+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அறஞ்செய விரும்பலாமா? கூடாதா?
மனவளக் கட்டுரை
---------------------------------
‘அறஞ்செய விரும்பு’ என்பதை ஒளவையார் தனது ஆத்திசூடி அறிவுரையில் துவக்க அறிவுரையாக எழுதிவைத்துள்ளார்.
அறம் என்றால் என்ன?
குடும்ப வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்க ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் அல்லது கடமைகள் என்று பொருள்.
ethical or code of conduct of life! ‘நற்செயலை செய்வதற்கே
விரும்புங்கள்’ என்று சுருக்கமாகப் பொருள் கொள்ளலாம்.
இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில், விலைவாசி உயர்வில்,
அன்றாடத் தேவைகளுக்கே மனிதன் அல்லாடும் சூழ்நிலையில்
அறமாவது, மண்ணாங்கட்டியாவது, அதெல்லாம் சாத்தியமில்லை
என்று சொல்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.
மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்.
--------------------------------------------------------------------------------------
கடவுள் மனிதனுக்குக் கொடுத்துள்ள வரம் இரண்டு: 1.மறதி. 2.தூக்கம். இவை இரண்டும் இல்லை என்றால் மனிதன் தன்னுடைய துக்கங்களையும், கவலைகளையும் மறந்துவிட்டு செயல்பட முடியாது!
அதுபோல கடவுள் மனிதனுக்குக் கொடுத்துள்ள சாபம் இரண்டு: 1. ஆசை 2, திருப்தியின்மை.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மேல் நிலை ஆசைகள் மூன்றில், ஒன்றிலாவது மனிதன் அதீத ஈடுபாட்டுடன் இருப்பான். அதை வெறி என்றுகூடச் சொல்லலாம்.
அதுபோல சமைத்துப் பறிமாறப்படும் உணவை, சற்று நேரத்தில் வயிறு நிறைந்தவுடன், போதும் என்பான்.
மற்ற எதையும் அவன் போதும் என்று சொல்ல மாட்டான்.
அம்பானியின் சொத்துக்கள் முழுவதையும் எழுதி வாங்கிக்கொடுத்து
விட்டால், உனக்குப் போதுமல்லவா? அதற்குப் பிறகு டவுன் பஸ்சைப்
போல பொருளைத் தேடி ஓடிக் கொண்டிருக்க மாட்டாயல்லவா?
என்று கேட்டால், “ஹிஹி..அப்படியே பில் கேட்ஸின் சொத்துக்
களையும் எழுதி வாங்கிக் கொடுத்துவிடுங்கள்” என்பான்.
“சென்னை சிலக்ஸ் கடையைப் பூட்டி சாவியை வாங்கிக் கொடுத்து விடுகிறோம். அதற்குப் பிறகு புடவை ஆசையை விட்டுவிடுவாயா
என்று ஒரு பெண்ணிடம் கேட்டால், “அப்படியே, போத்தீஸையும்
பூட்டி சாவியை வாங்கிக் கொடுத்துவிடுங்கள்” என்பாள்.
ஆசைக்கு அளவு ஏது? அளவே கிடையாது!
பஸ்சில் செல்கிறவனின் ஆசை. ஒரு டூ வீலர். அது இருந்தால்
காத்திருத்தல் மற்றும் இடிபாடுகள், கசகச வியர்வை இல்லாமல்
வெளியே மற்றும் வேலைக்குச் சென்று வரலாம். குறைந்த பட்சம்
ஒரு மொபெட் வண்டிபோதும் என்பான்.
மொபட் கிடைத்தவுடன், சில தினங்களில், இது என்ன கட்டை வண்டி
போல ஒரு குறிப்பிட்ட வேகத்திலேயே போகிறது ஒரு மோட்டார்
சைக்கிள் இருந்தால் - பல்சர் வண்டி அல்லது ஹீரோ ஹோண்டா
இருந்தால் பரவாயில்லை என்பான். அதையும் நிறைவேற்றினால்,
சில மாதங்களில் சலித்துக்கொள்வான். இடுப்பு வலிக்கிறது. காராக
இருந்தால் பரவாயில்லை. பழைய காராக இருந்தாலும் பரவாயில்லை என்பான்.
