+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Back Ground Music - நம் வாழ்க்கைக்கான பின்னணி இசை!
"எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்
நான்வாழ யார் பாடுவார்?"
---கவியரசர் கண்ணதாசன்
பத்தாம் வீடு - அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல் Tenth House - A glance with Ashtakavarga
நீங்கள் நன்றாக வாழ்வதற்கு நவக்கிரகங்கள் பாடும் பாட்டுத்தான் முக்கியம். லக்கினாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி ஆகியவர்கள்தான் இனிமையாக, நம் மனம் மகிழப்பாடுவார்கள்.
1. லக்கினாதிபதி (1st Lord)
2. பூர்வ புண்ணியாதிபதி (5th Lord)
3. பாக்கியாதிபதி (9th Lord - Lord for Gains)
4. லாபாதிபதி (11th Lord - Lord for Profit)
ஆகியோர்கள் ஜாதகத்தில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் நன்றாக இருந்தால், ஜாதகனும் நன்றாக இருப்பான்!
Lagna lord, fifth lord, ninth lord & eleventh lord ஆகியோர்கள் பாடினால் வாழ்க்கை முழுவதும் மகிச்சியாக இருக்கும்.
ஆனால் அஷ்டகவர்க்கத்தை எழுதிய முனிவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். ist house, 9th house, 10th house & 11th house ஆகிய வீடுகள் நன்றாக இருந்தால் போதும் என்கிறார்கள். நன்றாக இருப்பது என்பது என்ன?
அந்த வீடுகள் நான்கிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும். இருந்தால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். மூடி வைத்துவிடலாம். ஜாதகன் எல்லா நலன்களையும் பெற்று, வசதியாக வாழ்வான். அவன் காதில் எப்போதும் இளையராஜாவின் அசத்தலான பின்னணி இசை (BGM) ஒலித்துக் கொண்டிருக்கும். சின்னக்குயில் சித்ரா அல்லது சாதனா சர்க்கத்தின் ”லல லல லல் லல்லா” ஒலித்துக் கொண்டு இருக்கும்.
அப்படி இல்லையென்றால் ‘அசதி’ அதிகமாக இருக்கும். அசதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். நான் எதற்காக அதை விவரிக்க வேண்டும்?
சின்ன வயதில் உன் வாழ்க்கையைப் பார்க்காதே, நாற்பது வயதில் பார்; வாழ்க்கையின் அர்த்தம் பிடிபடும் என்பார்கள் அனுபவஸ்தர்கள்.
90% மனிதர்கள் அந்த 40வது வயதில் தங்கள் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுத்துவிடுவார்கள். அதற்குக் காரணம், அடிக்கடி எட்டிப் பார்க்கும் அசதி!
++++++++++++++++++++++++++++++++++++
வேறு ஒரு கோணத்தில் பார்த்தீர்கள் என்றால், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பணம்தான் பலருக்கும் பிரச்சினை யாக இருக்கிறது.
அதீத பணம் இருந்தால், 75% பிரச்சினைகளைத் தட்டி எறிந்து விடலாம். அதுவும் சொந்தப் பணமாக இருந்தால் மட்டுமே, யாரையும் கேட்காமல் அப்படிச் செய்ய முடியும்.
சொந்தப் பணத்திற்கு இரண்டு வழிதான் உண்டு. ஒன்று நல்ல வேலையில் இருக்க வேண்டும். அல்லது நல்ல தொழில்/நல்ல வியாபாரம் அமைந்திருக்க வேண்டும்
தில்லி செளத் ப்ளாக்கில் உள்துறை அமைச்சகத்தில் பெரிய வேலை அல்லது இந்தியன் ரயில்வேயில் Joint Secretary லெவலில் வேலை அல்லது அம்பானி, டாட்டாக்களிடம் பொறுப்பான வேலை என்றால் எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள்.
நோக்கியா செல் போன்களுக்கு நீங்கள்தான் தேசிய விநியோகஸ்தர் அல்லது இங்கிலாந்தின் லீவர் கம்பெனி அல்லது அல்லது ஜப்பானின் மிட்சுபிஷி கம்பெனிக்கு நீங்கள்தான் இந்திய விநியோகஸ்தர் என்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்?
ப்ளாக் படிப்பதற்கும், ஜோதிடப் பாடம் படிப்பதற்கும் நேரம் இருக்குமா? அல்லது இந்த வாத்தியாரைத்தான் தெரியவருமா?:-))))
----------------------------------------------------------------------------
ஜாதகனின் உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றிற்கான இடம் பத்தாம் வீடு. Tenth house is the house of profession
அது நன்றாக இருந்தால் நல்ல வேலை, படித்து முடித்தவுடன் வேலை, வேலையில் அடுத்தடுத்து உயர்வு, கைநிறைய வருமானம் என்று எல்லாம் கிடைக்கும். எல்லாம் அம்சமாக இருக்கும்.
பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, கர்மகாரகன் சனி அமர்ந்திருக்கும் வீடு ஆகியவற்றில் 30ம் அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்களும் இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால்?
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வதைப் போல (பாடலில் என்ன குறை இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி குறைத்துக் கொண்டு கொடுங்கள்) அந்த மூன்று வீடுகளில் எங்கெங்கே குறைகள் இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி குறைவாகத்தான் பலன்கள் கிடைக்கும்.
அதேபோல, அந்த வீடுகளில், ஏதாவது ஒரு வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தாலும், பத்தாம் வீட்டு அதிபதி, கர்மகாரகன் சனி ஆகிய இருவரும் தங்கள் சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சரி எப்போது கிடைக்கும்?
அங்கேதான் சிக்கல்!
அந்தந்த கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும்.
உங்களுக்கு காலசர்ப்ப தோஷம் இருந்தால். அது முடியும்வரை தாமதப்படும். அது எப்போது முடியும்? லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருக்கின்றனவோ, அந்த எண்ணிக்கையில் உள்ள வயது வந்தவுடன் தோஷம் காலாவதியாகும். பொதுவாக 30 வயதிற்கு மேல் தோஷமே யோகமாக மாறும். அப்போது இரட்டிப்பாகக் கிடைக்கும்.
வேலைக்குச் சேருகின்ற வயதில் ஏழரைச் சனி துவங்கிவிட்டால், ஏழரைச் சனி முடிந்த பிறகுதான் அது நடக்கும். அதுவரை சனி உங்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் எனோதானோவென்று பிடிக்காத வேலைகளில் இருக்க நேரிடும். சனியின் பிடியிலிருந்து தப்பித்த பிறகுதான் அம்சமான வேலைகளில் சேர முடியும்.
மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?
அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். வேலை கிடைக்கும். ஆனால் தகுதிக்குக் குறைவான வேலைகளே கிடைக்கும். வருமானமும், வேலை பார்க்கும் சூழ்நிலையும் திருப்திகரமாக இருக்காது.
மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?
லக்கினாதிபதி, இரண்டாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி ஆகிய மூவரும் தங்கள் சுயவர்க்கததில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடனும் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். அவர்களுக்காக அந்த வேலை கிடைக்கும்.
இளையராஜாவின் மகன் என்பதற்காக யுவன்சங்கர் ராஜாவிற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கிறதல்லவா? அதுபோல அந்த மூவருக்காக நல்ல வேலை அல்லது தொழில் கிடைக்கும்.
அவர்களும் நல்லபடியாக இல்லையென்றால்?
கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணிய பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டு உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜோதிடத்தைப் பொய் என்று சொல்லி விட்டு நீங்களும் செளகரியமாக இருக்கலாம்.
நல்ல வேலை, வேலையில் உயர்வு அல்லது திடீர் சரிவு, இடமாற்றம், வேலை மாற்றம் என்று வேலை சம்பந்தப் பட்ட அனைத்திற்குமே கர்மகாரகன் சனிதான் அதிகாரி. காரகன். உங்கள் மொழியில் சொன்னால் Authority.
அவன் தயவின்றி ஒன்றும் நடக்காது. ஒரே பகலில் உங்களை நாடே திருப்பிப்பார்க்கும்படியும் செய்ய அவனால் முடியும். அதேபோல நொந்துபோகும்படி ஒருவரைக் கீழே தள்ளி விட்டுப்போகவும் அவனால் முடியும். எந்தச் சிபாரிசும் அவனிடம் எடுபடாது.
கீழே உள்ள உதாரண ஜாதகத்தைப் பாருங்கள் தன் கோச்சாரத்தில் 32 பரல்கள் உள்ள தனுசுவிற்கு வந்தபோது, அந்த 2.5 ஆண்டு காலத்தில் ஜாதகனை உயர்விற்குக் கொண்டு போன சனி, இடம் மாறி அடுத்துள்ள மகரத்திற்கு வந்தபோது, பிடித்துத்தள்ளி பதவியில் இறக்கம் கொடுத்த தொடு, தண்ணியில்லாக் காட்டிற்கு மாற்றிவிட்டும் போனானாம். அங்கே 19 பரல்கள்தான் உள்ளன.
சனியின் சுற்றில் ஒவ்வொரு 2.5 ஆண்டுகளுக்கும் இந்தப் பரல்கள் கணக்கின்படி உங்களுக்கு வரக்கூடிய உயர்வு, தாழ்வுகளை நீங்களே அறிந்து கொள்ளலாம். அது முக்கியமான படிப்பினை. ஆகவே நினைவில் வைத்து அதன்படி செயல்படுங்கள். shareகள், இடம் வாங்குதல், வைப்புநிதி முதலீடு போன்றவற்றில் கவனமாக இருக்க இந்த விதி (rule) பயன்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அடுத்து வரும் 2.5 ஆண்டுகள் நமக்கு நன்றாக இல்லை எனும்போது, பங்குச் சந்தையில் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டாமல் இருக்கலாம் இல்லையா?
