30.11.21

Devotional: ஆன்மிகம்: குன்றக்குடி முருகன் கோவில்



Devotional: ஆன்மிகம்: குன்றக்குடி முருகன் கோவில் 

இன்று செவ்வாய்க்கிழமை.முருகப்பெருமானுக்கு உகந்த நாள். வாருங்கள் குன்றக்குடி கோவிலைக் கண்டு வருவோம்! 

குன்றக்குடி , தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சியின் அருகில் உள்ளது . 

இவ்வூர் மிகவும் புகழ் பெற்ற கோயில் தலங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை ஆதீனம் இவ்வூரில் அமைந்துள்ளது. இதன் 45ஆவது மகாசந்நிதானமாகிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் இவ்வூருக்கு மிகவும் பெருமை சேர்த்தார். 

கிராம வளர்ச்சித் திட்டங்களில் பெரும் ஆர்வம் காட்டிய இவர்தம் பணிகள் மத்திய அரசினரால் குன்றக்குடி மாதிரித் திட்டம் என்னும் பெயரில் இந்தியாவெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

குன்றக்குடியில் முருகன் கோயிலும் மற்றும் குடைவரை கோயிலும் அமைந்துள்ளது. 

புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த ஊர் இது. 

ஒருமுறை குன்றக்குடிக்கு சென்று வாருங்கள். வாழ்வின் எல்லா நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள் 

அன்புடன்

வாத்தியார்

==========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.11.21

Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 10




Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 10 

கீழே ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஜாதகி பட்டப் படிப்பில் சிறப்பாகத் தேர்வு பெற்றார். பிறகு ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பினார். அதிலும் சுலபமாகத் தேர்வாகி, படித்துப் பட்டம் பெற்றார். சில மாதங்கள் பயிற்சிக்குப் பிறகு நல்ல இடத்தில் (மாவட்டத்தில்) வேலை கிடைத்து, அமர்ந்தார். தொட்டதெல்லாம் துலங்கியது. வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேர்ந்தது.

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?


ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 1-12-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.11.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-11-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-11-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்




சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா?  தமிழ்நாட்டுக்காரர். அவர் ஈடுபட்டிருக்கும் துறையில் அவர்தான் நம்பர் ஒன். என்ன துறையா? அதைச் சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.11.21

Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 10


Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 10 

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய தந்தையார் கோடிக்கணக்கான செல்வத்தைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். ஆனால் ஜாதகர் அவருடைய 45வது  வயதிற்குள் வியாபாரத்தில் நஷ்டங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டு எல்லா சொத்துக்களும் கரைந்து காணாமல் போய்விட்டன. அன்றாடம் செலவிற்கே சிரமப்படும் நிலைமைக்கு ஜாதகர் ஆளாகி விட்டார்.



ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

ஜாதகத்தை அலசி இந்த கேள்விக்கு மட்டும்பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 24-11-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.21

Astrology: Quiz 10 : ஜோதிடப் புதிர் 18-11-2021 ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!



Astrology: Quiz 10 : ஜோதிடப் புதிர்  18-11-2021 ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்


சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா?  பெண்மணி. சமூக சேவகி !!!!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.21

Astrology: Jothidam: 15-11-2021 புதிருக்கான விடை!!!!

Astrology: Jothidam: 15-11-2021 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மனிதருக்கு அவருடைய 36வது வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை வந்தது. ஆசை அதிகமாகி அனுதினமும் வீட்டைப் பற்றிய கனவே அவரைச் சுற்றிவரத் துவங்கியது. தசா, புத்திகள் தானே பலனைத் தரும். சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் அதற்குரிய தசா, புத்தி (Major Dasa and Sub period) வந்த போது அவருடைய கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது. அவருடைய ஜாதகத்தை அலசி அவருடைய எந்த வயதில் கனவு நிறைவேறியது  அல்லது எந்த தசா, புத்தியில் நிறைவேறியது என்பதைச் சொல்லுங்கள்'' என்று கேட்டிருந்தேன்

சரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 36 வது வயதில் குரு மகா திசை ஆரம்பம். குரு திசை சுய புத்தி வழக்கம்போல வேலை செய்யவில்லை. அடுத்து வந்த சனி புத்தியில் தசா நாதனும் புத்தி நாதனும் அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 Position) அதற்கு அடுத்த புதன் புத்தியில், புதன்  குரு பகவானின் பார்வையைப் பெற்றிருப்பதால் அந்த திசா புத்தியில் ஜாதகரின் கனவுன் நிறைவேறியது. அதாவது ஜாதகரின் 41வது வயதில் அவரது கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது!!!!

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.11.21

Devotional அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், சென்னிமலை


Devotional அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில், சென்னிமலை

இன்று செவ்வாய்க் கிழமை. முருகனுக்கு உகந்த நாள். வாருங்கள் முருகன் தலம் ஒன்றிற்கு சென்று வருவோம்!!!!

கோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை

முருகன் பெயர்  :சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 8.15  இரவு மணி வரை.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,
சென்னிமலை
பெருந்துறை தாலுகா,
ஈரோடு மாவட்டம்,
தொலைபேசி: (04294) 250223, 292263, 292595.
மின்னஞ்சல்: chennkovil@gmail.com

கோவில் சிறப்பு :

பிரார்த்தனை கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள். 

நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம். 

தலபெருமை: மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320.

 அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது. 

சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும். சிரசுப் பூ உத்திரவு கேட்டல்: திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை. 

முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. 

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. 

அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது. அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில். 

கந்த சஷ்டி அருங்கேறிய ஸ்தலம்: உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் மனமுருகி பாராயணம் செய்யும், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம்' இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் நகரின் அருகில் உள்ள மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர், மைசூர் தேவராசஉடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். இவர் முருக பக்தர். ஐப்பசி மாதம், கந்த சஷ்டி அன்று, வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நுõலை சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நுõலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது) செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்கு கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்து பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமைபடைத்தார். 

சஷ்டி விரத மகிகை: கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா, ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரமிருப்பது தொன்று தொட்ட நோன்பாகும். இதை முன்னோர்கள், சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும்' எனக்கூறுவர். குழந்தை வரம் வேண்டி முறையாக, சஷ்டி விரதம் கடைபிடிப்போருக்கு, சென்னிமலை ஆண்டவர் குழந்தைப்பேறு அருள்வது கண்கூடானது. குழந்தை வரம் வேண்டுவோரும், வரத்தின் பலன் கிடைத்த பின்னரும், குழந்தைகளோடு வளர்பிறை சஷ்டித்திருநாளில், ஆண்டவரை தரிசித்து செல்வது இன்னும் தொடர்கிறது.

 திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், சந்தான பாக்கியம் வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி, வழிபடுவதும், சன்னதி முன் தாலி சரடு கட்டிக்கொள்வதும் வழக்கம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்: ஈரோடு மாவட்டத்தில், குன்று போன்ற உயரத்தில் சென்னிமலை அமைந்துள்ளது. அங்கிருந்து உயரமான மலையின் மீது, முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மலைப்பாதையாக வாகனங்கள் செல்ல, ரோடு வசதி உள்ளது. தேவஸ்தானம் மூலம், பக்தர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. பக்தர்களே, அவர்களது வாகனங்களில் சென்று வரவும் அனுமதி உண்டு. அத்துடன், மலைப்பாதையாக, 1,320 திருப்படிகள் ஏறி செல்ல படிகள், நிழற்கூரைகள் உள்ளன. இவ்வழியாகவே அதிக பக்தர்கள் சென்று, தரிசித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த, 1984, ஃபிப்ரவரி, 12ம் தேதி உலக அதிசயமாக, இரட்டை மாட்டு வண்டி, படி வழியாக மலையேறிய அதிசயம் நிகழ்ந்தது. முதல் நாள் இரவே மலை மற்றும் நகரம் முழுவதும், பல லட்சம் பேர் திரண்டனர். அதிகாலையில், இரட்டை மாட்டு வண்டி, தடையின்றி, படிகள் வழியாக ஏறிச்சென்ற நிகழ்வு, இறைவனின் திருவிளையாடலாக கருதப்படுகிறது. 

