14.9.21

பழநியாண்டவர் திருக்கோவில்!

பழநியாண்டவர் திருக்கோவில்!

இன்று செவ்வாய்க் கிழமை. முருகப்பெருமானுக்கு உகநத நாள்

இன்று பழநியாண்டவர் கோவிலின் மகிமையைப் பார்ப்போம்!

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரக்கூடிய கோயிலாக இது உள்ளது. 

ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டித் தருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற திருவிழாக்களின்போது 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். சாதாரண நாள்களில் 25,000 பேருக்குக் குறையாமல் வருகை தரக்கூடிய கோயிலாக பழநி உள்ளது. 

இதனால் சுவாமி தரிசனம், தங்கத்தேர் இழுத்தல், அன்னதான நன்கொடை அளித்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.


பக்தர்களின் இந்த அவதியைப் போக்குவதற்காக, ஆன்லைன் மூலமாக சுவாமி தரிசனம், தங்கத்தேர் இழுத்தல், வின்ச் டிக்கெட் உள்ளிட்டவற்றுக்காக முன்பதிவு செய்துகொள்ளும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதனால் பலமணி  நேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்தத் திட்டம் பக்தர்களிடம் வரவேற்பை பெற்றது. 
ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை தாராபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், மேற்படி நிறுவனம் ஆன்லைன் மூலமாக பக்தர்களிடம் பெறப்பட்ட தொகையில் ரூபாய் 25 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது இந்த இணையதளத்தை பராமரிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் வேறு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. சுவாமி தரிசனம், தங்கரதம் இழுத்தல், வின்ச் டிக்கெட், அன்னதான நன்கொடை, தங்கத்தொட்டில் போன்றவற்றுக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாக செய்துகொள்ளலாம். மீண்டும் ஆன்லைன் புக்கிங் தொடங்கியிருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிற்கு ஒருமுறை பழநிக்குச் சென்று பழநியாண்டவரை தரிசித்து வாருங்கள்!

வாழ்வின் எல்லா நன்மைகளும் அவர் அருளால் கிடைக்கப்பெறுவீர்கள்!

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com