----------------------------------------------------------------
Doubt: மோதல் இல்லை; காதல் மட்டுமே உண்டு!
Doubts: கேள்வி பதில் பகுதி ஏழு
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஏழு!
Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.28
செல்லபிரசாத் ராமசாமி
அன்புள்ள அய்யா,
என்னுடைய சந்தேகங்கள்
1.கிரகங்கள் ஆதிபத்தியத்தியத்தை கொண்டுதானே நன்மையோ தீமையோ செய்வார்கள்? பின் ஏன் சுபர், பாபர் என்று பிரிக்கப்பட்டுள்ளது?
வாத்தியார்கள் எல்லோருமே பாடம்தானே நடத்துவார்கள். அவர்களை ஏன் வகுப்பு ஆசிரியர், தமிழாசிரியர், கணக்கு வாத்தியார், உடற்கல்வி வாத்தியார், பேராசிரியர், தலைமை ஆசிரியர் என்று பிரித்துள்ளார்கள்? மனிதர்கள் எல்லாம் ஒன்றுதானே? படித்த அறிவாளி, படிக்காத முட்டாள், செல்வந்தன், ஏழை, அப்பாவி, கேடி (பேட்டை தாதா) என்று ஏன் பிரித்துச் சொல்கிறார்கள்? அப்படித்தான் இதுவும்!
2.நவாம்சத்தில் லக்னம் ஆணுக்கு ஆண் ராசியிலும் பெண்ணுக்கு பெண் ராசியிலும்தான் அமையும் என்பது உண்மையா?
இருக்கிற குழப்பம் போதும். நீங்கள் வேறு புதிதாக எதையாவது கேட்டு வைக்காதீர்கள்.
3.துல்லியமான கணிப்புகளுக்கு வாக்ய பஞ்சாங்கம் சிறந்ததா? திருக்கணித பஞ்சாங்கம் சிறந்ததா? திருகணித பஞ்சாங்கம் சிறந்தது எனில் பண்டைய காலங்களில் எப்படி கணித்தார்கள்?
பண்டைய காலங்களில் கணிதமே இல்லையா? என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்?
1. இந்தியக் கணிதவியலின் வரலாற்றைப் பற்றிய பல செய்திகள் இந்தத் தளத்தில் உள்ளன. படித்துப் பாருங்கள் 2. 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கணித மேதை ஆர்யபட்டரைப் பற்றிய செய்திகளுக்கான சுட்டி இங்கே! Aryabhata (IAST: Āryabhaṭa; Sanskrit: आर्यभट) (476–550 CE) was the first in the line of great mathematician-astronomers from the classical age of Indian mathematics and Indian astronomy. His most famous works are the Aryabhatiya (499 CE, when he was 23 years old) and the Arya-siddhanta.
சரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்
4.பாக்ய ஸ்தானத்தில் அதிக பரல்களையும், தொழில் மற்றும் லாப ஸ்தானத்தில் குறைந்த பரல்களையும் பெற்ற ஜாதகன் அனைத்து பாக்யங்களையும் அனுபவிக்க முடியுமா?
உழைக்காமல் அனுபவிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் இல்லையா? உழைக்காமல் அனுபவிக்க , 3, 7, 11ஆம் வீடுகள் நன்றாக இருக்க வேண்டும்.அந்த அமைப்பிற்குப் பெயர் காம ஜாதகம். அதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் தேடிப்படியுங்கள்
5.சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சரியாக ஜாதகம் கணிக்க முடியுமா? முடியும் எனில் மனிதனே குழந்தையின் லக்னத்தை மாற்ற முடியுமே?
அதைத்தானே ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் கேட்கிறார்கள். தாயின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வரவேண்டுமா/ அல்லது கிழிக்காமல் வரவேண்டுமா? என்பதையும் கால தேவனே நிர்ணயிக்கிறான். ஆகவே கிழித்துக் கொண்டு வந்து தரையில் விழும் நேரம் அல்லது மருத்துவர் கையில் தவழத்து வங்கும் நேரமே அக்குழந்தையின் பிறந்த நேரம்.
6. கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற சுப கிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுமா?
கனமழை என்றால் அனைவருக்கும் அது மழைதான். குடை, ரெயின் கோட் போட்டிருப்பவன் சற்றுப் பாதுகாப்பாக இருப்பான். ஆனால் மழையின் பாதிப்பில் இருந்து அவன் தப்பிக்க முடியாது. நனைய வேண்டிய இடங்கள் நனையும்!
7. ஓரு வீட்டில் அதிக பரல்களை உடைய கிரகத்திற்குதான் (அது நீசமாகியிருந்தாலும்) அதிக வலிமை உள்ளதா?
ஆமாம். இல்லாவிட்டால் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு என்ன அர்த்தம்?
அன்புடன்
செல்லபிரசாத் ராமசாமி
----------------------------------------------------
email No.29
பிரியா பிரதீப்
கேள்வி பதில்களுக்கு நன்றி ஐயா,
1. நீசம் நீசம் என்று சொல்கிறார்களே ! இந்த நீசம் ஆன கிரகத்திற்கு tonic ஏதாவது குடுத்து strong ஆக்க முடியுமா?
அப்படி ஆக்க முடிந்தால்? ஆகா, நினைக்கவே குஷியாக இருக்கிறது!
வாருங்கள், கற்பனை செய்து பார்ப்போம். கற்பனைக்கென்ன காசா - பண்மா?
ஆகவே செய்து பார்ப்போம்!
337 டானிக்கைப்போல 999 டானிக் ஒன்றை உருவாக்கி அத்தனை கிரகங்களுக்கும் கொடுத்து விடலாம். அத்தனை கிரகங்களையுமே உச்சமாக்கி விடலாம். எந்த கிரகத்திற்கும் சொந்த வீடு கிடையாது. அனைத்து ராசிகளுமே பொதுவானது என்று சொல்லி விடலாம்.அவர்களுக்குள் நிலவும் பகையைப் போக்கி அனைவருக்கும் நட்பு உறவை உண்டாக்கி விடலாம். அத்தனை கிரகங்களையும் ஒரே சுற்றுப்பாதையில் ஓட விட்டுக் கோள்சாரத்தை இல்லாமல் செய்து விடலாம். கிரகங்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்கி விடலாம்.
