4.5.09

சொர்க்கம் எங்கே?

சொர்க்கம் எங்கே?

சொர்க்கம் மதுவிலே' என்று கவியரசர் பாடலைச் சொல்ல வருகிறேன்
என்று நினைப்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

நமீதாவைப் பற்றிச் சொல்ல வருகிறேன் என்பவர்களும் ஜூட் விடவும்

இது வேறு ஒரு சொர்க்கத்தைப் பற்றிய கட்டுரை!
=================================================
"அப்பா....."

"என்னடா செல்லம்?"

"கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா?"

"ஏனடி செல்லம், கடவுளைத் தேடுகிறாய்?"

"கடவுளை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது அப்பா!"

"நீ நன்றாகப் படிக்க வேண்டும். டீச்சர் கொடுக்கும் ஹோம் ஒர்க்கையெல்லாம்
ஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்பா, அம்மா பேச்சைத் தட்டக்கூடாது.
காலையிலும் மாலையிலும் தவறாமல் பிரேயர் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் செய்தால் நீ நல்ல பெண்ணாகிவிடுவாய். நல்ல பெண்ணாகி
விட்டால் கடவுளே உன்னைப் பார்க்க வருவார்"

"சரி, இப்போது கடவுள் எங்கே இருக்கிறார்?"

"கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்!"

"சொர்க்கம் எங்கே இருக்கிறது?"

அப்பா வானத்தை நோக்கி கைகளை உயர்த்திக் காட்டினார். குழந்தை
விடவில்லை. தொடர்ந்து கேட்டது:

"சொர்க்கத்திற்கு எப்படிப் போக வேண்டும்? ஏரோப்பிளேனில் போக வேண்டுமா?"

"நாமாகப் போக முடியாது. கடவுள் அழைப்பு அனுப்புவார் அப்போதுதான்
போக முடியும்"

அப்பா ஒருவழியாகச் சமாளித்தார்.

குழந்தைவிடவில்லை. நச்சரிப்புத் தொடர்ந்தது.

"சொர்க்கத்தை யாரப்பா உருவாக்கினார்கள்? (who created heaven?)"

"கடவுள்தான் உருவாக்கினார்"

"சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் எங்கே அப்பா இருந்தார்?"

அப்பாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு கோபமும் பொத்துக் கொண்டு
வந்துவிட்டது.

"அதையெல்லாம் பெரியவளானால் நீயே தெரிந்து கொள்வாய்! இப்போது
போய் விளையாடு, போ! என்று அனுப்பிவைத்துவிட்டார்.

ஐந்து நிமிடம் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று
உணர்வு மேலிடப் பேச ஆரம்பித்தது.

"அப்பா நான் கண்டு பிடித்துவிட்டேன். நரகம் இருப்பதாகச் சொல்லுவீர்கள்
அல்லவா? சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் அங்கேதான்
இருந்திருக்க வேண்டும்."

அப்பா அசடு வழிய, வேறு வழி தெரியாமல் பதில் சொன்னார்.

"ஆமாம், அங்கேதான் இருந்திருப்பார்"

"நரகத்தை உருவாக்கியவர் யாரப்பா?"

"அதையும் கடவுள்தான் உருவாக்கினார்!"

"நரகத்தை உருவாக்கியது தவறில்லையா? ஏனப்பா கடவுள்கூட தவறுகளைச்
செய்வாரா?"

"சில சமயம் செய்வார்" என்று சொல்லித் தன் குழந்தையை அனுப்பிவைத்த
தந்தை தனக்குள் முனுமுனுத்துக் கொண்டார்

"கடவுள் செய்த முதல் தவறு உலகத்தைப் படைத்தது. இரண்டாவது தவறு
பெண்ணைப்படைத்தது. மூன்றாவது தவறு பெண்ணைக் கண்டு ஆணைச்
சொக்கவைத்து, அவளை மணந்து கொள்ள வைத்தது. நான்காவது தவறு
அவள் மூலம் குழந்தைகளைப் பெற்று பந்தம் பாசம் என்று மனிதனை
ஒரு வலைக்குள் பிடித்துப்போட்டது."
=======================================================
அதில் உண்மை இல்லை.

மனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.

