16.3.10

மலர்கள் மலர்வது எனக்காக!

............................................................................................................
மலர்கள் மலர்வது எனக்காக!

ஆறாம் எண்ணிற்கான எண் ஜோதிடம்!
+++++++++++++++++++++++++++++++++++
ஆறாம் எண்ணிற்கு உரிய கிரகம் சுக்கிரன்.

காதல், ரசனை, கலைகள்,அழகு, ஆடம்பரம் என்றுள்ளவைகளுக்குக் காரகன் சுக்கிரன். ஆகவே ஆறாம் எண்ணிற்கு உரியவர்களுக்கு அதெல்லாம் இருக்கும். இப்படிச் சொல்லலாம் - அதற்கெல்லாம் உரியவர்கள் இவர்கள்.

ரிஷபம் மற்றும் துலாம் லக்கினத்தில் பிறந்தவர்கள், அத்துடன் 6ற்குரிய தேதிகளில் பிறந்திருந்தவர்கள், அல்லது ஆறாம் எண் விதி எண்ணாக அமையப்பெற்றவர்கள் ஆகியவர்களுக்கு மேற்சொன்ன குணங்கள் எல்லாம் நிறையவே இருக்கும்.

காதல் உணர்வும், கலை உணர்வும் இந்த எண்காரர்களை ஆட்கொண்டுவிடும். பெருந்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அனைவருடனும் இசைந்து போவார்கள். பிரச்சினை செய்யாத பிறவிகள் என்று சொல்லலாம்.

இரும்பைக் காந்தம் இழுப்பதுபோல, காதலும், இசையும் இவர்களை இழுக்கும். இவர்கள் வசிக்கும், வீடு, அலுவலகம் என்று எதுவாவானாலும் கலைநயத்துடன் அல்லது அலங்காரத்துடன் இருக்கும். விதம்விதமான உணவுகளை ரசித்து உண்ணக்கூடியவர்கள். சாதுவான, இனிமையான தன்மையுடன் இருப்பார்கள். சிலசமயங்களில் மட்டுமே மற்ற சகமனிதர்களைப்போல நடந்துகொள்வார்கள். அதுவும், இவர்களுடைய உணர்வுகளுக்கு எதிரான செயல்கள் நடக்கும்போது மட்டுமே அப்படி நடந்துகொள்வார்கள்

நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதுபோல, காதலின்றி அமையாது இவ்வுலகு எனும் நம்பிக்கை உடையவர்கள் இவர்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். திருமண பந்தத்திற்கு, அதாவது இல்லாளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

சங்கீதம், நாட்டியம், நாடகம், திரைப்படம், என்று மனதை மகிழ்விக்கும், பொழுது போக்கும் அம்சங்கள் அனைத்திலும் ஈடுபாடு கொள்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவைகளில் தங்களுக்குள்ள திறமைகளையும் வெளிப்படுத்துவார்கள்.

பணமும்,நவீன வாழ்க்கை வசதிகளும் இவர்களைத் தேடிவரும். அதனால் பனத்தைக் கட்டிக்காக்க மாட்டார்கள். செலவுகளுக்கு அஞ்ச மாட்டார்கள்.

எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதை மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!

இந்த எண்காரர்கள் பாசமிக்கவர்கள். பொறுப்பானவர்கள். தியாக உணர்வு உடையவர்கள், சுயநலமில்லாதவர்கள், கொடையாளிகள், அன்பானவர்கள், இரக்கமுள்ளவர்கள், நடுநிலமையுடையவர்கள், கவர்ச்சியானவர்கள். இது அனைத்தும் பொதுக்குணங்கள்.

இதைப்படித்துவிட்டு, சார் என் மகனின் எண் ஆறு. ஆனால் பொறுப்பில்லாமல் இருக்கிறானே என்று யாரும் கேட்க வேண்டாம். அதனால்தான் இவைகளைப் பொதுக்குணங்கள் என்று சொல்கிறேன். ஜாதகத்தில் உள்ள கோளாறுகளுக்குத் தகுந்தபடி இந்தக் குணங்களில் சில இல்லாமலும் போகலாம். அதுதான் வாங்கி வந்த வரம் எனப்படும்.

இந்த எண்காரர்கள் சிறந்த குடும்பஸ்தர்களாக விளங்குவார்கள். சமூக அக்கறை இருக்கும். வாக்கை நிறைவேற்றும் தன்மை இருக்கும். ஒப்புக்கொண்டபடி நடக்கும் செயல்பாடு இருக்கும்.

