நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்
ரம்ஜான் கொண்டாட்ட ஸ்பெஷல்!
மலேசிய மாணவர் ஆனந்திற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!
கண்ணாளன் என்றதும் தவறான முடிவிற்குப் போய்விடாதீர்கள்!
ஒரு அழகிய இளம் மனைவி, வெளியூர் சென்றிருக்கும் தன் கணவனுக்கு
எழுதிய மின்னஞ்சலின் தமிழாக்கம் இது.
------------------------------------------------------------------
கண்ணாளா,
எனதன்பே,
என் ஆரூயிரே!
நீங்கள் இல்லாமல் இந்த இரண்டு நாட்களில் நான் எதெதை இழுந்து
தவிக்கிறேன் - தெரியுமா?
I am missing a lot!!!!!
வானம் வானமாகத் தெரியவில்லை!
நிலவும் எனக்குச் சுடுகிறது!
மலர்கள் எனக்கு மயக்கத்தைத் தரவில்லை!
உணவைக் கண்டால் வெறுப்பாக இருக்கிறது
பஞ்சனையில் படுத்தாலும் தூக்கம் வரவில்லை
எப்போது நீங்கள் திரும்பி வருவீர்கள்?
உங்கள் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்.
நீங்கள் திரும்பிவந்து என்னை நேரில் பார்ப்பதற்குள், எனக்கு நேர்ந்த
ஒரு சிறு விபத்தை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
நமது பிக்கப் வண்டியில் (pickup truck) வெளியே சென்றுவிட்டுத்
திரும்பும்போது விபத்து நடந்து விட்டது.
அன்பே, மனம் பதறாதீர்கள்!
அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை! எனக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆகவே என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.
வீட்டில் உள்ள ஓடு பாதையில் (driveway) வாகனத்தைச் செலுத்தும்போது, பிரேக்கை மிதிப்பதற்குப் பதிலாக, தவறுதலாக, ஆக்க்ஸிலேட்டரை
ஓங்கி மிதித்து விட்டேன்.
நமது கார் ஷெட்டின் கதவில் சிறிது ஒடுக்கு விழுந்து விட்டது. ஆனால்
எனது நல்ல நேரம், நான் ஓட்டிக்கொண்டு வந்த வண்டி, உள்ளே நின்று கொண்டிருந்த உங்கள் காரின் மேல் தாவிக் குதித்ததோடு, தானாக
நின்று விட்டது.
நடந்த நிகழ்ச்சிகளுக்கு என்னை மன்னியுங்கள்.
யாருக்கும் கிடைக்காத பொக்கிஷமாக, எனக்குக் கிடைத்த நீங்கள், உங்கள்
அன்புக்குரியவளை மன்னித்து விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும்!
உங்களின் இனிய உள்ளத்தை நான் எவ்வளவு நேசிக்கிறேன், உங்களுக்காக
எத்தனை தூரம் நான் உருகுவேன் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
உங்களுக்காக, படம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.
உங்களைக் கட்டித் தழுவ எனது கரங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இல்லை துடித்துக் கொண்டிருக்கின்றன!
இப்படிக்கு,
அன்பே உருவான உங்கள் மனைவி!
-----------------------------------------------------------------
படம் கிழே உள்ளது.
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
dear sir,
ReplyDeleteStory and picture super comedy!enjoyable,based on this concept are you going to teach any yogam sir?
vaathiyaaar ayya unamaiyai sollungal ithu ungal veetil nadantha sambavam pol thirikirathe ha haha ethu eptiyoo sariyana nagaisuvai
ReplyDeleteஅய்யா வணக்கம் கார் செட்டின் கோலம் படு சிரிப்பு .எல்லாம் ஒருவழி பண்ணி விட்டு ஒன்றுமே ஆகவில்லை கடிதம் போடஇளம் மனைவியால்தான் முடியும் .இதில்கார் செட்படம் தான் ஹை லைட் .
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...சிலருக்கு பிசாசு வந்து வாய்க்கும்..என்று நீங்கள் முந்தைய பதிவிலே சொன்னதாக ஞாபகம்.
ReplyDeleteஅந்தப்பிசாசு இதுதானோ?
Simply classic Sir. Nice imagination.
ReplyDelete///marutham said...
ReplyDeletedear sir,
Story and picture super comedy!enjoyable,based on this concept are you going to teach any yogam sir?////
ஜோதிடத்தை சில நாட்கள் மறந்திருப்போம் என்றுதானே இந்த நகைச்சுவைப் பதிவையெல்லாம் பதிந்து கொண்டு இருக்கிறேன். நீங்கள் இதிலும் ஜோதிடத்தைக் கேட்டால் என்ன செய்வது நண்பரே!
