30.12.09

Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?

++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானா?

Doubts: கேள்வி பதில் பகுதி ஆறு

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஆறு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.23
சுனிதா நர்த்தகி

அன்புள்ள ஐயா,
உங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........

கேள்வி 1 : மாந்தியின் சொந்த வீடு எது? மாந்தி சொந்த வீட்டில் இருந்தால் கெடுபலனா அல்லது நற்பலனா?

மாந்திக்கு சொந்த வீடு கிடையாது! மாந்தி தாதாக்களைப் போல இருக்கும் இடத்தை சொந்தமாக்கிக் கொள்வார் (அதாவது ராகு & கேதுவைப்போல)

கேள்வி 2 : அஸ்தமனம் ஆகி இருக்கும் கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் கிடைக்கும்?

பரிவர்த்தனை ஆன நிலையில்தானே அஸ்தமனமும் ஆகியிருக்க முடியும்? அஸ்தமனம் என்பது வீட்டிலேயே சிறைப்படுவதற்குச் (House arrest) சமம். சிறைப்பட்டுக் கிடப்பவர், நமக்கு சிறப்பாக என்ன செய்துவிடுவார் சொல்லுங்கள்? ஆனாலும் அவருடைய ஸ்டேட்டஸை வைத்து (உதாரணம் குரு) குறைவான காரகத்துவப் பலன்கள் குறையில்லாமல் கிடைக்கும்

கேள்வி 3 : லக்னத்திலும், அம்சத்திலும் லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லதா?

ராசிச் சக்கரத்தில் ( In Rasi Chart) லக்னாதிபதி லக்னத்தை பார்த்தால் நல்லது. நவாம்சச் சக்கரத்திலும் (In Navamsa Chart) அதே அமைப்பு இருந்தால் மிகவும் நல்லது. Double century அடிக்கலாம்!

கேள்வி 4 : ஆறாம் வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தால் நோய்கள் உண்டாக வாய்ப்பு அதிகமா?

ஆறாம் வீடு, நோய், கடன், எதிரி என்று மூன்று அமைப்புக்களுக்கு உரியது. அதைப் பற்றி விரிவாகப் பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதிய பாடம் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது: படித்துப் பாருங்கள்

பதில் அளிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பேன் ..............
இப்படிக்கு
உங்கள் மாணவி

அளித்துவிட்டேன் சகோதரி!
-------------------------------------------
email No.24
கோபி கார்த்திகேயன், எஸ்ஸார்

Please clarify my doubt:

Sun & Venus sitting in Thulam house which is own house for Venus. Venus is very near to Sun (Less than 10°). Sun gets Neecham in Thulam.Please clarify whether Venus will loose its power, even The Sun is in neecham condition?

சூரியன் நீசமானதால் அஸ்தமனம் உண்டா அல்லது இல்லையா? என்ற சந்தேகத்திற்கெல்லாம் இடமில்லை. சூரியன் துலாமில் நீசம் பெறுவான். ஆனால் அவனுக்குள்ள எரிக்கும் தன்மை இல்லாமல் போகுமா என்ன? சுக்கிரனை யார் 10 டிகிரிக்குள் போகச் சொன்னது? போனதால் அஸ்தமன விதிகளுக்கு உட்பட்டாக வேண்டியதுதான்! அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் வலிமை இழந்து விடும். சுக்கிரன் அஸ்தமனம் ஆனாதால் கவலைப்பட்டுப் படுத்து விடாமல் இருக்க, ஜாதகனுக்கு 337 டானிக்கைப் பரிந்துரையுங்கள்
---------------------------------------------
email No.25
லெட்சுமணன் தியாகராஜன்

ஐயா வணக்கம்,

எனக்குச் சில சந்தேகங்கள்

1) ஒரு கிரகம் நீசமடைந்துவிட்டால் பலன் எதுவுமில்லை (கோமா நிலை) என்று சொன்னீர்கள். அதே நீசமடைந்த கிரகத்திற்கு சுய வர்க்கத்தில் 5 அல்லது மேற்பட்ட பரல்கள் இருந்தால் பலன் எப்படி?

சுய பரல்கள் அதிகமாக இருப்பதால் கோமாவில் இருந்து எழுந்து நடை உடையோடு இருப்பார். நீசமடைந்ததால் மெதுவாகவே தன் வேலைகளைச் செய்வார்!.பலன்கள் கொஞ்சம் குறையவே செய்யும்

2) சனி மூன்றாம் இடத்தில் இருந்து மூன்றாம் பார்வையால் ஐந்தாம் இடத்தைப் பார்த்தால் ஞாபக மறதி அதிகம் இருக்கும் என்று ஒரு நூலில் படித்தேன். அது உண்மையா?

