3.5.09

வயது வந்தவர்களுக்கு மட்டும் (For 18+ only)

வயது வந்தவர்களுக்கு மட்டும் (For 18+ only)

கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்!
மற்றவர்கள் பதிவை விட்டு விலகவும்

வகுப்பறை என்பதற்காக
வயது வந்தவர்களுக்கான பதிவைப் போடக்கூடாதா என்ன?

வயது வந்தவர்கள் scroll down செய்து பார்க்கும் படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


தேர்தல் வருகிறது.
தவறாமல் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்
அடுத்த அரசைத் தேர்வு செய்து
வளம் மிக்க நமது நாட்டைக் காப்பதும் நமது பொறுப்புத்தான்
ஆகவே தகுதியானவர்களுக்கே உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்
தவறாமல் பதிவு செய்யுங்கள்

வாழ்க பாரதம். வளர்க அதன் பெருமை!
==============================
இறக்குமதிச் சரக்கு.
மின்னஞ்சலில் வந்தது.
மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது

வாழ்க வளமுடன்!

44 comments:

  1. வணக்கம் ஐயா,தலைப்பை பார்த்து ஏற்பட்ட மகிழ்ச்சி சில நொடிகளே நீடித்தது.இருப்பினும் தங்கள் செய்தி அதை மறக்கச்செய்துவிட்டது.காலத்திற்க்கேற்ற செய்திக்கு நன்றிகள்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  2. இப்படியும் ஒரு அல்வாவா?

    கலக்கிட்டீங்க ஆசானே!

    ஆனாலும் சிந்திக்க மறேவேன்.

    அன்புடன்,

    செந்தில் முருகன். வே.

    ReplyDelete
  3. மேலே ஒரு பொண்ணோட போட்டோ போட்டுருக்கிங்களோ...அந்தப்பொண்ணுக்கு 18 வயசு ஆயிடுச்சுங்களா....
    வாத்தியாரே..???

    ReplyDelete
  4. :( மிகுந்த எதிர்பார்ப்போடு வந்தேன்.

    ReplyDelete
  5. superb halwa

    kalakkal post

    sure vote pottudrom

    ReplyDelete
  6. தலைப்பைப் பார்த்து பயந்தே போனேன்... தங்களுக்கு ஏன் இப்படி ஒரு பதிவு எழுத ஆசை வந்தது என்று.

    ReplyDelete
  7. "தேர்தல் வருகிறது.
    தவறாமல் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்"
    -SP.VR. SUBBIAH

    "எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?"
    -கண்ணதாசன்

    :-))))))))))))))))))

    ReplyDelete
  8. கவுத்துபுட்டீங்களே..............

    ReplyDelete
  9. நடத்துங்க நடத்துங்க.... ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  10. பிரிடிஷ்காரன் உருவாக்கின நாட்டிற்க்கு இம்புட்டு "பில்ட் அப்" ஆ ?

    அமெரிக்க / பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட "அனைவரும் சமம்" என்ற கோட்பாடு உண்டு. இன்னும் இங்க ஒவ்வொரு காரணத்தினால் சண்டை தானே !

    ஒரு வேலை, இன்னும் பிரிட்டிஷ்காரன் இருந்திருந்தால்...எப்படி சமூக சீர்திருத்தங்கள் நடந்தனவோ, அதன் அடிப்படையில், "இந்திய" என்ற ஒரு நாடு இல்லாமல் இருந்திருந்தால், மக்கள் நன்றாக இருந்திருப்பார்கள்.

    ReplyDelete
  11. Dear Sir

    Kalakittinga Sir...Thank you Sir- to remember our duty.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  12. what a idea! Timely writes great sir!