////prabakar.l.n said...
ReplyDeletevaathiyaaar ayya unamaiyai sollungal ithu ungal veetil nadantha sambavam pol thirikirathe ha haha ethu eptiyoo sariyana nagaisuvai////
நன்றி பிரபாகர்!
////Meena said...
ReplyDeleteஅய்யா வணக்கம். கார் செட்டின் கோலம் படு சிரிப்பு .எல்லாம் ஒருவழி பண்ணி விட்டு ஒன்றுமே ஆகவில்லை கடிதம் போடஇளம் மனைவியால்தான் முடியும் .இதில்கார் செட்படம் தான் ஹை லைட் .////
நீங்கள் சிரித்து மகிழத்தான் இந்த இடுகை, சகோதரி!
/////minorwall said...
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...சிலருக்கு பிசாசு வந்து வாய்க்கும்..என்று நீங்கள் முந்தைய பதிவிலே சொன்னதாக ஞாபகம்.
அந்தப்பிசாசு இதுதானோ?/////
இளம் மனைவிகள் எல்லாம் தேவதைகள் மைனர்!
தேவதைகளாலால்தானே இப்படிக் கடிதங்களை எழுத முடியும்?
Super story, Good tips for newly married woman to use these ideas.
ReplyDeleteஆசிரியர்க்கு ,
ReplyDeleteசபாஸ். சூப்பர் சார் .
super comedy
ReplyDeleteஅன்பான மாணாக்கர்களே இது நாள்வரை நமக்கு
ReplyDeleteகொடுத்த யோகத்திலிருந்து இது யெந்த யோகம்
என கண்டுபிடிக்க வாத்தியார் நமக்கு டெச்ட
வைத்திருக்கிறார்.
ஆகவே மயங்கிவிடாதீர்கள்.
illai ayya . neengal ungal paniyil
ReplyDeletenagaichuvai or philoshophy paniyil bathil aliyunggal.
thavaru iruppin mannikkavum
thanks ayyaa.
////Blogger அமர பாரதி said...
ReplyDeleteSimply classic Sir. Nice imagination.////
நன்றி அமரபாரதி!
////Blogger mades said...
ReplyDeleteSuper story, Good tips for newly married woman to use these ideas.////
நன்றி மாதேஷ்வரன்!
////Blogger surusha said...
ReplyDeleteஆசிரியர்க்கு ,
சபாஷ். சூப்பர் சார் .////
நன்றி சகோதரி
////Blogger T.V.Radhakrishnan said...
ReplyDeletesuper comedy////
ரசித்துப் பின்னூடமிட்டமைக்கு நன்றி ராதாகிருஷ்ணன் சார்!
////Blogger thirunarayanan said...
ReplyDeleteஅன்பான மாணாக்கர்களே இது நாள்வரை நமக்கு
கொடுத்த யோகத்திலிருந்து இது யெந்த யோகம்
என கண்டுபிடிக்க வாத்தியார் நமக்கு டெஸ்ட்
வைத்திருக்கிறார்.
ஆகவே மயங்கிவிடாதீர்கள்./////
ஆமாம் இந்த ரசனை உணர்விற்கும் ஒரு யோகம் வேண்டும்.
அந்த யோகத்தை பதிவில் எழுதியுள்ளேன். யோகத்தின் முதல் எழுத்து ‘மா”
அந்த யோகத்தைக் கொடுக்கும் கிரகத்தின் பெயர் ‘சு’ என்று துவங்கும்
மயங்காமல் கண்டு பிடியுங்கள். கண்டு பிடிப்பவர்களுக்கு திருநாராயணன்
பரிசளிப்பார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நீராடுவதற்கும்,
இரண்டு பொட்டலம் பெருமாள் (புளியோதரை) பிரசாதத்திற்கும் ஏற்பாடு
செய்து தருவார்!
////Blogger thirunarayanan said...
ReplyDeleteillai ayya . neengal ungal paniyil
nagaichuvai or philoshophy paniyil bathil aliyunggal.
thavaru iruppin mannikkavum
thanks ayyaa./////
உடனே பதில் எழுதியுள்ளேன். படித்துப் பாருங்கள் திருநாராயணன்.!
