20.1.10

Doubt: எப்போது பயணம் தாமதமாகும்?

ஒன்றுமில்லை! ஸ்பைடர்மேன் தன் குடும்பத்தினருடன்
நடைப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: எப்போது பயணம் தாமதமாகும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 15

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினைந்து!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.59
எழில் அரசன்

Dear Sir,

1.You have said in your lessons that if a house has got more parals (eg-30 and above) then that house benefits will be good. Ascendant will receive all the factors concerned to that house.
One doubt sir, If the house lord or the kargan receives less suyavargam points e-g 3 will the ascendant still receive the benefits of the house? Suppose for example 4th house has 31 parals and the house lord has less points e-g 3 points in suyavargam,then also ascendant will get the benefits of 4 house?( Education, vehicle, property, mother) Same for example when the Karagan is also has less suyaparals (e-g 3 points) and the house is having more than 30 parals.(e.g. Budan is karagan for studies, and if he gets 2 point in his suyavargam.and 4th house more than 31 parals ) Will the ascendant will get good studies?

ஒரு வீட்டில் அதிகமாகப் பரல்கள் இருந்து, அதன் அதிபதியும், அதற்கான காரகனும் குறைவான சுயவர்க்கப் பரல்களுடன் இருந்தால் என்ன ஆகும்? பஸ் நன்றாக இருக்கிறது. ஓட்டுனர் திறமையானவர் இல்லை, சாலையும் சரியாக இல்லை என்றால் என்ன ஆகும்? அதுதான் நடக்கும். பயணம் தாமதமாகும். அதுபோல அந்த வீட்டிற்கான பலன்கள் தாமதமாகும். சிலருக்குப் பலன்கள் உரிய காலத்தில் கிடைக்காமலும் போகலாம்!

2. Sir, who is the kargan for ancestral property.
(9 Th house is related to Bhagyam, Father& ancestral properties, charity etc) who is the karagan for this. Is it suryan sir?

ஆமாம்! சூரியன்தான் பூர்வீகச் சொத்துக்களுக்கான காரகன் (authority)!
-------------------------------------------
email.No.60
ராமசுப்பிரமணியன்

Dear Sir,

1. I have seen one rasi chart dhanshu lagnam,lagnapathi in guru in his exalted house (katagam).But in navmsam guru is in makaram in his debilitated house.Guru has 6 parals in birth chart.So how he will give result?

நவாம்சத்தில் நீசம் பெற்றாலும், சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருப்பதால் நல்ல பலன்களைத் தருவார்.இல்லையென்றால் சுயவர்கப்பரல்களுக்கு அர்த்தம் என்ன? அதை அவருடைய தசா/புத்தியில் தருவார்!

2.In rasi chart Venus(10th house lord) with sun(lagna lord) in 10th house.Saturn having 7th dristi to that house.And 9th house has ragu and mercury ;11th house has mandi.Venus has 3 parals in birth chart.Saturn has 4 parals.Astavarga of 10th house is 27.But in navamsam venus in his debilitated house (with guru 5th dristi).How the Venus result related to profession?
3.The above mentioned (Point.2) chart having parivatna yoga with budan in navamsam.Birth chart Guru in 7th house and 7th lord saturn (vakram) vargottamam yoga.Birth chart 7th house having 27 astavarga parals. So how Venus result related marriage?

தனிப்பட்ட ஜாதகங்களுக்கான கேள்விகளுக்கு, முழு ஜாதகத்தையும் பார்த்தால்தான் பலன் சொல்ல முடியும். அதற்கு உரிய வகுப்பு/பாடம் பின்னால் நடைபெற உள்ளது. பொறுத்திருக்கவும்

4.Neeshabanga raja yoga means one plant in excited with one planet in debilited.But last two months (October and November ,2009) mars in debilited house (katagam) and jupiter in debilitated house (magaram).Both are aspecting each other with 7th dristi.Some astrologers said this also neeshabanga raja yogam.How it is?

அவர்களைத்தான் கேட்க வேண்டும்!
---------------------------------------------------
email.No.61
K.சுந்தர், மலேசியா

Dear Sir,

Questions & Answer session is really good... i have been going thru,
learning more. Thanks again.
i have few questions:

1) Mandhi will spoil the benefit of the house where it residing, but if it reside together with the other planets in the house? eg., 4th House - Moon + Mandhi ( astavargam 4th house 24 paral, Moon suyavargam paral 4), this is my son's jathagam,he is 2 years +, also wanted to let you know this jathagam got saraswathi yogam.

