2.6.08

Astrolgy: மேலும் ஒரு அட்டவனை!

Astrolgy: மேலும் ஒரு அட்டவனை!

நமது வகுப்பறைக்கு வந்து செல்லும் பார்வையாளர் ஒருவர்
மின்னஞ்சலில் அனுப்பி வைத்த அட்டவணை ஒன்றைக்
கீழே கொடுத்துளேன்

அது உங்களுக்குப் பயன்படும்!

12 ராசிகள், ஒவ்வொரு ராசிகளுக்குள்ளும் அடங்கும் நட்சத்திரத்தின் பாதங்கள்,
அவற்றிற்குரிய ஆரம்ப திசைகள் என்று மூன்று விவரங்களும் ஒரே அட்டவனையில்
இருப்பது அதன் சிறப்பு.

27 நட்சத்திரங்கள் x 4 பாதங்கள் = 108 devide by 12 = 9 பாதங்கள் ஒவ்வொரு ராசிக்கும்
அதாவது ஒவ்வொரு ராசிக்கும் இரண்டே கால் நட்சத்திரங்கள்

கடிகார முள் வரிசையில் அட்டவனையைச் சுழற்றினால் அஸ்வினி, பரணி என்று
நட்சத்திரங்கள் அடுத்தடுத்து வரும்!

அனுப்பியவர் பெயர். திரு சதீஷ். அவருக்கு உங்களுடைய சார்பில்
என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்

படத்தின் மீது கர்சரைவைத்துக் கிளிக்கினால் படம் பெரியதாகத் தெரியும்!
=============================================

வாழ்க வளமுடன்!

32 comments:

  1. என்ன வாத்தியரே, திங்கள் அன்று விடுமுறை என்று சொன்னீர்கள், சீக்கிரம் வந்து வீட்டீர்களோ கோவைக்கு?

    ஏன் நன்றி கூட தெரிவித்து கொள்கிறேன் மிஸ்டர்.சதிஷ் அவர்களுக்கு.

    ReplyDelete
  2. //////கோவை விமல்(vimal) said...
    என்ன வாத்தியரே, திங்கள் அன்று விடுமுறை என்று சொன்னீர்கள், சீக்கிரம் வந்து வீட்டீர்களோ கோவைக்கு?
    ஏன் நன்றி கூட தெரிவித்து கொள்கிறேன் மிஸ்டர்.சதிஷ் அவர்களுக்கு.////

    வகுப்பறையில நானில்லாதபோது என்னென்ன அலும்பு பண்றீங்களோன்னு கவலையில்தான் சீக்கிரமா வந்துவிட்டேன்!

    ReplyDelete
  3. வாத்தியாரே..

    இறக்குமதி செய்து பத்திரப்படுத்திவிட்டேன்.. நன்றி..

    நன்றிகள் திரு.சதீஷ் அவர்களையும் எட்டட்டும்..

    ஆமா.. திங்கள்கிழமை நான் லீவுன்னு சொல்லி எங்களை அவசரமா கமெண்ட் போட வைச்சுப்புட்டு இப்ப என்னடான்னா ஓடி வந்துட்டீரு.. அப்ப அன்னிக்கு சொன்னது டாவா..?

    வாத்தியாரே.. இந்த டாவு, கப்ஸா, ரீலு, பிலிம், தண்ணி காட்டறதையெல்லாம் கிளாஸ்ல வைச்சுக்கப்படாது.. சொல்லிப்புட்டேன்..

    ReplyDelete
  4. //வகுப்பறையில நானில்லாதபோது என்னென்ன அலும்பு பண்றீங்களோன்னு கவலையில்தான் சீக்கிரமா வந்துவிட்டேன்!//
    நாங்கள் ஆவது அலும்பு பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் செய்குறோம், உங்களை போல silent அலும்பு (போகிறேன் என்று சொல்லிவிட்டு, ஜன்னல் வழியாக எந்த மாணவன் என்ன குறும்பு செய்கிறான் என்று பார்த்துவிட்டு விடைதாள் திருத்தத்தில் கை வைப்பது) எல்லாம் எங்களுக்கு வராது வாத்தியரே

    ReplyDelete
  5. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    இறக்குமதி செய்து பத்திரப்படுத்திவிட்டேன்.. நன்றி..
    நன்றிகள் திரு.சதீஷ் அவர்களையும் எட்டட்டும்..