சொர்க்கம் நரகம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை.

கடவுள் இருப்பது மட்டும் உண்மை!

அவரைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம்
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர்.
earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.

அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !"

(உருவாய் என்றால் உருவமுள்ளவனாகவும், அருவாய் என்றால் உருவமற்ற
நிலையை உடையவனாகவும் என்று பொருள்!)
===============================================
என்னை எழுதவைப்பவரும் அவர்தான்;
உங்களைப் படிக்கவைப்பவரும் அவர்தான்:-))))

இது உண்மையா?

இல்லை! இதுவும் தவறு.

நம் செயல்களுக்கு அவர் பொறுப்பில்லை!
அதுபோல நமது பாவ, புண்ணியங்களுக்கும் அவர் பொறுப்பில்லை!

நல்ல செயல்களைச் செய்து பிறவிக்கடனைக் கழியுங்கள்
இல்லையென்றால் மீண்டும் மீண்டும் பிறந்து அவதிப்பட நேரிடும்!

வாழ்க வளமுடன்!

39 comments:

  1. Hi,
    I am joining new to this blog.
    Your articles are intersting sir.

    ReplyDelete
  2. மூன்று நாள் சென்று பதிவை பார்த்தால் ஒரே ஆன்மீக கருத்துகள். வாழ்க உங்கள் பணி

    ReplyDelete
  3. ///Blogger sundar said...
    present sir/////

    வருகைப் பதிவு போட்டாயிற்று சுந்தர்!

    ReplyDelete
  4. ////Blogger Thanuja said...
    Hi,
    I am joining new to this blog.
    Your articles are intersting sir.////

    வாருங்கள் சகோதரி, உங்கள் வருகை நல்வரவாகட்டும்
    முதலில் பழைய பாடங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் படியுங்கள்
    மொத்தம் 200 பாடங்கள் உள்ளது!

    அம்மாடியோவ்! 200 ஆ?
    படிப்பது கஷ்டம் சார்!

    ReplyDelete
  5. Blogger krish said...
    மூன்று நாள் சென்று பதிவை பார்த்தால் ஒரே ஆன்மீக கருத்துகள். வாழ்க உங்கள் பணி/////

    அடுத்துத் துவங்க உள்ள ஜோதிடப் பாடம் கடினமானது!
    அதனால் மனதிற்கு ஒரு relax வேண்டி இடையில் ஆன்மிகம்!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா

    இந்தியாவில் அனைத்து பள்ளிக்கும் விடுமுறை ,அனைத்து ஆசிரியர்களும்
    வீட்டில் போய் ஓய்வு எடுத்து கொண்டிருக்க , நீங்கள் மட்டும் தான் கடமை
    தவறாமல் வகுப்றை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் ,கண்டிப்பாக இந்த சேவை
    உங்கள் கணக்கில் ஏறிக்கொண்டு இருக்கும். சொர்கதிலும் உங்களுக்கு
    ஆசிரியர் பதவி reserved.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா

    கடவுள் நாம் ஏவளவு பணம் சம்பாதித்தோம் என்று கேட்கமாட்டார்,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு பணம் உதவி செய்தோம் என்று கேட்பார்,

    கடவுள் நாம் எத்தனை பொருள் வாங்கினோம் என்று கேட்கமாட்டர் ,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு தானம் கொடுத்தோம் என்று கேட்பார்,

    கடவுள் நாம் எத்தனை படித்தோம் என்று கேட்க மாட்டார்,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு காற்றுகோடுத்தோம் என்று கேட்பார்,

    கடவுள் நாம் எத்தனை வகையான உணவு சாப்பிட்டோம் என்று கேட்க மாட்டார்,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு அன்ன தானம் செய்தோம் என்று கேட்பார்,

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா

    இப்படி ஒரு கருத்தை எழுத வேண்டும் என ரொம்ப நேரம் கஸ்டப்பட்டு ,
    சிரமப்பட்டு , யோசித்தேன் ஒன்றும் மூளைக்கு எட்ட வில்லை அதனால் தான்
    ஒரு புத்தகத்தில் படித்த கருத்தை copy அடித்து எழுதுகிறேன்.

