+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிடக் கட்டுரைகள் - பகுதி 1
உட்தலைப்பு: சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் - பகுதி 5
முந்தைய பகுதிகள் இங்கே!
-----------------------------------------------------------------------------------------
“குருவே, உங்களுக்கு நான் தட்சணை (காணிக்கை) கொடுக்க விரும்புகிறேன்.
என்ன வேண்டும் கேளுங்கள்” என்று சனீஸ்வரன் சொல்லவும், “எனக்கு ஒன்றும்
வேண்டாம். பொருட்கள் மீது எனக்கு ஆசை இல்லை” என்று தலைமை ஆசிரியர்
தீர்க்கமாகப் பதில் சொல்ல, “பொருட்கள் வேண்டாம். வரமாக ஏதாவது கேளுங்கள்;
தருகிறேன்!” என்றார் சனீஸ்வரன்.
நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம். நீ தானே ஆயுள்காரகன் அதனால்
ஆயிரம் ஆண்டுகள் நான் வாழ்வதற்கு அருள் செய்துவிட்டுப்போ என்று சொல்லி
யிருப்போம்.
சற்று யோசித்த ஆசிரியர், அருமையான வரம் ஒன்றைக் கேட்டார்.
தலைமை ஆசிரியர் கேட்ட வரம் இதுதான்:
“என் ஜாதப்படி எனக்கு ஆயுள் 83 ஆண்டுகள். எனக்கு இப்போது 42 வயது ஆகிறது.
என் வாலிப வயதில் ஏழரை ஆண்டுச் சனியாக - அதுவும் மங்கு சனியாக நீ வந்து
என்னைப் பிடித்து ஆட்டியதால், எனக்குத் திருமண வாழ்க்கையே இல்லாமல் போய்
விட்டது. ஆனால் எனக்கு ஒரு நன்மையும் கிடைத்தது. வருடம் 100 செல்வங்களுக்கு
உயர் கல்வி போதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இனி வரும் காலத்தில்
எந்தவிதத் துயரமும் இன்றி இருக்க விரும்புகிறேன். ஆதலால் வருங்காலத்தில்
எக்காரணம் கொண்டும் அல்லது எந்த நியதிப்படியும் நீ வந்து என்னைப் பிடிக்கவே
கூடாது. அதுதான் நான் விரும்பிக்கேட்கும் வரம். அதைத் தந்தருள்க சனீஸ்வரரே!”
-------------------------------------------------
சனி அதை வழங்கினாரா? இல்லையா?
ஆசிரியரின் வாழ்வில் நடந்தது என்ன?
அதைத்தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
சிலர் நினைக்கலாம் என்னடா, தலைமை சுயநலமாகத் தனக்குப் பயன்படும்படியாக
வரம் ஒன்றைக் கேட்டிருக்கிறாரே என்று!
தலைமை அசிரியர் தன்னைக் கல்விக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்று முன்பே
சொல்லியிருக்கிறேன். தன்னை ஒன்றிற்காக அர்ப்பணைத்துக் கொண்டவரிடம்
எப்படி சுயநலம் இருக்கும்?
தன்னுடைய கல்விப்பணிக்கு எந்தவிதக் கெடுதலும் வந்துவிடக்கூடது என்ற பொது
நோக்கிலேதான் அந்த வரத்தை அவர் கேட்டார்.
சற்று புன்னகைத்த சனீஸ்வரன், மெல்லிய குரலில் சொன்னார்,”குருவே! தர்மத்தைப்
போதிக்கும் நீங்களா இப்படிக் கேட்பது? உரிய நேரத்தில் ஒவ்வொருவரையும் பிடித்து,
அவர்களை பலவித சோதனைக்கு உள்ளாக்கி அவர்களுடைய கர்மவினைகளை
நிறைவேற்ற வைப்பதும், அவர்களை நல்வழிப் படுத்துவதும் எனது தர்மம். அதை நான்
எப்படி உங்கள் ஒருவருக்காக விட்டுக் கொடுப்பது? அது தர்மத்தை மீறும் செயலல்லவா?