பழைய கார் எதற்கப்பா என்று புதுக்காராகவே மாருதி 800 அல்லது
மாருதி ஆல்ட்டோ வண்டி ஒன்றை வாங்கிக் கொடுத்தால், சில
நாட்களில் சொல்வான். இந்த வண்டியில் கால் இடிக்கிறது. முட்டி
வலிக்கிறது. மாருதி ஜென் அல்லது ஹுண்டாய் சாண்ட்ரோவாக
இருந்தால் பரவாயில்லை என்பான். பிறகு ஹோண்டா சிட்டி
போன்ற பெரிய காராகக் கேட்பான். அத்துடன் தனது மனைவி,
மக்கள் குடும்பத்தினருக்குத் தனியாக ஒரு வண்டியிருந்தால்
பரவாயில்லை என்று சொல்லி, குவாலிஸ்’ காருக்கு அடிபோடுவான். கடைசியில் இரண்டு கார்களை நிறுத்த வீட்டில் இடமில்லை.
வீட்டை மாற்ற வேண்டும் என்பான்.
வீடு விஷயத்திலும் அப்படித்தான். முதலில் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மென்ட்டில் ஆரம்பித்து, மூன்று பெட்ரூம் அபார்ட்மென்ட்
வரை மாறி, கடையில் தனி பங்களா கேட்பான். ஏரியா செலக்சனிலும் அப்படித்தான் இருப்பான்.
துவக்கத்தில், கூடுவாஞ்சேரி, திருவொற்றியூர் அல்லது அம்பத்தூர், வில்லிவாக்கம் அல்லது தாம்பரம், நங்கநல்லூர் போன்ற புறநகர்ப்
பகுதியில் வீடு கேட்பவன், கடைசியில் தி.நகர் அல்லது தேனாம்
பேட்டை அல்லது போயஸ்கார்டன் பகுதிகளில் வீடு கேட்பான்.
ஏன் அண்ணாசாலையில், மன்றோ சிலைக்கு அருகில் வீடு
கேட்டால்கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.
இட விஷயத்தில்தான் இப்படி என்றால் பெண் விஷயத்தில் இதைவிட மோசமாக இருப்பான்.
திருமணம் செய்து கொள்கிறேன் என்பவனுக்குப். பெண் தேடத் துவங்கியவுடன். அழகான பெண்ணாக வேண்டும் என்பான். எப்படிப்பட்ட அழகு என்று கேட்டால், 'Fair Looking Girl' என்று சர்வ சாதாரணமாகச் சொல்வான். 'Fair Looking Girl' என்றால், சிவந்த நிறமுள்ள திருத்தமான பெண் என்று பொருள். அதாவது நயந்தாரா, திரிஷா, அனுஷ்கா சர்மா அல்லது தமன்னா போன்ற தோற்றத்தில் உள்ள பெண்.
"Good Looking Girl" தான் கிடைக்கும். பரவாயில்லையா? என்றால்,
முதலில் நான் சொன்னதைத் தேடுங்கள். அது கிடைக்காவிட்டால்,
பிறகு இதைப் பற்றியோசிப்போம் என்பான். "Good Looking Girl"
என்றால், கறுப்போ அல்லது மாநிறமோ உள்ள திருத்தமான பெண்
என்று பொருள்படும்.
சில உபரியான நிபந்தனைகளையும் சொல்வான். படித்த பெண்ணாக வேண்டும் என்பான். வேலைக்குச் செல்லும் பெண்ணாக வேண்டும் என்பான். படிப்பும் சாதாரண பட்டப்படிப்பு அல்ல. தொழிற்படிப்பு படித்த பெண் என்பான். ’டெக்னிக்கலி குவாலிஃபைடு கேர்ள்’ என்பான். அதாவது பொறியியல் படித்து, இன்போஸிஸ், விப்ரோ, சி.டி.எஸ் போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் என்பான். இரட்டை இஞ்சின் பூட்டிய ரயில் என்றால் வாழ்க்கையில் வேகமாக முன்னேறலாம் என்று அதற்கு விளக்கம் வேறு சொல்வான்.
தன்னுடைய தகுதி மற்றும் அழகைப் பற்றி யோசிக்கவே மாட்டான்.
இவன் ஓமக்குச்சி நரசிம்மன் போன்ற தோற்றத்தில் அல்லது பயில்வான் ரெங்கநாதன் போன்ற தோற்றத்தில் இருந்து கொண்டு, அழகான பெண்ணைத் தேடினால் கிடைக்குமா? இந்தக் காலத்துப் பெண்கள் எல்லாம் உஷாரானவர்கள். சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். ஆகவே கிடைக்காது.
