21.1.10
Doubt: கழுதை எப்போதும் கழுதைதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: கழுதை எப்போதும் கழுதைதான்!
Doubts: கேள்வி பதில் பகுதி 16
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினாறு!
Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.63
C.ரத்தினவேல்
Dear Sir.
I have only one question.
According to you,உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய தசா/ புத்திகளில் ஜாதகனுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்கள். For me Sani is in Tulam (uchaam).I will be getting Sani dasa as 4th dasa.I have read and heard from astrologers that sani dasa coming as 4th dasa is not good.I would like to hear your expert comment on this.
Thanks
Rathinavel.C
4ஆவது தசையும், 6ஆவது தசையும் நன்மை அளிக்காது என்றும், ஒரு ஜாதகன் 6 தசைகளுக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டான் என்றும் கூடச் சில ஜோதிடர்கள் சொல்வார்கள். எதை வைத்து அப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜோதிட நூல்களில் அதற்கான குறிப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. ஜோதிடம் பெரிய கடல். நான் க்ற்றது கைமண் அளவுதான்!
ஜாதகத்தில் கிரகங்களின் வலிமையை வைத்துத்தான், அவற்றிற்கான தசா/புத்திப் பலன்கள் கிடைக்கும்/நடைபெறும். ஆகவே குழப்பிக் கொள்ளாதீர்கள். சனி உச்சம் பெற்றதற்கான அர்த்தம் வேண்டாமா? அவர் ஜாதகத்தில் தீய இடங்களுக்கான (6,8 & 12ஆம் வீடுகள்) அதிபதி இல்லை என்னும் பட்சத்தில் ஜாதகனுக்கு நன்மைகளையே வாரி வழங்குவார்!
-------------------------------------------
email.No.64
sendhil J. செந்தில்
Dear sir,
1.Navamsathil "Utchanai utchan parthal" - What is the result sir?
உச்சனை உச்சன் பார்த்தால் ஜாதகன் பிச்சை எடுப்பான் என்று யாரோ விளையாட்டாகச் சொல்லியதை வைத்து இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
கிரகங்களின் தன்மைகளை வைத்துத்தான் முதல் பலன். பார்வைகளை வைத்துப் பலன்கள் என்பது இரண்டாவது நிலை. ஆகவே அம்சத்தில் இரண்டு கிரகங்கள் உச்சமாக இருப்பதற்கு மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
அவர்கள் நன்மைகளையே செய்வார்கள் என்று நம்பிக்கை வையுங்கள்!
In Astrology, aspects are defined by the nature of the planet, and NOT the nature of the aspect. Aspects from a natural benefic strengthen a planet and aspects from a natural malefic weaken it.Planets that aspect another planet give the result of their natural tendency, and the house(s) they rules. Rather than categorizing an aspect
2. Dhumadhi ubagrahangal - Could you explain this sir?
With Kind Regards,
J.SENDHIL
உபகிரகங்கள் என்பது என்ன என்று தெரியும்.
Kaala, Mrityu, Arthaprahaara, Yamaghantaka, Gulika and Maandi என்று உபகிரகங்கள் உள்ளன! அவைகளைக் கணித்து ஜாதகத்திற்குள் கொண்டு வருவது சிரமமான வேலை
Kaala is a malefic upagraha similar to Sun.
Mrityu is a malefic upagraha similar to Mars.
Arthaprahaara is similar to Mercury.
Yamaghantaka is similar to Jupiter.
Gulika or Maandi is similar to Saturn.
ஆனால் நீங்கள் சொல்லும் Dhumadhi ubagrahangal இதைத்தான் குறிக்கின்றனவா என்று தெரியவில்லை.
ஜோதிடப் பாடங்களே புரிந்து கொள்வதற்குச் சற்றுக் குழப்பம் மிகுந்தவை. இருக்கிற குழப்பங்கள்/ சந்தேகங்கள் போதும். நீங்கள் புதிதாக எதையாவது நினைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். மாந்தியை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வோம். மற்றதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்!
