10.5.10

தலைகீழான விளைவு என்றால் எப்படி இருக்கும்?


------------------------------------------------------------------------
தலைகீழான விளைவு என்றால் எப்படி இருக்கும்?

"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்குமென்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்!"
-கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++
விபரீத ராஜயோகம்

(Reversal of Fortune)

அதென்ன ஸ்வாமி விபரீதம்?

விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்

நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால் அதை விபரீதம் என்போம்.

அதைப்போல கிடைக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால் அது விபரீத ராஜயோகம்!

அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?

இன்று அதை விவரித்து எழுதியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------
ராஜயோகம் என்பது அதிகாரம் மற்றும் உயர்வான நிலைக்கு ஜாதகனை உயர்த்தும் யோகம் ஆகும். கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகள் தங்களின் சேர்க்கையால் (கூட்டால்) அல்லது பார்வையால் உருவாக்கிக் கொடுப்பது ராஜயோகம் ஆகும். அதற்குச் சிறந்த உதாரணம் ”தர்மகர்மாதிபதி யோகம்”
9ஆம், 10ஆம் அதிபதிகளின் சேர்க்கையால் அந்த யோகம் ஏற்படும். அவர்களின் பரிவர்த்தனையாலும் அது ஏற்படும். அதனால் ஜாதகனுக்கு அதீத செல்வமும், செல்வாக்கும், பதவியும் அதிகாரமும் கிடைக்கும்.

The tenth house in the horoscope stands for what we do in life, and the ninth house shows what we should do in life. When the lords of these two houses meet by conjunction, mutual reception (parivartan), or mutual aspect, the planetary combination as Dharma Karma Adhipati Yoga. As soon as a Raja yoga of this prominence shows up in a chart, it is natural to anticipate obtaining lots of wealth and power.

மேலே குறிப்பிட்டுள்ளது வழக்கமான ராஜ யோகத்திற்கு உதாரணம்! ஆனால் விபரீத ராஜயோகம் என்பது வழக்கமான ராஜயோகங்களில் இருந்து மாறுபட்டது.

எப்படி மாறுபட்டது?

அனுஷ்காசர்மா அல்லது பிரியாமணி போன்ற அழகான பெண்ணை நீங்கள் தேர்வு செய்து, கெஞ்சிக் கூத்தாடி, சம்மதிக்க வைத்து, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அது வழக்கமான ராஜ யோகம்

ஆனால், அதே அனுஷ்காசர்மா அல்லது பிரியாமணி போன்ற அழகான பெண்கள், அவர்களாகவே முன்வந்து, உங்களிடம் கெஞ்சிக்கூத்தாடி, மன்றாடி, உங்களைத் திருமணம் செய்து கொண்டால் அது விபரீத ராஜயோகம்

இன்னும் விளக்கமாகச் சொன்னால், பிரிட்டீஷ் அரச குடும்பத்தினரே முன் வந்து அவர்கள் வீட்டுப் பெண்ணை,உங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதாகச் சொன்னால், அது விபரீத ராஜ யோகம்.

உதாரணங்கள் போதுமா?
------------------------------------------------------------------
The vipareeta rajayogas are somewhat different from the normal rajayogas as mentioned above.
These rajayogas are formed due to downfall of someone, based on which the native's fortune is reversed. The

downfall can be of an enemy or a someone near to the native, however the combinations are somewhat different

for both circumstances.

இந்த விபரீதம் என்னும் சொல், மாறுபட்டு வருவதைக் குறிக்கும். The term vipareeta imply reversal of something ஒன்றின் வீழ்ச்சி, அல்லது ஒருவரின் வீழ்ச்சி, உங்களுக்கு சகாயமாகிக் கிடைப்பதுதான் விபரீத ராஜயோகம்.

”அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்பக் காலியாகும்?” என்று கிராமங்களில் கூறுவார்களே, அதை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

மிதுன லக்கின ஜாதகத்தின் 12ஆம் வீட்டில் சுக்கிரனும், சனியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்து, உரிய நேரத்தில் திருமணமாவதும் தடைபட்டு, விரும்பும் அளவிற்கு ஒரு மங்கை நல்லாளும் ஜாதகனுக்குக் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளூங்கள். அப்படிப்பட்ட நேரத்தில், ஜாதகனின் எட்டாம் வீட்டு அதிபதி சனி 12ல் இருப்பதால் (ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி இன்னொரு துஷ்ட ஸ்தானத்தில் அமர்வது) அவர் சுக்கிரனின் பென்டை நிமிர்த்தி, ஜாதகனின்
திருமணத்தை உரிய நேரத்தில் நடத்தி வைப்பதுடன், மயக்கும் அழகுள்ள மங்கையையும் அவனுக்குப் பிடித்துக் கொடுத்து விடுவார்.அதுதான் விபரீத ராஜயோகம்

பெண்ணை உதாரணமாகச் சொன்னால்தான் சிலருக்கு மண்டையில் சுறுசுறுப்பாக ஏறும் என்பதற்காக இதைச் சொன்னேன்.

