20.8.24

Astrology. பொன்மகள் எப்போது வருவாள்?



Astrology.  பொன்மகள் எப்போது வருவாள்?

1970ஆம் ஆண்டு திரைக்கு வந்த சொர்க்கம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பிரபலமான பாடல் ஒன்று கீழே உள்ள வரிகளைக்கொண்ட பல்லவியுடன் துவங்கும்:

“பொன்மகள் வந்தாள்
பொருள்கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக
கண்மலர் கொஞ்சும் கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே!”

அதே பாடலின் சரணத்தின் கடைசி பத்தியில் இப்படி எழுதியிருப்பார்:

“செல்வத்தின் அனைப்பில் கிடப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்
இன்பத்தின் மனதிலே குளிப்பேன்
என்றென்றும் சுகத்தில் மிதப்பேன்”
-------------------------------------------
செல்வத்தின் அனைப்பில் கிடக்க அனைவருக்கும் ஆசைதான். ஆனால் நடக்க வேண்டுமே? செல்வத்த்தின் அனைப்பில் இருப்பவன் கூட வெல்வெட்டின் விரிப்பில் நடப்பதும் கிடையாது. சுகத்தில் மிதப்பதும் கிடையாது. வந்த செல்வத்தை விடாமல் தக்க வைத்துக்கொள்ளும் அவதியில் பலர் இருக்கிறார்கள்
சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் சுகம் கூட பெரிய செல்வந்தனுக்குக் கிடைப்பதில்லை. செல்வம் வந்தவுடன் கூடவே கஞ்சத்தனமும் வந்துவிடும்!
ஸ்ரீதேவி வந்தால் கூடவே அவளுடைய அக்கா மூதேவியும் வந்துவிடுவாள். அக்காவை உள்ளே விடக்கூடாது. அப்போதுதான் வந்த செல்வத்தால் பயன்பெற முடியும். சுகப்பட முடியும்!

அதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது பாடத்தைப் பார்ப்போம்!
-------------------------------------------------
சொகுசான வாழ்க்கைக்கான கிரக அமைப்பு: (Planetary position for luxurious life)

1
சுகாதிபதியும், பாக்யாதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் குடியிருந்தால், ஜாதகன் செள்கரியமான சொகுசான் வாழ்க்கை வாழ்வான். அதாவது 4ஆம் அதிப்தியும், ஒன்பதாம் அதிபதியும் ஒன்று சேர்ந்து லக்கினத்தில் இருக்க வேண்டும் (This combination will confer a luxurious life)

2
குரு பகவான் 4ஆம் வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டை நேரடியாகப் பார்க்க வேண்டும். அல்லது 4ஆம் வீட்டு அதிபதியுடன் கூட்டாக கேந்திரத்திலோ அல்லது திரிகோண வீட்டிலோ அமர்ந்திருந்தால் ஜாதகன் வாழ்க்கை செல்வமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்

3. 
நான்காம் அதிபதியும், ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனையாகி, ஒருவர் வீட்டில் மற்றவர் அமர்ந்திருந்தாலும், வாழ்க்கை செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

அவ்வளவுதானா?

இல்லை! முக்கியமானதை மட்டும் கூறியுள்ளேன். இன்னும் பல விதிமுறைகள் உள்ளன. அவற்றை விரிவாக இன்னொரு நாள் பார்ப்போம்!

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com