++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் விபரீத ஆசை!
சிறுகதை, மனவளக்கட்டுரை, ஆன்மிகம், ஜோதிடம், நகைச்சுவை, குட்டிக்கதைகள் என்று எழுதிக்கொண்டிருந்த வாத்தியாருக்கு, கவிதை,
வசன கவிதை எழுதும் விபரீத ஆசைவந்து தொலைத்தது. அப்படியொரு
விபரீத ஆசைவந்தபோது வாத்தியார் எழுதியவைகள், பத்திரிக்கையில் வெளிவந்தவைகள் என்று சில ஆக்கங்கள் உள்ளன. இன்று ஒன்றைப் பதிவில் ஏற்றி உள்ளேன். உங்கள் விருப்பம் அறிந்து மற்றவையும் வாரம் ஒன்றாகப்
பின்னால் வரும்.
இது வகுப்பறையின் 550ஆவது பதிவு!
------------------------------------------------------------------------------------------------------
தலைப்பு:
அதுவும் பேதமைதான்!
சிவலோகம் சென்றுவிட்டார்
சீனா தானா
கூடவே சென்றுவிட்டது
குடும்பத்தின் ஒற்றுமை!
ஆப்பிள் ஐந்து
அறுவருக்குப் பங்கென்றால்
சாறாகப் பிழிந்து
சமமாகக் கொடுத்திடலாம்
சொத்தைப் பங்குவைக்கும்
இயந்திர சாதனங்கள்
இன்னும் வரவில்லை
எடிசன் மீண்டும்பிறந்தால்
எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்
மகன்கள் நால்வர்
மாப்பிள்ளைகள் நால்வர்
ஒற்றுமை உடைந்ததில்
கட்சிகள் இரண்டாயின
காட்சிகள் பலவாயின
நூற்பாலையை மட்டும்
ஏற்பாரில்லை
மற்ற சொத்துக்களுக்கு
மல்லுக்கட்டு
வங்கிக் கணக்கும்
வைப்புத் தொகையும்
முடக்கப் பட்டன
அசையாச் சொத்துக்கள்
நீதிமன்றத் தீர்வாளரிடம்
அடங்கி விட்டன
அசையும் சொத்துக்களில்
ஆத்தாளைத் தவிர
மற்றதை எல்லாம்
பங்கு வைத்தார்கள்
ஆத்தாளை வைத்துக்கொள்ள
மாதங்களைப்
பங்கு வைத்தார்கள்
பத்தில் சகோதரன்
இருபதில் பங்காளி
நாற்பதில் பிரதிவாதி
என்கின்ற
சீமான்வீட்டுச் சட்டங்கள்
சிறப்பாக அரங்கேறின
பகைமை முற்றியபின்பு
பழைய படங்கள் எல்லாம்
சட்டங்களை விட்டிறங்கி
பெட்டிக்குள் போயின
எத்தனை பட்டினத்தார்
மண்ணில் பிறந்தாலும்
காதறுந்த ஊசிமட்டும் - அவர்கள்
கண்ணில் படாது!
கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்! அறிக!
-------------------------------------------------------
எந்த வரி நன்றாக உள்ளது. சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்!
வாத்தியாரின் விபரீத ஆசை!
சிறுகதை, மனவளக்கட்டுரை, ஆன்மிகம், ஜோதிடம், நகைச்சுவை, குட்டிக்கதைகள் என்று எழுதிக்கொண்டிருந்த வாத்தியாருக்கு, கவிதை,
வசன கவிதை எழுதும் விபரீத ஆசைவந்து தொலைத்தது. அப்படியொரு
விபரீத ஆசைவந்தபோது வாத்தியார் எழுதியவைகள், பத்திரிக்கையில் வெளிவந்தவைகள் என்று சில ஆக்கங்கள் உள்ளன. இன்று ஒன்றைப் பதிவில் ஏற்றி உள்ளேன். உங்கள் விருப்பம் அறிந்து மற்றவையும் வாரம் ஒன்றாகப்
பின்னால் வரும்.
இது வகுப்பறையின் 550ஆவது பதிவு!
