+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் உண்டு!
புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 17
புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
++++++++++++++++++++++++++++++++++++++
பாடல்: வேலுண்டு வினைநீக்க மயிலுண்டு எனைக்காக்க
வேலுண்டு வினைநீக்க மயிலுண்டு எனைக்காக்க
பாரினில் பயம் ஏது - பழனிமலை முருக வடி
(வேலுண்டு)
பாலுண்டு தேனுண்டு பழமான உனைக்கண்டு
பதியாறு படைவீடும் பணிவார்க்கு அருள்கந்த
(வேலுண்டு)
எண்ணுண்டு எழுத்துண்டு இனிய முத்தமிழுண்டு
கண்ணுண்டு கருத்துண்டு கவிதைத் திறம் கொண்ட
பண்ணுண்டு இசைபாட பரவசமாய்க் கேட்டு
அன்பெனும் அருள் காட்டும் அப்பாநின் கரம்கொண்ட
(வேலுண்டு)
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
+++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
சுப்பையா சார்.. மண்ணானாலும்.. அப்படின்னு ஒரு ஆல்பம். டி.எம்.எஸ் பாடிய பிரபலமானது.. எங்க வீட்டில் சஷ்டி, கிருத்திகை இந்த ஆல்பம் இல்லாமல் நகராது..
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
வேலும் மயிலும் உனக்குண்டு
ReplyDeleteவேழ முகத்தானே எங்களுக்கு
உன்னை தவிர
வேறு யாருண்டு?
நன்றிகள் ஐயா!
கண்ணதாசன் தனக்கு முன்பு வந்த பல பெரியோர்களின் வாக்கை எடுத்துப் புதுமைப் படுத்தி வழங்கியிருக்கிறார். நகரத்தார் பகுதியில் வழங்கி வந்த நாட்டுப் பாடல்களையும் தனது அமரத்துவம் வாய்ந்த கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். எடுத்துக்காட்டாக 'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே' எனும் பாடலைச் சொல்லலாம். அதுபோலவே அந்நாளில் எம்.கே.தியாகராஜபாகவதர் பாடிச் சென்ற "கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்" எனத் தொடங்கும் பாடல்கூட இந்தப் பாடலுக்கு வழிகாட்டியிருக்குமோ என்னவோ. என்ன இருந்தாலும் கவியரசர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ஈடு இணை இல்லை. வாழ்க தங்கள் பணி.
ReplyDeleteஎனக்கு எப்பவும் துணை அதுதான்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
yes sir!
ReplyDeleteThanks.
ஐயா வணக்கம்.
ReplyDeleteயப்பா வேலவா!
கலியுகத்தில் நீ இல்லை இல்லை என்றோ சொல்கின்றனரே ஐயா
நான் இங்குதான் உள்ளேன் என்று கொஞ்சம் காட்டு ஐயா முருகா !
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDelete"வேலுண்டு வினைநீக்க மயிலுண்டு எனைக்காக்க"
நன்றி ஐயா!
தங்களன்புள்ள மாணவன்,
வ.தட்சணாமூர்த்தி
2010-09-04
////RVS said...
ReplyDeleteசுப்பையா சார்.. மண்ணானாலும்.. அப்படின்னு ஒரு ஆல்பம். டி.எம்.எஸ் பாடிய பிரபலமானது.. எங்க வீட்டில் சஷ்டி, கிருத்திகை இந்த ஆல்பம் இல்லாமல் நகராது..
அன்புடன் ஆர்.வி.எஸ்.//////
உங்களுடைய தீவிர பக்தி வாழ்க!
Alasiam G said...
ReplyDeleteவேலும் மயிலும் உனக்குண்டு
வேழ முகத்தானே எங்களுக்கு
உன்னை தவிர வேறு யாருண்டு?
நன்றிகள் ஐயா!///
வேழமுகத்தான் வினாயகப்பெருமான அல்லவா சுவாமி. குளக்கரையில் அமர்ந்திருக்கும் அவருக்கு அவருடைய இளவலின் வேல்தானே உண்டு! தனிவேல் இல்லையே சுவாமி!
/////Thanjavooraan said...
ReplyDeleteகண்ணதாசன் தனக்கு முன்பு வந்த பல பெரியோர்களின் வாக்கை எடுத்துப் புதுமைப் படுத்தி வழங்கியிருக்கிறார். நகரத்தார் பகுதியில் வழங்கி வந்த நாட்டுப் பாடல்களையும் தனது அமரத்துவம் வாய்ந்த கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். எடுத்துக்காட்டாக 'சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே' எனும் பாடலைச் சொல்லலாம். அதுபோலவே அந்நாளில் எம்.கே.தியாகராஜபாகவதர் பாடிச் சென்ற "கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்" எனத் தொடங்கும் பாடல்கூட இந்தப் பாடலுக்கு வழிகாட்டியிருக்குமோ என்னவோ. என்ன இருந்தாலும் கவியரசர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ஈடு இணை இல்லை. வாழ்க தங்கள் பணி.////
உண்மைதான். அவருக்கு இணை அவர்தான். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை! நன்றி சார்!
////புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஎனக்கு எப்பவும் துணை அதுதான்
பகிர்வுக்கு நன்றி//////
நல்லது சகோதரி!
//////kannan said...
ReplyDeleteyes sir!
Thanks.//////
வருகைப்பதிவிற்கு நன்றி!
////kannan said...
ReplyDeleteஐயா வணக்கம்.
யப்பா வேலவா!
கலியுகத்தில் நீ இல்லை இல்லை என்றோ சொல்கின்றனரே ஐயா
நான் இங்குதான் உள்ளேன் என்று கொஞ்சம் காட்டு ஐயா முருகா !/////
அருணகிரியாருக்கும் குமரகுருபரருக்கும் தன் முகத்தைக் காட்டியவர் உங்களுக்குக் காட்டாமலா போய்விடுவார்?
வா, அப்பனே என்று மனமுருகி அழையுங்கள், வருவார்!
/////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
"வேலுண்டு வினைநீக்க மயிலுண்டு எனைக்காக்க"
நன்றி ஐயா!
தங்களன்புள்ள மாணவன்,
வ.தட்சணாமூர்த்தி/////
நல்லது. நன்றி தட்சணமூர்த்தி!
பிழை திருத்திவிடுகிறேன் ஆசிரியரே!
ReplyDeleteவேலும் மயிலும் உனக்குண்டு
வேழ முகத்தானின் சோதரனே
எங்களுக்கு உன்னை தவிர
வேறு யாருண்டு?
நன்றிகள் ஐயா!
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
ReplyDeleteநாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
தேனும் பாலும் உடலுக்கு உறுதி
வேலும் மயிலும் உயிருக்கு உறுதி . .
//
ReplyDeleteஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
தேனும் பாலும் உடலுக்கு உறுதி
வேலும் மயிலும் உயிருக்கு உறுதி
//
இந்தப் பாடல் இடம்பெற்ற நூலின் பெயரையும் இயற்றிய ஆசிரியரின் பெயரையும் யாரேனும் கூறினால் நன்று!!!