புத்தி, மற்றும் நினைவாற்றலுக்கு உரிய கிரகம் புதன். ஜாதகத்தில் அவர் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது தீய கிரகங்களின், சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் அல்லது அவரே 6, 8 & 12ல் போய் உட்கார்ந்து சீட்டு ஆடிக்கொண்டிருந்தால், நினைவாற்றல் குறையும். அதாவது ஞாபக மறதி இருக்கும்.

இப்படிக்கு
தி. லெட்சுமணன்
----------------------------------------------------------
email No.26
ஆதிராஜ் (ஆஷ்ட்ரோஆதி)

அய்யா வணக்கம்,

சந்தேகங்களை கேட்க வாய்ப்பு அளித்தமைக்கு முதற்கண் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..

என் சந்தேகம் உள்ளூர் நேரம் கணிப்பது தொடர்பானது ......சென்னை இல் இருந்து நான் இருக்கும் ஊர்(ஆரணி ,திருவண்ணாமலை மாவட்டம்) 130 கி.மீ இருக்கும் சென்னை நேரத்துக்கும் எங்கள் ஊர் நேரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது ,,,,,,நீங்கள் பழைய பாடத்திள் உள்ளூர் நேரத்தை பற்றி கவலை பட வேண்டாம் அதை ஜாதகம் கணிப்பவர் பார்த்து கொள்வார் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள் .....அய்யா நான் கேட்பது என் ஊர் நேரத்தை அல்ல ....நீங்கள் பெருநகரங்களுக்கு இடைப்ட்ட நேரத்தை கணிப்பதை ஏற்கனவே தெளிவாக விளக்கி உள்ளீர்கள் என் சந்தேகம் 100 கீ.மீ அல்லது 150 கி.மி உட்பட்ட இடங்களில் நேரம் வித்தியாசம் இருக்குமா?அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்படி கண்டுபிடிப்பது ..?
நன்றி வணக்கம்...

எந்த இடமாக இருந்தாலும், 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள சிறு நகரத்தின் இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டிலுள்ள எல்லாச் சிறு நகரங்களின் அட்ச ரேகையும், தீர்க்க ரேகையும் இணையத்தில் கிடைக்கும். அங்கே இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் அதற்கான சுட்டி (link)

சென்னை: 80.17 கிழக்கு
ஆரணி 79.19 கிழக்கு

திருவண்ணாமலை 79.07 கிழக்கு


ஒரு டிகிரி குறைந்தால் 4 நிமிடங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரணிக்கு 4 நிமிடங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். IST காலை 6:00 மணி என்றால் ஆரணியின் நேரம் 5:56 ஒரு டிகிரி அதிகமானால் 4 நிமிடங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கல்கத்தா (88.22 பாகைகள்) IST காலை 6:00 மணி என்றால் கல்கத்தாவின் நேரம் 6:34

கணினி மென்பொருட்களில் நீங்கள் ஊர்ப் பெயரை அல்லது அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை மட்டும் கொடுத்துவிட்டு ஐ.எஸ்.டி நேரத்தை மட்டும் கொடுத்தால் போதும். உள்ளூர் நேரத்தை அது பார்த்துக் கொள்ளும்

------------------------------------------------------------
email No.27
அருள் பிரகாஷ் முத்து

ஆசிரியர் அவர்களுக்கு,

தசா, புத்தி மாற்றங்களை மாற்றங்கள் மூலம் தெரிந்து கொள்வது போல அந்தரங்களின் மாற்றங்களை அன்றாட வாழ்கையில் நாம் உணர முடியுமா ? அவற்றின் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் ?
மு அருள்

ஒருவனின் திருமணத்தை சுக்கிரன் அல்லது ஏழாம் இடத்து அதிபதி நடத்திவைப்பான் என்பது பொது விதி. ஒருவனுக்கு ஏழாம் அதிபனும் சுக்கிரன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆவனுடைய நட்சத்திரம் கார்த்திகை என்றும் தற்சமயம் வயது 22 என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ராகு திசையும் அவனுக்குத் துவங்கி விட்டது. அவனுடைய திருமணம் எப்போது நடக்கும்? ராகு திசை முடிந்த பிறகா? அதற்கு 18 ஆண்டுகள் ஆகுமே? அது முடியும்போது ஜாதகன் அரைக் கிழவன் ஆகிவிடுவானே? அதற்குக் கை கொடுக்கத்தான் மகா திசையில் உள்ள புத்திகள் உள்ளன. சரி அப்படியும் பார்த்தால், ராகு திசையில் சுக்கிர புத்தி வருவதற்கு சுமார் 12 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டுமே? அந்த நிலையில் கை கொடுக்க இருப்பதுதான் கிரகங்களின் அந்தரங்கள். ஒவ்வொரு புத்தியிலும், வேறு கிரகத்தின் அந்தரங்கள் வரும். ராகு திசையில், ராகு புத்தி (சுய புத்தி), குரு புத்தி, சனி புத்தி, புதன் புத்தி , கேது புத்தி என்று வரிசையாக ஒவ்வொரு புத்தியிலும் சுக்கிரனின் அந்தரம் ஒன்று முதல் ஐந்து மாத காலம் வரை வந்து போகும்! ஆகவே 23 வயது முதல் 34 வயதிற்குள் ஜாதகனின் மற்ற அமைப்பை வைத்து இடைப்பட்ட காலத்தில் திருமணத்தை சுக்கிரன் முடித்துவிடுவான். இடைப்பட்ட காலம் என்பது கோள்சாரத்தையும் உள்ளடக்கியது. அதை நினைவில் கொள்க!