------------------------------------------------------------------------------------------------------
தலைப்பு:
அதுவும் பேதமைதான்!
சிவலோகம் சென்றுவிட்டார்
சீனா தானா
கூடவே சென்றுவிட்டது
குடும்பத்தின் ஒற்றுமை!
ஆப்பிள் ஐந்து
அறுவருக்குப் பங்கென்றால்
சாறாகப் பிழிந்து
சமமாகக் கொடுத்திடலாம்
சொத்தைப் பங்குவைக்கும்
இயந்திர சாதனங்கள்
இன்னும் வரவில்லை
எடிசன் மீண்டும்பிறந்தால்
எதிர்காலத்தில் சாத்தியப்படலாம்
மகன்கள் நால்வர்
மாப்பிள்ளைகள் நால்வர்
ஒற்றுமை உடைந்ததில்
கட்சிகள் இரண்டாயின
காட்சிகள் பலவாயின
நூற்பாலையை மட்டும்
ஏற்பாரில்லை
மற்ற சொத்துக்களுக்கு
மல்லுக்கட்டு
வங்கிக் கணக்கும்
வைப்புத் தொகையும்
முடக்கப் பட்டன
அசையாச் சொத்துக்கள்
நீதிமன்றத் தீர்வாளரிடம்
அடங்கி விட்டன
அசையும் சொத்துக்களில்
ஆத்தாளைத் தவிர
மற்றதை எல்லாம்
பங்கு வைத்தார்கள்
ஆத்தாளை வைத்துக்கொள்ள
மாதங்களைப்
பங்கு வைத்தார்கள்
பத்தில் சகோதரன்
இருபதில் பங்காளி
நாற்பதில் பிரதிவாதி
என்கின்ற
சீமான்வீட்டுச் சட்டங்கள்
சிறப்பாக அரங்கேறின
பகைமை முற்றியபின்பு
பழைய படங்கள் எல்லாம்
சட்டங்களை விட்டிறங்கி
பெட்டிக்குள் போயின
எத்தனை பட்டினத்தார்
மண்ணில் பிறந்தாலும்
காதறுந்த ஊசிமட்டும் - அவர்கள்
கண்ணில் படாது!
கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்! அறிக!
-------------------------------------------------------
எந்த வரி நன்றாக உள்ளது. சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்!
Super..
ReplyDeleteVisit my blog too!
http://adaavadi.blogspot.com
Dear Sir
ReplyDeleteRed Colour Stanza is Very Nice and Last Two Stanza also nice.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
அசையும் சொத்துகளீல் ஆத்தாளைத் தவிர
ReplyDeleteஆத்தாளை வைத்துக் கொள்ள மாதங்களைப் பங்கு வைத்தனர்
மகன்கள் நான்கு - மாப்பிளைகள் நான்கு
மிக மிக இரசித்தேன் நண்பரே
//கண்களை விற்றுச்
ReplyDeleteசித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்! அறிக!///
இந்த வரிகள் நெஞ்சில் தைக்கின்றன
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஎல்லா வரிகளும் தகுந்த அர்த்தங்களுடன் நன்றாக உள்ளது.
இருப்பினும்,
கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்!------வரி நன்றாக உள்ளது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-04-24
வாத்தியாரும் கவிஞர் ஆகிவிட்டார்.
ReplyDeleteகேபிள் சங்கரின் எண்டர் கவிதை போல் இருக்கிறது. வாத்தியாரே..
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅருமை, நன்றாக இருந்தது!
அசையும் சொத்துக்களில்
ஆத்தாளைத் தவிர மற்றதையெல்லாம்
பங்கு வைத்தார்கள்
ஆத்தாளை வைத்துக்கொள்ள
மாதங்களைப் பங்கு வைத்தார்கள்....
என்ற வரிகளும்....
சட்டங்களை விட்டு இறங்கிய
படங்கள் என்ற வரிகளும் நன்றாக இருந்தன.
நன்றிகள் குருவே!
அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. எப்படி சொல்கிறோம் என்பதை விட என்ன சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். எனக்கு கவிதைகள்தாம் எழுத வருவதில்லை. சுக்கிர பகவானின் அருள் குறைவாக இருக்கிறது.