அதனால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது. இந்தியாவில் இருக்கும் அத்தனை பெண்களுமே அனுஷ்கா சர்மாவைப் போல அழகாக இருப்பார்கள். ஆண்கள் அத்தனை பேர்களும் அஜீத்தை போல அழகாக இருப்பார்கள். பெண் பார்க்கும் வேலை, ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் வேலை எல்லாம் மிச்சம்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.ஜாதி எல்லாம் ஒழிந்து விடும் யாரும் வயல்களில் வேலை செய்ய வேண்டாம். பயிர்கள் தானாகவே விளையும். வீட்டில் கிணறு தோண்டினால், தண்ணீருக்குப் பதிலாக தங்கம் கிடைக்கும் அல்லது பெட்ரோல் கிடைக்கும். யாரும் பள்ளிக்கூடம் போக வேண்டாம். பிறக்கும்போதே 4 மொழிகள், 25 தொழில் நுட்பக்கல்விகளுடன் குழந்தைகள் பிறக்கும். 25 வயதிற்கு மேல் யாருக்கும் வயது ஏறாது. அனைவரும் இளமையுடன் இருப்பார்கள். யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம். வீட்டில் உட்கார்ந்திருக்கலாம். நாட்டில் மோதல் இருக்காது. காதல் மட்டுமே இருக்கும். நோய்களே இருக்காது. பிரசவத்திற்கு மட்டுமே மருத்துவமனைகள் இருக்கும். பிரசவங்கள் அனைத்தும் 100% சுகப் பிரசவமாகவே இருக்கும். அரசியலில் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். கட்சிகளே இருக்காது. பிரதமர் பதவிக்குக்கூட கெஞ்சி ஆள் பிடிக்க வேண்டியதாயிருக்கும். மொத்ததில், கதை, மற்றும் சஸ்பென்ஸ், திருப்பமுள்ள சம்பவங்கள் இல்லாத படம் (டாக்குமென்ட்டரி படம்) போல வாழ்க்கை இருக்கும். பரவாயில்லையா சொல்லுங்கள் - முயற்சி செய்வோம்!
2. தசாபுத்தி பத்தி கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் . எனக்கு ஜாதகம் வைத்து சொன்னது புரியவில்லை ...(bhuthan is not helping me to understand). எத்தனை பரல் இருந்தால் தசா காலத்தில் எவ்வளவு நல்லது ? எந்த வீட்டில் இருந்தால் எப்படி என்று ...(கேள்வி சின்னப் பிள்ளைத் தனமாகக் இருந்தால் மனிக்கவும்) விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் கதை போல் இருக்கிறது அன்டு சொல்லிவிடாதீர்கள் (ஹி ஹி ஹி)
ஜாதகத்தை வைத்துச் சொன்னபோதே புரியவில்லை என்றால், இப்போது சொன்னால் மட்டும் புரியவா போகிறது? புரிந்து என்ன ஆகப்போகிறது. ஆகவே விட்டு விடுங்கள்! (ஹி ஹி ஹி)
3. 23ல் வேலை கிடைக்கும் 25ல் வெளிநாடு போவா, 50ல் வீடு வாங்குவான். கடன் எந்த வயதில் தீரும் etc... என்று சொல்றாங்களே ? அது தசாவச்சு எப்படி பார்க்கிறது ஐயா ? கேள்விகள் பல மனதில் எழுந்தாலும் , அசிரியர் நேரமும் , என்னும் இரண்டு தடவை படித்தால் புரியும் என்பதால் போதும் ஐயா...
இரண்டு முறை படித்தால் புரியும் என்று நீங்களே சொல்கிறீர்கள். பேசாமல் இரண்டுமுறை அல்லது நான்கு முறைகள் பாடங்களைப் படியுங்கள். அப்போதும் புரியாவிட்டால், அடுத்த கேள்வி பதில் செஷனுக்கு வந்து கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகச் சொல்லித் தருகிறேன். இப்பொது என்னை விட்டு விடுங்கள் சகோதரி! (என் நேரம் சரியாக இல்லை!)
thanks a lot
Priya
நல்ல கேள்விகளாகக் கேட்டு என்னை சிந்திக்க வைத்ததற்கு நானும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!:-)))
-----------------------------------------
email No.30
சுரேந்திரன் சங்கர்
அன்புள்ள ஆசானே,
1. கோசார ரீதியில் கிரக பலாபலன்- ராசியிலிருந்து கணகிட்டு பார்க்கணுமா (Numbering from chandran) or லக்னத்திலிருந்து கணக்கிட்டுப் பார்க்கணுமா ?
உதாரணத்திற்கு தற்பொது குரு கும்பத்தில், சந்திரனுக்கு 11ல் இருக்க நல்ல பலனை தருவார், அதே, ரிஷப லக்னத்திலிருந்து குரு 10ல் இருக்கிறார் நல்லதொரு பலனை தரமாட்டார், SO in this scenario how do we conclude கிரக பலாபலன் (குரு/சனி transit) ? ராசியை வைத்து பலன் சொல்வது சரியா ? லக்னத்திலிருந்து குரு/கிரக postion- பலன் சரியானது ?
விடிய விடிய ராமாயணம் கேட்டவன், விடிந்தவுடன் சொன்னானாம்: சீதைக்கு ராமர் சித்தப்பா!. அந்தக் கதையாக இருக்கிறது உங்கள் கேள்வி. 300 பாடங்கள் நடத்தி இருக்கிறேன். அதைப் படித்து விட்டு அல்லது படிக்காமல் இந்தக் கேள்வியைக் கேட்கும் உங்களை நினைத்தால், பாடம் நடத்திய எனக்கு வருத்தமாக உள்ளது.