பணம், வேலை, பதவி, செல்வாக்கு என்று எதற்கு வேண்டுமென்றாலும் இந்த யோகம் ஒத்துவரும். அது அங்கே போய் அமரும் துஷ்டனையும், அவன் அடித்து வீழ்த்தும் சம்பந்தப்பட்ட அதிபதி அல்லது காரகனையும் பொறுத்து உண்டாகும்.
---------------------------------------------------------------------------------
துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது வி.ரா.யோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------
கூடுதல் தகவல்கள்.
மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. தனித்தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்

the main combinations for Vipareeta raja yoga

1.
Two dusthana planet conjoing in a dusthana. The precondition of a strong VYR of this nature is that the lords should be weak. When this happen the significations of the dusthana suffer and the native gains from it. This mostly happens with the down fall of some of the native's enemies. Moreover the relations indicated by the planets

2. Two dusthana lords strongly placed in a kendra (or trikona) and no other planet conjoin them (in such case there will be transfer of power to the third planet, whereby the karakatwa of the third planet will gain). Here the planets involved should be strongly placed unlike the 1st principle. In this case if the atmakaraka or the lagna has association with VR Yogakaraka, the native will himself gained otherwise the native will rise with rise of others.

3. If the Karaka of duthanas, Saturn is placed in a dusthana-weak (or kendra - strong) as a yogakaraka (Taurus, Libra Lagna). There are other variations of this yoga; a dusthana lord placed in another dusthana will constitute a VRY. The placement of the dusthana lord in their own house can not constitute VRY, That can only if the dusthana lord is conjoined with some other dusthana lord. The dusthana lords placed in their own house are some other yogas!

4.
Vipareeta Rajyoga (VRY) is caused by the conjunction of the lords of Dusthana (evil houses 3rd, 6th, 8th & 12th ). Since the lords of the evil houses conjoin, they end up damaging each other and the native benefits. Thus, VRY implies coming to power/ gains due to the downfall or death of another. This can bring sudden legacies, rapid rise to power and position and other such gains that are basically, not sustainable over a long period of time.

5
The important condition for the fructification of this Rajyoga is that the planets involved should either- (a) be weak by placement in a Dusthana (evil houses 3rd, 6th, 8th & 12th) or in debility in Rasi/Navamsa or (b) be very strong in Kendra/Trikona and simultaneously transfer the power to the Lord of Lagna (or Atmakaraka) by conjunction or aspect. Unless this transfer of the power of the VRY occurs, the native himself may not rise but will benefit due to the rise of another person.

6
The results of the situations of VRY in the two cases is grossly different. In the first case, the native rises due to the death/ downfall of an enemy whereas in the latter situation the native rises after the death/downfall of an ally or friend. The significations of the planets conjoining the VRY maybe destroyed in this process.

7
VRY from Saturn
It is evident from the above that the giver of Vipareeta Rajyoga is Saturn, more so since he is the natural significator of the Dusthana. Thus, VRY can also be caused if Saturn becomes a Yogakaraka (for Taurus & Libra Lagna) and is placed in a Dusthana in debility/weak. However, it is important that other planets should not conjoin this, else their significations could be destroyed.

Source: Varahimihira

வாழ்க வளமுடன்!

55 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள்.
    9-ன் மற்றும் 10 ன் - அதிபதிகள் ராசியில் 12 - ல் அமர்ந்திருந்து,
    நவாம்சத்தில் பத்தாம் அதிபதி உச்சம் பெற்று ஒன்பதாம்
    அதிபதியுடன் அமர்ந்திருந்தால் அது ராஜயோகத்தைத் தருமா?

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. Vanakam sir,

    This yogam sir, I have it in my chart, for meena lagna...if sukran in 12th and saturn in 8th sir....enaku vanthu intha yogam irupathu pidikallai because it is only through the fall of someone we gain...it is not a real victory in my opinion!!!

    thanks
    thanuja

    ReplyDelete
  3. ஆமாம் மிகுந்த விபரீதமாகத்தான் பாடம் ஒலிக்கிறது. என்ன செய்வது, எடுத்துக்கொண்ட செய்தி அப்படி!

    ReplyDelete
  4. மிக்க நன்றி .
    இந்தியாவின் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் உள்ளது .

    India Horoscope
    http://tinypic.com/r/ael1ex/5

    ReplyDelete
  5. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ராஜயோகம் ,விபரீத ராஜயோகம் ------தகுந்த உதாரணம் மற்றும் விளக்கங்களுடன் அனைவருக்கும் நன்கு புரியும் வகையில் கொடுத்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-05-10

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்.

    எதற்கு போகி மண்டையை புன்னாக்குவானேன் .

    கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது

    ஆனால்

    கிடைக்காதது ஒரு போதும் கிடைக்காது.

    திரைப்படத்தின் வசனம்! அனால் இடம் சரியாக உள்ளது.

    ReplyDelete
  7. சூப்பர். சூப்பரோ சூப்பர்!


