1.5.10
புகழ் பெற்ற பாடல்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புகழ் பெற்ற பாடல்கள்
பகுதி 1
புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன?
இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
"கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்
வழிபடவும், வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்"
என்றார் கவியரசர் கண்ணதாசன்.
இறைவன் ஒருவன்தான்: நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்.
உணவு ஒன்றுதான் - நாம் பலவிதங்களில் பல சுவைகளில் சமைத்து உண்கிறோமே அதைப்போல!
சில பாடல்கள், பாடலின் கருத்து - அமைப்பு, பாடுபவர், பாவம், உடன் சேர்ந்து ஒலிக்கும் இசைக்கருவிகள், என்று எல்லாம் சேர்ந்து சிறப்பாக அமைந்தால்தான் நம் மனதை ஈர்க்கும். ஆனால் பக்திப்பாடல்களுக்கு அந்த வரைமுறை கிடையாது!
பக்தி ஒன்றுதான் அதற்கு அளவுகோல்! படிக்கும்போதே அது நம் மனதிற்குள் வந்து அமர்ந்துவிடும்!
இப்போது பாடலைப் பாருங்கள்:
காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!
- பேராசிரியர், முனைவர் திரு.அர.சிங்காரவடிவேலன் அவர்கள் எழுதி 1973ம் ஆண்டு வெளியிடப்பெற்ற 'செந்தூர் முருகன் அந்தாதி' என்ற 101 வெண்பாக் களைக் கொண்ட நுலில் உள்ள மிகவும் சிறப்பான பாடல்களில் ஒரு பாடல்
அந்த அந்தாதி நூலின் துவக்கப் பாடல்
நாளும் ஒருவெண்பா நான்பாடச் செந்தூரில்
வாழும் முருகா வரமருள்வாய் - சூழும்
திருச்சீர் அலைபோலச் சிந்துதமிழ்ப் பூவால்
அருச்சனைகள் செய்திடவே ஆர்த்து.
சீர், சந்தம், எதுகை மோனை, கருத்து என்று எல்லாமே எவ்வளவு அசத்தலாக இருக்கிறது பார்த்தீர்களா?
அசத்தும்படியாக வெண்பா எழுதுவதற்கெல்லாம் திறமை, மொழியறிவு, இரண்டும் வேண்டும். இறையருளால் கிடைப்பது அது!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஆஹா அற்புதம், அழகன் முருகன் அவனை
இந்த காலையில் என் சிந்தைப் புகுத்தியமைக்கு
நன்றிகள் ஐயா!
சித்தத்தோடு கலந்த சிந்தையும் அவர்தம்
ரத்தத்தோடு கலந்த பக்தியும் சங்கமிக்கும்
உயிரோவிய மன்ன திருப்பா பாடவண்ண
மயிலோ னருள அவன்தாள் பணிவோமே!
நன்றிகள் குருவே!
அதிகாலைப் பொழுது வணக்கம்!
ReplyDeleteஅரோகரா!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
திரு செந்தில் நாதனுக்கு அரோகரா!
தகப்பன் சாமிக்கு அரோகரா!
என்குல நாதனுக்கு அரோகரா!
தண்டாயுத பாணி தெய்வத்திற்கு அரோகரா!
அரகரோகரா!
'நாள் என் செயும், வினைதான் என் செயும்
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடும் கூற்று என் செயும்
தோலும் சிலம்பும் தண்டையும் என் கண்முன்னே தோன்றிடனே' !
'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா'!
ஆசானே- புகழ் பெற்ற பாடல்கள்க்கு நன்றி,
ReplyDeletemoreover i appretiate your pictures posted time to time, who ever is uplaoding these pictures must be having a eye for Photgraphy sense- its very obvious in each pictures Compo and framing.
Dear Sir
ReplyDeleteAlagana Elutthu Nadai. Avvapodhu Pugalamal Irrukkamudiyadhu.
Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
ReplyDelete"இறைவன் ஒருவன்தான்: நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்".
"உணவு ஒன்றுதான் - நாம் பலவிதங்களில் பல சுவைகளில் சமைத்து உண்கிறோம்"-----
நல்ல கருத்தாழம் மிக்கவை.
படம் அருமையாக உள்ளது.
நன்றி! வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-05-01
முனைவர் சிங்காரவடிவேலன் அவர்களைப்பற்றி இன்னமும் அறிந்துகொள்ளவேண்டுமென்ற ஆவலில்
ReplyDeleteகூகுளாரைக் கேட்டபொழுது அவர் இங்கே கொண்டு வந்து என்னைச் சேர்த்தார்.
http://my.opera.com/muralikrishnanrb/archive/monthly/?month=200912
பார்த்தால் அப்படியே உங்கள் பதிவு ஈ அடிச்சான் காப்பி போல் இருக்கிறது.
