24.8.10

வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 12
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்: 37
V கிருஷ்ணர்
வைகுந்தன் கிருஷ்ணர்
பிறந்த ஊர்: ஜாஃப்னா,
வசிக்கும் ஊர்: மெல்போர்ன், ஆஸ்திரேலியா
வயது: 63

வணக்கம்,
எனது வினா. கிரகம் ஒன்று நவாம்சத்தில் பலவீனமாயும், பரல்களில் வலிமையாகவும் இருப்பின் சற்று கேள்வி பிறக்கின்றது. ஒருவரின் கேள்விக்கு சுடிதாரையும் சேலையையும் குறிப்பிட்டீர்கள்.கேள்வியில் கிரகத்தின் உடன்(Positive) எதிர்மறை(Negative) அம்சத்தை கவனித்தால் சுடிதார், சேலை உடன்படும் அம்சத்தில் வருகின்றன. சேலையை நவாம்ச (பலவீனமாயுள்ளது)மாகக் கொண்டால் உடன்படும் அம்சமான சேலை உடலுக்கு பொருந்தாதா?

ஏன் பொருந்தாது? பொருந்தும். என் அப்போதைய விளக்கம் (இப்பொதும் அதே விளக்கம்தான்) சேலையைக் கட்டிக்கொள்ளூங்கள். அல்லது சுடிதாரைப் போட்டுக்கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றை ஒரு நேரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஒன்றின்மேல் ஒன்றைப் போட்டுக்கொள்ளாதீர்கள். புரிந்ததா?

அம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது அஷ்டகவர்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டு, நீங்களும் குழம்பி, அடுத்தவனையும் குழப்பாதீர்கள்.

ராசியின் விரிவாக்கம்தான் அம்சம். அம்சத்தில் கிரகம் வீக்காக இருந்தால், தலையைப் பிடித்துக்கொண்டு, சரி நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று சும்மா உட்கார வேண்டியதுதானே? எதற்காகப் பரல்களைப் பார்க்கிறீர்கள்? யார் பார்க்கச் சொன்னது? பார்த்ததால்தானே இந்த சந்தேகம்?

வீக்காக உள்ளது என்று நீங்கள் வருத்தப்படும் கிரகத்திற்கு அஷ்டகவர்க்கத்தில் எப்படி அதிகமான பரல்கள் கிடைத்தது? அதற்குக் காரணம் என்ன? அதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

ராசியின் 1/9வது பாகம் அம்சம். அதில் கிரகத்தின் உண்மையான நிலைமை மட்டும் தெரியும். அது உச்சமா, நீசமா, பகைவீட்டில் உள்ளதா என்று மட்டுமே தெரியும்.

அஷ்டகவர்க்கதில் கிரகத்தின் இருப்பிடம், அதன் மேல் விழுகும் பார்வை, சேர்க்கை, அந்த இடத்தில் அது அமர்ந்திருப்பதால், மற்ற இடங்களில் இருந்து அது பெறும் நன்மைகள் என்று எட்டுவிதமான மதிப்பெண் அட்டவனைகளைக் கூட்டி வரும் மொத்த நன்மைகள் தெரியும். இப்போது சொல்லுங்கள் எது உண்மையில் உகந்தது?

ஒருவனுக்கு, ஒரு பெண்ணை மட்டும் கட்டி வைப்பதாகச் சொன்னால் சும்மா இருப்பான். இரண்டு பெண்களைக் கட்டி வைக்க முடியும். கட்டி வைக்கிறோம் என்றால் என்ன ஆகும்?

நோண்டுவான். தோண்டுவான். துடிப்பான். புரள்வான். கடைசியில் குழம்பி நிற்பான்.

இருவரில் எவள் அழகு? எவள் அறிவு மிக்கவள்? எவள் படித்தவள்? எவள் திறமைசாலி? எவள் குணவதி? எவள் தைரியம் மிக்கவள்? எவள் பணக்கார வீட்டில் இருந்து வந்தவள்? எவள் பின்புலம் மிக்கவள் (சொந்த பந்தம் உள்ள பின்புலம். நீங்கள் வேறு எதையாவது நினைத்துக்கொள்ளாதீர்கள்) என்று எல்லாவற்றையும் எடைபோட ஆரம்பித்துவிடுவான்.

இப்போது சொல்லுங்கள். அழகு மட்டும் அம்சமாக உள்ளவளுடன் உறவா? அல்லது மற்ற அனைத்தையும் கொண்ட வலுவானவளுடன் உறவா?

யாரை அவன் மணந்து கொள்வது நல்லது?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்: 38
ஜீவானந்தன்
கோயம்புத்தூர்

Hi sir good morning have a great day,

1) You told that if kethu in 8th place, that person will die by accident or an diseases . If that persons rasi or laginam is magaram or kumbam they also have the same issues?. Am asking this question because SANI is ayul karagan.

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டையைப் பிடித்து அடித்து ஆடுபவர் அந்த அணியின் தலைவர் (captain) என்பதற்காக, எதிர் அணியின் வேகப் பந்துவீச்சாளர் (fast bowler), பயந்து அல்லது மரியாதை கொடுத்துப் பந்து வீசுவாரா என்ன? பந்து வீசுபவருக்கு, அணியின் துவக்க ஆட்டாக்காரரும் (opening batsman) ஒன்றுதான் பத்தாவதாகக் களம் இறங்கும் ஆட்டக்காரரும் ஒன்றுதான், அணியின் தலைவரும் ஒன்றுதான். அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனும் ஒன்றுதான். அதை நினைவில் வையுங்கள்.

