17.11.22

Lesson 73 Chance of career in Films


Star Lessons

Lesson no 73

New Lessons

பாடம் எண் 73

தலைப்பு திரைப்பட வாய்ப்பு 

யாருக்குத்தான் ஆசை இல்லை? பெரும்பாலான மக்களுக்குத் திரைப்படங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் சொல்ல மாட்டார்கள். சிலர் கடும் முயற்சி செய்து அதில் ஒரு இடத்தைப் பிடிப்பார்கள். சிலர் அதுவாகத் தேடி வரட்டும் என்று காத்திருப்பார்கள்.

 பணம், பெயர், புகழ் என்று ஒரு சேர எல்லாம் கிடைக்கும் துறை ஒன்று உண்டென்றால், அது சந்தேகத்திற்கு இடமின்றி திரைப்படத்துறைதான். 

அதிலும் நடிகர் அல்லது பாடகர் என்றால் அதி விரைவில், புகழின் உச்சிக்குப் போய்விடலாம். எண்ணற்ற ரசிகர்கள் வேறு கிடைப்பார்கள். 

ஜாதகப்படி அதற்கான வாய்ப்பு உண்டா என்று தெரிந்து கொள்வது எப்படி? 

அதை இன்று பார்ப்போம்! 

சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக (Strong) இருந்தால் எல்லாக் கலைகளும் எளிதில் கைவரும்! 

நடிப்பும், பாடும் திறமையும் கலையோடு சம்பந்தப்பட்டது. அதை மனதில் கொள்க! 

சரி, அதையே தொழிலாகக் கொள்வதற்கு என்ன அமைப்பு வேண்டும்? 

தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் சுக்கிரனுக்கு நல்ல சம்பந்தம் அல்லது நல்ல தொடர்பு இருக்க வேண்டும். நேரடியாகவும் இருக்கலாம் அல்லது மறைமுகமாகவும் இருக்கலாம். இருக்க வேண்டும். 

4ஆம் வீட்டில் அல்லது 10ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலை. அல்லது 10ஆம் வீட்டின் மீது சுக்கிரனின் பார்வை அல்லது 10ஆம் வீட்டுக்காரனுடன் சுக்கிரன் கூட்டாக (ஒன்றாக) இருக்கும் நிலைமை ஆகியவை அந்த வாய்ப்பை நல்கும்!

------------------------------------------------------------------------------

உதாரணம் 

நடிகர் திரு ரஜினிகாந்த்தின் ஜாதகம். 

சிம்ம லக்கின ஜாதகர். சிம்ம லக்கினம் நாயகர்களுக்கு (Heroes) உரிய லக்கினம்

பத்தாம் வீட்டின் (ரிஷப வீட்டின்) அதிபதியே சுக்கிரன். அதுவும் அவர் அம்சத்தில் ஆட்சி பலத்துடன் உள்ளார்.

லக்கினாதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்ந்து பத்தாம் வீட்டைத் தன் பார்வையில் வத்திருப்பது ஒரு சிறப்பாகும்!

இந்த அமைப்புக்கள்தான் அவரை நடிகராக்கின!

அன்புடன்,

வாத்தியார்

================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com