27.5.09

பஞ்சபூதங்களும் ஜோதிடமும்!

பஞ்சபூதங்களும் ஜோதிடமும்!

பஞ்சபூதங்களுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டா?

உண்டு!

அதைப் பற்றியதுதான் இன்றையப் பாடம். பொறுமையாகப் படியுங்கள்
==================================================================
பூதம் என்றால் நமது மொழியில் அதற்கு வேறு பொருள்

பேய், பிசாசு, பூதம் என்று இல்லாதவற்றைச் சொல்வோம்.

”எங்க ஆத்தா, எனக்கொரு பேயைக் கட்டிவைத்து விட்டார்கள்” என்று
ஆண்களும் “எங்கப்பாரு எனக்கொரு பூதத்தைக் கட்டி வைத்துவிட்டார்; அதோடு
தினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்” என்று பெண்களும் சொல்வதைக்
கேட்டிருக்கிறோம்.

ஆனால் நமக்குப் பயன்படக்கூடியவற்றை எதற்காகப் பூதமாக்கினார்கள்
என்று தெரியவில்லை.

நமது மனக்குமுறல்களுக்குக் காரணமாகும் பூதங்களை அப்படியே வைத்துவிட்டு,
நமக்கு உதவும் பூதங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்

காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் ஆகிய ஐந்தும் தான் அந்தப் பூதங்கள்

நம் முன்னோர்கள் அவற்றைப் பஞ்சபூதங்கள் என்றார்கள்

இவ்வுலகம் காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் எனும் அந்த பஞ்சபூதங்களால்
ஆனது. அவைகள் இல்லையென்றால் எதுவும் இல்லை.

அந்த ஐந்தில் முதல் நான்கை உங்களால் காணவும், உணரவும் முடியும்
அவற்றால்தான் உங்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
அவைகள் இல்லையேல் யாரும் இல்லை!

"Pancha Bhoota's" or the five elements viz Air, Fire, Water,
Earth and Space.
The first four factors are known to all, as they can be felt, seen,
tasted and used.

What is meant by space or 'Akasa"? It can be taken, as all the subtle
forms of energy like Electricity, magnetism, Gravity, and other forces
known and unknown, which bring about stability in creation and its
activation.

The zodiacal signs and planets represent these elements and qualities.
The Vedic seers understood this fact and classified the signs and planets
according to their innate nature.
===================================================================
ராசிகள் நெருப்பு, பூமி, காற்று, நீர் என்று நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அந்தந்த ராசிகளுக்கு அதனதன் தன்மைகள் நிறைந்திருக்கும்.

அவற்றைப் பற்றிய விவரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்
=====================================================================
1
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Fiery Signs)
சூரியனும், குருவும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்

2
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Earthly Signs)
செவ்வாய் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

3.
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Airy Signs)
புதன் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

4
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Watery Signs)
சந்திரனும், சுக்கிரனும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்.

The sign Aries, Leo and Sagittarius are fiery in nature
so also are the Sun and Jupiter.

Taurus, Virgo and Capricorn are earthly signs
so also is the planet Mars.

Gemini, Libra and Aquarius are airy signs and
Mercury is also airy planet.

Cancer, Scorpio and Pisces are watery signs and
so are the planets Venus and Moon.
------------------------------------------------------------------------
சனி, ராகு & கேது ஆகியவைகள் ஆகயத்தைக் குறிக்கும்.
அதோடு ஜாதகதனுக்கு உதவும் சக்தியாகவும் விளங்கும்
Saturn, Rahu and Ketu represent the akasa or subtle forces
and Rahu and Ketu are referred as shadowy planets.

1
Persons who are born in fiery signs exhibit Vitality, Command,
and leadership qualities.
They are assertive and independent.
2Those born in Earthly signs indicate stability, Care for material welfare,
learn the art of making wealth, seek power and position.
They are prudent, practical and cautious, reserved, secretive and methodical.
Hence when majority of the planets occupy earthly signs
business is the best option.
Building, Mining, and all slow and laborious jobs requiring time labor
and perseverance go people born in earthly signs.

3
Airy signs are connected with the mind or mental experiences.
They are cheerful, gentle amicable, courteous and refined human beings.
They have good intellect and fertile imagination.
They are idealistic, artistic, good musicians, dancers, inquisitive
and well informed.
These people exert much and suffer nervous troubles.
All professions where mental exertion is more,
then the physical suit them best.
Musicians, accountants, artistes, poets, lawyers, reporters,
newsreaders, lecturers, scientists, aviators and astronaughts
are some of the professions falling in airy signs.

