11.12.09
இதுதான்’டா பாசம்!
இதுதான்’டா பாசம்!
அடிபட்டுகிடந்த சிங்கக் குட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்து, அதற்குச் சிகிச்சை அளித்ததுடன், அதைத் தன் வீட்டிலேயே வைத்து வளர்த்து வந்தார் ஒரு பெண்மணி.
அன்பு, பரிவு, பாசம் என்று அனைத்தையும் காட்டி, அதை வளர்த்தார் அந்தச் சகோதரி.
வளர்ந்த சிங்கம் அவர் வீட்டுத் தோட்டத்திலேயே விளையாடும். வெளியே எங்கும் செல்லாது.
ஒரு நிலையில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் செய்யவே, அவரும், கட்டுப்பட்டு, அதைக் கொண்டு போய்க் காப்பகத்தில் விட்டு விட்டார்.
விட்டதோடு நில்லாமல், தினமும் ஒருமுறை, தன் வளர்ப்புச் செல்வத்தை போய்ப் பார்த்துவிட்டு வருவார்.
அவரைக் கண்டவுடன், அந்தச் சிங்கம் தாவிக்குதித்து வந்து, அவரைக் கட்டித் தழுவி, அன்புடன் முத்தமும் கொடுக்கும்.
நேயத்தை மனிதர்கள் மறந்து வரும் சூழலில், மிருகங்களாவது நேயத்துடன் நடந்து கொள்வதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்
நீங்கள் பார்த்து மகிழ, அதை இன்று வீடியோக் கிளிப்பிங்காகப் பதிவிட்டுள்ளேன். பார்த்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
அருமை தலைவரே.
ReplyDeleteஏற்கனவே பார்த்த வீடியோவாக இருப்பினும் உங்கள் விளக்க உரை நன்று.
நன்றி
டெக்ஷங்கர் @ TechShankar
பாசம் காட்ட மத, மொழி, இன வேறுபாடு இல்லை, ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தோன்றாத இது, ஐந்தறிவு கொண்ட ஜீவன்களுக்கு தோன்றியிருப்பது இந்த பதிவிலிருந்து தெரிகிறது. பதிவுக்கு நன்றி!
ReplyDeleteஅன்பு அனைத்திலும் ஸிரந்ததுஂஆமும் அனைவரிடமும் அன்பு செலுத்ுவோமக.
ReplyDeleteகுருவிக்கு வணக்கம்
ReplyDeleteமிகவும் சிறந்த கருத்துவுள்ள, எப்பொழுதும் நினைவில் வைத்துகொள்ளவேன்டியா கருத்தை தெளிவாக கூறிவுள்ளீர்கள்.
எல்லோரும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் குருவே இறைவன் .
வணக்கம்
சந்திரசேகரன் சூர்யாநாராயணன்
நமக்கு இருப்பதை விட ஒரு அறிவு குறைவு என்றாலும் நம்மை விட ஒரு படி மேல் என்று பல சமயங்களில் இந்த மிருகங்கள் நிரூபித்திருக்கின்றன, நிருபிக்கின்றன.
ReplyDeleteநிற்க, அடுத்த பதிவை நேரம் எடுத்து கொண்டு பொறுமையாகவும் நிதானமாகவும் உருவாக்கி வருகிறீகள் என்று நினைக்கிறேன். சுவை குன்றாமல் அதே நேரத்தில் நிறைய தகவல்கள் அல்லது விஷயங்களை அறிய கொடுக்க வேண்டும் என்று அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று எமக்கு புரிகிறது.
காலை வணக்கம் ஆசானே,
ReplyDeleteவிடியோ அருமை, இதை தான் விட்டகுறை தெட்டககுறை என்பார்களோ?
ஒருவருக்கு மிருகங்களுடன் சம்பந்தம்/நட்ப்பு கெள்வதற்குள்ள/ விருப்படுவதற்கு ஜொதிட ரிதியாக எதேனும் காரகர்/காரணம் உள்ளதா சார் ?
ஆஹா! இது கனவா நினைவா,
ReplyDeleteஇப்படியும் உண்டா?
நன்றிகெட்ட மானுடர்களே அதிகம் வாழும்
இந்த உலகத்தில், இப்படியும் ஒரு விலங்கா!
அது மனிதப் பிறவிகளையும் மிஞ்சி விட்டது!
சிங்கத்தின் மீது அம் மாது கொண்டிருப்பது பாசம்,
அது நல்ல மனிதருக்கான அடையாளம்- ஆனால்,
அச் சிங்கம் அம் மாதின் மீது கொண்டுள்ள நன்றி விசுவாசம்...
என்ன வென்று சொல்வது.
மற்ற மிருகம் என்றால் கூட சாத்தியமாகும்.
சிங்கம்!! எப்படி இது நடந்தது?.
இதை தெய்வ அம்சம் என்பதா,
இல்லை பூர்வ ஜென்ம பந்தம் என்பதா.
பெற்ற தாய் தந்தையரையே, நன்றி கேட்ட மாக்கள்
நடு வீதியில் நிறுத்துகின்ற காலத்தில்
இப்படியும் ஒரு விளங்கா! விலங்கு
காலத்தினார் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது. - தெய்வப்புலவர்.
நன்றிகள் குருவே.
Present sir,
ReplyDeleteVery surprising video about LION!!! Yes it is true, animals are grateful more than people becoz மிருகம் பேச முடியாது, சில people பேசியே பிரச்னை பண்ணுவினம்!!!