    ஆமா.. திங்கள்கிழமை நான் லீவுன்னு சொல்லி எங்களை அவசரமா கமெண்ட் போட வைச்சுப்புட்டு இப்ப என்னடான்னா ஓடி வந்துட்டீரு.. அப்ப அன்னிக்கு சொன்னது டாவா..?
    வாத்தியாரே.. இந்த டாவு, கப்ஸா, ரீலு, பிலிம், தண்ணி காட்டறதையெல்லாம் கிளாஸ்ல வைச்சுக்கப்படாது.. சொல்லிப்புட்டேன்../////

    இரண்டு நாள் விடுப்பில் (ஞாயிறு, திங்கள்) சென்றவர், அறிவிப்பின்றி அதை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால்தான் தவறு. சென்ற வேலை முடிந்து பொறுப்புடன் உடனே திரும்பி எடுத்த விடுப்பில் ஒரு நாளைக் கேன்சல் செய்தால், அது இ.பி.கோவின்படி என்ன குற்றம் என்று முதலில் சொல்லவும்!

    ReplyDelete
  6. ஹலோ வாத்தியாரய்யா,

    ரொம்ப நன்றி இந்த சார்ட்ட குடுத்ததுக்கும் இத தயாரித்தவருக்கும்.

    //இரண்டு நாள் விடுப்பில் (ஞாயிறு, திங்கள்) சென்றவர், அறிவிப்பின்றி அதை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால்தான் தவறு. சென்ற வேலை முடிந்து பொறுப்புடன் உடனே திரும்பி எடுத்த விடுப்பில் ஒரு நாளைக் கேன்சல் செய்தால், அது இ.பி.கோவின்படி என்ன குற்றம் என்று முதலில் சொல்லவும்//

    ஆமாம் நீங்கள் சொல்வது சரி தான்.
    பரவாயில்லையே ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்குதே..ம்ம்ம்ம் காலம் கூட மாறிட்டுதே..

    ReplyDelete
  7. //////Sumathi. said...
    ஹலோ வாத்தியாரய்யா,

    பரவாயில்லையே ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்குதே..ம்ம்ம்ம் காலம் கூட மாறிட்டுதே..//////

    காலம் மாறவில்லை சகோதரி. காலம் கெட்டுப்போய்க்கிடக்கிறது!
    யோக்கியமாக முன்பாகவே வந்து வகுப்பை நடத்தினால் என்னென்ன கேள்வி பாருங்கள்!

    ReplyDelete
  8. //காலம் மாறவில்லை சகோதரி. காலம் கெட்டுப்போய்க்கிடக்கிறது!
    யோக்கியமாக முன்பாகவே வந்து வகுப்பை நடத்தினால் என்னென்ன கேள்வி பாருங்கள்!//

    மாணவன் குறை செய்தால் வாத்தியார் கேட்பது போல்!

    வாத்தியார் வார்த்தை தவரும் பொழுது (விடுமுறை என்று சொல்லிவிட்டு மாணவர்கள் இல்லாத பொழுது பாடம் நடத்துவதும், வகுப்பு என்று சொல்லிவிட்டு வகுப்பு வராமல் ஜூட் விடுவதும் ஒரே குற்றம், ஆனால் ஒன்று மட்டும் உண்மை, விடுமுறை நாட்களிலும் எங்களை போல சில நல்ல மாணவர்கள் வகுப்பிர்கு வந்து பாடம் படிக்கீரோமே என்று வேணா பெருமை பட்டு கொள்ளலாம்) மாணவனும் கேள்வி கேட்பான், இதுதான் நம் வகுப்பு.

    என்ன நான் சொல்வது சரிதானா வாத்தியரே?

    ReplyDelete
  9. //////கோவை விமல்(vimal) said...