மாந்தியுடன் வேறு நல்ல/சுபக் கிரகங்கள் சேர்வதால், மாந்தி நல்லவனாக மாறமாட்டான். சேர்ந்த கிரகங்களுக்குத்தான் இடைஞ்சல் உண்டாகும்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதிற்குப் பிறகுதான் வேலை செய்யும். அதுவரை பெற்றோர்களின் ஜாதகம்தான் அதனால்தான் குழந்தைகள் 12 வயதுவரை சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் ஜாதகத்தைப் பன்னிரெண்டு வயதிற்குமேல் பாருங்கள்

2) Astavarga parals for the houses 3 , 6 , 8, & 12 , how the benifit will be predicted, more parals are bad? or less parals are good?

அங்கே குறைவான பரல்கள் இருப்பதே நன்மை. தீயவர்களும், தீய வீடுகளும் ஜாதகத்தில் வலிமை இல்லாமல் இருப்பதே நல்லது. அதோடு, அங்கே குறையும் பரல்கள், வேறு இடங்களில் அதிகரிக்கும் இல்லையா? மொத்தப் பரல்கள் 337 தானே?

3) planets such as sun,mars,mercury should be always in the rashi
chart next houses or within 90 degrees otherwise the chart is wrong?,
i am doing research with my family & friends jathagam using
jagannatha hora, in some the charts these planets are not in the next
houses. could you please explain more?

நான்கு வீடுகளுக்குள் அவைகள் இருக்கும். 4 X 30 பாகைகள் = 120 பாகைகள். 120ற்குள் 90 பாகை அடக்கமல்லவா? மேஷத்தில் 15 பாகையில் துவங்கினால் என்று வைத்துக்கொள்ளுங்கள் 105 பாகைக்குள் அவைகள் இருக்கும். 20 பாகையில் துவங்கினால் என்று வைத்துக்கொள்ளுங்கள்
110 பாகைக்குள் அவைகள் இருக்கும்.மீண்டும் ஒருமுறை பாருங்கள்
---------------------------------------------------
email.No.62
விஜய் ஆனந்த்

Respected sir,

1.You have given birth details of 33 popular personalities for our reference, in your 200th blog (great job!!! thank u sir!!!)....In that list my favourites personality Dr. A.P.J Abdul kalam's is missing....if possible can you give me his birth chart?........(what a great man!!! I am realy eager to see how the planets are placed in his birth chart)
thanking you,
N.Vijaianand

ஜாதகம் இல்லை நண்பரே! இருந்தால் அத்துடன் சேர்த்திருக்க மாட்டேனா?
--------------------------------------------------------------
சந்தேகங்களைக் கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன. பதில்கள் வரிசையாக வரும். அத்தனை பொது சந்தேகங்களுக்கும் நிச்சயம் பதில் வரும். நம்முடைய கேள்விகளுக்குப் பதிலை இன்னும் காணோமே என்று யாரும் நினைக்க வேண்டாம். பொறுத்திருங்கள். வரிசைப்படி பதில்கள் நிச்சயம் வரும்!
---------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

43 comments:

  1. சூரியனுக்கு முன்னும் பின்னும் சுக்கிரன் 48 பாகைக்குள்ளும் புதன் 28 பாகைக்குள்ளும் இருப்பார்கள். மற்ற கிரகங்களுக்கு இந்த விதிமுறை இல்லை. K. சுந்தர் அவர்களின் 3வது கேள்வியில் செவ்வாய் என்று இருப்பது தவறு.

    நீச்ச பங்கம் ஏற்படுவதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை தட்டச்ச நேரமில்லை. உதாரணத்திற்கு ஒரு இணைய தள முகவரியை கொடுத்துள்ளேன். அங்கு சென்று பாருங்கள். http://www.vedicastrology.com/articles/ArticleNeechaBhanga.htm

    ReplyDelete
  2. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நேரம் தெரியாதலால் ஜாதகம் சரியாக அமைவது கடினம்.sify.com astrology ல் அவரது ஜாதகம் பற்றி ஒரு கட்டுரை உள்ளது.
    கோள்சாரத்திலும் நீசபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் நன்மை செய்யும் என்று சிவல்புரி சிங்காரம் எழுதுகிறார்.அனுபவத்தின் அடிப்படையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. ஸ்பைடர் மேன் குடும்பத்தினருடன் வாக்கிங் செல்கின்றார் சரி...பையனுக்கு டிரஸ் இருக்கு - அவருக்கு இருக்கு - உடன் வருவருக்கு இல்லையே...(ஒருவேளை அது அவர்மனைவி இல்லையோ)
    பதிவு அருமை அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. பதில்களுக்கு நன்றி ஆசானே.