பாடகர், இசைக்கலைஞர்கள், நடிகர்கள், கைவினைக்கலைஞர்கள், ஆசிரியர்கள், ஓவியர், சிற்பி என்றுள்ள துறைகளில் பணியாற்றத் தகுந்தவர்கள் இவர்கள். அவற்றில் சிறப்பாகப் பணியாற்றுவார்கள்.

They will be too emotional and overly sentimental. They also might sacrifice themselves too much for the sake of others.

உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். எப்போதும் நிம்மதியையும், அமைதியையும் விரும்புபவர்கள் இவர்கள்.



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நட்பு எண்கள் 4, 5, 8
எதிரான எண்கள்: 1, 2
உகந்த நாள்: வெள்ளிக்கிழமை.
நவரத்தினம்: வைரம்
உலோகம்: வெள்ளி
உகந்த தொழில்கள்: Healt care, alchemists, art critics, journalists
வியாபாரத்திற்கும், திருமணத்திற்கும் இசைவான எண்கள்: 3, 6, 9

=========================================================
சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் வாழ்க்கையை அணுஅணுவாக அனுபவிக்கப் பிறந்தவர்கள். கவியரசரின் மொழியில் சொன்னால், இந்த உலகம் பிறந்தது எனக்காக என்பார்கள். ஓடும் நதிகள் எனக்காக என்பார்கள். மலரும் அத்தனை மலர்களும் எனக்காக என்பார்கள்.

பாடலின் முக்கிய வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்:

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக -
அன்னை
மடியை விரித்தாள் எனக்காக

தவழும் நிலவாம் தங்கரதம்

தாரகை பதித்த மணிமகுடம்

குயில்கள் பாடும் கலைக்கூடம்

கொண்டது எனது அரசாங்கம்"

++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

29 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    ஆறாம் எண்ணுக்க்கான குணாதிசயம் மற்றும்

    விளக்கமும் நன்றாக உள்ளது. நன்றி!

    வணக்கம்.


    தங்கள் அன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-03-16

    ReplyDelete
  2. அய்யா இனிய காலை வணக்கம்.

    அழகை ரசிக்க வைக்கும் ஆறாம் எண்
    பற்றிய விளக்கம் அருமை ...

    நன்றி வணக்கம்,,,,

    ReplyDelete
  3. ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா! ஆறாம் எண்,
    ஆனந்தத்திலே திளைக்க செய்யும்
    ஆளுமைக் கொண்ட எண். விளக்கம் அருமை!

    பேரழகியால் மணிமகுடம் அழகுற்றது,
    பேராசான் வரிகளால் இப்பாடமும் சிறப்புற்றது.

    ReplyDelete
  4. 6ம் எண்காரர்களை நல்ல கலா ரசிகர்கள் எனலாம். 6ம் தேதி பிறந்த எனது சகோதரர்கள் இருவர் (இரட்டையர்கள்) இருக்கிறார்கள். ஒருவர் வகுப்பறை மாணவர். இன்னொருவர் பாடம் படிப்பார். ஆனால் பதிவேட்டில் பதிந்து கொள்ளவில்லை (வெளியிலிருந்து ஆதரவு?). சில குணங்கள் அவர்களுக்கு ஒத்துப் போகிறது.

    ReplyDelete
  5. My Dear Sir!

    Good morning,

    Very Nice.

    thanks.

    ReplyDelete
  6. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    ஆறாம் எண்ணுக்க்கான குணாதிசயம் மற்றும்
    விளக்கமும் நன்றாக உள்ளது. நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்.
    அழகை ரசிக்க வைக்கும் ஆறாம் எண் பற்றிய விளக்கம் அருமை ..
    நன்றி வணக்கம்,,,,////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  8. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆஹா! ஆறாம் எண்,
    ஆனந்தத்திலே திளைக்க செய்யும்
    ஆளுமைக் கொண்ட எண். விளக்கம் அருமை!
    பேரழகியால் மணிமகுடம் அழகுற்றது,
    பேராசான் வரிகளால் இப்பாடமும் சிறப்புற்றது.//////

    ஆலாசியத்தால் பின்னூட்டமும் சிறப்புற்றது!:-)))

    ReplyDelete
  9. கசன், தேவயானி கதையில் சுக்ராசாரியார்,கசனின் சாம்பல் கலக்க‌ப்பட்ட
    மதுவை, ஆசையுடன் குடித்து விடுகிறார்.ஆக, இதுபோன்றை சிற்றின்ப ஆசைகளை மற்றவர்களுக்கும் அளித்து விடுகிறார்!