-------------------------------------------------------------------------------------
சிலர் படிப்பு, அறிவு என்று எதுவும் இல்லாமல் நல்ல வருமானத்துடன் இருக்கிறார்களே- அவர்களுக்கும் இந்த அஷ்டகவர்க்கக் கணக்குத்தானா?
அவர்களுக்கு வேறு ஒரு கணக்கு இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா பல உதவிகளை வாரி வழங்குகிறதே - அந்தக் கணக்கு.
அவர்கள் ஜாதகங்களில் யோகங்கள் இருக்கும். ராஜ யோகங்கள் இருக்கும். இந்த அஷ்டகவர்க்கக் கணக்கை யெல்லாம் மீறி அவர்களுக்குப் பதவிகள் கிடைக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும்!
யோகங்கள் என்னென்ன?
மொத்தம் 200க்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடங்கள் இனிமேல்தான் வரவுள்ளன.
இருக்கிற 200 மூட்டை அரிசியையும் ஒரே நாளில் சமைத்து உங்களுக்குப் பறிமாற முடியுமா? ஆகவே பொறுத்திருந்து அவற்றைப் படியுங்கள்.
இந்தப் பாடம் பற்றிய மேல் விவரங்களுக்கு என்னைக் குடைந்து கேள்விகள் கேட்காமல் பத்தாம் வீட்டைப் பற்றிய பழைய பாடங்களையும், சனியைப் பற்றிய பழைய பாடங்களையும் படியுங்கள். அதைத் தேடி எடுப்பதற்கு கீழே உள்ள சுட்டியைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள். அது நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான கூடுதுறையாரின் கைவண்ணம். அவருக்கு அவருடைய பதிவிலேயே ஒரு தாங்க்ஸைச் சொல்லிவிடுங்கள். Please click here for the link!
பரிகாரம்?
சனிக்கிழமைகளில், காலை நேரத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி சனீஷ்வரனை வழிபடுங்கள்.
கிரகங்களுக்கு, ஜாதிமதங்கள் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் வழிபடலாம். ஆசானுக்கும் ஜாதி மதங்கள் கிடையாது.எல்லோரும் சீடர்களே!:-))))
எங்கே சென்று வழிபட வேண்டும்?
இருக்கும் இடத்திலேயே வழி படலாம். ஒட்டோவாவிலும், டொரொன்டோவிலும், சிகாகோவிலும், நியூஜெர்சியிலும் ஏது சனீஸ்வரன் கோவில்? வீட்டிலிருந்தே வழிபடலாம். இணையத்தில் திருநள்ளாறு சனீஸ்வரனின் படமும், வழிபாட்டுப் பாடலும் கிடைக்கும். வாணிஜெயராமின் பாடல் ஒலிப் பேழையும் இருக்கிறது. அதை அவரவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.
பாடத்தைப் பற்றிய உங்களுடைய feedback வேண்டும். ஒருவரி எழுதுங்கள். அனைவரும் எழுதுங்கள். தனி மடல் வேண்டாம். பதிவில் பின்னூட்ட வசதி உள்ளது அதைப்பயன் படுத்தி எழுங்கள்.
Okayயா?
அன்புடன்,
வாத்தியார்

ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteமீண்டும் மீண்டும் படிக்கும்
போது தெளிவு பிறக்கும் பாடத்திற்கு,
நன்றிகள் குருவே!
மிக்க நன்றி . உதாரண ஜாதகத்தை தாங்கள் "Blog"ல் insert பண்ண வில்லை .
ReplyDeleteDear Sir
ReplyDeleteGood Morning Sir.
Arumayana 10th Place Paadam.
Padam Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeleteSir Enakku Lagnathilurundhu 9il(3rd 4th kuriya Lord) Saturn.
10th Place:25 (Saturn 5 Paralgal)
11th Place:29
12th place:23
5thPlace:29
7th Place:27
Aiyya Idhai Patri Ungal Karuthu?.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
நன்றி ஆசானே
ReplyDeleteவாங்கி வந்த வரம் அப்படி இருக்கையில் நாமென்ன செய்யமுடியும்.
உள்ளேன் ஐயா!
ReplyDeleteஇன்று பாடம் சுவையாக உள்ளது.
பாடத்திற்கு,
ReplyDeleteநன்றிகள்
Your Student
S.A.Babu
sir,
ReplyDeleteGood morning and thanks for good lessions.yes after 40 years only i started to feel and realised about life.for me lagna lord jubitor in 8th place (for dhanus lagna) after reading your lessions decided except preying god i don`t have anything to do as i work very hard & some one else will take the credit and get the promotions & benefit
i realised about life after reading several times about your lessions.
thanks guruji
g.seenivasan.