தேடலில் ஐந்து ஆண்டுகள் ஓடிவிடும். வயதும் 32ஐத் தாண்டிவிடும். வேறு வழியில்லாமல், திருமணம் ஆனால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவான். கடைசியில் காந்திமதி போன்று தோற்றமுடைய பெண் மனைவியாக வந்து சேர்வாள்.
“ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாய்மட்டும் வளர்க்கல, நான் இருக்கேன்னு விட்டுட்டா” என்று புலம்பிக்கொண்டிருப்பான்.
(தொடரும்)
இதன் அடுத்த பகுதி நாளை வரும்!
அன்புடன்,
வாத்தியர்ர்
வாழ்க வளமுடன்!
"ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி
ReplyDeleteஆளினும் கடல் மீது ஆணை செலவே நினைவர்...
அளகேசன் நிகராக அம்பொன் மிகவைத்தபேரும்
நேசித்து ரச வாத வித்தை புரிந்து நெஞ்சு புண்ணாவர்....
யோசிக்கும் வேளையில் பசியார உண்பதும் உறங்குவதுமாக முடியும்.."
என்பார் தாயுமானவ சுவாமிகள்.எவ்வளவு உண்மை அய்யா!
நவீன தயுமானவர் என்று சொல்லும் அளவுக்கு ஸவிஸ்தாரமாக எழுதி உள்ளீர்கள்.பராட்டுக்கள்.
இப்படியும் உண்டு.....
ReplyDeleteஇதை அத்தனையும் பொண்ணு வீட்டிலே வாங்கிக் கொள்ளலாம் என்றும் நினைப்பான், (அப்படியே கிடைக்க) அதற்கு ஒத்து ஊத ஒரு பெரியக் கும்பலே வீட்டில் இருக்கும். பின்னாடி விழப்போகும் மொத்தைப் பற்றி அறியாது, பாவம்.....
kmr.krishnan said...
ReplyDelete"ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல் மீது ஆணை செலவே நினைவர்...
அளகேசன் நிகராக அம்பொன் மிகவைத்தபேரும்
நேசித்து ரச வாத வித்தை புரிந்து நெஞ்சு புண்ணாவர்....
யோசிக்கும் வேளையில் பசியார உண்பதும் உறங்குவதுமாக முடியும்.."
என்பார் தாயுமானவ சுவாமிகள்.எவ்வளவு உண்மை அய்யா!
நவீன தாயுமானவர் என்று சொல்லும் அளவுக்கு ஸவிஸ்தாரமாக எழுதி உள்ளீர்கள்.பராட்டுக்கள்.//////
தாயுமானவர் மகான். அடியேன் எளியவன். ஆசாபாசங்கள் உள்ள சாதாரண மனிதன். என்னை அவருடன் ஒப்பிடுவது தகாது. உங்களின் அன்பிற்கு நன்றி சார்!
//////Alasiam G said...
ReplyDeleteஇப்படியும் உண்டு.....
இதை அத்தனையும் பொண்ணு வீட்டிலே வாங்கிக் கொள்ளலாம் என்றும் நினைப்பான், (அப்படியே கிடைக்க) அதற்கு ஒத்து ஊத ஒரு பெரியக் கும்பலே வீட்டில் இருக்கும். பின்னாடி விழப்போகும் மொத்தைப் பற்றி அறியாது, பாவம்...../////
அடிவாங்கும்போது, அதாவது மொத்து விழுகும்போது, எல்லாம் தலையெழுத்து என்ற முடிவிற்கு வருவான். அது காலங்கடந்த முடிவாக இருக்கும்!
எதற்தமாக, உங்கள் பாணியில் ஒரு அடுமையான ARTICLE.
ReplyDeleteI wish my ex-colleague (கணமுன)is reading this article, I know you are here, hope u are reading this article at least twice.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மனம் எனும் குரங்கு தாவித்தாவி அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள முயலும். இந்த எண்ணம் எப்போது மாறும்? மனிதன் என்று தன்னை உணர்கிறானோ அன்றுதான் மாறும். தன்னை உணர்வது என்பது வயது முதிர்ந்து, அனுபவங்களால் பழுத்து நிற்கும்போது தான் அது சாத்தியம். பாரதி சொல்கிறான், "உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே, உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும், இஃதை சிந்தை செய்பவன் செத்திடுவானடா!" எவ்வளவு உயர்ந்த வார்த்தை. இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருபதிலோ அல்லது அறுபதிலோ வராது. அறுபதைக் கடந்து வாழ்க்கையில் அடிபட்டு உண்மையை உணரும்போது நிச்சயம் புரியும்.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஇன்றைய பதிவு ஆரம்பமே கலக்கலாக உள்ளது. இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் பேராசையுடனும், திருப்தி இன்மையுடனுமே இருக்கிறார்கள். இவை அத்தனைக்கும் பின்புலமாக இருந்து தூண்டி விடுபவர்கள் பெண்கள் தான்.