கோள்சாரப் பலனை சந்திரன் இருக்கும் ராசியில் இருந்துதான் பார்க்க வேண்டும் சாமி! இது மறக்காமல் இருக்க 100 முறை imposition எழுதுங்கள்
2. மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனை - EXAMPLE 3ல் சனி - 6ல்செவ்வாய், ரிஷப லக்னம் தைன்ய பரிவர்த்தனை ” பரிவர்த்தனையாகும் கிரகங்களில் ஒருவர் 6 அல்லது 8 அல்லது 12ஆம் இடத்தின் அதிபதியாக இருப்பது. அப்படி இருந்தால், பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் அடிபட்டுப்போகும்! உங்கள் மொழியில் சொன்னால், காயப்பட்டு, படுத்துக் கொண்டு விடும்” என்று எழதியிருந்திர்கள்
so above example who is hurted ? and which house is got hurted ? இப்படி பட்ட மறைவு ஸ்தான கிரக பரிவர்த்தனையில் ஒரு கிரகம் யோககாரகனாக இருந்தால் பலாபலன் எப்படி ? what is over all effect of above exchange?
பாடத்தை எழுதிய நான்தான் முதலில் அடிபட்டுப்போனேன். பரிவர்த்தனைக்கு உள்ளாகும் அடுத்த கிரகம் என்றால், 6, 8, 12ஆம் வீடுகளுக்கு அதிபதிகளாக இல்லாத கிரகம் என்னும் பொருள் அதில் உள்ளது உங்களுக்கு ஏன் தெரியவில்லை? பரிவர்த்தனைப் பாடத்தை மீண்டும் படியுங்கள்
---------------------------------
email No.31
அருள் பிரகாஷ் முத்து
ஆசிரியர் அவர்களுக்கு,
1.மாந்தி ஒருவரின் ஜாதகத்தில் எந்த அளவிற்கு முக்கியமானது ?
மாந்தியைப் பற்றி மின்னஞ்சல் எண் 17ற்குப் பதில் அளித்துள்ளேன். அதைப்படித்துப் பாருங்கள்
2.மாந்தி லாபஸ்தானத்தில் மற்ற கிரகங்களுடன் கூட்டு சேர்ந்து இருந்தால் என்ன ஆகும்?
மாந்தி தீய கிரகம். அதனுடன் மற்ற கிரகங்கள் சேராமல் இருப்பது உத்தமம். சேர்ந்து இருந்தால், தீயவனுடன் சேர்ந்த பலனை அனுபவிக்க வேண்டியதுதான்!
மு அருள்
-----------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி
ReplyDeleteஅப்பாஆஆஆஆஆஆ !!!!!!!!!!!!!
ReplyDeleteE-mail No - 29 / 1 க்கு பதில் சொல்ல
தங்களால் மட்டும் எப்படி, இப்படி எல்லாம் கற்பனை பண்ணமுடியுது, அந்த சூட்சுமத்தை எனக்கும்
சொல்லிதர முடியுமா ?
தங்களின்ஆசை!!!!!!!!!!!11
நிறைவேற
என்னப்பன்
சுவாமிநாதனை !!!
வேண்டுகின்றேன் .
சுப்பையா வாத்தியாருக்கும் மாணவ கண்மணிகளுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅமைதியான
ஆனந்தமான
இன்பமான
ஈகைமிகு
உண்மையான
ஊர்நலம்பெற
எங்கும்செழிப்பு
ஏற்றமுடனே
ஐங்கரத்த்கானும்
ஒன்பதுகோள்களும்
ஓங்குபுகழ்
ஒளவையார்வேண்டுதல்படி
எல்லா வளங்களும்,நலன்களும்,அனைவரும் பெற்று வாழ இறையாற்றல் கருணை புரிந்து சிறக்கட்டும்
ஏற்றத் தாழ்வுகள் பற்றிய நீநீநீ..ண்ட விளக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது.
ReplyDelete"உடோப்பியன் ஸ்ட்டேட்" வந்தால் நன்றாகா இருக்குமா என்று கேட்டால், இல்லை சலிப்புதான் உண்டாகும்.
என்னுடன் பணிபுரிந்த இஸ்லாமிய சகோதரி பல்லாண்டு காலம் நம் பெண்களைப்போல் புடவை அணிந்து வந்தவர் திடீர் என்று 'நிகாப்'(கறுப்பு மேலங்கி) அணிந்து அலுவலகம் வரத் துவங்கினார்.மேலும் எப்போதும் திருக்
குர்ரானைக் கையில் வைத்துக்கொண்டு எல்லோரிடமும் பிரச்சாரமும் செய்யத் துவங்கினார்.தொழுகை நேரங்களில் அலுவலக நேரமானலும் மேற்கு நோக்கி
'துவா'செய்வார். (கேது தசை போல என்று மனத்திற்குள் நினைத்துக்கொள்வேன்) என்னோடு பேசும் போது 'மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை' என்றார். நான் கூறினேன் "நீங்கள் கூறுவது நம் விருப்பம்.அப்படி இருக்குமானால் நல்லதே.ஆனால் நடை முறையில் பல வேற்றுமைகளை நாம் காண்கிறோம் என்பதே நிதர்சனம்.நம் இருவரையுமே
எடுத்துக்கொண்டால் உங்கள் மனோபாவத்திர்க்கு இஸ்லாம் ஏற்புடையதாக உள்ளது.எனக்கு இல்லை.குணம், செயல்பாடு,கண்ணோட்ட்த்தில் வேறுபட்டுத் தான் நிற்கிறோம்.ஆனால் இந்த வேறுபாடு நம்மைப் பிரிக்க வேண்டுவதில்லை.மனித சமுதாயம் என்ற ஒற்றுமை சாத்தியமே.எப்போது எனில் தனிமனிதனின் பிறரை பாதிக்காத தனித்தன்மை காக்கப்படும்போதுதான்.
ஆண்டவன் எல்லா மனிதர்களுக்கும் ஹார்டுவேர் ஒன்றாகத்தான் கொடுத்துள்ளார்.சாஃப்ட்வேர் ப்ரொக்கிராமில் மாறுதல் உள்ளது.we agree to disagree" என்று கூறினேன். அம்மணி என் கருத்தை ஏற்கவில்லை.