பாடத்திற்கு நன்றி
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteGood Morning. I was longing to learn this art for a long time. You have simplified this tough and abstract subject in an easily understandable format with your good explanations. More over your willingness to teach this subject to all other is really appreaciatable.
Thank you for all the time you are spending to teach us all you know.
Thank you sir. Great Job.
ஆசிரியரே!
ReplyDeleteவணக்கம், வழக்கத்திற்குமாறான புது வேகம் தெரிகிறது. இனி அடுத்தடுத்து பாடங்கள் வரும் என நினைக்கிறேன்.
நன்றி...
ஐயா, பத்தாம் வீடு பற்றி ஒரு நல்ல தெழிவு கிடைத்தது மிக்க நன்றி, எனக்கு நீங்கள் சொன்னதைப்போல் முறையே 1,9,10,11 வீடுகளில் 30 30 34 33 பரல்கள் :)
ReplyDeleteநீண்ட நாட்களாக கதைகள் கட்டுரைகள் என போய்கொண்டிருந்த வகுப்பறை
ReplyDeleteஇப்போதுதான்....
நன்றி!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDelete"பத்தாம் வீடு அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்"---
பல வழிகளிலும் எப்படி அலசிப்பார்ப்பது என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள்.
மேலும் ஆங்காங்கே தகுந்த உதாரணங்கள் மிக மிக அருமை.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-05-03
Dear Sir,
ReplyDeleteI read your Soorya bagavan Details in your blog. Please send all navagraga place and how can i do the pooja..... Please sir. I hope ur favorable reply.
Thanking You.
By
Dev
Dear Sir,
ReplyDeleteThanks for lessons......
by dev
Sir,
ReplyDeletePaaadam arumai sir!!!!
என்னுடைய லக்னம் விருஷபம். ஒன்றாம் இடத்தில் 31, ஐந்தாம் இடத்தில் 28, ஒன்பதில் 28, பத்தில் 31, பதினொன்றில் 31 பரல்கள் உள்ளன. இருப்பினும் நீங்கள் சொல்லியது போலவே எனக்கு கால சர்ப்பம் (யோகமா அது !!!படா பேஜார். ) ( ராகு சிம்மத்திலும் கேது கும்பத்திலும் மற்ற எல்லா க்ருஹங்களும் அதனுள்ளே அடங்கிய நிலையில் ) ஒவ்வொரு கால கட்டத்திலும் உத்தியோக உயர்வு ஒவ்வொரு தடவையும் ஒன்று அந்த கால கட்டத்தில் கிடைக்காமல் தள்ளிப்போனது. இல்லை, அது வந்தாலும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையும் உடல் நிலையும் இருந்தது.
ReplyDeleteஅது சரி... இந்த கால சர்ப்பத்தில் இரண்டு வகை உண்டாமே !! இரண்டாவதான விபரீத கால சர்ப்பத்தைப் பற்றி கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன். நீங்கள் சொன்னால்தான் சுவாரசியமாக இருக்கும்.
சுப்பு ரத்தினம்
அய்யா, நான் வாங்கிய புள்ளிகள்
ReplyDelete1) மிதுனம் - (லக்னம்) -29
2) கடகம் - 33 (Raghu)
3) சிம்மம் - 27
4) கண்னி -28 (Guru & Sat)
5) துலாம்- 18
6) விருச்சகம் -28
7) தனுசு- 30
8) மகரம் -29 (கே)
9) கும்பம்- 38(சந்த்)
10) மீனம்- 24
11) Mஎஷம் -32(செவ் பு சு சூ)
12) ரிஷபம் - 21
எனக்கு இன்னும் 40 ஆகலை, எதாவது Advice உண்டா?
இங்க இந்த கேள்வி தவறு என நன்கு அறிவேன், இருந்தாலும் மனசு கேட்கவேளை..
நல்லவர்கள் வாயில் மலரும் 4 வார்த்தைகள் போதுமே, வாழ்வை தைரியமாக ride பண்ணுவேன். Sorry for my multiple lines...
ஆசிரியருக்கு வணக்கம், ஐயா, உங்கள் சேவைக்கு நன்றி, தொடர வாழ்த்துகள்,
ReplyDeleteசெவ்வாய் தோஷம் குறிது எழுதவும். முன்பெ எழுதியிருந்தால், அதன் சுட்டி தரவும். நன்றி...
Super sir, I have to immediately check my horoscope
ReplyDeleteஅஷ்டவர்கத்தின் மீது உங்களுக்கு அபார நம்பிக்கை.நான் பார்த்தவரை ராசி சக்கரத்தில் நீசம் அடைந்துள்ள கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 என்று பரல்கள் பெறுகின்றன.ஆகவே இரண்டையும் கைக்கொண்டு பலன் சொல்வதில் பல சிக்கல்கள் தோன்ற வாய்ப்பு உண்டு.ஏற்கனவே படித்த பாடம் தான் என்றாலும்
ReplyDeleteமீண்டும் படிக்கும்போதும் புதிது போலவே இருந்தது.நன்றி.
