வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்!
வெற்றி என்ற சொல்லிற்கு ஒரு வசீகரம் உண்டு.
வெற்றியை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எல்லோராலும் விரும்பப்படுவதால் மட்டுமல்ல, வெற்றிக்கு ஒரு
உள்ளடங்கிய பயன் இருப்பதால் அதற்கு ஒரு வசீகரிக்கும்
தன்மை வந்துவிடுகிறது.
அது என்ன உள்ளடங்கிய பயன்?
எடுத்து செய்யும் செயல்களுக்குக் கிடைக்கும் சாதகமான
முடிவுதான் உள்ளடங்கிய பயன்!
எடுத்த செயல் எல்லாமே 'வெற்றி பெறுமா?' என்றால் அது
யோசிக்க வேண்டிய விஷயம்!
ஆனால் யோசிப்பதற்கே இடமில்லாமல் எடுத்த செயலைத்
தன்முனைப்போடு செய்து வெற்றி பெற்றால், ஒரு உத்வேகம்
ஏற்பட்டு அடுத்தடுத்து நாம் பல வெற்றிகளைக் காண முடியும்.
ஆகவே ஒரு வெற்றி, அடுத்த வெற்றிக்கு வழி வகுக்கும்
சிலர் தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள்.
சிலர் பெறுவதில்லை! என்ன காரணம்?
முன் பத்தியில் சொன்ன அந்த உத்வேகம்தான் காரணம்.
ஆங்கிலத்தில் அதைக் killing instinct என்பார்கள்.
வெற்றி பல வடிவங்களைக் கொண்டது.
பல அர்த்தங்களைக் கொண்டது. வாழ்க்கையில் தேடுவது
ஒருவகை வெற்றி. வியாபாரத்தில் தேடுவது ஒருவகை வெற்றி.
விளையாட்டு வீரனின் வெற்றி ஒரு வகை என்றால்,
இசைக்கலைஞன் தேடுவது ஒருவகை வெற்றி.
ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் தேடுவது தினசரி வெற்றி.
ஆமாம் அவர் தினசரி செய்யும் அறுவை சிகிச்சை வெற்றி
பெற்றால் தானே சிகிச்சைக்கு வந்தவன் மீண்டும் நடமாட முடியும்?
ஆகவே எப்படிப்பட்ட வெற்றி என்பது அவரவர் தேடலைப் பொறுத்தது!
அதுபோல வெற்றியின் தன்மையும் வித்தியாசப்படும்.
பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவன் தேர்வு பெற்றால்
அது செயல்.
அவனே நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினால்
அது வெற்றி (success)
மாநில அளவில் முதல்மாணவனாக அவன் தேறினால்
அது உண்மையான வெற்றி! (True Success)
'கரையை விட்டுப் பயணிக்காமல் நீங்கள் சமுத்திரங்களைப்
பார்த்து வரமுடியாது' என்ற சொல்லடை உண்டு.
அதுபோல இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து சிரமம் பார்க்காமல்
செயல் பட்டால்தான் வெற்றியை அடைய முடியும்.
எதுவும் நம்மைத் தேடி வராது. நாம் தான் தேடிப்போகவேண்டும்
நம்மைத் தேடி எதுவுமே வராதா? சோம்பி இருந்தால் நம்மைத்
தேடி ஒன்றல்ல இரண்டு வரும்.
அவற்றின் பெயர்: நோய் மற்றும் கடன்
வெற்றியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
வெகு இயல்பாகச் சொன்னால், சரியான நேரத்தில், சரியான வழியில்,
சரியான செயலைச் செய்வதுதான் வெற்றி!
Success is simple. Do what's right, the right way,
at the right time.- Arnold H. Glasow
உட்கார்ந்து யோசித்தோமென்றால், சரியான நேரத்தில்
சரியான செயலைச் செய்யாததால் வாழ்க்கையில் எத்தனை வெற்றி
வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்ற எண்ணிக்கை தெரியவரும்.
வெற்றி என்பது போய்ச் சேர வேண்டிய இடமல்ல:
வெற்றி என்பது பயணம் ஆகும்.