//யோகத்தின் முதல் எழுத்து ‘மா”
ReplyDeleteஅந்த யோகத்தைக் கொடுக்கும் கிரகத்தின் பெயர் ‘சு’ என்று துவங்கும்
மயங்காமல் கண்டு பிடியுங்கள்.//
மாளவியா யோகம், சுக்கிரன் உச்சம்/ஆட்சி பெற்று- லக்கனதிற்கு
கேந்திரதில் இருப்பது
இரண்டு பொட்டலம் பெருமாள் (புளியோதரை) பிரசாதம் ParCel :-)
Dear Sir
ReplyDeleteNice Photo and nengal sollum thiranum ungalukku adhigam.
Note: Adhu Malaviya yogam. "Sukkiran"(uchham petra)
Correcta Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeletePhoto Arumai and neengal kadhai (letter)sollum style is arumai.
Nopte: Malaviya Yogham. Sukkiran(Uchham Petra)..Correcta Sir?
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
//singaiSuri said...
ReplyDelete//யோகத்தின் முதல் எழுத்து ‘மா”
அந்த யோகத்தைக் கொடுக்கும் கிரகத்தின் பெயர் ‘சு’ என்று துவங்கும்
மயங்காமல் கண்டு பிடியுங்கள்.//
மாளவியா யோகம், சுக்கிரன் உச்சம்/ஆட்சி பெற்று- லக்கனதிற்கு
கேந்திரதில் இருப்பது
இரண்டு பொட்டலம் பெருமாள் (புளியோதரை) பிரசாதம் ParCel :-)////
Double okay! How to send the Puliyodharai Parcel by air or by surface?
///Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Nice Photo and nengal sollum thiranum ungalukku adhigam.
Note: Adhu Malaviya yogam. "Sukkiran"(uchham petra)
Correcta Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
கரெக்ட் ராஜாராமன்.
ஜயாவுக்கு இப்படி யாரும் லெட்டர் அனுப்ப வில்லையே அதிகமாக வெளியூர் போறவர் அவர் தான்.... :---)))
ReplyDeleteவணக்கம் ஆசானே
ReplyDeleteஏன் இப்போதெல்லாம் இப்படிப் பின்னூட்ட மழை பொழிகிறது ,ஏதாவது காலமாற்றமா
வாழ்க வளர்க.
நபர் 1: வாளியில் மழை நீரை சேகரித்து கொண்டு எங்கே செல்கிறாய்?
ReplyDeleteநபர் 2: நமது அரசு மழை நீரை சேமிக்க வேண்டும் என அடிக்கடி பிரச்சாரம் செய்கிறது அதனால் தான் வங்கிக்கு செல்கிறேன்.
நபர் 1: !!!!?
நகைச்சுவை உணர்வுள்ளவர்களிடம் துன்பம் நீண்ட நேரம் நீடிக்காது.
so சக மாணவர்களே, always try to smile and make others to smile.
"நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்"
ReplyDeleteஒரு அருமையான கருத்தும், நகைச்சுவையும் நிறைந்த சிந்தனை.
Sir, I was late to the prvious 'muttai' paadam.My comments do not get registered. So I give a song by Mahakvi Bharathiyaar on 'patru'here.
ReplyDeleteIf the husband has 'patru' with his car, what would happen? His 'patru' over his sweet heart will over shadow his car 'patru'. If he takes 'patru' with God, he will have peace of mind.
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த
சிட்டுக் குருவியைப் போலே
எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்
வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று
பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)
முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்து உண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று!
மகாகவி பாரதியார்
MY DEAR SPARROW! Live like a sparrow
ஏதோ வாத்தியார் பேச்சிலே முதல் மரியாதை சிவாஜி வாடை அடிக்குறாப்போலே
ReplyDeleteதெரியுது.
netலேயே fulltime dedicatedஆ இருக்குறதனாலே யாராச்சும் உங்க பாட்டுக்கு எசப்பாட்டு பாடுற மாதிரி ஏதும் அமைஞ்சுடுச்சா?(ஜோதிடம்,பல்சுவைன்னு பதிவு போடவே உங்களுக்கு நெட்லே நேரம் போயிடுமே. அப்புறம் எப்பிடி இதெல்லாம்?)
எப்டியோ நீங்க நீங்கதான் சார்.
////Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஜயாவுக்கு இப்படி யாரும் லெட்டர் அனுப்ப வில்லையே? அதிகமாக வெளியூர் போறவர் அவர் தான்.... :---)))/////
கற்பனைக்கு ஏது சாமி கடிவாளம்?
//KS said...