ReplyDeleteevery words
ReplyDeleteEvery words like a hammer
ReplyDeleteநன்றாக இருந்ததுடன் எளிமையாகவும் இருந்தது.
ReplyDeletenice kavithai, best wishes for 550 pathivu.
ReplyDeleteஇது நீங்கள் எழுதின முந்தாய கதையை நினைவுபடுத்துகிறது...... பந்த பாசத்தைத்திற்க்கு விலை பணமா? என் அப்பன் சர்வேஸ்வரன் அனைவருக்கும் துணை இருப்பராக !!!! அருமையான பதிவு.......
ReplyDeleteஅன்புடன்
கர்ண இரத்தினவேல்.
அருமை நண்பரே
ReplyDeletenice. very nice . sir
ReplyDeleteதவறாமல் பின்னூட்டம் இட்டு வருகிறேன். இப்போதெல்லாம் என் பினூட்டங்களும் தணிக்கை செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது.போகட்டும்.வாத்தியாருக்கு அந்த உரிமை உண்டுதான்.
ReplyDeleteபுதுக்கவிதையில் பட்டினத்தார் பற்றிய குறிப்பு நன்றாக உள்ளது.பட்டினத்தார் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது சரியா? சிலம்பில் கண்ணகி கோவலன் கூட நகரத்தார் என்ப்வர்கள் உள்ளனர். நீங்கள் எனா நினைக்கிறீர்கள்?
அருமை!
ReplyDeleteநிதர்சனமான வரிகளை எளிமையாய்ச் சொல்லி விட்டீர்கள்!
விபரீத ஆசைன்னு தலைப்புல போட்டுட்டு தண்டவாள படத்தைப் போட்டதும் என்னவோ ஏதோன்னு நினைச்சி பயந்துட்டேன்!
அருமை!
ReplyDeleteநிதர்சனமான வரிகளை எளிமையாகச் சொல்லி விட்டீர்கள்!
////John Vida said...
ReplyDeleteSuper..
Visit my blog too!
http://adaavadi.blogspot.com////
நல்லது. பார்க்கிறேன் நண்பரே!
////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Red Colour Stanza is Very Nice and Last Two Stanza also nice.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
நன்றி ராஜாராமன்!
/////cheena (சீனா) said...
ReplyDeleteஅசையும் சொத்துக்களில் ஆத்தாளைத் தவிர -ஆத்தாளை வைத்துக் கொள்ள மாதங்களைப் பங்கு வைத்தனர்
மகன்கள் நான்கு - மாப்பிளைகள் நான்கு
மிக மிக இரசித்தேன் நண்பரே//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சீனா!
////LK said...
ReplyDelete//கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்! அறிக!///
இந்த வரிகள் நெஞ்சில் தைக்கின்றன/////
உங்களின் மனதைத் தொட்ட வரிகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!
//////V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
எல்லா வரிகளும் தகுந்த அர்த்தங்களுடன் நன்றாக உள்ளது.
இருப்பினும்,
கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்!------வரி நன்றாக உள்ளது.
நன்றி!
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////
உங்களின் மனதைத் தொட்ட வரிகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தட்சணாமூர்த்தி!
/////காவேரி கணேஷ் said...
ReplyDeleteவாத்தியாரும் கவிஞர் ஆகிவிட்டார்.
கேபிள் சங்கரின் எண்டர் கவிதை போல் இருக்கிறது. வாத்தியாரே../////
அடிப்படையில் கதை எழுதுவதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்!
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம், அருமை, நன்றாக இருந்தது! அசையும் சொத்துக்களில்ஆத்தாளைத் தவிர மற்றதையெல்லாம் பங்கு வைத்தார்கள்.ஆத்தாளை வைத்துக்கொள்ள மாதங்களைப் பங்கு வைத்தார்கள்....
என்ற வரிகளும்.... சட்டங்களை விட்டு இறங்கிய படங்கள் என்ற வரிகளும் நன்றாக இருந்தன.
நன்றிகள் குருவே!////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!
///ananth said...
ReplyDeleteஅனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. எப்படி சொல்கிறோம் என்பதை விட என்ன சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். எனக்கு கவிதைகள்தாம் எழுத வருவதில்லை. சுக்கிர பகவானின் அருள் குறைவாக இருக்கிறது./////
எழுதத்துவங்குங்கள். அவராகவே வந்து உதவி செய்வார்!
////sekar said...
ReplyDeleteEvery words like a hammer////
நல்லது. நன்றி நண்பரே!
////sekar said...
ReplyDeleteevery words////
நல்லது. நன்றி நண்பரே!
/////AMG said...
ReplyDeleteநன்றாக இருந்ததுடன் எளிமையாகவும் இருந்தது./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Uma said...
ReplyDeletenice kavithai, best wishes for 550 pathivu./////
நல்லது. நன்றி சகோதரி!
/////Rathinavel.C said...
ReplyDeleteஇது நீங்கள் எழுதின முந்தைய கதையை நினைவுபடுத்துகிறது...... பந்த பாசத்தைத்திற்கு விலை பணமா? என் அப்பன் சர்வேஸ்வரன் அனைவருக்கும் துணை இருப்பராக !!!! அருமையான பதிவு.......
அன்புடன்
கர்ண இரத்தினவேல்.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////Dr. Srjith. said...
ReplyDeleteஅருமை நண்பரே/////
நன்றி டாக்டர்!
////Jack Sparrow said...
ReplyDeletenice. very nice . sir/////
நன்றி நண்பரே!
each and every word is a pearl. reflects the life like a mirror.
ReplyDeleteஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம். கவிதை நன்றாக இருந்தது. எனக்கு ஓரு சந்தேகம் செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் தங்கினால் அப்பொழுது உலகில் பல விபரீதம் நடக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் .இப்பொழுது செவ்வாய் கடகத்தில் அதிக காலம் தங்கி உள்ளது.இதனால் என்ன பாதிப்பு வரும்?
ReplyDeleteUnmayai aluththam thiruthamaga sonneergal iyya. uraikka vendiyavargalukku uraithu thiruntha kadavulai venduvom. Nandri, innum ithu pola unmaigalai innum aluthamaga sollungal iyya.
ReplyDeletenandri
sakthi ganesh.
மிக நன்றாகவே இருக்கிறது.
ReplyDelete(விபரீத ஆசை என்று சொல்லுமளவிற்கு இல்லையே)
mudal patthiye asathal....
ReplyDelete"assaiyum sothu" - migavam azhaghu - sollilum porulilum...
//////kmr.krishnan said...
ReplyDeleteதவறாமல் பின்னூட்டம் இட்டு வருகிறேன். இப்போதெல்லாம் என் பினூட்டங்களும் தணிக்கை செய்யப்படுகின்றன என்று தோன்றுகிறது.போகட்டும்.வாத்தியாருக்கு அந்த உரிமை உண்டுதான்.//////
நகைச்சுவைப் பதிவில் 2 ஜோக்குகளை நீங்கள் தணிக்கை செய்யச்சொல்லி வலியுறுத்தியதால், அதன்படி இரண்டு ஜோக்குகளையும் அன்று நீக்கினேன். நீக்கியதற்கு என்ன காரணம் என்பது தெரிய வேண்டாம் என்பதற்காக, உங்களுடைய பின்னூட்டத்தை வெளியிடவில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புதுக்கவிதையில் பட்டினத்தார் பற்றிய குறிப்பு நன்றாக உள்ளது.பட்டினத்தார் நகரத்தார் சமூகத்தைச் சார்ந்தவர் என்பது சரியா? சிலம்பில் கண்ணகி கோவலன் கூட நகரத்தார் என்ப்வர்கள் உள்ளனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?/////
இரண்டு செய்திகளுமே சரிதான்! நன்றி சார்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////என்.ஆர்.சிபி said...
ReplyDeleteஅருமை!
நிதர்சனமான வரிகளை எளிமையாய்ச் சொல்லி விட்டீர்கள்!