    *****>>>>>>>>>><<<<<<<<<<<<********

    Thanuja said...
    Vanakam sir,

    This yogam sir, I have it in my chart, for meena lagna...if sukran in 12th and saturn in 8th sir....enaku vanthu intha yogam irupathu pidikallai because it is only through the fall of someone we gain...it is not a real victory in my opinion!!!

    thanks
    thanuja

    Monday, May 10, 2010 6:39:00 AM

    ReplyDelete
  8. vanakkam aiya

    yenaku magara lagnam guru,suriyan 12 il yenakku vry irukiratha.

    ReplyDelete
  9. இந்த பாடம்தான் எதிர்பார்த்திருந்தேன் என் கேள்விக்கு.

    விருச்சிக லக்னத்திற்கு 12 இல் சனியும் (3 ஆம் அதிபதி) கேதுவும் பார்வை 6 இல் சுக்கிரன் (12 ஆம் அதிபதி) ராகுவுடன். இதில் வீபரீத ராஜ யோகம் உண்டா ஐயா ?

    ReplyDelete
  10. அய்யா வணக்கம் ,

    என்னுடைய ஜாதகத்தில் 3 மற்றும் 6 இட அதிபதிகள் 12 உள்ளனர் . என்னக்கு விருச்சக லக்கணம் . சனி மற்றும் செவ்வாய் பகை கிரகங்கள். அவை 12 இடமான சயன . போக ஸ்தானத்தை கெடுத்து விடுமா? இந்த சேர்கையின் பலன் பற்றி கூறவும்.

    நன்றி.


    தங்கள் மாணவன்,
    S மணிகண்டன்

    ReplyDelete
  11. Dear Sir

    En Maganukku(Kadaga Lagnam):-

    3rd&12th Lord(Bhudhan-Nalla Nilayudan),9th Lord Guru(Neecham), 10th Lord Sevvai(Uchham) petru 7th Place(Magarathil) Sir..

    Idhu Vibarirdha Rajayogama Sir.

    Sukkiran 9il Uchham with Lagnadhibhadhi

    Guru 7il Neecham with Uchham Petra Sevvai and Bhudan(3rd &12th Lord).

    There is no Asthangam, There is no fight with any planet.

    Idhu Vibareedha Raja yogama? Please explain Sir.

    Thank you

    Loving student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  12. பதிவிற்கு நன்றிகள் சுவாமி,

    அப்படியே பர்வத யோகம் பற்றி சொல்லுங்களேன்.


    கீழ்பணிந்த மாணவன்,
    சபரிநாதன் த

    ReplyDelete
  13. எனக்கு 5,6ம் அதிபதி சனியும் 12ம் அதிபதி சூரியனும் 9ல் இருக்கிறார்கள். 3ல் குரு. ஆங்கிலத்தில் எழுதியிருந்ததில் 2வது எனக்கு ஒத்துப் போகிறது. குரு லக்னாதிபதியாகவோ, ஆத்மகாரகனாகவோ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலத்தில் இருப்பது முழுமையாக இருக்கிறது. அதை அவர் (varahimihira) நன்றாக எழுதியிருக்கிறார்.

    தனுஜா அவர்களே, பிறரை நாம் கீழே தள்ளி விட்டு மேலே வரக் கூடாதுதான். ஆனால் யாரும் தானாக போய் வீழ்ந்து (கெட்ட நேரம் அல்லது வேறு எதன் காரணமாகவோ) நமக்கு நல்லது நடந்தால் அதுவும் விபரீத ராஜயோகம்தான். அதை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

    முன்னால் பிரதமர் நரசிம்மராவ் அவர்களை இந்த யோகத்திற்கு உதாரணமாக சொல்லாம். ராஜீவ் காந்தியின் மறைவால் இவருக்கு (விபரீத ராஜ) யோகம் அடித்தது.

    ReplyDelete
  14. ஐயா வணக்கம்...!

    பாடங்கள் வழக்கம் போல் அருமை...
    3,6,8,12ம் அதிபதிகள் தத்தம் வீட்டிலேயே அமர்வது, அதாவது 3ம் அதிபதி 3ல், 6ம் அதிபதி 6ல், 8ம் அதிபதி 8ல், 12ம் அதிபதி 12ல் அமர்வதும் இந்தக் கணக்கில் வருமா?

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  15. ஐயா,

    நான் ஒரு இளம்(௩௦?) பொறியாளன்..கூகுளாண்டவர் புண்ணியத்தில் வகுப்பறையில் நுழைந்து உள்ளேன். ஒரே மூச்சாக உங்கள் பாடங்களை முதல் பாடத்திலிருந்து, கடந்த ஒரு வாரமாக படித்துவருகிறேன்.(வேற வேலையே இல்லையா?...ஆமாங்க!!). தற்பொழுது நூறில் உள்ளேன். மறுபடியும் மறுபடியும் படிக்க வேண்டியுள்ளது.

