23.4.10

வாசல் கதவை யார் மூடுவதில்லை?


..............................................................................................................................


.............................................................................................................................
வாசல் கதவை யார் மூடுவதில்லை?

கவியரசர் கண்ணதாசனின் மத நல்லிணக்கம்!

ஒரு கவிஞன் எப்போழுது புகழ்பெற்ற கவிஞனாகிறான்?

அவனுடைய எழுத்துக்கள் எல்லா இனமக்களையும் சென்றடைந்து, அவர்கள் அவனை ஒட்டு மொத்தமாக நேசிக்கும் பொழுதுதான் அவன் புகழ்பெற்ற கவிஞனாக முடியும். இல்லை என்றால் பத்தோடு பதினொன்றாக
அவனும் ஒரு சராசரிக் கவிஞனின் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் உயர்விற்கும், புகழிற்கும் காரணம் அவர் அனைத்து மதங்களையும், அதனதன் கோட்பாடுகளையும் நேசித்ததோடு அந்தந்த மதங்களைச் சேர்ந்த மக்களையும் மதித்ததுப் போற்றிப் பாடினார், எழுதினார்.

ஒரு கவிஞன் எப்படி மதநல்லிணக்கம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் சிறந்த உதாரணம்.

அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலையும் எழுதினார்.அதோடு யேசுகாவியம் என்ற கிறிஸ்துவமதத்தின் உயர்வைப் பற்றிய அரியதொரு நூலையும் எழுதினார். அதுபோல குரானுக்கும் அவர் விளக்கம் எழுதி ஒரு நூலைத் தயாரிக்க முனைந்தபோது, சில காரணங்களுக்காக, சிலர் எழுப்பிய கேள்விகளுக்காக அவர் அதைக் கைவிட நேர்ந்தது.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் பல பாடல்களை எழுதினார்.

இடம், பதிவின் நீளம், உங்களுடைய பொறுமை, மற்றும் நேரம், இவை கருதி இரண்டு பாடல்களை மட்டும் உங்கள் பார்வைக்காகத் தருகின்றேன்.
-------------------------------
"அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
அஜா ஹிலாஹி இல்லல்லா
அஜா ஹிலாஹி இல்லல்லா

எல்லோரும் கொண்டாடுவோம்;
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி

(எல்லோரும்)

கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்!

(எல்லோரும்)

நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்புமில்லே வெளுப்புமில்லே, கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லே, கடவுளில் பேதமில்லே
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க்கூடுவோம்

(எல்லோரும்)

ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்

எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்

இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்"

(எல்லோரும்)

படம்: பாவ மன்னிப்பு (வருடம் 1961)

கருத்துக்களோடு, என்னதொரு சொல் விளையாட்டையும் நடத்தியிருக்கிறார் பாருங்கள்!

”நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும், ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!
---------------------------------------------------
மற்றுமொரு பாடல்

"சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்துமஸ்.....
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்...........

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது"

(சத்திய)
படம் : கண்ணே பாப்பா (வருடம் 1969)
குரல் : பி.சுசீலா

”வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்: வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி!

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

20 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    நல்லதொரு தொகுப்பு, நன்றிகள் உங்களுக்கு உரியதாகட்டும்.
    மண்ணையும், விண்ணையும் பாடியவன்; மானுடத்தையும் மனிதநேயத்தையும் பாடியவன்; தெய்வத்தையும் அல்லது தெய்வ அம்சத்தையும் பாடியவன் எவனோ? அவனே, அவன் படைப்புகளில் என்றும் இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படியே நம் கண்ண தாசனாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நதிநீர் யாவும் நிறத்தால், சுவையால் சற்று வேறுபட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் ஜீவனை வளர்ப்பவைகலல்லவா! நதியும் மதமும் ஒன்றாய்த்தானே கவியரசருக்கும் தோன்றிற்று.... அதில் உயர்வேது, தாழ்வேது... அடுத்தவீட்டு தாயை போற்றுவதால் நம் தாய் மறந்து போவாதில்லை... மாறாக அடுத்தவீட்டுத் தாயையே போற்றுபவன் தனது தாயை.......... !!!!! நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. அன்புள்ள வாத்தியார்,

    நல்ல வரிகள். பகிர்தமைக்கு மிக்க நன்றி அய்யா!

    நன்றியுடன்
    சரவணா
    கோவை

    ReplyDelete
  3. மிக நல்ல பகிர்வு.. அருமையான எழுத்து நடை.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா ,
    நேற்றைய பதில்கலுக்கு நன்றி..
    இன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..
    மகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.
    7ல் இருந்து லக்னத்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  5. vanakkam aiya

    maalai yogam enbathu enna?

    ReplyDelete
  6. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் பல பாடல்களை எழுதி எல்லா மதத்தினரின் மனத்திலும் இடம் பெற்றார். பாடல்கள் யாவும் என்றென்றும் நினைவில் நிறைந்தவைகள்.