    ReplyDelete
  5. Vanakam sir,

    Questions and ur answers both are interesting sir, especially I understand more about ashtavarga parals todays post...

    Thanks
    Thanuja

    ReplyDelete
  6. அன்பு ஐயாவுக்கு காலை வணக்கம்,
    வாழ்க வளமுடன்
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  7. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    சபரிமலை யாத்திரை சென்று வந்தேன்
    அதனால் வகுப்பிற்கு வரமுடியவில்லை.
    தரிசனமும் பயணமும் நன்றாக இருந்தது.


    எனினும் கொள்ச்சாரச் சனி பகவான் ஆறில்.
    எட்டாம் வீட்டதிபதி: சந்திரதிசை, சுக்கிரபுத்தி,
    சுக்கிர அந்திரம், சனி சூட்ச்ச்சமத்தில்
    கோவிலிலிருந்து வீடு திரும்பியவுடன் வைரல்
    காய்ச்சலில் படுக்குவைத்து விட்டார்.

    தேறிவருகிறேன், தங்களின் பதில்களுக்கு
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  8. அய்யா இனிய காலை வணக்கம்,

    இன்றைய பகுதி சிறப்பு ஆக அமைந்த்துள்ளது ......அய்யா இன்று சந்தேகம் கேட்ட நண்பர் தனுசு லக்னம் ராசி இல் குரு உச்சம் 6 பரல் அம்சத்தில் நீசம் என்றார்....அம்சத்தில் நீசம் பெற்றதால் சற்று பலம் குன்றி குரு பகவான் காணப்படுவாரா அய்யா?
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  9. planets such as sun,mars,mercury should be always in the rashi
    chart next houses or within 90 degrees otherwise the chart is wrong?,In my son's horoscope using
    jagannatha hora, sun in mithunam, merccury in katakam moon&sukran in simmam but mars is at dhanur as 12th house , could you pl. tell me whether the jathakam is wrong ? also pl note his job possibilty as he is having problem with the existing job.
    could you pl send me a reply on his employment status.thanks

    ReplyDelete
  10. My dear Sir1!1
    Goodmorning.

    நமது உபநிஷத்துக்கள், புராண‌ஙகள் பலவும் கேள்வி பதிலாகவே அமைந்துள்ளன.ஏன் கீதை கூட அர்ஜுனன் கிருஷ்ணன்சம்வாதம்தானே!
    விஜய் டி.வியில் தினசரி காலை 6 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் "மஹாபாரதத்தில் தர்மசாஸ்திரம்" உபன்யாசம் நடைபெறுகிறது.ந‌ம் வாலிபர்கள் அனைவரும் கேட்டுப் பயன் பெற வேண்டுகிறேன்.இந்த முதியவனின் வேண்டுகோளை 100 பேராவது கேட்பார்களா?/////
    அதற்கு மேலும் கேட்பார்கள். காரணம் பலருடைய பெயர்கள் வயதுடன் எனக்குத் தெரியும். அதனால் சொல்கிறேன் கிருஷ்ணன் சார்!

    என்னப்பன் பரந்தாமனும்!, சுப்பையனும்! கூறிய அறியுரை தற்பொழுது நிறைவேற்ற முடியாத நிலைமை,காரணம்!விஜய் டி.வி- யை
    மட்டும் காணும் வசதி தற்பொழுது இல்லை ஐயா? மிக விரைவில் ஏற்படுத்திக் கொள்வேன் ஐயா!!!

    சகோதரி! சுந்தரி கூறியது போல் தாங்கள் தாரளமாக கேள்வி பதில் பாடங்களையும் ஜாதக புத்தகத்தில் சேர்த்து விடுங்கள் ஐயா!!!