    தங்களது பணி என்னை மலைக்க வைக்கிறது. தனது அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் பரந்த மனமும், அடுத்த தலைமுறை மேல் அன்பும் வேண்டும். வாத்தியாரை வாழ்த்துவது முறையல்ல. என்னப்பன் முருகன் உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எல்லா வளங்களையும் அள்ளித் தர பிரார்த்திக்கிறேன்.

    வகுப்பறைக்கு வந்துவிட்டு கேள்வி கேட்காமல் போவது நல்ல(?) மாணவனுக்கு முறையல்ல. ஆகவே:

    1. தங்கள் பதிவுகள் புத்தகமாக வந்துவிட்டனவா? எங்கு கிடைக்கும்?
    2. சில பாடங்களை பதிவில் இல்லாமல் மின்னஞ்சலில் அனுப்பி உள்ளீர்கள். அவைகளை என்னைப்போன்ற புதிய மாணவர்கள் பெறுவது எப்படி?
    3. என்னையும் வகுப்பில் சேர்த்துக்கொள்ள இயலுமா? எனது மின்னஞ்சல் முகவரி shenkovi@gmail.com ( உங்களுக்கு தனி மடலும் அனுப்பி உள்ளேன்.)
    4. கேந்திர திரிகோண இடங்கள் என்றால் என்ன? ( இது சும்மா உல்லுல்லாயி..டென்சன் ஆகா வேண்டாம்..1,4,7,10..1,5,9 )
    அன்புடன்,
    சென்கோவி

    ReplyDelete
  16. ஐயா 12ம் அதிபதி 10ல் (10ம் அதிபனோடு) 6ம் அதிபதி 4ல்.
    இரண்டு கிரகங்களும் 7ம் பார்வையாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்கின்றனர்.
    இந்த யோகம் உண்டா?

    ReplyDelete
  17. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள்.
    9-ன் மற்றும் 10 ன் - அதிபதிகள் ராசியில் 12 - ல் அமர்ந்திருந்து,
    நவாம்சத்தில் பத்தாம் அதிபதி உச்சம் பெற்று ஒன்பதாம்
    அதிபதியுடன் அமர்ந்திருந்தால் அது ராஜயோகத்தைத் தருமா?
    நன்றிகள் குருவே!////////

    துஷ்ட ஸ்தானத்தைப் பற்றியது அல்லவா பாடம். 9 & 10 ஆம் அதிபதிகளை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் ஆலாசியம்?

    ReplyDelete
  18. /////Thanuja said...
    Vanakam sir,
    This yogam sir, I have it in my chart, for meena lagna...if sukran in 12th and saturn in 8th sir....enaku vanthu intha yogam irupathu pidikallai because it is only through the fall of someone we gain...it is not a real victory in my opinion!!!
    thanks
    thanuja/////

    உங்கள் எண்ணம் வாழ்க! உங்கள் எண்ணப்படி ஜோதிட விதிகளை எல்லாம் மாற்றமுடியாது:-)))))

    ReplyDelete
  19. ///kmr.krishnan said...
    ஆமாம் மிகுந்த விபரீதமாகத்தான் பாடம் ஒலிக்கிறது. என்ன செய்வது, எடுத்துக்கொண்ட செய்தி அப்படி!////

    தஞ்சையில் ஒலிக்காதே சார்! அங்கேதான் வராஹி அம்மன் இருக்கிறாரே!

    ReplyDelete
  20. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி .
    இந்தியாவின் ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் உள்ளது .
    India Horoscope
    http://tinypic.com/r/ael1ex/5//////

    அதனாலேயே இந்தியா சூப்பர் பவராகப்போகிறது!:-)))))

    ReplyDelete
  21. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ராஜயோகம் ,விபரீத ராஜயோகம் ------தகுந்த உதாரணம் மற்றும் விளக்கங்களுடன் அனைவருக்கும் நன்கு புரியும் வகையில் கொடுத்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    நீங்கள் சொன்னால் ஓக்கே! நன்றி!

    ReplyDelete
  22. ////Mayakanna said...
    ஐயா வணக்கம்.
    எதற்கு போகி மண்டையை புன்னாக்குவானேன் .
    கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது
    ஆனால்
    கிடைக்காதது ஒரு போதும் கிடைக்காது.
    திரைப்படத்தின் வசனம்! ஆனால் இடம் சரியாக உள்ளது.//////

    மாயக்கண்ணன் சொன்னால் சரி!

    ReplyDelete
  23. ////Mayakanna said...
    சூப்பர். சூப்பரோ சூப்பர்!/////

    எதை சூப்பர் என்கிறீர்கள்? தனுஜா அக்கா சொன்னதையா?

    ReplyDelete
  24. /////sundaresan p said...
    vanakkam aiya
    yenaku magara lagnam guru,suriyan 12 il yenakku vry irukiratha.//////

    இருக்கிறது! பாதியை இங்கே தள்ளூங்கள்!:-))))))

    ReplyDelete
  25. /////Sekar said...
    இந்த பாடம்தான் எதிர்பார்த்திருந்தேன் என் கேள்விக்கு.
    விருச்சிக லக்னத்திற்கு 12 இல் சனியும் (3 ஆம் அதிபதி) கேதுவும் பார்வை 6 இல் சுக்கிரன் (12 ஆம் அதிபதி) ராகுவுடன். இதில் வீபரீத ராஜ யோகம் உண்டா ஐயா ?////

    உண்டு!