---------------------------------------------------
email.No.65
ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை
அன்புள்ள SP.VR. Subbiah ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
1.பல ஆண்டுகளுக்கு முன் MLT [Medical Lab Technician ] ஆக இருந்த ஒருவர் எனக்கு கூறினார் ஏழில் செவ்வாய் காரரின் ( அல்லது செவ்வாய் குற்ற காரகரா என மறந்து விட்டேன் ஞாபகம் இல்லை ) இரத்தம் வகை குறிப்பிட்ட வகையைச் சார்ந்ததென்று! [எனது குருதி “O” positive. நான் மேட இலக்கினம் விருச்சிக ராசி. எட்டில் செவ்வாய் அப்பொழுது எனக்கு சோதிடத்தில் நம்பிகை இருந்தது. ஆனால் அதனை கற்க ஆர்வம் இருக்க வில்லை. எனவே எந்த வகை என நான் கவனிக்கவில்லை.
குருதி வகைக்கும் செவ்வாய் தோசதிட்கும் உள்ள தொட்ர்ர்பை பற்றி தங்களுக்கு ஏதும் தெரியமா. ? தெரிந்தால் அறியத் தரவும்
இப்படிக்கு
தங்கள் class room student
ஸ்ரீ(T.Sriskandarajah
ஜோதிடத்தைக் கணித்த முனிவர்கள் ரத்தத்தின் வகைகள்/பிரிவுகளைப் பற்றி எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் இடைச் சொருகலாக இருக்கலாம்! அது பற்றி நான் அறியேன்!
---------------------------------------------------
email.No.66
எழில் அரசன்
Dear Sir,
1.In your Question and Answer section, for Question No: 16. You Answered,
“Since the said house is under papa kartari yogam that house benefits was obstructed. Moreover the house lord is also debilitated.” So that house factors were denied.
My question if a house suffering from papa kartari yogam receives Guru Paarvai then will the yogam be thwarted.Else if the kaaragan of that house is in good position (means with 5 suyavargam parals) will the yogam be foiled? Will the ascendant receive the benefits of the concerned house?
யோகங்களை அலசிப் பலன் சொல்வது கடினமானது. பாப கர்த்தாரி யோகத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட வீட்டின்மேல் குருவின் பார்வை பட்டால் என்ன ஆகும் என்பது உங்களுடைய கேள்வி. பாபகாரத்தாரி யோகம் ஓடிப்போய்விடும் என்று சொன்னால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள். உங்கள் சந்தோஷப் படுத்துவதற்காக அப்படிச் சொல்ல முடியுமா? பாப கர்த்தாரி யோகம் நிச்சயமாக வேலை செய்யும். குருவின் பார்வையால் அதன் தாக்கம் குறையும். அவ்வளவுதான்.
2.One more Question if maandhi in navamsa receives the aspect of Guru, will the effect of maandi be mitigated or that concerned house will be relieved by the effects of maandhi?
மாந்தியுடன் வேறு நல்ல/சுபக் கிரகங்கள் சேர்வதால், மாந்தி நல்லவனாக மாறமாட்டான். பார்வை பட்டாலும் நல்லவனாக மாறமாட்டான். அந்த இடத்திற்கு உரிய பலன்கள் ஜாதகனுக்குக் கிடைப்பதற்கு மாந்தி தடையாக இருக்கும். கழுதை எப்போதும் கழுதைதான்; அது ஒரு நாளும் குதிரையாக மாறாது! Donkey is always a donkey and It will not become a horse! மாந்தி எப்பொதும் மாந்திதான்!
---------------------------------------------------------------
வாத்தியார் சொந்த அலுவலாக வெளியூர்ப்பயணம். நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை. அடுத்த பாடம் 23.1.2010 சனிக்கிழமையன்று வெளிவரும்!
இன்றையப் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களுக்கான பதில்களும்
சனிக்கிழமையன்றுதான் வெளிவரும்! பொறுத்துக்கொள்ளவும்!
-------------------------------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Dear Sir!