    /////krish said...
    'வாலும் என்றால் மீண்டும் வால் கிடைத்துவிடபோகிறது’

    பாவம் சார் கண்ணன் இனிமேல் உங்களை சோதிக்க மாட்டார்.//////

    அவர் தனது அன்பு மிகுதியால் அப்படிச் செய்கிறார். அதில் தவறு இல்லை! நகைச்சுவைக்காக என்னுடைய பதில்களை அப்படி எழுதுகிறேன்பொறுத்துக்கொள்ளூங்கள்!

    ஐயா உண்மையில் நடந்தது என்னவோ எழுத்து பிழை தான், அடியேனுக்காக இரண்டு ஜீவன்கள்! அன்பு காட்டியதிக்கு அன்புகலந்த நன்றி ஐயா!

    காக்கைக்கும் தான் குஞ்சு பொன் குஞ்சு'! என்பதனை நிருபித்துவிட்டீர்கள் ஐயா!

    E- மெயில் எண் - 55 க்கு ஐயா - வின் விளக்கம் மிகவும் அருமை!!!

    ReplyDelete
  11. விளக்கங்கள் மிகவும் அருமை.மிக்க நன்றி

    ReplyDelete
  12. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  13. ////ananth said...
    சூரியனுக்கு முன்னும் பின்னும் சுக்கிரன் 48 பாகைக்குள்ளும் புதன் 28 பாகைக்குள்ளும் இருப்பார்கள். மற்ற கிரகங்களுக்கு இந்த விதிமுறை இல்லை. K. சுந்தர் அவர்களின் 3வது கேள்வியில் செவ்வாய் என்று இருப்பது தவறு.
    நீச்ச பங்கம் ஏற்படுவதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை தட்டச்ச நேரமில்லை. உதாரணத்திற்கு ஒரு இணைய தள முகவரியை கொடுத்துள்ளேன். அங்கு சென்று பாருங்கள். http://www.vedicastrology.com/articles/ArticleNeechaBhanga.htm/////

    உங்கள் கருத்திற்கும், மேலதிகத்தகவலுக்கும் நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  14. ////krish said...
    அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நேரம் தெரியாதலால் ஜாதகம் சரியாக அமைவது கடினம்.sify.com astrology ல் அவரது ஜாதகம் பற்றி ஒரு கட்டுரை உள்ளது.
    கோள்சாரத்திலும் நீசபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் நன்மை செய்யும் என்று சிவல்புரி சிங்காரம் எழுதுகிறார்.அனுபவத்தின் அடிப்படையாய் இருக்கும் என்று நினைக்கிறேன்./////

    இருக்கலாம். அதை அவர் தன் அனுபவத்தில் எழுதியிருப்பார்! நன்றி!

    ReplyDelete
  15. ////வேலன். said...
    ஸ்பைடர் மேன் குடும்பத்தினருடன் வாக்கிங் செல்கின்றார் சரி...பையனுக்கு டிரஸ் இருக்கு - அவருக்கு இருக்கு - உடன் வருவருக்கு இல்லையே...(ஒருவேளை அது அவர்மனைவி இல்லையோ)
    பதிவு அருமை அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    ஸ்பைடர் மேனின் ஆடையில் இருந்து அவர் மனைவிக்கு விதிவிலக்கு உண்டாம். அந்த ஆடையையெல்லாம் போட்டுக்கொண்டால், அழகான தோற்றம் காணாமல் போய்விடுமே சாமி!

    ReplyDelete
  16. /////சிங்கைசூரி said...
    பதில்களுக்கு நன்றி ஆசானே.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  17. /////Thanuja said...
    Vanakam sir,
    Questions and ur answers both are interesting sir, especially I understand more about ashtavarga parals todays post...
    Thanks
    Thanuja/////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. /////ஜீவா said...
    அன்பு ஐயாவுக்கு காலை வணக்கம்,
    வாழ்க வளமுடன்
    அன்புடன் ஜீவா////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  19. ////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், சபரிமலை யாத்திரை சென்று வந்தேன்.அதனால் வகுப்பிற்கு வரமுடியவில்லை. தரிசனமும் பயணமும் நன்றாக இருந்தது.
    எனினும் கொள்ச்சாரச் சனி பகவான் ஆறில். எட்டாம் வீட்டதிபதி: சந்திரதிசை, சுக்கிரபுத்தி,
    சுக்கிர அந்திரம், சனி சூட்ச்ச்சமத்தில் கோவிலிலிருந்து வீடு திரும்பியவுடன் வைரல்
    காய்ச்சலில் படுக்குவைத்து விட்டார். தேறிவருகிறேன், தங்களின் பதில்களுக்கு
    நன்றிகள் குருவே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    இறையருளால், சீக்கிரம் குணமடையுங்கள்! நன்றி!

