6.10.22

Lesson No 55 and 56 Importance of Yogas

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 55
New Lessons
பாடம் எண் 55

யோகங்களின் முக்கியத்துவம்
ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் அற்புதமாக உள்ளது. அல்லது அருமையாக உள்ளது. அல்லது நன்றாக உள்ளது அல்லது சுமாராக/சாதாரணமாக உள்ளது. அல்லது மோசமாக உள்ளது. மிகவும் மோசமாக உள்ளது. என்று கூறுவதற்கு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பயன்படும்.

நமது முனுசாமிகள் (அதாங்க நமது முனிவர்கள்) அவற்றை எல்லாம் தொகுத்து சிறப்பாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

யோகங்கள் இரண்டு வகைப்படும். நல்ல யோகங்கள் (Good yogas). கெட்ட யோகங்கள் (ava yogas)

நன்மை செய்யும் கிரகங்களின் கூட்டணி நன்மையான யோகங்களைத் தரும். தீய கிரகங்களின் கூட்டணி தீமையான (அவயோகங்கள்) யோகங்களைக் கொடுக்கும்.

நல்ல பெற்றோர்கள். நல்ல வீடு, மேன்மை மிக்க கல்வி, நல்ல வேலை, அன்பான மனைவி அல்லது கணவன், நல்ல குழந்தைகள், பெயர், புகழ், உடைமைகள், மதிப்பு மரியாதை செல்வாக்கு அதிகாரம் இவை எல்லாம் அல்லது இவ்ற்றில் சிலவாவது கிடைக்க ஜாதகத்தில் நல்ல யோகங்கள் இருக்க வேண்டும்

அதைவிடுத்து, வாழ்க்கை அவலமாக, வறுமையாக இருந்தால் அது அவயோகக் கணக்கில் வரும். வறுமை, உடல் ஊனம், கல்வியின்மை, விபத்துக்கள், தீர்ர்க்க முடியாத நோய்கள், அடிமைத்தனமான வாழ்க்கை, புத்திக்குறைவு அல்லது புத்தியின்மை அல்லது பேதமை சுருக்கமாகச் சொன்னால் பைத்தியக்காரத்தனம் (madness) எல்லாம் இதில் அடங்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், உச்சம் பெற்ற நிலையில் அந்த சுக்கிரன் ஜாதகருக்கு சொகுசான (Luxurious) வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். அதாவது எல்லா செள்கரியங்களையும், வசதிகளையும் கொடுப்பார். அது விதி (Rule) ஆனால்  அதே சுக்கிரன் அதே ஜாதகத்தில் நவாம்சத்தில் நீசமடைந்திருந்தால், முன் சொன்னது அனைத்தும் ஊற்றிக்கொண்டுவிடும்!

ஆனால் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகங்கள் ஊற்றிக் கொள்ளாமல் தங்கள் பணிகளை தங்களுடைய தசாபுத்திக் காலங்களில் செவ்வனே செய்துவிடும்.

பிருஹத் ஜாதகம், சரவளி போன்ற நூல்களில் ஏராளமான யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான யோகங்கள், அவற்றின் முக்கியத்துவத்தை வைத்து வரிசையாகப் பின்னொரு சமயம் பார்ப்போம். அவைகள் தனிப் பாடங்கள். 

யோகங்கள் எப்படி உண்டாகின்றன?

அமரும் இடத்தைவைத்து அல்லது கூட்டு சேரும் இடத்தை வைத்து அவைகள் உண்டாகும்

ராசியில் இருக்கும் இடத்தை வைத்து யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். நவாம்சத்தை வைத்து அவைகள் செல்லுமா? அல்லது செல்லாதா? என்பதைப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு ராசியில் சுக்கிரன் உச்சமடைவது ஜாதகனுக்கு சொகுசான வாழ்க்கையைக் கொடுக்கும். எல்லா விதமான வசதிகளையும் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில், அதே ஜாதகத்தில் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அவைகள் அனைத்தும் கேன்சலாகிவிடும்.

அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் யோகத்தைத் தராது. யோகங்கள் ஒரு ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகங்களாலும், நன்மையான வீடுகளில் அவைகள் அமர்வதாலும் அல்லது நன்மை செய்யும் இன்னொரு கிரகத்தின் கூட்டணியாலும் அல்லது பார்வையாலும் கிடைக்கும். ஆகவே அவை அனைத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்து ஒரு முடிவிற்கு வரக்கூடாது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 56 
New Lessons
பாடம் எண் 56

யோகங்கள் ஒரு விளக்கம்!

யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும்.

ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள்

ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்குத் தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு!

அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty)

ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன
1.  தன ராஜயோகம் (yogas for wealth)
2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame)
3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head)

சன்யாசத்தில் ராஜயோகமா...ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம். அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள்
------------------------------------------------------
1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, மற்றும் 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும்

2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும்

3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள்

பணம், புகழ், மதிப்பு, மரியாதை மற்றும் செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம்.

Yoga means Luck 
Keep it in mind

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com