    ReplyDelete
  9. //////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    இந்தியாவில் அனைத்து பள்ளிக்கும் விடுமுறை ,அனைத்து ஆசிரியர்களும்
    வீட்டில் போய் ஓய்வு எடுத்து கொண்டிருக்க , நீங்கள் மட்டும் தான் கடமை
    தவறாமல் வகுப்றை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் ,கண்டிப்பாக இந்த சேவை
    உங்கள் கணக்கில் ஏறிக்கொண்டு இருக்கும். சொர்க்கதிலும் உங்களுக்கு
    ஆசிரியர் பதவி reserved.////////

    அங்கே என்ன பாடத்தை நடத்துவது? அதையும் சொல்லிவிடுங்கள்!

    ReplyDelete
  10. Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    கடவுள் நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்று கேட்கமாட்டார்,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு பணம் உதவி செய்தோம் என்று கேட்பார்,
    கடவுள் நாம் எத்தனை பொருள் வாங்கினோம் என்று கேட்கமாட்டர் ,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு தானம் கொடுத்தோம் என்று கேட்பார்,
    கடவுள் நாம் எத்தனை படித்தோம் என்று கேட்க மாட்டார்,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு கற்றுக் கொடுத்தோம் என்று கேட்பார்,
    கடவுள் நாம் எத்தனை வகையான உணவு சாப்பிட்டோம் என்று கேட்க மாட்டார்,
    ஆனால் நாம் எத்தனை பேருக்கு அன்ன தானம் செய்தோம் என்று கேட்பார்,//////

    இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:

    எத்தனை கார் வைத்திருந்தோம் என்று கேட்க மாட்டார்
    எத்தனை பேருக்கு லிஃப்ட் கொடுத்தோம் என்று கேட்பார்

    ReplyDelete
  11. ////Blogger sundar said...
    வணக்கம் ஐயா
    இப்படி ஒரு கருத்தை எழுத வேண்டும் என ரொம்ப நேரம் கஸ்டப்பட்டு ,
    சிரமப்பட்டு , யோசித்தேன் ஒன்றும் மூளைக்கு எட்ட வில்லை அதனால் தான்
    ஒரு புத்தகத்தில் படித்த கருத்தை copy அடித்து எழுதுகிறேன்./////

    நானும் படித்திருக்கிறேன். பரிட்சையில் மட்டும்தான் காப்பி அடிக்கக்கூடாது!

    ReplyDelete
  12. /////////Blogger saadu said...
    present sir//////

    வருகைப் பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  13. வணக்கம் ஆசானே,

    திருவள்ளுவர் கூறியது போல் இப்பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும். அதற்கு அவன் அருளாலே அவன் தாள் வண‌ங்க‌ வேண்டும்.

    நல்ல சிந்த‌னையை நாள்தோறும் எங்கள் மனதில் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மிகுந்த நன்றி.

    அன்புடன்,

    செந்தில் முருகன். வே.

    ReplyDelete
  14. //சொர்கதிலும் உங்களுக்கு
    ஆசிரியர் பதவி reserved.
    //

    சுந்தர் சார், இந்த பதிவில் தான் சொர்ககம் இல்லைனு வாத்தியார் தெளிவா சொன்னார்..அதுக்குள்ளயேவா??

    ReplyDelete
  15. /////அதில் உண்மை இல்லை.

    மனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.

    சொர்க்கம் நரகம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை.////

    இதனை நான் கடுமையாக மறுக்கிறேன்..
    ஏன் என்றால் சுவர்கத்தையும் நரகத்தையும், அகிழ உலகத்திற்கே இறுதித் தூதராக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நேரில் கண்டுவிட்டு வந்திருக்கிறார்கள்... அடுத்து குர்ஆன் பல இடங்களில் சுவர்கத்தையும் நரகத்தையும் பற்றி சொல்லியிருக்கின்றது. குர்ஆன் மட்டுமே விஞ்ஞானத்திற்கும் கண்டுபிடிப்புகளுக்கும் முறன் இல்லாமல் இருக்கிறது என்று பலருக்கும் தெரியும்
    குர்ஆன் உண்மை என்று வாதிட http://www.harunyahya.com/ மற்றும் http://www.understandquran.com/பதர்த்துக் கொள்ளவும்
    நன்றி