Thanks
Thanuja
வணக்கம் அய்யா.
ReplyDelete"நேயத்தை மனிதர்கள் மறந்து வரும் சூழலில், மிருகங்களாவது நேயத்துடன் நடந்து கொள்வதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்"
உண்மையான பாசம்
நன்றி அய்யா.
" யூ ட்யூப்" இதுபோல் பல காட்சிகளைக் காட்டுகிறது.இந்த மாது தினமும்
ReplyDeleteதொடர்பில் இருந்துள்ளார்.தொடர்பு விட்டுப்போன தன் பழைய வளர்ப்பாளர்களை அடையாளம் கண்டு கட்டித்தழுவி பூமியில் உருளும் சிங்கங்களைப் பற்றிய தொடர் பதிவு உள்ளது.என் பழைய அலுவலகத்தில்
எங்கள் அலுவலக உதவியாளர் ஒரு அணிலுடன் நட்புப் பூண்டு அதனுடன் மனிதர்களப் போலவே பேசிப்பழுகுவார். என் தாய் மாமன் குரங்குக் குழாத்துடன் பலமணி நேரம் கழிப்பார். கேட்டால் 'மனிதனைப் போல் அவைகள் நம்ப வைத்து கழுத்தறுப்பதில்லை' என்பார்.
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் எச்சரிக்கையை என்ற முன் பத்தியைப்
படித்தவுடன் நான் பள்ளியில்
என் தமிழாசிரியர் கூறக் கேட்ட ஒரு அற்புதமான
விசயம் ஞாபகத்திற்கு வருகிறது.
தெய்வத்தை நம்பாவிட்டாலும் (ஒரு சிலரின் மேல் உள்ள கோபத்தால்)
மனித சேவை செய்த ஒரு பகுத்தறிவாளர்
(அவர் ஈ.வே.ரா அவர்களா அல்லது
கம்பன் கழக திரு ஜீவா அவர்களா
என்று மட்டும் ஞாபகம் இல்லை)
ஒரு முறை மறைமலை அடிகளை பார்க்க சென்றாராம்.
அடிகளாரின் வீட்டிற்கு வெளியில் ஒரு சமிக்கைப் பலகை
அதில் தெய்வம் வசிக்கும் குடில். ஆகவே உள்ளே வருபவர்கள்
காலணிகளை கழற்றி வைத்து விட்டு வரவும் என்று எழுதப் பட்டிருந்ததாம்.
சென்ற இந்த பகுத்தறிவாளர் அப்படியேச் செய்தாராம்.
அதற்கு கூட வந்த மற்றவர்கள் கேட்டார்களாம்,
நீங்கள் தான் தெய்வத்தை நம்ப மாட்டீர்களே பிறகு ஏன்
தெய்வத்திற்கு பயந்து காலனியை கழற்றி வைக்கிறீர்கள் என்று.
அதற்கு அவர் கூறினாராம். அது என் நம்பிக்கை.
அதோடு, நாம் மற்றவர்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளோம்,
அப்படி வரும் போது அவர்களின்
சட்டத் திட்டத்திற்கு மதிப்புத் தரவண்டுமேயன்றி வேறு அல்ல என்று.
இன்றும் என் மனதில் அந்த விசயம்
பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது.
இதைப் படிக்கும் யாவரும் தங்கள் நம்பிக்கை,
கொள்கை, பழக்க வழக்கம் எதுவானாலும்
வரும் இடத்தின் சட்ட திட்டங்களுக்கு
கட்டுப் பட்டு நடக்கும் நாகரிகங்களைப்
பின்பற்றுவார்களானால் நன்றாக இருக்கும்.
அய்யா இனிய காலை வணக்கம்,
ReplyDeleteஅருமயான பட காட்சி ...பாசம் மனிதநேயம் அனைத்தும் இன்னும் உலகத்தில் உள்ளது அதை சில மனித மிருகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ...
அருமயான பதிவிற்க்கு நன்றி வணக்கம்
வணக்கம் அய்யா,
ReplyDeleteபடமும் பாடமும் அருமை,
உங்களின் ஜோதிட புத்தகம் எப்போது வெளிஇடுவதாக உத்தேசம் ??
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
நன்றி,
geekay , BLR
////Tech Shankar said...
ReplyDeleteஅருமை தலைவரே. ஏற்கனவே பார்த்த வீடியோவாக இருப்பினும் உங்கள் விளக்க உரை நன்று.
நன்றி
டெக்ஷங்கர் @ TechShankar////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteபாசம் காட்ட மத, மொழி, இன வேறுபாடு இல்லை, ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தோன்றாத இது, ஐந்தறிவு கொண்ட ஜீவன்களுக்கு தோன்றியிருப்பது இந்த பதிவிலிருந்து தெரிகிறது. பதிவுக்கு நன்றி!/////
நன்றி நண்பரே!
/////Rathinavel.C said...
ReplyDeleteஅன்பு அனைத்திலும் சிறந்ததாகும் அனைவரிடமும் அன்பு செலுத்துவோமாக!/////
நல்லது.நன்றி!
//////csekar2930 said...
ReplyDeleteகுருவிக்கு வணக்கம்
மிகவும் சிறந்த கருத்துவுள்ள, எப்பொழுதும் நினைவில் வைத்துகொள்ளவேன்டியா கருத்தை தெளிவாக கூறிவுள்ளீர்கள். எல்லோரும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் குருவே இறைவன் .
வணக்கம்
சந்திரசேகரன் சூர்யாநாராயணன்/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
/////ananth said...