ஆயுள்காரகர் சனியின் வீட்டைச் சேர்ந்த மகர, மற்றும் கும்ப லக்கினக்காரகளுக்கு என்று தனிச் சலுகைகள் எதுவும் கிடையாது. நேரம், காலம் வந்தால், அவர்களுடைய மிடில் ஸ்டம்ப் பறந்துவிடும். மட்டையைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு பெவிலியனுக்குத் திரும்ப வேண்டியதுதான். அதாவது மேலே போய்ச் சேர வேண்டியதுதான்.

வேகப்பந்து வீச்சாளர் எதை மட்டும் பார்ப்பார்? விக்கட்டை வீழ்த்துவதை மட்டும் பார்ப்பார். மற்ற எதைப் பற்றியும் அவர் கவலைப்பட மாட்டார். அர்த்தமாயிந்தா ஜீவானந்தன் காரு?

2) Small doubt sir, You told that we should not see jadhagam for a child until that child attains age 12. I studied this issue in an astrology book in that they mentioned to split that 12 years in to 3.
   0 - 3
   4 - 7
   8 - 11.
If the child died in age 0-3 they mentioned bcoz of their MUNORGAL pavapunniam.
4-7 they mentioned bcoz of that childs father(THANDHAI vali) pavapunniam
from 8-11 means mothers(AMMA vali) pavapunniam.?? Is it true sir.

எனக்குத் தெரிந்தவரை குழந்தைகளுக்கு ஏழு வயதுவரை தாயின் ஜாதகமும், அதற்குப் பிறகு 12 வயது வரை தந்தையின் ஜாதகமும் ஆதிக்கம் செலுத்தும்!

3) By seeing ones jadakam how to find out that they has a luxury life or a struggling life?

சுகமான வாழ்க்கைக்கு நான்காம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
நான்காம் வீடு கெட்டிருந்தால் சுகமில்லாத வாழ்க்கை. சுகம் என்பது
வீடு, வண்டி, வாகனம், வேலையாட்கள், நிலம் நீச்சு, ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர்கள் என்று செளகரியங்களைக் குறிக்கும். சந்தோஷம்
என்பது ஐந்தாம் வீட்டின் வேலை (House of mind) அத்துடன் மனகாரகன்  
(Lord for mind) சந்திரனின் வேலை.

  “பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது
   பஞ்சனையில் காற்று வரும் தூக்கம் வராது”


என்ற கவியரசரின் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? கேளுங்கள் அப்போது புரியும் - செளகரியத்திற்கும் சந்தோஷத்திற்கும் உள்ள வேறுபாடு.

சந்தோஷத்திற்கு நீங்கள் சொல்லும் luxury life தேவையில்லை. மாடமாளிகையில் படுத்திருப்பவனைவிட, அரசமரத்தடியில் தூங்கும்
ஏழை சந்தோஷமாகத் தூங்குவான். பென்ஸ் காரில் செல்லும்
பெண்ணைவிட, ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளில்
கணவனைக் கட்டிப்பிடித்தவாறு செல்லும் பெண் மகிழ்ச்சியாக
இருப்பாள். வங்கி இருப்பு பத்துக் கோடி இருப்பவனைவிட,
மனைவியின் மடியில் படுத்திருக்கும் ஏழைக் கூலித் தொழிலாளி சந்தோஷமாக இருப்பான்.

இப்போது சொல்லுங்கள் எது முக்கியம்?

4) By seeing ones jadakam how to find that he/she was a thief or a lier?

திருட்டில் பலவிதம் இருக்கிறது. பிக்பாக்கெட்டில் இருந்து, வீடு புகுந்து கொள்ளையடிப்பதுவரை பல விதங்கள் உள்ளது. ஆகவே அதற்கும் பலவிதமான கிரக அமைப்புக்கள் உள்ளன.

பொதுவாக திருட்டு எண்ணம் உடையவர்களுக்கான கிரக அமைப்பு இதுதான். கேந்திரங்கள் மூன்றிலும் தீயசக்திகள் இருப்பதுடன், அவைகள் சுபக்கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் ஜாதகன் திருட்டு எண்ணம் உடையவன் என்று கொள்ளலாம் (பொதுவிதி)

It is called as Dala Sarpa Yoga All malefics in three Kendras and no benefic in Kendra. The person might be scheming, wicked, miserable, destitute and dependent upon others for subsistence.
மேலும் சில அமைப்புக்கள்: 1.Saturn occupies the 12th house from Moon. associating with wicked women, inclined towards forbidden pursuits. 2.Durudhara Yoga Any planets, other than Sun, occupy the 2nd and the 12th house from Moon. 3. A malefic, other than Moon, occupies the 2nd house from Sun.This variety of Veshi Yoga shows that the person is a destitute and associates with wicked people.4.Saturn occupies the 2nd house from Sun. This variety of Veshi Yoga shows that the person is interested in business, inclined to cheat others of their wealth, and has malice towards his/her preceptors.5. If Rahu is present in the fourth house of the horoscope of a person, he is wretched and lives in poverty, bereft of brothers and friends, leads a solitary life among mean people, is a cause for quarrels and fights and is engaged in sinful activities.

பொய் சொல்வதை விட்டுவிடுங்கள். யார்தான் பொய் சொல்லவில்லை? 99% அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியிருப்போம். சொல்லுவோம். ஆகவே அதைப் புறந்தள்ளுங்கள்!
------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்: 39
தினகர் திருமலை
T. தினகர்
பெங்களூர்

Hello sir,
Vanakkam,
I'm Dinakar, I came to know about you thru one of my friend who is following your lesson's. I have some queries if you feel my questions make sense and when you find time please reply, Kindly apologize me if u feel these questions doesn't make sense.