    ReplyDelete
  16. /////Blogger senthil said...
    வணக்கம் ஆசானே,
    திருவள்ளுவர் கூறியது போல் இப்பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டும். அதற்கு அவன் அருளாலே அவன் தாள் வண‌ங்க‌ வேண்டும்.
    நல்ல சிந்த‌னையை நாள்தோறும் எங்கள் மனதில் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மிகுந்த நன்றி.
    அன்புடன்,
    செந்தில் முருகன். வே.////

    எல்லாம் உங்களைப் போன்ற மாணவச் செல்வங்களுக்காத்தான்!

    ReplyDelete
  17. /////Blogger VA P RAJAGOPAL said...
    present sir,/////////

    வருகைப்பதிவு போட்டாயிற்று நண்பரே!

    ReplyDelete
  18. ////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    //சொர்கதிலும் உங்களுக்கு
    ஆசிரியர் பதவி reserved. //
    சுந்தர் சார், இந்த பதிவில் தான் சொர்ககம் இல்லைனு வாத்தியார் தெளிவா சொன்னார்..அதுக்குள்ளயேவா??////

    ஆசிரியரின் மேல் உள்ள அன்பு அவர் கண்களை மறைத்துவிட்டது.

    ReplyDelete
  19. Blogger Gifarz said...
    /////அதில் உண்மை இல்லை.
    மனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.
    சொர்க்கம் நரகம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை.////
    இதனை நான் கடுமையாக மறுக்கிறேன்..
    ஏன் என்றால் சுவர்கத்தையும் நரகத்தையும், அகிழ உலகத்திற்கே இறுதித் தூதராக வந்த முஹம்மத் (ஸல்) அவர்கள் நேரில் கண்டுவிட்டு வந்திருக்கிறார்கள்... அடுத்து குர்ஆன் பல இடங்களில் சுவர்கத்தையும் நரகத்தையும் பற்றி சொல்லியிருக்கின்றது. குர்ஆன் மட்டுமே விஞ்ஞானத்திற்கும் கண்டுபிடிப்புகளுக்கும் முறன் இல்லாமல் இருக்கிறது என்று பலருக்கும் தெரியும்
    குர்ஆன் உண்மை என்று வாதிட http://www.harunyahya.com/ மற்றும் http://www.understandquran.com/பதர்த்துக் கொள்ளவும்
    நன்றி///////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. ஐயா,
    வணக்கம். இணைய இணைப்பு பழுதடைந்ததால் இவ்வளவுநாள் வகுப்புக்கு வரமுடியவில்லை.//
    சொர்க்கமோ - நகரமோ - நமக்கு வாய்த்த மனைவி - குழந்தைகள் மூலமே நாம் அடையமுடியும்.சரியா அய்யா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா,கதை அருமை.பிறருக்கு சேவை செய்து புண்ணியம் தேடாவிட்டாலும் பாவமாவது செய்யாமல் இருக்கலாம்.அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  22. வேறொரு கவிஞர் காதலித்து பார். சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் என்று சொல்லியிருக்கிறார். எனக்கு காதலிக்கும் பாக்கியம் (அல்லது துர்பாக்கியம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்) இது வரை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது. ஏனெனில் எனக்கு திருமணமாகி விட்டது.

    திடீரென்று வேதாந்தியாகி விட்டீர்கள். நான் இப்படி சொன்னதும் ஆரம்பத்திலிருந்து நான் இப்படிதான் என்று தாங்கள் சொல்லக் கூடும்.

    ReplyDelete
  23. ////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    //சொர்கதிலும் உங்களுக்கு
    ஆசிரியர் பதவி reserved. //
    சுந்தர் சார், இந்த பதிவில் தான் சொர்ககம் இல்லைனு வாத்தியார் தெளிவா சொன்னார்..அதுக்குள்ளயேவா??////

    ஆசிரியரின் மேல் உள்ள அன்பு அவர் கண்களை மறைத்துவிட்டது.//

    சரியான நேரத்தில் உதவிக்கு வந்ததற்கு நன்றி ஐயா !