ReplyDeleteநமக்கு இருப்பதை விட ஒரு அறிவு குறைவு என்றாலும் நம்மை விட ஒரு படி மேல் என்று பல சமயங்களில் இந்த மிருகங்கள் நிரூபித்திருக்கின்றன, நிருபிக்கின்றன.
நிற்க, அடுத்த பதிவை நேரம் எடுத்து கொண்டு பொறுமையாகவும் நிதானமாகவும் உருவாக்கி வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். சுவை குன்றாமல் அதே நேரத்தில் நிறைய தகவல்கள் அல்லது விஷயங்களை அறிய கொடுக்க வேண்டும் என்று அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று எமக்கு புரிகிறது./////
புரிதலுக்கு நன்றி ஆனந்த்!
/////சிங்கைசூரி said...
ReplyDeleteகாலை வணக்கம் ஆசானே,
விடியோ அருமை, இதை தான் விட்டகுறை தெட்டககுறை என்பார்களோ?
ஒருவருக்கு மிருகங்களுடன் சம்பந்தம்/நட்பு கொள்வதற்குள்ள/ விருப்பப்படுவதற்கு ஜொதிட ரிதியாக எதேனும் காரகர்/காரணம் உள்ளதா சார்?/////
அப்படி இருப்பதாகத் தெரியவில்லை நண்பரே!
/////Alasiam G said...
ReplyDeleteஆஹா! இது கனவா நினைவா, இப்படியும் உண்டா?
நன்றிகெட்ட மானுடர்களே அதிகம் வாழும் இந்த உலகத்தில், இப்படியும் ஒரு விலங்கா!
அது மனிதப் பிறவிகளையும் மிஞ்சி விட்டது!
சிங்கத்தின் மீது அம் மாது கொண்டிருப்பது பாசம், அது நல்ல மனிதருக்கான அடையாளம்- ஆனால்,
அச் சிங்கம் அம் மாதின் மீது கொண்டுள்ள நன்றி விசுவாசம்... என்ன வென்று சொல்வது.
மற்ற மிருகம் என்றால் கூட சாத்தியமாகும். சிங்கம்!! எப்படி இது நடந்தது?.
இதை தெய்வ அம்சம் என்பதா, இல்லை பூர்வ ஜென்ம பந்தம் என்பதா.
பெற்ற தாய் தந்தையரையே, நன்றி கேட்ட மாக்கள் நடு வீதியில் நிறுத்துகின்ற காலத்தில்
இப்படியும் ஒரு விளங்கா! விலங்கு
காலத்தினார் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது. - தெய்வப்புலவர்.
நன்றிகள் குருவே./////
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி ஆலாசியம்!
////Thanuja said...
ReplyDeletePresent sir,
Very surprising video about LION!!! Yes it is true, animals are grateful more than people becoz மிருகம் பேச முடியாது, சில people பேசியே பிரச்னை பண்ணுவினம்!!!
Thanks
Thanuja/////
உண்மைதான். உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
/////thirunarayanan said...
ReplyDeleteவணக்கம் அய்யா.
"நேயத்தை மனிதர்கள் மறந்து வரும் சூழலில், மிருகங்களாவது நேயத்துடன் நடந்து கொள்வதைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்" உண்மையான பாசம்
நன்றி அய்யா./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////kmr.krishnan said...
ReplyDelete" யூ ட்யூப்" இதுபோல் பல காட்சிகளைக் காட்டுகிறது.இந்த மாது தினமும்
தொடர்பில் இருந்துள்ளார்.தொடர்பு விட்டுப்போன தன் பழைய வளர்ப்பாளர்களை அடையாளம் கண்டு கட்டித்தழுவி பூமியில் உருளும் சிங்கங்களைப் பற்றிய தொடர் பதிவு உள்ளது.என் பழைய அலுவலகத்தில்
எங்கள் அலுவலக உதவியாளர் ஒரு அணிலுடன் நட்புப் பூண்டு அதனுடன் மனிதர்களப் போலவே பேசிப்பழுகுவார். என் தாய் மாமன் குரங்குக் குழாத்துடன் பலமணி நேரம் கழிப்பார். கேட்டால் 'மனிதனைப் போல் அவைகள் நம்ப வைத்து கழுத்தறுப்பதில்லை' என்பார்.////
கத்தி இல்லாமல் கழுத்தை அறுப்பதில் கில்லாடிகளாகச் சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் வாழ்ந்தாக வேண்டுமென்பதுதான் சோகம்! நன்றி கிருஷ்ணன் சார்!
/////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
தங்களின் எச்சரிக்கையை என்ற முன் பத்தியைப் படித்தவுடன் நான் பள்ளியில் என் தமிழாசிரியர் கூறக் கேட்ட ஒரு அற்புதமான விசயம் ஞாபகத்திற்கு வருகிறது.
தெய்வத்தை நம்பாவிட்டாலும் (ஒரு சிலரின் மேல் உள்ள கோபத்தால்) மனித சேவை செய்த ஒரு பகுத்தறிவாளர் (அவர் ஈ.வே.ரா அவர்களா அல்லது கம்பன் கழக திரு ஜீவா அவர்களா என்று மட்டும் ஞாபகம் இல்லை)
ஒரு முறை மறைமலை அடிகளை பார்க்க சென்றாராம். அடிகளாரின் வீட்டிற்கு வெளியில் ஒரு சமிக்கைப் பலகை அதில் தெய்வம் வசிக்கும் குடில். ஆகவே உள்ளே வருபவர்கள் காலணிகளை கழற்றி வைத்து விட்டு வரவும் என்று எழுதப் பட்டிருந்ததாம்.