ஆணை நிம்மதி இல்லாமல் செய்வது பெண்களே.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
////சிங்கைசூரி said...
ReplyDeleteஎதார்த்தமாக, உங்கள் பாணியில் ஒரு அருமையான ARTICLE.
I wish my ex-colleague (கண் முன்)is reading this article, I know you are here, hope u are reading this article at least twice.///////
நல்லது. படிக்கட்டும். படித்து உணரட்டும்!
/////Thanjavooraan said...
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மனம் எனும் குரங்கு தாவித்தாவி அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள முயலும். இந்த எண்ணம் எப்போது மாறும்? மனிதன் என்று தன்னை உணர்கிறானோ அன்றுதான் மாறும். தன்னை உணர்வது என்பது வயது முதிர்ந்து, அனுபவங்களால் பழுத்து நிற்கும்போது தான் அது சாத்தியம். பாரதி சொல்கிறான், "உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே, உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும், இஃதை சிந்தை செய்பவன் செத்திடுவானடா!" எவ்வளவு உயர்ந்த வார்த்தை. இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருபதிலோ அல்லது அறுபதிலோ வராது. அறுபதைக் கடந்து வாழ்க்கையில் அடிபட்டு உண்மையை உணரும்போது நிச்சயம் புரியும்.///////
வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தித்தான் ஆயுள்காரகன் சனீஷ்வரன் ஒவ்வொரு மனிதனுக்கும் மேலே செல்வதற்கு விசா கொடுப்பான். இல்லாவிட்டால் விசா கிடைக்காது!:-))) நன்றி சார்!
////venkatesan.P said...
ReplyDeleteஅய்யா,
இன்றைய பதிவு ஆரம்பமே கலக்கலாக உள்ளது. இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் பேராசையுடனும், திருப்தி இன்மையுடனுமே இருக்கிறார்கள். இவை அத்தனைக்கும் பின்புலமாக இருந்து தூண்டி விடுபவர்கள் பெண்கள் தான்.
ஆணை நிம்மதி இல்லாமல் செய்வது பெண்களே.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்//////
பெண்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. மெஜாரிட்டியாகப் பார்த்த்தால் பெண்கள்தான் காரணம் என்றாலும்
ஆண்களின் பங்களிப்பும் அதில் உண்டு. மனைவி சொல்லே மந்திரம் என்று யார் இவர்களைத் திரியச் சொன்னது?
புத்தி வேண்டாமா?
இன்றைய கட்டுரை அருமை. கண்டிப்பாக உலகில் பிறந்த அனைவருக்கும் எதாவது ஒன்றில் ஆசை இருக்கவேண்டும். அது தானே நமது வாழ்க்கையை நகர்த்த உதவும் எரிபொருள். அனால் ஆசை பேராசை ஆகும் போதுதான் சிக்கல். இதை சிறப்பாக மற்றும் சிரிப்பாக சொன்ன உங்களுக்கு நன்றி அய்யா.......
ReplyDeleteHello Sir ,
ReplyDeleteFinally now i am a follower of your classroom ,enrolled just now ..
Have a great day .
அய்யா, அருமை.
ReplyDeleteபுது வேகம் தெரிகிறது. இத, இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.
பயனுள்ள பதிவிற்கு நன்றி.
எனது புதிய பதிவு, உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி
சுட்டி: http://vettipaechchu.blogspot.com/2010/09/blog-post_15.html
தங்கள் அபிப்ராயம் வேண்டி.
அன்பன்
வெதாந்தி.
நல்ல பதிவு sir , இதன் தொடர்ச்சியை கற்க ஆவலாக உள்ளது ,
ReplyDelete(சார் ஒருசில நல்ல கட்டுரை மற்றும் கதைகள் தொடரும் என்று கூறி தொடராமல் இருக்கிறது , இதை கண்டிப்பாக பதிப்பிக்கவும் ,
இதை கற்கும் ஆவலில் கேட்கிறேன் என்று என்னை மன்னிக்கவும் )
//////தமிழ்மணி said...