புத்திகளில் ஒரு கிரகத்திற்கு என்ன சக்தி (Power) உள்ளதோ அதே சக்தி (Power) அந்தரங்களிலும் இருக்கும்

-----------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

41 comments:

  1. msny of the questions are in my mind thanks a lot for this question answer session

    priya

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா..

    வாழ்க வழமுடன்...

    ReplyDelete
  3. நல்ல விளக்கங்கள் அய்யா...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. ////Priya said...
    msny of the questions are in my mind. thanks a lot for this question answer session
    priya/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  5. //////Success said...
    உள்ளேன் ஐயா..
    வாழ்க வளமுடன்.../////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  6. //////வேலன். said...
    நல்ல விளக்கங்கள் அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  7. In the q.no.,3 Lagna and Amsam enbathai raasi chart and navamsa chart enru maarrinaal nallathu.
    Antharam answer super!THAMIZMANAM படிக்கச் செல்லும்போதெல்லம் அடர்ந்த காட்டுக்கள் சென்று
    திக்குதிசை தெரியாமல் திகைத்து நிற்பேன்.ப‌லருடைய அறிவின் வீச்சைப் பார்த்து அச‌ந்து போவேன்.இன்று காலை 1.40க்கே விழிப்புக் கொடுத்துவிட்டது
    தமிழ் மணத்திர்க்குள் நுழைந்த போது ஆனந்தரஙம் பிள்ளையின் வாழ்க்கைகுறிப்பைப் ப‌டிக்கவாய்த்தது.http://bharani.dli.ernet.in/thf/text/etext/bk-ocr/ocr.html புதுச்சேரி திவானாக சிற‌ப்போடு வாழ்ந்தவர்.பல் மொழிப் புலவர்.அவருடைய நாட்குறிப்பே ஆங்கிலேய,பிரெஞ்ச் நாட்டினர் தென்னிந்தியாவில் ஆட்சியதிகாரம்
    பெற செய்த சூழ்ச்சிகள் ஆலோசனைகள் பற்றிய‌ வரலாற்று ஆவணமாக உள்ளன.பிள்ளை அவர்கள் சோதிட‌மும் நன்கு அறிந்தவர்.அவருடைய ஒரு சோதிடக் குறிப்பு:
    "சித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதம் 9 தேதி (22-10-1739) வியாழக்கிழமை ;
    இன்றிரவு 15. அல்லது 16 நாழிகைக்குக் கனகராய முதலியாரின் குமாரர் வெலவேந்திர முதலியார் இறந்துவிட்டார். அவர் பிறந்தது விளம்பி வருடம் ஆவணி மாதம் 31 தேதி (12-9-1718) திங்கட்கிழமை இரவு, 23 நாழிகை ; கடக லக்கினம்.
    கனகராய முதலியார் வீட்டு நிகழ்ச்சிகள்: ஆகையினால், அவர் இந்த உலகத்தில் வாழ வேண்டியது 21 வருடம் 1 மாதம் 1 நாள். பிறந்த காலம் கேது தசை. அப்போது அவர் தகப்பனார் தம் வேலையை இழந்தார். அதனால், அவமானமும் ஏற்பட்டது. அவர் தாம் பிறந்த ஊரை விட்டுப் போகவும் கட்டாயப்படுத்தப்பட்டார்; வேறு பல துன்பங்களையும் அனுபவித்தார். கேது தசைக்குப் பின் சுக்கிர தசை வந்தபோது அவருக்கு எல்லாக் கௌரவமும் சுகமும் மேலுக்குமேல் ஏற்பட்டன. ஒரு ஜாதகனுக்குத் தன் இளமைப் பருவத்தில் ஏற்படவேண்டிய சுகதுக்கங்களெல்லாம் அவன் தந்தையைத்தான் சேருமென்பது சோதிட நூலின் கருத்து. பிள்ளையின் ஜாதகப்படி சுக்கிர தசையில் ஏற்படவேண்டிய நன்மைகளெல்லாம் மிகப் பெரியனவாயிருந்தன. பனையூர் நாராயண ஜோசியர், பிள்ளையின் ஜாதகத்தைக் குறிக்கும்போதே சுக்கிர தசையில் கனகராய முதலியார் மீண்டும் செல்வாக்குப் பெறுவாரென்றும். அவர் பகைவர் எல்லாரும் ஒழிவார் என்றும். அவர் நல்ல அதிகாரத்திலிருப்பாரென்றும் கூறியிருக்கிறார்; சுக்கிரதசை முடிந்து சூரியதசை வரும்போது கனகராய முதலியார் நோய்வாய்ப்படுவாரென்றும், எல்லா நலன்களையும் இழந்து விடுவாரென்றும் இயம்பினார். அதுபோலவே,
    சூரிய தசை வந்த போது ஜாதகரே இறந்துவிட்டார். அவர் பிரேதம் வெள்ளிக்கிழமை மூன்றாம் சாமத்தில் கல்லறையில் வைக்கப்பட்டது. கல்லறையில் சரிகை அங்கியும், முத்துக் குண்டலமும், கைவிரல் மோதிரமும் சவத்தினுடன் வைக்கப்பட்டன. சவத்தை அடக்கஞ் செய்து, உறவினர் வீட்டுக்கு வந்தவுடன் கனகராய முதலியாரின் மனைவியார் உடுத்திருந்த சேலை தீப்பற்றிக்கொண்டது. இரண்டு நாழிகைக்குப் பின் அவர் வீடுகளிலொன்று, அதாவது அவர் குடியிருக்கும் வீட்டுக்கு மேற்கிலுள்ள வீடு தீப்பிடித்துக்கொண்டது. நூறு வராகன்கள் பெறுமான பொருள்கள் சேதமாயின. கனகராய முதலியாரின் எதிர்காலத் தீமைக்கு இவையெல்லாம் அறிகுறியென்று மக்கள் பேசலானார்கள். இறந்து போனவர் கனகராய முதலியாருக்கு ஒரே பிள்ளை. ஆசிரியரிடத்தில் நன்மாணாக்கன் எப்படி நடந்து கொள்வானோ, அப்படியே அவர் தம் தந்தையாரிடத்தில் பயபக்தியோடு நடந்து வந்தார். அதுவுமன்றித் தந்தையாருக்குக் கைகொடுக்கக் கூடிய காலத்தில் அவர் இறந்துபட்டதனால் எல்லாரும் கனகராய முதலியாரிடம் அதிக அனுதாபம் காட்டினர்."