    ReplyDelete
  20. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    இன்றைய பகுதி சிறப்பு ஆக அமைந்த்துள்ளது ......அய்யா இன்று சந்தேகம் கேட்ட நண்பர் தனுசு லக்னம் ராசி இல் குரு உச்சம் 6 பரல் அம்சத்தில் நீசம் என்றார்....அம்சத்தில் நீசம் பெற்றதால் சற்று பலம் குன்றி குரு பகவான் காணப்படுவாரா அய்யா?
    நன்றி வணக்கம்.///////

    அதற்குத்தானே அம்சம் உள்ளது. அம்சத்தையும் பார்க்கவேண்டுமென்று சொல்வது, உண்மையான வலி மையைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். 6 பரல்கள் எனும்போது ஜாதகனுக்கு அந்த நீச நிலையையும் மீறி குரு தனது தசா/புத்திகளில் நன்மைகளைச் செய்வார்!

    ReplyDelete
  21. /////LUX said...
    planets such as sun,mars,mercury should be always in the rashi
    chart next houses or within 90 degrees otherwise the chart is wrong?,In my son's horoscope using
    jagannatha hora, sun in mithunam, merccury in katakam moon&sukran in simmam but mars is at dhanur as 12th house , could you pl. tell me whether the jathakam is wrong ? also pl note his job possibilty as he is having problem with the existing job.
    could you pl send me a reply on his employment status.thanks////

    தனிப்பட்ட ஜாதகங்களுக்குப் பலன் சொல்வதற்கு முழு ஜாதகமும் வேண்டும். பொதுவான விதிகளை வைத்துச் சரியான பலனைச் சொல்ல முடியாது!

    ReplyDelete
  22. /////kannan said...
    My dear Sir1!1
    Goodmorning.
    நமது உபநிஷத்துக்கள், புராண‌ஙகள் பலவும் கேள்வி பதிலாகவே அமைந்துள்ளன.ஏன் கீதை கூட அர்ஜுனன் கிருஷ்ணன்சம்வாதம்தானே!
    விஜய் டி.வியில் தினசரி காலை 6 மணிக்கு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் "மஹாபாரதத்தில் தர்மசாஸ்திரம்" உபன்யாசம் நடைபெறுகிறது.ந‌ம் வாலிபர்கள் அனைவரும் கேட்டுப் பயன் பெற வேண்டுகிறேன்.இந்த முதியவனின் வேண்டுகோளை 100 பேராவது கேட்பார்களா?/////
    அதற்கு மேலும் கேட்பார்கள். காரணம் பலருடைய பெயர்கள் வயதுடன் எனக்குத் தெரியும். அதனால் சொல்கிறேன் கிருஷ்ணன் சார்!
    என்னப்பன் பரந்தாமனும்!, சுப்பையனும்! கூறிய அறியுரை தற்பொழுது நிறைவேற்ற முடியாத நிலைமை,காரணம்!விஜய் டி.வி- யை மட்டும் காணும் வசதி தற்பொழுது இல்லை ஐயா? மிக விரைவில் ஏற்படுத்திக் கொள்வேன் ஐயா!!!
    சகோதரி! சுந்தரி கூறியது போல் தாங்கள் தாரளமாக கேள்வி பதில் பாடங்களையும் ஜாதக புத்தகத்தில் சேர்த்து விடுங்கள் ஐயா!!!/////

    நன்றி அய்யனே!!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////krish said...
    'வாலும் என்றால் மீண்டும் வால் கிடைத்துவிடபோகிறது’
    பாவம் சார் கண்ணன் இனிமேல் உங்களை சோதிக்க மாட்டார்.//////
    அவர் தனது அன்பு மிகுதியால் அப்படிச் செய்கிறார். அதில் தவறு இல்லை! நகைச்சுவைக்காக என்னுடைய பதில்களை அப்படி எழுதுகிறேன்பொறுத்துக்கொள்ளூங்கள்!
    ஐயா உண்மையில் நடந்தது என்னவோ எழுத்து பிழை தான், அடியேனுக்காக இரண்டு ஜீவன்கள்! அன்பு காட்டியதிக்கு அன்புகலந்த நன்றி ஐயா!
    காக்கைக்கும் தான் குஞ்சு பொன் குஞ்சு'! என்பதனை நிருபித்துவிட்டீர்கள் ஐயா!
    E- மெயில் எண் - 55 க்கு ஐயா - வின் விளக்கம் மிகவும் அருமை!!!////

    நல்லது, நன்றி முருகா!