    சொர்ககம் ,நரகம் என்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை ஆனால் மறு பிறவி ,முற்பிறவி என்பதில் நம்பிக்கை
    இருக்கிறது அதில் இருந்து விடு பெற்று முக்தி அடைதல் அதிலும் நம்பிக்கை
    இருக்கிறது, அது தான் ஆசிரியருக்கு அது எதுவாக இருந்தாலும் அது சொர்ககமாக
    இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், வாத்தியாருடாய அன்பு எப்போதும் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காக அங்கயும் அவருக்கு வாத்தியார் பதவி என்று சொன்னேன் .அதற்குள் அறிவு மணியை எடுத்து வந்து அடித்து விட்டீர்களே நண்பரே !

    ReplyDelete
  24. /////Blogger வேலன். said...
    ஐயா,
    வணக்கம். இணைய இணைப்பு பழுதடைந்ததால் இவ்வளவுநாள் வகுப்புக்கு வரமுடியவில்லை.//
    சொர்க்கமோ - நகரமோ - நமக்கு வாய்த்த மனைவி - குழந்தைகள் மூலமே நாம் அடையமுடியும்.சரியா அய்யா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    அப்பா, அம்மாவை விட்டுவிட்டீர்களே? அவர்கள் வேண்டாமா?

    ReplyDelete
  25. /////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,கதை அருமை.பிறருக்கு சேவை செய்து புண்ணியம் தேடாவிட்டாலும் பாவமாவது செய்யாமல் இருக்கலாம்.அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.
    அன்புடன்,
    மதுரை தனா.///////

    கலியுகம். எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் மக்கள் முழித்துக்கொண்டிருக்கிறார்கள்:-)

    ReplyDelete
  26. /////Blogger ananth said...
    வேறொரு கவிஞர் காதலித்து பார். சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் என்று சொல்லியிருக்கிறார். எனக்கு காதலிக்கும் பாக்கியம் (அல்லது துர்பாக்கியம் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்) இது வரை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது. ஏனெனில் எனக்கு திருமணமாகி விட்டது.
    திடீரென்று வேதாந்தியாகி விட்டீர்கள். நான் இப்படி சொன்னதும் ஆரம்பத்திலிருந்து நான் இப்படிதான் என்று தாங்கள் சொல்லக் கூடும்.//////

    ஆரம்பத்தில் இருந்து வேதாந்தி அல்ல! ஞானம் இடையில் ஏற்பட்டதுதான்

    ReplyDelete
  27. Blogger sundar said...
    ////Blogger BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
    //சொர்கதிலும் உங்களுக்கு
    ஆசிரியர் பதவி reserved. //
    சுந்தர் சார், இந்த பதிவில் தான் சொர்ககம் இல்லைனு வாத்தியார் தெளிவா சொன்னார்..அதுக்குள்ளயேவா??////
    ஆசிரியரின் மேல் உள்ள அன்பு அவர் கண்களை மறைத்துவிட்டது.//
    சரியான நேரத்தில் உதவிக்கு வந்ததற்கு நன்றி ஐயா !
    சொர்ககம் ,நரகம் என்பதில் எனக்கும் நம்பிக்கை இல்லை ஆனால் மறு பிறவி ,முற்பிறவி என்பதில் நம்பிக்கை
    இருக்கிறது அதில் இருந்து விடு பெற்று முக்தி அடைதல் அதிலும் நம்பிக்கை
    இருக்கிறது, அது தான் ஆசிரியருக்கு அது எதுவாக இருந்தாலும் அது சொர்ககமாக
    இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், வாத்தியாருடாய அன்பு எப்போதும் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காக அங்கயும் அவருக்கு வாத்தியார் பதவி என்று சொன்னேன் .அதற்குள் அறிவு மணியை எடுத்து வந்து அடித்து விட்டீர்களே நண்பரே !//////

    மணி அடிப்பது நல்லதுதான். நமது வகுப்பறையில்தான் மணி இல்லை! இது இணைய வகுப்பு அதனால் இல்லை!

    ReplyDelete
  28. /////Blogger Geekay said...
    Present Sir!
    :-))/////

    வருகைப்பதிவு போட்டாயிற்று ஜீக்கே!

