+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானக் கதைகள எண் 3-
எவன் வெற்றி பெறுவான்?
புத்தர் தன்னுடைய சீடன் ஒருவனுக்கு தீட்சை அளித்து விடை கொடுக்கும்
போது கேட்டார்:
“நீ எந்தப் பகுதிக்குச் சென்று மக்களை நல்வழிப் படுத்தப் போகிறாய்?”
அவன் சொன்னான்; புத்தர் தொடர்ந்து கேட்டார்:
“அந்தப் பகுதி மக்கள் உன் பிரச்சாரத்தைக் கேட்க விரும்பாமல் உன்னை
நிந்தனை செய்தால் என்ன செய்வாய்?”
“இந்த மாட்டோடு விட்டர்களே என்று நினைக்காமல் மீண்டும் மீண்டும்
பிரச்சாரம் செய்வேன்”
“உன்னை அடித்தால்....?”
“ஆயுதம் கொண்டு தாக்கவில்லையே என்று சந்தோஷப்படுவதுடன், மீண்டும்
மீண்டும் பிரச்சாரம் செய்வேன்”
“ஆயுதம் கொண்டு தாக்கி உன்னைக் கொல்ல வந்தால்......?”
“இந்த ஜீவனுக்கு முக்தியளிக்க எவ்வளவு பேர்கள்? நமக்கு இவர்கள் சுலபமாக
முக்தி அளித்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று மகிழ்வேன்!”
புத்தர் சொன்னார்:
“நீ உன் செயலில் வெற்றி பெறுவாய்; போய் வா!”
வாழ்க வளமுடன்!
நாந்தான் முதலாவது...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteநல்ல கதை... நல்ல கருத்து... நன்றி ஐயா...
ReplyDelete//புத்தர் சொன்னார்:
ReplyDelete“நீ உன் செயலில் வெற்றி பெறுவாய்; போய் வா!”//
இந்த சீடன்(மற்றும் வகுப்பு கண்மனிகள்) வெற்றி பெற வாத்தியரே(புத்தர்) வாழ்த்துவீர் ஆகா!
நாங்கள் புறப்பட உங்கள் (புத்தர்) அருள் வேண்டுகிறேன் வாத்தியரே
வாத்தியரே தசவாதாரம் பார்த்தசா?
ReplyDeleteஉங்கள் விமர்சனம் வேண்டி காத்திருக்கிறோம்
வாத்தியரே தசவாதாரம் விமர்சனம் தனி பதிவு இடும் படி தாழ்மையுள்ல மாணவர்களின் வேண்டுகோள் (சட்டம் பிள்ளை சேர்த்து)
ReplyDeleteஉங்கள் கண்ணோட்டத்தில் எங்களுக்கு விமர்சனம் வேண்டும்
அன்பு குருஜி,
ReplyDeleteஹாட் டிரிக் அடித்து விட்டீர்கள்
நீதிக்கதைகளில்..
"winners never quit" என்று
ஆங்கிலத்தில் கூறுவார்கள்..
அதை உங்கள் புத்தர் கதையில்
அழகாக விவரிக்க கண்டேன்.
அத்தனையும் உண்மை!!!!!
Good one!
ReplyDelete-Shankar
புத்தர் என்றால் ஞானம் அடைந்தவர் எனப் பொருள் என்பர்.யாரும் முயற்சி செய்தால் புத்தராக மாறலாம் இது கோவை ஈசா யோகா வகுப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லக் கேட்டது. ஆசிரியரின் ஞானக் கதைகள் தொடர்வது மனதை அந்த வகுப்புக்கு மீண்டும் வழிநடத்தி செல்வது போல் உள்ளது.நன்றி
ReplyDelete/////VIKNESHWARAN said...
ReplyDeleteநாந்தான் முதலாவது...////
பதிவு போடும் நேரத்தை மாற்றிப் பார்க்கட்டுமா?:-))))
/////ச்சின்னப் பையன் said...
ReplyDeleteநல்ல கதை... நல்ல கருத்து... நன்றி ஐயா.../////
உங்களுக்குப் பிடித்தது குறித்து மகிழ்ச்சியே ச்சின்னைப்பையன்!
/////கோவை விமல்(vimal) said...
ReplyDelete//புத்தர் சொன்னார்:
“நீ உன் செயலில் வெற்றி பெறுவாய்; போய் வா!”//
இந்த சீடன்(மற்றும் வகுப்பு கண்மனிகள்) வெற்றி பெற வாத்தியரே(புத்தர்) வாழ்த்துவீர் ஆகா!
நாங்கள் புறப்பட உங்கள் (புத்தர்) அருள் வேண்டுகிறேன் வாத்தியரே////
நான் புத்தனும் இல்லை. சித்தனும் இல்லை. ஆசா பாசங்கள் கொண்ட சாதாரண மனிதன்
கட்டம் கட்டி உட்கார வைத்துவிடாதீர்கள் நண்பரே!