ReplyDeleteGood Morning
Thanks.
பெரியவரே!!!
ReplyDeleteமனது என்னமோ மிகவும் பாரமாக உள்ளது.
இந்த கலி யுகதிக்கு ஏற்றாற்போல் வாழவும் தெரியவில்லை, புத்தியும் இல்லை.
தர்மம், புண்ணியம், வாழ்க்கை நெறி என்று பாராமலும் இருக்கவும் முடிய வில்லை ஐயா !!!
பெற்ற தாயின், தந்தையின் உயிரில்! உயிர் வாழும் ஜந்துக்கள் வாழும் இந்த ' கலி உகத்தில்'! பிறந்து விட்டு மனது படும் பாடு இருக்கே ஐயா!!!
அந்த 'பழனி ஆண்டவர் பாலதண்டாயுதபாணிக்கே'! வெளிச்சம் பெரியவரே!!!
Good Morning Sir!
ReplyDeleteஇனிய காலை வணக்கம்,
ReplyDeleteஇன்றைய பகுதி சிறப்பாக அமைந்த்துள்ளது
நன்றி வணக்கம்....
present sir,
ReplyDeleteThanks for the answers.
Dear sir,
ReplyDeleteGood afternoon sir. Thanks for ur today lesson sir. All the answers are very very nice sir. Happy journey to u.
sundari.
தூமாதி உபகிரகங்களைப் பற்றி வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்களின் programல் இருக்கிறது. நண்பர் அதைப் பார்த்துவிட்டுதான் கேட்கிறார் என்று நினைக்கிறேன். 9 + 1 கிரகங்களுக்கே பலன் சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. இதில் இந்த உபகிரகங்கள் வேறா.
ReplyDelete///ஆனால் நீங்கள் சொல்லும் Dhumadhi ubagrahangal இதைத்தான் குறிக்கின்றனவா என்று தெரியவில்லை.////
ReplyDeleteஐயா! தூமா என்பது சூரியனின் பாகையுடன் 133.20 பாகையை கூட்ட வரும் பாகை தூமா எனப்படும். பொதுவாக இது திருமணத்தடையை பார்க்க மட்டுமே பயன்படும் என கிருஷ்ணமூர்த்தி பத்ததி விளக்கம் (ஸ்.பி.சுப்பிரமணியன்) என்ற நூலில் படித்துள்ளேன்..
Hello sir,
ReplyDeleteI have a doubt regarding 3rd house,
Why it is a bad house,It takes care of brotherly relations,courage etc.Then how it becomes a malefic position?.Also you mentioned that ashtagavarga parals should be low in 3,6,8&12 houses.If it becomes low the person becomes coward and doesnt develop a good relation with brother.Then,how come it is good.For What reason,3rd house is considered to be a malefic one
Present sir,
ReplyDeleteHope u have a nice trip...
Thanks
Thanuja
Dear sir,
ReplyDeletei heard Moon and Mars in 6/8 position, then jathagan will affect by Blood Pressure. Is it true sir? kindly clarify me sir.
கேள்வி பதில் மிகவும் அருமையாக உள்ளது.
ReplyDeleteகடைசியில் கூட்டிக் கழித்துப்பார்த்தால் மாந்தியும், அஷ்டவர்கமும்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வது போல் தெரிகிறது.
ReplyDeleteஎல்லா பாடங்களையும் நன்கு படித்த மாணவர்கள், செய்முறை பயிற்சிக்கு என்
பிளாக் வந்தால், அங்கு பலரும் தங்கள் பிரச்சனைகளையும் கூறி, பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவைகளைக் கூறியிருப்பதையும் பார்க்கலாம்.கைவசம் கணினியில் ஜாதகம் கணித்துத் தரும் மென்பொருளை
வைத்துக்கொண்டு,கணித்து நீங்களே ஒரு முடிவுக்கு வந்து, என் பதிலுடன் ஒப்பிட்டு செயல்முறைப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்."ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்"என்று தமாஷுக்குக் கூறினலும், பட்டறிவு,நேரடி அனுபவம் படிப்பதைக்காட்டிலும் அதிகமாக மனதில் பதியும்.கேமதுரும யோகம் உள்ள ஒருவர் தன் கஷ்டங்களை எழுதியுள்ளதைப் படியுங்கள்.சோதிடம் எவ்வளவு உண்மை என்பது புரியும்.
http://parppu.blogspot.com
Dear sir.
