16.10.24

Astrology - தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

Astrology - தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?

தங்கமே தங்கமே தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ?" என்ற பழைய திரைப் படப் பாடல் ஒன்று உள்ளது. பாடல் அற்புதமாக இருக்கும். பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடியவுடன், நாயகி டி.ஏ.மதுரம், கேட்பார்:

”இந்தாங்கய்யா, இப்போ தங்கமேன்னு சொன்னது என்னைத் தானே?”

 அதற்கு அவர் இப்படிப் பதில் சொல்வார்

”ஐயோ ஐயய்யோ ஐயய்யோ, இது என்னடா இது? இதோ பாரும்மா, இந்தப் பாட்டுப் பாடறேன் பாரு அதுல பித்தளைக் காசு, வெள்ளிக் காசு வரைக்கும் வந்திருக்கு, தங்கம் கெடைக்கலே, அப்படி தங்கம் வந்திறுச்சுன்னா... தங்கமே அதான் என்று தான் பெறுவேனோ?”

தங்கத்தின் மேல் எல்லோருக்குமே ஒரு மோகம் உண்டு. இன்று வரைக்கும் ஒரு நம்பிக்கையான முதலீட்டு உலோகம் அதுதான்.

1931ஆம் ஆண்டு ஒரு பவுனின் விலை ரூ.13:00 மட்டுமே
இன்று அதனுடைய விலை ரூ.24,000/-
80 ஆண்டுகளில் சுமார் 1850 மடங்கு உயர்ந்துள்ளது.

19ஆம் ஆண்டில்  கொத்தனாரின் (Mason) ஒரு நாள் சம்பளம் 0.25 காசுகள் அதாவது மாதம் சுமார் ஏழு ரூபாய்கள்
இன்று சாதரண ஹோட்டலில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.12
நல்ல ஹோட்டல்களில் ஒரு கோப்பை காப்பியின் விலை ரூ.20

அதைவிடுங்கள், இன்று கொத்தனாரின் ஒரு நாள் சம்பளம் ரூ.500/-
அதே விகித்ததில் பார்த்தால் சுமார் 2000 மடங்கு உயர்ந்துள்ளது

தங்கத்துடன் போட்டி போட்டுக் கொண்டு கூலியும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது

இன்று பணியில் புதிதாகச் சேரும் ஒரு மென்பொறியாளரின் சம்பளம் சுமார் 25,000:00 ரூபாய்கள். (இன்றைய சந்தை விலையில் சுமார் ஒரு பவுன் காசு) கஷ்டப்பட்டுப் படித்து விட்டு, மாதச் சம்பளமாக ஒரு பவுன் காசிற்குத்தான் வேலை பார்க்க வேண்டியதுள்ளது

அன்று உங்கள் பாட்டனார் 1,300 ரூபாய் செலவில் 100 பவுன் காசுகளை வாங்கி வைத்துவிட்டுப் போயிருந்தார் என்றால், அதன் இன்றைய மதிப்பு 24 லட்ச ரூபாய்கள்

எப்படி ஒரு ஏற்றம் பார்த்தீர்களா?
----------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்

தங்கத்தின் விலை திடீரென்று ஏறுகிறது அல்லது இறங்குகிறது. ஜோதிடப்படி அதற்கு என்ன காரணம்?

செவ்வாய், குரு, சனி ஆகிய 3 கிரகங்களும் வக்கிரகதியில் சுழலும் போது தங்கம் மற்றும் வெள்ளி போன்ற அரிய உலோகங்களின் விலை சரியத் துவங்கும்

”சார், தங்கத்திற்கு அதிபதி குரு, வெள்ளிக்கு அதிபதி சுக்கிரன், அப்படியிருக்கும் போது, இங்கே சனிக்கும், செவ்வாய்க்கும் என்ன வேலை?” என்று யாரும் குறுக்குக்கேள்வி கேட்க வேண்டாம்.

பழைய நூல்களில் தங்கம், வெள்ளி விலை சரிவிற்கு இந்த மூன்று கிரகங்களின் வக்கிரகதியைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள்

குரு தனகாரகன், சனி கர்மகாரகன், செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம். ஒருவரைப் பொருளாதர ரீதியாக (தலை எழுத்தை மாற்றும் முகமாக) புரட்டிப்போடும் ஆற்றல் அந்த மூன்று கிரகங்களுக்கும் உண்டு. அந்த அடிப்படையில் இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வக்கிரம் நிவர்த்தி ஆனவுடன் மீண்டும் ஏறத்துவங்கும்.

தங்கத்தை வாங்கி வைக்க (வீட்டில்தான்) விரும்புகிறவர்கள் அம்மூன்று கிரகங்களின் நிலைப்பாடுகளைக் கவனித்து, அரிய உலோகங்கள் சரிவில் இருக்கும்போது வாங்க வேண்டும்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com