று வந்தது.
    நில்லென்று கேட்டுக் கொண்டது.
    குடைபோல இமை விரிய,
    மலர்போல் முகம் மலர,
    உன்னோடு பேசச் சொன்னது”
    கவிதை அருமை அருமையோ அருமை.....
    இதுபோன்ற கவிதைகளை புனைப் பெயரிலாவது எழுங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது.//////

    கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகள் அவை!

    ReplyDelete
  17. ////Alasiam G said...
    உமா,
    உம்..... நிஜமா,
    அருமைம்மா!
    உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய பாணி.
    நன்றி!////

    நன்றி. ஆலாசியம்!

    ReplyDelete
  18. ////Alasiam G said...
    ///அதெப்படி முதல் பின்னூட்டம் இட்டதோடு, முதல் பெஞ்சிலும் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டீர்களே! இந்த வேலையை சிங்கப்பூர் ஆலாசியம்தான் தொடர்ந்து செய்வார்////
    அத ஏன் கேட்க்கிறேங்க சார், கொஞ்ச நாளாவே உமாவும் மைனரும் பலமா சொற்களம் நடத்திக்கிட்டு இருக்காங்க எப்படியோ எங்களுக்கும் அதில்......
    மைனர், உமாவை கமான்ட் அடிக்கனுன்னே காத்துக்கொண்டு இருந்த மாதிரி தெரியுது.....
    கொஞ்ச நேரத்தில பாருங்க மாமி வருவாங்க...../////

    மீண்டும் மைனரும் வருவார்!:-)))

    ReplyDelete
  19. இருட்டுதான் பேய். மின்சாரம் வந்தவுடன் பேய் பயம் போய் விட்டது என்று என் தந்தை கூறுவார். கேரளாவில் ரத்தயக்‌ஷி என்ற நாடகம் பார்த்தேன். அதில் கதாநாயகி பேய்யாக மாறிவிடுவார்.நாடகத்தில் அதை தத்ருபமாக செய்து இருந்தார்கள். அப்போது பயந்த நான் தனியாக தூங்க முடியாமல் வெகு நாள் இரவில் விழித்திருந்தேன். உமா தைரியசாலிதான்.

    ReplyDelete
  20. ////krish said...
    இருட்டுதான் பேய். மின்சாரம் வந்தவுடன் பேய் பயம் போய் விட்டது என்று என் தந்தை கூறுவார். கேரளாவில் ரத்தயக்‌ஷி என்ற நாடகம் பார்த்தேன். அதில் கதாநாயகி பேய்யாக மாறிவிடுவார்.நாடகத்தில் அதை தத்ருபமாக செய்து இருந்தார்கள். அப்போது பயந்த நான் தனியாக தூங்க முடியாமல் வெகு நாள் இரவில் விழித்திருந்தேன். உமா தைரியசாலிதான்.////

    உங்க தந்தை சொன்னபடி விளக்கைப் போட்டுக்கொண்டு தூங்கியிருக்கலாமே! தூங்க முடியமல் போனதற்குக் காரணம் தந்தை சொல்லைக் கேட்காததுதான்!

    ReplyDelete
  21. உள்ளேன் ஐயா!

    தோழியின் பேய் கதை

    ஒபெனிங் ஸாங்

    தாயே அம்மா

    மா இசக்கி!

    அம்மி அரைக்கி

    உலை கொதிக்கி

    வயிர் பசிக்கி

    அன்னம் போடம்மா!

    நீ

    அன்னம் போடம்மா!