    ReplyDelete
  13. ////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,தலைப்பை பார்த்து ஏற்பட்ட மகிழ்ச்சி சில நொடிகளே நீடித்தது.இருப்பினும் தங்கள் செய்தி அதை மறக்கச்செய்துவிட்டது.காலத்திற்க்கேற்ற செய்திக்கு நன்றிகள்.
    அன்புடன்,
    மதுரை தனா.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger senthil said...
    இப்படியும் ஒரு அல்வாவா?
    கலக்கிட்டீங்க ஆசானே!
    ஆனாலும் சிந்திக்க மறேவேன்.
    அன்புடன்,
    செந்தில் முருகன். வே.//////

    அல்வா ருசித்தது அல்லவா? அது போதும்!

    ReplyDelete
  15. /////Blogger நாஞ்சில் பிரதாப் said...
    மேலே ஒரு பொண்ணோட போட்டோ போட்டுருக்கிங்களோ...அந்தப்பொண்ணுக்கு 18 வயசு ஆயிடுச்சுங்களா.... வாத்தியாரே..???/////////

    அந்தப் பெண்ணைக் கேட்டுவிட்டுத்தான் பதிவில் போட்டிருக்கிறேன். பத்து ஆண்டுகளாக அந்தப் பெண்ணிற்குப் பதினெட்டுவயசுதான்!:-)))))

    ReplyDelete
  16. /////Blogger KS said...
    kalakkal///////

    நன்றி கே.எஸ்!

    ReplyDelete
  17. ////Blogger VIKNESHWARAN said...
    :( மிகுந்த எதிர்பார்ப்போடு வந்தேன்.//////

    என்னிடம் நிறைய ஏ' கதைகள் ஊள்ளன. வாத்தியார் வேலை பார்ப்பதால் அவற்றை எழுத முடியாது. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டமா விக்னேஷ்?

    ReplyDelete
  18. /////Blogger sakthi said...
    superb halwa
    kalakkal post
    sure vote pottudrom//////

    ஆ...அதுக்காகத்தான் பதிவு! மறக்காமல் வோட்டைப் போடுங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger saravana karthikeyan said...
    தலைப்பைப் பார்த்து பயந்தே போனேன்... தங்களுக்கு ஏன் இப்படி ஒரு பதிவு எழுத ஆசை வந்தது என்று./////

    உங்கள் வாத்தியார் மீது உங்களுக்கு நம்பிக்கை வேண்டாமா? தலைப்பைப் பார்த்து அப்படியொரு முடிவிற்கு ஏன் வந்தீர்கள்?:-(((((((

    ReplyDelete
  20. /////Blogger ♠புதுவை சிவா♠ said..
    "தேர்தல் வருகிறது.
    தவறாமல் உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்"
    -SP.VR. SUBBIAH
    "எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?"
    -கண்ணதாசன் :-))))))))))))))))))/////

    நமக்கு விதித்ததைப் பற்றி கவியரசர் சொல்லியபடி கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் தேசத்தின் விதியை
    நாம் நினைக்காமல் இருக்கலாமா சிவா?

    ReplyDelete
  21. ////Blogger தமிழினி said...
    உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்
    பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit///////

    தகவலுக்கு நன்றி நண்பரே. இணைத்து விடுகிறேன்!

    ReplyDelete
  22. /////Blogger தீப்பெட்டி said...
    கவுத்துபுட்டீங்களே............../////

    அடிபடாமல் கவுத்திருக்கிறேன். அதற்கு சந்தோஷப்படுங்கள்!

    ReplyDelete
  23. /////Blogger எட்வின் said...
    நடத்துங்க நடத்துங்க.... ம்ம்ம்ம்ம்ம்/////

    நாம் எங்கே நடத்துவது? எல்லாம் அவன் செயல்!

    ReplyDelete
  24. ////Blogger Om said...
    பிரிடிஷ்காரன் உருவாக்கின நாட்டிற்க்கு இம்புட்டு "பில்ட் அப்" ஆ ?
    அமெரிக்க / பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட "அனைவரும் சமம்" என்ற கோட்பாடு உண்டு. இன்னும் இங்க ஒவ்வொரு காரணத்தினால் சண்டை தானே !
    ஒரு வேலை, இன்னும் பிரிட்டிஷ்காரன் இருந்திருந்தால்...எப்படி சமூக சீர்திருத்தங்கள் நடந்தனவோ, அதன் அடிப்படையில், "இந்திய" என்ற ஒரு நாடு இல்லாமல் இருந்திருந்தால், மக்கள் நன்றாக இருந்திருப்பார்கள்./////

    கவலைப்படாதீர்கள். இந்தியா வல்லரசாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அப்போது நீங்கள் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்!அப்போது உங்களுடைய இந்தச் சிந்தனை மாறும்!