வகுப்பறையின் மூத்த (70வயது) மாணவர் என்னுடைய சீனியர் மற்றும் நீண்ட நாள் குடும்ப நண்பர்!ஒரே காலனியில் 5 ஆண்டுகளூக்கு மேலாக எதிர் எதிர் வீட்டில் வசித்துள்ளோம்.இது ஒரு மேல் தகவல்.
ஆசானுக்கு வணக்கம்
ReplyDeleteநன்றாக இருந்தது .
எது புரிந்ததோ இல்லையோ இது ஒரு மீள் பதிவு என்பது புரிந்தது. அதுவும் மின்னஞசல் பாடத்தில் வந்தது. இதற்கு முன்பு யோகங்களைப் பற்றி எழுதுவதற்கு முன் எழுதியது எல்லாம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு தோஷம் இருக்கிறது என்ற நம்பிக்கை இந்த வினாடி வரை எனக்கு இல்லை என்பதை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
ReplyDeletearputham veru vaarthai illai. really nice . thank u sir.
ReplyDeletenaan veru yaarum alla. (ms torrent)
சித்திரை மாதத்தின் அதிகாலை பொன்காலை பொழுது வணக்கம் ஐயா!
ReplyDeleteநமது நாட்டிற்கு கர்நாடக சங்கீதத்தை தனது ஞானத்தின் மூலமாக தந்த மகா பெரியவர்கள் !
எம் சங்கீதத்தின் குருநாதர்கள்!
ஐயா சேமலா சாஸ்திரிகள்! முத்துசாமி தீட்சிதர்!
தியாகராஜா பாகவதர் !
பற்றி இந்த வகுப்பறையில் கூரியதிர்க்கும் மற்றும் எமது இளமை கால சங்கீத பாடகசாலைக்கு எண்ணம்களை கொண்டு சென்றதிற்கு ஐயா அவர்களுக்கு நன்றி
கடை விரித்தேன் அதனை கொள்ளுவார் இல்லை என்றான் ஒரு புண்ணியவான்!
ஒரு ஞானி சொன்னான் ஐயோ
ஞான பழம் கொட்டி கிடைக்கின்றது, இதனை அள்ளி செல்லுவார் இங்கு எவரும் இல்லையே என்று
இதனை விட ஜோதிடத்தை மிகவும் அருமையாக சொல்ல முடியுமா? என்று இந்த பாலகனுக்கு தெரியவில்லை ஐயா!
மிகவும் நன்று ஐயா
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம், மீண்டும் மீண்டும் படிக்கும்
போது தெளிவு பிறக்கும் பாடத்திற்கு,
நன்றிகள் குருவே!////
நல்லது. நன்றி ஆலாசியம்!
///////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி . உதாரண ஜாதகத்தை தாங்கள் "Blog"ல் insert பண்ணவில்லை//////
இப்போது சேர்த்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை பாருங்கள்!
/////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Good Morning Sir.
Arumayana 10th Place Paadam.
Padam Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////
நல்லது.நன்றி ராஜாராமன்!
Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Sir Enakku Lagnathilurundhu 9il(3rd 4th kuriya Lord) Saturn.
10th Place:25 (Saturn 5 Paralgal)
11th Place:29
12th place:23
5thPlace:29
7th Place:27
Aiyya Idhai Patri Ungal Karuthu?.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
10ஐ விட பதினொன்றில் பரல்கள் அதிகமாக உள்ளது நல்லதுதான். பார்க்கும் வேலைக்கு உரியபலன் கிடைக்கும்!
/////sarul said...
ReplyDeleteநன்றி ஆசானே
வாங்கி வந்த வரம் அப்படி இருக்கையில் நாமென்ன செய்யமுடியும்/////.
இதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்!
/////DHANA said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!
இன்று பாடம் சுவையாக உள்ளது.///////
புளி, காரம், உப்பு எல்லாம் சரியாக இருந்ததா?
////Babu said...
ReplyDeleteபாடத்திற்கு,
நன்றிகள்
Your Student
S.A.Babu////
நல்லது.நன்றி!
////seenivasan said...
ReplyDeletesir,
Good morning and thanks for good lessions.yes after 40 years only i started to feel and realised about life.for me lagna lord jubitor in 8th place (for dhanus lagna) after reading your lessions decided except preying god i don`t have anything to do as i work very hard & some one else will take the credit and get the promotions & benefit
i realised about life after reading several times about your lessions.
thanks guruji
g.seenivasan./////
அனுபவம் என்பது சீப்பு. தலை வழுக்கையான பிறகே அது கிடைக்கும் என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.
////மதி said...
ReplyDeleteபாடத்திற்கு நன்றி/////
உங்களின் பின்னூட்டத்திர்கு நன்றி நண்பரே!
////Arul said...
ReplyDeleteஆசிரியரே!