ஆஹா நெனைதலே இனிக்குதே ஐயா ..... அதுவும் உங்கள் நடையில் படித்தபோது குடுத்தால் சுவை ...நல்ல தான் இருக்கு ... ஆனால் கொஞ்சம் நாள் போனால் போர் அடித்து விடும் ...எனக்கு வேண்டாம் (கெடைக்காத பழம் புளிக்குமோ ?)
ReplyDeleteதெரிந்து என்ன ஆக போகுதுன்னு சொனீங்க இல்லையா அது தான் சரி ..First இனி அன்ன நடக்கும் அண்டு அறிய தான் வகுபிற்க்கு வந்தேன் some thing புரிந்த பின் புரிந்தது ஒன்றும் இல்லை , அல்லாம் தலையில் எழுதியது போல் தான் நடக்கும் என்று ....
priya
/////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////kannan said...
ReplyDeleteஅப்பாஆஆஆஆஆஆ !!!!!!!!!!!!!
E-mail No - 29 / 1 க்கு பதில் சொல்லத் தங்களால் மட்டும் எப்படி, இப்படி எல்லாம் கற்பனை பண்ணமுடியுது, அந்த சூட்சுமத்தை எனக்கும் சொல்லிதர முடியுமா?//////
அதில் ஒன்றும் சூட்சமம் இல்லை. உட்கார்ந்து யோசித்தால் அனைவருக்கும் வரும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////தங்களின்ஆசை!!!!!!!!!!! நிறைவேற என்னப்பன் சுவாமிநாதனை !!! வேண்டுகின்றேன் .////
இதற்கெல்லாம் பிரார்த்தனை செய்து சுவாமிநாதனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteசுப்பையா வாத்தியாருக்கும் மாணவ கண்மணிகளுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
அமைதியான
ஆனந்தமான
இன்பமான
ஈகைமிகு
உண்மையான
ஊர்நலம்பெற
எங்கும்செழிப்பு
ஏற்றமுடனே
ஐங்கரத்த்கானும்
ஒன்பதுகோள்களும்
ஓங்குபுகழ்
ஒளவையார்வேண்டுதல்படி
எல்லா வளங்களும்,நலன்களும்,அனைவரும் பெற்று வாழ இறையாற்றல் கருணை புரிந்து சிறக்கட்டும்/////
அப்படியே நடக்கட்டும்
ஆண்டவன் அருள்புரிவாராக!
/////kmr.krishnan said...
ReplyDeleteஏற்றத் தாழ்வுகள் பற்றிய நீநீநீ..ண்ட விளக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது.
"உடோப்பியன் ஸ்ட்டேட்" வந்தால் நன்றாக இருக்குமா என்று கேட்டால், இல்லை சலிப்புதான் உண்டாகும்.
என்னுடன் பணிபுரிந்த இஸ்லாமிய சகோதரி பல்லாண்டு காலம் நம் பெண்களைப்போல் புடவை அணிந்து வந்தவர் திடீர் என்று 'நிகாப்'(கறுப்பு மேலங்கி) அணிந்து அலுவலகம் வரத் துவங்கினார்.மேலும் எப்போதும் திருக்
குர்ரானைக் கையில் வைத்துக்கொண்டு எல்லோரிடமும் பிரச்சாரமும் செய்யத் துவங்கினார்.தொழுகை நேரங்களில் அலுவலக நேரமானலும் மேற்கு நோக்கி
'துவா'செய்வார். (கேது தசை போல என்று மனத்திற்குள் நினைத்துக்கொள்வேன்) என்னோடு பேசும் போது 'மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை' என்றார். நான் கூறினேன் "நீங்கள் கூறுவது நம் விருப்பம்.அப்படி இருக்குமானால் நல்லதே.ஆனால் நடை முறையில் பல வேற்றுமைகளை நாம் காண்கிறோம் என்பதே நிதர்சனம்.நம் இருவரையுமே
எடுத்துக்கொண்டால் உங்கள் மனோபாவத்திர்க்கு இஸ்லாம் ஏற்புடையதாக உள்ளது.எனக்கு இல்லை.குணம், செயல்பாடு,கண்ணோட்ட்த்தில் வேறுபட்டுத் தான் நிற்கிறோம்.ஆனால் இந்த வேறுபாடு நம்மைப் பிரிக்க வேண்டுவதில்லை.மனித சமுதாயம் என்ற ஒற்றுமை சாத்தியமே.எப்போது எனில் தனிமனிதனின் பிறரை பாதிக்காத தனித்தன்மை காக்கப்படும்போதுதான்.
ஆண்டவன் எல்லா மனிதர்களுக்கும் ஹார்டுவேர் ஒன்றாகத்தான் கொடுத்துள்ளார்.சாஃப்ட்வேர் ப்ரொக்கிராமில் மாறுதல் உள்ளது.we agree to disagree" என்று கூறினேன். அம்மணி என் கருத்தை ஏற்கவில்லை.//////
சிலரிடம் சாஃப்ட்வேர் சரியாக நிறுவப்படவில்லை. நிறுவப்பட்ட சிலரிடம் அது சரியாக வேலை செய்வதில்லை:-)))))
/////Priya said...
ReplyDeleteஆஹா நினைத்தாலே இனிக்குது ஐயா ..... அதுவும் உங்கள் நடையில் படித்தபோது குடுத்தால் சுவை ...நல்லாத்தான் இருக்கு ... ஆனால் கொஞ்சம் நாள் போனால் போர் அடித்து விடும் ...எனக்கு வேண்டாம் (கெடைக்காத பழம் புளிக்குமோ ?)
தெரிந்து என்ன ஆக போகுதுன்னு சொனீங்க இல்லையா அதுதான் சரி ..First இனி என்ன நடக்கும் என்று அறியத்தான் வகுப்பிற்கு வந்தேன் something புரிந்தபின் புரிந்தது ஒன்றும் இல்லை , எல்லாம் தலையில் எழுதியது போல் தான் நடக்கும் என்று ....
priya//////
நல்லது.நன்றி சகோதரி!
வாத்தியார்,வகுப்பறைக்கண்மணிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteகாலை வணக்கம் சார் ,
ReplyDeleteநல்லா தான் போய்கிட்டிருக்கு ........ இந்த கேள்வி பதில் பதிவும் ஒரு பாடம் தான் , எதோ exam revision படிக்கிற மாதிரி இருக்கு .