ReplyDeleteThanks a lot for your understandable answers, can maandhi be calibrated through ashtavargam.
sir How to judge ragu/kethu dasa/bhuthi by astavargam
Thanks and regards
ezhil
////kannan said...
ReplyDeleteDear Sir!
Good Morning
Thanks./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////kannan said...
ReplyDeleteபெரியவரே!!!
மனது என்னமோ மிகவும் பாரமாக உள்ளது.
இந்த கலியுகத்திற்கு ஏற்றாற்போல் வாழவும் தெரியவில்லை, புத்தியும் இல்லை.
தர்மம், புண்ணியம், வாழ்க்கை நெறி என்று பாராமலும் இருக்கவும் முடிய வில்லை ஐயா !!!
பெற்ற தாயின், தந்தையின் உயிரில்! உயிர் வாழும் ஜந்துக்கள் வாழும் இந்த ' கலி உகத்தில்'! பிறந்து விட்டு மனது படும் பாடு இருக்கே ஐயா!!!
அந்த 'பழனி ஆண்டவர் பாலதண்டாயுதபாணிக்கே'! வெளிச்சம் பெரியவரே!!!//////
உங்களைப்போன்ற சிலரே அப்படி இருப்பார்கள். பெரும்பான்மை மக்களுக்கு அன்றாட வாழ்க்கையே பிரச்சினையாக இருப்பதால், அவர்களுக்கு இந்த சிந்தனை எல்லாம் இருக்காது!
////NARESH said...
ReplyDeleteGood Morning Sir!///
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////astroadhi said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம்,
இன்றைய பகுதி சிறப்பாக அமைந்துள்ளது
நன்றி வணக்கம்....////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////Ram said...
ReplyDeletepresent sir,
Thanks for the answers./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////sundari said...
ReplyDeleteDear sir,
Good afternoon sir. Thanks for ur today lesson sir. All the answers are very very nice sir. Happy journey to u. sundari.////
நல்லது.நன்றி சகோதரி!
/////ananth said...
ReplyDeleteதூமாதி உபகிரகங்களைப் பற்றி வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்களின் programல் இருக்கிறது. நண்பர் அதைப் பார்த்துவிட்டுதான் கேட்கிறார் என்று நினைக்கிறேன். 9 + 1 கிரகங்களுக்கே பலன் சொல்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. இதில் இந்த உபகிரகங்கள் வேறா.////
உண்மைதான்! ஒரு உப கிரகத்தை (மாந்தியை) மட்டும் ஆட்டத்திற்குச் சேர்த்துக்கொள்வோம்!:-)))
/////karmegaraja said...
ReplyDelete///ஆனால் நீங்கள் சொல்லும் Dhumadhi ubagrahangal இதைத்தான் குறிக்கின்றனவா என்று தெரியவில்லை.////
ஐயா! தூமா என்பது சூரியனின் பாகையுடன் 133.20 பாகையை கூட்ட வரும் பாகை தூமா எனப்படும். பொதுவாக இது திருமணத்தடையை பார்க்க மட்டுமே பயன்படும் என கிருஷ்ணமூர்த்தி பத்ததி விளக்கம் (ஸ்.பி.சுப்பிரமணியன்) என்ற நூலில் படித்துள்ளேன்../////
தகவலுக்கு நன்றி நண்பரே!
/////Gresilz said...