ReplyDeleteஇன்றைய கட்டுரை அருமை. கண்டிப்பாக உலகில் பிறந்த அனைவருக்கும் எதாவது ஒன்றில் ஆசை இருக்கவேண்டும். அது தானே நமது வாழ்க்கையை நகர்த்த உதவும் எரிபொருள். அனால் ஆசை பேராசை ஆகும் போதுதான் சிக்கல். இதை சிறப்பாக மற்றும் சிரிப்பாக சொன்ன உங்களுக்கு நன்றி அய்யா......./////
உங்களின் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!
Sowmya said...
ReplyDeleteHello Sir ,
Finally now i am a follower of your classroom ,enrolled just now ..
Have a great day /////
வாழ்த்துக்கள். தொடர்ந்து படித்துவாருங்கள் சகோதரி!
/////வெட்டிப்பேச்சு said...
ReplyDeleteஅய்யா, அருமை.
புது வேகம் தெரிகிறது. இத, இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.
பயனுள்ள பதிவிற்கு நன்றி.
எனது புதிய பதிவு, உடனிருந்தே கொல்லும் சிந்தனைக் கொல்லி
சுட்டி: http://vettipaechchu.blogspot.com/2010/09/blog-post_15.html
தங்கள் அபிப்ராயம் வேண்டி.
அன்பன்
வெதாந்தி.//////
எப்போதும் உள்ள வேகம்தான். சமயங்களில் எழுதபெற்றிருக்கும் விஷயங்களை வைத்து வேகமாகத் தெரியும். நன்றி பார்க்கிறேன் நண்பரே!
Soundarraju said...
ReplyDeleteநல்ல பதிவு sir , இதன் தொடர்ச்சியை கற்க ஆவலாக உள்ளது ,
(சார் ஒருசில நல்ல கட்டுரை மற்றும் கதைகள் தொடரும் என்று கூறி தொடராமல் இருக்கிறது , இதை கண்டிப்பாக பதிப்பிக்கவும் ,
இதை கற்கும் ஆவலில் கேட்கிறேன் என்று என்னை மன்னிக்கவும் )//////
உங்களின் ஆவல் வாழ்க! இதுவரை மூன்றரை ஆண்டுகளில் சுமார் 660 பதிவுகளை எழுதியுள்ளேன். ஒன்றிரண்டு அப்படி இருக்கலாம். பார்த்து அதையும் புதிப்பித்துவிடுகிறேன்!
நன்றி சார் ,.
ReplyDeleteதொடக்கத்திற்கு முன்பே முடிவுரையும் இயற்கையால் எழுதிவிட்ட பிறகு யாரை குறை கூறி என்ன பயன்?
ReplyDelete“ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாய்மட்டும் வளர்க்கல, நான் இருக்கேன்னு விட்டுட்டா” என்று புலம்பிக்கொண்டிருப்பான்.இது ஆத்தாமேல் உள்ள ஆசைதானே? இந்த ஆசை அகிலமெல்லாம் கட்டி ஆளும் ஆசை அல்லவே?
ReplyDeleteDear Sir
ReplyDeleteArumai Sir...
Idhil Pengalum Adanguvargal Sir..
Oru Sila Jenmangal Appadithan...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
யப்பா...ரொம்ப நாள் கழித்து சிங்கம் மன வள கட்டுரை எழுதும் களத்தில் இறங்கிடுச்சி!!! அதிக மகிழ்ச்சி கொண்டவன் நானாகத்தான் இருக்க முடியும்.
ReplyDeleteமிகவும் நன்றி ஐயா!!!
அடுத்த பதிவுக்கு 'ஆறுவது சினம்' ன்னு டைட்டில் வெப்பீங்களா?
ReplyDelete////venkatesan.P said...
ReplyDeleteஅய்யா,
இன்றைய பதிவு ஆரம்பமே கலக்கலாக உள்ளது. இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் பேராசையுடனும், திருப்தி இன்மையுடனுமே இருக்கிறார்கள். இவை அத்தனைக்கும் பின்புலமாக இருந்து தூண்டி விடுபவர்கள் பெண்கள் தான்.
ஆணை நிம்மதி இல்லாமல் செய்வது பெண்களே.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்//////
///பெண்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. மெஜாரிட்டியாகப் பார்த்த்தால் பெண்கள்தான் காரணம் என்றாலும்
ஆண்களின் பங்களிப்பும் அதில் உண்டு. மனைவி சொல்லே மந்திரம் என்று யார் இவர்களைத் திரியச் சொன்னது?