வணக்கம், வழக்கத்திற்குமாறான புது வேகம் தெரிகிறது. இனி அடுத்தடுத்து பாடங்கள் வரும் என நினைக்கிறேன்.
நன்றி.../////
நான் எப்போதும்போல வேகமாகத்தான் இருக்கிறேன். சில பாடங்கள் அதன் தன்மையால் வேகத்தைப் பிரதிபலிக்கும். சில பாடங்கள் பிரதிபலிக்காது!
////Srividhya said...
ReplyDeleteRespected Sir,
Good Morning. I was longing to learn this art for a long time. You have simplified this tough and abstract subject in an easily understandable format with your good explanations. More over your willingness to teach this subject to all other is really appreaciatable.
Thank you for all the time you are spending to teach us all you know.
Thank you sir. Great Job./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!. நான் படிக்கும்போது இப்படி சொல்லித்தர ஆள் இல்லை. அதனால் நானே எளிமையாகச் சொல்லித்தர முன்வந்தேன்.
////Prabhu said...
ReplyDeleteஐயா, பத்தாம் வீடு பற்றி ஒரு நல்ல தெளிவு கிடைத்தது மிக்க நன்றி, எனக்கு நீங்கள் சொன்னதைப்போல் முறையே 1,9,10,11 வீடுகளில் 30 30 34 33 பரல்கள் :)/////
அதிர்ஷ்டமானவர்தான் நீங்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
////ஜடம் said...
ReplyDeleteநீண்ட நாட்களாக கதைகள் கட்டுரைகள் என போய்கொண்டிருந்த வகுப்பறை இப்போதுதான்....
நன்றி!/////
எப்போதுமே சுவைக்காக பலவிஷயங்களையும் கலந்துதான் எழுதுகிறேன். வெறும் ஜோதிடம் என்றால் கசந்துவிடும்!
V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
"பத்தாம் வீடு அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்"---
பல வழிகளிலும் எப்படி அலசிப்பார்ப்பது என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள்.
மேலும் ஆங்காங்கே தகுந்த உதாரணங்கள் மிக மிக அருமை.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Theivendrakumar PP said...
ReplyDeleteDear Sir,
I read your Soorya bagavan Details in your blog. Please send all navagraga place and how can i do the pooja..... Please sir. I hope ur favorable reply.
Thanking You.
By
Dev////
அடுத்தடுத்து அனைத்தும் வரும். பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே!
/////Karthi said...
ReplyDeleteSir,
Paaadam arumai sir!!!!////
உங்களின் பாராட்டிற்கு நன்றி
/////Theivendrakumar PP said...
ReplyDeleteDear Sir,
Thanks for lessons......
by dev/////
நல்லது. நன்றி நண்பரே!
//////sury said...
ReplyDeleteஎன்னுடைய லக்னம் விருஷபம். ஒன்றாம் இடத்தில் 31, ஐந்தாம் இடத்தில் 28, ஒன்பதில் 28, பத்தில் 31, பதினொன்றில் 31 பரல்கள் உள்ளன. இருப்பினும் நீங்கள் சொல்லியது போலவே எனக்கு கால சர்ப்பம் (யோகமா அது !!!படா பேஜார். ) ( ராகு சிம்மத்திலும் கேது கும்பத்திலும் மற்ற எல்லா க்ருஹங்களும் அதனுள்ளே அடங்கிய நிலையில் ) ஒவ்வொரு கால கட்டத்திலும் உத்தியோக உயர்வு ஒவ்வொரு தடவையும் ஒன்று அந்த கால கட்டத்தில் கிடைக்காமல் தள்ளிப்போனது. இல்லை, அது வந்தாலும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையும் உடல் நிலையும் இருந்தது.
அது சரி... இந்த கால சர்ப்பத்தில் இரண்டு வகை உண்டாமே !! இரண்டாவதான விபரீத கால சர்ப்பத்தைப் பற்றி கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன். நீங்கள் சொன்னால்தான் சுவாரசியமாக இருக்கும்.
சுப்பு ரத்தினம்/////
முன்பே சொல்லியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது நண்பரே!
//////Pugazhenthi said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம், ஐயா, உங்கள் சேவைக்கு நன்றி, தொடர வாழ்த்துகள்,
செவ்வாய் தோஷம் குறித்து எழுதவும். முன்பே எழுதியிருந்தால், அதன் சுட்டி தரவும். நன்றி...////
விவரமாக எழுத வேண்டும். எழுதுகிறேன்!
//////Sabarinathan TA said...
ReplyDeleteஅய்யா, நான் வாங்கிய புள்ளிகள்
1) மிதுனம் - (லக்னம்) -29
2) கடகம் - 33 (Raghu)
3) சிம்மம் - 27
4) கண்னி -28 (Guru & Sat)
5) துலாம்- 18
6) விருச்சகம் -28
7) தனுசு- 30
8) மகரம் -29 (கே)
9) கும்பம்- 38(சந்த்)
10) மீனம்- 24
11) Mஎஷம் -32(செவ் பு சு சூ)
12) ரிஷபம் - 21
எனக்கு இன்னும் 40 ஆகலை, எதாவது Advice உண்டா?