In terms of astorlogy what is a marriage?
1.Is marriage a  maritial relationship between a Boy and a girl living together?.
 or
2.Is marriage relation considered only after tieing the mangalsutra?. What is the relationship between  marriage & astrology & mangalsutra(Thali)?
or
3. Is it just two stars (boy & girl) living in same home?
The reason why I ask this is, I heard from astorlogers  there are some stars (for girls) like moolam1st patham, visakam4th patham that brings ill fate to the  boy's family members.(I came to know abt this thru My cousin, proper match is not able to be found for her) Is it true?
If yes, why is that these stars influence the fate of other's in the boy's family?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். ஒரு புதிய பரம்பரியின் / பாரம்பரியத்தின் துவக்கம்!

மூலம், ஆயில்யம், கேட்டை என்று சில நட்சத்திரங்களை மக்கள் தவிர்ப்பது என்னவோ உண்மை. அதுவே அவர்கள் வீட்டுக் குழந்தைகள் என்றால் கத்தியைக் கையில் எடுத்துவிடுவார்கள். நட்சத்திரங்களில் கேடுகள் எதுவும் இல்லை. மூலம் மாமியாரை மூலையில் உட்காரவைத்துவிடும் என்று சிலர் மூல நட்சத்திரங்களை ஒதுக்குவார்கள். மாமனாரின் ஆயுள் அவர் பிறக்கும்போதே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மருமகள் வந்து அவரைத் தூக்குவாள் (வைகுண்டத்திற்கு அனுப்பி வைப்பாள் என்றால்) எந்த நட்சத்திரப் பெண் வந்தாலும் அது நடக்கும். மூல நட்சத்திர மருமகள் மட்டும்தான் அதைச் செய்வாள் என்பது பேதமை (பைத்தியக்காரத்தனம்)

மூல நட்சத்திரப் பெண்ணாக இருந்தாலும், ஒதுக்காமல், அவள் தங்கள் மகனுக்கு ஏற்ற பெண்ணாக இருந்தால், ஜாதகத்தில் எல்லா அம்சங்களும் பொருந்தி வந்தால், துணிந்து அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ளலாம். ஒன்றும் ஆகிவிடாது.
---------------------------------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

46 comments:

  1. //பொய் சொல்வதை விட்டுவிடுங்கள். யார்தான் பொய் சொல்லவில்லை? 99% அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியிருப்போம். சொல்லுவோம். ஆகவே அதைப் புறந்தள்ளுங்கள்!//


    சரி ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் திருந்தி வாழ வேண்டாமா?

    ReplyDelete
  2. ஆசிரியருக்கு வணக்கம்,
    "சந்தோஷத்திற்கு நீங்கள் சொல்லும் luxury life தேவையில்லை. மாடமாளிகையில் படுத்திருப்பவனைவிட, அரசமரத்தடியில் தூங்கும்
    ஏழை சந்தோஷமாகத் தூங்குவான்...............

    இப்படியும் சொல்லலாமா ஐயா!
    சந்திரதோஷம் இல்லாமல் இருந்தால்
    சந்தோசம் இருக்கும் என்று.

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  3. மூலம், கேட்டை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் ஆவதில் சிரமங்கள் இருப்பது குறித்து ஒரு முறை காஞ்சி பரமாச்சாரியார் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அவர் அப்படியொன்றும் கிடையாது. மக்கள் அடுக்குச்சொல்லுக்காக 'பெண்மூலம் நிர்மூலம்' என்றும் 'கேட்டை, ஜேஷ்டனுக்கு (கணவனின் மூத்த அண்ணன்) ஆகாது' என்றும் சொல்லிவைத்தார்கள். எனவே மூல நட்சத்திரம் என்பதால் பெண்களை ஒதுக்காதீர்கள் என்று அவர் கூறியிருந்தார். அதுதான் சரியாக இருக்கலாம் என்றும் கருதுகிறேன். மூல நட்சத்திரப் பெண்ணுக்கு மாமனார் மாமியார் இருக்கக்கூடாது என்றும் சொல்கிறார்கள். அப்படியில்லாமல் மாமனார் மாமியார் நன்றாக இருக்க மூல நட்சத்திரப் பெண் திருமணம் செய்து கொண்டு நன்றாக இருப்பதையும் பார்க்கிறேன். மக்கள் நம்பிக்கையில் ஏன் இப்படிப்பட்ட முரண்பாடான கருத்துக்கள். கிரகங்களும், நம்பிக்கைகளும் மக்களின் நல்வாழ்க்கைக்கு அல்லாமல் கேடு விளைவிக்கவா இருக்கின்றன. இதைப் பற்றி ஆழ்ந்த அறிவு இல்லையாதலால் என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் அய்யா....

    இன்றைய பாடம் பல நல்ல விசயங்களை தாங்கி வந்துள்ளது,,,,யாரோ ஒருவர் எப்போதோ ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம் என்று எதுகை மோனை உடன் சொல்லிவிட்டு போக பலர் அதை இன்னமும் நம்புகிறார்கள் இது போன்ற மடமை என்று அகலுமோ .....நன்றி வணக்கம்

    ReplyDelete
  5. அய்யா, மன்னிக்கவும். வலைப் பதிவிற்கும் கனினிக்கும் புதியவன் நான். இதொ என் வலைப்பதிவின் சுட்டி. தங்களின் கருத்து வேண்டி
    http://vettipaechchu.blogspot.com/



    அன்பன்
    வெட்டிப்பேச்சு வேதாந்தி.