    ReplyDelete
  22. Dear sir,
    will u pls provide these writer's blog address too...

    it will help to read their interesting writings more.

    it will also encourage writers to write more ...
    thank u
    vinoth kumar.M

    ReplyDelete
  23. ///kannan said...
    உள்ளேன் ஐயா!
    தோழியின் பேய் கதை
    ஒபெனிங் ஸாங்

    தாயே அம்மா
    மா இசக்கி!
    அம்மி அரைக்கி
    உலை கொதிக்கி
    வயிர் பசிக்கி
    அன்னம் போடம்மா!
    நீ
    அன்னம் போடம்மா!////

    இசைக்கி அம்மாவின் பதில்:

    அம்மி தானா அரைக்கிதுடா
    உலை அதுவா கொதிக்கிதுடா
    பொறுத்திருந்து நீயாகத் திண்ணடா
    பொறுமையில்லாத மக்கா!

    ReplyDelete
  24. ////Vinoth said...
    Dear sir,
    will u pls provide these writer's blog address too...
    it will help to read their interesting writings more.
    it will also encourage writers to write more ...
    thank u
    vinoth kumar.M////

    எனக்குத் தெரிந்து இல்லை. இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தருவார்கள் அன்பரே!

    ReplyDelete
  25. உள்ளேன் ஐயா

    ஒன்னாவது வகுப்பில் இருந்துதொடந்து
    எதோ படிக்கின்ற இந்நாள் வரைக்கும் பார்த்தும் விட்டேன் வகுப்பறையில்
    உண்டாகும் சண்டை , கோஸ்டி பூசல், வெகுளித்தனமான வாழ்க்கை ....... என எது வரைக்கும் வந்தாலும் வகுப்பறை கள்ளம் கபடம் இல்லாத பிஞ்சுகளின் சோலைவனமேதான்.

    ReplyDelete
  26. //////kannan said...
    உள்ளேன் ஐயா
    ஒன்னாவது வகுப்பில் இருந்துதொடந்து
    எதோ படிக்கின்ற இந்நாள் வரைக்கும் பார்த்தும் விட்டேன் வகுப்பறையில்
    உண்டாகும் சண்டை , கோஸ்டி பூசல், வெகுளித்தனமான வாழ்க்கை ....... என எது வரைக்கும் வந்தாலும் வகுப்பறை கள்ளம் கபடம் இல்லாத பிஞ்சுகளின் சோலைவனமேதான்////.

    அதற்குக் காரணம்.இது குடும்பப்பள்ளிக்கூடம். தாத்தா, பாட்டி, பிள்ளைகள், பேரன் பேத்திகள் என்று அனைவரும் வயது வித்தியாசம் இல்லாமல் படிக்கின்ற பள்ளிக்கூடம். 20 வயது முதல் 75 வயதுவரை அனைத்து வயதினரும் இருக்கின்றார்கள். எண்ணிக்கையும் உலகில் எந்த வகுப்பிலும் இல்லாத அளவு இருக்கின்றது (1812)

    ReplyDelete
  27. சார், நான் எழுதினதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லலையே? உங்க கமென்ட்டையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  28. /////Uma said...
    சார், நான் எழுதினதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லலையே? உங்க கமென்ட்டையும் எதிர்பார்க்கிறேன்./////

    இயல்பாக எழுதியுள்ளீர்கள். படிப்பதற்குத் தொய்வில்லாமல் இருக்கிறது. அதனால்தான் பதிவில் ஏற்றினேன். பதிவில் ஏற்றியதே, நன்றாக உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லும் கமென்ட்டாகும் சகோதரி!

    விளக்கம்போதுமா? ஹி.ஹி.....கமென்ட் போதுமா?

    ReplyDelete
  29. நான் நேத்து பார்த்த Resident Evil AfterLife 3D ( as biohazard 3 D - part 4 - in Japan )
    பட adventurous heroin மில்லா ஜோனோவிச் போல ஒரு figure ஐக் கற்பனை பண்ணிக்குறேன்..//

    அந்த போட்டோவை அனுப்பினீங்கன்னா, நானும் தெரிஞ்சுக்கலாமில்லே, என்ன கற்பனை பண்ணி இருக்கீங்கன்னு.