இங்க இந்த கேள்வி தவறு என நன்கு அறிவேன், இருந்தாலும் மனசு கேட்கவேளை..
நல்லவர்கள் வாயில் மலரும் 4 வார்த்தைகள் போதுமே, வாழ்வை தைரியமாக ride பண்ணுவேன். Sorry for my multiple lines...////
ஐந்திலும், பத்திலும் பரல்கள் குறைவாக உள்ளனவே சுவாமி!
////MarmaYogi said...
ReplyDeleteSuper sir, I have to immediately check my horoscope////
நல்லது. செய்து பாருங்கள்! மர்மம் தீர்ந்து யோகம் நிறையட்டும்!
/////kmr.krishnan said...
ReplyDeleteஅஷ்டவர்கத்தின் மீது உங்களுக்கு அபார நம்பிக்கை.நான் பார்த்தவரை ராசி சக்கரத்தில் நீசம் அடைந்துள்ள கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 என்று பரல்கள் பெறுகின்றன.ஆகவே இரண்டையும் கைக்கொண்டு பலன் சொல்வதில் பல சிக்கல்கள் தோன்ற வாய்ப்பு உண்டு.ஏற்கனவே படித்த பாடம் தான் என்றாலும்
மீண்டும் படிக்கும்போதும் புதிது போலவே இருந்தது.நன்றி.//////
உச்சம், நீசம் என்றில்லாமல் placement ஐ வைத்துத்தான் பரல்கள் விழுகின்றன. சேர்கின்றன. ஆகவே இந்த முறையில் பலன்கள் சரியாக இருக்கும்! ஒப்பிட்டுப் பாருங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////வகுப்பறையின் மூத்த (70வயது) மாணவர் என்னுடைய சீனியர் மற்றும் நீண்ட நாள் குடும்ப நண்பர்!ஒரே காலனியில் 5 ஆண்டுகளூக்கு மேலாக எதிர் எதிர் வீட்டில் வசித்துள்ளோம்.இது ஒரு மேல் தகவல்./////
மிக்க மகிழ்ச்சி. வகுப்பறையின் மூத்த மாணவி: வயது 75. நியூ ஜெர்சியில் இருக்கிறார்! இதுவும் மேல் தகவல்!
/////ngs said...
ReplyDeleteஆசானுக்கு வணக்கம்
நன்றாக இருந்தது///////
நல்லது.நன்றி!
/////ananth said...
ReplyDeleteஎது புரிந்ததோ இல்லையோ இது ஒரு மீள் பதிவு என்பது புரிந்தது. அதுவும் மின்னஞசல் பாடத்தில் வந்தது. இதற்கு முன்பு யோகங்களைப் பற்றி எழுதுவதற்கு முன் எழுதியது எல்லாம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு தோஷம் இருக்கிறது என்ற நம்பிக்கை இந்த வினாடி வரை எனக்கு இல்லை என்பதை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்./////
காலசர்ப்ப தோஷத்திற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. பொறுத்திருங்கள் நேரம் கிடைக்கும்போது, விரிவாக எழுதுகிறேன். அப்போது உங்களுக்கு நம்பிக்கை வரலாம்!:-))))
//////Jack Sparrow said...
ReplyDeletearputham veru vaarthai illai. really nice . thank u sir.
naan veru yaarum alla. (ms torrent)////////
தம்பதி சமேதராகப் படிக்கிறீர்கள். நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
//////Mayakanna said...
ReplyDeleteசித்திரை மாதத்தின் அதிகாலை பொன்காலை பொழுது வணக்கம் ஐயா!
நமது நாட்டிற்கு கர்நாடக சங்கீதத்தை தனது ஞானத்தின் மூலமாக தந்த மகா பெரியவர்கள் !
எம் சங்கீதத்தின் குருநாதர்கள்!
ஐயா சேமலா சாஸ்திரிகள்! முத்துசாமி தீட்சிதர்!
தியாகராஜா பாகவதர் !
பற்றி இந்த வகுப்பறையில் கூரியதிர்க்கும் மற்றும் எமது இளமை கால சங்கீத பாடகசாலைக்கு எண்ணங்களை கொண்டு சென்றதிற்கு ஐயா அவர்களுக்கு நன்றி
கடை விரித்தேன் அதனை கொள்ளுவார் இல்லை என்றான் ஒரு புண்ணியவான்!
ஒரு ஞானி சொன்னான் ஐயோ ஞான பழம் கொட்டி கிடைக்கின்றது, இதனை அள்ளி செல்லுவார் இங்கு எவரும் இல்லையே என்று இதனை விட ஜோதிடத்தை மிகவும் அருமையாக சொல்ல முடியுமா? என்று இந்த பாலகனுக்கு தெரியவில்லை ஐயா!