"Wish you and all in this blog a Happy and a Prosperous New year"
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteகேளிவிக்கும், கேட்டவருக்கும்
பதில்கள் அருமை - அதில்
எங்களுக்கும் நன்மை.
நன்றிகள் குருவே!
இறைவன் இரண்டு
பொம்மைகள் செய்தான்,
அவை இரண்டும் சேர்ந்து
இரண்டு பொம்மைகள் செய்தன..
எல்லாம் விளையாட.... என்றார் கவிஞர்.
வாழ்க்கை என்பது வாழத்தானே
என்றான் இன்னொருவன்!
கம்பங்க் கூழுக்கு ஏங்கியவனுக்கு
கஞ்சியின் அருமைத் தெரியும்.
சிலேட்டுக்கு ஏங்கியவனுக்கு
கணினியின் அருமைத் தெரியும்,
திருமணத்திற்கு ஏங்கியவருக்கு
மனைவியின் அருமை தெரியும்,
கஷ்டப்பட்டு உயர்ந்தவனுக்கு
வாழ்வின் அருமைத் தெரியும்.
வசதியான மகனும் அடுத்தவரிடத்தில்
வேலை செய்யும் போதே, தன்
தந்தையின் நிலை புரியும்...............
செயலில் சிரத்தையும் (Risk) வாய்த்ததை
வசப்படுத்த போராடும் தீவிர
முயற்சியுமே நல்ல திருப்பு முனையாகும்...
எல்லாம் இருந்தால் எதுவுமே
இல்லை என்ற உங்கள் பதில்;
எளிமை ஆனால் மிகவும் அருமை.
நன்றிகள் குருவே!
நேற்று பாடத்தைப் படித்து விட்டு பின்னூட்டம் இட கூட நேரம் இல்லை. கடந்த சில நாட்களாக வேலை பளு அதிகமாகி விட்டதுதான் காரணம்.
ReplyDeleteஒரு ஜாதகத்திற்கு யோக கிரகங்கள் உச்சமானால் ஒரு பலன் துர்ஸ்தான அதிபதிகளான 6,8,12க்கு உரியவர்கள் உச்சமானால் ஒரு பலன், அவர்களே நீச்சமானால் ஒரு பலன் இப்படி என் அனுபவத்தில் பலவற்றை கவணித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். என் ஜாதகத்தில் லக்ன, கேந்திர கோணாதிபர்கள் 3,8லும் 3,8,12க்கு உரிய கிரகங்கள் கோணத்திலும் இருக்கிறன. சனி ஒருவரே 5,6க்கு உரியவராகி இன்னொரு கோணமான 9ல் இருக்கிறார். Matter over என்று write off செய்ய வேண்டியதில்லை. நவாம்சம் காப்பாற்றி விட்டது.
கேள்வியும் பதிலும் ஒரே காமடி போங்க....
ReplyDeleteயார் கடவுள்
ReplyDelete----------------
மனிதனை படைத்தவன் நீதான் என்றால்
உன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்
கடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை
சுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்
கடவுளை படைத்த மனிதனை பார்த்து
கடவுள் என்பது யாரென கேட்டேன்
கடவுளை படைத்தது நானே அதனால்
கடவுள் என்பதும் நானே என்றான்
ஆணவ நெஞ்சில் கடவுளை தேடி
அழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி
கடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ?
உடனே வந்து சாட்சி சொல்லாரோ?
---------
- ஐயப்பன்
http"//iyyappan.blogspot.com
வாத்தியாருக்கும் ,சகமாணவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
ReplyDeleteகேள்வி பதில் பதிவு சிறப்பு....இந்த ஒவரில் எல்லாம் டெட் பால் அஹ் வருது .....சிலபேர் பொவுன்சர் போட போரன்னு சொன்னாங்க ,,,,,அய்யா காத்துகொண்டு இருக்கின்றார் சீக்கிரம் வந்து வீசுங்கள் ....
அய்யா மற்றும் சகநண்பர்களுக்கும் இன்ய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நன்றி
Vanakam sir,
ReplyDeleteAs the new year blossoms, Wishing you sir and fellow classmates a very healthy, happy & prosperous new year!!!
Regards,
Thanuja
உள்ளேன் அய்யா. உங்களுக்கும், வகுப்பறை மாணாக்கர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!
ReplyDeleteNANDRAGA THELIVAGA BHADHIL EZHUDHUGIREERGAL AYYA.
ReplyDeleteNAN PUDHIYA MANAVAN.
PADANGALAI PADITHU KONDU IRUKIRAEN AYYA.
SANDHAENGAM VANDHAL UNGALAI ANUGUVAEN.
IDHAYAM KANINDHA PUTHTHANDU NAL VAZHTHUKKAL.
//////krish said...
ReplyDeleteவாத்தியார்,வகுப்பறைக்கண்மணிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்./////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!
////CUMAR said...
ReplyDeleteகாலை வணக்கம் சார் ,
நல்லா தான் போய்கிட்டிருக்கு ........ இந்த கேள்வி பதில் பதிவும் ஒரு பாடம் தான் , எதோ exam revision
படிக்கிற மாதிரி இருக்கு. "Wish you and all in this blog a Happy and a Prosperous New year"////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!
Alasiam G said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், கேள்விக்கும், கேட்டவருக்கும்
பதில்கள் அருமை - அதில் எங்களுக்கும் நன்மை.
நன்றிகள் குருவே!
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான், அவை இரண்டும் சேர்ந்து இரண்டு பொம்மைகள் செய்தன..
எல்லாம் விளையாட.... என்றார் கவிஞர்.
வாழ்க்கை என்பது வாழத்தானே என்றான் இன்னொருவன்!
கம்பங்க் கூழுக்கு ஏங்கியவனுக்கு கஞ்சியின் அருமைத் தெரியும்.