(Success is not a destination it is a journey)
இன்றைய மனிதர்களின் தேவைகளும், ஆசைகளும் நாளுக்கு
நாள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
ஆசைப்படுவதை விட்டு விட்டு, தேவைப்படும் அளவிற்கு
வாழ்க்கையில் வளமாக இருக்க வேண்டும் என்றால் எடுத்துச்
செய்யும் செயல்களின் வெற்றி முக்கியம்.
தொடர் வெற்றியைப் பெறுவதற்கு நமக்கு என்னென்ன
தகுதிகள் வேண்டும்.
1. எதையும் விடாது செய்து முடிக்கும் ஆர்வமுள்ள மனது
2. ஆரோக்கியமான உடல் நிலை
3. அலையக்கூடிய தெம்பு
4. எவரிடமும் அன்பு பாராட்டக்கூடிய மனப்பான்மை
5. தட்டுப்பாடு இன்றி தேவைக்குச் செலவழிக்கும்
அளவிற்குக் கையில் காசு
6. அவன் செய்கிறான், நம்மால் ஏன் செய்யமுடியாது,
என்று நம்மையே நாம் ஊக்குவிக்கக்கூடிய உணர்வு
அல்லது தன்னம்பிக்கை.
இந்த ஆறு தகுதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு நீங்கள்
செயல் பட்டால். நிச்சயம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்
வெற்றிதான்.
பிறகு வெற்றி மீது வெற்றி வந்து உங்களை மட்டுமல்ல,
நம் எல்லோரையும் வந்து சேரும்
==========================================================
”வாத்தியார்...?”
“என்ன ராசா?”
”என்ன இது...?”
“இதுவும் பாடம்தான் ராசா!”
“ஜோதிடப் பாடம் என்ன ஆயிற்று?”
“தொடர்ந்து பணிச்சுமை. அதோடு ஒரு புத்தகம் தயாரிக்கும்
பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ஜோதிடப் பாடத்தின் அடுத்த பகுதியை
எழுதித் தட்டச்ச வேண்டும். அதற்கு நேரமில்லை. வரும் ஞாயிறன்று
தட்டச்சி திங்கட்கிழமையன்று வலையேற்ற உள்ளேன்.
பொறுத்துக் கொள்ளவும். இந்த ‘வெற்றி’ கட்டுரை ஒரு மாத
இதழுக்காக எழுதியது.அதை அப்படியே cut & pasteல் உங்களுக்குக்
கொடுத்துள்ளேன்”
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
ஐயா,
ReplyDeleteபாடம் மிகவும் அருமை! இந்த தன்னம்பிக்கை எல்லோருக்கும் தேவை.
என்றும் அன்புடன்
This is another definition for success, I read years ago:
ReplyDeleteSuccess is what happens when Talent and preparation meets opportunity.
அய்யா,
ReplyDeleteநல்ல, கருத்து மிக்க பதிவு.
//Success is simple. Do what's right, the right way,
at the right time.- Arnold H. Glasow//
இதையேதான் திருவள்ளுவர் "ஞாலங் கருதினும் கைகூடும் காலங்கருதி இடத்தாற் செயின்" என்று சொல்லியிருக்கிறார்.
பரவாயில்லை வாத்தியாரே..
ReplyDeleteஇதுவும் ஒரு நல்ல பாடமாகத்தான் இருக்கிறது..
நன்றியோ நன்றி..!
Good Writings are always needed and appreciated.
ReplyDeleteகையில் நோட்டு புத்தகமும் ஸ்கூல் பேக்(இஸ்கூல் இல்லை) நிறைய ஜாதகங்களும் எடுத்து வந்தேன். இன்று ஏமாற்றி விட்டீர்கள். அதனால் வாத்தியார் ஐயா பெஞ்சின் மீது ஏறி நிற்கவும்.
ReplyDeleteமதியத்திற்க்கு மேல் வகுப்பை மட்டம் போட்டுவிட்டு (கட்) பசங்க -என்னவொரு பொருத்தம் பாருங்கள்-சினிமாவிற்க்கு போகலாம் என தினைத்தேன், அதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. வகுப்பு ஒருவாரம் கோடை கால விடுமுறை போல.
very important concepts for life, Thanks
ReplyDeleteஐயா,
ReplyDeleteபாடம் படித்தோம்.உங்கள் வகுப்பறை மாணவர்கள் வெற்றி பெற அதன்படி
நடந்துகொள்கின்றோம். அதனால் வகுப்பறை மாணவர்களான எங்களுக்கு "வெற்றிமீது வெற்றி வந்து எங்களை சேரும்...அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உ(ங்களை)ன்னை
சேரும்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
மிகுந்த வேலை பளுவிலும் பாடத்தை வலையேற்றும் தங்கள் சிரத்தை பாராட்டுக்குறியது. நல்ல பாடம்.