ReplyDeleteHello sir,
I have a doubt regarding 3rd house,
Why it is a bad house,It takes care of brotherly relations,courage etc.Then how it becomes a malefic position?.Also you mentioned that ashtagavarga parals should be low in 3,6,8&12 houses.If it becomes low the person becomes coward and doesnt develop a good relation with brother.Then,how come it is good.For What reason,3rd house is considered to be a malefic one/////
துணிச்சலை நிர்ணயிப்பது ஆறாம் வீடு மட்டுமல்ல! 6 அல்லது 12ல் ராகு அமர்ந்திருக்கும் அமைப்பை உடையவர்களும் துணிச்சல்காரர்கள்தான்! 3ஆம் வீடு, அதன் அதிபதி, அவருடன் சேர்ந்திருக்கும் கிரகங்கள், பரல்கள், மற்றும் சுயவர்க்கப்பரல்கள், சுபக்கிரகங்களின் பார்வை என்று பல விஷயங்கள் சேர்ந்துதான் சகோதர உறவை நிரணயிக்கும்! ஆகவே கவலைப்படாதீர்கள்!
/////Thanuja
ReplyDeletePresent sir,
Hope u have a nice trip...
Thanks
Thanuja////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////Anbu said...
ReplyDeleteDear sir,
i heard Moon and Mars in 6/8 position, then jathagan will affect by Blood Pressure. Is it true sir? kindly clarify me sir.////
முனிவர்கள் ஜோதிடத்தை பற்றி எழுதிவைத்த காலத்தில் இத்தனை வியாதிகள் எல்லாம் ஏது? Blood Pressure, Hyper Tension ellaam ஏது? ஆகவே அவற்றைப் பற்றிய குறிப்புக்கள் (நான் அறிந்தவரை) இல்லை தோழரே!
/////முருகன் அடிமை said...
ReplyDeleteகேள்வி பதில் மிகவும் அருமையாக உள்ளது./////
நல்லது, நன்றி முருகா!
/////kmr.krishnan said...
ReplyDeleteகடைசியில் கூட்டிக் கழித்துப்பார்த்தால் மாந்தியும், அஷ்டவர்கமும்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வது போல் தெரிகிறது.
எல்லா பாடங்களையும் நன்கு படித்த மாணவர்கள், செய்முறை பயிற்சிக்கு என
பிளாக் வந்தால், அங்கு பலரும் தங்கள் பிரச்சனைகளையும் கூறி, பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவைகளைக் கூறியிருப்பதையும் பார்க்கலாம்.கைவசம் கணினியில் ஜாதகம் கணித்துத் தரும் மென்பொருளை வைத்துக்கொண்டு,கணித்து நீங்களே ஒரு முடிவுக்கு வந்து, என் பதிலுடன் ஒப்பிட்டு செயல்முறைப்பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்."ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்"என்று தமாஷுக்குக் கூறினாலும், பட்டறிவு,நேரடி அனுபவம் படிப்பதைக்காட்டிலும் அதிகமாக மனதில் பதியும்.கேமதுரும யோகம் உள்ள ஒருவர் தன் கஷ்டங்களை எழுதியுள்ளதைப் படியுங்கள்.சோதிடம் எவ்வளவு உண்மை என்பது புரியும்.
http://parppu.blogspot.com////
இல்லை,கிருஷ்ணன் சார்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி! அஷ்டகவர்க்கமும் ஒரு வழி! அவ்வளவுதான்!
அஷ்டகவர்க்கம் தெரியாத பல ஜோதிடர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று அவர்கள் கற்றுத்தேர்ந்த வழிகள் உள்ளன! அவைகளும் சிறப்பானவைதான்! பயிற்சி வகுப்பை பின்னால் வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளேன். இப்போது ஜோதிட புத்தக வேலைகள் கைவசம் உள்ளன!
////sen said...
ReplyDeleteDear sir.
Thanks a lot for your understandable answers, can maandhi be calibrated through ashtavargam.
sir How to judge ragu/kethu dasa/bhuthi by astavargam
Thanks and regards
ezhil/////
நாகு, கேது, மாந்தி ஆகியவற்றிற்கு சொந்த வீடுகள் கிடையாது. அதனால் அஷ்டகவர்க்கமும் இல்லை!