    ReplyDelete
  23. /////Guru said...
    விளக்கங்கள் மிகவும் அருமை.மிக்க நன்றி////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  24. Presnts sir,

    from today's answers i got the answers for one of the doubts for me also. My 9th house in the horscope is Shimma Rasi, the Lord of the house Sun in 12th house of Viruchigam along with Venus, and Saturn siting in shimma Rasi and aspecting the 12th house as 3rd view. Its true when i was 13 my dad forced to shut down his business and forced to go for job after nearly 25 years in business, and there after i am become popular in my family and relatives, but my dads popularity is diminised even though he dont have any bad habbits or worst things. this is happens even though we both are very much loves each other and we never give up or stand up against each other. We always complements each other. the only (Good or Bad) thing is both both the 9th house and 12th house had 26 parals and Sun with 6 parel and Saturan 2 parals in Suyavarkam

    ReplyDelete
  25. ////rama said...
    Dear Sir,
    Thanks for your answers////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  26. //////2) Astavarga parals for the houses 3 , 6 , 8, & 12 , how the benifit will be predicted, more parals are bad? or less parals are good?

    அங்கே குறைவான பரல்கள் இருப்பதே நன்மை. தீயவர்களும், தீய வீடுகளும் ஜாதகத்தில் வலிமை இல்லாமல் இருப்பதே நல்லது. அதோடு, அங்கே குறையும் பரல்கள், வேறு இடங்களில் அதிகரிக்கும் இல்லையா? மொத்தப் பரல்கள் 337 தானே?/////

    எட்டாம் வீட்டில் குறைவான பரல்கள் ஆயுளை குறைத்துவிடாதா ஐயா? ஆனால் எட்டாம் விடு மாங்கல்ய பாக்கியமும் குறிக்கும், அதுபோல ஆறாம் வீடு தாய் மாமனையும் குறிக்கும். எனவே அனைத்து பலனும் ஒருவருக்கு கைகூடாது என தெரிகிறது. கேள்வி பதில் அருமையாக உள்ளது. ஆனால் ஒரு வருத்தம், 50% கேள்விகள் சொந்த ஜாதகத்தை வைத்து கேட்கப்படுவதால் சற்று சலுப்பாக இருக்கிறது. அதனால் நான் ஒரு 20 கேள்விகளை தயார் செய்கிறேன். நன்றி ஐயா!

    ReplyDelete
  27. ////Ram said...
    Presnts sir,
    from today's answers i got the answers for one of the doubts for me also. My 9th house in the horscope is Shimma Rasi, the Lord of the house Sun in 12th house of Viruchigam along with Venus, and Saturn siting in shimma Rasi and aspecting the 12th house as 3rd view. Its true when i was 13 my dad forced to shut down his business and forced to go for job after nearly 25 years in business, and there after i am become popular in my family and relatives, but my dads popularity is diminised even though he dont have any bad habbits or worst things. this is happens even though we both are very much loves each other and we never give up or stand up against each other. We always complements each other. the only (Good or Bad) thing is both both the 9th house and 12th house had 26 parals and Sun with 6 parel and Saturan 2 parals in Suyavarkam/////

    மற்றதெல்லாம் சரி, சிம்மத்தில் இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் துலா ராசியை அல்லவா பார்ப்பார். விருச்சிகத்தை எப்படிப்பார்ப்பார்? தவறாக இருக்கிறது!