ReplyDeleteவணக்கம் ஆசானே
ஏன் இப்போதெல்லாம் இப்படிப் பின்னூட்ட மழை பொழிகிறது ,ஏதாவது காலமாற்றமா
வாழ்க வளர்க./////
அதுதான் எனக்கும் புரியவில்லை? இந்த மழையில் சளி, காய்ச்சல் என்று எதுவும் வந்து படுத்தாமல் இருந்தால் சரிதான்!
////PowerPix365 said...
ReplyDeleteநபர் 1: வாளியில் மழை நீரை சேகரித்து கொண்டு எங்கே செல்கிறாய்?
நபர் 2: நமது அரசு மழை நீரை சேமிக்க வேண்டும் என அடிக்கடி பிரச்சாரம் செய்கிறது அதனால் தான் வங்கிக்கு செல்கிறேன்.
நபர் 1: !!!!?
நகைச்சுவை உணர்வுள்ளவர்களிடம் துன்பம் நீண்ட நேரம் நீடிக்காது.
so சக மாணவர்களே, always try to smile and make others to smile.////
கரெக்ட் 365! அதென்ன கலக்கலான புனைப்பெயர்?
////PowerPix365 said...
ReplyDelete"நகைச்சுவை: கண்ணாளானுக்கு ஒரு கடிதம்"
ஒரு அருமையான கருத்தும், நகைச்சுவையும் நிறைந்த சிந்தனை.//////
நன்றி நண்பரே!
/////kmr.krishnan said...
ReplyDeleteSir, I was late to the prvious 'muttai' paadam.My comments do not get registered. So I give a song by Mahakvi Bharathiyaar on 'patru'here.
If the husband has 'patru' with his car, what would happen? His 'patru' over his sweet heart will over shadow his car 'patru'. If he takes 'patru' with God, he will have peace of mind.
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்த
சிட்டுக் குருவியைப் போலே
எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறிய காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுபடாது எங்கும் கொட்டிக்கிடக்கும் இவ்
வானொலி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
பெட்டையினோடு இன்பம் பேசிக்களிப்புற்று
பீடை இலாதது ஓர் கூடு கட்டிக்கொண்டு
முட்டை தரும் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்து அன்பு செய்து இங்கு (விட்டு)
முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்து உண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று!
-- மகாகவி பாரதியார்
MY DEAR SPARROW! Live like a sparrow./////
பாரதியின் பாடலை நினைவுகூர்ந்து எழுதியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////minorwall said...
ReplyDeleteஏதோ வாத்தியார் பேச்சிலே முதல் மரியாதை சிவாஜி வாடை அடிக்குறாப்போலே
தெரியுது.
netலேயே fulltime dedicatedஆ இருக்குறதனாலே யாராச்சும் உங்க பாட்டுக்கு எசப்பாட்டு பாடுற மாதிரி ஏதும் அமைஞ்சுடுச்சா?(ஜோதிடம்,பல்சுவைன்னு பதிவு போடவே உங்களுக்கு நெட்லே நேரம் போயிடுமே. அப்புறம் எப்பிடி இதெல்லாம்?)
எப்டியோ நீங்க நீங்கதான் சார்.///////
வாத்தியாரின் பேச்சிலே முதல் மரியாதை சிவாஜி வாடையும் அடிக்கும், காதலுக்கு மரியாதை விஜயின் வாடையும் அடிக்கும். எல்லாவற்றிற்கும் ரசனைதான் காரணம்
மைனர்!
இந்த பதிவு ஏற்கனவே
ReplyDeleteநீங்கள் இட்டு மறு பதிப்பு என
நினைக்கிறேன்
நன்றி அய்யா!
அல்லி அவளின் அன்புக் கடிதம்
ReplyDeleteஅன்பு மழையில் நனைத்தது.
துள்ளி வரும் காதல்த்தூதோ என்னையும்
துயரக் கடலில் தள்ளியது.
பள்ளிப்பருவ நாட்க்களில் சொல்லாமல் சொல்லிய
அக்காதலச் சொர்க்கத்துக்கு மறுப்பயணித்தது.
இவள் கம்பன் கண்ட காதலியா
இல்லை பாரதியின் கண்ணம்மாவா.
அக நாநூற்றுத் தலைவியாய் கவி
அகம்புகுத்தி இதயத்தை இளகாக்கியதேனோ!
சொல்ல வார்த்தையில்லை ஆனால் வேறொரு
பொருள் கொண்டு உரைப்பேன்
அன்னை செய்த உக்கரையாய், கந்தரப்பமாய்
ஏன் தேன்குழலாய் இனித்ததுவே.
