++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது?
புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 16
புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம்
புகழ் பெற்ற பாடல்கள்தான்!
-------------------------------------------------------------------
வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்
வேல்போல் இருக்குதடி
வேல்கொண்டு நின்றவன் திருமுகம் பர்த்தால்
பால்போல் தெரியுதடி
கூவிடும் சேவல் கொடிமே லிருந்து
விழித்திடச் சொல்லுதடி
விழித்ததும் என்னை நினைத்திரு என்றவன்
சொல்வது தெரியுதடி
கந்தனின் கருணை மழைவரும் என்றே
மாமயில் ஆடுதடி!
மாமயில் விரித்த தோகையின் கண்கள்
வேலனைத் தேடுதடி!
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான்
முத்தமிழ் பிறந்ததடி!
முத்தமிழ் இன்பம் அனைத்திலும் முருகன்
திருமுகம் தோன்றுதடி
எப்போது பார்த்தாலும் சிரித்திருக்கும் - அது
ஆறு முகங்களடி!
எப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது
பன்னிரு கைகளடி
பாடல் ஆக்கம்: கவிஞர் திரு. பூவை செங்குட்டுவன்
இசை: திரு. ராமச்சந்திரன்
பாடியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பாட்டின் முத்தாய்ப்பான வரி:
முதன்முதல் இறைவன் திருவாய் திறந்தான் முத்தமிழ் பிறந்ததடி!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
நன்றி அய்யா..
ReplyDeleteஇறைவா!
வல்ல விடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனதோடு ஞான குரு உன்னை
வணங்கியே துதிக்க அருள்வாய் எப்போதும்
சூலமஙலம் தஞ்சை குடந்தை மார்க்கத்தில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது.சூலமஙலம் சகோதரிகளின் சகோதரர் எனக்கு மேலதிகாரியாகப் பணியாற்றினார்.பங்களூர் ரமணி அம்மாளைப் போலவே கல்லூரி மாணவர்களையும் கடவுள் பாட்டைப் பாடவைத்தவர்கள் அந்தச் சகோதரிகள்.
ReplyDeleteவிருப்பங்களை நிறைவேற்றும் அய்யா அவர்களுக்கு நன்றிகள் . . .
ReplyDelete(சூலமங்கலம் பாடல்கள் அரங்கேறியதில் தான் அத்தனை மகிழ்ச்சி)
அந்த பாடலுக்கு (முருகன் திருநீறில் மருந்திருக்கு தெரியுமா) காத்திருக்கிறோம் . .
ஏப்ரல் 2011ல் இலங்கை பயணம் . .
ReplyDeleteகடவுசீட்டு (passport) தயார் செய்து வைக்கவும்...
கதிர்காமம் முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்ததிக்க இந்த செய்தி . .
ஆறுமாத அவகாசம் இருப்பதால்
கடவு சீட்டு அலுவலக பணி மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கு முன் ஏற்பாட்டிற்காக . . இந்த தகவல் இப்போது . .
உங்களுக்கான வெளிநாட்டு யோகம் இப்போது . . (பழனியப்பன் அருளால்) ம்..ம்ம்..
"மால்மருகன் மலைதோறும் உறைபவன் - அவன்
ReplyDeleteதாள்பணிவார் குறைகளும் தீருமடி"
நன்றிகள் குருவே!
வணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது?
ReplyDeleteவேல் போலவும் உள்ளது, கோயில் போலவும் உள்ளது, விளக்கு போலவும் உள்ளது, முக்கியமாக கையில் தெரியும் ஓட்டை தீபம் போலவும் உள்ளது.
ஐயா வணக்கம்.
ReplyDeleteசுப்பு!அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா
எங்களுக்கும் கொஞ்சம் பாடம் சொல்லையா
நீ சொல்லும் பாடம் ஞான பாடம் தானையா
எங்கள் செல்லையா! பொன்னையா!வடிவேலையா !
நீ மயிலை விட்டு நிறங்கி வாரும்யா
வந்து எங்கள் நிறை குறைகளை கேளும்மையா
எங்களின் முகத்தையும் கொஞ்சம் பாருய்யா
மணி வேலையா!பண்டார சாமியையா! முருகையா!
பக்தர்களை கொஞ்சம் கடைக்கண் காட்டுயா
நல்ல சேதி சொல்ல போறது எப்பையா
அம்மை! குறத்தி மகளிடம் குறி ஒன்னு கேட்டு சொல்லுயா
நீ சொல்லும் குறி நல்ல குறி தான்னையா!
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!
தகப்பன் சாமிக்கு அரகரோகரா!
சேவல் கொடியோனுக்கு அரகரோகரா!
பால தண்டாயுதபாணி தெய்வத்திற்கு அரகரோகரா!
ஆனைமுகன் தம்பிக்கு அரகரோகரா!
வள்ளி மணாளனுக்கு அரகரோகரா!
தமிழ் கடவுளுக்கு அரகரோகரா!
thanks for this good song, is the audio or video link is available pls post that also.
ReplyDeleteஎப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது பன்னிரு கைகளடி
ReplyDeleteஎன்ன அருமையான வரிகள் ஐயா,
good afternoon sir,
ReplyDeleteVery Nice Murugan Song. Thanks for that. Picture also nice.
sundari.p
/////Iyappan said...