சென்ற இந்த பகுத்தறிவாளர் அப்படியேச் செய்தாராம். அதற்கு கூட வந்த மற்றவர்கள் கேட்டார்களாம்,
நீங்கள் தான் தெய்வத்தை நம்ப மாட்டீர்களே பிறகு ஏன் தெய்வத்திற்கு பயந்து காலனியை கழற்றி வைக்கிறீர்கள் என்று. அதற்கு அவர் கூறினாராம். அது என் நம்பிக்கை. அதோடு, நாம் மற்றவர்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளோம், அப்படி வரும் போது அவர்களின் சட்டத் திட்டத்திற்கு மதிப்புத் தரவண்டுமேயன்றி வேறு அல்ல என்று. இன்றும் என் மனதில் அந்த விசயம் பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இதைப் படிக்கும் யாவரும் தங்கள் நம்பிக்கை, கொள்கை, பழக்க வழக்கம் எதுவானாலும்
வரும் இடத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு நடக்கும் நாகரிகங்களைப் பின்பற்றுவார்களானால் நன்றாக இருக்கும்./////
அப்படி அனைவரும் இருந்தால், உலகில் பிரச்சினை எதுவும் இருக்காது நண்பரே!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம்,
அருமயான பட காட்சி ...பாசம் மனிதநேயம் அனைத்தும் இன்னும் உலகத்தில் உள்ளது அதை சில மனித மிருகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ...
அருமையான பதிவிற்கு நன்றி வணக்கம்////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
//////Geekay said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
படமும் பாடமும் அருமை,
உங்களின் ஜோதிட புத்தகம் எப்போது வெளிஇடுவதாக உத்தேசம் ??
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
நன்றி,
geekay , BLR//////
புத்தகத் தயாரிப்புப் பணி நடந்து கொண்டு இருக்கிறது. அப்பணி முடிந்தவுடன் முறையான அறிவிப்பு வெளிவரும்! பொறுத்திருங்கள் நண்பரே!
எச்சரிக்கை!
ReplyDeleteஇறைவன்மீதும், ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், இங்கே வர வேண்டாம். உங்களுக்கான இடமல்ல இது. வந்து, வகுப்பறைச் சுவற்றில் கண்டதையும் கிறுக்கி விட்டுப்போக உங்களுக்கு அனுமதியில்லை.
இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் ////
ஐயா வணக்கம்,இறைவன்மீதும், ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது
கழுததை அறுத்த அமெரிக்கா புது பணக்கர தம்பி துரோககர அப்பா சொத்துகளை
சுருட்டி கொண்ட தாய் மாமா எல்லாருக்கும் எதிரா கடவுளும் சிம்ம லக்கன குருவும் என்னை காப்பற்றுவார்கள் ஐயா. நாய்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நேற்றைய பதிவும் இன்றைய பதிவும் ரொம்ப நல்லா இருந்தது. தாங்களின் பதிவு
வழியாக நான் ரொம்ப தத்துவங்களை கற்றுக்கொண்டேன் தமிழில் ப்ட்டம் வாங்கவில்லை என்ற குறையை தாங்கள் அகற்றிவிட்டிர்கள்.
சுந்தரி
தந்தைப் பெரியார் அவர்கள் தன்னுடைய விருந்தினராக வந்த ஆத்திகருக்கு
ReplyDeleteகுளித்துமுடித்தவுடன் திருநீற்றைத் தன் கைகளில் ஏந்தி நின்று அன்புடன் அளித்தார்.சேலத்தில் நேரு இறந்த அன்று இரங்கல் கூட்டத்தில் மும்மதப் பிரார்த்தனையில் எழுந்து நின்று மரியாதை செய்தார்.கொள்கை வேறு.
நாகரீகம் பண்பாடு வேறு.
Dear Sir
ReplyDeleteArumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
//////sundari said...
ReplyDeleteஎச்சரிக்கை!
இறைவன்மீதும், ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், இங்கே வர வேண்டாம். உங்களுக்கான இடமல்ல இது. வந்து, வகுப்பறைச் சுவற்றில் கண்டதையும் கிறுக்கி விட்டுப்போக உங்களுக்கு அனுமதியில்லை.
இது வகுப்பறை; கழிப்பறையல்ல! அதை மனதில் வையுங்கள் ////
ஐயா வணக்கம்,இறைவன்மீதும், ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது
கழுததை அறுத்த அமெரிக்கா புது பணக்கர தம்பி துரோககர அப்பா சொத்துகளை
சுருட்டி கொண்ட தாய் மாமா எல்லாருக்கும் எதிரா கடவுளும் சிம்ம லக்கன குருவும் என்னை காப்பற்றுவார்கள் ஐயா. நாய்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நேற்றைய பதிவும் இன்றைய பதிவும் ரொம்ப நல்லா இருந்தது. தாங்களின் பதிவு
வழியாக நான் ரொம்ப தத்துவங்களை கற்றுக்கொண்டேன் தமிழில் பட்டம் வாங்கவில்லை என்ற குறையை தாங்கள் அகற்றிவிட்டிர்கள்.
சுந்தரி/////
நானே இன்னும் தமிழில் பட்டம் வாங்கவில்லை சகோதரி!
அந்தக் குறையை எம்பெருமான் முருகவேள்தான் போக்க வேண்டும்!
/////kmr.krishnan said...