    ReplyDelete
  30. பேய்கள் நடமாட்டம்ன்னு சிம்பிளா எழுதியிருக்கலாம்..//

    நான் இதுவரைக்கும் போட்ட கமென்ட்டுக்கெல்லாம் சேர்த்து வச்சு பழி தீர்த்துக்கலாம்னு காத்திட்டிருந்தீங்க போல!! (முதல் ஆளா வந்து எழுதிருக்கறதைப் பார்த்தாலே தெரியுது).

    ReplyDelete
  31. ஆமா, உங்க தொடர்கதை 2 வது பகுதி இன்னும் எழுதி முடிக்கலையா? இல்ல, பயந்துக்கிட்டுப் பாதிலயே நிறுத்திட்டீங்களா? (அப்ப உங்களை கவனிச்சுக்கறேன்).

    ReplyDelete
  32. நல்லா எழுதிருக்கீங்க..வாழ்த்துக்கள்..//

    எப்படி இருந்தாலும் உண்மையை மறுக்க முடியாதுன்னு தெரியுது பாருங்க.

    ReplyDelete
  33. minorwall has left a new comment on the post "அறஞ்செய விரும்பலாமா? கூடாதா? - பகுதி.2":

    கண்ணன்..பார்த்தேன்..கமென்ட் எல்லாம்..
    ஆமா ....... :-))) 'இழுவையைப் போட்டு சாப்பிடாமக் கிடந்தா இப்பிடித்தான் எதாவுது ஏடாகூடம் செய்யத் தோணும், கருவாட்டுக் கொழம்பு இருக்கு,வாங்க சாப்பிடலாம்' ன்னு கமெண்ட்
    அடிப்பாப்லே..அப்பிடி எடுத்துக்குங்க.

    :-)))

    உதாரணத்துக்கு 'மாஷே' ன்னா ஏதோ உங்களுக்கும் வாத்தியாருக்கும் மட்டுமே புரிகிற சமாச்சாரமின்னு நினச்சுக்கிட்டுருந்தேன்..அவரே
    என்னாது அதுன்னு கேட்டுருக்காரு..

    :-)))

    தல
    நின்கலிட சம்சாரம் அத்தனைக்கு
    போறதில்ல கேட்டோ :-)))

    மவனே! தினேசா எந்தா சங்கதி மனதிலாட்சோ :-)))

    வாத்தியார் = மாஷ் , மாஷே , ஆசானே , குரு

    எந்தா மனசிலாட்சோ மவனே தினேசா!

    எந்தன் ஏட்டனுக்கு இத்தன திவசம் எங்கினே மனசில ஆகாது போயி

    என்டே " குருவாருப்பா " நீ இத கேட்கிதில்லையோ!

    ReplyDelete
  34. minorwall has left a new comment on the post "அறஞ்செய விரும்பலாமா? கூடாதா? - பகுதி.2":

    கண்ணன்..பார்த்தேன்..கமென்ட் எல்லாம்..
    ஆமா ....... :-))) 'இழுவையைப் போட்டு சாப்பிடாமக் கிடந்தா இப்பிடித்தான் எதாவுது ஏடாகூடம் செய்யத் தோணும், கருவாட்டுக் கொழம்பு இருக்கு,வாங்க சாப்பிடலாம்' ன்னு கமெண்ட்
    அடிப்பாப்லே..அப்பிடி எடுத்துக்குங்க.

    :-)))

    உதாரணத்துக்கு 'மாஷே' ன்னா ஏதோ உங்களுக்கும் வாத்தியாருக்கும் மட்டுமே புரிகிற சமாச்சாரமின்னு நினச்சுக்கிட்டுருந்தேன்..அவரே
    என்னாது அதுன்னு கேட்டுருக்காரு..