    ReplyDelete
  29. SP.VR. SUBBIAH said...
    /////Blogger வேலன். said...
    ஐயா,
    வணக்கம். இணைய இணைப்பு பழுதடைந்ததால் இவ்வளவுநாள் வகுப்புக்கு வரமுடியவில்லை.//
    சொர்க்கமோ - நகரமோ - நமக்கு வாய்த்த மனைவி - குழந்தைகள் மூலமே நாம் அடையமுடியும்.சரியா அய்யா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    அப்பா, அம்மாவை விட்டுவிட்டீர்களே? அவர்கள் வேண்டாமா?//

    அப்பா,அம்மாவை நாம் தேடிக்கொள்ளமுடியாது. சொர்க்கமோ - நகரமோ நம்மால் அவர்களுக்கு கிடைக்கும். நல்ல மகனாக இருந்தால் அவர்கள் வாழும் காலத்திலேயே சொர்க்கம் கிடைக்கும். ஆனால் மனைவி - மகன் - மகள்களால்தான் நமக்கு சொர்க்கமோ - நகரமோ உருவாகும். நல்6லதையே செய்வோம். நல்லதே நடக்கும்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  30. சமிபத்தில் குரு வக்கரம் அடைந்து மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்துள்ளார். வக்கரம் அடைவது என்றாலே தான் இருக்கும் ராசிக்கு முன்னோ , பின்னோ செல்வதா? அல்லது தான் இருக்கும் ராசியிலேயே வக்கரம் அடையுமா?

    ReplyDelete
  31. பசியுடன் வந்தேன்! பால் தந்து வளியனுப்புகிரீர்கள்! பரவாயில்லை, முயற்சி செய்வோம் !

    ReplyDelete
  32. Blogger வேலன். said...
    SP.VR. SUBBIAH said...
    /////Blogger வேலன். said...
    ஐயா,
    வணக்கம். இணைய இணைப்பு பழுதடைந்ததால் இவ்வளவுநாள் வகுப்புக்கு வரமுடியவில்லை.//
    சொர்க்கமோ - நகரமோ - நமக்கு வாய்த்த மனைவி - குழந்தைகள் மூலமே நாம் அடையமுடியும்.சரியா அய்யா?
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////
    அப்பா, அம்மாவை விட்டுவிட்டீர்களே? அவர்கள் வேண்டாமா?//
    அப்பா,அம்மாவை நாம் தேடிக்கொள்ளமுடியாது. சொர்க்கமோ - நகரமோ நம்மால் அவர்களுக்கு கிடைக்கும். நல்ல மகனாக இருந்தால் அவர்கள் வாழும் காலத்திலேயே சொர்க்கம் கிடைக்கும். ஆனால் மனைவி - மகன் - மகள்களால்தான் நமக்கு சொர்க்கமோ - நகரமோ உருவாகும். நல்லதையே செய்வோம். நல்லதே நடக்கும்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்று வேலன்;
    நன்றி வேலன்!

    ReplyDelete
  33. Blogger citizen said...
    சமிபத்தில் குரு வக்கரம் அடைந்து மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்துள்ளார். வக்கிரம் அடைவது என்றாலே தான் இருக்கும் ராசிக்கு முன்னோ , பின்னோ செல்வதா? அல்லது தான் இருக்கும் ராசியிலேயே வக்கரம் அடையுமா?

    வக்கிரம் என்பது பின்னோக்கிய சுழற்சி. சில சமயம் பூமியின் சுழற்சியால் இந்த முன் பின் ராசிக்கோளாறுகளும் ஏற்படுவது உண்டு. வக்கிர நிவர்த்தியன்று அது தன்னுடைய பழைய இடத்திற்கு வந்துவிடும்!

    ReplyDelete
  34. ////Blogger RUDRA said...
    பசியுடன் வந்தேன்! பால் தந்து வழியனுப்புகிறீர்கள்! பரவாயில்லை, முயற்சி செய்வோம் !/////

    ஆகா, செய்யுங்கள்!

    ReplyDelete
  35. Dear Sir..

    Nandraga Irundhadhu ungal Ghyana Kadhaigalin Vilakkam ..Adhuvunm Kulandhayai vaithu sollugireergal..Makkalidam kandippaga sendradayum...

    Vazhga Umadhu Pani..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com