    நன்றி!
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-23

    ReplyDelete
  7. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    நல்லதொரு தொகுப்பு, நன்றிகள் உங்களுக்கு உரியதாகட்டும்.
    மண்ணையும், விண்ணையும் பாடியவன்; மானுடத்தையும் மனிதநேயத்தையும் பாடியவன்; தெய்வத்தையும் அல்லது தெய்வ அம்சத்தையும் பாடியவன் எவனோ? அவனே, அவன் படைப்புகளில் என்றும் இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படியே நம் கண்ணதாசனாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நதிநீர் யாவும் நிறத்தால், சுவையால் சற்று வேறுபட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் ஜீவனை வளர்ப்பவைகலல்லவா! நதியும் மதமும் ஒன்றாய்த்தானே கவியரசருக்கும் தோன்றிற்று.... அதில் உயர்வேது, தாழ்வேது... அடுத்தவீட்டு தாயை போற்றுவதால் நம் தாய் மறந்து போவதில்லை... மாறாக அடுத்தவீட்டுத் தாயையே போற்றுபவன் தனது தாயை..!!!!! நன்றிகள் குருவே!//////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. //////Saravana said...
    அன்புள்ள வாத்தியார்,
    நல்ல வரிகள். பகிர்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
    நன்றியுடன்
    சரவணா
    கோவை//////

    நல்லது. நன்றி சரவணன்!

    ReplyDelete
  9. //////கவிதை காதலன் said...
    மிக நல்ல பகிர்வு.. அருமையான எழுத்து நடை.. வாழ்த்துக்கள்/////

    உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //////Nareshkumar said...
    வணக்கம் ஐயா ,
    நேற்றைய பதில்கலுக்கு நன்றி..
    இன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..
    மகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.
    7ல் இருந்து லக்னத்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்./////

    இப்படி உதிரியாகக் கிரகநிலைகளைச் சொல்லி, பலன் கேட்டால் என்ன சொல்வது? உங்கள் கேள்வி என்ன என்பதைவைத்து, மொத்த ஜாதகத்தையும், அம்சம், அஷ்டகவர்க்கம் உட்பட அனைத்தையும் அலசினால் மட்டுமே சரியான பலனைச் சொல்ல முடியும்!

    ReplyDelete
  11. ////sundar said...
    vanakkam aiya
    maalai yogam enbathu enna?/////

    யோகங்களைப் பற்றி 44 பாடங்களை நடத்தியுள்ளேன். அதில் இந்த மாலையோகமும் ஒன்று. பழைய பாடங்களைச் சரியாகப் படிக்காமல் குறிப்பு எடுத்துவைத்துக்கொள்ளாமல் இருந்தால் ஒன்றும் புரியாது. உங்களுக்காக அந்த கிரகமாலிகை யோகப்பாடத்திற்கான சுட்டியைக் கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள்
    சுட்டி: Link URL:
    http://classroom2007.blogspot.com/2009/10/blog-post_02.html

    ReplyDelete
  12. //// V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் பல பாடல்களை எழுதி எல்லா மதத்தினரின் மனத்திலும் இடம் பெற்றார். பாடல்கள் யாவும் என்றென்றும் நினைவில் நிறைந்தவைகள்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி//////

    நல்லது.நன்றி தக்‌ஷிணாமூர்த்தி!

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா ,
    &&&&&&&&&&&&&&&&&&//////Nareshkumar said...
    வணக்கம் ஐயா ,
    நேற்றைய பதில்கலுக்கு நன்றி..
    இன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..
    மகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.
    7ல் இருந்து லக்னத்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்./////

    இப்படி உதிரியாகக் கிரகநிலைகளைச் சொல்லி, பலன் கேட்டால் என்ன சொல்வது? உங்கள் கேள்வி என்ன என்பதைவைத்து, மொத்த ஜாதகத்தையும், அம்சம், அஷ்டகவர்க்கம் உட்பட அனைத்தையும் அலசினால் மட்டுமே சரியான பலனைச் சொல்ல முடியும்!
    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
    சரி ஐயா, நன்றி.

    ReplyDelete
  14. கடவுள் என்பவர் ஒருவர்தான். உருவமும் அருவமும் அற்றவர். நாம்தான் மதத்தின் பெயரால் அவரைப் பிரித்துப் பார்க்கிறோம். நம் இந்து மத வேதத்தின் அடிப்படை தத்துவமே கடவுள் ஒருவர் என்பதுதான். திருமூலரும் அதைத்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். இந்த தெளிவு நமக்கு ஏற்பட்டு விட்டால் எந்த மதம் எந்த கடவுள் என்னும் கேள்வி எழாது. திருமூலர் சொன்னதில் எனக்குப் பிடித்த இன்னொன்று கடவுள் நமக்குள் தான் இருக்கிறார் என்று சொன்னது. இதை உள்ளம் பெருங்கோயில் என்று தொடங்கும் பாடலில் சொல்லியிருக்கிறார். ”உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டேன்”. இந்த பாடலும் அதே அர்த்தத்தில் சொல்லப்பட்டதுதான். முழு பாடலும் அதன் அர்த்தமும் நம்மில் பலருக்கு தெரியும் என்பதால், ஆசிரியர் எப்போதும் சொல்வது போல் பின்னூட்டத்தின் (பதிவின்) நீளம், உங்களுடைய பொறுமை, மற்றும் நேரம், இவை கருதி இங்கே தட்டச்சவில்லை.