அய்யா கற்பனை இல்லை நம் (ஒவ்வரின்)
மலரும் நினைவுகள்:
தேன்யடையில் வழிந்தோடும்
தேனமுதாய் தெவிட்டாத
சீம்பாலாய் குற்றாலச்சாரலாய் அங்கு
குடிகொண்ட எம்பெருமான்
ஈசன் எந்தன் நிழலடியாய்
அவன் பிள்ளை முருகின் அழகாய்
பேரின்ப சிற்றின்ப கலவையாய்
இதயம் நிரம்பியது.
நன்றி! நன்றி!! நன்றி!!!
ஆலாசியம். கோ
///thirunarayanan said...
ReplyDeleteஇந்த பதிவு ஏற்கனவே
நீங்கள் இட்டு மறு பதிப்பு என
நினைக்கிறேன்
நன்றி அய்யா!///
இல்லை புதியது!
அடேங்கப்பா! பின்னூட்டம் இடலாம் என வந்தால், மௌஸ் அழுத்த அழுத்தக் கீழே போய்க் கொண்டேயிருக்கிறது!
ReplyDeleteஅசத்தல் பதிவு ஆசானே!
////Blogger Alasiam G said...
ReplyDeleteஇவள் கம்பன் கண்ட காதலியா
இல்லை பாரதியின் கண்ணம்மாவா./////
காரை மோதும் கண்ணம்மா
கலியுகத்தின் பொன்னம்மா!
Blogger VSK said...
ReplyDeleteஅடேங்கப்பா! பின்னூட்டம் இடலாம் என வந்தால், மௌஸ் அழுத்த அழுத்தக் கீழே போய்க் கொண்டேயிருக்கிறது!
அசத்தல் பதிவு ஆசானே!/////
நீங்கள் வந்து பின்னூடமிட்டதே எனக்கு ஒரு கெளரவம்தான் வி.எஸ்.கே சார்!
நன்றி! இந்த உற்சாகத்தில் இன்னும் ஒரு நூறு பதிவுகள் (இதைப்போல) போடுவேன் என்று பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்!
எல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.. ரொம்ப நல்ல ஆசான்...
ReplyDelete////sasi said...
ReplyDeleteஎல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.. ரொம்ப நல்ல ஆசான்...//////
மற்ற ஊடகங்களுக்கு இல்லாத வசதி,வலையில் பதிபவர்களுக்கு அது ஒன்றுதான் !
பின்னூட்டங்களே நமது எழுத்தில் உள்ள நிறை, குறைகளைச் சொல்பவை. ஆகவே அதற்குப் பதில் சொல்வது அவசியம். அத்துடன் பொறுமையாகச் சொல்வது மிகவும் அவசியம் நண்பரே!
////sasi said...
ReplyDeleteஎல்லோருக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறீர்கள்.. ரொம்ப நல்ல ஆசான்...//////
மற்ற ஊடகங்களுக்கு இல்லாத வசதி,வலையில் பதிபவர்களுக்கு அது ஒன்றுதான் !
பின்னூட்டங்களே நமது எழுத்தில் உள்ள நிறை, குறைகளைச் சொல்பவை. ஆகவே அதற்குப் பதில் சொல்வது அவசியம். அத்துடன் பொறுமையாகச் சொல்வது மிகவும் அவசியம் நண்பரே!
//கரெக்ட் 365! அதென்ன கலக்கலான புனைப்பெயர்?//
ReplyDeleteபுகைப்படக் கலையில் ஒரு சிறு ஆர்வம்...
////PowerPix365 said...
ReplyDelete//கரெக்ட் 365! அதென்ன கலக்கலான புனைப்பெயர்?//
புகைப்படக் கலையில் ஒரு சிறு ஆர்வம்...///
விளக்கத்திற்கு நன்றி!
Really superb sir, sorry because of my tour i am not regular to class, now i am updating the left out classes. Please continue to write this kind of articles, we are also getting relaxed by reading this. one humble request please make it as a separate book. thanks. Sakthi Ganesh.
ReplyDelete////Sakthi Ganesh said...
ReplyDeleteReally superb sir, sorry because of my tour i am not regular to class, now i am updating the left out classes. Please continue to write this kind of articles, we are also getting relaxed by reading this. one humble request please make it as a separate book. thanks. Sakthi Ganesh.////
உங்கள் பாராட்டிற்கு நன்றி நண்பரே!