புத்தி வேண்டாமா? ///
அய்யா,
நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் எனது கருத்தை சொல்லி விடுகிறேன். ஆண் என்னதான் சரியாக நடக்க முற்பட்டாலும் பெண்கள் அவனோடு சண்டை இடுவது, மிரட்டுவது போன்று செய்யும் போது ஆண் என்னதான் செய்ய முடியும். அதிலும் தற்போது சட்டம் பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. எனது நெருங்கிய நண்பன் ஒருவன் மாதம் ரூ 4 லட்சம் சம்பாதிக்கிறான். ஆனால் அவன் மனைவியோ நண்பனின் பெற்றோருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர அனுமதிப்பதில்லை. நண்பன் கிடந்து புலம்புகிறான். இது போன்ற மனைவி அமைந்து விட்டால் என்ன செய்வது.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
Dear Sir,
ReplyDeleteThanks for your lesson, i am follower of your blog for last 1 and 1/2 years. considering your time limit i never raised any personal question, can i have your permission to raise one question about my friend horoscope (i am verch much disturbed).
Also i am coming to India on 18th October, is there any possibility to meet you sir(Assured i will not raised any questions about my personal horoscope)
Thanks sir
Pandian
மாசே நமஸ்காரம்.
ReplyDeleteஎல்லாம் சரி! இந்தவகையில் சேராத சில ஜென்மங்கள் உண்டே! அவர்களை பற்றி தங்களின் கருத்து என்ன?
எதனையுமே எதிர்பார்க்காமல்
ஜாதகமே என்று
" கோழி நினைகின்றது குஞ்சுவின் வாழ்க்கை முக்கியம்" என்று
" குஞ்சு நினைகின்றது கோழியால் தான் வாழ்க்கை அமைய வேண்டும்" என்று
>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
திருமணம் செய்து கொள்கிறேன் என்பவனுக்குப். பெண் தேடத் ............
“ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாய்மட்டும் வளர்க்கல, நான் இருக்கேன்னு விட்டுட்டா” என்று புலம்பிக்கொண்டிருப்பான்.
அடுத்த பதிவுக்கு 'ஆறுவது சினம்' ன்னு டைட்டில் வெப்பீங்களா?
ReplyDeleteEthu Thamiraparaniyaaaaaaaaaaaaa ?
Migavum arumai. My name is S.Adhimoolam S/o,Subramanian . In french spelling S.Adimoulame S/o.Soupramaniane. Ennudaiya oor Pondicherry. Migavum nantri iya.
ReplyDelete/////Soundarraju said...
ReplyDeleteநன்றி சார் ,./////
இதற்கு எதற்கு நன்றி!?
/////R.Puratchimani said...
ReplyDeleteதொடக்கத்திற்கு முன்பே முடிவுரையும் இயற்கையால் எழுதிவிட்ட பிறகு யாரை குறை கூறி என்ன பயன்?/////
இயற்கை பாதையை மட்டும்தான் போடும். பயணிப்பது நாம்தான்!
////natarajan said...
ReplyDelete“ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாய்மட்டும் வளர்க்கல, நான் இருக்கேன்னு விட்டுட்டா” என்று புலம்பிக்கொண்டிருப்பான்.இது ஆத்தாமேல் உள்ள ஆசைதானே? இந்த ஆசை அகிலமெல்லாம் கட்டி ஆளும் ஆசை அல்லவே?/////
இந்த ஆசை அந்திம காலத்தில் வந்தென்ன பயன்? ஆத்தா இருக்கும் போது வந்தால் நல்லது. பல ஆசாமிகள் அத்தாவை முதியோர் இல்லத்தில் விட்டு விடுகிறார்கள்.
கவியரசர் எழுதினார்:
“நீ வளர்ந்து மரமாகி
நிழல்தரும் காலம்வரை
தாய் மனதைக் காத்திருப்பேன்
தங்க மகனே!”
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Arumai Sir...
Idhil Pengalum Adanguvargal Sir..
Oru Sila Jenmangal Appadithan...
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
ஆமாம் உண்மைதான்! நன்றி ராஜாராமன்!
//////Arul said...
ReplyDeleteயப்பா...ரொம்ப நாள் கழித்து சிங்கம் மன வள கட்டுரை எழுதும் களத்தில் இறங்கிடுச்சி!!! அதிக மகிழ்ச்சி கொண்டவன் நானாகத்தான் இருக்க முடியும்.
மிகவும் நன்றி ஐயா!!!////
“சிங்கமா? என்னய்யா புதுசு புதுசா பேர் வச்சு பீதியைக் கிளப்புறாய்ங்களே! எங்கினபோய் முடியப்போகுதோ” - வடிவேலு
//////minorwall said...