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. ////karmegaraja said...
    //////2) Astavarga parals for the houses 3 , 6 , 8, & 12 , how the benifit will be predicted, more parals are bad? or less parals are good?
    அங்கே குறைவான பரல்கள் இருப்பதே நன்மை. தீயவர்களும், தீய வீடுகளும் ஜாதகத்தில் வலிமை இல்லாமல் இருப்பதே நல்லது. அதோடு, அங்கே குறையும் பரல்கள், வேறு இடங்களில் அதிகரிக்கும் இல்லையா? மொத்தப் பரல்கள் 337 தானே?/////
    எட்டாம் வீட்டில் குறைவான பரல்கள் ஆயுளை குறைத்துவிடாதா ஐயா? ஆனால் எட்டாம் விடு மாங்கல்ய பாக்கியமும் குறிக்கும், அதுபோல ஆறாம் வீடு தாய் மாமனையும் குறிக்கும். எனவே அனைத்து பலனும் ஒருவருக்கு கைகூடாது என தெரிகிறது. கேள்வி பதில் அருமையாக உள்ளது. ஆனால் ஒரு வருத்தம், 50% கேள்விகள் சொந்த ஜாதகத்தை வைத்து கேட்கப்படுவதால் சற்று சலுப்பாக இருக்கிறது. அதனால் நான் ஒரு 20 கேள்விகளை தயார் செய்கிறேன். நன்றி ஐயா!//////

    எட்டாம் வீட்டில் பரல்கள் குறைந்திருப்பதால் மட்டுமே ஆயுள் குறைந்துவிடுமா என்ன? அதற்கென்று வேறுபல விதிமுறைகள் உள்ளன. வேறு பல அம்சங்கள் உள்ளன.எட்டாம் வீட்டிப்பற்றிய பாடம் பின்னால் வரும். விரிவாக வரும். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  30. Dear Sir,

    Thanks for the answer & clear explantaion.

    Yes, sorry my mistake,as Mr. Anand said the planets should be Sun,Mercury & Venus are in 120 degree in the rasi chart not Mars.( Suriyan,Budan & Sukiran). Thanks Mr. Ananad again.

    ReplyDelete
  31. Good After noon Sir.
    The session was good.

    ReplyDelete
  32. ////Ram said...
    Presnts sir,
    from today's answers i got the answers for one of the doubts for me also. My 9th house in the horscope is Shimma Rasi, the Lord of the house Sun in 12th house of Viruchigam along with Venus, and Saturn siting in shimma Rasi and aspecting the 12th house as 3rd view. Its true when i was 13 my dad forced to shut down his business and forced to go for job after nearly 25 years in business, and there after i am become popular in my family and relatives, but my dads popularity is diminised even though he dont have any bad habbits or worst things. this is happens even though we both are very much loves each other and we never give up or stand up against each other. We always complements each other. the only (Good or Bad) thing is both both the 9th house and 12th house had 26 parals and Sun with 6 parel and Saturan 2 parals in Suyavarkam/////

    மற்றதெல்லாம் சரி, சிம்மத்தில் இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் துலா ராசியை அல்லவா பார்ப்பார். விருச்சிகத்தை எப்படிப்பார்ப்பார்? தவறாக இருக்கிறது!//

    Thanks for rectifying the same.

    ReplyDelete
  33. ////sundarkmy said...
    Dear Sir,
    Thanks for the answer & clear explantaion.
    Yes, sorry my mistake,as Mr. Anand said the planets should be Sun,Mercury & Venus are in 120 degree in

    the rasi chart not Mars.( Suriyan,Budan & Sukiran). Thanks Mr. Ananad again.////

    நல்லது.நன்றி!c

    ReplyDelete
  34. ////NARESH said...
    Good After noon Sir.
    The session was good.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  35. /////Ram said...
    ////Ram said...
    Presnts sir,
    from today's answers i got the answers for one of the doubts for me also. My 9th house in the horscope

    is Shimma Rasi, the Lord of the house Sun in 12th house of Viruchigam along with Venus, and Saturn siting in

    shimma Rasi and aspecting the 12th house as 3rd view. Its true when i was 13 my dad forced to shut down

    his business and forced to go for job after nearly 25 years in business, and there after i am become popular

    in my family and relatives, but my dads popularity is diminised even though he dont have any bad habbits or

    worst things. this is happens even though we both are very much loves each other and we never give up or

    stand up against each other. We always complements each other. the only (Good or Bad) thing is both both

    the 9th house and 12th house had 26 parals and Sun with 6 parel and Saturan 2 parals in Suyavarkam/////
    மற்றதெல்லாம் சரி, சிம்மத்தில் இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் துலா ராசியை அல்லவா