    //வகுப்பறையில நானில்லாதபோது என்னென்ன அலும்பு பண்றீங்களோன்னு கவலையில்தான் சீக்கிரமா வந்துவிட்டேன்!//
    நாங்கள் ஆவது அலும்பு பண்ணுகிறோம் என்று சொல்லிவிட்டுத்தான் செய்குறோம், உங்களை போல silent அலும்பு (போகிறேன் என்று சொல்லிவிட்டு, ஜன்னல் வழியாக எந்த மாணவன் என்ன குறும்பு செய்கிறான் என்று பார்த்துவிட்டு விடைதாள் திருத்தத்தில் கை வைப்பது) எல்லாம் எங்களுக்கு வராது வாத்தியரே/////

    இந்தப் பதிவில் உள்ள மற்ற பின்னூட்டங்கள் ஒவ்வொன்றையும் பத்து தடவை படிக்கவும்
    வாத்தியாரை நிந்திப்பதற்கு அதுதான் தண்டனை

    ReplyDelete
  10. ///இந்தப் பதிவில் உள்ள மற்ற பின்னூட்டங்கள் ஒவ்வொன்றையும் பத்து தடவை படிக்கவும்
    வாத்தியாரை நிந்திப்பதற்கு அதுதான் தண்டனை///

    எல்லா பின்னூடடம் பெருகல் பத்து தடவை = வாத்தியாரின் தண்டனை.

    தண்டனை முடிந்து விட்டது வாத்தியரே :-))

    ReplyDelete
  11. ஆசான் அவர்களே,

    சதீஷ் கொடுத்த ஜாதக சக்கரம், நம்ம ஊரு கோயில் மண்டபத்து கூரையின் ஓவியம் போல சூப்பரா இருக்கு :-)

    நீங்கள் உங்கள் பதிவுகளுக்கு patent வாங்கும் நாளும், கணினியும் வலை வசதியும் இல்லாத எளியவரும் பயனடையும் வண்ணம் ஒரு ஜோதிட புத்தகம் வெளியிடும் நாளும் வெகு தொலைவில் இல்லை என நம்புகிறேன்.

    வகுப்பு அறையின், பழம் தின்று (வகுப்புக்கு வெளியே :) கொட்டை போட்ட சக மாணவர்களுக்கும் இந்த புது மாணவனின் வணக்கம். ராக்கிங் எதுவும் பண்ண மாட்டீங்க தானே?:))

    என்றும் அன்புடன்
    தமாம் பாலா

    ReplyDelete
  12. //தமாம் பாலா
    ராக்கிங் எதுவும் பண்ண மாட்டீங்க தானே?:)) //

    நாங்களாக ராகிங் எல்லாம் செய்ய மாட்டோம், தைரியமா வாங்க பாலா.

    என்ன சிறுதுகாலம் முன் வரிசையில் அமர வேண்டும், அதுவே போதும், மிச்சத்தை எங்கள் ஆசனே பார்த்து கொள்வார்.

    ReplyDelete
  13. ////////தமாம் பாலா said...
    ஆசான் அவர்களே,
    சதீஷ் கொடுத்த ஜாதக சக்கரம், நம்ம ஊரு கோயில் மண்டபத்து கூரையின் ஓவியம் போல சூப்பரா இருக்கு :-)
    நீங்கள் உங்கள் பதிவுகளுக்கு patent வாங்கும் நாளும், கணினியும் வலை வசதியும் இல்லாத எளியவரும் பயனடையும் வண்ணம் ஒரு ஜோதிட புத்தகம் வெளியிடும் நாளும் வெகு தொலைவில் இல்லை என நம்புகிறேன்.
    வகுப்பு அறையின், பழம் தின்று (வகுப்புக்கு வெளியே :) கொட்டை போட்ட சக மாணவர்களுக்கும் இந்த புது மாணவனின் வணக்கம். ராக்கிங் எதுவும் பண்ண மாட்டீங்க தானே?:))
    என்றும் அன்புடன்
    தமாம் பாலா//////

    புத்தகம் வெளியிடும் ஆர்வத்தில்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்

    ராக்கிங் யாரும் செய்ய மாட்டார்கள் காரணம் சட்டாம்பிள்ளை எப்போதும் சவுக்கட்டையோடு
    (சூப்பர் சுப்பயராயன் ஸ்டைலில்) சுற்றிக்கொண்டே இருப்பார்.

    ReplyDelete
  14. ///////புருனோ Bruno said...
    உள்ளேன் ஐயா////

    நன்றி டாக்டர்! இப்போது வெறும் அட்டவனை மட்டுமே!
    அடுத்த பாடம் சுவையாக இருக்கும்.

    ReplyDelete
  15. ஐயா!

    சட்டாம்பிள்ளை வாத்தியார் ஐயாவை ரொம்பவே மிரட்டுகிறார்.

    சிறிது அடக்கிவையுங்கள்

    அட்டவணை சூப்பர்.