ஒவ்வொரு சுற்றிலும் - அதாவது ஒவ்வொரு முப்பது ஆண்டுகளிலும், நான் ஏழரைச்
சனியாக (12ம் வீடு, 1ம் வீடு, 2ம் வீடு) ஏழரை ஆண்டுகளும், அஷ்டமத்துச் சனியாக
(8ம் வீடு) இரண்டரை ஆண்டுகளும், கேந்திரச் சனியாக (4ம் வீடு) இரண்டரை
ஆண்டுகளும்,அர்த்தாஷ்ட சனியாக (7ம் வீடு) இரண்டரை ஆண்டுகளும், ஆக மொத்தம்
15 ஆண்டுகள் ஒருவரைப் பிடிப்பது வழக்கம். அதேபோல சுற்றில் மீதம் உள்ள 15 ஆண்டுகள்
அவரை விட்டு விலகி இருப்பதும் வழக்கம். அது என்னுடைய தலையாய பணி. அதை
நான் யாருக்காகவும் செய்யாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் கெட்டுக் கொண்ட
படியால் உங்களுக்கு என்னால் ஒரு சலுகை தர முடியும். ஒவ்வொரு இரண்டரை ஆண்டு
கால கட்டத்தில் மொத்தம் 30 மாதங்களும் உங்களைப் பிடிக்காமல் வெறும் மூன்று
மாதங்கள் மட்டும் உங்களைப் பிடிக்கிறேன். ஆனால் அந்த 30 மாதங்களும் நீங்கள்
பட வேண்டிய வேதனைகளை, துன்பங்களை ஒட்டு மொத்தமாக அந்த மூன்று மாதங்களில்
அனுபவித்தாக வேண்டும். அதற்குச் சம்மதமா?” என்றார்
அதாவது தினம் 3 ஸ்பூன்கள் கசப்பு மருந்தை, 3 spoons x 30 days x 30 months = 2,700 spoons
குடிக்க வேண்டிய மருந்தைத் தினம் பத்து மடங்காக - அதாவது 30 spoons மருந்தாக
3 மாதங்களில் நீங்கள் குடிக்க வேண்டியதிருக்கும், அதற்குரிய உபாதைகளும் வலிகளும்
இருக்கும் - சம்மதமா? என்று கேட்டார்
ஆசிரியரும் சட்டென்று யோசித்து விட்டுச் சலுகைப்படியே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்.
“அப்படியே ஆகட்டும், வருகிறேன்!” என்று சொல்லிய சனீஸ்வரர், அங்கே ஒரு பெரிய ஒளியை
உண்டாக்கிவிட்டு ஷணத்திலே மறைந்து விட்டார்.
----------------------------------------------------------------------------------------------------
இரண்டே நாட்களில், ஆசிரியரின் புகழ் நாடு முழுவதும் பரவி விட்டது.சும்மா பரவவில்லை.
கச்சா முச்சா என்று பரவி விட்டது. எல்லா இடங்களிலும் அவரைப் பற்றிய பேச்சாகவே
இருந்தது.
நாளுக்கு நாள் வண்டி கட்டிக்கொண்டு அந்தப் பள்ளியைப் பார்க்கவரும் கூட்டம்
அதிகரித்துக் கொண்டே போனது. நித்தமும் திருவிழாவாகிவிட்டது.
அத்தனை பேர்களையும் சமாளித்து அனுப்புவது பெரும்பாடாக இருந்தது. வந்தவர்கள்
வாத்தியாரை ஒருமுறையாவது பார்த்துவிட்டுப்போக விரும்பினார்கள்.
பள்ளி வாயிலேயே ஒரு மேடை போட்டு, பகலில் மணிக்கு ஒரு முறை காட்சி கொடுத்து,
இரண்டுவார்த்தை பேசி, வாத்தியார் வந்தவர்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
அந்த நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த மன்னரின் காதிலும் செய்தி விழுந்தது.
வியப்படைந்த அவர் ஆசிரியரைப் பார்க்க விரும்பினார். அதோடு சனீஸ்வரனே வந்து
படித்த அந்தப் பள்ளியையும் பார்க்க விரும்பினார். உடனே தனது பரிவாரங்களுடன்
புறப்பட்டுப் பள்ளிக்கு வந்து சேர்ந்து விட்டார்.
மற்றவர்களை அனுபியதைப்போல, வாசலில் இருந்த மேடையிலேயே இரண்டு வார்த்தைகள்
பேசி மன்னரைத் திருப்பி அனுப்பிவிட முடியுமா என்ன?
மன்னருக்கு, பள்ளி வளாகத்தில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பெற்றது. பள்ளியைச்
சுற்றிப் பார்த்த மன்னர் அதன் ரம்மியமான சூழலைப் பார்த்து மனம் மகிழ்ந்து விட்டார்.
அதோடு பள்ளி நூலகத்தில் இருந்த ஏராளமான ஏட்டுச் சுவடிகளையும் பார்த்துத் திகைத்து
விட்டார். தலைமை ஆசிரியரின் கம்பீரமான தோற்றம்தான் எல்லாவற்றையும் விட
அவரை அதிகமாக அசத்தியது.
ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக அவருடன் பேசிக்கொண்டிருந்த மன்னர்,”நீங்கள்
பணி செய்ய வேண்டிய இடம் இதுவல்ல - என்னுடன் வாருங்கள் - இன்று முதல் இந்த நாட்டின்
குரு நீங்கள்தான். உங்கள் சேவை இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும்”
என்று கோரிக்கை வைத்தார்.