சிலேட்டுக்கு ஏங்கியவனுக்கு கணினியின் அருமைத் தெரியும்,
திருமணத்திற்கு ஏங்கியவருக்கு மனைவியின் அருமை தெரியும்,
கஷ்டப்பட்டு உயர்ந்தவனுக்கு வாழ்வின் அருமைத் தெரியும்.
வசதியான மகனும் அடுத்தவரிடத்தில் வேலை செய்யும் போதே, தன் தந்தையின் நிலை புரியும்...............
செயலில் சிரத்தையும் (Risk) வாய்த்ததை வசப்படுத்த போராடும் தீவிர
முயற்சியுமே நல்ல திருப்பு முனையாகும்... எல்லாம் இருந்தால் எதுவுமே இல்லை என்ற உங்கள் பதில்;
எளிமை ஆனால் மிகவும் அருமை.
நன்றிகள் குருவே!/////
நன்றி ஆலாசியம். வாழ்க, வளமுடன்!
////ananth said...
ReplyDeleteநேற்று பாடத்தைப் படித்து விட்டு பின்னூட்டம் இட கூட நேரம் இல்லை. கடந்த சில நாட்களாக வேலை பளு அதிகமாகி விட்டதுதான் காரணம்.
ஒரு ஜாதகத்திற்கு யோக கிரகங்கள் உச்சமானால் ஒரு பலன் துர்ஸ்தான அதிபதிகளான 6,8,12க்கு
உரியவர்கள் உச்சமானால் ஒரு பலன், அவர்களே நீச்சமானால் ஒரு பலன் இப்படி என் அனுபவத்தில்
பலவற்றை கவனித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். என் ஜாதகத்தில் லக்ன, கேந்திர கோணாதிபர்கள்
3,8லும் 3,8,12க்கு உரிய கிரகங்கள் கோணத்திலும் இருக்கிறன. சனி ஒருவரே 5,6க்கு உரியவராகி இன்னொரு கோணமான 9ல் இருக்கிறார். Matter over என்று write off செய்ய வேண்டியதில்லை. நவாம்சம் காப்பாற்றி விட்டது.////
ஆமாம். ஜாதகத்தில் உள்ள ஏதோ ஒரு அமைப்பு தொடர்ந்து காப்பாற்றும். அதுதான் படைப்பின் அருமை!நன்றி நண்பரே!
/////மதி said...
ReplyDeleteகேள்வியும் பதிலும் ஒரே காமடி போங்க..../////
வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
////kmr.krishnan said...
ReplyDeleteயார் கடவுள்
----------------
மனிதனை படைத்தவன் நீதான் என்றால்
உன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்
கடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை
சுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்
கடவுளை படைத்த மனிதனை பார்த்து
கடவுள் என்பது யாரென கேட்டேன்
கடவுளை படைத்தது நானே அதனால்
கடவுள் என்பதும் நானே என்றான்
ஆணவ நெஞ்சில் கடவுளை தேடி
அழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி
கடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ?
உடனே வந்து சாட்சி சொல்லாரோ?
--------- - ஐயப்பன்
http"//iyyappan.blogspot.com////
நன்றி! நன்றாக உள்ளது. கொண்டு வந்து பதிந்தமைக்கு நன்றி!
/////சிங்கைசூரி said...
ReplyDeleteவாத்தியாருக்கும் ,சகமாணவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
கேள்வி பதில் பதிவு சிறப்பு.... இந்த ஒவரில் எல்லாம் டெட் பாலா வருது .....சிலபேர் பொவுன்சர் போட போரன்னு சொன்னாங்க ,,,,,அய்யா காத்துகொண்டு இருக்கின்றார் சீக்கிரம் வந்து வீசுங்கள் .... அய்யா மற்றும் சகநண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!
வணக்கம் அய்யா.
ReplyDeleteதங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அட்டை கிடைக்கப்பெற்றேன்.
தங்களுக்கும் சக மாணாக்கர்களுக்கும்
என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இன்றைய கேள்வி பதில் பகுதியில்
உங்கள் "கற்பனை உலகம்" சூப்பர்.
நன்றி அய்யா.
/////Thanuja said...
ReplyDeleteVanakam sir,
As the new year blossoms, Wishing you sir and fellow classmates a very healthy, happy & prosperous new year!!!
Regards,
Thanuja////////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!
RVC said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா. உங்களுக்கும், வகுப்பறை மாணாக்கர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
///KARTHIK said...
ReplyDeleteNANDRAGA THELIVAGA BHADHIL EZHUDHUGIREERGAL AYYA.
NAN PUDHIYA MANAVAN.
PADANGALAI PADITHU KONDU IRUKIRAEN AYYA.
SANDHAENGAM VANDHAL UNGALAI ANUGUVAEN.
IDHAYAM KANINDHA PUTHTHANDU NAL VAZHTHUKKAL./////
நல்லது.நன்றி!
/////thirunarayanan said...
ReplyDeleteவணக்கம் அய்யா. தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் அட்டை கிடைக்கப்பெற்றேன்.
தங்களுக்கும் சக மாணாக்கர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இன்றைய கேள்வி பதில் பகுதியில் உங்கள் "கற்பனை உலகம்" சூப்பர்.
நன்றி அய்யா./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி திருநாராயணன்!
ஐயா வணக்கம்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சக மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டவன் அனைவருக்கும் எல்லா வளங்களையும் அளிப்பாராக.
நன்றி
மீண்டும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி குருவே.
ReplyDeleteதங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
to the teacher and the fellow Students, wish u all a happy new year.
ReplyDeleteசார் மிக அருமையான இருக்கின்றது இந்த கேள்வி பதில் பகுதி. நேற்று தாங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி ஐயா ஆனால் அதற்கு பலன் ஏதும் இல்லை என்னோடிய ப்ளாக் நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறேன். நடப்பவை நன்மைக்கே என்று மனதை அறுதல்படுத்தி கொண்டேன் ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும் என்னிடம் தாங்கள் அனுப்பிய பழையபாடங்கள் ஏதும் இல்லை தாங்கள் தயவு செய்து அதை என்னுடிய புதிய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கும் என் சக மாணவ நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாத்தியாருக்கும், சக மாணவர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!