    ReplyDelete
  10. ////ananth said...
    6ம் எண்காரர்களை நல்ல கலா ரசிகர்கள் எனலாம். 6ம் தேதி பிறந்த எனது சகோதரர்கள் இருவர் (இரட்டையர்கள்) இருக்கிறார்கள். ஒருவர் வகுப்பறை மாணவர். இன்னொருவர் பாடம் படிப்பார். ஆனால் பதிவேட்டில் பதிந்து கொள்ளவில்லை (வெளியிலிருந்து ஆதரவு?). சில குணங்கள் அவர்களுக்கு ஒத்துப் போகிறது./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////kannan said...
    My Dear Sir!
    Good morning,
    Very Nice.
    thanks./////

    நல்லது.நன்றி முருகா!

    ReplyDelete
  12. Good Morning sir,
    Lessons on number 5 & 6 are very nice.
    Thanks sir

    ReplyDelete
  13. அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    ஆறாம் எண்,
    சுக்கிரன் பாடம் மிகவும்
    இனிமையாக இருந்தது.

    எனது விதி எண் 6, நீங்கள் எழுதியிருப்பதில்
    70% எனக்கு பொருத்தமாக இருக்கிறது.

    சுவைகளில் வகை ஆறு,
    முருகனின் வீடு ஆறு
    சுவையாக பாடம் எழுத
    எங்கள் ஆசானை போல‌
    இங்கு வேறு யாரு?

    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா

    ReplyDelete
  14. good morning sir,

    thanks for the lesson,

    Ramkumar

    ReplyDelete
  15. ////kmr.krishnan said...
    கசன், தேவயானி கதையில் சுக்ராசாரியார்,கசனின் சாம்பல் கலக்க‌ப்பட்ட
    மதுவை, ஆசையுடன் குடித்து விடுகிறார்.ஆக, இதுபோன்றை சிற்றின்ப ஆசைகளை மற்றவர்களுக்கும் அளித்து விடுகிறார்!//////

    இன்று பெரும்பாலான மக்களின் விருப்பமும் அதுதானே கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  16. ////kmr.krishnan said...
    கசன், தேவயானி கதையில் சுக்ராசாரியார்,கசனின் சாம்பல் கலக்க‌ப்பட்ட
    மதுவை, ஆசையுடன் குடித்து விடுகிறார்.ஆக, இதுபோன்றை சிற்றின்ப ஆசைகளை மற்றவர்களுக்கும் அளித்து விடுகிறார்!//////

    இன்று பெரும்பாலான மக்களின் விருப்பமும் அதுதானே கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. /////dhilse said...
    Good Morning sir,
    Lessons on number 5 & 6 are very nice.
    Thanks sir////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  18. /////ஜீவா said...
    அன்பு அய்யா அவர்களுக்கு வணக்கம்,
    ஆறாம் எண், சுக்கிரன் பாடம் மிகவும்
    இனிமையாக இருந்தது.
    எனது விதி எண் 6, நீங்கள் எழுதியிருப்பதில்
    70% எனக்கு பொருத்தமாக இருக்கிறது.
    சுவைகளில் வகை ஆறு,
    முருகனின் வீடு ஆறு
    சுவையாக பாடம் எழுத
    எங்கள் ஆசானை போல‌
    இங்கு வேறு யாரு?
    அன்புடன் உங்கள் மாணவன்
    ஜீவா////

    அடடா, நெஞ்சை டச் பண்ணீட்டிங்களே!:-))))))

    ReplyDelete
  19. /////Ram said...
    good morning sir,
    thanks for the lesson,
    Ramkumar////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  20. வணக்கம் ஆய்யா,
    எண் 6 க்குரிய குணாதிசயங்கல் சரியாக இருக்கிரது.
    வருட எண் 6 வருபோதும்,வயது எண் 6(கூட்டு தொகை) வரும்போதும்
    நல்ல பலண்கலை என் கடந்த காலத்தில் அன்பவித்து இருக்கிரேன்.
    ஏண் என்ரால் ரிசப லக்கினம்,மகர ராசிக்கு சுக்கிரன் வேண்டபட்டவர்,
    ராசியில் மீனத்தில்,அம்சதில் துலத்தில் இருக்கிரார்.
    நன்ரியுடன் அரிபாய். வாழ்க வலமுடன்.

    ReplyDelete
  21. எனக்கு விதி எண் 6 தான்.6 , 15 , 24 தினங்களில் ஏதேனும் ஸ்பெஷல்ஆன மேட்டர் நடக்கத்தான் செய்யுது..
    ஆனால் சில சமயம் எதுனாவுது வந்து கவுத்து வுட்டு ஊத்திக்குறதும் நடக்குது..அதுதான் ஏன்னு புரியலை...