வேறு யாராவது என்றால் வெறும் உத்தரவிலேயே அது முடிந்துவிடும். ஆனால் தானே
தேடிவந்ததால், உத்தரவு இன்றி கோரிக்கையாக அதை மன்னர் பெருமான் முன்வைத்தார்.
ஆனால் நம் தலைமை ஆசிரியர் அதற்கு புன்முறுவலுடன் மறுத்து விட்டார். தனக்கு அந்த
ஆசிரியப் பணியே போதும் என்றும், வேறு எதுவும் தனக்கு ஆத்ம திருப்தி அளிக்காது
என்றும் கூறிவிட்டார்.
எதுவும் மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது, வேகமும், ஆர்வமும் இரண்டு
மடங்கு வந்து விடுமல்லவா? அதுபோல மன்னருக்கும் வந்து விட்டது.
“நீங்கள் மதகுரு மட்டுமல்ல! கல்வி மந்திரியும் நீங்கள்தான். இதுபோல நூறு பள்ளிக்
கூடங்களை நாடு முழுவதும் ஏற்படுத்துங்கள் அதற்கு வேண்டிய நிதி உதவிகளை நான்
செய்கிறேன். வேண்டிய மற்ற வசதிகளையும் செய்து தருகிறேன். பண்டிதர்களைப் பிடித்து,
அவர்களுக்குக் குறுகிய காலத்தில் பயிற்சியும் கொடுத்து பள்ளிகளை முன் நின்று
நீங்களே நடத்துங்கள்” என்றெல்லாம் சொல்லி ஒரு வழியாக ஆசிரியரை ஒப்புக்கொள்ள
வைத்து விட்டார்.
ஆசிரியரும், மன்னருடன் புறப்பட்டுச் சென்றார். தலைநகரில் அவருக்கு எல்லா
மரியாதைகளும் கிடைத்தது. அரச சபையில் மன்னருக்கு அருகில் அமரும் வாய்ப்பும்
கிடைத்தது. அவர் தங்குவதற்கு பெரிய தோட்டத்துடன் கூடிய குட்டி அரண்மனை
ஒன்றும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது.
நூறு இடங்களைத் தெரிவு செய்து அதே போன்று உயர் கல்வி போதிக்கும்
பாடசாலைகளும் துவங்கப்பெற்றன. அரசர் நம் ஆசிரியரைக் கலந்து ஆலோசிக்காமல்
எதுவும் செய்வதில்லை.
இப்படியே காலச் சக்கரத்தின் சுழற்சியில் இரண்டு ஆண்டுகள் போனதே தெரியவில்லை.
எல்லாம் வழக்கப்படியே நடந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது? கதையில்தான்
சுவாரசியம் ஏது?
ஒருநாள் அரண்மனையில் நடந்த அதிரடி நிகழ்வில், ஆசிரியர், மன்னரின் ஆதீத
கோபத்திற்கு ஆளாக, கோட்டையில் இருந்த நமது ஆசிரியர், பாதாள சிறைக்குப்
போகும்படி ஆகிவிட்டது.
என்ன நடந்தது அன்று?
ஆசிரியருக்குக் கைகொடுக்க, அவருடைய சீடன் சனீஸ்வரன் வந்தானா?
அடுத்த பதிவில் பார்ப்போம்!
(தொடரும்)
---------------------------------------------------------------------

படிக்க ஆர்வமாக உள்ளது. சிறிய பிராயத்திற்குப் போனது போன்ற உணர்வு.
ReplyDeleteநன்றி
/////Pandiyan Said:படிக்க ஆர்வமாக உள்ளது. சிறிய பிராயத்திற்குப் போனது போன்ற உணர்வு.நன்றி/////
ReplyDeleteஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் ஒரு கதை சொல்லும் பாங்கின் முக்கிய நோக்கம் ஆகும் நண்பரே!
அடுத்த பகுதியை மிகவும் எதிர்பார்த்து
ReplyDeleteஆவலுடன்
இராசகோபால்
ஆசிரியருக்குக் கைகொடுக்க, அவருடைய சீடன் சனீஸ்வரன் வந்தானா?
ReplyDeleteஅவருடைய சீடன் சனீஸ்வரன் வந்ததனால் தான் நமது ஆசிரியர் பாதாள சிறைக்குப்
ReplyDeleteபோகும்படி ஆகிவிட்டது.
வாத்தியாரய்யா,
ReplyDeleteஇப்படி ஒரு கதயா? ரொம்பவே விறுவிறுப்பா இருக்கு.மேலே சீக்கிரமா போடுங்க. ரொம்ப காக்க வைக்காதீங்க.
////Anonymous said...