    ReplyDelete
  6. kmr.krishnan said...
    //பொய் சொல்வதை விட்டுவிடுங்கள். யார்தான் பொய் சொல்லவில்லை? 99% அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லியிருப்போம். சொல்லுவோம். ஆகவே அதைப் புறந்தள்ளுங்கள்!//
    சரி ஒப்புக் கொள்கிறேன்.ஆனால் திருந்தி வாழ வேண்டாமா?///////

    சொல்லும் பொய் தீமை விளைவிக்காதென்றால் சொல்லலாம். தீமை பயக்கும் என்றால் சொல்லக்கூடாது. தர்மம் அல்ல!

    வள்ளூவரைக் கேட்டுவிடுவோம். அவர் இப்படிச் சொல்லிவத்திருக்கிறார்.

    “குற்றமற்ற நன்மையைப் பிறர்க்குத் தருமானால், பொய்யான சொற்களும், வாய்மை உடையது என்று கருதலாம்

    “பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்த்த
    நன்மை பயக்கும் எனின்”
    __குறள் எண். 292

    ReplyDelete
  7. ///Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    "சந்தோஷத்திற்கு நீங்கள் சொல்லும் luxury life தேவையில்லை. மாடமாளிகையில் படுத்திருப்பவனைவிட, அரசமரத்தடியில் தூங்கும்
    ஏழை சந்தோஷமாகத் தூங்குவான்...............
    இப்படியும் சொல்லலாமா ஐயா!
    சந்திரதோஷம் இல்லாமல் இருந்தால்
    சந்தோசம் இருக்கும் என்று.
    நன்றிகள் குருவே!/////

    ஆகா, சொல்லலாம்! நன்றி!

    ReplyDelete
  8. ///Thanjavooraan said...
    மூலம், கேட்டை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் ஆவதில் சிரமங்கள் இருப்பது குறித்து ஒரு முறை காஞ்சி பரமாச்சாரியார் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அவர் அப்படியொன்றும் கிடையாது. மக்கள் அடுக்குச்சொல்லுக்காக 'பெண்மூலம் நிர்மூலம்' என்றும் 'கேட்டை, ஜேஷ்டனுக்கு (கணவனின் மூத்த அண்ணன்) ஆகாது' என்றும் சொல்லிவைத்தார்கள். எனவே மூல நட்சத்திரம் என்பதால் பெண்களை ஒதுக்காதீர்கள் என்று அவர் கூறியிருந்தார். அதுதான் சரியாக இருக்கலாம் என்றும் கருதுகிறேன். மூல நட்சத்திரப் பெண்ணுக்கு மாமனார் மாமியார் இருக்கக்கூடாது என்றும் சொல்கிறார்கள். அப்படியில்லாமல் மாமனார் மாமியார் நன்றாக இருக்க மூல நட்சத்திரப் பெண் திருமணம் செய்து கொண்டு நன்றாக இருப்பதையும் பார்க்கிறேன். மக்கள் நம்பிக்கையில் ஏன் இப்படிப்பட்ட முரண்பாடான கருத்துக்கள். கிரகங்களும், நம்பிக்கைகளும் மக்களின் நல்வாழ்க்கைக்கு அல்லாமல் கேடு விளைவிக்கவா இருக்கின்றன. இதைப் பற்றி ஆழ்ந்த அறிவு இல்லையாதலால் என் சந்தேகத்தைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்./////

    மூலம் மாமனாருக்கு ஆகாது. ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று அறியாமையால் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குச் சில அரைகுறையான ஜோதிடர்களும் காரணம். மூல நட்சத்திரத்தில் பிறந்து நல்ல குடும்பத்தில் திருமணமாகி, மாமனார் மாமியாருடன் ஒற்றுமையாகப் பல காலம் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண்களை எனக்குத் தெரியும். இது பற்றித் தினமணியில் முன்பு ஜோதிடத் திலகம். திரு.ஏ.ஏம் ராஜகோபாலன் அவர்கள் பலமுறை எழுதியுள்ளார். மக்களாகத் திருந்தினால்தான் இதற்கு விமோசனம் உண்டு சார்!

    ReplyDelete
  9. ///kannan said...
    yes sir!////

    வருகைப்பதிவிற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  10. //////astroadhi said...
    வணக்கம் அய்யா....
    இன்றைய பாடம் பல நல்ல விசயங்களை தாங்கி வந்துள்ளது,,,,யாரோ ஒருவர் எப்போதோ ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம் என்று எதுகை மோனை உடன் சொல்லிவிட்டு போக பலர் அதை இன்னமும் நம்புகிறார்கள் இது போன்ற மடமை என்று அகலுமோ .....நன்றி வணக்கம்//////

    எதிர்காலத்தில் காதல் திருமணங்கள் அதிகரிக்கும். அப்போது இது ஒழிந்துவிடும்!

    ReplyDelete
  11. மாதம் முடியப் போகிறதே . .
    இன்னமும் கேள்விக்கான பதில் வரலையே . .

    கேள்வி பதில் தொடருமா ..
    என்ற வினாவுடன்
    தொடர்கிறோம் . .