ஆனால், கீழே ஸோர்ஸ் என்று சொல்லி உங்களது பதிவையும் போட்டிருக்கிருக்கிறது.
(Source: http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_13.html
இது ஒரு மீள் பதிவோ ?
சுப்பு ரத்தினம்.
வாழும் கலையும் கோளின் சாரத்தால்
ReplyDeleteசூழும் செயல்களும் எமது ஆழ்மனதில்
வாய்ப்பாய் பதியும் வாத்தியார் அகத்தில்
காய்க்கட்டும் கனகப்பழம்.
அவசரத்தில் எழுதியது.கொஞ்சம் சீர் தளை தட்டுகிறது தான்."அதனால் என்ன?
எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக்கொண்டு மீதிப் பரிசைத்தரலாமே!"
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ஆஹா அற்புதம், அழகன் முருகன் அவனை இந்த காலையில் என் சிந்தைப் புகுத்தியமைக்கு
நன்றிகள் ஐயா!
சித்தத்தோடு கலந்த சிந்தையும் அவர்தம் ரத்தத்தோடு கலந்த பக்தியும் சங்கமிக்கும்
உயிரோவிய மன்ன திருப்பா பாடவண்ண மயிலோனருள அவன்தாள் பணிவோமே!
நன்றிகள் குருவே!/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////kannan said...
ReplyDeleteஅதிகாலைப் பொழுது வணக்கம்!
அரோகரா!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
திரு செந்தில் நாதனுக்கு அரோகரா!
தகப்பன் சாமிக்கு அரோகரா!
என்குல நாதனுக்கு அரோகரா!
தண்டாயுத பாணி தெய்வத்திற்கு அரோகரா!
அரகரோகரா!
'நாள் என் செயும், வினைதான் என் செயும்
எனை நாடி வந்த கோள் என் செயும்
கொடும் கூற்று என் செயும்
தோளும் சிலம்பும் தண்டையும் என் கண்முன்னே தோன்றிடனே' !
'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா'!/////
அரோகரா! கண்ணன் செல்லும் வழிக்கெல்லாம் அரோகரா!
////சிங்கைசூரி said...
ReplyDeleteஆசானே- புகழ் பெற்ற பாடல்களுக்கு நன்றி,
moreover i appretiate your pictures posted time to time, who ever is uplaoding these pictures must be having a eye for Photgraphy sense- its very obvious in each pictures Compo and framing./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
//////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Alagana Elutthu Nadai. Avvapodhu Pugalamal Irrukkamudiyadhu.
Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
நல்லது. நன்றி ராஜாராமன்!
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு
"இறைவன் ஒருவன்தான்: நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்".
"உணவு ஒன்றுதான் - நாம் பலவிதங்களில் பல சுவைகளில் சமைத்து உண்கிறோம்"-----
நல்ல கருத்தாழம் மிக்கவை.
படம் அருமையாக உள்ளது.
நன்றி! வணக்கம்.
தங்கள் அன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி//////
நல்லது. நன்றி நண்பரே!
//////sury said...
ReplyDeleteமுனைவர் சிங்காரவடிவேலன் அவர்களைப்பற்றி இன்னமும் அறிந்துகொள்ளவேண்டுமென்ற ஆவலில்
கூகுளாரைக் கேட்டபொழுது அவர் இங்கே கொண்டு வந்து என்னைச் சேர்த்தார்.
http://my.opera.com/muralikrishnanrb/archive/monthly/?month=200912
பார்த்தால் அப்படியே உங்கள் பதிவு ஈ அடிச்சான் காப்பி போல் இருக்கிறது.
ஆனால், கீழே ஸோர்ஸ் என்று சொல்லி உங்களது பதிவையும் போட்டிருக்கிருக்கிறது.
(Source: http://classroom2007.blogspot.com/2008/12/blog-post_13.html
இது ஒரு மீள் பதிவோ ?
சுப்பு ரத்தினம்./////
வகுப்பறைக்குப் புதியது சாமி!
//////kmr.krishnan said...
ReplyDeleteவாழும் கலையும் கோளின் சாரத்தால்
சூழும் செயல்களும் எமது ஆழ்மனதில்
வாய்ப்பாய் பதியும் வாத்தியார் அகத்தில்
காய்க்கட்டும் கனகப்பழம்.
அவசரத்தில் எழுதியது.கொஞ்சம் சீர் தளை தட்டுகிறது தான்."அதனால் என்ன?
எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக்கொண்டு மீதிப் பரிசைத்தரலாமே!"////////
வாழும் கலையை வாய்த்தகோள் சாரத்தால்
நாளும் சொல்லி நன்மையுற - ஆழ்மனதில்
வாய்ப்பாய் பதிவுசெய்யும் வாத்தியார் உள்ளத்தில்
காய்க்கட்டும் கனகப் பழம்!