    ReplyDelete
  22. சுக்கிராச்சாரியார் சிற்றின்பத்திற்கு மட்டுமல்ல, சக்தி வழிபாடு, சக்தி உபாசகர்களாவது, இவற்றிகும் அருள் புரிபவர். பெறுதற்கறிய இறந்தவர்களை எழுப்பும் ஆற்றல் கொண்ட சஞ்சீவினி மந்திரத்தை சிவனிடம் இருந்து அருந்தவத்தின் மூலம் பெற்றவராயிற்றே. சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தியின் சிஷ்யராக இருந்தும் தேவ குருவிற்கு இந்த பாக்கியம் கிட்டவில்லை. மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்தான் அந்த சஞ்சீவினி மந்திரம் என்று சொல்பவர்களும் உண்டு.

    ReplyDelete
  23. வாத்தியார் ஐயா,
    வணக்கம்.

    ஆறாம் எண்ணிற்கான எண் ஜோதிடம்!


    பிறப்பு முதல் உடன் இருந்து கண்டவர்போல் (பார்த்தவர் போல் )
    நிறைய அதுவும், மிகவும் சரியாக எழுதி உள்ளீர்கள். ஐயா!

    ***********************************
    எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதைமற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!

    &

    உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். எப்போதும் நிம்மதியையும், அமைதியையும் விரும்புபவர்கள் இவர்கள்.

    ***********************************

    ReplyDelete
  24. ////aryboy said...
    வணக்கம் அய்யா,
    எண் 6 க்குரிய குணாதிசயங்கள் சரியாக இருக்கிரது.
    வருட எண் 6 வரும்போதும், வயது எண் 6(கூட்டு தொகை) வரும்போதும்
    நல்ல பலண்களை என் கடந்த காலத்தில் அனுபவித்து இருக்கிறேன்.
    ஏன் என்றால் ரிசப லக்கினம்,மகர ராசிக்கு சுக்கிரன் வேண்டபட்டவர்,
    ராசியில் மீனத்தில்,அம்சத்தில் துலாத்தில் இருக்கிறார்.
    நன்றியுடன் அரிபாய். வாழ்க வளமுடன்./////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////Geekay said...
    Present Sir!!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீக்கே

    ReplyDelete
  26. /////minorwall said...
    எனக்கு விதி எண் 6 தான்.6 , 15 , 24 தினங்களில் ஏதேனும் ஸ்பெஷல்ஆன மேட்டர் நடக்கத்தான் செய்யுது..ஆனால் சில சமயம் எதுனாவுது வந்து கவுத்துவுட்டு ஊத்திக்குறதும் நடக்குது..அதுதான் ஏன்னு புரியலை.../////

    இதுக்குப்போய் அலட்டிகலாமா மைனர்? இரண்டு நிலைப்பாடுகலையும் சமாளிக்கும் வல்லமை பெற்றவர் என்பதற்காகத்தானே உங்களுக்கு மைனர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது!

    ReplyDelete
  27. //////ananth said...
    சுக்கிராச்சாரியார் சிற்றின்பத்திற்கு மட்டுமல்ல, சக்தி வழிபாடு, சக்தி உபாசகர்களாவது, இவற்றிகும் அருள் புரிபவர். பெறுதற்கறிய இறந்தவர்களை எழுப்பும் ஆற்றல் கொண்ட சஞ்சீவினி மந்திரத்தை சிவனிடம் இருந்து அருந்தவத்தின் மூலம் பெற்றவராயிற்றே. சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தியின் சிஷ்யராக இருந்தும் தேவ குருவிற்கு இந்த பாக்கியம் கிட்டவில்லை. மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்தான் அந்த சஞ்சீவினி மந்திரம் என்று சொல்பவர்களும் உண்டு./////

    மேலதிகத்தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  28. /////kannan said...
    வாத்தியார் ஐயா,
    வணக்கம்.
    ஆறாம் எண்ணிற்கான எண் ஜோதிடம்!
    பிறப்பு முதல் உடன் இருந்து கண்டவர்போல் (பார்த்தவர் போல் )
    நிறைய அதுவும், மிகவும் சரியாக எழுதி உள்ளீர்கள். ஐயா!
    ***********************************
    எதையும், எவரையும் புன்னகையுடன் எதிர்கொள்வார்கள். அதைமற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர, பதிலுக்கு இவர்களுக்கு உதவியாக இருக்க மாட்டார்கள். அதுதான் வாழ்க்கையின் அவலம்!
    &
    உதவிக்கும், குறுக்கீட்டிற்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பார்கள். அதுதான் இந்த எண்காரர்களின் பலவீனம். எப்போதும் நிம்மதியையும், அமைதியையும் விரும்புபவர்கள் இவர்கள்.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com