    ReplyDelete
  12. enudaiya kelvigaluku mattum badil tharavillaiye.......yein yein vaathiyaaaarrree.....................
    Also enudaiya nanban oruvan . ... he predicts a persons char , by knowing his stars. mostly his analyzation is true....neengal natchthiramum ..adhan gunangalum adhai patri solungal ayyaa...thank u .

    ReplyDelete
  13. ////வெட்டிப்பேச்சு said...
    அய்யா, மன்னிக்கவும். வலைப் பதிவிற்கும் கனினிக்கும் புதியவன் நான். இதொ என் வலைப்பதிவின் சுட்டி. தங்களின் கருத்து வேண்டி
    http://vettipaechchu.blogspot.com
    அன்பன்
    வெட்டிப்பேச்சு வேதாந்தி ///////

    வேதாந்தம் என்பது எத்தனை பெரிய விஷயம். அதைபோய் வெட்டிப்பேச்சு என்ற சொல்லுடன் இணைத்துப் பெயராக வைத்துள்ளீர்களே? நியாயமா? முதலில் பெயரை மாற்றுங்கள்!

    ReplyDelete
  14. /////iyer said...
    மாதம் முடியப் போகிறதே . .
    இன்னமும் கேள்விக்கான பதில் வரலையே . .
    கேள்வி பதில் தொடருமா ..
    என்ற வினாவுடன்
    தொடர்கிறோம் . /////

    எதைச் சொல்கிறீர்கள் சுவாமி? விளக்கமாகச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  15. /////Jack Sparrow said...
    enudaiya kelvigaluku mattum badil tharavillaiye.......yein yein vaathiyaaaarrree.....................
    Also enudaiya nanban oruvan . ... he predicts a persons char , by knowing his stars. mostly his analyzation is true....neengal natchthiramum ..adhan gunangalum adhai patri solungal ayyaa...thank u . //////

    வரிசையில் வரும். பொறுத்திருங்கள். நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் குணநலங்களைப் பற்றிப் பின்னால்
    எழுதுகிறேன்.

    ReplyDelete
  16. thanks sir,

    but some bowers used to throw the ball in reverse (like Indian bowlers and Suraj Randiv)

    ReplyDelete
  17. ஆசிரியருக்கு வணக்கம்,
    உங்கள் பதிலை கவனமாக மனதில் வைத்தாலே, வாழ்கை நல்ல முறையில் இருக்கும்.

    ReplyDelete
  18. "மண் குதிர் -ஐ நம்பி ஆற்றில் இறங்கினார்" போல் என்ற பழமொழி மருவி மண் குதிரை ஆனது போல

    "ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்" என்ற பழமொழி மருவி
    "ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்" ஆகி விட்டதாக கேள்வி பட்டு இருக்கிறேன்.

    ஆனி மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை வீழ்த்துவர்களமே
    தவறு இருந்தால் ஐயா மன்னிக்கவும்.

    ReplyDelete
  19. Dear Sir

    Good Morning.

    Kelviyum Badhilum Arumai Sir.

    Porumayagavum Nermayagavum Manadhil Ullapadi Nerthiyana Answer Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  20. ////Ram said...
    thanks sir,
    but some bowers used to throw the ball in reverse (like Indian bowlers and Suraj Randiv/////

    ராகுவானாலும் சரி, கேதுவானாலும் சரி, அவர்களின் சுழற்சி மட்டும்தான் ரிவர்சில். ஆனால் அவைகளின் பந்து வீச்சு நேர்மையான முறையில் இருக்கும்:-)))

    ReplyDelete
  21. /////arumuga nainar said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    உங்கள் பதிலை கவனமாக மனதில் வைத்தாலே, வாழ்கை நல்ல முறையில் இருக்கும்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நைனா(ர்)!

    ReplyDelete
  22. ////Iyappan said...
    "மண் குதிர் -ஐ நம்பி ஆற்றில் இறங்கினார்" போல் என்ற பழமொழி மருவி மண் குதிரை ஆனது போல
    "ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்" என்ற பழமொழி மருவி
    "ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்" ஆகி விட்டதாக கேள்வி பட்டு இருக்கிறேன்.
    ஆனி மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் எதிரிகளை வீழ்த்துவர்களமே
    தவறு இருந்தால் ஐயா மன்னிக்கவும்./////

    ஆனி மூலம் பெளர்ணமியன்று வரும் அதனால் சொல்லியிருக்கலாம். அதற்கு ஆதாரம் எதுவும் இல்லையே சுவாமி!

    ReplyDelete
  23. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning.
    Kelviyum Badhilum Arumai Sir.
    Porumayagavum Nermayagavum Manadhil Ullapadi Nerthiyana Answer Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நல்லது. நன்றி ராஜாராமன்.

    ReplyDelete
  24. ஐயா,
    தங்களின் பதில்கள் வழக்கம்போல் அருமை. நவாம்சம், அட்டவர்க்கம் விளக்கம் அருமையிலும் அருமை. நவாம்சத்தை விட அட்டவர்கமே ஒரு கோளின் வலிமையை அறிய உதவும் என்ற உங்கள் தீர்ப்பு என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்தது.

    ஒரு பதிலுக்கு "கேந்திரங்கள் மூன்றிலும்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள் கேந்திரங்கள் 1,4,7,10 என நான்கு அல்லவா?

    ஐயா இந்த பாடத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு உதிரி கேள்வி.நமது வகுப்பறை மாணவரின் மென்பொருளில் பதினொன்றாம் அதிபதியை அசுபராக கருத வேண்டும் என்று உள்ளது, அது சரியா? சரி எனில் ஏன் ஐயா?