இது எப்படி இருக்கு கிருஷ்ணன் சார்?
கோயில் படம் கொள்ளை அழகு. எடுத்தவருக்கும் போட்டவருக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteசார்.,
ReplyDeleteநான் புதிதாக வந்த மாணவன் . உங்களுடைய பாடங்கள் மிகவும் அருமை . நீங்கள் சொல்லிக்குடுக்கும் முறை மிகவும் உதவியாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் ஐயா .எனக்கு ஓரளவு அடிப்படை பாடங்கள் தெரியும் . உங்களுடைய புத்தகம் எப்பொழுது வெளிவரும் ,ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
குபேந்திரன் .
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteபுகழ் பெற்ற பாடலில் சில வார்த்தைகள் விடுபட்டுள்ளன,
நாள் என் செய்யும்,விதிதான் என் செய்யும்,
கோள் என் செய்யும்,கொடும் கூற்று என் செய்யும்,நாதன்
தாளும் தண்டையும் சிலம்பும் தோளும் கடம்பும் வெற்பும்
வேலும் மயிலும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
சரிதானே அய்யா.(அல்லது)இன்னும் சில வார்த்தைகள் விடு பட்டுள்ளதா
தெரிய வில்லை.
அரசு.
நல்ல பதிவு நல்ல படம்
ReplyDeleteArumai Ayya...
ReplyDeletePugal petra padal enbathai naanum kandean. Tiruvannamalai - Ramanashram, neram ~11:30. After the shiva pooja a Lady tone in a big prayer hall, that was very very beautiful on 27th Apr. (Chitra powrnami)
Sangeetham karpathu, ippadi kadavul mun paadave endru avargalin bakyam patry udan vantha enn nambaneedam Kurinen. Thanks for your post ayya.
////Jo Amalan Rayen Fernando said...
ReplyDeleteகோயில் படம் கொள்ளை அழகு. எடுத்தவருக்கும் போட்டவருக்கும் பாராட்டுகள்./////
படம் கூகுள் ஆண்டவர் கொடுத்தது. பாராட்டுக்கள் அவருக்கே உரியதாகும்!
///kubendiran said...
ReplyDeleteசார்.,
நான் புதிதாக வந்த மாணவன் . உங்களுடைய பாடங்கள் மிகவும் அருமை . நீங்கள் சொல்லிக்குடுக்கும் முறை மிகவும் உதவியாக இருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் ஐயா .எனக்கு ஓரளவு அடிப்படை பாடங்கள் தெரியும் . உங்களுடைய புத்தகம் எப்பொழுது வெளிவரும் ,ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
குபேந்திரன்////
புத்தக வேலை நடந்து கொண்டுள்ளது. நன்றி!
////ARASU said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
புகழ் பெற்ற பாடலில் சில வார்த்தைகள் விடுபட்டுள்ளன,
நாள் என் செய்யும்,விதிதான் என் செய்யும்,
கோள் என் செய்யும்,கொடும் கூற்று என் செய்யும்,நாதன்
தாளும் தண்டையும் சிலம்பும் தோளும் கடம்பும் வெற்பும்
வேலும் மயிலும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
சரிதானே அய்யா.(அல்லது)இன்னும் சில வார்த்தைகள் விடு பட்டுள்ளதா
தெரிய வில்லை.
அரசு.////
நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் எல்லாம் பின்னால் வரும்!
////DR.KVM said...
ReplyDeleteநல்ல பதிவு நல்ல படம்////
நல்லது. நன்றி!
//////Sabarinathan TA said...
ReplyDeleteArumai Ayya...
Pugal petra padal enbathai naanum kandean. Tiruvannamalai - Ramanashram, neram ~11:30. After the shiva pooja a Lady tone in a big prayer hall, that was very very beautiful on 27th Apr. (Chitra powrnami)
Sangeetham karpathu, ippadi kadavul mun paadave endru avargalin bakyam patry udan vantha enn nambaneedam Kurinen. Thanks for your post ayya./////
நல்லது. நன்றி நண்பரே!
kmr krishnan ji
ReplyDeleteவாழும் கலையை வருங்கோ ளதன்சாரம்
நாளும் நடத்தவே நன்மையும் --ஆழ்மனதில்
வாய்ப்பாய் நற்பதிவே இட்டவெனா சானகத்தில்
காயக்கட்டும் கனகப் பழம்
நேரிசை வெண்பா என்றால் இப்ப்டி இருந்தால்
சரி யென்று நினைக்கின்றேன்
எதற்கும்
அகரம் அமுதா அவர்களின்
வெண்பா எழுதலாம் வாங்க வலைப் பூவிற்கு சென்றால்
கற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்