எனவே, இத்தலம், செவ்வாய் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலிலும், முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அதுபோல, சென்னிமலையும், பரிகார ஸ்தல சிறப்பு பெற்றுள்ளது. 

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், தோஷத்துக்கான காரணிகள் நீங்கி, சுபிட்ஷம் பெருவர். முருகன்பெருமான் நடத்தும் சூரசம்ஹார நிகழ்வை, சிக்கலில் வேல் வாங்கி, செந்துõரில் சம்ஹாரம்' என்பவர். நாகை மாவட்டம் சிக்கல் கோவிலில், சூரசம்ஹாரத்துக்கு முன்பாக, பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கும். இதைத்தொடர்ந்து, திருச்செந்துõரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். இதனால், சிக்கல் மற்றும் திருச்செந்துõருக்கு, சஷ்டியின்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து, முருகனை தரிசனம் செய்வர். குரு ஸ்தலமாக கருதப்படும் திருச்செந்துõரில் பக்தர்கள் தரிசனம் செய்து, முருகன் மற்றும் குரு பரிகாரம் பெறுவதுபோல, கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட, சென்னிமலையில், சஷ்டியின்போது முருகனை தரிசனம் செய்து, செவ்வாய் தோஷம் நீங்கப்பெறுவர். 

சஞ்சீவி மூலிகைகள்: நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல, சென்னிமலை மலையில் உள்ளன. இம்மலையில் வெண்சாரை, வெண்தவளை, கானாச்சுனை, கெயாத எட்டி, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உடற்பிணி நீங்க வேண்டி, பல தலங்கள் சென்று வழிபட்டு, இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி, நோய் நீங்க பெற்ற சோழ அரசரான சிவாலயச் சோழன், அதற்கு பரிகாரமாகவே, மலைக்கோவிலை அமைத்தார், என்பர். 

வானில் வந்தவர் இங்கேயே வாழ்ந்தார்: இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு' சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 

ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது. 20 தீர்த்தங்கள் கொண்ட சென்னியங்கிரி மலை: சென்னிமலை, மலைக்கோவிலில், 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

* நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.


 * சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சன்னதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.

ஒரு முறை சென்னிமலைக்குச் சென்று சென்னிமலை முருகனை வழிபட்டு வாருங்கள். நோயில்லா வாழ்வு கிடைக்கும்

அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.11.21

Astrology: ஜோதிடப் புதிர்:நீங்களே அலசுங்கல் - பகுதி 9


Astrology: ஜோதிடப் புதிர்:நீங்களே அலசுங்கல் - பகுதி 9 

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 36வது வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை வந்தது. ஆசை அதிகமாகி அனுதினமும் வீட்டைப் பற்றிய கனவே அவரைச் சுற்றிவரத் துவங்கியது. தசா, புத்திகள் தானே பலனைத் தரும். சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் அதற்குரிய தசா, புத்தி (Major Dasa and Sub period) வந்த போது அவருடைய கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது.

அவருடைய ஜாதகத்தை அலசி அவருடைய எந்த வயதில் கனவு நிறைவேறியது  அல்லது எந்த தசா, புத்தியில் நிறைவேறியது என்பதைச் சொல்லுங்கள்

சரியான விடை 17-11-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
===============================================

12.11.21

Astrology: ஜோதிடம்: 11-11-2021ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 11-11-2021ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் ஆச்சார்யா ரஜினீஷ் என்னும் ஓஷோ!
பிறப்பு விபரம்: 11-12-1931 குச்வாடா (மத்தியப் பிரதேசம்) - 5-45 மாலை

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! 