    த‌மிழ் ம‌ண‌த்தில் ஓட்டுப் போட‌ வேண்டிய‌ ந‌டைமுறையை அறிய‌த்த‌ர‌ ஏற்க‌ன‌வே ஓட்டுப் போட்டுக்கொண்டு இருப்ப‌வ‌ர்க‌ளை வேண்டுகிறேன்.பரிச்ச‌ய‌ம் உள்ள‌ என‌க்கே அது தெரிய‌வில்லை

    ReplyDelete
  8. 0ne more interesting from Thamizh Manam:
    பதிவு எழுதிப்பார்!
    திரட்டிகளில் உன்பெயர்
    தெளிவாகத் தெரியும்.
    உன்தமிழ் அழகாகும்.
    உனக்கும் கோபம்வரும்.
    இணையம் தெய்வமாகும்
    கம்யூட்டர் கோவிலாகும்.
    பதிவு எழுதிப்பார்!
    அதிகம் சிந்திப்பாய்
    பார்ப்பதெல்லாம் குறிப்பெடுப்பாய்
    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப் போடுவாய்
    பல்துலக்க முன்னேவந்து – உன்
    பதிவுகளில் பின்னூட்டம் தேடுவாய்
    பதிவு எழுதிப்பார்!.
    பதிவெழுத வந்துவிட்டால்
    மணித்துளிகள் நிமிசமென்பாய்
    பின்னூட்டம் வந்திடாத
    நிமிசமும் மணிகளென்பாய்
    ஒற்றை நிமிடத்தினுள்
    ஒன்பதுமுறை ஓட்டுப்பார்ப்பாய்
    பதிவு எழுதிப்பார்!
    மொக்கைப் பதிவுகளுக்கு
    முக்கியத்துவம் தருவாய்
    சீரியஸ் பதிவென்றால் – கொஞ்சம்
    சிந்தித்தே பதிலளிப்பாய்
    கும்மி அடிப்பதென்றால்
    குதூகலமாய் கிளம்பிடுவாய்
    கும்மி உனக்கென்றால் – கொஞ்சம்
    ஒதுங்கியே பதுங்கிடுவாய்
    பதிவு எழுதிப்பார்!
    நல்லாய் இருக்குதென்ற
    டெம்ளெட் பின்னூடத்திற்கும்
    நன்றிசொல்வாய்
    அர்த்தமற்ற அனானிக்கும்
    ஆறுதலாய்ப் பதிலுரைப்பாய்
    அனானியாய் நீயேவந்து
    சமயத்தில் பின்னிடுவாய்
    பதிவு எழுதிப்பார்!.
    அனானிகள் வந்து
    தாக்கினாலும்
    பாலோவர்ஸ் எண்ணிக்கை
    படிப்படியாய்க் குறைந்தாலும்
    ஒரே பிளாக்கை இருவர்
    சிக்கனமாய்ப் பகிர்ந்தாலும்
    நீ பின்னூட்டமிடும் அவனோ, அவளோ
    உனக்குப் பின்னூட்டமிட மறுத்தாலும்
    பதிவு எழுதிப்பார்.
    சொர்க்கம், நரகம்
    இரண்டில் ஒன்று
    இங்கேயே நிச்சயம்.
    பதிவு எழுதிப்பார்!.
    http://subankan.blogspot.com/2009/09/blog-post_28.html