ReplyDeleteஅடுத்த பதிவுக்கு 'ஆறுவது சினம்' ன்னு டைட்டில் வெப்பீங்களா?/////
மைனர் சொன்னால் வைத்து விடுகிறேன்! டைட்டில் வைத்துவிட்டால் எழுதுவது சுலபம்!
Dear Sir
ReplyDeleteNeenga Comedy Sideleyum King Pola Irukke Sir....
Indha All in All Azhagu Raja kitta vachukkita ..- Goundamani
Kamal Madhiri Endha pakkamum Atthupadi pola Irukke???? Kalakukunga Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
வாத்தியாருக்கு மார்க் போடும் அதிகப்படி மாணவன் நான். இந்தப் பதிவு நூற்றுக்கு நூறு.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
//////venkatesan.P said...
ReplyDelete////venkatesan.P said...
அய்யா,
இன்றைய பதிவு ஆரம்பமே கலக்கலாக உள்ளது. இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் பேராசையுடனும், திருப்தி இன்மையுடனுமே இருக்கிறார்கள். இவை அத்தனைக்கும் பின்புலமாக இருந்து தூண்டி விடுபவர்கள் பெண்கள் தான்.
ஆணை நிம்மதி இல்லாமல் செய்வது பெண்களே.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்//////
///பெண்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. மெஜாரிட்டியாகப் பார்த்த்தால் பெண்கள்தான் காரணம் என்றாலும்
ஆண்களின் பங்களிப்பும் அதில் உண்டு. மனைவி சொல்லே மந்திரம் என்று யார் இவர்களைத் திரியச் சொன்னது?
புத்தி வேண்டாமா? ///
அய்யா,
நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் எனது கருத்தை சொல்லி விடுகிறேன். ஆண் என்னதான் சரியாக நடக்க முற்பட்டாலும் பெண்கள் அவனோடு சண்டை இடுவது, மிரட்டுவது போன்று செய்யும் போது ஆண் என்னதான் செய்ய முடியும். அதிலும் தற்போது சட்டம் பெண்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது. எனது நெருங்கிய நண்பன் ஒருவன் மாதம் ரூ 4 லட்சம் சம்பாதிக்கிறான். ஆனால் அவன் மனைவியோ நண்பனின் பெற்றோருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தர அனுமதிப்பதில்லை. நண்பன் கிடந்து புலம்புகிறான். இது போன்ற மனைவி அமைந்து விட்டால் என்ன செய்வது.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்/////
எல்லாவற்றையும் மனைவியிடம் ஒப்புவிப்பதால் வரும் கேடு அது! மனைவிக்குத் தெரியாமல் செய்வதற்கெல்லாம் எத்தனையோ வழியிருக்கிறது. நல்ல செயல்களைச் செய்யும்போது யாருக்காகவும் எதற்காகவும் யோசிக்க வேண்டாம்.
//////bhuvanar said...
ReplyDeleteDear Sir,
Thanks for your lesson, i am follower of your blog for last 1 and 1/2 years. considering your time limit i never raised any personal question, can i have your permission to raise one question about my friend horoscope (i am verch much disturbed).
Also i am coming to India on 18th October, is there any possibility to meet you sir(Assured i will not raised any questions about my personal horoscope)
Thanks sir
Pandian/////
நேரில் எல்லாம் நேரமில்லை. மின்னஞ்சலிலேயே கேளுங்கள்!
/////kannan said...
ReplyDeleteமாசே நமஸ்காரம்.
எல்லாம் சரி! இந்தவகையில் சேராத சில ஜென்மங்கள் உண்டே! அவர்களை பற்றி தங்களின் கருத்து என்ன?
எதனையுமே எதிர்பார்க்காமல்
ஜாதகமே என்று
" கோழி நினைகின்றது குஞ்சுவின் வாழ்க்கை முக்கியம்" என்று
" குஞ்சு நினைகின்றது கோழியால் தான் வாழ்க்கை அமைய வேண்டும்" என்று
>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<
திருமணம் செய்து கொள்கிறேன் என்பவனுக்குப். பெண் தேடத் ............
“ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாய்மட்டும் வளர்க்கல, நான் இருக்கேன்னு விட்டுட்டா” என்று புலம்பிக்கொண்டிருப்பான்./////
எதையும் எதிர்பார்க்காமலா? நோ சான்ஸ். எதையும் எதிர்பார்க்காமல் இருந்தால் அவன் கடவுளாகிவிடுவான்!