ReplyDeleteதந்தைப் பெரியார் அவர்கள் தன்னுடைய விருந்தினராக வந்த ஆத்திகருக்கு
குளித்துமுடித்தவுடன் திருநீற்றைத் தன் கைகளில் ஏந்தி நின்று அன்புடன் அளித்தார்.சேலத்தில் நேரு இறந்த அன்று இரங்கல் கூட்டத்தில் மும்மதப் பிரார்த்தனையில் எழுந்து நின்று மரியாதை செய்தார்.கொள்கை வேறு. நாகரீகம் பண்பாடு வேறு.//////
அன்று தந்தை பெரியார் வாழந்த காலத்தில் அனைவரிடமும் பண்பாடு இருந்தது. இப்போது அது குறைந்துகொண்டு வருகிறது. அதுதான் சோகம் கிருஷ்ணன் சார்! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
//////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நல்லது.நன்றி ராஜாராமன்!
சிங்கம் சிங்கிளா நின்னு கலக்கிடுச்சே.சிங்கம்லே.
ReplyDeleteநெகிழ்ச்சியான கிளிப்பிங்.வகுப்பறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அய்யா.
அப்புறம் இந்த எச்சரிக்கை விஷயத்திலே ஒரு விஷயத்தை சேர்த்து எச்சரிக்க வேண்டுகிறேன்.(சிறிய விளக்கத்துக்குப்பின் கடைசியில் எச்சரிக்கையை சேர்த்திருக்கிறேன்.)
உண்மையில் கடவுளை பார்த்தவர் யாருமே இல்லை.அன்பே சிவம்.மனிதர்களின் நற்குணத்திலேதான் கடவுள் இருக்கிறார் என்று உருவகப்படுத்தி த்வைதம் அத்வைதம் என்கிற அளவிலான மிகவும் ஆழமான subject ஐ தாண்டி கிரகங்கள் இருப்பது நிஜம்.
இன்றைய அறிவியலின்படி NASA ஆராய்ச்சிகளின் முடிவுகளுடன் ஒத்துப்போகிற அளவிலான கிரக பெயர்ச்சிகளையும் நம்புகிற பகுத்தறிவுவாதிகள் அதைபற்றி முன்னோர் விட்டுச்சென்ற ஜோதிட சம்பந்தமான விஷயங்களை ஆராய்ச்சி பூர்வமாக அணுகுகிறவர்களை மூட நம்பிக்கை என்று மறுத்து பேசுவது விந்தையே.கடவுளை பார்த்தவர் யாருமே இல்லை என்பதால் மட்டுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது.மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சக்தியை கடவுள் சக்தி என்று நான் நினைக்கிறேன்.ஆராய்ச்சிகள் இன்னமும் இந்தப்பாதையில் பயணிக்கவேண்டிய தூரம்
மிக அதிகம்.
சித்தர்கள் அருளிச் சென்ற மகத்தான மூலிகைகள் இன்னமும் அவைதரும் ஆச்சரியமான விளைவுகளின் அடிப்படையிலேயே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.அதே சித்தர்கள் சொல்லியிருக்கின்ற ஜோதிட விஷயங்களும் நடப்பு வாழ்வில் பொருந்திப்போகிறதா இல்லையா என்பதை அவரவர் தம் வாழ்க்கையை,வாழ்வியல் நிகழ்வுகளை இந்த பழைய விஞ்ஞானத்தின் பக்கங்களில் தேடி பொருத்திப்பார்த்து சில பல வருடங்கள் கழிந்த பின்னர்தான் விளைவுகளின் அடிப்பபடையில் தனது கருத்துக்களை சுய விமர்சனமாகக் கூட பதிவிட முடியும் என்பது என் கருத்து.முக்கியமாக மறுப்பு கொள்கை என்று வரும்போது இந்த நிலையை எடுப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்.ஒரு பகுத்தறிவுவாதியாக நான் இந்த நிலையை எடுத்திருக்கிறேன்.
இன்னமும் ஒட்டுமொத்தமாக விமர்சிப்பவர்கள் எண் கணிதத்தில் சொல்லப்படும் சனி பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வரும் 26 , 35 , 44 ஆகிய எண்களில் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டு(அதற்கென்று procedures உண்டு.) அதன் விளைவுகள் எப்படி கெடுதல்களை ஏற்படுத்தும் என்று அனுபவப்பூர்வமாக ஆராயும் துணிச்சலுக்கு தங்களை உட்படுத்திக்கொள்வார்களா?இதுதான் சவால்.இதுதான் எச்சரிக்கை.
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteதங்களின் எச்சரிக்கையை என்ற முன் பத்தியைப் படித்தவுடன் நான் பள்ளியில் என் தமிழாசிரியர் கூறக் கேட்ட ஒரு அற்புதமான விசயம் ஞாபகத்திற்கு வருகிறது.
தெய்வத்தை நம்பாவிட்டாலும் (ஒரு சிலரின் மேல் உள்ள கோபத்தால்) மனித சேவை செய்த ஒரு பகுத்தறிவாளர் (அவர் ஈ.வே.ரா அவர்களா அல்லது கம்பன் கழக திரு ஜீவா அவர்களா என்று மட்டும் ஞாபகம் இல்லை)
ஒரு முறை மறைமலை அடிகளை பார்க்க சென்றாராம். அடிகளாரின் வீட்டிற்கு வெளியில் ஒரு சமிக்கைப் பலகை அதில் தெய்வம் வசிக்கும் குடில். ஆகவே உள்ளே வருபவர்கள் காலணிகளை கழற்றி வைத்து விட்டு வரவும் என்று எழுதப் பட்டிருந்ததாம்.