    ReplyDelete
  9. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    பதில்களுக்கு நன்றிகள் குருவே!

    ReplyDelete
  10. Dear sir,
    For second marriage, which lagna should be considered.?
    7th place from lagna in navamsa, or 8th place from lagna in navamsa..?
    In navamsa, 7th- mandhi, 8th- sun and guru, 8th-venus, mars, and ketu.
    Will i get married or not...?

    ReplyDelete
  11. //////kmr.krishnan said...
    In the q.no.,3 Lagna and Amsam enbathai raasi chart and navamsa chart enru maarrinaal nallathu./////

    நீங்கள் சொல்வது போல எழுதினால், இன்னும் பலருக்கும் புரியும். மாற்றிவிட்டேன் கிருஷ்ணன் சார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
    Antharam answer super!THAMIZMANAM படிக்கச் செல்லும்போதெல்லம் அடர்ந்த காட்டுக்கள் சென்று
    திக்குதிசை தெரியாமல் திகைத்து நிற்பேன்.ப‌லருடைய அறிவின் வீச்சைப் பார்த்து அச‌ந்து போவேன்.இன்று காலை 1.40க்கே விழிப்புக் கொடுத்துவிட்டது
    தமிழ்மணத்திற்குள் நுழைந்த போது ஆனந்தரஙம் பிள்ளையின் வாழ்க்கைகுறிப்பைப் ப‌டிக்கவாய்த்தது.http://bharani.dli.ernet.in/thf/text/etext/bk-ocr/ocr.html புதுச்சேரி திவானாக சிற‌ப்போடு வாழ்ந்தவர்.பல் மொழிப் புலவர்.அவருடைய நாட்குறிப்பே ஆங்கிலேய,பிரெஞ்ச் நாட்டினர் தென்னிந்தியாவில் ஆட்சியதிகாரம் பெற செய்த சூழ்ச்சிகள் ஆலோசனைகள் பற்றிய‌ வரலாற்று ஆவணமாக உள்ளன.பிள்ளை அவர்கள் சோதிட‌மும் நன்கு அறிந்தவர்.அவருடைய ஒரு சோதிடக் குறிப்பு:
    "சித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதம் 9 தேதி (22-10-1739) வியாழக்கிழமை ..................................

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  12. /////kmr.krishnan said...
    0ne more interesting from Thamizh Manam:
    பதிவு எழுதிப்பார்!
    திரட்டிகளில் உன்பெயர்
    தெளிவாகத் தெரியும்.
    உன்தமிழ் அழகாகும்..................................................
    பதிவு எழுதிப்பார்.
    சொர்க்கம், நரகம்
    இரண்டில் ஒன்று
    இங்கேயே நிச்சயம்.
    பதிவு எழுதிப்பார்!.
    http://subankan.blogspot.com/2009/09/blog-post_28.html////

    பதிவுகளின் தாகத்தைப் பற்றி நானும் இரண்டு பதிவுகள் முன்பாகவே எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள் அதன் சுட்டிகள் கீழே உள்ளன!

    23.8.2006
    http://devakottai.blogspot.com/2006/08/blog-post_23.html
    24.8.2006
    http://devakottai.blogspot.com/2006/08/blog-post_24.html

    ReplyDelete
  13. ////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    பதில்களுக்கு நன்றிகள் குருவே!

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  14. /////jee said...
    Dear sir,
    For second marriage, which lagna should be considered.?
    7th place from lagna in navamsa, or 8th place from lagna in navamsa..?
    In navamsa, 7th- mandhi, 8th- sun and guru, 8th-venus, mars, and ketu.
    Will i get married or not...?/////

    இந்தக் கேள்வியை மின்னஞ்சல் மூலம் கேளுங்கள். மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
    பதிவில் எழுதினால், அனைவருக்கும் பயன்படும்!