///kannan said...
ReplyDeleteஅடுத்த பதிவுக்கு 'ஆறுவது சினம்' ன்னு டைட்டில் வெப்பீங்களா?
Ethu Thamiraparaniyaaaaaaaaaaaaa ?////
ஒன்னுமே புரியலே உலகத்திலே!
/////s.adimoulame said...
ReplyDeleteMigavum arumai. My name is S.Adhimoolam S/o,Subramanian . In french spelling S.Adimoulame S/o.Soupramaniane. Ennudaiya oor Pondicherry. Migavum nantri iya.////
தகவலுக்கு நன்றி!
//////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Neenga Comedy Sideleyum King Pola Irukke Sir....
Indha All in All Azhagu Raja kitta vachukkita ..- Goundamani
Kamal Madhiri Endha pakkamum Atthupadi pola Irukke???? Kalakukunga Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
என்றும் நான் ஒரு தீவிர வாசகன். முன்பு ஒரு தீவிர சினிமா ரசிகன். இப்போது ரசிக்கும் படியாகப் படங்கள் வருவதில்லை. வரும் ஒன்ன்றிரண்டு படங்களையும் தொலைக்காட்சியில் பார்த்துவிடுவதுண்டு. எழுத வந்ததெல்லாம் விபத்து. நகைச்சுவை இருந்தால்தான் எதுவும் சுவாரசியம் மிக்கதாக இருக்கும்!
////RVS said...
ReplyDeleteவாத்தியாருக்கு மார்க் போடும் அதிகப்படி மாணவன் நான். இந்தப் பதிவு நூற்றுக்கு நூறு.
அன்புடன் ஆர்.வி.எஸ்./////
இனிமேல் மார்க் வாங்கி என்ன பயன்? அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சிலிங்கிற்கோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தின் வேலை வாய்ப்பிற்கோ காத்திருக்கும் வயதை எல்லாம் நான் தாண்டிவிட்டேன்! எல்லா மார்க்கும் எனக்கு ஒன்றுதான். சர்ட்டிபிஃகெட்டை இரண்டாகக் கிழித்துக் கொடுத்தாலும் ஒன்றுதான். “எல்லாம் அவன் செயல் - சம்போ மகாதேவா” என்று போய்க்கொண்டே .... ஸாரி.......எழுதிக்கொண்டே இருப்பேன்!
நேரில் எல்லாம் நேரமில்லை. மின்னஞ்சலிலேயே கேளுங்கள்!///
ReplyDeleteThanks Sir,
My intention is to ask by e-mail only, however my sister married and settled in coimbatore when i come there just to meet you and say hai...
/////bhuvanar said...
ReplyDeleteநேரில் எல்லாம் நேரமில்லை. மின்னஞ்சலிலேயே கேளுங்கள்!///
Thanks Sir,
My intention is to ask by e-mail only, however my sister married and settled in coimbatore when i come there just to meet you and say hai.../////
ஆகா, சந்திக்கலாம். வரும் சமயம் சொல்லுங்கள்!
ஆகா, சந்திக்கலாம். வரும் சமயம் சொல்லுங்கள்!///
ReplyDeleteMigavum Nandri Sir.. Counting days to see my Mother, family and least not YOURSELF SIR.
Thanks
Pandian
//////Arul said...
ReplyDeleteயப்பா...ரொம்ப நாள் கழித்து சிங்கம் மன வள கட்டுரை எழுதும் களத்தில் இறங்கிடுச்சி!!! அதிக மகிழ்ச்சி கொண்டவன் நானாகத்தான் இருக்க முடியும்.
மிகவும் நன்றி ஐயா!!!////
“சிங்கமா? என்னய்யா புதுசு புதுசா பேர் வச்சு பீதியைக் கிளப்புறாய்ங்களே! எங்கினபோய் முடியப்போகுதோ” - வடிவேலு
நம்ம ஜோதிட வகுப்பறையில் இருப்பதாலும் நீங்க சிம்ம லக்னத்தில் பிறந்ததால் உங்களை சிங்கம்னு சொன்னா தப்பில்லங்கயா...
நகைசுவை உணர்வுடன் நன்றாகச் சொன்னீர்கள். ஆசைக்கு அளவே இல்லை. மனத்தில் உள் அமைதி கிடைக்குமானால் அவன் ஒடுக்கம் காண்பான்.
ReplyDeleteமகரிஷி சொன்னதுப் போன்று மனத்தினை ஒடுங்கச் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.