விபரீத ஆசைன்னு தலைப்புல போட்டுட்டு தண்டவாள படத்தைப் போட்டதும் என்னவோ ஏதோன்னு நினைச்சி பயந்துட்டேன்!//////
வாத்தியாரின் ஆசைக்குத்தான், தலைப்பும் படமும். கவிதைக்கல்ல!
//////thirsaaa said...
ReplyDeleteeach and every word is a pearl. reflects the life like a mirror.//////
நல்லது. நன்றி நண்பரே!
////rajesh said...
ReplyDeleteஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம். கவிதை நன்றாக இருந்தது. எனக்கு ஓரு சந்தேகம் செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் தங்கினால் அப்பொழுது உலகில் பல விபரீதம் நடக்கும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன் .இப்பொழுது செவ்வாய் கடகத்தில் அதிக காலம் தங்கி உள்ளது.இதனால் என்ன பாதிப்பு வரும்?/////
அதுதான் இப்போது எரிமலை ஒன்று வெடித்து, புகையையும், சாம்பலையும் கக்கத்துவங்கி மேல் நாட்டு விமானப் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்துகொண்டிருக்கிறதே! அது போன்றுதான் ஏதாவது நடப்பது வழக்கம்!
///////Sakthi Ganesh said...
ReplyDeleteUnmayai aluththam thiruthamaga sonneergal iyya. uraikka vendiyavargalukku uraithu thiruntha kadavulai venduvom. Nandri, innum ithu pola unmaigalai innum aluthamaga sollungal iyya.
nandri
sakthi ganesh.//////
ஆகா, நல்லது. உண்மை எப்போதுமே அழுத்தமாகத்தான் இருக்கும்.
//////மெனக்கெட்டு said...
ReplyDeleteமிக நன்றாகவே இருக்கிறது.
(விபரீத ஆசை என்று சொல்லுமளவிற்கு இல்லையே)///////
வாத்தியாரின் ஆசைக்குத்தான், தலைப்பும் படமும். கவிதைக்கல்ல!
////GKS said...
ReplyDeletemudal patthiye asathal....
"assaiyum sothu" - migavam azhaghu - sollilum porulilum..////.
ஆமாம். அசையும் சொத்துக்களில் தாய்தான் அதிமுக்கியமானவர். அதுவும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பெற்ற சொத்து. பலர் அதை உணர்வதில்லை! அதைவிடப் பெரிய சொத்து என்ன இருக்கிறது? சொல்லுங்கள்!
செவ்வாய் 2 வருடங்களுக்கு ஒரு முறை வக்கிர கதியை அடைவார். அப்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்குவது சாதாரணமாக நடப்பதுதான். (வக்கிரமடைந்த மற்ற கிரகங்களும் தான்). வக்கிர கதியில் 80 நாட்கள் பின்னோக்கியும் அதற்கு முன்னும் பின்னும் 3 அல்லது 4 நாட்கள் நகராமலும் (stationary) இருப்பார். இந்த தடவை நீச வக்கிரம் அவ்வளவுதான்.
ReplyDelete>>பத்தில் சகோதரன்
ReplyDeleteஇருபதில் பங்காளி
நாற்பதில் பிரதிவாதி
என்கின்ற
சீமான்வீட்டுச் சட்டங்கள்
சிறப்பாக அரங்கேறின<<
சிறப்பான வரிகள்
தேவ்
பட்டினத்தார் பற்றிய கவிதை வரிகள் அருமை.ஆமாம், பட்டினத்தார், கோவலன் ஆகியோர் நகரத்தார் என்பது சரியா?
ReplyDelete"சன்மார்கம்,சமரசம்,எல்லாப்பாதைகளும் ஒரே கடவுளையே அடைகின்றன,
எம்மதமும் சம்மதம்,மத சுதந்திரம்,மாரியம்மனும் மேரியம்மனும் ஒன்று,செகுலரிசம்..."
இவையெல்லாம் இந்துக்களின் வாயிலிருந்து மட்டுமே வரும் சொற்கள்.
அருமை,அருமை - i like all stanza - எல்லாமே நச்சுன்னு இருக்கு
ReplyDelete////ananth said...