    ReplyDelete
  15. ஐயா வணக்கம்

    ஒவ்வொரு நாளும் கேள்வி பதில் பகுதியில் புது புது தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. jagannath hora வில் திசை, திசை புத்தி, அந்தரம், அதற்க்கு மேல் என்று பிரித்து கொடுக்கிறது. இன்று தான் அதன் அர்த்தம் புரிந்தது.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அய்யா வணக்கம்,
    என்னுடய சந்தேகம் தீர்ந்தது ,,,,,ஒரு சிரு திருத்தம் அய்யா ஆஸ்ட்ரோஆதி என்பதை ஆஸ்ட்ரோதிதி என்று போட்டு உள்ளீர்கள் ,,,,,,
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  17. கிருஷ்ணன் சார்,
    தமிழ்மணம் முகப்புக்கு செல்லுங்கள்.tamilmanam.net.அதில் உங்கள் பதிவை பதிந்து கொள்ளுங்கள். 48 மணி நேரத்தில் மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும். வாக்களிக்கும் மின்னஞ்சல் வந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று நினைக்கிறேன். 30.12.2009 கடைசிநாள் என்று குறிப்பு காணப்படுகிறது.

    ReplyDelete
  18. உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பின்னூட்டத்தை பார்த்தால் தமிழ்மணவிருது அவ்வளவு முக்கியமான விருதுபோல் தோன்றவில்லை.

    ReplyDelete
  19. நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்புக்கு வந்தாயிற்று. உள்ளேன் அய்யா :)
    கேள்வி பதில் பகுதி அருமை.

    ReplyDelete
  20. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    ஒவ்வொரு நாளும் கேள்வி பதில் பகுதியில் புது புது தகவல்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறது. jagannath hora வில் திசை, திசை புத்தி, அந்தரம், அதற்கு மேல் என்று பிரித்து கொடுக்கிறது. இன்று தான் அதன் அர்த்தம் புரிந்தது.
    நன்றி, வாழ்த்துக்கள்///

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  21. /////astroadhi said...
    அய்யா வணக்கம்,
    என்னுடய சந்தேகம் தீர்ந்தது ,,,,,ஒரு சிரு திருத்தம் அய்யா ஆஸ்ட்ரோஆதி என்பதை ஆஸ்ட்ரோதிதி என்று போட்டு உள்ளீர்கள் ,,,,,,
    நன்றி வணக்கம்////

    பதிவில் திருத்தம் செய்துவிட்டேன். நன்றி!

    ReplyDelete
  22. /////Ram said...
    Dear Sir,
    thanks for the answers/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  23. /////krish said...
    கிருஷ்ணன் சார்,
    தமிழ்மணம் முகப்புக்கு செல்லுங்கள்.tamilmanam.net.அதில் உங்கள் பதிவை பதிந்து கொள்ளுங்கள். 48 மணி நேரத்தில் மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும். வாக்களிக்கும் மின்னஞ்சல் வந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று நினைக்கிறேன். 30.12.2009 கடைசிநாள் என்று குறிப்பு காணப்படுகிறது./////

    உங்கள் Blogல் உங்களுக்குப் பிடித்த/அல்லது தெரிந்த எதையாவது எழுதி, 3 பதிவுகளை அரங்கேற்றிவிட்டு, பிறகு tamilmanam.net.ற்குச் சென்று உங்கள் Blog ஐப் பாதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்மணம் உறுப்பினர் ஆகிவிடுவீர்கள். இன்றையத் தேதியில் 6,712 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் பதிவு எழுதத் துவங்கியபோது இருந்தவர்கள் மொத்தம் 500 பேர்கள் மட்டுமே! ‘உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க எனும் இடத்தைக் கிளிக்கினால் அதற்கு உரிய பெட்டி கிடைக்கும்

    ReplyDelete
  24. /////krish said...
    உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பின்னூட்டத்தை பார்த்தால் தமிழ்மணவிருது அவ்வளவு முக்கியமான விருதுபோல் தோன்றவில்லை./////

    அது உண்மைதான். வாசகர்களின் அன்பு/ஆதரவைவிட விருதுகள் ஒன்றும் உயர்ந்தவை அல்ல!

    ReplyDelete
  25. /////RVC said...
    நீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்புக்கு வந்தாயிற்று. உள்ளேன் அய்யா :)
    கேள்வி பதில் பகுதி அருமை./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  26. nalla pathilgal aiyya! hello friends pls help me ennoda Gmail id passworda yaro sillar eppadyo kandupichi mathittanga ippo ennala en Gmail ida DD(ddevi08@gmail.com) blog (nandhukavithai.blogspot.com)ethayme open panna mudiyala gmaila complaint panniyum avangalala atha ennaku thirumba thara mudiyala so naan ippo new mail creat panniten ennala ennoda old gmail mail ideya ithumba pera ethavathu vali iruntha sollunga pls