சென்ற இந்த பகுத்தறிவாளர் அப்படியேச் செய்தாராம். அதற்கு கூட வந்த மற்றவர்கள் கேட்டார்களாம்,
நீங்கள் தான் தெய்வத்தை நம்ப மாட்டீர்களே பிறகு ஏன் தெய்வத்திற்கு பயந்து காலனியை கழற்றி வைக்கிறீர்கள் என்று. அதற்கு அவர் கூறினாராம். அது என் நம்பிக்கை. அதோடு, நாம் மற்றவர்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளோம், அப்படி வரும் போது அவர்களின் சட்டத் திட்டத்திற்கு மதிப்புத் தரவண்டுமேயன்றி வேறு அல்ல என்று. இன்றும் என் மனதில் அந்த விசயம் பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இதைப் படிக்கும் யாவரும் தங்கள் நம்பிக்கை, கொள்கை, பழக்க வழக்கம் எதுவானாலும்
வரும் இடத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப் பட்டு நடக்கும் நாகரிகங்களைப் பின்பற்றுவார்களானால் நன்றாக இருக்கும்./////
நிச்சயமா நான் தாங்கள் கூறிய இந்த கருத்தை பின்பற்றுவேன் என உறுதியளிக்கிறேன். இன்னும் நல்ல நல்ல கருத்துகளை எனக்கு சொல்லுங்க ஆலோசியம் சகோதரா வணக்கம்.
சுந்தரி.
ஐயா வணக்கம்!!!!
ReplyDeleteதாங்கள் திருத்தியது எழுத்து பிழை மட்டும் இல்லை ஐயா!
(தமிழில் டைப் செய்வது கடினமாக உள்ளது சில நேரங்களில் ஐயா!!!!!!! மன்னிக்கவும் நான் தங்களின் மாணவன் இல்லையா ஐயா )
31 வயது வரை விடை தெரியாமல் இருந்த பல்வேறு முடுச்சுகளுக்கு (இந்த மானிட பிறப்பின் உண்மைக்கு) விடை தந்த, முக்கியமாக மூல குரு உபதேசத்திற்கு ( பால தண்டாயிதபாணி பழனிமலை முருகன்!!! அம்மா அப்பா தான் உலகம் என்று உலகத்திற்கு உணர்த்தி பாடம் சொன்ன தெய்வம் ) விளக்கம் தந்த என் குருவிற்கு மனம்மார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றேன் ஐயா!!!
சில சந்தேகம் ஐயா!!!
1. கும்ப இலக்கணத்தில் பிறப்பவர்கள் எல்லாம் சென்ற பிறப்பில் செய்த பாவத்தை அனுபவிக்கத்தான் என்று அடியேனுக்கு மலையாள குருநாதர் ஒருவர் கூறினார் அது உண்மையா ஐயா!!
2. தாங்கள் பதில் கூறும் போது தாங்கள் கூறும் ராசிகளின் வீடு அல்லது கிரகங்களின் வீடு தாங்கள் கணக்கு பண்ணுவது எல்லாம் ராசி கட்டதிலையா அல்லது அம்சம் கட்டதிலையா
3. நவாம்சம்த்தில் 7 க்கு (சுக்கிரன்) உரியவர் 6 ல் கேது உடன் உள்ளார் (அங்கு சுக்கிரன் நீசம் ) ஆகையால், தனது இனத்தின் கிளையில் உள்ள பெண்ணை திருமணம் பண்ணலாமா ஐயா!!
4. எனது 2 - வது சின்னாப்பா + சின்னம்மா விற்கு குழந்தைகள் இல்லை. நானோ தந்தை இல்லாதவன். தாய்க்குவேண்டிய அனைத்து வசதியும் செய்து தந்து உள்ளேன் எதிர்காலம் உள்பட . உடன்பிறந்த சகோதரிகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் பெற்றோர்கள் மற்றும் அடியேனால் முடிந்த அளவிற்கு செய்து உள்ளோம் ஆண்டவன் அருளால் . இந்த 2 - வது சின்னப்பா, அம்மா வை 1- வது சின்னப்பா மகன்கள் (தம்பிகள் ) அல்லதோ மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று விட்டு விட மனமில்லை. எனது கல்யாணத்தின் போது பெற்றோர்களாக ஆக்கிகொள்ளலாம் என்று நினைக்கின்றேன் ஐயா . இதில் ஜாதக ரீதியாக என்ன அமைப்பு வேண்டும் ஐயா!!1 நமது தர்மம் என்ன சொல்லுகின்றது ஐயா!!!!!! அவர்களுக்கு அடியேன் மகனாக இருந்து காப்பாற்றும் அளவிற்கு இறைவன் சக்தி தந்து உள்ளான் ஐயா!!!!!!!! அனாலும் விதி அதாவது அமைப்பு என்று ஒன்று வேண்டுமே ஐயா !!!!!!!!!!!!!!!!!!
குருநாதனின் பதிலுக்காக ?
ஐயா வணக்கம்!!!!
ReplyDeleteதாங்கள் திருத்தியது எழுத்து பிழை மட்டும் இல்லை ஐயா!