ReplyDelete///T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சக மாணவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டவன் அனைவருக்கும் எல்லா வளங்களையும் அளிப்பாராக.
நன்றி
மீண்டும் வாழ்த்துக்கள்////
நல்லது.நன்றி நண்பரே!வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
////Sreenivasan said...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி குருவே.
தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
/////Ram said...
ReplyDeleteto the teacher and the fellow Students, wish u all a happy new year.////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
///devi said...
ReplyDeleteசார் மிக அருமையான இருக்கின்றது இந்த கேள்வி பதில் பகுதி. நேற்று தாங்கள் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி ஐயா ஆனால் அதற்கு பலன் ஏதும் இல்லை என்னோடிய ப்ளாக் நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறேன். நடப்பவை நன்மைக்கே என்று மனதை அறுதல்படுத்தி கொண்டேன் ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும் என்னிடம் தாங்கள் அனுப்பிய பழையபாடங்கள் ஏதும் இல்லை தாங்கள் தயவு செய்து அதை என்னுடிய புதிய மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கும் என் சக மாணவ நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்./////
எல்லாம் நன்மைக்கே! உங்கள் புதிய மின்னஞ்சல் முகவரியைத் தெரியப்படுத்துங்கள். பழைய பாடங்களை அனுப்பிவைக்கிறேன்!
////aadhirai said...
ReplyDeleteவாத்தியாருக்கும், சக மாணவர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!/////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி!
HAI SIR,
ReplyDeleteHAPPY NEW YEAR WISHES FOR YOU AND ALL.
May this new year,
All the shadows of darkness be merging into the brightness...
All your sorrows be turn into happiness........
All your health, wealth & peace of mind are on high....
happy new year
ReplyDelete2010
vaalga valamudan
அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு விடுமுறையும் வார இறுதி விடுமுறயும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது. ஆகா நினைக்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
ReplyDelete..
ReplyDeleteயார் கடவுள்
----------------
மனிதனை படைத்தவன் நீதான் என்றால்
உன்னை படைத்தவன் யாரெனெ கேட்டேன்
கடவுள் என்பது சுயமற்ற வடிவம், என்னை
சுயம் தந்து படைத்தவன் மனிதன் என்றான்
கடவுளை படைத்த மனிதனை பார்த்து
கடவுள் என்பது யாரென கேட்டேன்
கடவுளை படைத்தது நானே அதனால்
கடவுள் என்பதும் நானே என்றான்
ஆணவ நெஞ்சில் கடவுளை தேடி
அழிந்து மறைந்தோர் ஆயிரம் கோடி
கடவுளை உணர்ந்து அறிந்தவர் யாரோ?
உடனே வந்து சாட்சி சொல்லாரோ? ///
Dear Krishnanan Brother,
Thanks for ur song, it is very nice i got very happy for that.
Wish u happy and prosperous new year to u Brother. You also gave me a lot of knowledge by the class room site.
sundari
Dear Aloysiam Brother,
ReplyDeleteThanks for ur so much song comments. I like it very much. IF i go to murugan temple i will remember ur song before god. i will laugh so much. Always u r giving lot of good comments. I remember ur comment always. HAPPY NEW YEARS TO u AND UR FAMILY MEMBERS ESPECIALLY UR CLEVER DAUGHTER.
sundari
இந்த பாடம் சுவாரஸ்யமாகவே இல்லை..ஒஹ்..சாரி....இந்த டைட்டில் சுவாரஸ்யமாக இல்லை.
ReplyDeleteமோதல் இல்லாமல் காதல் என்றால்..ச்சே..ச்சே.....
337 டானிக்கைப்போல 999 டானிக் என்று ஒன்று வேண்டவே வேண்டாம்...
ஆசானே!!!
ReplyDeleteமாலை நேர வணக்கம்.
இங்கு! ஐயா திருவாளர் ஆலாசியம் அவர்கள் கூறிய வரிகளில் என்னை கண்ணீர் கடலில் அல்ல! அல்லவே அல்ல!
வாத்தியாரின் வகுப்பறைக்கு
வந்த நாள் முதல், இன்று தான் கண்ணீர் விட்டு ,
(காலம் சென்ற என்தந்தையை நினைத்து) கதறி அழுத நாள் ஐயா!!!
"வசதியான மகனும் அடுத்தவரிடத்தில்
வேலை செய்யும் போதே, தன்
தந்தையின் நிலை புரியும்..............."!
என்ற கோடானு கோடி
நவரத்தினகளையும் விட, கோடானு கோடி மதிப்புள்ள நவரத்தின வரிகள் ஐயா !!!
மகனே ( ஒரே மகன் )
என் செல்லமே !!!!!
என்குல விளக்கே
தரணி ஆளபிறந்தவனே
நான் இறந்தால்
எனக்கு கொல்லி (கர்மம் ) கூட வைக்க வேண்டாம் ,
அந்தசடன்கிற்கு வர கூட வேண்டாம் ,
எங்கும் சென்று, எப்படியும் வாழ்ந்துகொள்!
எனக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் உன்னை படிக்கவைக்கின்றேன் என்று
" குரங்கு ஆட்டி முன்னாடி ஆடும், குரங்கினை போல் ஆடி'!
என்னை, இன்று பாரினில், குளிர்சாதனம் செய்த மாபெரும் கட்டிட அரையினில் , ஆறு இலக்கம்
சம்பளத்தில், அதுவும் அரசு வேளையில் அமரும் அளவில் (கல்வி ) அறிவை தந்த என்தந்தையை !!!
நினைத்து ஐயா !!!!!!!!!!!!!
பொன்வரிகளை தந்த
அன்னாரின் (ஐயா திருவாளர் ஆலாசியம் அவர்கள்) பாதம் தொட்டு வணக்குகின்றேன் ஐயா!!!
இதனை நான் வெக்கத்தை விட்டு சொல்ல காரணம் மற்றவர்களின் கவனதிக்கு வரும் பொருட்டு தான் ஐயா!!!
கண்கள் கெட்ட பின்னர் " சூரிய நமஸ்காரம்" செய்து என்ன பலன் என்பதனால் தான் ஐயா!!!