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. வணக்கம் அய்யா.
    உங்கள் வகுப்பறைக்கு நான் தினந்தோறும்
    வந்து செல்கிறேன்.பின்னூட்டம் இடுவதில்லை.
    தமிழ்மணம் வெப் பக்கத்தில் இப்பொழுதுதான்
    பதிவு செய்திருக்கிறேன்.இப்படி பதிவு செய்ய
    வேண்டும் என்று எனக்கு இதுநாள் வரை தெரியாது.
    மன்னிக்கவும்.
    தங்களின் கேள்வி பதில் பதிவு அருமையாக‌
    இருக்கிறது.
    பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கிறது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  29. ஐயா வணக்கம் தங்கள் பதிவு என்க்கு பொழுதிற்கும் அறிவை பெறுவதற்கும் இனித்ததே. தாங்கள் எனக்கு அதிகமான அறிவுச் செல்வத்தை வாரி வர்ரி வழங்கினிர்கள் அதோடு இல்லாமல் உயர் குடியில் பிறந்து நல்ல கல்வி க்ற்ற சகோதர சகோதரிகளையும் என்க்கு அறிமுகம் செய்து வைத்திர்கள்
    தங்களுக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லலோரும் எல்லா வள்மும் பெற்று சந்தோஷமாயிருக்க்னும் எல்லா 337 டானிக்கை குடிக்கனும் இதுதான் என்னுடைய‌
    ஆசை.
    சுந்தரி.

    ReplyDelete
  30. /////devi said...
    nalla pathilgal aiyya! hello friends pls help me ennoda Gmail id passworda yaro sillar eppadyo kandupichi mathittanga ippo ennala en Gmail ida DD(ddevi08@gmail.com) blog (nandhukavithai.blogspot.com)ethayme open panna mudiyala gmaila complaint panniyum avangalala atha ennaku thirumba thara mudiyala so naan ippo new mail creat panniten ennala ennoda old gmail mail ideya ithumba pera ethavathu vali iruntha sollunga pls/////

    ஒரு வழி இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்!
    open gmail page>>I cannot access my account > click> I forgot my password > tick > press okay button
    you will get the new password/link to your mail account which will be sent by google to your alternative email account. Use it. Access your account. Change your password immediately.Save all the settings

    ReplyDelete
  31. ////thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    உங்கள் வகுப்பறைக்கு நான் தினந்தோறும் வந்து செல்கிறேன்.பின்னூட்டம் இடுவதில்லை.
    தமிழ்மணம் வெப் பக்கத்தில் இப்பொழுதுதான் பதிவு செய்திருக்கிறேன்.இப்படி பதிவு செய்ய
    வேண்டும் என்று எனக்கு இதுநாள் வரை தெரியாது. மன்னிக்கவும். தங்களின் கேள்வி பதில் பதிவு அருமையாக‌ இருக்கிறது. பல சந்தேகங்களுக்கு விடை கிடைக்கிறது. நன்றி அய்யா.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  32. ////sundari said...
    ஐயா வணக்கம் தங்கள் பதிவு எனக்கு பொழுதிற்கும் அறிவை பெறுவதற்கும் இனித்ததே. தாங்கள் எனக்கு அதிகமான அறிவுச் செல்வத்தை வாரி வாரி வழங்கினிர்கள் அதோடு இல்லாமல் நல்ல கல்வி கற்ற சகோதர சகோதரிகளையும் என்க்கு அறிமுகம் செய்து வைத்திர்கள்
    தங்களுக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லோரும் எல்லா வளமும் பெற்று சந்தோஷமாயிருக்கணும் எல்லோரும் 337 டானிக்கை குடிக்கணும் இதுதான் என்னுடைய‌ ஆசை.
    சுந்தரி./////

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு, வகுப்பறையின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி!!

    ReplyDelete
  33. வணக்கம்

    நல்ல விளக்கங்கள்.
    அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    CHANDRASEKARAN SURYA (USA)

    ReplyDelete
  34. ஐயா!!!

    என் ஐயா!!!!!!!!!!

    எப்படியையா!!!!!!!!!!!!!!!!
    உள்ளீர்கள்??????????????????????????

    ReplyDelete
  35. Sir, I'm reading your lessons..Thanks for the information/knowledge you're sharing.
    For email no. 25, answers are with humour :)

    Happy New Year!!

    ReplyDelete
  36. ஐயா!!! விற்கு

    நடுசாம வணக்கம் !!!

    தங்களுக்கும் மற்றும் ஒரு ஆயிரம் (கிருஷ்ண ) ஐயா விற்கும் வணக்கம் !!!

    சென்றவை சென்றவையாக இருக்கட்டும் ( 2009)

    வருபவை (2010) நன்மை நிறைந்தைவையாக இருக்கட்டும்
    என, என்னப்பன் பழனி ஆண்டியை வேண்டுகின்றேன்..

    கேள்வி கணைகள் ?