ReplyDeleteவணக்கம் ஐயா,வெற்றி அனைவருக்கும் அனைத்து சமயங்களிலும் தேவைப்படுவது.தொடர்ந்து முயற்ச்சியும் உழைப்பும் பெரும்பான்மை மக்கள் செலவிட்டும் சிலரை மட்டுமே வெற்றி அனைக்கிறது.அது எவருக்கு எப்போது என ஜோதிடம் மூலம் அறியலாம்.அதற்கு உதவும் ஆசானுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன்,
மதுரை தனா.
Dear Sir
ReplyDeleteArumai Aiyya... Superb...
Sincerity is the secret of success..
each and every work - we should show our interest and sincerity - we will get success..
Kanavai Nanvakku thiramai ellorum valarthukollavendum...
Today Lesson is very nice...We are expecting Asto lesson sir..(coming week)..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Guru,
ReplyDeleteYour dedication and continued support towards encouraging us (students) is what keeps you on the high by one and all.
Best wishes for your book!
Sridhar
Dear Sir,
ReplyDeleteSuper....
-shankar
ம்ம் நம்மட பலனும் இருக்கனும் ஜயா..நாளைக்கு பரீட்சை ஒன்று எடுக்கனும் என்டு கஷ்டப் பட்டு படிச்சிட்டு இன்டைக்கு அடையாள அட்டை மாற்ற குடுத்ததால இனி 3 மாசத்துக்கு பரீட்சை செய்ய முடியாத நிலை அட்டமத்து சனி நின்று விளையாடுது..
ReplyDeleteஜயாவை காணவில்லை ? :) busy ஆ இருக்கிறாரு போல .. நீங்கள் அறுதலாய் வாருங்கள்..
ReplyDeleteSir,
ReplyDeleteWhen the school will reopen after vocation. We are waiting to come back to the classes
வாத்தியார் super star மாதிரி எப்போ வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார்.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteHope you are doing well. what happened?
////Blogger SP Sanjay said...
ReplyDeleteஐயா,
பாடம் மிகவும் அருமை! இந்த தன்னம்பிக்கை எல்லோருக்கும் தேவை.
என்றும் அன்புடன்////
நன்றி சஞ்சை!
////Blogger ராஜ் said...
ReplyDeleteThis is another definition for success, I read years ago:
Success is what happens when Talent and preparation meets opportunity./////
நன்றாக உள்ளது.நன்றி நண்பரே!
///////Blogger அமர பாரதி said...
ReplyDeleteஅய்யா,
நல்ல, கருத்து மிக்க பதிவு.
//Success is simple. Do what's right, the right way,
at the right time.- Arnold H. Glasow//
இதையேதான் திருவள்ளுவர் "ஞாலங் கருதினும் கைகூடும் காலங்கருதி இடத்தாற் செயின்" என்று சொல்லியிருக்கிறார்./////
நன்றி அமரபாரதி!
/////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteபரவாயில்லை வாத்தியாரே..
இதுவும் ஒரு நல்ல பாடமாகத்தான் இருக்கிறது..
நன்றியோ நன்றி..!//////
நீங்கள் என்ன சொன்னாலும் சரிதான் உனா தானா!
///////Blogger krish said...
ReplyDeleteGood Writings are always needed and appreciated./////
நன்றி க்ரீஷ்!
/////Blogger karmegaraja said...
ReplyDeleteகையில் நோட்டு புத்தகமும் ஸ்கூல் பேக்(இஸ்கூல் இல்லை) நிறைய ஜாதகங்களும் எடுத்து வந்தேன். இன்று ஏமாற்றி விட்டீர்கள். அதனால் வாத்தியார் ஐயா பெஞ்சின் மீது ஏறி நிற்கவும்./////
நான் மகர ராசிக்காரன். திருவோணம். அஷ்டமத்துச் சனி பள்ளிக்கூறையின் மேல் ஏற்றி வெய்யிலில் உட்கார வைத்திருக்கிறது. ஆகவே பெஞ்சின்மேல் நிற்கவெல்லாம் நோ சான்ஸ்!