////rama said...
ReplyDeleteHAI SIR,
HAPPY NEW YEAR WISHES FOR YOU AND ALL.
May this new year,
All the shadows of darkness be merging into the brightness...
All your sorrows be turn into happiness........
All your health, wealth & peace of mind are on high....////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்!
/////sundaresan p said...
ReplyDeletehappy new year 2010
vaalga valamudan////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
////ananth said...
ReplyDeleteஅனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டு விடுமுறையும் வார இறுதி விடுமுறயும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து வருகிறது. ஆகா நினைக்கவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.////
ஒகோ, உங்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையா? எங்களுக்கு இல்லை! பரவாயில்லை, நீங்கள் ஆனந்தமாக இருந்தால், நாங்களும் இருந்ததைப் போன்றதுதான் அது. சந்தோஷமாக இருங்கள் ஆனந்த்!
////minorwall said...
ReplyDeleteஇந்த பாடம் சுவாரஸ்யமாகவே இல்லை..ஒ..சாரி....இந்த டைட்டில் சுவாரஸ்யமாக இல்லை.
மோதல் இல்லாமல் காதல் என்றால்..ச்சே..ச்சே.....
337 டானிக்கைப்போல 999 டானிக் என்று ஒன்று வேண்டவே வேண்டாம்.../////
மைனர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அது வேண்டவே வேண்டாம்!
“யாரப்பா அங்கே, எழுதிய அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிடு!”
Krish said///
ReplyDeleteசுந்தரி,
மன தளர்ச்சி அடையாதீர்கள். நடப்பவை எல்லாம் நமது நன்மைக்கே. Dr.Wayne Dyer audio lectures are available in You Tube.www.avaxhome.ws என்ற இணைய தளத்தில் அவரது audio books உள்ளன.அதை கேளுங்கள்.மனத்தெளிவு உண்டாகும்.///
கிரிஷ் சகோதருக்கு,
தாஙகளின் அன்பார்ந்த பின்னூட்டத்திற்கும் தாங்கள் என் மீது செலுத்திய அன்பிற்கும் ரொமப நன்றி. WISH U HAPPY NEW YEAR TO U AND UR FAMILY MEMBERS DEAR BROTHER.
EVERYTHING SUCCESS,GOODLUCK GOOD HEALTH TO U.
சுந்தரி.
என் குருநாதருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் என் சக மாணவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
ReplyDeleteமா. திருவேல் முருகன்
புது தில்லி
யார் கடவுள் ...
ReplyDeleteஅருமை நண்பர் கிருஷ்ணன் கூறியதற்கு ஒரு சிறிய விளக்கம் .
படி என்றால் படித்தல் , நட என்றால் நடத்தல் அதுபோல்
கட என்றால் கடந்து செல் , வுள் என்றால் உள்ளம்
உன் உள்ளதை கடந்து சென்றால் உன்னை நீ அறியலாம்
எங்கும் நிறைந்து இருப்பவன் இறைவன் , அவன் நம் உள்ளத்திலும் இருப்பவன் .
நாம் எங்கும் சென்று தேட வேடியதில்லை அந்த இறைவனை .
மனதிலிருந்து தான் சிந்தனைகள் வருகின்றன ஆகவே
மனமும் சிந்தனையும் ஓன்று சேர்வதுதான் சிறந்தது .
இதைத்தான் சித்தர்களும் ஞானிகளும் வழிமுறையாக கூறிவருகின்றனர்
எல்லாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
சந்திரசேகரன் சூரியநாராயணன்
வலை பதிவுலக தோணியாக என்றும்
ReplyDeleteவற்றாத ஊற்று ஆசானுக்கும்,மற்றும்
வகைவகையாய் சந்தேகங்களையும்
வடித்து பதில் பெறும் மாணவருக்கும்
வளைகுடாவிலிருந்து தமாம்பாலா
வழங்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கேள்வி பதில் பகுதிகள் அமர்க்களம்
தொடரட்டும் இந்த நறுமலர்ச்சரம்
என்றும் அன்புடன்
மாணவன் த.பா
/////M. Thiruvel Murugan said...
ReplyDeleteஎன் குருநாதருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் என் சக மாணவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
மா. திருவேல் முருகன்
புது தில்லி/////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
/////csekar2930 said...
ReplyDeleteயார் கடவுள் ...
அருமை நண்பர் கிருஷ்ணன் கூறியதற்கு ஒரு சிறிய விளக்கம் .
படி என்றால் படித்தல் , நட என்றால் நடத்தல் அதுபோல்
கட என்றால் கடந்து செல் , வுள் என்றால் உள்ளம்
உன் உள்ளதை கடந்து சென்றால் உன்னை நீ அறியலாம்
எங்கும் நிறைந்து இருப்பவன் இறைவன் , அவன் நம் உள்ளத்திலும் இருப்பவன் .
நாம் எங்கும் சென்று தேட வேடியதில்லை அந்த இறைவனை .
மனதிலிருந்து தான் சிந்தனைகள் வருகின்றன ஆகவே
மனமும் சிந்தனையும் ஓன்று சேர்வதுதான் சிறந்தது .
இதைத்தான் சித்தர்களும் ஞானிகளும் வழிமுறையாக கூறிவருகின்றனர்
எல்லாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
சந்திரசேகரன் சூரியநாராயணன்////
கடவுள் என்பதற்கு இன்னும் ஒரு விளக்கம் உள்ளது. எல்லா நிலைகளையும் கடந்தவர் அவர்!
நன்றி!
/////தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteவலை பதிவுலக தோணியாக என்றும்
வற்றாத ஊற்று ஆசானுக்கும்,மற்றும்
வகைவகையாய் சந்தேகங்களையும்
வடித்து பதில் பெறும் மாணவருக்கும்
வளைகுடாவிலிருந்து தமாம்பாலா
வழங்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
கேள்வி பதில் பகுதிகள் அமர்க்களம்
தொடரட்டும் இந்த நறுமலர்ச்சரம்
என்றும் அன்புடன்
மாணவன் த.பா////
உங்களின் பாராட்டிற்கு நன்றி பாலா!