    இன்னும் புதிர் சஸ்பென்ஸ் உடைக்கவில்லையே?

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா,
    அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.
    ஐயா சோதிடசூத்திரப் பாடங்களுக்கு பழைய அல்லது பிரபல்யமான (படங்களுடன் கூடிய)யாதகங்களுடன் விளக்கங்கள் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். இதில் ஏதும் பிழை இருப்பின் மன்னிக்கவும்

    மாணவன்
    சிவா
    நேர வித்தியாசம் காரணமாக என்னுடைய comment உடனே தர முடிவதில்லை மன்னிக்கவும்

    ReplyDelete
  17. /////கூடுதுறை said...
    ஐயா!
    சட்டாம்பிள்ளை வாத்தியார் ஐயாவை ரொம்பவே மிரட்டுகிறார்.////
    சிறிது அடக்கிவையுங்கள்
    அட்டவணை சூப்பர்.
    இன்னும் புதிர் சஸ்பென்ஸ் உடைக்கவில்லையே?////

    அதெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்.நகைச்சுவைக்காக அப்படிச் செய்கிறார்
    என்ன புதிர் சுவாமி?

    ReplyDelete
  18. /////siv said...
    வணக்கம் ஐயா,
    அட்டவணை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி.
    ஐயா சோதிடசூத்திரப் பாடங்களுக்கு பழைய அல்லது பிரபல்யமான (படங்களுடன் கூடிய)யாதகங்களுடன் விளக்கங்கள் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். இதில் ஏதும் பிழை இருப்பின் மன்னிக்கவும்
    மாணவன்
    சிவா
    நேர வித்தியாசம் காரணமாக என்னுடைய comment உடனே தர முடிவதில்லை மன்னிக்கவும்////
    முடிந்தவரை தருகிறேன். நேர வித்தியாசம் எனக்கும் தெரியும். அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை!
    புக்மார்க் செய்து வைத்து விடாமல் படித்து வாருங்கள் அதுபோதும்!

    ReplyDelete
  19. ஐயா, அட்டவணைகளாக அடுக்கிக்கொண்டேபோகிறீர்கள்.
    ஆம். இந்த அட்டவணை மிக சுலபமாகவே இருக்கிறது.சந்தேகமில்லை.தங்களுக்குஅனுப்பியவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  20. எனது பிணூட்ாத்தின் பதில் இன்னும் வர வில்லை வாத்தியரே

    ReplyDelete
  21. எனது பிணூட்ாத்தின் பதில் இன்னும் வர வில்லை வாத்தியரே

    ReplyDelete
  22. ///////தியாகராஜன் said...
    ஐயா, அட்டவணைகளாக அடுக்கிக்கொண்டேபோகிறீர்கள்.
    ஆம். இந்த அட்டவணை மிக சுலபமாகவே இருக்கிறது.சந்தேகமில்லை.தங்களுக்குஅனுப்பியவருக்கும் நன்றிகள்./////

    அட்டவனைகளைப் பயன் படுத்துங்கள் நண்பரே!

    ReplyDelete
  23. //////கோவை விமல்(vimal) said...
    எனது பிணூட்ாத்தின் பதில் இன்னும் வர வில்லை வாத்தியரே////

    எல்லாவற்றிற்கும் பதில் உள்ளதே சாமி! எதைச் சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  24. /////Anonymous said...
    I'm here!
    -Shankar///
    பதிவேட்டில் குறித்துக் கொள்ளப்பட்டது!

    ReplyDelete
  25. கோவை விமல்(vimal) said...
    //காலம் மாறவில்லை சகோதரி. காலம் கெட்டுப்போய்க்கிடக்கிறது!
    யோக்கியமாக முன்பாகவே வந்து வகுப்பை நடத்தினால் என்னென்ன கேள்வி பாருங்கள்!//
    மாணவன் குறை செய்தால் வாத்தியார் கேட்பது போல்!
    வாத்தியார் வார்த்தை தவரும் பொழுது (விடுமுறை என்று சொல்லிவிட்டு மாணவர்கள் இல்லாத பொழுது பாடம் நடத்துவதும், வகுப்பு என்று சொல்லிவிட்டு வகுப்பு வராமல் ஜூட் விடுவதும் ஒரே குற்றம், ஆனால் ஒன்று மட்டும் உண்மை, விடுமுறை நாட்களிலும் எங்களை போல சில நல்ல மாணவர்கள் வகுப்பிர்கு வந்து பாடம் படிக்கீரோமே என்று வேணா பெருமை பட்டு கொள்ளலாம்) மாணவனும் கேள்வி கேட்பான், இதுதான் நம் வகுப்பு.
    என்ன நான் சொல்வது சரிதானா வாத்தியரே?////

    சரி இல்லை என்று சொன்னால் மறுபடியும் பின்னூட்டம் வரும். ஆகவே சரி!

