1.3.22

யாருடைய தியாகம் சிறந்தது?



யாருடைய தியாகம் சிறந்தது?

தாயா? தந்தையா ? தியாகத்தில் யாருடைய தியாகம் சிறந்தது?       
                           
ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கடினப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? 
அல்லது  அப்பாவா...? அம்மா ! 

அதற்குத் தாய் இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கடினமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்து கொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீங்கள் ஒவ்வொருவர்களாக பிறந்த பின்னர் 
தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக,  உணவு, உடை, நலம் மற்றும் உங்கள் உயர்வுக்கு கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வையால் கடின உழைப்பால் உருவானவர்கள்.

மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டார்.

அவரின் பதில்:
இந்த மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு துயர்அடைந்தாள் என்றுகூட 
எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் ஒயாத உழைப்பு தான் இந்த குடும்பத்தை/உங்களை இன்று இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. 
என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காகத்தான் என்னுடன் அடிக்கடி வாதம் செய்திருக்கிறாள். 

அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை நான் எப்படியோ பரவாயில்லை அவளின் நிறைவு காலத்திலாவது அவளுக்கு ஏதாவது விருப்பம் ஆனால் என்னிடம் கூட கேட்டது கிடையாது நீங்கள் எல்லோரும் நிறை வேற்றுவீர்கள் என நம்புகிறேன் என்றார்.

மகன் தனது சகோதர/சகோதரிகளிடம் சொன்னான்.  நம்மைவிட இந்த உலகில் பாக்கியசாலிகள் யாரும் இருக்க முடியாது. 

தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான்.

பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் காப்போம்,
இப்பவும் நாம், நீ பார் அடுத்த மாதம் நான் பார்க்கிறேன் என்று பந்தாட வேண்டாம் யாருக்கு கொடுப்பினை இருக்கோ அந்த பாக்கியத்தை தவற விட்டுவிட்டுப் பின்
புகைப் படத்துக்கு மாலையும் சேலையும் பலகாரங்களும் வைத்து வழிபாடு பண்ணுவதில் எந்த பேருமில்லை புகழுமில்லை

நன்றி 
🌹வாழ்த்துகள்🌹
வாழ்க வளமுடன்

இந்த பதிவு அனைத்து தாய் தந்தைக்கும் சமர்ப்பனம்
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com