    ReplyDelete
  15. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம், நேற்று நான் அனுப்பிய blog யை Display செய்யவில்லை. நான் அனுப்பியது பிடிக்கவில்லை என்றால் என்னை மன்னிக்கவும், நவக்கிர கோயில்களை பற்றி எழுதுங்கள் அய்யா.
    நேற்றுகூட லட்சுமிமிட்டல் நவக்கிர கோயில்கள் ஆன சூரியனார் கோயில் ஆலங்குடி குருகோயில் மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்கள்களை தருசித்து சென்றார்.அந்த கோயில்களில் உள்ள விசேசங்களை தங்கள் எழுத்துகளில் காண ஆவல்.
    அய்யா நன்றி

    ReplyDelete
  16. /////Nareshkumar said...
    வணக்கம் ஐயா ,
    //////Nareshkumar said...
    வணக்கம் ஐயா ,
    நேற்றைய பதில்கலுக்கு நன்றி..
    இன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..
    மகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.
    7ல் இருந்து லக்னத்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்./////
    இப்படி உதிரியாகக் கிரகநிலைகளைச் சொல்லி, பலன் கேட்டால் என்ன சொல்வது? உங்கள் கேள்வி என்ன என்பதைவைத்து, மொத்த ஜாதகத்தையும், அம்சம், அஷ்டகவர்க்கம் உட்பட அனைத்தையும் அலசினால் மட்டுமே சரியான பலனைச் சொல்ல முடியும்!///////
    சரி ஐயா, நன்றி.///////

    புரிதலுக்கு நன்றி நரேஷ்குமார்!

    ReplyDelete
  17. /////ananth said...
    கடவுள் என்பவர் ஒருவர்தான். உருவமும் அருவமும் அற்றவர். நாம்தான் மதத்தின் பெயரால் அவரைப் பிரித்துப் பார்க்கிறோம். நம் இந்து மத வேதத்தின் அடிப்படை தத்துவமே கடவுள் ஒருவர் என்பதுதான். திருமூலரும் அதைத்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். இந்த தெளிவு நமக்கு ஏற்பட்டு விட்டால் எந்த மதம் எந்த கடவுள் என்னும் கேள்வி எழாது. திருமூலர் சொன்னதில் எனக்குப் பிடித்த இன்னொன்று கடவுள் நமக்குள் தான் இருக்கிறார் என்று சொன்னது. இதை உள்ளம் பெருங்கோயில் என்று தொடங்கும் பாடலில் சொல்லியிருக்கிறார். ”உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டேன்”. இந்த பாடலும் அதே அர்த்தத்தில் சொல்லப்பட்டதுதான். முழு பாடலும் அதன் அர்த்தமும் நம்மில் பலருக்கு தெரியும் என்பதால், ஆசிரியர் எப்போதும் சொல்வது போல் பின்னூட்டத்தின் (பதிவின்) நீளம், உங்களுடைய பொறுமை, மற்றும் நேரம், இவை கருதி இங்கே தட்டச்சவில்லை./////

    நல்லது. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. /////rajesh said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம், நேற்று நான் அனுப்பிய blog யை Display செய்யவில்லை. நான் அனுப்பியது பிடிக்கவில்லை என்றால் என்னை மன்னிக்கவும், நவக்கிர கோயில்களை பற்றி எழுதுங்கள் அய்யா.
    நேற்றுகூட லட்சுமிமிட்டல் நவக்கிர கோயில்கள் ஆன சூரியனார் கோயில் ஆலங்குடி குருகோயில் மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்கள்களை தருசித்து சென்றார்.அந்த கோயில்களில் உள்ள விசேசங்களை தங்கள் எழுத்துகளில் காண ஆவல்.
    அய்யா நன்றி////

    உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும். எனக்கும் நவக்கிரக் கோயில்களைப் பற்றி எழுதும் எண்ணம் உள்ளது.
    நன்றி!

    ReplyDelete
  19. வணக்கம்

    இப்படி எல்லாம் வரைந்து கண்கலங்க வைப்பது நியமா ஐயா

    நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
    ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா

    ReplyDelete
  20. /////kannan said...
    வணக்கம்
    இப்படி எல்லாம் வரைந்து கண்கலங்க வைப்பது நியமா ஐயா
    நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்
    ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா////

    கண்கலங்கினால், மனது சுத்தமாகும். நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com