    ReplyDelete
  25. ////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kalakittinga Sir...Thank you Sir- to remember our duty.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    எல்லாம் உங்களுக்காகத்தான் ராஜாராமன்!

    ReplyDelete
  26. /////Blogger nellai ram said...
    what a idea! Timely writes great sir!//////

    இரவல் சரக்கு! மொழிமாற்றம் மட்டுமே அடியேனுடையது!

    ReplyDelete
  27. ஐயா,வர்க்கோத்தமம் பெறும் கிரகங்கள் அஸ்தமனம் ஆனாலும் பலமுடன் இருக்குமா?அல்லது பலமிழந்து விடுமா?

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  28. ஆசிரியருக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை அவரே கெடுத்துக்கொள்ள கூடாதல்லவா. நிறைய பெண்கள் வேறு இந்த பதிவை படிக்கிறார்கள். அவர்களையும் அனுசரித்துதான் எதையும் பதிவிட வேண்டி உள்ளது.

    இன்னொன்று கட்சி பேதமில்லாமல் மக்கள் சேவையே பெரிதென மதிப்போர் மக்கள் பிரதிநிதிளாக வர வேண்டும். மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயகத்தின் தத்துவம் நிலைபெற வேண்டும்.

    ReplyDelete
  29. ////Blogger dhanan said...
    ஐயா,வர்க்கோத்தமம் பெறும் கிரகங்கள் அஸ்தமனம் ஆனாலும் பலமுடன் இருக்குமா?அல்லது பலமிழந்து விடுமா?
    அன்புடன்,
    மதுரை தனா./////

    வர்கோத்தமம் பெற்றாலும் நீசம் நீசம்தான். பலன் இருக்காது!

    ReplyDelete
  30. /////Blogger ananth said...
    ஆசிரியருக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. அதை அவரே கெடுத்துக்கொள்ள கூடாதல்லவா. நிறைய பெண்கள் வேறு இந்த பதிவை படிக்கிறார்கள். அவர்களையும் அனுசரித்துதான் எதையும் பதிவிட வேண்டி உள்ளது.
    இன்னொன்று கட்சி பேதமில்லாமல் மக்கள் சேவையே பெரிதென மதிப்போர் மக்கள் பிரதிநிதிளாக வர வேண்டும். மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயகத்தின் தத்துவம் நிலைபெற வேண்டும்./////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. /////Blogger புதுகைத் தென்றல் said...
    :))))))///////

    நீங்கள் வருவீர்கள் என்று தெரியும். ஸ்மைலிக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  32. This need to learned by the Young lads also, they are the future adult of the nation, Every one has the right to learn this in the young Age, it should be 6+ not 18+.

    ReplyDelete
  33. ஒ.. இதுதான் கோயம்புத்தூர் குசும்பா..???

    கலக்கல்...

    ReplyDelete
  34. ஐயா,தங்கள் கருத்திற்கு நன்றிகள்.தங்கள் பாடங்களில் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட புத்தியை துல்லியமாய் கணக்கிடும் முறையை தந்துள்ளீர்கள்.அதுபோல் குழந்தை பிறக்கும் போதே குறிப்பிட்ட திசையில் சில காலம் முடிந்துவிட வாய்ப்புள்ளதே.அதை கழித்து சரியாக கணிக்க சுருக்கமான வழியிருந்தால் தயவுடன் கூறவும்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  35. பொண்ணு ஃபோடோ போட்டு ஏமாத்திட்டிங்க!