4
The mind of persons born in watery sign is receptive, contemplative,
sensitive, and assimilative.
When majority of the planets are posited in watery signs the native
becomes very sensitive, timid, psychic and often lack energy.
Watery signs favor all employment's connected with Liquids,
Shipping, Breweries, Textile, fisheries, Milk dairies, soft drink
manufacturer's, Medicines, water sellers,
Oil merchants etc come under these signs.
==========================================================================

பிறந்த ஜாதகனுக்கு உள்ள விஷேசத் தன்மைகளைத் தெரிந்து கொள்ள
ராசிகளை மேலும் மூன்று விதமாகப் பிரித்துள்ளார்கள்.
யார் பிரித்துள்ளார்கள்?
ஜோதிடத்தை வடிவமைத்த மேதைகள்!
அதற்கு ஆதாரம் உண்டா?
பழைய சுவடிகளில் உள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
எல்லாம் நம்பிக்கை மற்றும் அனுபவ அடிப்படையில் இதுவரை எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதுதான்

சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs)
என்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
The Vedic seers grouped the signs in three categories as Movable, Fixed and Dual.
------------------------------------------------------------------
1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
----------------------------------------------------------------
1
சர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு
சில விஷேசத் தன்மைகள் உண்டு.
சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள்
செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள்.
சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள்
பொறுப்பான பதவிகளுக்குத் தகுதியானவர்கள்.
துணிவு மிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடிவரும்.
ஒரு செயலைத் திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

2
ஸ்திர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் மனவுறுதி மிக்கவர்கள்.
விடாமுயற்சி உடையவர்கள். கடுமையாக உழைப்பவர்கள்.
தனிமையை விரும்புபவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். பொதுவாக இவர்களுக்கு
அரசாங்க வேலைகளும், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைகளும் ஒத்து வரும்.
ஓடிச் சென்று அதிர்ஷ்டத்தைப் பிடித்து இழுத்துவரும் தன்மை எல்லாம்
இவர்களுக்குக் கிடையாது. வாழ்க்கையில் படிப்படியாகச் சென்று வெற்றியை
அடைவார்கள்.

3
உபய ராசிக்காரர்கள் (Persons born in dual signs)
இவர்களுடைய தன்மைக்குக் கடிகாரத்தின் பெண்டூலத்தை உதாரணமாகச்
சொல்லலாம்.
ஊசலாடும் தன்மையை உடையவர்கள்.
வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள்.
புத்திசாலிகள். இரக்கமுடையவர்கள். உணர்ச்சிமிக்கவர்கள்.
எதிலும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.
வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள்.
எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள்.
போராடும் மனப்பான்மை இல்லாதவர்கள்.
எதிலுமே நிலையானதொரு ஈர்ப்பு இல்லாதவர்கள்.
They tend to wander aimlessly and seldom work towards a fixed objective.

Thus the sign ascending in the eastern horizon at the time of the birth
of an individual tells the qualities with which he is born.
He can be trained suitably and given suitable job when
he grows up according to his natural inclination
==============================================================
ராசி/லக்கினத்தைப் பற்றிய உபரித் தகவல்கள்

ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.

1
மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள்
இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்
2
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள்
இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்

இதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?
ஒற்றைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் ஆண் ராசிகள்.
(அதாவது 1, 3, 5, 7, 9,11 )
இரட்டைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் பெண் ராசிகள்.
(அதாவது 2,4,6,8,10,12 )

ஆண் ராசியில்/லக்கினத்தில் ஆண்தான் பிறக்கவேண்டும்:
பெண் ராசியில்/லக்கினத்தில் பெண்தான் பிறக்கவேண்டுமா?

அப்படியெல்லாம் இல்லை. ஆண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு,
அது பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மிகுந்து இருக்கும்.

உதாரணம் ஒரு பெரிய அரசியல் தலைவி. மிதுன லக்கினத்தில்
பிறந்தவர். பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆண்களுக்கு
நிகராகச் செயல்படுபவர். யாரென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்

பெண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெண் தன்மைகள்
மிகுந்திருக்கும். பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

உங்கள் மொழியில் சொன்னால் எதிர்மறையான குணங்களை
உடையவர்களாக இருப்பார்கள்.