(தமிழில் டைப் செய்வது கடினமாக உள்ளது சில நேரங்களில் ஐயா!!!!!!!!! மன்னிக்கவும் நான் தங்களின் மாணவன் இல்லையா ஐயா )
31 வயது வரை விடை தெரியாமல் இருந்த பல்வேறு முடுச்சுகளுக்கு (இந்த மானிட பிறப்பின் உண்மைக்கு) விடை தந்த, முக்கியமாக மூல குரு உபதேசத்திற்கு ( பால தண்டாயிதபாணி பழனிமலை முருகன்!!! அம்மா அப்பா தான் உலகம் என்று உலகத்திற்கு உணர்த்தி பாடம் சொன்ன தெய்வம் ) விளக்கம் தந்த என் குருவிற்கு மனம்மார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றேன் ஐயா!!!
சில சந்தேகம் ஐயா!!!
1. கும்ப இலக்கணத்தில் பிறப்பவர்கள் எல்லாம் சென்ற பிறப்பில் செய்த பாவத்தை அனுபவிக்கத்தான் என்று அடியேனுக்கு மலையாள குருநாதர் ஒருவர் கூறினார் அது உண்மையா ஐயா!!
2. தாங்கள் பதில் கூறும் போது தாங்கள் கூறும் ராசிகளின் வீடு அல்லது கிரகங்களின் வீடு தாங்கள் கணக்கு பண்ணுவது எல்லாம் ராசி கட்டதிலையா அல்லது அம்சம் கட்டதிலையா
3. நவாம்சம்த்தில் 7 க்கு (சுக்கிரன்) உரியவர் 6 ல் கேது உடன் உள்ளார் (அங்கு சுக்கிரன் நீசம் ) ஆகையால், தனது இனத்தின் கிளையில் உள்ள பெண்ணை திருமணம் பண்ணலாமா ஐயா!!
4. எனது 2 - வது சின்னாப்பா + சின்னம்மா விற்கு குழந்தைகள் இல்லை. நானோ தந்தை இல்லாதவன். தாய்க்குவேண்டிய அனைத்து வசதியும் செய்து தந்து உள்ளேன் எதிர்காலம் உள்பட . உடன்பிறந்த சகோதரிகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் பெற்றோர்கள் மற்றும் அடியேனால் முடிந்த அளவிற்கு செய்து உள்ளோம் ஆண்டவன் அருளால் . இந்த 2 - வது சின்னப்பா, அம்மா வை 1- வது சின்னப்பா மகன்கள் (தம்பிகள் ) அல்லதோ மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று விட்டு விட மனமில்லை. எனது கல்யாணத்தின் போது பெற்றோர்களாக ஆக்கிகொள்ளலாம் என்று நினைக்கின்றேன் ஐயா . இதில் ஜாதக ரீதியாக என்ன அமைப்பு வேண்டும் ஐயா!!1 நமது தர்மம் என்ன சொல்லுகின்றது ஐயா!!!!!! அவர்களுக்கு அடியேன் மகனாக இருந்து காப்பாற்றும் அளவிற்கு இறைவன் சக்தி தந்து உள்ளான் ஐயா!!!!!!!! அனாலும் விதி அதாவது அமைப்பு என்று ஒன்று வேண்டுமே ஐயா !!!!!!!!!!!!!!!!!!
குருநாதனின் பதிலுக்காக ?
/////minorwall said...
ReplyDeleteசிங்கம் சிங்கிளா நின்னு கலக்கிடுச்சே.சிங்கம்லே.
நெகிழ்ச்சியான கிளிப்பிங்.வகுப்பறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அய்யா.
அப்புறம் இந்த எச்சரிக்கை விஷயத்திலே ஒரு விஷயத்தை சேர்த்து எச்சரிக்க வேண்டுகிறேன்.(சிறிய விளக்கத்துக்குப்பின் கடைசியில் எச்சரிக்கையை சேர்த்திருக்கிறேன்.)
இன்னமும் ஒட்டுமொத்தமாக விமர்சிப்பவர்கள் எண் கணிதத்தில் சொல்லப்படும் சனி பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வரும் 26 , 35 , 44 ஆகிய எண்களில் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டு(அதற்கென்று procedures உண்டு.) அதன் விளைவுகள் எப்படி கெடுதல்களை ஏற்படுத்தும் என்று அனுபவப்பூர்வமாக ஆராயும் துணிச்சலுக்கு தங்களை உட்படுத்திக்கொள்வார்களா?இதுதான் சவால்.இதுதான் எச்சரிக்கை.////
நம் நாட்டில் பாதிப்பேர், டாஸ்மாக் (ஓல்ட் மாங் ரம்) + கோழி பிரியாணிக் கேஸ். நீங்கள் சொல்வது எதுவும் அவர்களிடம் எடுபடாது.
//////kannan said...
ReplyDeleteஐயா வணக்கம்!!!!
தாங்கள் திருத்தியது எழுத்து பிழை மட்டும் இல்லை ஐயா!
(தமிழில் டைப் செய்வது கடினமாக உள்ளது சில நேரங்களில் ஐயா!!!!!!!!! மன்னிக்கவும் நான் தங்களின் மாணவன் இல்லையா ஐயா )///////
இங்கே வந்து படிப்பவர்கள் அத்தனை பேர்களும் எனது அன்பிற்கு உரிய மாணவர்கள்தான் (இன்றையத்தேதியில் எண்ணிக்கை 1.093 பேர்கள்)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////31 வயது வரை விடை தெரியாமல் இருந்த பல்வேறு முடுச்சுகளுக்கு (இந்த மானிட பிறப்பின் உண்மைக்கு) விடை தந்த, முக்கியமாக மூல குரு உபதேசத்திற்கு ( பால தண்டாயிதபாணி பழனிமலை முருகன்!!! அம்மா அப்பா தான் உலகம் என்று உலகத்திற்கு உணர்த்தி பாடம் சொன்ன தெய்வம் ) விளக்கம் தந்த என் குருவிற்கு மனம்மார்ந்த நன்றியை காணிக்கை ஆக்குகின்றேன் ஐயா!!!
