29.9.22

Lesson 48 and 49 Lesson on Kochcharam

✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 48
New Lessons
பாடம் எண் 48

இன்று கோச்சாரம் பற்றிய பாடம்

கோள்களின் சஞ்சாரம் என்பதுதான் கோள்களின் சாரம் 
என்று மாறி கடைசியில் கோச்சாரம் என்று சுருங்கி விட்டது 
Transit of Planets

கோச்சாரத்தின் மூலம்  நவக்கிரகங்கள் அளிக்கும் பலன்களைப் பார்ப்போம்
 
இந்த வருடம், மாதம், தேதியில் ஒரு குறிபிட்ட கிரகம் எந்த ராசியில் சஞ்சரிகின்றார் என்பதை பஞ்சாங்கத்தை கொண்டு அறியலாம். 

அவ்வாறு அந்த கிரகம் சஞ்சரிக்கும் ராசியானது சந்திர லக்கினம் (சந்திரன் நிற்கும் வீடு) முதல் எத்தனையாவது வீடு என்பதை எண்ணிப் பார்த்து அந்த எண்ணிக்கைக்கு தக்கபடி பலன்களை அறியலாம் 

கோச்சாரத்தில் 9 கிரகங்களும் 9 வகையான பலன்களை கொடுக்கும். அவற்றுள் சுப பலன் எவை அசுப பலன் எவை என இனம் பிரித்து கோசாரப் பலன்களைப் பார்க்க வேண்டும்   

கோச்சாரம் ஒருவருக்கு நல்ல காலமாக இருந்தாலும் அவரது தசா புத்திகள் அசுபமானதாக இருந்தால் ஜாதகருக்கு சுப பலன்கள் நடைபெறாது. அதுபோல கோச்சாரம் ஒருவருக்கு கெட்ட காலமாய் இருந்தாலும், தசா புத்திகள் சுபமானவைகளாக இருந்தால் ஜாதகருக்கு அசுப பலன்கள் நடைபெறாது. கோச்சாரம்,தசா புத்தி இவற்றில் தசா புத்திகளே பலம் வாய்ந்தது.

அதை மனதில் கொள்க!!!!

சூரியன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
சந்திரன் ஒரு ராசியில் 2¼ நாள் காலம் சஞ்சரிப்பார்
செவ்வாய் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சரிப்பார்
புதன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
குரு ஒரு ராசியில் 1 வருட காலம் சஞ்சரிப்பார்
சுக்கிரன் ஒரு ராசியில் 1 மாத காலம் சஞ்சரிப்பார்
சனி ஒரு ராசியில் 2½ வருட காலம் சஞ்சரிப்பார்
ராகு / கேது ஒரு ராசியில் 1½ காலம் சஞ்சரிப்பார்


ஒரு வருஷத்தின் பொதுவான பலன்களை சனி, ராகு, கேது, குரு இவர்களின் சஞ்சாரங்களை கொண்டும், ஒரு மாதத்தின் பொதுவான பலன்களை சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் இவர்களின் சஞ்சாரங்களை கொண்டும், ஒரு நாளின் பொதுவான பலன்களை சந்திரனின் சஞ்சாரத்தை கொண்டும் தெரிந்து கொள்ளலாம். 

சூரியன், செவ்வாய்,  சந்திரன், குரு ஆகிய நான்கு கிரகங்களும் சஞ்சாரத்தின்  முற்பகுதியில் சஞ்சாரம் செய்யும் பொழுதே  கொடுக்க வேண்டிய பலன்களை கொடுத்து விடுவார்கள்.
சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பிற்பகுதியில்  தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார்கள்.
புதனும், சுக்கிரனும் ஒரு ராசியின் நடுப் குதியில் சஞ்சாரம் செய்யும் பொழுது  தாம் கொடுக்க வேண்டிய பலன்களை கொடுப்பார்கள்.

கிரகங்களின் கோச்சாரப் பலன்கள் என்ன என்பதை நாளை (அடுத்த பதிவில்) பார்க்கலாம் பொறுத்திருந்து பாருங்கள் ( படியுங்கள்)

அன்புடன்
வாத்தியார்
00000000000000000000000000000000000000000000
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 49
New Lessons
பாடம் எண் 49

இன்று கோச்சாரம் பற்றிய பாடம் - பகுதி 2

சூரியனின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 3, 6, 10, 11, ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

சந்திரனின் கோசாரப் பலன் 
ந்திரன், சந்திர லக்னத்தில் இருந்து 1,3, 6, 7, 10,11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

செவ்வாய் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 3, 6, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

புதனின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 4, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

குருவின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 2, 5, 7,9, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

சுக்ரனின் கோசாரப் பலன் 
சந்திர லக்னத்தில் இருந்து 1, 2, 3, 4, 5, 8,9, 11 ஆகிய இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

சனியின் கோள்சாரப் பலன்: 
சனி 3 மற்ரும் 10ம் இடங்களில் இருக்கும்போது நன்மையான பலன்கள் உண்டாகும்

இராகு - கேதுகளின் கோசாரப் பலன் 
சனியை போலவே ராகுவும், செவ்வாயைப் போல கேதுவும் பலன் வழங்குAவார்கள் ஆகவே ராகுவின் கோசாரப் பலன்களை சனியின் கோசாரப் பலன்களை கொண்டும், கேதுவின் கோசாரப் பலன்களை செவ்வாயின் கோசாரப் பலன்களை கொண்டும் அறிந்து கொள்க.

அன்புடன் 
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com