    :-)))

    தல
    நின்கலிட சம்சாரம் அத்தனைக்கு
    போறதில்ல கேட்டோ :-)))

    மவனே! தினேசா எந்தா சங்கதி மனதிலாட்சோ :-)))

    வாத்தியார் = மாஷ் , மாஷே , ஆசானே , குரு

    எந்தா மனசிலாட்சோ மவனே தினேசா!

    எந்தன் ஏட்டனுக்கு இத்தன திவசம் எங்கினே மனசில ஆகாது போயி

    என்டே " குருவாருப்பா " நீ இத கேட்கிதில்லையோ!

    ReplyDelete
  35. அந்த ஒரு ரூபா மேட்டர் எப்புடி?//

    அதுவும் நான் எழுதின அதே முறையில்தான் செய்யணும், டம்ளர்/மெழுகுவர்த்திக்குப் பதிலா ஒரு ரூபாய் காயின் வெச்சுக்கணும். (எந்தப் பேயோட பேசப்போறீங்கன்னும் சொல்லலாமில்ல)

    ReplyDelete
  36. நான் மீடியமாகப் பயன் படுத்தப்பட்டு இருக்கிறேன்.பின்னர் ஒருமுறை அந்தக் கதையை வச்சுக்கலாம்.//

    கிருஷ்ணன் சார், உங்க அனுபவத்தையும் எழுதவும், நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  37. அதெப்படி முதல் பின்னூட்டம் இட்டதோடு, முதல் பெஞ்சிலும் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டீர்களே! //

    நான் அவர் படத்தை ரோபோட் மாதிரி இருக்குன்னு சொன்னதுக்கு பழி தீர்த்துக்கத்தான்.

    ReplyDelete
  38. அப்படிச் சிம்ப்பிளாக எழுதினால், சுவாரசியம் மிஸ்ஸாகுமே மைனர்! உங்களுக்குத் தெரியாததா என்ன?//

    அது தெரிஞ்சுருந்தா, அவர் தொடர்கதை எழுத ஆ'ரம்பி'ச்சுருப்பாரா என்ன?

    ReplyDelete
  39. ஆசிரியைகளைப் 'பேய்கள்'என்று உருவகப் படுத்துகிறர். உமாவை சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறார்!//

    அதெல்லாம் தலைகீழாக நின்னாலும் மாட்டிவிட முடியாது. நான் இதுவரை படிச்ச பள்ளி/கல்லூரி எல்லாத்துலயும் நல்ல பேர்தான் வாங்கிருக்கேன். ஒவ்வொரு தடவை ஊருக்குப் போகும்போதும், எல்லோரையும் போய்ப்பார்ப்பேன்.

    கந்தசாமி சார் இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள், உங்களுக்குத் தெரியுமா? மிகச் சிறந்த ஆசிரியர்.

    ReplyDelete
  40. உம்..... நிஜமா,
    அருமைம்மா!
    உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் கூடிய பாணி//

    உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி!!!!

    ReplyDelete
  41. கொஞ்ச நேரத்தில பாருங்க மாமி வருவாங்க.....//

    வந்துட்டோம்ல!!!!!

    ReplyDelete
  42. மைனர், உமாவை கமான்ட் அடிக்கனுன்னே காத்துக்கொண்டு இருந்த மாதிரி தெரியுது...//

    ரொம்ப சரி

    ReplyDelete
  43. நானும் பார்த்தேன். உமா அவர்கள் குறிபிட்டுள்ள ஆசிரியைகள் சிவலோகத்தில் இருக்கிறார்களா? அல்லது வைகுண்டத்தில் இருக்கிறார்களா? யாருக்குத் தெரியும்? அதனால் சிக்கலில் மாட்டும் வாய்ப்பு இல்லை!//

    எனக்குப் பாடம் நடத்திய ஆசிரிய/ஆசிரியைகள் இன்னும் அங்க இருக்கிறார்கள். நான் ஒவ்வொரு தடவை போகும்போதும் போய்ப்பார்ப்பேன்.