    தங்களின் பொன்னான நேரத்தை இலவசமாக எங்களுக்கு செலவிடுவதை நினைத்தால் இதுவும் ஒரு அதிசயமாகவே தெரிகிறது.

    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  25. //வேதாந்தம் என்பது எத்தனை பெரிய விஷயம். அதைபோய் வெட்டிப்பேச்சு என்ற சொல்லுடன் இணைத்துப் பெயராக வைத்துள்ளீர்களே? நியாயமா? முதலில் பெயரை மாற்றுங்கள்! ///

    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. ஆனால் எனது அனுபவத்தில் எல்லாம் பார்த்து, எல்லாம் தெரிந்து, எல்லாம் பேசி, எல்லாம் உணர்ந்து இறுதியில் சும்மா இருப்பவனே உயர்ந்தவனாய் இருக்கிறான். உண்மையில் சும்மாயிருப்பது சுகம் தான். பரப்ப்ரும்மத்தைக் கண்ட சுகம். நான் பேச்சை நிறுத்தும் வரையில் இது வெட்டிப் பேச்சு தானே அய்யா.

    ReplyDelete
  26. கந்தர் அலங்காரப் பாடல் வரிகள் அருமை. இதை நீங்கள் வகுப்பறைப் பதிவில் இட்டிருப்பது அதை விட அருமை. நான் கண்கூட கண்டிருக்கிறேன். கடவுள் பக்தி மிகுந்தோரை கடும் காலங்கள் பாதித்ததில்லை. ஒருவேளை அது அவர்களின் மனப்பக்குவத்தை அதிகப்படுத்தியிருக்கலாம்.

    எதைப் பேசினாலும் இறையாண்மையொடு இணைத்துப் பேசுவதனாலேயே வாத்தியார் சரியான வாத்தியார்.

    ReplyDelete
  27. /////R.Puratchimani said...
    ஐயா,
    தங்களின் பதில்கள் வழக்கம்போல் அருமை. நவாம்சம், அட்டவர்க்கம் விளக்கம் அருமையிலும் அருமை. நவாம்சத்தை விட அட்டவர்கமே ஒரு கோளின் வலிமையை அறிய உதவும் என்ற உங்கள் தீர்ப்பு என்னுடைய சந்தேகத்தையும் தீர்த்தது.
    ஒரு பதிலுக்கு "கேந்திரங்கள் மூன்றிலும்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள் கேந்திரங்கள் 1,4,7,10 என நான்கு அல்லவா?
    ஐயா இந்த பாடத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு உதிரி கேள்வி.நமது வகுப்பறை மாணவரின் மென்பொருளில் பதினொன்றாம் அதிபதியை அசுபராக கருத வேண்டும் என்று உள்ளது, அது சரியா? சரி எனில் ஏன் ஐயா?
    தங்களின் பொன்னான நேரத்தை இலவசமாக எங்களுக்கு செலவிடுவதை நினைத்தால் இதுவும் ஒரு அதிசயமாகவே தெரிகிறது.
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி/////

    கவனக்குறைவு. பதிவில் திருத்திவிடுகிறேன். பதினொன்றாம் அதிபதியைப் பகுதி நேர அசுபராகக் கருதலாம்!

    ReplyDelete
  28. //////வெட்டிப்பேச்சு said...
    //வேதாந்தம் என்பது எத்தனை பெரிய விஷயம். அதைபோய் வெட்டிப்பேச்சு என்ற சொல்லுடன் இணைத்துப் பெயராக வைத்துள்ளீர்களே? நியாயமா? முதலில் பெயரை மாற்றுங்கள்! ///
    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. ஆனால் எனது அனுபவத்தில் எல்லாம் பார்த்து, எல்லாம் தெரிந்து, எல்லாம் பேசி, எல்லாம் உணர்ந்து இறுதியில் சும்மா இருப்பவனே உயர்ந்தவனாய் இருக்கிறான். உண்மையில் சும்மாயிருப்பது சுகம் தான். பரப்ப்ரும்மத்தைக் கண்ட சுகம். நான் பேச்சை நிறுத்தும் வரையில் இது வெட்டிப் பேச்சு தானே அய்யா.///////

    “சோல்லற சும்மாயிரு” என்றான் ஒரு ஞானி. ஞானம் பெற்ற பின்பு அது சாத்தியம். ஞானம் பெறும்வரை அது சாத்தியமில்லை!

    ReplyDelete
  29. /////வெட்டிப்பேச்சு said...
    கந்தர் அலங்காரப் பாடல் வரிகள் அருமை. இதை நீங்கள் வகுப்பறைப் பதிவில் இட்டிருப்பது அதை விட அருமை. நான் கண்கூட கண்டிருக்கிறேன். கடவுள் பக்தி மிகுந்தோரை கடும் காலங்கள் பாதித்ததில்லை. ஒருவேளை அது அவர்களின் மனப்பக்குவத்தை அதிகப்படுத்தியிருக்கலாம்.
    எதைப் பேசினாலும் இறையாண்மையொடு இணைத்துப் பேசுவதனாலேயே வாத்தியார் சரியான வாத்தியார்.////

    அப்பன் முருகனுக்காகப் போட்ட பாடல் அது. நல்லது. நன்றி!