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்தவாரம் சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.11.21

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 11-11-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 11-11-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்


சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா?  தாடிக்காரர். இந்தியர். ஆனால் அகில உலகப் பிரபலம்!!!! 

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.11.21

Astrology: Jothidam: அலசுங்கள் பகுதி 8ற்கான விடை!!!!


Astrology: Jothidam: அலசுங்கள் பகுதி 8ற்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவருக்கு அவருடைய 55 வயதில் கஷ்டங்கள் காற்று மழையாக அடிக்கத்ட் துவங்கின. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரம். 1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? 2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்? 

ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!! என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 55 வது வயதில் கேது மகா திசை ஆரம்பம். கேது, லக்கினாதிபதி புதனுடன் கூட்டாக 12ம் இடத்தில் உள்ளார். அது விரைய ஸ்தானம். ஆறாம் அதிபதி செவ்வாயின் பார்வை அவர்கள் மேல் விழுகிறது. அத்துடன் எட்டாம் இடத்துக்காரன் சனீஷ்வரனின் பார்வையும் அவர்கள் மேல் விழுகிறது. மேலும் மாரக அதிபதி குரு எட்டாம் இடத்தில் அமர்ந்தவாறு அவர்களைப் பார்க்கிறார். போதாதா? இத்தனையும் சேர்ந்து கேது திசை மொத்தமும் அவரைப் படாதபாடு படுத்தின!!!

அடுத்து வந்த சுக்கிர மகாதிசை எல்லாத் துயரங்களையும் அடித்து விரட்டி அவருக்கு நன்மை செய்யத் துவங்கின. ஆமாம். சுக்கிரன் உச்சம் பெற்று முக்கியமான கேந்திரத்தில் இருப்பதோடு, இராசி நவாமசம் இரண்டிலும் ஒரே இடத்தில் இருந்து வர்கோத்தம பலத்துடன் இருக்கிறார். அதையும் கவனியுங்கள்!!!!

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு அலசுங்கள் புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்

வாத்தியார்

------------------------------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.11.21

Devotional ஆன்மிகம்: எட்டுக்குடி முருகன் கோவில்


Devotional ஆன்மிகம்: எட்டுக்குடி முருகன் கோவில்

எட்டி மரங்கள் அதிகம் நிறைந்த ஊர், எட்டு குடிகள் மட்டுமே இருந்த ஊர், பறந்து சென்ற மயிலை ‘எட்டிப்பிடி’ என்ற வார்த்தையால் உருவான ஊர், எட்டு லட்சுமிகளும் நித்தம் வந்து பூஜை செய்த ஊர், பால் காவடிகளுக்கு பெயர் பெற்ற புண்ணிய நகரம் என பல்வேறு சிறப்பு களைக் கொண்டது ‘எட்டுக்குடி’ திருத்தலம். இங்கு முருகன்- வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் எட்டுக்குடி முருகன் ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி, மிகவும் விசேஷமான முறையில் நடைபெறும். மாலை தொடங்கும் இந்த நிகழ்வு, மறுநாள் அதிகாலை வரை நடக்கும். அப்போது விடிய, விடிய பல்வேறு அபிஷேகங்களால் முரு கனுக்கு வழிபாடுகள் செய்யப்படும். இந்த மானிடப் பிறவியின் நோக்கமே, இந்த அரிய அபிஷேகக் காட்சிகளைக் கண்டு ரசிப்பதில்தான் இருக்கிறது என்ற ஆன்ம திருப்தியை தருவதாக இந்த அபிஷேகங்கள் இருக்கின்றன.
 
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சனம் என்ற பகுதியில் புண்ணிய திருத்தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், வான்மீகி என்ற மகா சித்தர், முருகப்பெருமானை நாள்தோறும் வழிபட்டு ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

முருகப்பெருமான், ஒரு காலை ஊன்றி நிற்கின்ற அழகு மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்காட்சி தருகிறார். அவரது இடமும்- வலமும் வள்ளி- தெய்வானை தேவியர் புன்னகை சிந்தியபடி, கணவனின் அழகை ரசித்தபடி உள்ளனர்.