    ReplyDelete
  44. மீண்டும் மைனரும் வருவார்!:-)))//

    அவருக்கு இதத் தவிர வேற வேலை வெட்டி இருந்தாத்தானே? (வீட்டுல அவங்க மனைவி வேளா வேளைக்குச் சமைச்சுப்போடறதைச் சாப்பிடற இன்னோரு வேலை இருக்கு, தப்பா சொல்லிட்டேன்)

    ReplyDelete
  45. அப்போது பயந்த நான் தனியாக தூங்க முடியாமல் வெகு நாள் இரவில் விழித்திருந்தேன். உமா தைரியசாலிதான்.//

    தைரியம் இருக்கோ இல்லையோ, தைரியசாலி போல காமிச்சுக்கறதுல நான் எக்ஸ்பர்ட்.

    ReplyDelete
  46. தோழியின் பேய் கதை

    ஒபெனிங் ஸாங்

    தாயே அம்மா

    மா இசக்கி!

    அம்மி அரைக்கி

    உலை கொதிக்கி

    வயிர் பசிக்கி

    அன்னம் போடம்மா!

    நீ

    அன்னம் போடம்மா!//

    கண்ணன் ஏன்ன்ன்ன்ன்ன்ன், திடீர்னு என்ன ஆச்சு, மைனர்ட்ட பேசறதுக்கு முன்னாடி வரைக்கும் நல்லாத்தானே இருந்தீங்க? இப்ப பாருங்க எப்படி ஆயிட்டிங்கன்னு? சீக்கிரமா ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, இந்த மாதிரி சகவாசத்தையெல்லாம் விடுங்க.

    ReplyDelete
  47. will u pls provide these writer's blog address too...

    it will help to read their interesting writings more. //

    Vinoth, interestingகா இருந்ததுன்னு சொன்னதுக்கு நன்றி. ஆனா நீங்க நினைக்கிற மாதிரி வேற எதுவும் நான் இன்னும் என்னோட ப்ளாக்கில கிறுக்கல. ஒரு தொடர்கதை ஒண்ணு யோசிச்சு வச்சுருக்கேன். ஆனா அத நான் எப்போ எழுதுவேன்னு எனக்கே தெரியாது (அவ்ளோ சோம்பேறித்தனம்)

    ReplyDelete
  48. பதிவில் ஏற்றியதே, நன்றாக உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லும் கமென்ட்டாகும் சகோதரி!//

    இதுமாதிரி எல்லாரையும் ஊக்குவிப்பதற்கு ரொம்ப நன்றி சார்

    ReplyDelete
  49. minor தல

    3 வருடமாக குடும்ப ஜோதிடர் முதல் தாய் சகோதரிகள் வரை சொல்லி விட்டனர்
    கண்ணனுடைய லீலையை காட்டி மீராவை கொண்டுவர ஆனால் பாருங்கோ அந்த கண்ணனுக்கு எல்லாம் சரி அவனோ யாதவகுலத்தில் யசோதையின் ஒரே மகன் அவன் மாயவன்

    இந்தகண்ணன் ஜனித்தது ஒன்றும் யாதவகுலமும் அல்ல!
    மாயவித்தை அறிந்தவனும் அல்ல! அன்று,

    எம்மை எள்ளீன் அளவீர்க்கு கூட எடைபோடாதவர்களின் முன்னர் சுயமாக நற்சொல்லீன் எடைக்கு வந்துள்ளோம் இன்று. .........

    என்டே மீரா! எத்தனை திவசம் ஆனாலும் என்னை நோக்கி அவ்விடே அவ்விடே ..............