ReplyDeleteசெவ்வாய் 2 வருடங்களுக்கு ஒரு முறை வக்கிர கதியை அடைவார். அப்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்குவது சாதாரணமாக நடப்பதுதான். (வக்கிரமடைந்த மற்ற கிரகங்களும் தான்). வக்கிர கதியில் 80 நாட்கள் பின்னோக்கியும் அதற்கு முன்னும் பின்னும் 3 அல்லது 4 நாட்கள் நகராமலும் (stationary) இருப்பார். இந்த தடவை நீச வக்கிரம் அவ்வளவுதான்.////
நல்லது. தகவலுக்கு நன்றி ஆனந்த்!
/////R.DEVARAJAN said...
ReplyDelete>>பத்தில் சகோதரன்
இருபதில் பங்காளி
நாற்பதில் பிரதிவாதி
என்கின்ற
சீமான்வீட்டுச் சட்டங்கள்
சிறப்பாக அரங்கேறின<<
சிறப்பான வரிகள்
தேவ்//////
நல்லது. நன்றி நண்பரே!
/////kmr.krishnan said...
ReplyDeleteபட்டினத்தார் பற்றிய கவிதை வரிகள் அருமை.ஆமாம், பட்டினத்தார், கோவலன் ஆகியோர் நகரத்தார் என்பது சரியா?///////
ஆமாம். நீங்கள் நினைப்பது சரிதான்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
"சன்மார்கம்,சமரசம்,எல்லாப்பாதைகளும் ஒரே கடவுளையே அடைகின்றன,
எம்மதமும் சம்மதம்,மத சுதந்திரம்,மாரியம்மனும் மேரியம்மனும் ஒன்று,செகுலரிசம்..."
இவையெல்லாம் இந்துக்களின் வாயிலிருந்து மட்டுமே வரும் சொற்கள்.
இதுவும் சரிதான். அப்படியே சொல்வோம். ஒன்றும் குறையிருக்காது! இன்னும் அதிகப்படியாகச் சொன்னால் ஒன்றும் கெட்டுவிடாது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////சிங்கைசூரி said...
ReplyDeleteஅருமை,அருமை - i like all stanza - எல்லாமே நச்சுன்னு இருக்கு/////
நல்லது. நன்றி சிங்கை சூரி!
madhangalai pangu vaikkum varikku
ReplyDeletemarkku podukirane..
Manadhil niraindhah sogathudan
neeril midhakkum kankaludan..
Vaarthiyar edhu seiydhalum
athil alagum arputhamum irukkum.
Kavidhai enna kadalil kudhikka kuda ungaludan naangal thayar..
visuiyer
கடைசி நான்கு வரிகள் "நச்" வாத்தியாரே..!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகண்கலங்க வைத்து விட்டீர்கள் ஐயா
எத்தனை பட்டினத்தார்
மண்ணில் பிறந்தாலும்
காதறுந்த ஊசிமட்டும் - அவர்கள்
கண்ணில் படாது!
கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்! அறிக!
/////visu said...
ReplyDeletemadhangalai pangu vaikkum varikku
markku podukirane..
Manadhil niraindhah sogathudan
neeril midhakkum kankaludan..
Vaarthiyar edhu seiydhalum
athil alagum arputhamum irukkum.
Kavidhai enna kadalil kudhikka kuda ungaludan naangal thayar..
visuiyer////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteகடைசி நான்கு வரிகள் "நச்" வாத்தியாரே..!////
நல்லது. நன்றி உண்மைத் தமிழரே!உங்கள் வரவு நல்வரவாகட்டும் (வழக்கம்போல!)
/////kannan said...
ReplyDeleteவணக்கம்
கண்கலங்க வைத்து விட்டீர்கள் ஐயா
எத்தனை பட்டினத்தார்
மண்ணில் பிறந்தாலும்
காதறுந்த ஊசிமட்டும் - அவர்கள்
கண்ணில் படாது!
கண்களை விற்றுச்
சித்திரம் வாங்குவது
மட்டும்தான் பேதமையா?
அப்பச்சியின் சொத்திற்காக
அன்பையும், பாசத்தையும்
அறுத்து எறிவதும்
பேதமைதான்! அறிக!////
நல்லது.நன்றி முருகா!