    ReplyDelete
  26. /////கோவை விமல்(vimal) said...
    ///இந்தப் பதிவில் உள்ள மற்ற பின்னூட்டங்கள் ஒவ்வொன்றையும் பத்து தடவை படிக்கவும்
    வாத்தியாரை நிந்திப்பதற்கு அதுதான் தண்டனை///
    எல்லா பின்னூடடம் பெருக்கல் பத்து தடவை = வாத்தியாரின் தண்டனை.
    தண்டனை முடிந்து விட்டது வாத்தியரே :-))////

    என்ன கணக்கு இது?

    ReplyDelete
  27. ////////கோவை விமல்(vimal) said...
    //தமாம் பாலா ராக்கிங் எதுவும் பண்ண மாட்டீங்க தானே?:)) //
    நாங்களாக ராகிங் எல்லாம் செய்ய மாட்டோம், தைரியமா வாங்க பாலா.
    என்ன சிறிதுகாலம் முன் வரிசையில் அமர வேண்டும், அதுவே போதும், மிச்சத்தை எங்கள் ஆசனே பார்த்து கொள்வார்./////

    ஆசான் பார்த்துக்கொள்வாரென்று இப்போதாவது ஒப்புக்கொண்டீர்களே சாமிகளா!

    ReplyDelete
  28. குருவுக்கேற்ற சிஷ்யந்தான் போல் தெயரிகின்றது. நன்றிகள் பல அன்பர் சதீஷ் அவர்களுக்கும் உங்களுக்கும்.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  29. ஆசிரியரின் தொகுப்பட்ட புத்தகத்திற்காக
    காத்திருக்கும் மாணர்வர்காளுக்கு இனிப்பான செய்திக்கு நன்றி ஐயா.

    மின் நூல்களை (E-BOOKS -IN PDF FORMAT)தொடர்ச்சியாக படிக்கமுடியாவில்லை .அச்சு செய்ய பட்ட புத்தகம் புத்தகம் தான் சார்.
    உங்களுக்கும் இதில் உடன் பாடு தானே.

    கணனியின் ஆட்சி கொடிகட்டிப் பறந்தாலும் அச்சிடப் பட்ட புத்தக விற்பனை தமிழகத்தில் மிகச் சிறப்ப்பாக
    உள்ளதற்கு நாழும் வெளியாகும் புத்தகங்களின் அணிவகுப்பே சாட்சி.

    ReplyDelete
  30. /////Anonymous said...
    குருவுக்கேற்ற சிஷ்யந்தான் போல் தெயரிகின்றது. நன்றிகள் பல அன்பர் சதீஷ் அவர்களுக்கும் உங்களுக்கும்.
    அன்புடன்
    இராசகோபால்////

    அப்படி இருப்பதும் நல்லதுதானே!

    ReplyDelete
  31. திருநெல்வேலி கார்த்திக் said...
    ஆசிரியரின் தொகுப்பட்ட புத்தகத்திற்காக
    காத்திருக்கும் மாணர்வர்காளுக்கு இனிப்பான செய்திக்கு நன்றி ஐயா.
    மின் நூல்களை (E-BOOKS -IN PDF FORMAT)தொடர்ச்சியாக படிக்கமுடியாவில்லை .அச்சு செய்ய பட்ட புத்தகம் புத்தகம் தான் சார்.
    உங்களுக்கும் இதில் உடன் பாடு தானே.
    கணனியின் ஆட்சி கொடிகட்டிப் பறந்தாலும் அச்சிடப் பட்ட புத்தக விற்பனை தமிழகத்தில் மிகச் சிறப்ப்பாக
    உள்ளதற்கு நாழும் வெளியாகும் புத்தகங்களின் அணிவகுப்பே சாட்சி.////

    கணினியின் உபயோகம் இன்னும் பலரைச் சென்றடையவில்லை. அதுவும் ஒரு காரணம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com