சில ஆண்களுக்குப் பெண்களின் குணம் இருக்கும்.
சில பெண்களுக்கு ஆண்களின் குணம் இருக்கும்

சில குடும்பங்களின் மனைவி வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.
சில வீடுகளின் ஆணாதிக்கம் மிகுந்திருக்கும்

இதை விரிவு படுத்தி எழுத நேரமில்லை. சுறுக்கமாகச் சொல்லி
இருக்கிறேன். மீதியை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
================================================================
(தொடரும்)


வாழ்க வளமுடன்!

29 comments:

  1. பாடம் புரிந்தது. ஒருவருடைய குணத்தை/திறமையைப் பற்றி ஆராய வேண்டுமானால் இப்படி எல்ல அம்சங்களயும் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. today's lesson is simple and easy to understand. i have read this in many books but i couldn't understand.now i can understand clearly about the classification of rasis.thank you!

    ReplyDelete
  3. Today's lesson is easy to understand and easy to remember. Thanks.

    ReplyDelete
  4. /////Blogger ananth said...
    பாடம் புரிந்தது. ஒருவருடைய குணத்தை/திறமையைப் பற்றி ஆராய வேண்டுமானால் இப்படி எல்ல அம்சங்களயும் பார்க்க வேண்டும்.////

    கரெக்ட்!

    ReplyDelete
  5. ///////Blogger govind said...
    today's lesson is simple and easy to understand. i have read this in many books but i couldn't understand.now i can understand clearly about the classification of rasis.thank you!/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. /////////Blogger krish said...
    Today's lesson is easy to understand and easy to remember. Thanks.//////

    நன்றி கிரீஷ்!

    ReplyDelete
  7. Dear Sir

    Nice Lessons sir. thanks sir.
    Sara,Isthira and Ubhaya Lagna/Rasi patri vilakkam nandru.

    I sincere thanks sir..Dhalaivi (mithuna lagnum) yaar endru munbae theriyum aiyya.

    Kazhaka Thalaivar(Kadaka Lagnam - moondru uccham) patriyum eludhiyulleergal...Avarai patri Niraya Sirappana Thagavalkal undu Sir..

    Thanks Sir...

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  8. ////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Nice Lessons sir. thanks sir.
    Sara,Isthira and Ubhaya Lagna/Rasi patri vilakkam nandru.
    I sincere thanks sir..Dhalaivi (mithuna lagnum) yaar endru munbae theriyum aiyya.
    Kazhaka Thalaivar(Kadaka Lagnam - moondru uccham) patriyum eludhiyulleergal...Avarai patri Niraya Sirappana Thagavalkal undu Sir..
    Thanks Sir...
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Dear sir,

    This lessons help us to understand the General character of the individual based on the Rasi/Lagna, very useful to know the once character from the overall point of view.

    ReplyDelete
  11. Dear Sir,

    One more thing, if the Rasi and Lagna Differ then which one we can take for general or we have to interperated both in combination, Is the rasi and lagna are different or the same, because for me its Danusu Lagna and Makara Rasi.

    Kindly excuse me for this small doubt.

    ReplyDelete
  12. /////Blogger Ram said...
    Dear sir,
    This lessons help us to understand the General character of the individual based on the Rasi/Lagna, very useful to know the once character from the overall point of view.////

    நன்றி ராம்!

    ReplyDelete
  13. ///////Blogger Ram said...
    Dear Sir,
    One more thing, if the Rasi and Lagna Differ then which one we can take for general or we have to interperated both in combination, Is the rasi and lagna are different or the same, because for me its Danusu Lagna and Makara Rasi.
    Kindly excuse me for this small doubt./////

    லக்கினத்தை வைத்துத்தான் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  14. present sir. there is lot of information. thanks

    ReplyDelete
  15. ////////Blogger saadu said...
    present sir. there is lot of information. thanks////

    நன்றி சாது!

    ReplyDelete
  16. This topic was interesting and simple to understand sir....but i am sad becoz both my lagna is pisces and rasi is gemini...does both have to be ubhaya rasi....i struggle to get my goals sometimes...thanks again for this good topic..