    ReplyDelete
  26. ////Manikandan said...
    அய்யா வணக்கம் ,
    என்னுடைய ஜாதகத்தில் 3 மற்றும் 6 இட அதிபதிகள் 12 உள்ளனர் . எனக்கு விருச்சக லக்கணம் . சனி மற்றும் செவ்வாய் பகை கிரகங்கள். அவை 12 இடமான சயன . போக ஸ்தானத்தை கெடுத்து விடுமா? இந்த சேர்கையின் பலன் பற்றி கூறவும்.
    நன்றி.
    தங்கள் மாணவன்,
    S மணிகண்டன்/////

    கெடுக்க மாட்டார்கள். அதற்கு வேறு அமைப்புக்கள் உண்டு. அதையும் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  27. Arulkumar Rajaraman said...
    Dear Sir
    En Maganukku(Kadaga Lagnam):-
    3rd&12th Lord(Bhudhan-Nalla Nilayudan),9th Lord Guru(Neecham), 10th Lord Sevvai(Uchham) petru 7th Place(Magarathil) Sir..
    Idhu Vibarirdha Rajayogama Sir.
    Sukkiran 9il Uchham with Lagnadhibhadhi
    Guru 7il Neecham with Uchham Petra Sevvai and Bhudan(3rd &12th Lord).
    There is no Asthangam, There is no fight with any planet.
    Idhu Vibareedha Raja yogama? Please explain Sir.
    Thank you
    Loving student
    Arulkumar Rajaraman////

    எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி இருக்கிறீர்களே! உங்கள் மகனுக்கு 12 வயது ஆகிவிட்டதா?

    ReplyDelete
  28. ////Sabarinathan TA said...
    பதிவிற்கு நன்றிகள் சுவாமி,
    அப்படியே பர்வத யோகம் பற்றி சொல்லுங்களேன்.
    கீழ்பணிந்த மாணவன்,
    சபரிநாதன் த////

    பின்னால் யோகப் பாடங்களில் விடுபற்றவற்றை எழுத உள்ளேன். அப்போது அதை எழுதுகிறேன்!

    ReplyDelete
  29. ////ananth said...
    எனக்கு 5,6ம் அதிபதி சனியும் 12ம் அதிபதி சூரியனும் 9ல் இருக்கிறார்கள். 3ல் குரு. ஆங்கிலத்தில் எழுதியிருந்ததில் 2வது எனக்கு ஒத்துப் போகிறது. குரு லக்னாதிபதியாகவோ, ஆத்மகாரகனாகவோ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆங்கிலத்தில் இருப்பது முழுமையாக இருக்கிறது. அதை அவர் (varahimihira) நன்றாக எழுதியிருக்கிறார்.
    தனுஜா அவர்களே, பிறரை நாம் கீழே தள்ளி விட்டு மேலே வரக் கூடாதுதான். ஆனால் யாரும் தானாக போய் வீழ்ந்து (கெட்ட நேரம் அல்லது வேறு எதன் காரணமாகவோ) நமக்கு நல்லது நடந்தால் அதுவும் விபரீத ராஜயோகம்தான். அதை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
    முன்னால் பிரதமர் நரசிம்மராவ் அவர்களை இந்த யோகத்திற்கு உதாரணமாக சொல்லாம். ராஜீவ் காந்தியின் மறைவால் இவருக்கு (விபரீத ராஜ) யோகம் அடித்தது.////

    உண்மை. உங்களின் விளக்கத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  30. /////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    பாடங்கள் வழக்கம் போல் அருமை...
    3,6,8,12ம் அதிபதிகள் தத்தம் வீட்டிலேயே அமர்வது, அதாவது 3ம் அதிபதி 3ல், 6ம் அதிபதி 6ல், 8ம் அதிபதி 8ல், 12ம் அதிபதி 12ல் அமர்வதும் இந்தக் கணக்கில் வருமா?
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்////

    ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். அவரவர் வீட்டில் அவரவர் இருந்தால் என்ன ஊற்சாகம் இருக்கமுடியும் சொல்லுங்கள்?
    இந்தக் கணக்கில் வராது. தில்லிக்குப்போனால்தான் மந்திரியாக முடியும். சொந்த ஊரில் இருந்தால், வேப்பமரத்தடியில் கட்டிலைப்போட்டு படுத்துக்கொள்ள வேண்டியதுதான்!:-))))))

