2.5.22

காமராஜர் முதன் முதலாக தேர்தலில் நின்ற தொகுதி!!!



காமராஜர் முதன் முதலாக தேர்தலில் நின்ற தொகுதி!!!

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். -  

ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை. அதானல் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வற்றி பெற்றாக வேண்டும். போட்டியிட வேண்டியதில்லை. எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் என்று பலரும் கூறினார்கள்.

அதை ஏற்கவில்லை. மக்களிடம் வாக்குகளை பெற்றே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்கிறார். பட்டென்று என் தொகுதியில் போட்டியிடுங்கள், நான் பதவி விலகுகிறேன் என்கிறார் அருணாச்சலம். இடைத்தேர்தல் நடந்தது.

அதன்படி அவருக்கு தொடர்பே இல்லாத குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் என்ற தோழர் போட்டியிடுகிறார். கடுமையான பிரச்சாரம் நடக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ‘மேம்பாலம்’ கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைக்கிறார்கள்.

காமராஜர் முதல்வர். பதவியில் இருக்கிறார். சரி என்று கூறியிருந்தால் மொத்த வாக்காளர்களும் ஓட்டு போட்டிருப்பார்கள்.. ஆனால் அப்படி செய்யவில்லை. அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டு வருகிறார்.

உடனிருந்தவர்கள் ‘என்ன ஐயா. கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியிருக்க கூடாதா. கோரிக்கை நியாயமானதும்கூட. எல்லோரும் ஓட்டு போட்டிருப்பார்களே’ என்று குறைபட்டுக்கொண்ட போது,....“ அது தப்பு. மக்கள் வைத்த கோரிக்கை நியாயமானதுதான். அதை தேர்தலுக்கு பிறகு செய்துகொடுத்துட வேண்டியதுதான். ஆனால் அதை சொல்லி ஓட்டு கேட்ககூடாது. நான் அப்படி கேட்டால் எதிர்கட்சி வேட்பாளர் கோதண்டம் என்ன சொல்லி ஓட்டு கேட்பார். அவரிடம் அதிகாரமில்லையே. நான் அதிகாரத்தை துஷபிரயோகம் செய்வதாகதானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்.” என்று கூறி மறுத்தே விட்டார்.

இன்றைய அரசியல் அப்படி இருக்கிறதா?

எத்தனை அறிவிப்புகள். எத்தனை இலவசங்கள். தாங்கள் சேர்த்த சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள அதிகாரம் என்ற பூதம் வேண்டும்.

மக்கள் நிராகரித்தால்...? என்ன செய்வது. தோற்றுவிட்டால் என்ன செய்வது? என்ற அச்சம்.

அந்த அச்சம் இலவச அறிவிப்புகளை, திட்டங்களை அறிவிக்கச் சொல்கிறது.
------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com