    ReplyDelete
  17. உள்ளேன் ஐயா,பாடம் மிக அருமை.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  18. தங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறேன். ஒருவர் மந்திர தந்திர வித்தைகளில் சித்தி பெற வேண்டுமானால் அல்லது இவை கைவர வேண்டுமானால் ஜாதகத்தில் என்ன கிரக நிலை இருக்க வேண்டும், குறைந்த பட்சம் எந்த கிரகம் அனுகூலமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  19. நன்றி நல்ல ஒரு பாடம். சிக்கல் இல்லாத பாடமாகையால் இலகுவாக நமக்கு(எனக்கு ;) ) புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.

    ReplyDelete
  20. பாடம் அருமை...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  21. Fiery தன்மை கொண்ட குரு, சூரியன் இவர்களுக்கு அதே தன்மை கொண்ட, தனுசும், சிம்மமும் ஆட்சி வீடாக இருக்கிறது. அதே போல் air தன்மை கொண்ட புதனுக்கு அதே தன்மை கொண்ட மிதுனம் ஆட்சி வீடாக இருக்கிறது. மற்ற கிரகங்களுக்கு அந்த வசதி இல்லை.

    ///உபய ராசி காரர்கள்வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள்.
    வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள்.///
    இதற்கு உதாரணம் சொல்வதானால் ஆற்றில் விழுந்த காரணத்தால் அதில் குளித்து விட்டு வருபவர்கள். அப்போதைக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் லட்சியம். எந்த வேலை கிடைக்கிறதோ அதுதான் லட்சிய/ விரும்பிய வேலை. சரியா ஆசிரியரே.

    இனி திங்கட்கிழமைதான் வகுப்பறைக்கு வர இயலும்.

    ReplyDelete
  22. /////Blogger Thanuja said...
    This topic was interesting and simple to understand sir....but i am sad becoz both my lagna is pisces and rasi is gemini...does both have to be ubhaya rasi....i struggle to get my goals sometimes...thanks again for this good topic..////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  23. /////Blogger dhanan said...
    உள்ளேன் ஐயா,பாடம் மிக அருமை.
    அன்புடன்,
    மதுரை தனா./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. ///////Blogger ananth said...
    தங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறேன். ஒருவர் மந்திர தந்திர வித்தைகளில் சித்தி பெற வேண்டுமானால் அல்லது இவை கைவர வேண்டுமானால் ஜாதகத்தில் என்ன கிரக நிலை இருக்க வேண்டும், குறைந்த பட்சம் எந்த கிரகம் அனுகூலமாக இருக்க வேண்டும்.//////

    கேது அனுகூலமாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  25. /////Blogger Emmanuel Arul Gobinath said...
    நன்றி நல்ல ஒரு பாடம். சிக்கல் இல்லாத பாடமாகையால் இலகுவாக நமக்கு(எனக்கு ;) ) புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.////

    நன்றி இமானுவேல்!

    ReplyDelete
  26. /////////Blogger வேலன். said...
    பாடம் அருமை...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  27. ///////Blogger ananth said...
    Fiery தன்மை கொண்ட குரு, சூரியன் இவர்களுக்கு அதே தன்மை கொண்ட, தனுசும், சிம்மமும் ஆட்சி வீடாக இருக்கிறது. அதே போல் air தன்மை கொண்ட புதனுக்கு அதே தன்மை கொண்ட மிதுனம் ஆட்சி வீடாக இருக்கிறது. மற்ற கிரகங்களுக்கு அந்த வசதி இல்லை.
    ///உபய ராசி காரர்கள்வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள்.
    வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள்.///
    இதற்கு உதாரணம் சொல்வதானால் ஆற்றில் விழுந்த காரணத்தால் அதில் குளித்து விட்டு வருபவர்கள். அப்போதைக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் லட்சியம். எந்த வேலை கிடைக்கிறதோ அதுதான் லட்சிய/ விரும்பிய வேலை. சரியா ஆசிரியரே.
    இனி திங்கட்கிழமைதான் வகுப்பறைக்கு வர இயலும்./////

    சரிதான் ஆனந்த்! நன்றி!

    ReplyDelete
  28. ஐயா,
    பாடம் புரிந்தது

    நன்றி

    ReplyDelete
  29. sir, what does it mean by kethu annookulamaka irukka vendum ? need more explanations with examples please..thanks

    sir is it true if ur star happens to be the 26 , 25 th from the star saturn is placed in ur horoscope then the 71/2 period will be very bad ?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com