    ReplyDelete
  31. SHEN said...
    ஐயா,
    நான் ஒரு இளம் பொறியாளன்..கூகுளாண்டவர் புண்ணியத்தில் வகுப்பறையில் நுழைந்து உள்ளேன். ஒரே மூச்சாக உங்கள் பாடங்களை முதல் பாடத்திலிருந்து, கடந்த ஒரு வாரமாக படித்துவருகிறேன்.(வேற வேலையே இல்லையா?...ஆமாங்க!!). தற்பொழுது நூறில் உள்ளேன். மறுபடியும் மறுபடியும் படிக்க வேண்டியுள்ளது.
    தங்களது பணி என்னை மலைக்க வைக்கிறது. தனது அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் பரந்த மனமும், அடுத்த தலைமுறை மேல் அன்பும் வேண்டும். வாத்தியாரை வாழ்த்துவது முறையல்ல. என்னப்பன் முருகன் உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் எல்லா வளங்களையும் அள்ளித் தர பிரார்த்திக்கிறேன்.
    வகுப்பறைக்கு வந்துவிட்டு கேள்வி கேட்காமல் போவது நல்ல(?) மாணவனுக்கு முறையல்ல. ஆகவே:
    1. தங்கள் பதிவுகள் புத்தகமாக வந்துவிட்டனவா? எங்கு கிடைக்கும்?///////

    இனிமேல்தான் வரவுள்ளது
    >>>>>>>>>>>>>>>>>>>>
    2. சில பாடங்களை பதிவில் இல்லாமல் மின்னஞ்சலில் அனுப்பி உள்ளீர்கள். அவைகளை என்னைப்போன்ற புதிய மாணவர்கள் பெறுவது எப்படி?

    மின்னஞ்சல் பாடங்களை எல்லாம் வகுப்பறையில் பதிவிட்டுக்கொண்டு வருகிறேன். அதைப் படியுங்கள் போதும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    3. என்னையும் வகுப்பில் சேர்த்துக்கொள்ள இயலுமா? எனது மின்னஞ்சல் முகவரி shenkovi@gmail.com ( உங்களுக்கு தனி மடலும் அனுப்பி உள்ளேன்.)

    பதிவின் மேல் பகுதியில் உள்ள பதிவேட்டில் உங்கள் பெயரைச் சேருங்கள் போதும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    4. கேந்திர திரிகோண இடங்கள் என்றால் என்ன? ( இது சும்மா உல்லுல்லாயி..டென்சன் ஆகா வேண்டாம்..1,4,7,10..1,5,9 )
    அன்புடன்,
    சென்கோவி////////

    டென்சனா? எனக்கா? நோ சான்ஸ்!!!!!!

    ReplyDelete
  32. ////Aachi said...
    ஐயா 12ம் அதிபதி 10ல் (10ம் அதிபனோடு) 6ம் அதிபதி 4ல்.
    இரண்டு கிரகங்களும் 7ம் பார்வையாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்கின்றனர்.
    இந்த யோகம் உண்டா?//////////

    துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

    நீங்கள் எதற்குப் 10ல் இருப்பவரையும், 4ல் இருப்பவரையும் வம்பிற்கு இழுக்கிறீர்கள்?

    ReplyDelete
  33. Dear Sir,

    Enakku inta yogam irukkirathu, Viruchiga Lagnam in 12th Place Sani Bagavan and Sevvai (Lagnapathi),

    25 vayathil miga periya companyil Manager aga agi vittean, aanal enathu viruppam ellam Ganam Peravendum enabathe, DOB 7th, In Lagnam Kethu bagavan kudi kondullar

    anal enna seivathu, 12th Place Mokthsa stathanam kettu vittatheeeee..

    Kannadasan avargalin varigalthan Memory kku varugirathu...

    Thanks Sir

    Pandian

    ReplyDelete
  34. Sir
    the Lords of 6,8,12 are separaely or together in 6,8,12 then it is called Vipreetha Raja yogam, I have read in a BOOK Kudumba jothidam, Is is true?

    ReplyDelete
  35. Dear Sir,

    when 6th lord is in 6th place , is this also a VRY ( Harsha Yoga)? as it tries to damage it own house itself by beeing the malefic in malefic house.

    - Ram

    ReplyDelete
  36. For vrichiga lagna, lord of 12th(Sukra, also lord of 7th) Conjuncts Rahu in 12th, will this result in this yoga?

    ReplyDelete
  37. //////Aachi said...
    ஐயா 12ம் அதிபதி 10ல் (10ம் அதிபனோடு) 6ம் அதிபதி 4ல்.
    இரண்டு கிரகங்களும் 7ம் பார்வையாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்கின்றனர்.
    இந்த யோகம் உண்டா?//

    துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

    நீங்கள் எதற்குப் 10ல் இருப்பவரையும், 4ல் இருப்பவரையும் வம்பிற்கு இழுக்கிறீர்கள்?////////

    ஆனால் "Jagannatha Hora" ல் இதனால் விபரீத ராஜ யோகம் இருக்குனு இருக்கே ---->"The 6th and 12th lords in conjunction or samasaptaka" .... அப்போ அது பொய்யா?