////Blogger saadu said...
ReplyDeletevery important concepts for life, Thanks////
நன்றி நண்பரே!
/////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
பாடம் படித்தோம்.உங்கள் வகுப்பறை மாணவர்கள் வெற்றி பெற அதன்படி
நடந்துகொள்கின்றோம். அதனால் வகுப்பறை மாணவர்களான எங்களுக்கு "வெற்றிமீது வெற்றி வந்து எங்களை சேரும்...அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உ(ங்களை)ன்னை
சேரும்...
வாழ்க வளமுடன்,
வேலன்./////
வேலனா இப்படிச் சொல்வது? வெற்றி தோல்விகள் எல்லாம் அவரவருக்கு விதிக்கப்பட்டுள்ளபடிதான் நடக்கும். இதில் வாத்தியார்களின் பங்கு எதுவும் இல்லை!
/////Blogger ananth said...
ReplyDeleteமிகுந்த வேலை பளுவிலும் பாடத்தை வலையேற்றும் தங்கள் சிரத்தை பாராட்டுக்குறியது. நல்ல பாடம்.///
புரிதலுக்கு நன்றி ஆனந்த்!
////Blogger dhanan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,வெற்றி அனைவருக்கும் அனைத்து சமயங்களிலும் தேவைப்படுவது.தொடர்ந்து முயற்ச்சியும் உழைப்பும் பெரும்பான்மை மக்கள் செலவிட்டும் சிலரை மட்டுமே வெற்றி அனைக்கிறது.அது எவருக்கு எப்போது என ஜோதிடம் மூலம் அறியலாம்.அதற்கு உதவும் ஆசானுக்கு நன்றிகள்.
அன்புடன்,
மதுரை தனா./////
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Arumai Aiyya... Superb...
Sincerity is the secret of success..
each and every work - we should show our interest and sincerity - we will get success..
Kanavai Nanvakku thiramai ellorum valarthukollavendum...
Today Lesson is very nice...We are expecting Asto lesson sir..(coming week)..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நன்றி ராஜாராமன். அடுத்த பாடத்தை வலையேற்றிவிட்டுத்தான் உங்கள் பின்னூட்டத்திற்குப் பதில் எழுதுகிறேன்!
//////Blogger Sridhar said...
ReplyDeleteDear Guru,
Your dedication and continued support towards encouraging us (students) is what keeps you on the high by one and all.
Best wishes for your book!
Sridhar//////
நன்றி ஸ்ரீதர்!
////Blogger hotcat said...
ReplyDeleteDear Sir,
Super....
-shankar/////
நன்றி சங்கர்!
////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteம்ம் நம்மட பலனும் இருக்கனும் ஜயா..நாளைக்கு பரீட்சை ஒன்று எடுக்கனும் என்டு கஷ்டப் பட்டு படிச்சிட்டு இன்டைக்கு அடையாள அட்டை மாற்ற குடுத்ததால இனி 3 மாசத்துக்கு பரீட்சை செய்ய முடியாத நிலை அட்டமத்து சனி நின்று விளையாடுது..////
எனக்குத்தான் அஷ்டமத்துச் சனி (திருவோணம்)
உங்களுக்குமா?
////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஜயாவை காணவில்லை ? :) busy ஆ இருக்கிறாரு போல .. நீங்கள் அறுதலாய் வாருங்கள்../////
எனக்கு அஷ்டமத்துச் சனி. 26.9.2009 வரை அப்படித்தான் இருக்கும். நடுவில் காய்ச்சல் (fever) வேறு! என்ன செய்வது நண்பரே?
////Blogger Ram said...
ReplyDeleteSir,
When the school will reopen after vocation. We are waiting to come back to the classes/////
வாத்தியாருக்கு நடுவில் உடல் நலமின்மை. அதனால்தான் தாமதம். இன்மேல் சுறுசுறுப்பாக
இருக்கும்!
ஆமாம் ஜயா மகர ராசி திருவோண நட்சத்திரம் ஆதாலால் அட்டமத்து சனி தானே. போகும் போது ஒரு ஆட்டம் போடுது. மனசும் சரி உடலும் சரி எல்லாம் இறைவன் செயல்
ReplyDelete