28.4.21

நரிப்பயிறைத் தெரியுமா?


நரிப்பயிறைத் தெரியுமா?

நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள நரிப்பயிறு பற்றிய பதிவு

 நரிப்பயிறு என்று பெயர் கேட்டதுமே நிறைய பேருக்கு எப்படி இருக்கும் என்ற ஆவலும் இதென்ன புதுசா ஒரு பயிறு என்று கேட்பவர்களுக்கும் நாம் அடிக்கடி இதனை சாப்பிட்டு உள்ளோம் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.

கடைகளில் விற்பனை 
செய்யப்படும் பாம்பே மிக்சரில் 
பச்சைநிறத்தில் பச்சைப்பயறு போல அளவில் சிறியதாக இருக்கும் 
பயிறுதான் நரிப்பயிறு . 

இதனை ஹிந்தியில் மட்கி என்பார்கள்.

நரிப்பயறு ஏன் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது?

நரிப்பயறு என்பது வறட்சியை தாங்கி வளரும் செடி அதேசமயம் இந்த செடிக்கு பூச்சிக்கொல்லிகள் தெளித்து வளர்க்க வேண்டாம். 

இந்த செடிக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்புச் சக்தி நிறையவே உண்டு.

ஆகவே இயற்கையான முறையில் வளர்ந்த இந்த நரிப்பயிறு உடலுக்கு மிகவும் நல்லது.

நரிப்பயறில் நார்ச்சத்து , புரதம் , கால்சியம் , பாஸ்பரஸ் , மக்னீசியம் , இரும்புச்சத்து என உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

1 கப் நரிப்பயறு 282 கலோரி மதிப்பு உடையது. 

கொழுப்பு அறவே இல்லாத ஒரு பயறு. 40.8 கிராம் அளவுக்கு தான் கார்போஹைட்ரேட் உள்ளது.

இதனை முளைக்க வைத்து உண்ணும் போது மிகவும் நல்லது.

நரிப்பயறை முளைக்க வைத்து சாலட்டாக அல்லது பருப்பு மசியல் போல அல்லது பயறு துவையல் என பல்வேறு விதமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நரிப்பயிறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சோறு ஒரு சிறிய கப் உடன் நரிப்பயிறு மசியல் என உண்ணும் போது வயிறு நிரம்பி விடும்.

அதேசமயம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.

நரிப்பயிறு இப்போது சர்வசாதாரணமாக பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் மளிகை கடைகளிலும் 
நாட்டு மருந்து கடைகளிலும்,
கிராமப்புற பகுதிகளிலும் கிடைக்கிறது.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நரிப்பயிறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நரிப்பயிறு சர்க்கரை நோயை மட்டும் அல்ல இதயக்கோளாறுகளையும் வரவிடாது.

நெஞ்சில் படிந்துள்ள அதிகப்படியான சளிக் கட்டை 
நீக்கி கபத்தைக் குறைக்கும் அற்புதமான உணவு:*நரிப்பயிறு கஞ்சி:*

*தேவையான பொருட்கள்:*

*நரிப் பயிறு - 150 கிராம்,*
*பால் - 150 மி.லி*
*கற்கண்டு - தேவையான அளவு*

*செய்முறை:*

*முதலில் நரிப்பயிற்றை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.*

*ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.*

*அதில் வறுத்து உடைத்துள்ள நரிப்பயிறை போட்டு நன்றாக கொதிக்க வைத்து  காய்ச்சவும்.*

*நன்கு காய்ச்சியவுடன் அதில் பால் மற்றும் கற்கண்டை நன்கு தூளாக்கி  இரண்டையும் நன்கு கலக்கி  ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.*

*பயன்கள்:*

*இந்தக் கஞ்சியை நெஞ்சில் அதிக கபம்(சளி) உடையவர்கள்  தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள உன்னதமான கஞ்சி.*

நெஞ்சில் உள்ள சளிக்கட்டு குறைய:

*வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.*

சுவை மிக்க இனிப்பு நரிப்பயிறு உருண்டை:

நரிப்பயிற லேசா வறுத்து, நல்லா தூளா அறைத்து கொள்ளவும். இதுகூட  நன்கு அறைத்து தூளாக்கப்பட்ட பொட்டுக்கடலை மாவை சேர்த்து கொள்ளவும்

நாட்டு சர்க்கரை எனப்படும் கரும்புச் சக்கரைல பாகு காய்ச்சி(சிறிது ஏலக்காய் சேர்த்து) எடுத்து கொள்ளவும்.

நரிப்பயிறு,பொட்டுக்கடல மாவு கலவையில் அந்த சர்க்கரைப் பாகை சுடச்சுட கொஞ்சகொஞ்சமா ஊத்திக்கிட்டே, ஒரு கரண்டியால் கலந்து கொண்டே இருக்கவும். 
மாவும் பாகும் உருண்ட புடிக்கற பதத்துக்கு நல்லா கலந்ததுக்கப்புறம்
கையில தேங்கா எண்ணயத் தொட்டு கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடிக்க ஆரம்பிக்கவும்.

அவ்வளவுதாங்க சுவையான இனிப்பு நரிப்பயிறு உருண்டைகள்  தயாராகி விட்டது.

இது எவ்வளோ ருசியா இருக்குமுன்னு சாப்பிட்டவுங்களுக்கு மட்டும்தான் தெரியும்

இந்த நரிப்பயிறு இனிப்பு உருண்டைகளை 2 மாதம் வரைக்கும் வச்சு சாப்பிடலாம்,கெட்டு போகாத தன்மை உடையது.

நரிப்பயிறு படம் மேலே!👇👇💚♥️
------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. எங்க வீட்ல/கிராமத்தில் நரிபயரு பொதுவா ஆடு மேய்க்க மனாவரியா பயிரிடுவோம், ஆனா இத நாங்க சாப்பிட்டது இல்ல... ஆனா ஆட்டை சாப்பிடுவோம்��

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com