    (அடியேனின் செவிக்கு எட்டியது ஐயா )

    மகாபாரதத்தில் எம்பெருமான் கண்ணன் பஞ்சபாண்டவரிடம் சொல்லுகின்றார் கஷ்டகாலங்களில் அல்லது ( நேரம் காலங்கள் சரி இல்லாத காலங்களில் ) வனவாச காலங்களில் நன்மை பயக்கும் அளவில் தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தேர்ச்சி பெரும் அளவில் தங்களை, தாங்கள் தயார் செய்து கொள்ளுங்கள் என்று அறியுரை கூறினார் என்பார்கள் .
    இதில் எந்த அளவுக்கு நடைமுறைக்கு பொருந்தும் ஐயா.

    நிற்க

    ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு துன்பம் நிறைந்த காலங்கள் என்பது ஜாதகப்படி
    கேட்ட நேரம் அல்லது நேரம் காலங்கள் சரி இல்லாத கலங்கள் அல்லவா!
    அப்படி இருக்க, அவர்களால் எப்படி ஐயா! தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தன்னை தயார் செய்ய முடியும் , கிரகங்கள் அதற்க்கு எப்படி ஐயா துணை நிற்கும் .


    (எ, கா )

    1 . நளன் - தமயந்தி ( தனது சுய புத்தி மாறி நாடு காட்டில்தனது மனையாளை விட்டுவிட்டு சென்றார் நளன்) .

    2 . கோவலன் - கண்ணகி , தாங்கள் அனைவரும் நன்கு கதை அறிவீர்கள்

    ReplyDelete
  37. /////csekar2930 said...
    வணக்கம்
    நல்ல விளக்கங்கள்.
    அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    CHANDRASEKARAN SURYA (USA)////

    நன்றி. உங்களுக்கும் வகுப்பறையின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  38. /////kannan said...
    ஐயா!!!
    என் ஐயா!!!!!!!!!!
    எப்படியையா!!!!!!!!!!!!!!!! உள்ளீர்கள்??????????????????????????//////

    எப்படி இருக்கவேண்டுமோ - அப்படி இருக்கிறேன் முருகா!

    ReplyDelete
  39. ////Subbaraman said...
    Sir, I'm reading your lessons..Thanks for the information/knowledge you're sharing.
    For email no. 25, answers are with humour :)
    Happy New Year!!////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  40. /////kannan said...
    ஐயா!!! விற்கு
    நடுசாம வணக்கம் !!!
    தங்களுக்கும் மற்றும் ஒரு ஆயிரம் (கிருஷ்ண ) ஐயா விற்கும் வணக்கம் !!!
    சென்றவை சென்றவையாக இருக்கட்டும் ( 2009)
    வருபவை (2010) நன்மை நிறைந்தைவையாக இருக்கட்டும்
    என, என்னப்பன் பழனி ஆண்டியை வேண்டுகின்றேன்..
    கேள்வி கணைகள் ?
    (அடியேனின் செவிக்கு எட்டியது ஐயா )
    மகாபாரதத்தில் எம்பெருமான் கண்ணன் பஞ்சபாண்டவரிடம் சொல்லுகின்றார் கஷ்டகாலங்களில் அல்லது ( நேரம் காலங்கள் சரி இல்லாத காலங்களில் ) வனவாச காலங்களில் நன்மை பயக்கும் அளவில் தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தேர்ச்சி பெரும் அளவில் தங்களை, தாங்கள் தயார் செய்து கொள்ளுங்கள் என்று அறியுரை கூறினார் என்பார்கள் .
    இதில் எந்த அளவுக்கு நடைமுறைக்கு பொருந்தும் ஐயா.
    நிற்க
    ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு துன்பம் நிறைந்த காலங்கள் என்பது ஜாதகப்படி
    கேட்ட நேரம் அல்லது நேரம் காலங்கள் சரி இல்லாத காலங்கள் அல்லவா!
    அப்படி இருக்க, அவர்களால் எப்படி ஐயா! தவம், தர்மகாரியம், சகலவித்தைகளில் தன்னை தயார் செய்ய முடியும் , கிரகங்கள் அதற்கு எப்படி ஐயா துணை நிற்கும் .
    (எ, கா )
    1 . நளன் - தமயந்தி ( தனது சுய புத்தி மாறி நாடு காட்டில்தனது மனையாளை விட்டுவிட்டு சென்றார் நளன்)
    2 . கோவலன் - கண்ணகி , தாங்கள் அனைவரும் நன்கு கதை அறிவீர்கள்//////

    கஷ்டங்களை/துன்பங்களைச் சகித்துகொண்டு இருப்பது, பொறுத்துக் கொண்டு இருப்பது, எல்லாம் நம் ஊழ்வினை எனும் நினைப்புடன் இருப்பது ஆகிய செயல்களும் தவம்தான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com