யாராவது பார்த்தால் (எனக்கு) அடி விழப்போகிறது. இது போன்ற பின்னூட்டங்களை அனுமதித்ததற்கு!
/////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteவாத்தியரே தசவாதாரம் பார்த்தசா?
உங்கள் விமர்சனம் வேண்டி காத்திருக்கிறோம்/////
அடுத்த பின்னூட்டாத்திற்கான பதிலைப்படிக்க வேண்டுகிறேன்!
///////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteவாத்தியரே தசவாதாரம் விமர்சனம் தனி பதிவு இடும் படி தாழ்மையுள்ல மாணவர்களின்
வேண்டுகோள் (சட்டம் பிள்ளை சேர்த்து)
உங்கள் கண்ணோட்டத்தில் எங்களுக்கு விமர்சனம் வேண்டும்/////
நான் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
நேரமின்மைதான் காரணம். எனது நண்பர் திரு.வி.எஸ்.கே அவர்கள் படத்தைப் பார்த்து விமர்சனம்
எழுதியுள்ளார். அவர் என்னவிட நன்றாக விமர்சிக்கக்கூடியவர். அதைப் படித்துப்பாருங்கள்!
சுட்டி: http://aaththigam.blogspot.com/2008/06/blog-post_13.html
/////தமாம் பாலா said...
ReplyDeleteஅன்பு குருஜி,
ஹாட் டிரிக் அடித்து விட்டீர்கள்
நீதிக்கதைகளில்..
"winners never quit" என்று
ஆங்கிலத்தில் கூறுவார்கள்..
அதை உங்கள் புத்தர் கதையில்
அழகாக விவரிக்க கண்டேன்.
அத்தனையும் உண்மை!!!!!
இன்னும் நிறையக் கதைகள் வரவுள்ளன. தொடர்ந்து படியுங்கள் பாலா!
////Anonymous said...
ReplyDeleteGood one!
-Shankar/////
Thanks Sankar!
/////திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteபுத்தர் என்றால் ஞானம் அடைந்தவர் எனப் பொருள் என்பர்.யாரும் முயற்சி செய்தால் புத்தராக
மாறலாம் இது கோவை ஈசா யோகா வகுப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லக் கேட்டது.
ஆசிரியரின் ஞானக் கதைகள் தொடர்வது மனதை அந்த வகுப்புக்கு மீண்டும் வழிநடத்தி செல்வது
போல் உள்ளது.நன்றி/////
மன மாற்றம் சிறிதேனும் ஏற்பட்டால் மகிழ்ச்சியே!
//பதிவு போடும் நேரத்தை மாற்றிப் பார்க்கட்டுமா?:-))))
ReplyDelete//
அப்படினா நாந்தான் லாஸ்ட்டு
//நான் புத்தனும் இல்லை. சித்தனும் இல்லை. ஆசா பாசங்கள் கொண்ட சாதாரண மனிதன்
ReplyDeleteகட்டம் கட்டி உட்கார வைத்துவிடாதீர்கள் நண்பரே!//
வாத்தியார் ரொம்ப தெளிவாகவே இருக்கார்!
கட்டம் போட்டாங்க, அவ்ளோதான், நீ இப்படி செய்யலாமான்னு எல்லாம் கேள்விகள் வரும்!
ஹலோ சார்,
ReplyDeleteகதைகள் லாம் நல்லாவே இருக்கு. நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன், அதான்.
VIKNESHWARAN said...
ReplyDelete//பதிவு போடும் நேரத்தை மாற்றிப் பார்க்கட்டுமா?:-))))//
அப்படினா நாந்தான் லாஸ்ட்டு////
அதுவும் உங்கள் கையில் இல்லை!
/////திவா said...
ReplyDelete//நான் புத்தனும் இல்லை. சித்தனும் இல்லை. ஆசா பாசங்கள் கொண்ட சாதாரண மனிதன்
கட்டம் கட்டி உட்கார வைத்துவிடாதீர்கள் நண்பரே!//
வாத்தியார் ரொம்ப தெளிவாகவே இருக்கார்!
கட்டம் போட்டாங்க, அவ்ளோதான், நீ இப்படி செய்யலாமான்னு எல்லாம் கேள்விகள் வரும்!/////
நாளுக்கு நாள் தெளிவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. பின்னூட்டங்களும் காரணம்
////Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
கதைகள் லாம் நல்லாவே இருக்கு. நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன், அதான்.////
அதெனாலென்ன சகோதரி. நீங்கள் வந்து படித்தால் போதும்!
அருமையான கதைகள். நன்றி
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
////Anonymous said...
ReplyDeleteஅருமையான கதைகள். நன்றி
அன்புடன்
இராசகோபால்////
நன்றி மிஸ்டர் கோபால்!