++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஞானக் கதைகள் - பகுதி 2
குருவும் சீடனும் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்.
வழியில் துளிவிட்டிருந்த சிறு செடியைப் பிடுங்கும்படி குரு சீடனிடம் சொல்ல
அவனும் சட்டெனெ அதை ஒரு நொடியில் செய்து முடித்தான்.
சற்றுத் தள்ளி, நன்கு வளர்ந்திருந்த செடியொன்றைப் பிடுங்கும்படி பணித்தார்.
சீடன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனது இரண்டு கைகளாலும் அச்செடியைப்
பிடுங்கிப் போட்டான்.
சற்றுத்தூரம் சென்ற பிறகு, ஒரு சிறு மரம் அளவிற்கு வளர்ந்திருந்த செடி
ஒன்றைப் பிடுங்கும்படி அவர் சொன்னபோது, சீடன் தன்னுடைய முழு பலத்தை
உபயோகித்தும் பிடுங்க முடியாமல் போய்விட்டது.
அதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த குரு சொன்னார்,”பிரச்சினை
களும் இப்படித்தான்!”
உடனே சீடன் கேட்டான், “பிரச்சினைகளுக்கும் செடிக்கும் என்ன சம்பந்தம்?”
குரு புன்னகையுடன் அவனுக்கு விளங்கும்படி சொன்னார்:
“பிரச்சினைகள் துளிர் விடும்போதே, அதைத் தீர்க்க முயன்றால் தீர்த்து விடலாம்.
அதை வளர விட்டால் - அது மரம்போல வளர்ந்து பெரிதாகி விட்டால் - அப்புறம்
உன்னால் ஒன்றும் செய்ய முடியாது!”
வாழ்க வளமுடன்!
சொம்மா பள்ச்சினு அட்ச்ச பாரு ... ஐய்ய இத்தத்தான் நம்ம மைலாப்பூர் தாடி தாத்தா இப்டிக்கா சொல்லினுகீறாருபா ...
ReplyDeleteஇளைதாக முள்மரம் கொல்க களையுனர்
கைகொல்லும் காழ்த்த விடத்து
இன்னா அத்தும் சர்த்தாண்றியா ? ஹக்காம்பா ... வர்ட்டா ...
முத்துக்குமார்
வாத்தியரே உங்கள் கதைகள் அருமை, வாழ்கை நெறியை போதி கின்றன.
ReplyDeleteமாணவர்களுக்கு பாடம் மட்டும் இல்லாமல் இம்மாதிரி ஞானக்கதைகளும் சொல்லுவது அருமை
உங்கள் பாடம் நடத்தும் முறையே அருமை வாத்தியரே, நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் வகுப்பில் படிப்பதற்கு.
ஒரு போதனைக்காக இரண்டு செடிகளை சாகடித்துவிட்டார்களே...
ReplyDeleteநான் இன்னிக்கு 3-ட்டு... சாரி சாரி மூன்றாவது
ReplyDelete////Muthukumar said...
ReplyDeleteசொம்மா பள்ச்சினு அட்ச்ச பாரு ... ஐய்ய இத்தத்தான் நம்ம மைலாப்பூர் தாடி தாத்தா இப்டிக்கா சொல்லினுகீறாருபா ...
இளைதாக முள்மரம் கொல்க களையுனர்
கைகொல்லும் காழ்த்த விடத்து
இன்னா அத்தும் சர்த்தாண்றியா ? ஹக்காம்பா ... வர்ட்டா ...
முத்துக்குமார்////
பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகை கூறியதை அருமையாக
இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள் நண்பரே!
பிரச்சினைகளும் நமக்குப் பகைதானே - இங்கே அசத்தலாகப் பொருந்தும்!
////கோவை விமல்(vimal) said...
ReplyDeleteவாத்தியரே உங்கள் கதைகள் அருமை, வாழ்கை நெறியை போதி கின்றன.
மாணவர்களுக்கு பாடம் மட்டும் இல்லாமல் இம்மாதிரி ஞானக்கதைகளும் சொல்லுவது அருமை
உங்கள் பாடம் நடத்தும் முறையே அருமை வாத்தியரே, நாங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் உங்கள் வகுப்பில் படிப்பதற்கு.....??//
அதை எல்லோரும் சொல்ல வேண்டுமே?:-))))
//////VIKNESHWARAN said...
ReplyDeleteஒரு போதனைக்காக இரண்டு செடிகளை சாகடித்துவிட்டார்களே.../////
4 செடிகளை வேண்டுமென்றால் நட்டு விடுவோம்!
/////VIKNESHWARAN said...