    ReplyDelete
  30. வணக்கம் அய்யா.
    பாலுருக்கும் பழ‌மிருக்கும் பசி இருக்காது,சரியான விள‌க்கம்.
    சுகம்,சந்தோசம் இரண்டும் வெவ்வேரு பிரிவை(4&5வீடு) சேர்ந்தது.
    உங்கலுக்கு நிகர் நீங்கல்தான் சார்.ஜொதிடம் படிதால் மட்டும் போதுமா,
    இப்படி சொல்வதெல்லாம் தனி கலை.நன்ரியுடன் அரிபாய்.
    வாழ்க வளமுடன்.
    ஒரு தசா நாதன் தான் இருப்பிடம்,தன்னுடைய ஆதிக்கத்துக்கு
    உட்பட்ட வீட்டின் பலனை செய்வார்.இது பொதுவானது.
    1,உ.ம் கும்பம் லக்கினம் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோனத்தில்
    இருந்தால் நல்ல பலன்.ஆனால் ரிசபம்(குருவுடன்),துலாம்(மதியுடன்) இரண்டு வீடுகளில் பாவீ இருந்தல் சுக்கிரன் திசா 100% நன்மை செய்மா?
    2,சாதகம் சரியா அல்லது தவரா என்பதை கண்டு பிடிக்க ஏதேனும்(குருக்கு வழி)சூத்திரம் உண்டா?
    3, மணிதர்கலுக்கும்,மிருகதுக்கும் சனன நேரம் பிரிவினை உண்டா?எப்படி
    அறிந்து கொல்வது . தயவு செய்து விலக்கவும்.நன்றி.

    ReplyDelete
  31. ஆனி மூலம் அருணகிரிநாதரின் ஜென்ம நட்சத்திரம். அவரது வாழ்வின் முற்பகுதி முழுவதும் 'அரசாள'வில்லை. பிற்பகுதியில் கந்தனின் கருணையால் சில நாட்கள் 'சும்மா இரு சொல் அற" எனும் கட்டளையை ஏற்றுப் பின் கடல்மடை போல திருப்புகழ் பாடிய போதும் 'அரசாளவில்லை'. பின்னர் கிளியின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, கிளியாய் வாழ்ந்து முருகனைப் பாடிப்பரவியதைத் தவிர அரசபோகம் அவருக்கில்லையே. ஆகவே இந்தப் பழமொழிகள் எல்லாம் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் யாரோ புழக்கத்தில் விட்ட கதைகளாக இருக்கலாம். இதுவும் என்னுடைய கருத்துதானே யொழிய, இதுதான் என்று அறுதியிட்டுக் கூறவில்லை.

    ReplyDelete
  32. ///////aryboy said...
    வணக்கம் அய்யா.
    பாலுருக்கும் பழ‌மிருக்கும் பசி இருக்காது,சரியான விள‌க்கம்.
    சுகம்,சந்தோசம் இரண்டும் வெவ்வேரு பிரிவை(4&5வீடு) சேர்ந்தது.
    உங்கலுக்கு நிகர் நீங்கல்தான் சார்.ஜொதிடம் படிதால் மட்டும் போதுமா,
    இப்படி சொல்வதெல்லாம் தனிக் கலை. நன்றியுடன் அரிபாய்.
    வாழ்க வளமுடன்.
    ஒரு தசா நாதன் தான் இருப்பிடம்,தன்னுடைய ஆதிக்கத்துக்கு
    உட்பட்ட வீட்டின் பலனை செய்வார்.இது பொதுவானது.
    1,உ.ம் கும்பம் லக்கினம் சுக்கிரன் கேந்திரம் அல்லது திரிகோனத்தில்
    இருந்தால் நல்ல பலன்.ஆனால் ரிசபம்(குருவுடன்),துலாம்(மதியுடன்) இரண்டு வீடுகளில் பாவீ இருந்தல் சுக்கிரன் திசா 100% நன்மை செய்யுமா?//////

    உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பலன் சொன்னால் தவறாகிவிடும் அரிபாய். முழு ஜாதகத்துடன் ஒரு ஜோதிடரைப் பாருங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    2, சாதகம் சரியா அல்லது தவறா என்பதை கண்டு பிடிக்க ஏதேனும் (குருக்கு வழி)சூத்திரம் உண்டா?

    குறுக்கு வழியெல்லாம் இல்லை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    3, மனிதர்களுக்கும்,மிருகங்களுக்கு ஜனன நேரம் பிரிவினை உண்டா?எப்படி
    அறிந்து கொள்வது . தயவு செய்து விளக்கவும்.நன்றி.////

    ஒன்று முதல் ஐந்தறிவு வரை உள்ள கோடிக்கணக்கான ஜீவராசிகள் உள்ளன, ஈ, எறும்பு, பல்லி, பாச்சை. கொசு என்று துவங்கி சிங்கம் யானை வரை, மேலும் செடி கொடி, மரம் என்று லட்சக்கணக்கான வகையில் இறைவனின் படைப்புக்கள் உள்ளன. அத்தனைக்கும் ஜனன நேரமா? ஒவ்வொரு பிறவியாக நீங்களே பிறந்து பாருங்கள் அரிபாய்!c

    ReplyDelete
  33. /////Thanjavooraan said...
    ஆனி மூலம் அருணகிரிநாதரின் ஜென்ம நட்சத்திரம். அவரது வாழ்வின் முற்பகுதி முழுவதும் 'அரசாள'வில்லை. பிற்பகுதியில் கந்தனின் கருணையால் சில நாட்கள் 'சும்மா இரு சொல் அற" எனும் கட்டளையை ஏற்றுப் பின் கடல்மடை போல திருப்புகழ் பாடிய போதும் 'அரசாளவில்லை'. பின்னர் கிளியின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து, கிளியாய் வாழ்ந்து முருகனைப் பாடிப்பரவியதைத் தவிர அரசபோகம் அவருக்கில்லையே. ஆகவே இந்தப் பழமொழிகள் எல்லாம் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் யாரோ புழக்கத்தில் விட்ட கதைகளாக இருக்கலாம். இதுவும் என்னுடைய கருத்துதானே யொழிய, இதுதான் என்று அறுதியிட்டுக் கூறவில்லை.//////