    என்டே தெய்வம் " திருச்செந்தூர் முருகன்" என்றும் என்னுடன் உண்டு ,

    ReplyDelete
  50. ///////////
    kannan said... தல
    நின்கலிட சம்சாரம் அத்தனைக்கு
    போறதில்ல கேட்டோ :-)))
    மனசுலாயி..இழுவை இல்லேன்னு சொல்லியிருக்கீங்கோ..பின்னே..எதுவரை போகும்..?
    வாசுதேவ நல்லூர் காரருக்கு எவிடருந்து இத்தர வல்லிய மலையாளம்?
    \\\\\\\\\

    ReplyDelete
  51. Uma
    உயிரோட்டமாக நமது வாத்தியார் போலவே எழுதியிருக்கிறீர்கள் சகோதரி. நமது அனுபவங்களை எழுத்தில் வடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனிதான். வகுப்பறை எழுத்துப் பாசறை ஆகப்போகிறது.

    ReplyDelete
  52. ////////Uma said...
    அப்படிச் சிம்ப்பிளாக எழுதினால், சுவாரசியம் மிஸ்ஸாகுமே மைனர்! உங்களுக்குத் தெரியாததா என்ன?//

    அது தெரிஞ்சுருந்தா, அவர் தொடர்கதை எழுத ஆ'ரம்பி'ச்சுருப்பாரா என்ன?\\\\\\\\\

    ///kmr.krishnan said...
    மைனரின் 'சட்ல்' ஜோக்கை நீங்கள் சரியாக 'கேட்ச்' பண்ண‌வில்லையோ!?
    ஆசிரியைகளைப் 'பேய்கள்'என்று உருவகப் படுத்துகிறர். உமாவை சிக்கலில் மாட்டிவிடப் பார்க்கிறார்! ////

    KMRK sir சீனியர் சீனியர்தான்..

    ReplyDelete
  53. இதுபோல் ஆவிகளுடன் பேசுவதில் ஏனோ மாணவ மாணவிகள்-தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்களில் பலர் இதுபோன்ற 'ஒயிஜா போர்டு' பரிசோதனைகளில் ஈடுபட்டு மாட்டிக்கொண்ட அனுபவங்கள் ஏராளம். 'ஒயிஜா போர்டு'க்கு இன்னொரு பெயர், DANGEROUS TOY என்று வைக்குமளவிற்கு இந்த பரிசோதனைகள் பிரபலம்.

    ஆனால், உங்களுடைய அனுபவம், ஜாலியான அனுபவங்களாகவே இருப்பது மகிழ்ச்சி.

    -
    DREAMER

    ReplyDelete
  54. சகோதரி உமா
    ஆவி சோதிடத்தில் தொடங்கி
    கிளி சோதிடத்தில் முடித்தது போல்

    அப்படியே
    ஒரு ராஜேஷ்குமாரை கொண்டு வந்து நிறுத்திட்டாரு..

    இந்த பேய் அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும் . .

    திருவாசகத்தில் மட்டும் அல்ல
    திருக்குறளிலும் பேய் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது . .

    அகலை என்ற சொல் பேய் என்ற பொருளை தரும் இந்த அகலைளை குறளில் . .

    மக்கள் உண்டு என சொல்வதை (இறைவன் உண்டு என சொல்வதை)
    மற்றவர்கள் இல்லை என்று சொன்னால் (கடவுள் இல்லாக் கட்சிக்காரர்கள்) அவர்களை அகலையாக கொள்ள வேண்டும் (அவர்களை பேயாக கொள்ள வேண்டும்) என வள்ளுவம் கூறுகிறது . .

    மன்னிக்க குறள் மற்றும் குறள் எண் நினைவிற்கு வரவில்லை . .
    (குறள் எண்ணை மேற்கொளாக தருபவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  55. உமா அக்கா கதை super .//

    ரொம்ப நன்றி மகேஷ்.