ReplyDeleteநான் இன்னிக்கு 3-ட்டு... சாரி சாரி மூன்றாவது////
மூன்றாவதாக வந்ததற்குக்கூடவா கணக்குச் சொல்ல வேண்டும்?
ஐயா,
ReplyDeleteமிகைப்படுத்தி சொல்லவில்லை
உங்கள் வகுப்பின் அருமைபற்றி
நண்பர் கோவை விமல் சொன்ன
கருத்தை நானும் முழுமனத்தோடு
வழி மொழிகிறேன் நானும்!!!!!
அன்பு கலந்து ஆத்மார்த்தமாக
பாடம் நடத்தும் ஆசிரியர்களை
பள்ளி/கல்லூரியில் கூட இன்று
அரிதாகவே காண்கின்றோம்.
அந்த வகையில் இன்று நீங்கள்
ஒரு அதிசய பிறவி,நீங்கள்
நட்ட நான்காவது செடி நான்!
தாமாம் பாலா-விற்கு ஜே !
ReplyDelete//4 செடிகளை வேண்டுமென்றால் நட்டு விடுவோம்!//
வாத்தியரே முன்னமே நெங்கள் நெறி, இறை, பக்தி, ஞானம் எனும் பல செடிகளை உங்கள் வகுப்பு கண்மனிகளின் மனத்தில் நட்டு விட்டீர்கள்.
மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆரம்பத்திலே தீர்த்துவிடாமல் பின் அது வளர்ந்து பல் விருக்ஷமாய் விஸ்வ ரூபம் எடுத்து நிற்கும் போது அல்லலுறுவதை மிக எளிமாய் விள்க்கும் செடி மரம் தத்துவ விளக்கம் அருமை.
ReplyDelete/////தமாம் பாலா said...
ReplyDeleteஐயா,
மிகைப்படுத்தி சொல்லவில்லை
உங்கள் வகுப்பின் அருமைபற்றி
நண்பர் கோவை விமல் சொன்ன
கருத்தை நானும் முழுமனத்தோடு
வழி மொழிகிறேன் நானும்!!!!!
அன்பு கலந்து ஆத்மார்த்தமாக
பாடம் நடத்தும் ஆசிரியர்களை
பள்ளி/கல்லூரியில் கூட இன்று
அரிதாகவே காண்கின்றோம்.
அந்த வகையில் இன்று நீங்கள்
ஒரு அதிசய பிறவி,நீங்கள்
நட்ட நான்காவது செடி நான்!////
அப்படியென்றால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!
கோவை விமல்(vimal) said...
ReplyDeleteதாமாம் பாலா-விற்கு ஜே !
//4 செடிகளை வேண்டுமென்றால் நட்டு விடுவோம்!//
வாத்தியரே முன்னமே நெங்கள் நெறி, இறை, பக்தி, ஞானம் எனும் பல செடிகளை உங்கள் வகுப்பு கண்மனிகளின் மனத்தில் நட்டு விட்டீர்கள்.////
உங்கள் பதிலைக் குற்றம் சாட்டியவர் படித்தால் நல்லது!
/////திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteமனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆரம்பத்திலே தீர்த்துவிடாமல் பின் அது வளர்ந்து பல் விருக்ஷமாய் விஸ்வ ரூபம் எடுத்து நிற்கும் போது அல்லலுறுவதை மிக எளிமாய் விளக்கும் செடி மரம் தத்துவ விளக்கம் அருமை.////
ஆமாம் நண்பரே! புரிதலுக்கு நன்றி!
Thanks for sharing good stories, Keep rocking the same!
ReplyDelete-Shankar
கதை சொல்லும் கருத்து முற்றிலும் உண்மை... நன்றி ஐயா...
ReplyDelete/////Anonymous said...
ReplyDeleteThanks for sharing good stories, Keep rocking the same!
-Shankar////
It is alright Mr.Shankar.Everything is for people like you!
////ச்சின்னப் பையன் said...
ReplyDeleteகதை சொல்லும் கருத்து முற்றிலும் உண்மை... நன்றி ஐயா...////
நன்றி நண்பரே!
நல்ல கருத்தைச் சுருக்கமாகச் சொல்லும் கதை. நன்றிகள் ஐயா. முத்துக்குமாரும் பொருத்தமான குறட்பாவினை அறிமுகம் செய்தார். அவருக்கும் நன்றிகள்.
ReplyDelete////குமரன் (Kumaran) said...
ReplyDeleteநல்ல கருத்தைச் சுருக்கமாகச் சொல்லும் கதை. நன்றிகள் ஐயா. முத்துக்குமாரும் பொருத்தமான குறட்பாவினை அறிமுகம் செய்தார். அவருக்கும் நன்றிகள்./////
படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி குமரனாரே!