    உண்மைதான் சார். இந்தப் பழமொழிகளுக்கெல்லாம் ஆதாரம் இல்லை. அரசாள்வதற்கு நட்சத்திரம் மட்டும் போதாது. வேறு கிரக அமைப்புக்கள் உள்ளன. ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.
    அவர் அரசாளவில்லை. அரசனின் (ஸ்ரீராமனின்) அன்பைப் பெற்று வாழ்ந்தார்.

    ReplyDelete
  34. sir, ungal kelvi badhil pagudhi migavum arumai.

    naanum en sarphil sila kelzhavikal kezhakalama?

    wiht your permission, ungalakku email anuppalama?

    thank you

    ReplyDelete
  35. //////vprasanakumar said...
    sir, ungal kelvi badhil pagudhi migavum arumai.
    naanum en sarphil sila kelzhavikal kezhakalama?
    wiht your permission, ungalakku email anuppalama?
    thank you//////

    இது அனைவருக்கும் பொதுவான வகுப்பறை. ஜோதிட சம்பந்தமான கேள்விகளை நீங்கள் கேட்கலாம் எனது மின்னஞ்சல் முகவரிக்குக் கேள்விகளை அனுப்புங்கள். Mark as doubts in the subject box of the mail. My mail ID is classroom2007@gmail.com

    ReplyDelete
  36. ஐயா,
    கேள்வி பதில் பகுதி மிக அருமையாக செல்கிறது..நான் கேட்க நினைப்பதை எல்லாம் மற்ற நண்பர்கள் கேட்பதில் மிகவும் சந்தோசம்...சொந்த அலுவல் இன்னும் முடியவில்லை...அதுவரை என் விடுப்பு தொடரும்;வாத்தியார் அனுமதியுடன்...

    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  37. வணக்கம் அய்யா,
    மாந்தி இருக்கும் தசா நாதன் கஸ்ட்டத்தை கோடுப்பார்.
    இந்த அமைப்பு மட்ர பாவ கிரகங்கலுக்கும் இருக்குமா
    என்ற சந்தேகத்தை தெலிவு படுத்தவே கேட்டேன்.தனிப்பட்ட‌
    சாதக கேள்வி இல்லை சார்.பதிலுக்கு நன்றி சார்.
    அரிபாய். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  38. Dear sir,
    Regarding this [moola natchathira...] in orkut jodhidam community another explanation is also given - quite interesting

    ReplyDelete
  39. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பதில்கள் மற்றும் ஆலோசனைகள் சிறப்பாக உள்ளது
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  40. வணக்கம் அய்யா....
    //ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
    வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
    ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
    ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
    ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))
    http://classroom2007.blogspot.com/2008/09/110-cum.html//

    அப்பொது லக்கினம் + சந்திர ராசி இரண்டும் மாட்டாமல் வெளியே இருந்தால் தோஷம் உண்டா?

    ReplyDelete
  41. ///SHEN said...
    ஐயா,
    கேள்வி பதில் பகுதி மிக அருமையாக செல்கிறது..நான் கேட்க நினைப்பதை எல்லாம் மற்ற நண்பர்கள் கேட்பதில் மிகவும் சந்தோசம்...சொந்த அலுவல் இன்னும் முடியவில்லை...அதுவரை என் விடுப்பு தொடரும்;வாத்தியார் அனுமதியுடன்...
    அன்புடன்
    செங்கோவி////

    ஒன்றும் கெடாது. தேவையான அளவு விடுப்பு எடுத்துக்கொள்ளூங்கள். நேரம் கிடைக்கும்போது வாருங்கள்!

    ReplyDelete
  42. ////aryboy said...
    வணக்கம் அய்யா,
    மாந்தி இருக்கும் தசா நாதன் கஷ்ட்டத்தை கொடுப்பார்.
    இந்த அமைப்பு மற்ற பாவ கிரகங்களுக்கும் இருக்குமா
    என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தவே கேட்டேன்.தனிப்பட்ட‌
    சாதக கேள்வி இல்லை சார்.பதிலுக்கு நன்றி சார்.
    அரிபாய். வாழ்க வளமுடன்.////

    தகவலுக்கு நன்றி அரிபாய்!

    ReplyDelete
  43. //////siva said...
    Dear sir,
    Regarding this [moola natchathira...] in orkut jodhidam community another explanation is also given - quite interesting/////

    அதற்கான சுட்டியை நீங்கள் கொடுத்திருக்கலாமே!

    ReplyDelete
  44. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    பதில்கள் மற்றும் ஆலோசனைகள் சிறப்பாக உள்ளது
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி///////

    உங்களுக்கு வெள்ளந்தியான மனசு. அதனால் எதுவுமே குறையாகத் தெரியாது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  45. ///////Pughazhenthy Babu said...
    வணக்கம் அய்யா....
    //ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
    வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
    ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
    ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
    ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))
    http://classroom2007.blogspot.com/2008/09/110-cum.html//
    அப்போது லக்கினம் + சந்திர ராசி இரண்டும் மாட்டாமல் வெளியே இருந்தால் தோஷம் உண்டா?//////

    உண்டு சுவாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com