    ReplyDelete
  56. உயிரோட்டமாக நமது வாத்தியார் போலவே எழுதியிருக்கிறீர்கள் சகோதரி. நமது அனுபவங்களை எழுத்தில் வடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி தனிதான். வகுப்பறை எழுத்துப் பாசறை ஆகப்போகிறது.//

    பாராட்டுக்கு நன்றி. ம்ம், நிஜம்தான். படிக்கும்போது நிறைய பேச்சு/கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும், இங்கே இப்போதான் முதன்முறையா எழுதியிருக்கிறேன். அதற்கு இப்படி ஊக்குவிக்கும் வாத்தியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  57. ஆனால், உங்களுடைய அனுபவம், ஜாலியான அனுபவங்களாகவே இருப்பது மகிழ்ச்சி.//

    நன்றி Dreamer

    ReplyDelete
  58. அப்படியே ஒரு ராஜேஷ்குமாரை கொண்டு வந்து நிறுத்திட்டாரு.//

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ஐயர். இருந்தாலும் நீங்க ராஜேஷ்குமாரோடு ஒப்பிட்டது எனக்கே ரொம்ப ஓவராத்தெரியுது.

    ReplyDelete
  59. மகேஷ் ராஜ் கூறியது:

    உமா அக்கா கதை super .//

    ஆ நான் சொன்னது திருப்பி எனக்கேவா?

    ReplyDelete
  60. Dear Uma Akka,

    Kalukkureenga Ponga...

    Rds

    Pandian

    ReplyDelete
  61. uma அக்கா கதை சூப்பர்...
    அலுவலக நண்பரிடம் bet கட்டி stanley kubrick -வோட shining படத்தை தனியா பார்த்த ஞாபகம் வருது...
    படம் நடுவுல hanger-la மாட்டி இருந்த shirt ஏதேச்சையா கீழே விழ... பயந்து போய் laptop -அ close பண்ணிட்டு தூங்குனது தான்...
    இன்ன வரைக்கும் அந்த படத்தை பாக்கலே..

    ReplyDelete
  62. அய்யர் வாள் நீங்கள் குறிப்பிடும் குறள் இதுதான் என்று நினைக்கிறன்..

    குறள் 850:

    உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.

    இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

    ReplyDelete
  63. முதல் ஏமாற்றம் புகைப்படம்.......இதற்கு நான் தான் காரணம் :-)))
    இரண்டாவது ஏமாற்றம் கதை.......இதை கதையாக பார்க்காமல் அவரின் அனுபவமாக பார்த்தால் ஓகே.
    ரொம்ப பிடித்தது தைரியம்...
    இப்படி ஒன்னு எழுதி அதை வெளியிட ரொம்ப தைரியம் வேண்டும்......
    இந்த ஆசிரியையின் மூன்றாம் வீட்டில் நிறையா பரல்கள் உள்ளதோ????

    ReplyDelete
  64. Uma said...

    தோழியின் பேய் கதை
    ஒபெனிங் ஸாங்
    தாயே அம்மா ...............

    கண்ணனுடைய விதி எண் 6 (சுக்கிரனுடைய ஆதிக்க எண் ) இதுவும் கூட உண்மைதான்
    இந்தவகை எண் காரர்களுக்கு எதிரியே கிடையாது தோழி!
    தாயே அம்மா
    மா இசக்கி!
    அம்மி அரைக்கி
    உலை கொதிக்கி
    வயிர் பசிக்கி
    அன்னம் போடம்மா!

    இது ஒன்னும் சொந்த சரக்கு அல்ல, எங்களுடைய நெல்லை சீமையில் இசக்கி அம்மனை & சிறு தேவதைகளை குல தெய்வமாக கொண்டவர்கள் கோவிலின் விரதனாட்களில் அம்மனை வேண்டி பாடும் கிராமத்து pakthi paadal.

    எந்த பேயையும் :-))) (மன) விரட்டும் வல்லமை கொண்ட இசக்கி அம்மனுடைய பாடல்

    ReplyDelete
  65. மிநோர்வால் said...