மிகவும் நன்று ஐயா/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
வணக்கம் அய்யா.
ReplyDeleteகுருக்குவலி நன்ராகதான் உல்லது,ஒரு சந்தெகம்
வருடத்தின் மொத்தம் 365 1/2 நாள்கள்.தசா வருடம்
360 நாள்.இதை அப்படியே கூட்டும் போது 5 நாள் வித்தியாசம்
எப்படி ஒத்துபோகும்.
எ.கா சனிபகவான் 19
புதபகவான் 17
கேது ,, 07
சுக்கிரபகவான் 20 வருடம்
மொத்தவருடம் 63வருடம்
63ய்5ஆல்பெருக்க315 வரும் ஏர தாலஒரு வருடம் வித்தியாசம் எப்படி
கூட்டுவது,தயவு செய்து விளக்கவும்.
நன்ரியுடன் அரிபாய். வாழ்க வளமுடன்.
////aryboy said...
ReplyDeleteவணக்கம் அய்யா.
குருக்குவலி நன்ராகதான் உல்லது,ஒரு சந்தெகம்
வருடத்தின் மொத்தம் 365 1/2 நாள்கள்.தசா வருடம்
360 நாள்.இதை அப்படியே கூட்டும் போது 5 நாள் வித்தியாசம்
எப்படி ஒத்துபோகும்.
எ.கா சனிபகவான் 19
புதபகவான் 17
கேது ,, 07
சுக்கிரபகவான் 20 வருடம்
மொத்தவருடம் 63வருடம்
63ய்5ஆல்பெருக்க315 வரும் ஏர தாலஒரு வருடம் வித்தியாசம் எப்படி
கூட்டுவது,தயவு செய்து விளக்கவும்.
நன்றியுடன் அரிபாய். வாழ்க வளமுடன்.//////
மகாதசைகளும் 360 நாட்களை அடிப்படையாகக் கொண்டவைகள்தான். அதனால் வித்தியாசம் வராது அரிபாய்!
வணக்கம் குருவே!
ReplyDeleteதொடர்ந்து உங்கள் வகுப்பறைக்கு வந்து பாடஙகள் படிப்பவன். ஒருவரி எழுதுவது குறைவு மன்னிக்கவும்.
நேற்றய பாடத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் ஆனால் இந்தப்பாடம் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டது.அதாவது
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.
வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.
இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.
அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
எனக்கு விருச்சிக லக்னம், லக்னதிபன் செவ்வாய் 12ல் ராகுவுடன். எனக்கு தற்போது 53 வயதாகின்றது. நீங்கள் மேலே குறிப்பிட்ட எதுவுமே நடக்கவில்லை.
எல்லாமே நிறைவான மகிழ்வான வாழ்க்கை.
ஏனெனில் எனது ஜாதகம் இன்றய பின்னணி இசையில் இருக்கின்றது.அதாவது 1ல்30,9ல்32,10ல்36, 11ல்37 அத்துடன் 5,9,10, 11ம் அதிபர்களும் 5ஐ விட கூடியபரல்களுடன் இருக்கின்றார்கள்.
அதனால்தான் லக்னாதிபன் மறைவு என்னைப்பாதிக்கவில்லை என்று நினைக்கின்றேன்
நன்றி குருவே
விஜய்
/////Vijay S said...
ReplyDeleteவணக்கம் குருவே!
தொடர்ந்து உங்கள் வகுப்பறைக்கு வந்து பாடஙகள் படிப்பவன். ஒருவரி எழுதுவது குறைவு மன்னிக்கவும்.
நேற்றய பாடத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் ஆனால் இந்தப்பாடம் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டது.அதாவது லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:
எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.
வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.
இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.
அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
எனக்கு விருச்சிக லக்னம், லக்னதிபன் செவ்வாய் 12ல் ராகுவுடன். எனக்கு தற்போது 53 வயதாகின்றது. நீங்கள் மேலே குறிப்பிட்ட எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே நிறைவான மகிழ்வான வாழ்க்கை.
ஏனெனில் எனது ஜாதகம் இன்றய பின்னணி இசையில் இருக்கின்றது.அதாவது 1ல்30,9ல்32,10ல்36, 11ல்37 அத்துடன் 5,9,10, 11ம் அதிபர்களும் 5ஐ விட கூடியபரல்களுடன் இருக்கின்றார்கள்.
அதனால்தான் லக்னாதிபன் மறைவு என்னைப்பாதிக்கவில்லை என்று நினைக்கின்றேன்
நன்றி குருவே
விஜய்///////
அதைத்தான் - அதாவது 1,9,10 & 11 ஆம்வீடுகளில் 30 பரல்களுக்குமேல் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜாதகம் பார்க்கவேண்டாம் என்று முன்பே எழுதியிருக்கிறேன் நண்பரே! உங்களுக்கு அதுதான் நடந்துள்ளது! தகவலுக்கு நன்றி!