ReplyDeleteநன்றி அய்யா..
இறைவா! வல்ல விடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனதோடு ஞான குரு உன்னை
வணங்கியே துதிக்க அருள்வாய் எப்போதும்////
எப்போதும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவன் அவன்! உங்களுக்கு முருகனருள் கிடைக்கும்.
//////kmr.krishnan said...
ReplyDeleteசூலமஙலம் தஞ்சை குடந்தை மார்க்கத்தில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது.சூலமஙலம் சகோதரிகளின் சகோதரர் எனக்கு மேலதிகாரியாகப் பணியாற்றினார்.பெங்களூர் ரமணி அம்மாளைப் போலவே கல்லூரி மாணவர்களையும் கடவுள் பாட்டைப் பாடவைத்தவர்கள் அந்தச் சகோதரிகள்./////
இரண்டுபேர்கள் சேர்ந்து ஒரு பாடலைப் பிசிறில்லாமல் அற்புதமாகப் பாடுவதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் அவர்கள். பல கலைஞர்கள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் உங்களுக்கு அவர்களைத் தெரிந்திருக்கும் அல்லது அவர்கள் குடும்பத்தில் ஒருவரைத் தெரிந்திருக்கும். நன்றி கிருஷ்ணன் சார்!
/////iyer said...
ReplyDeleteவிருப்பங்களை நிறைவேற்றும் அய்யா அவர்களுக்கு நன்றிகள் . . .
(சூலமங்கலம் பாடல்கள் அரங்கேறியதில் தான் அத்தனை மகிழ்ச்சி)
அந்த பாடலுக்கு (முருகன் திருநீறில் மருந்திருக்கு தெரியுமா) காத்திருக்கிறோம் . .////
அந்தப் பாடலும் விரைவில் பதிவில் ஏறும்! நன்றி நண்பரே!
//////iyer said...
ReplyDeleteஏப்ரல் 2011ல் இலங்கை பயணம் . .
கடவுசீட்டு (passport) தயார் செய்து வைக்கவும்.
கதிர்காமம் முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்ததிக்க இந்த செய்தி . .
ஆறுமாத அவகாசம் இருப்பதால்
கடவு சீட்டு அலுவலக பணி மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கு முன் ஏற்பாட்டிற்காக . . இந்த தகவல் இப்போது . .
உங்களுக்கான வெளிநாட்டு யோகம் இப்போது . . (பழனியப்பன் அருளால்) ம்..ம்ம்../////////
உங்களின் அன்பிற்கு நன்றி!
/////Alasiam G said...
ReplyDelete"மால்மருகன் மலைதோறும் உறைபவன் - அவன்
தாள்பணிவார் குறைகளும் தீருமடி"
நன்றிகள் குருவே!/////
நல்லது. நன்றி ஆலாசியம்!
/////R.Puratchimani said...
ReplyDeleteவணங்கிடும் கைகளின் வடிவம் எதைப்போல் இருக்கிறது?
வேல் போலவும் உள்ளது, கோயில் போலவும் உள்ளது, விளக்கு போலவும் உள்ளது, முக்கியமாக கையில் தெரியும் ஓட்டை தீபம் போலவும் உள்ளது.////
ஆமாம். அது அவரவர்களின் மனம் மற்றும் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. நன்றி!
//////kannan said...
ReplyDeleteஐயா வணக்கம்.
சுப்பு!அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா
எங்களுக்கும் கொஞ்சம் பாடம் சொல்லையா
நீ சொல்லும் பாடம் ஞான பாடம் தானையா
எங்கள் செல்லையா! பொன்னையா!வடிவேலையா !
நீ மயிலை விட்டு நிறங்கி வாரும்யா
வந்து எங்கள் நிறை குறைகளை கேளும்மையா
எங்களின் முகத்தையும் கொஞ்சம் பாருய்யா
மணி வேலையா!பண்டார சாமியையா! முருகையா!
பக்தர்களை கொஞ்சம் கடைக்கண் காட்டுயா
நல்ல சேதி சொல்ல போறது எப்பையா
அம்மை! குறத்தி மகளிடம் குறி ஒன்னு கேட்டு சொல்லுயா
நீ சொல்லும் குறி நல்ல குறி தான்னையா!
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா!
தகப்பன் சாமிக்கு அரகரோகரா!
சேவல் கொடியோனுக்கு அரகரோகரா!
பால தண்டாயுதபாணி தெய்வத்திற்கு அரகரோகரா!
ஆனைமுகன் தம்பிக்கு அரகரோகரா!
வள்ளி மணாளனுக்கு அரகரோகரா!
தமிழ் கடவுளுக்கு அரகரோகரா!////
அடடா, கையில் காவடியைக் கொடுத்து ஆடச் சொல்லலாம் போலுள்ளதே!
/////Ram said...
ReplyDeletethanks for this good song, is the audio or video link is available pls post that also./////
தேடினேன். கிடைக்கவில்லை!
//////profit500 said...
ReplyDeleteஎப்படித் தொழுதாலும் அருள் கொடுக்கும் - அது பன்னிரு கைகளடி
என்ன அருமையான வரிகள் ஐயா,/////
நல்லது. நன்றி நண்பரே!
/////sundari said...
ReplyDeletegood afternoon sir,
Very Nice Murugan Song. Thanks for that. Picture also nice.
sundari.p/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!