    வாசுதேவ நல்லூர் காரருக்கு எவிடருந்து இத்தர வல்லிய மலையாளம்?
    \\\\\\\\\ Saturday, September 18,


    இது தான் உண்மை!
    பட்டாலத்துகாரரின் (அப்பாவின்) சொந்த ஊர் செங்கோட்டை ( 1958 க்கு முன்னாடி திருவாங்கூர் ஸ்தமச்தானத்துக்கின் கீழ், கேரளாவின் எல்கை தாலுகாதான் இந்த சென்.... தற்பொழுதும் 10 Km கடந்து விட்டால் keralam )

    கண்ணனை போல பிறந்து வளர்ந்த அந்நிய ஊர் தான் வாசுதேவ நல்லூர்
    ( ஊரின் மேற்கில் ஒரு ஆறு கிலோ மீட்டார் சென்றால் மலையாள தேசம். மலையை கடந்து விட்டால் )

    எப்படி :-)))

    ReplyDelete
  66. Dear Uma Akka,

    Kalukkureenga Ponga...

    Rds

    Pandian//

    ரொம்ப நன்றி பாண்டியன்

    ReplyDelete
  67. படம் நடுவுல hanger-la மாட்டி இருந்த shirt ஏதேச்சையா கீழே விழ... பயந்து போய் laptop -அ close பண்ணிட்டு தூங்குனது தான்...
    இன்ன வரைக்கும் அந்த படத்தை பாக்கலே..//

    ha ha ha

    ReplyDelete
  68. இப்படி ஒன்னு எழுதி அதை வெளியிட ரொம்ப தைரியம் வேண்டும்......
    இந்த ஆசிரியையின் மூன்றாம் வீட்டில் நிறையா பரல்கள் உள்ளதோ????//

    ஆமாம்

    ReplyDelete
  69. ஆவி கதை அருமை.//

    ரொம்ப நன்றி adimoulame

    ReplyDelete
  70. எங்களுடைய நெல்லை சீமையில் இசக்கி அம்மனை & சிறு தேவதைகளை குல தெய்வமாக கொண்டவர்கள் கோவிலின் விரதனாட்களில் அம்மனை வேண்டி பாடும் கிராமத்து pakthi paadal.//

    ஓ சாரி

    ReplyDelete
  71. மிநோர்வால் said...

    வாசுதேவ நல்லூர் காரருக்கு எவிடருந்து இத்தர வல்லிய மலையாளம்?
    \\\\\\\\\ Saturday, September 18,


    இது தான் உண்மை!
    பட்டாலத்துகாரரின் (அப்பாவின்) சொந்த ஊர் செங்கோட்டை ( 1958 க்கு முன்னாடி திருவாங்கூர் ஸ்தமச்தானத்துக்கின் கீழ், கேரளாவின் எல்கை தாலுகாதான் இந்த சென்.... தற்பொழுதும் 10 Km கடந்து விட்டால் keralam )

    கண்ணனை போல பிறந்து வளர்ந்த அந்நிய ஊர் தான் வாசுதேவ நல்லூர்
    ( ஊரின் மேற்கில் ஒரு ஆறு கிலோ மீட்டார் சென்றால் மலையாள தேசம். மலையை கடந்து விட்டால் )

    எப்படி :-)))

    ReplyDelete
  72. Uma said...
    கண்ணன் ஏன்ன்ன்ன்ன்ன்ன், .....ஆயிட்டிங்கன்னு? சீக்கிரமா ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, இந்த மாதிரி சகவாசத்தையெல்லாம் விடுங்க.Saturday,September 18, 2010

    என்டே சமயம் அத்தனைக்கும் போறா (து )
    சோலைவனத்தில் சிட்டு குருவிகளுடன்
    சுற்றி திரிந்த கண்ணன்
    பாலைவனத்தில் பணபசையை தேடி ....... எந்து பறையா......
    என்டே கூட்டுகாரி! சோட்டானிக்கர பகவதி கூட கேத்கதில்லையே, என்தோ ஒரு கஷ்டகாலம்....

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com