    பார்ப்பார். விருச்சிகத்தை எப்படிப்பார்ப்பார்? தவறாக இருக்கிறது!//
    Thanks for rectifying the same.////

    நல்லது.நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  36. சொந்த ஜாதகத்தை வைத்துக் கேள்விகள் கேட்டு மின்னஞ்சல்களும் நிறைய வருகின்றன. பின்னூட்டங்களும் நிறைய வருகின்றன. அவற்றிற்கெல்லாம் ஜாதகம் இல்லாமல் ஒப்புக்காக பதில் சொல்ல மனமும் இல்லை. ஜாதகத்தைக் கேட்டுவாங்கிப் பதில் சொல்ல நேரமுமில்லை. ஆகவே அவற்றைத் தவிர்க்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட ஜாதகங்களுக்காக ஒரு
    session ஐ எனது ஜோதிட நூல்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு வேலைகள் முடிந்த பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளேன்.

    முறையான அறிவிப்பு பின்னால் வரும் அனைவரும் பொறுத்திருக்கவும்!

    ReplyDelete
  37. Dear sir,
    Good evening sir. Thanks for ur today
    lesson sir. All the answers are very very nice sir.
    sundari

    ReplyDelete
  38. பதில்கள் அருமை. பாரத ரத்னா ஜே பி ஜே அப்துல் கலாம் பிறந்த தேதி 15 10 1931.பிறந்த ஊர் திக்குன்டி,ராமேஸ்வ‌ரம். பிறந்த நேரம் தெரியவில்லை.
    கேட்டை நட்ச‌த்திரம்.விருச்சிக ராசி. லக்னத்தையும் விருச்சிகம் எனக்கொண்டால் அவருடைய பல வாழ்க்கைச் சம்பவங்க‌ள் பொருந்தி வருகின்றன. குரு உச்சம், புதன் உச்சம், மூலத்திருகோணம், சுக்ரன் ஆட்சி.

    ReplyDelete
  39. ////sundari said...
    Dear sir,
    Good evening sir. Thanks for ur today
    lesson sir. All the answers are very very nice sir.
    sundari////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  40. ////kmr.krishnan said...
    பதில்கள் அருமை. பாரத ரத்னா ஜே பி ஜே அப்துல் கலாம் பிறந்த தேதி 15 10 1931.பிறந்த ஊர் திக்குன்டி,ராமேஸ்வ‌ரம். பிறந்த நேரம் தெரியவில்லை.
    கேட்டை நட்ச‌த்திரம்.விருச்சிக ராசி. லக்னத்தையும் விருச்சிகம் எனக்கொண்டால் அவருடைய பல வாழ்க்கைச் சம்பவங்க‌ள் பொருந்தி வருகின்றன. குரு உச்சம், புதன் உச்சம், மூலத்திருகோணம், சுக்ரன் ஆட்சி.////

    நமது வகுப்பறை மாணவர் திரு.பாலகுமாரன் அவர்கள், அதைத் தேடிப்பிடித்துக்கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி! உங்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்:

    பிறந்த தேதி 15.10.1931,
    பிறந்த நேரம்: 2:30 AM,
    பிறந்த ஊர்: ராமேஸ்வரம்

    ReplyDelete
  41. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நேரம் 2.30 AM என்றால் லக்கனம் சிம்மம் ஆகும்.LMT உபயோகிக்க வேண்டும் அப்போது IST இல்லை. கிருஷ்ணன் சார் கூறியது போல் விருச்சகம் சரியாக உள்ளது. பிறந்தநேரம் 8.05 AM ஆக இருக்க வேண்டும்.sify.com analysis சரியாக உள்ளது.

    ReplyDelete
  42. ////krish said...
    அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நேரம் 2.30 AM என்றால் லக்கனம் சிம்மம் ஆகும்.LMT உபயோகிக்க வேண்டும் அப்போது IST இல்லை. கிருஷ்ணன் சார் கூறியது போல் விருச்சகம் சரியாக உள்ளது. பிறந்தநேரம் 8.05 AM ஆக இருக்க வேண்டும்.sify.com analysis சரியாக உள்ளது.////

    மரியாதைக்கு உரிய அப்துல் கலாம் அவர்களே சொன்னால்தான் சரியான நேரம் கிடைக்கும்! தகவலுக்கு நன்றி க்ரீஷ்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com