சில சந்தேகம் ஐயா!!!
1. கும்ப இலக்கணத்தில் பிறப்பவர்கள் எல்லாம் சென்ற பிறப்பில் செய்த பாவத்தை அனுபவிக்கத்தான் என்று அடியேனுக்கு மலையாள குருநாதர் ஒருவர் கூறினார் அது உண்மையா ஐயா!!///////
எல்லாப் பிறவிகளுமே முன்வினையைக் கழிக்கப் பிறந்தவைதான்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
2. தாங்கள் பதில் கூறும் போது தாங்கள் கூறும் ராசிகளின் வீடு அல்லது கிரகங்களின் வீடு தாங்கள் கணக்கு பண்ணுவது எல்லாம் ராசி கட்டத்தை வைத்தா? அல்லது அம்சக் கட்டத்தை வைத்தா?
அம்சம் என்பது ராசியின் விரிவுபடுத்தப்பட்ட நிலை! (Navamsam is the magnified version of a rasi chart)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////3. நவாம்சம்த்தில் 7 க்கு (சுக்கிரன்) உரியவர் 6 ல் கேது உடன் உள்ளார் (அங்கு சுக்கிரன் நீசம் ) ஆகையால், தனது இனத்தின் கிளையில் உள்ள பெண்ணை திருமணம் பண்ணலாமா ஐயா!!/////
ஜாதகத்தை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, கிடைக்கிற பெண்ணை மணந்து கொள்ளுங்கள். 32 வயதாகிறது என்கிறீர்கள். இந்த வயதிற்கு நல்ல பெண் கிடைப்பதே அரிது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
4. எனது 2 - வது சின்னாப்பா + சின்னம்மா விற்கு குழந்தைகள் இல்லை. நானோ தந்தை இல்லாதவன். தாய்க்குவேண்டிய அனைத்து வசதியும் செய்து தந்து உள்ளேன் எதிர்காலம் உள்பட . உடன்பிறந்த சகோதரிகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் பெற்றோர்கள் மற்றும் அடியேனால் முடிந்த அளவிற்கு செய்து உள்ளோம் ஆண்டவன் அருளால் . இந்த 2 - வது சின்னப்பா, அம்மா வை 1- வது சின்னப்பா மகன்கள் (தம்பிகள் ) அல்லதோ மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று விட்டு விட மனமில்லை. எனது கல்யாணத்தின் போது பெற்றோர்களாக ஆக்கிகொள்ளலாம் என்று நினைக்கின்றேன் ஐயா . இதில் ஜாதக ரீதியாக என்ன அமைப்பு வேண்டும் ஐயா!!1 நமது தர்மம் என்ன சொல்லுகின்றது ஐயா!!!!!! அவர்களுக்கு அடியேன் மகனாக இருந்து காப்பாற்றும் அளவிற்கு இறைவன் சக்தி தந்து உள்ளான் ஐயா!!!!!!!! அனாலும் விதி அதாவது அமைப்பு என்று ஒன்று வேண்டுமே ஐயா !!!!!!!!!!!!!!!!!!
தர்ம காரியங்களுக்குக் கடவுள் துணை வருவார். இதற்கும் ஜாதகத்தைப் பார்த்து நேரத்தை வீண்டிக்க வேண்டாம்! எண்ணியபடி செய்யுங்கள்!
இங்கே வர வேண்டாம். உங்களுக்கான இடமல்ல ,வரவே வேண்டாம்
ReplyDeleteசற்று தீவிரமான அளவிலே மாற்றுக்கருத்தை முன்வைத்து கடவுள் இருக்கிறாரா ஜோதிடம் இருக்கிறதா எனும் அளவிலே
ReplyDeleteஆராய்ச்சி மனப்பான்மை கொண்டவனும் கூட தங்கள் வகுப்பிலே இடம் பெரும் வகையிலே இந்த வாய்ப்பை அளித்ததற்கு
மிக்க நன்றி அய்யா.இந்த கருத்தாக்கத்தை வலியுறுத்தி சொல்லப்பட்ட எனது பின்னூட்டத்தை வெளியிட்ட தங்களின் கண்ணியத்தை,நாகரிகத்தை,வலையுலக முன்னோடி பண்பாளனாக தங்களை மீண்டும் முன்னிறுத்தியிருப்பதற்கு எனது
சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
(பல இடங்களில் அழைப்புக்குப் பின் விவாதங்களில் கலந்துகொண்டு கருத்து மாறுபாட்டுடன் கூடிய பின்னூட்டமிட்டு
அவற்றை வெளியிடாமலேயே மறைத்த நபர்களும் உண்டு என்ற போதிலும் அவற்றை என் ப்லோக்கிலே வெளிப்படுத்தும் முயற்சியில் நான் இதுவரையில் இறங்காத கண்ணியத்தினை கடைப்பிடித்து வருகிறேன்.)
பணிவுக்கு மிகச்சிறந்த உதாரணமான ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த தினத்திலே அவரிடமிருந்து இந்த நல்லகுணத்தை
கற்று தகுந்தவரரிடம் பணிவதில் மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன்.