    ReplyDelete
  38. //////Loga said...
    Dear Sir,
    Enakku inta yogam irukkirathu, Viruchiga Lagnam in 12th Place Sani Bagavan and Sevvai (Lagnapathi),
    25 vayathil miga periya companyil Manager aga agi vittean, aanal enathu viruppam ellam Ganam Peravendum enabathe, DOB 7th, In Lagnam Kethu bagavan kudi kondullar
    anal enna seivathu, 12th Place Mokthsa stathanam kettu vittatheeeee..
    Kannadasan avargalin varigalthan Memory kku varugirathu...
    Thanks Sir
    Pandian//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  39. //////MarmaYogi said...
    Sir
    the Lords of 6,8,12 are separaely or together in 6,8,12 then it is called Vipreetha Raja yogam, I have read in a BOOK Kudumba jothidam, Is is true?///////

    நான் குடும்ப ஜோதிடம் நூலைப் படித்ததில்லை. எதன் அடிப்படையில் அப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  40. //////Ram said...
    Dear Sir,
    when 6th lord is in 6th place , is this also a VRY ( Harsha Yoga)? as it tries to damage it own house itself by beeing the malefic in malefic house.
    - Ram//////

    இப்படிக்கேட்டால் என்ன செய்வது? எந்த கிரகமும் தனக்குத் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளாது!

    ReplyDelete
  41. //////Gnana said...
    For vrichiga lagna, lord of 12th(Sukra, also lord of 7th) Conjuncts Rahu in 12th, will this result in this yoga?

    ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். மற்றொரு துஷ்ட ஸ்தானம் என்று உள்ளதே.... அதை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?

    ReplyDelete
  42. ////Aachi said...
    //////Aachi said...
    ஐயா 12ம் அதிபதி 10ல் (10ம் அதிபனோடு) 6ம் அதிபதி 4ல்.
    இரண்டு கிரகங்களும் 7ம் பார்வையாக ஒருத்தரை ஒருத்தர் பார்க்கின்றனர்.
    இந்த யோகம் உண்டா?//
    துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.
    நீங்கள் எதற்குப் 10ல் இருப்பவரையும், 4ல் இருப்பவரையும் வம்பிற்கு இழுக்கிறீர்கள்?////////
    ஆனால் "Jagannatha Hora" ல் இதனால் விபரீத ராஜ யோகம் இருக்குனு இருக்கே ---->"The 6th and 12th lords in conjunction or samasaptaka" .... அப்போ அது பொய்யா?///////

    ஒன்றைத் தெரியாமல் பொய் என்று எப்படிச் சொல்வது? ஜகன்னாத ஹோரா சொவதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு ராஜயோகம் கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே!

    ReplyDelete
  43. To Ananth,
    This yogam , for example brings you things that you don't deserve or it is like talent illama u r getting promoted ....no priyosanam? that is why subbiah sir said it is a vibareetha yogam endu!!!

    Thanuja

    ReplyDelete
  44. (a) be weak by placement in a Dusthana (evil houses 3rd, 6th, 8th & 12th) or in debility in Rasi/Navamsa or (b) be very strong in Kendra/Trikona and simultaneously transfer the power to the Lord of Lagna (or Atmakaraka) by conjunction or aspect.

    என்ன வாத்தியாரே தாங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள். பிறகு எதற்கு ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில் என்று குழப்புகிறீர்கள்.

    ReplyDelete
  45. ஐயா,
    தங்கள் பதிலிற்கு நன்றி.
    // தங்கள் பதிவுகள் புத்தகமாக வந்துவிட்டனவா? எங்கு கிடைக்கும்? - இனிமேல்தான் வரவுள்ளது//
    தங்கள் புத்தக வெளியீட்டுவிழாவில் தங்களை சந்திக்க விருப்பம்...அறிய பொக்கிசத்தை இணையத்தில் இலவசமாகப் படித்தாலும் தங்கள் புத்தகங்களை வாங்குவதுதான் தங்களுக்குச் செய்யும் நன்றிக்கடன்களுள் ஒன்று என நினைக்கிறேன்...ஆகவேதான் கேட்டேன்...

    அன்புடன்,
    சென்கோவி

    ReplyDelete
  46. ////Thanuja said...
    To Ananth,
    This yogam , for example brings you things that you don't deserve or it is like talent illama u r getting promoted ....no priyosanam? that is why subbiah sir said it is a vibareetha yogam endu!!!
    Thanuja////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  47. /////ananth said...
    (a) be weak by placement in a Dusthana (evil houses 3rd, 6th, 8th & 12th) or in debility in Rasi/Navamsa or (b) be very strong in Kendra/Trikona and simultaneously transfer the power to the Lord of Lagna (or Atmakaraka) by conjunction or aspect.
    என்ன வாத்தியாரே தாங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள். பிறகு எதற்கு ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில் என்று குழப்புகிறீர்கள்.////

    பரிசுகளில் முதற்பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, மற்றும் ஆறுதல் பரிசு என்று பல நிலைப்பாடுகள் உள்ளது போல, இந்த வி.ரா.யோகத்திலும் சில நிலைப்பாடுகள் உள்ளன.

    ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். என்பதுதான் முதல் நிலை யோகம். மற்றதெல்லாம் ஆறுதல் பரிசு கணக்கில் வரும்:-)))
    வராஹி மிஹிரர் சொல்லிவைத்துள்ளார் என்பதற்காக அதையும் கொடுத்துள்ளேன். இதில் குழப்பத்திற்கு இடமில்லை! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  48. //////SHEN said...
    ஐயா,
    தங்கள் பதிலிற்கு நன்றி.
    // தங்கள் பதிவுகள் புத்தகமாக வந்துவிட்டனவா? எங்கு கிடைக்கும்? - இனிமேல்தான் வரவுள்ளது//
    தங்கள் புத்தக வெளியீட்டுவிழாவில் தங்களை சந்திக்க விருப்பம்...அறிய பொக்கிசத்தை இணையத்தில் இலவசமாகப் படித்தாலும் தங்கள் புத்தகங்களை வாங்குவதுதான் தங்களுக்குச் செய்யும் நன்றிக்கடன்களுள் ஒன்று என நினைக்கிறேன்...ஆகவேதான் கேட்டேன்...
    அன்புடன்,
    சென்கோவி////////

    அத்தியாயங்கள் முறைப்படுத்தப்பெற்று, படிப்பதற்கு வசதியாக, வரிசையாக, தேவையான குறிச்சொற்களுடன் வெளிவரவுள்ளது. ஆகவே பத்தகங்களை வாங்கிப் படிப்பதில் ஒரு விவரிக்க முடியாத செளகர்யம் உள்ளது. அது வெளிவந்த பிறகுதான், அதன் அருமை தெரியவரும்!

    ReplyDelete
  49. भारत के पूर्व प्रधान मंत्री नरसिम्हा राव, पूर्व गृह मंत्री लाल कृष्ण आडवाणी, पूर्व प्रधान मंत्री राजीव गांधी, उडीसा के मुख्यमंत्री नवीन पटनायक, स्वामी विवेकानंद ऐसे कुछ महान व्यक्तियों में से हैं जिन्हें विपरीत राजयोग ने शिर्ष पर पहुंचाया

    http://jyotirveda.com/?p=3


    நரசிம்ம ராவ், L.K அத்வானி, ராஜீவ் காந்தி, நவீன் பட்நாயக், ஸ்வாமி விவேகாநந்தர் போன்றோருக்கும் வி.ரா யோ இருந்ததாக ஒரு பதிவு சொல்கிறதே


    தேவ்

    ReplyDelete
  50. ////R.DEVARAJAN said...
    भारत के पूर्व प्रधान मंत्री नरसिम्हा राव, पूर्व गृह मंत्री लाल कृष्ण आडवाणी, पूर्व प्रधान मंत्री राजीव गांधी, उडीसा के मुख्यमंत्री नवीन पटनायक, स्वामी विवेकानंद ऐसे कुछ महान व्यक्तियों में से हैं जिन्हें विपरीत राजयोग ने शिर्ष पर पहुंचाया
    http://jyotirveda.com/?p=3
    நரசிம்ம ராவ், L.K அத்வானி, ராஜீவ் காந்தி, நவீன் பட்நாயக், ஸ்வாமி விவேகாநந்தர் போன்றோருக்கும் வி.ரா யோ இருந்ததாக ஒரு பதிவு சொல்கிறதே
    தேவ்/////

    பிரபலங்களின் ஜாதகங்களை வைத்து அலசும் பாடங்கள் பின்னால் வரவுள்ளது. அப்போது பார்க்கலாம். உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  51. பாடத்திற்கு நன்றிகள்.
    அய்யா எனக்கு தனுசு ராசி கும்ப லக்னம் 8ம அதிபதி புதன், 3ல் செவ்வாயுடன்(ஆட்சி) உள்ளது .விபரீத ராஜ யோகம் உண்டா?

    ReplyDelete
  52. "ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்."

    ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன்[அந்த துஷ்டனுக்கு சொந்த வீடாக இருந்தாலும் (ஆட்சி) இந்த யோகம் உண்டா] ?

    ReplyDelete
  53. /////dubai saravanan said...
    பாடத்திற்கு நன்றிகள்.
    அய்யா எனக்கு தனுசு ராசி கும்ப லக்னம் 8ம அதிபதி புதன், 3ல் செவ்வாயுடன்(ஆட்சி) உள்ளது .விபரீத ராஜ யோகம் உண்டா?/////

    உண்டு!

    ReplyDelete
  54. /////dubai saravanan said...
    "ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்."
    ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன்[அந்த துஷ்டனுக்கு சொந்த வீடாக இருந்தாலும் (ஆட்சி) இந்த யோகம் உண்டா] ?////

    உண்டு!அதனால்தான் துபாய்க்குப்போயிருக்கிறீர்கள்:-))))))

    ReplyDelete
  55. ஐயா,
    தங்கள் பதிலிற்கு நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com