9.8.24

Astrology. பிரதோஷமும் பில் கேட்ஸும் !

Astrology. பிரதோஷமும் பில் கேட்ஸும் !

“வாத்தியார் அப்துல்காதரும் அமாவாசையும் என்று சொல்வதைப்போல, பிரதோஷமும் பில் கேட்ஸும்! என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்களே - பில் கேட்ஸாவது, பிரதோஷமாவது?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

Bill Gates யாரென்று தெரியாதவர்களும் பதிவை விட்டு விலகவும்!

மற்றவர்கள் தொடரலாம்!

பிரதோஷத்தைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? சரி, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பிரதோஷம் என்பது திதிகளில் 13ஆவது திதியாகும். அதன் பெயர் திரயோதசி. (அதாவது அஷ்டமி, நவமி, தசமி என்பதைப்போல) அன்றைய தினத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள காலத்தில் அல்லது நேரத்தில்), சிவனாரை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

அதுவும் வளர்பிறை திரயோதசித் திதி மிகவும் விஷேசமானது. (வயதான) பெண்களைக் கேளுங்கள் சொல்வார்கள்.

விவரமாகத் தெரிந்துகொள்ள இந்த சுட்டியைக் கிளிக்கிப் பாருங்கள்: http://www.shaivam.org/siddhanta/Pradhosham.html, 
----------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சரி வளர்பிறை திரயோதசித் திதிக்கு இத்தனை வலிமை உண்டு என்றால், அதாவது அன்றைய தினம் சிவனாரை வழிபட்டால் மேன்மை எனும்போது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைக்கு என்ன மேன்மை?

உன்னதனமான பிறவி அக்குழந்தை. முன் கர்ம வினைகள் எல்லாம் துடைக்கப்பெற்று க்ளீன் ஸ்லேட்டாகப் பிற்க்கும் குழந்தை அது.

நமது பில் கேட்ஸூம் ஒரு வளர்பிறைத் திதியன்று பிறந்தவர்தான்?

என்ன ஆதாரம்?

அது இல்லாமல் வருவேனா?

கீழே கொடுத்துள்ளேன்


அதனால் அவர் அடைந்த நன்மைகள் என்னென்ன? அதற்கு அவருடைய ஜாதகத்தை அலச வேண்டும். அலசுவோம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com