    ReplyDelete
  36. வணக்கம் ஐயா

    நான் இன்று காலையே வந்துவிட்டேன் ஆனால் பிணூட்டம் இப்போதுதான்
    எழுதுகிறேன்.இப்படி ஏதாவது பொடி வைத்திருப்பீர்கள் என்று தெரியும் ஆனால்
    கொஞ்சம் தயங்கி,தயங்கி கீழே வந்தேன் நல்லவேளை நல்ல செய்தி.
    கண்டிப்பாக அனைவரும் ஒட்டு போடணும் இல்லை என்றால்
    போடாத நம் ஒட்டை வேறு யாராவது போட்டு விடுவார்கள் .
    கள்ள ஓட்டை தவிர்ப்பதற்காககவாவது நம் ஒட்டை நாம் போட வேண்டும்.

    ReplyDelete
  37. //ஒ.. இதுதான் கோயம்புத்தூர் குசும்பா..??//

    Repettu..

    ReplyDelete
  38. ///Blogger Ram said...
    This need to learned by the Young lads also, they are the future adult of the nation, Every one has the right to learn this in the young Age, it should be 6+ not 18+.////

    6+ ஐ விடுங்கள் 12+ ற்கே இப்போது தமிழைப் படிக்கத் தெரியாது.
    எல்லாம் இங்கிலீஷ் மீடியம் செய்யும் மாய ஜாலம்!

    ReplyDelete
  39. ////Blogger வண்ணத்துபூச்சியார் said...
    ஒ.. இதுதான் கோயம்புத்தூர் குசும்பா..???
    கலக்கல்.../////

    வசிப்பது கோயம்புத்தூர் என்றாலும் பிறந்தது சிவகங்கை மாவட்டம் சுவாமி!

    ReplyDelete
  40. ///Blogger dhanan said...
    ஐயா,தங்கள் கருத்திற்கு நன்றிகள்.தங்கள் பாடங்களில் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட புத்தியை துல்லியமாய் கணக்கிடும் முறையை தந்துள்ளீர்கள்.அதுபோல் குழந்தை பிறக்கும் போதே குறிப்பிட்ட திசையில் சில காலம் முடிந்துவிட வாய்ப்புள்ளதே.அதை கழித்து சரியாக கணிக்க சுருக்கமான வழியிருந்தால் தயவுடன் கூறவும். அன்புடன்,
    மதுரை தனா./////

    ஜாதகம் கணிக்கும்போது கணினி அதைப்பார்த்துக்கொள்ளும் சாமி.
    நீங்கள் கவலையை விடுங்கள்.

    ReplyDelete
  41. ////Blogger pappu said...
    பொண்ணு ஃபோடோ போட்டு ஏமாத்திட்டிங்க!/////

    பொண்ணு போட்டோவைப் போட்டதன் காரணத்தை நீங்கள் ஒருவர்தான் சரியாகக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்
    மற்றவர்கள் எல்லாம் தலைப்பிலேயே ஏமார்ந்திருக்கிறார்கள்!

    ReplyDelete
  42. /////Blogger sundar said... வணக்கம் ஐயா
    நான் இன்று காலையே வந்துவிட்டேன் ஆனால் பின்னூட்டம் இப்போதுதான்
    எழுதுகிறேன்.இப்படி ஏதாவது பொடி வைத்திருப்பீர்கள் என்று தெரியும் ஆனால்
    கொஞ்சம் தயங்கி,தயங்கி கீழே வந்தேன் நல்லவேளை நல்ல செய்தி.
    கண்டிப்பாக அனைவரும் ஒட்டு போடணும் இல்லை என்றால்
    போடாத நம் ஒட்டை வேறு யாராவது போட்டு விடுவார்கள் .
    கள்ள ஓட்டை தவிர்ப்பதற்காககவாவது நம் ஒட்டை நாம் போட வேண்டும்.//////

    சரி, நல்லவராகப் பார்த்து வாக்கை அளியுங்கள்!

    ReplyDelete
  43. /////Blogger Geekay said...
    //ஒ.. இதுதான் கோயம்புத்தூர் குசும்பா..??//
    Repettu..////

    இதுதான் இரட்டை நாயனம் என்பதா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com