எட்டுக்குடி முருகன், எண்கண் முருகன், பொருள்வைத்த சேரி என்ற சிக்கல் முருகன் ஆகிய மூன்று சிலைகளையும் ஒரே சிற்பிதான் வடிவமைத்துள்ளார் என்று புராண வரலாறுகள் பலவும் எடுத்துரைக்கின்றன.

வந்த வினைகளையும், வருகின்ற வல்வினை களையும் வடிவேலன் வேரறுப்பான். நம் வாழ்வு முழுவதும் துணை நிற்பான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை மூன்று வேளையும் வணங்கி, நம் ஆயுளை வளர்ப்போம்.

கோவில் முகவரி :

அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோவில்
எட்டுக்குடி - 610212
நாகப்பட்டினம் மாவட்டம்.

படித்தேன் பகிர்ந்தேன்
நன்றி மாலை மலர் நாளிதழ்
-------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.11.21

Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 8



Astrology: ஜோதிடப் புதிர்: நீங்களே அலசுங்கள் பகுதி 8

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். மனிதருக்கு அவருடைய 55 வயதில் கஷ்டங்கள் காற்று மழையாக அடிக்கத்ட் துவங்கின. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அவருக்கு பலவிதமான அவதி. உடல் நிலை பாதிப்பு, நோய் நொடிகள், மன அழுத்தம், பணக் கஷ்டம் என்று எல்லா வழிகளிலும் துயரம். 

1. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?
2. அவைகள் எப்போது நிவர்த்தியாகும்?

ஜாதகத்தை அலசி இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 8-11-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.11.21

அறிவிப்பு


அறிவிப்பு
தீபாவளியை முன்மிட்டு வகுப்பறைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!
அடுத்த வகுப்பு 8-11-2021 அன்று நடக்கும்!
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.11.21

ஆன்மிகம்: சிக்கல் சிங்காரவேலன் கோவில்




ஆன்மிகம்: சிக்கல் சிங்காரவேலன் கோவில்

இன்று செவ்வாய்க் கிழமை. முருகப்பெருமானுக்கு உகந்த நாள். இன்று ஒரு முருகன் ஸ்தலத்தைக் காண்போம். வாருங்கள்!!!

சிக்கல் சிங்காரவேலவர் கோவில் (Sikkal Singara Velar Temple) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ கிழக்கேயும், நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ மேற்கேயும் அமைந்துள்ளது.கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சன்னதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சன்னதியும் அமைந்துள்ளது.

கோவிலின் சிறப்பு

சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும். சிவனும், விஷ்ணுவும் ஒரே இடத்தில் அமைந்துள்ள அரிய தொன்மையான இந்துக்கோவிலாகும். சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.

கோவில் வளாகம்

முற்காலத்தில் இது மல்லிகை வனமாக இருந்ததால் காமதேனு குடி கொண்டிருந்ததாக ஐதீகம். புலால் உண்டதால் சிவனால் காமதேனு சபிக்கப்பட்டார். தன் தவற்றை உணர்ந்து இங்குள்ள பாற்குளத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டதால் சாபவிமோசனம் அடைந்ததாக வரலாறு உண்டு.

விழாக்கள்
சூரசம்ஹார விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகக்கடவுள் தன் தாயாரிடம் பெற்ற வேல் கொண்டு சூரபத்மனை வதைத்த நாளை சூரசம்ஹாரமாக கொண்டாடுகின்றனர்.

ஒருமுறை இத்தலத்திற்குச் சென்ரு அங்கே உறையும் முருகப் பெருமானை வணங்கி வாருங்கள். வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவீர்கள்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.11.21

Astrology: ஜோதிடப் புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 7


Astrology: ஜோதிடப் புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 7

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி.  ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள்.

சரியான விடை 3-11-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!