ReplyDeleteஅடுத்த பகுதியை மிகவும் எதிர்பார்த்து
ஆவலுடன்
இராசகோபால்/////
அடுத்த பகுதி விரைவில் - அதுவும் உங்களுக்காக
////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஆசிரியருக்குக் கைகொடுக்க, அவருடைய சீடன் சனீஸ்வரன் வந்தானா?/////
வராமல் இருப்பாரா?
////////விக்னேஸ்வரன் said...
ReplyDeleteஅவருடைய சீடன் சனீஸ்வரன் வந்ததனால் தான் நமது ஆசிரியர் பாதாள சிறைக்குப்
போகும்படி ஆகிவிட்டது./////
சனீஸ்வரன் உதவிக்கு வரவில்லையா?
///////Sumathi. said...
ReplyDeleteவாத்தியாரய்யா,
இப்படி ஒரு கதையா? ரொம்பவே விறுவிறுப்பா இருக்கு.மேலே சீக்கிரமா போடுங்க. ரொம்ப காக்க வைக்காதீங்க////
இல்லை சகோதரி. அடுத்தது ஒரு பகுதியே - அதுவும் அது நிறைவுப் பகுதி!
வடிவேலு பாணியில்
ReplyDelete"மாப்பு வைச்சுட்டான் ஐயா( அரசரா,சனி பகவானா)ஆப்பு"
தெரியும் சேதி அடுத்த பதிவில்
காத்திருக்கும் மாணவர்கள்
நூற்றுக்கும் மேலே
தங்களின் பதிவு அருமை. அருமையாக கதை சொல்லுவிதம் அற்புதம்.வாழ்த்துக்கள்.ஆன்மிகம் சம்பந்தமாக தங்கள்
ReplyDeleteபதிவுகள் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திவருவது நாட்டிற்கு மிக நல்லது.
//////Anonymous said...
ReplyDeleteவடிவேலு பாணியில்
"மாப்பு வைச்சுட்டான் ஐயா( அரசரா,சனி பகவானா)ஆப்பு"
தெரியும் சேதி அடுத்த பதிவில்
காத்திருக்கும் மாணவர்கள்
நூற்றுக்கும் மேலே/////
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி அனானி!
/////நெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteதங்களின் பதிவு அருமை. அருமையாக கதை சொல்லுவிதம் அற்புதம்.வாழ்த்துக்கள்.ஆன்மிகம் சம்பந்தமாக தங்கள்
பதிவுகள் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திவருவது நாட்டிற்கு மிக நல்லது.////
உங்கள் பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் கார்த்திக்!
நாளை வாத்தியார் பாடம் நடத்தா விட்டால் வகுப்பில் போராட்டம் நடத்தப்படும்...
ReplyDeleteநாளை வாத்தியார் பாடம் நடத்தா விட்டால் வகுப்பில் போராட்டம் நடத்தப்படும்...
ReplyDelete//எதுவும் மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது, வேகமும், ஆர்வமும் இரண்டு மடங்கு வந்து விடுமல்லவா?//
ReplyDeleteநிதர்சமான உண்மை கூடவே தன்மானமும் தலை தூக்கி விடும்.
//எல்லாம் வழக்கப்படியே நடந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது?//
கண்டிப்பாக
// கோட்டையில் இருந்த நமது ஆசிரியர், பாதாள சிறைக்குப்
போகும்படி ஆகிவிட்டது//
மருந்து சாப்பிட நேரம் வந்து விட்டதா? :))
சார் உங்க கதை நன்றாக இருந்தது. தொடர்ந்து பட்டய கிளப்புங்க
/////விக்னேஸ் said...
ReplyDeleteநாளை வாத்தியார் பாடம் நடத்தா விட்டால் வகுப்பில் போராட்டம் நடத்தப்படும்.../////
போராட்டத்திற்கெல்லாம் வழியில்லை! அடுத்த வகுப்பு ஆரம்பமாகிவிட்டது! சென்று பாருங்கள்
////கிரி said..
ReplyDelete//எதுவும் மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது, வேகமும், ஆர்வமும் இரண்டு மடங்கு வந்து விடுமல்லவா?//
நிதர்சமான உண்மை கூடவே தன்மானமும் தலை தூக்கி விடும்
//எல்லாம் வழக்கப்படியே நடந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் ஏது?//
கண்டிப்பாக
// கோட்டையில் இருந்த நமது ஆசிரியர், பாதாள சிறைக்குப்
போகும்படி ஆகிவிட்டது//
மருந்து சாப்பிட நேரம் வந்து விட்டதா? :))
சார் உங்க கதை நன்றாக இருந்தது. தொடர்ந்து பட்டய கிளப்புங்க///
பாராட்டிற்கு நன்றி மிஸ்டர் கிரி!